மாற்று! » பகுப்புகள்

நபர்கள் 

சீக்கிரமே சிங்கப்பூர் வரும் எழுத்தாளர் எஸ்.ராமக்கிருஷ்ணன் சார்ந்து...    
ஆக்கம்: பாலு மணிமாறன் | July 3, 2008, 4:56 am | மறுமொழிகள்

சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் "வாசிப்போம்! சிங்கப்பூர் '08" திட்ட அதிகாரி திரு.மணியத்திடமிருந்து இன்றொரு மின்னஞ்சல் வந்தது. எழுத்தாளர் எஸ்.ராமக்கிருஷ்ணன் "வாசிப்போம் சிங்கப்பூர் 2008" சம்பந்தமாக சிங்கப்பூர் வருகிறார் : அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் கீழே குறிப்பிடப்பட்டிருக்கின்றன : அவசியம் கலந்து கொள்ளுங்கள்" என்பதே அதன் சாராம்சம்.இன்றைய தமிழ் இலக்கிய உலகில்...தொடர்ந்து படிக்கவும் »

ஜான் ஆபிரகாம்:ஒரு கடிதம்    
ஆக்கம்: ஜெயமோகன் | July 2, 2008, 12:37 am | மறுமொழிகள்

அன்புள்ள ஜெயமோகன் மலையாளப்படங்களைப் பற்றிய உங்கள் பட்டியலில்[ மலையாள சினிமா ஒரு பட்டியல்  ]ஜான் ஆபிரஹாமின் எந்தப்படமும் இல்லையே. விடுபட்டுவிட்டதாக தோன்றவில்லை. ஏனென்றால் மிக அபூர்வமான பல கலைப்படங்கள் அதில் விடுபடாமல் சொல்லப்பட்டிருக்கின்றன. உங்களுக்கு விமரிசன பூர்வமான கருத்து ஏதும் உள்ளதா? சிவராஜ் அன்புள்ள சிவராஜ் ஜான் ஆபிரஹாமை எனக்கு நேரடியாக தெரியும். கய்யூர்...தொடர்ந்து படிக்கவும் »

நீ.கந்தசாமிப் பிள்ளை (09.06.1898 -18.06.1977)    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | June 30, 2008, 6:06 pm | மறுமொழிகள்

நீ.கந்தசாமிப் பிள்ளைநீ.கந்தசாமிப் பிள்ளை அவர்கள் தஞ்சைக்கு அருகில் உள்ள பள்ளியகரம் என்ற ஊரில் பிறந்தவர்.பெற்றோர் நீலமேகப் பிள்ளை,சௌந்தரவல்லி அம்மாள்.தஞ்சையில் உள்ள தூய பேதுரு உயர்நிலைப் பள்ளியில் படித்தவர்.பிறகு தாமே அறிஞர்களிடம் அக்கால வழக்கப்படி பாடங்கேட்டு,பலவற்றையும் கற்று அறிஞரானவர்.அவ்வகையில் தம் பன்னிரண்டாம் அகவையில் சாமிநாதப் பிள்ளை என்பவரிடம்...தொடர்ந்து படிக்கவும் »

"இதுதாண்டா தமிழ்நாடு-2"    
ஆக்கம்: VSK | June 28, 2008, 10:40 pm | மறுமொழிகள்

"இதுதாண்டா தமிழ்நாடு-2" இந்தப் பதிவைப் போடுவேன் எனக் கனவிலும் நான் எண்ணவில்லை.எல்லாம் சரியாகப் பதித்து விட்டேன் என நான் நினைத்து அந்தப் பதிவைப் பதிந்தேன்.இன்று மீண்டும் அது என் பார்வையில் வந்தது.நான் சொல்ல மறந்த ஒன்று என் பார்வையில் பதிந்தது.15 இடம்தான் என் கல்லூரியில் எனச் சொல்லிய அந்த முதல்வரைப் பார்த்து, அன்றைய தமிழக ஆளும் முதல்வர் கேட்ட ஒரு செய்தியை அதில் பதிய...தொடர்ந்து படிக்கவும் »

வில்லியம் கேட்ஸ் சகாப்தம்    
ஆக்கம்: Badri | June 27, 2008, 12:04 pm | மறுமொழிகள்

பில் கேட்ஸ் என்று உலகெங்கும் அறியப்படும் கணினி மென்பொருள் விற்பன்னர். மைக்ரோசாஃப்ட் என்னும் மாபெரும் கணினி மென்பொருள் நிறுவனத்தை உருவாக்கியவர். தனது 52-வது வயதில், இன்றுடன் தனது தினசரி அலுவல்களிலிருந்து ஓய்வு பெறுகிறார். தன்னிடம் இருக்கும் மைக்ரோசாஃப்ட் பங்குகளின் காரணமாக நிறுவனத்தின் non-executive chairman-ஆகத் தொடர்ந்து இருப்பார். பில் கேட்ஸ்மீது பலருக்கு தீராக் காதலும்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழிசை வளர்த்த ஆபிரகாம் பண்டிதர்    
ஆக்கம்: நா.கண்ணன் | June 25, 2008, 2:36 am | மறுமொழிகள்

கண் துஞ்சாமல், மெய் வருத்தம் பாராமல், கற்பனையைப் பறக்கவிட்டு, வண்ணங்களைக் குழைத்தெடுத்து, தன் திறமை முழுவதையும் கொட்டி, அழகு சொட்டும் வண்ண ஓவியம் ஒன்றை எழுதினானாம் ஒருவன். மற்றொருவன் அதன் கீழே அவனது பெயரை எழுதினானாம். யாருடைய பெயர் ஓவியத்தில் உள்ளதோ, அவனே சித்திரத்தை எழுதியதாக இன்றளவும் நம்பப் படுகிறதாம். ஏறத்தாழத் தமிழிசையின் கதை யும் இது தான்.வரலாறு எழுதாமையும்...தொடர்ந்து படிக்கவும் »

உமா சங்கர் IAS    
ஆக்கம்: Joseph Paulraj | June 24, 2008, 8:55 am | மறுமொழிகள்

நம் தமிழ்நாட்டில் உள்ள சில நல்ல அதிகாரிகளில் உமாசங்கர் IAS அவர்களும் ஒருவர். தற்போது எல்காட் நிர்வாக அதிகாரியாக சென்னைக்கு வெளியே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை அழைத்துச்செல்லும் முழுமுயற்சியில் திருச்சி, மதுரை, நெல்லை, கோவை போன்ற பெருநகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அமைப்பதில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் மாணவர்களுக்காக சலுகை விலையில்...தொடர்ந்து படிக்கவும் »

"இதுதாண்டா தமிழ்நாடு!"    
ஆக்கம்: VSK | June 22, 2008, 1:27 pm | மறுமொழிகள்

"இதுதாண்டா தமிழ்நாடு!" இன்று நான் கேட்ட ஒரு செய்தி!நான் போற்றும் கர்மவீரர் காமராஜ் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வு.ஒரு மாணவன், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருக்கிறான்.கல்லூரிக்கு விண்ணப்பிக்கிறான்கிடைக்கவில்லை!தன் தந்தை... ஒரு எம்.எல். ஏ!!அதுவும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.!!தனக்கா சீட் இல்லை?குமுறுகிறான்.தந்தையிடம் சென்று முறையிடுகிறான்.தந்தை முதல்வரிடம்...தொடர்ந்து படிக்கவும் »

புஷ்ஷாவதாரம் - couldn't resist :)    
ஆக்கம்: SurveySan | June 17, 2008, 11:00 pm | மறுமொழிகள்

அருமையான டயலாக்ஸ்.கவனிச்சுக் கேளுங்க.இது கலக்கல். ரியல் புஷ் பக்கத்துல, அவதார புஷ். கலக்கியிருக்காரு. Will Farrelன் கிண்டல் இது.இது ரியல் அவதாரம், கொஞ்சம் எடிட்டட். சூப்பரா பண்ணியிருக்காங்க.ரியல் புஷ் - நல்ல காமெடி.இதில் புஷ், தன்னைப் பற்றி வரும் கிண்டல்கள் பரவாயில்லை, தான் ஒண்ணும் அதை பெருசா எடுத்துக்கலைன்னு சொல்றாரு. தொடர்ந்து வரும்,கிண்டல்கள்ள, முக்கியமா, 3:40 நிமிடத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

இசைராசாவுடன் ஒரு சந்திப்பு - தொடர்கிறது!    
ஆக்கம்: ரவிஷா | June 17, 2008, 9:36 am | மறுமொழிகள்

சாது படத்து ரீ ரெக்கார்டிங் முடிந்த பிறகு இ.ஞானிக்கு என்ன தோன்றியதோ, எங்கள் மூவரையும்அவர் வீட்டிற்கு வரச்சொல்லியிருந்தார் (தி.நகர் முத்தையா முதலி தெரு?)! வாசலில் வாட்ச்மேன் எங்களை உள்ளே விட மாட்டேன் என்று சொல்லிவிட்டார்! எங்களுடன் வந்த நிருபர், அவர் தொழிலுக்கு ஏற்ற மாதிரிஒரு ஜீன்ஸ், சந்தன ஜிப்பா மற்றும் தாடியுடன் இருந்ததால் ஓரளவிற்கு எங்களை நம்பிட்டார்! (அது என்ன...தொடர்ந்து படிக்கவும் »

சிவத்தமிழ்ச் செல்வி சோதியிற் கலந்தார்..!    
ஆக்கம்: கானா பிரபா | June 16, 2008, 3:06 am | மறுமொழிகள்

தங்கம்மா அப்பாக்குட்டி என்றதோர் ஈழத்தின் ஆன்மீகச் சொத்து, ஆருமில்லாப் பெண்களின் ஆறுதற் சொத்து, நேற்று சிவபூமியாம் ஈழபதி யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார். தனது எண்பத்து நாலு வயது வரை தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தைத் தன் ஆன்மீக நிலைக்களனாகவும், ஆதரவற்ற பெண்களின் புகலிடமான துர்க்கா மகளிர் இல்லத்தைத் தனது அறத்தின் நிலைக்களனாகவும் வைத்து அறத்தொண்டாற்றிய...தொடர்ந்து படிக்கவும் »

தசாவதாரம் அல்லது கமல் ஒரு நுண்ணரசியல்    
ஆக்கம்: வந்தியத்தேவன் | June 14, 2008, 12:23 pm | மறுமொழிகள்

விடயத்துக்கு வருமுன்னர் ஒரு சின்ன டிஸ்கி: நான் ஒரு கமல் ரசிகன். படத்தை முதல் நாள் முதல் ஷோவே ஹவுஸ்புல் திரையரங்கில் பார்த்துவிட்டேன். பார்த்தபின்னர் உடனடியாக விமர்சனம் எழுதமுடியவில்லை. காரணம் முதன் முறை பார்த்தபோது எங்கும் நிறைந்த அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனாக சாட்சாத் கமலே மனதில் நிறைந்திருந்தார். அதனால் விமர்சனம் எழுதவில்லை. இன்றைக்கு எழுதலாம் எனப்...தொடர்ந்து படிக்கவும் »

ஞாநி ஏன் இப்படி ஆனார்    
ஆக்கம்: ஜ்யோவ்ராம் சுந்தர் | June 13, 2008, 12:52 pm | மறுமொழிகள்

ஞாநி மேல் எனக்கு மதிப்புண்டு. அதற்குப் பல காரணங்கள்.பாதல் சார்க்காரின் நாடகத்தை மொழிபெயர்த்து 'பாலு ஏன் தற்கொலை செய்து கொண்டான்' என்ற நாடகத்தை பரிக்‌ஷா குழுவின் மூலம் ஞாநி அரங்கேற்றினார். இதைப் படித்ததன் மூலமே இவரை முதலில் தெரிந்து கொண்டேன். தன்-சாதி மறுப்பாளர் என அறிய வந்ததும் மதிப்பு மேலும் கூடிற்று. 1990களிலிருந்து தொடர்ந்து இவரை வாசித்து வருகிறேன். இந்தியன்...தொடர்ந்து படிக்கவும் »

வந்து விட்டார் அடுத்த ஜே.கே.ரௌலிங்    
ஆக்கம்: சேவியர் | June 5, 2008, 5:23 am | மறுமொழிகள்

இவர் தான் அடுத்த ஜே.கே.ரௌலிங்கர் என்கிறார்கள் பத்தொன்பதே வயதான கேத்தரின் பேனர் பற்றி. அவருடைய முதல் புத்தகமான “த ஐஸ் ஆஃப் எ கிங்” இப்போது வெளி வந்து வாசகர்களை வசீகரிக்க ஆரம்பித்திருக்கிறது. நிஜ உலகிற்கும், கற்பனை உலகுக்கும் இடையே நடக்கும் வழக்கமான ஆங்கில கதை தான் இதுவும் எனினும் இதில் ஆசிரியரின் கற்பனை சிறுவர்களையும், பதின்வயதினரையில் சட்டென வசீகரிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

மாயா அருட்பிரகாசம்...    
ஆக்கம்: டி.அருள் எழிலன் | June 3, 2008, 11:54 pm | மறுமொழிகள்

"என்னால் இதை நம்பவே முடியவில்லை.இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கைச் செலவுக்கு காசில்லாமல் எனது நண்பர்களிடம் நான் கடன் வாங்கியிருக்கிறேன்.பிடித்தமான ஒரு இசையரங்கிற்கு செல்ல வேண்டுமானால் அதற்கும் கடன்தான்.நான் கஷ்டப்படும் போது யாரெல்லாம் கடன் கொடுத்து உதவினார்களோ அவர்கள் எல்லாம் இன்று மேற்குலகில் என் வளர்ச்சியைக் கண்டு சந்தோசமடைகிறார்கள்" என தனது பாப்பிசையின்...தொடர்ந்து படிக்கவும் »

பிரமிள்    
ஆக்கம்: அழகியசிங்கர் | June 1, 2008, 10:40 pm | மறுமொழிகள்

பிரமிளின் 70வது வயது பிறந்த நாள் விழாவை அமர்களமாக நடத்தினார்கள் பிரமிள் அபிமானிகள். பிரமிள் அவரது 56வது வயதளவில் புற்றுநோய்க் கண்டு இறந்து போனார். அவர் இறக்கும் தறுவாயில், அவரை வேறு வழியில்லாமல், வேலூரில் உள்ள கரடிக்குடி என்ற இடத்தில் உள்ள ஒரு அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கும்படி ஆயிற்று. அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர், பிரமிள் அனுதாபி. தமிழ் இலக்கியம்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் இணைய உலகில் இ.கலப்பை - தமிழ்ஓசை செய்தி    
ஆக்கம்: திரட்டி.காம் | May 31, 2008, 11:14 pm | மறுமொழிகள்

ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தி எந்தக் கணிப்பொறியிலும் தட்டச்சுச் செய்யலாம்.ஆனால் தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தி ஒரு கணிப்பொறியில் தட்டச்சுச் செய்தால் அந்த எழுத்துகளை வேறொரு கணிப்பொறி படிக்காது.அவ்வாறு படிக்க முடியாததால் ஒருவர் உருவாக்கிய செய்தி மற்றவருக்குப் பயன்படாமல் இருந்தது.அனைத்து கணிப்பொறிகளும் புரிந்துகொண்டு படிக்கும்படியான ஒருங்கு குறி(யுனிகோடு)...தொடர்ந்து படிக்கவும் »

மனோஜ் பிரபாகர்    
ஆக்கம்: வினையூக்கி | May 31, 2008, 11:40 am | மறுமொழிகள்

ஐபிஎல் ஆட்டங்களில் இராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் ஸ்வப்னில் அஸ்னோத்கரின் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது 1996ல் உலகக்கோப்பையை வென்ற இலங்கை அணியில் இடம்பெற்று இருந்த கலுவித்தரனாவும் , இன்று வரை அதிரடியில் கலக்கும் ஜெயசூர்யாவும் அதன் நீட்சியாக ,அவர்கள் முடித்து வைத்த மனோஜ்பிரபாகரின் கிரிக்கெட் வாழ்வும் நினைவுக்கு வந்தது.கதாநாயகனைப்போலத்...தொடர்ந்து படிக்கவும் »

காந்திஜியின் கடிகாரம்    
ஆக்கம்: Expatguru | May 27, 2008, 6:13 am | மறுமொழிகள்

1940களில் நடந்த சம்பவம் இது. காந்திஜியை டெல்லியில் தனது மாளிகையில் நேரில் சந்திக்க மவுண்ட்பேட்டன் பிரபு விரும்பினார். முதன்முறையாக நடக்கப்போகும் இந்த சந்திப்பை மிக ஆவலோடு எதிர்ப்பார்த்தார் மவுண்ட்பேட்டன். காந்திஜியை தான் நேரில் சந்திக்க விரும்புவதாக அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். கடிதத்தை படித்த காந்திஜி, தான் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக பதில் எழுதினார். ஆனால்,...தொடர்ந்து படிக்கவும் »

அமர்க்களமான இசையமைப்பாளர் பரத்வாஜ்    
ஆக்கம்: கானா பிரபா | May 27, 2008, 5:44 am | மறுமொழிகள்

சரணுடன் இணைந்து கூட்டணி அமைத்து காதல் மன்னன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான பரத்வாஜ் அடிப்படையில் ஒரு பட்டயக் கணக்கறிஞர். காதல் மன்னன் முதல் தொடர்ந்து அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், ரோஜா வனம், பாண்டவர் பூமி, ஆட்டோ கிராப் என்று இவரின் பெரும்பாலான படங்களில் தனித்துவமான இவரிசையை ரசித்திருக்கின்றேன். பல படங்களின் மண்டலின் இசைக்கருவிக்கு முக்கியத்துவம்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் இலக்கியத் தோட்டம் - விருது    
ஆக்கம்: வாசன் | May 26, 2008, 10:35 am | மறுமொழிகள்

“மதுரைதமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்” இது ஒரு உலகலாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யும் திட்டம். எந்த ஒரு சமூகத்திற்கும் இலக்கியங்கள்தான் அக்கலாசாரத்திற்கான ஒரு முக்கிய எடுத்துக்காட்டு. அதை செவ்வனே காத்து உலகலாவிய...தொடர்ந்து படிக்கவும் »

பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்    
ஆக்கம்: Suba.Nargunan / சுப.நற்குணன் | May 26, 2008, 4:25 am | மறுமொழிகள்

(26.5.2008ஆம் நாள் பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் அவர்களின் நினைவு நாள். இன்றைக்குப் 19 ஆண்டுகளுக்கு முன், 26.5.1989ஆம் நாள் இறைவனடி சேர்ந்த அன்னாரின் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது.)தமிழ் இலக்கிய வரலாற்றில் “பன்மொழிப் புலவர்” என்று சொன்னாலே போதும், அது அப்பாதுரையாரைத்தான் குறிக்கும். அவரைப் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், ‘ஆராய்ச்சி அறிஞர்’ எனலாம். ஒருவகையில்,...தொடர்ந்து படிக்கவும் »

எடியூரப்பா - ஓர் அரசியல் பார்வை    
ஆக்கம்: (author unknown) | May 25, 2008, 9:52 pm | மறுமொழிகள்

மண்டியா மாவட்டம், கே.ஆர். பேட்டை தாலுகா பூகானகெரே கிராமத்தில் 1943-ம் ஆண்டு, பிப்ரவரி 27- ம் தேதி விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் பூகானகெரே சித்தலிங்கப்பா எடியூரப்பா (பி.எஸ். எடியூரப்பா). இவரது பெற்றோர் சித்த லிங்கப்பா...தொடர்ந்து படிக்கவும் »

கோணங்கி இந்தியா டுடேவுக்கு எழுதுவது...    
ஆக்கம்: நாகார்ஜுனன் | May 25, 2008, 6:40 pm | மறுமொழிகள்

இந்தியா டுடேதமிழ் தேசிய செய்திப்பத்திரிகைMember of the Indian Newspaper Society31. 8. 1996அன்புள்ள கோணங்கி அவர்களுக்குவணக்கம்!ஒவ்வொரு ஆண்டும் இந்தியா டுடேவின் சார்பில் இலக்கிய மலர் வெளியிடுவ்வதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த ஆண்டுக்குரிய இலக்கிய மலரை அடுத்த மாதத்தில் வெளியிட இருக்கிறோம். இந்த ஆண்டு இலக்கிய மலரில் தங்களின் சிறுகதையை வெளியிட ஆவலாக உள்ளோம்.தாங்கள் சிரமம்...தொடர்ந்து படிக்கவும் »

59.அறிவியல் தமிழின் ஆரம்ப நாயகன்    
ஆக்கம்: அறிவன்#11802717200764379909 | May 23, 2008, 2:45 am | மறுமொழிகள்

எழுத்தாளர் சுஜாதாவின் மறைவின் போது நான் அமரர் சுஜாதா என ஒரு பதிவு போட்டிருந்தேன்.பலரும் சுஜாதாவை நினைவு கூர்ந்து பதிவு போட்டிருந்தார்கள்.நான் அறிந்த வரை அவரின் சிறந்த விதயங்களாக நான் உணர்ந்தவற்றைப் பகிர்ந்திருந்தேன்.அதற்கு எதிர்வினையாக நண்பர் சரவணன் பெ.நா.அப்புஸ்வாமி பற்றி குறிப்பிட்டு என்னை மறுதளித்திருந்தார்.பொதுவாக மேலும் அறிதலுக்காக நான்...தொடர்ந்து படிக்கவும் »


பிரிகேடியர் பால்ராஜ் நினைவுப் பாடல்    
ஆக்கம்: மலைநாடான் | May 21, 2008, 9:32 pm | மறுமொழிகள்

20.05.08 அன்று மாரடைப்பில் காலமாகிய, போராளியும், களம்பல கண்ட விடுதலைப் புலிகளின், முக்கிய தளபதிகளில் ஒருவருமாகிய பிரிடிகேயர் பால்ராஜ் அவர்களின் நினைவாக வெளிவந்திருக்கும் பாடல். " தானைத் தளபதியே, தமிழீழத்தின் காப்பரனே பால்ராஜ் அண்ணா.."பாடல் வரிகள், இசை, பாடியவர் : வர்ண. இராமேஸ்வரன்.வெளியீடு: கலைப்பண்பாட்டுக்கழகம் . கனடாLyrics music & sung by Varna.Rameswaran.mp3 - by Varna.Rameswaranசென்று வா...தொடர்ந்து படிக்கவும் »

நாட்டுப்புறவியல் பேராசிரியர் தே.லூர்து அவர்கள் மறைவுக்கு வருந்துகிறேன்...    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | May 20, 2008, 7:20 am | மறுமொழிகள்

பாளையங்கோட்டை என்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்தால் அவ்வூர் நினைவுக்கு வரும்.புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் பல உள்ளதால் கற்றவர்களுக்கு அவ்வூர் கல்வி சார்ந்து நினைவுகளை ஏற்படுத்தும்.புகழ்பெற்ற பேராசிரியர்கள் பலர் ஆவ்வூரில் கல்விப்பணி செய்துள்ளனர் அவர்களுள் பேராசிரியர் தே.லூர்து அவர்கள் குறிப்பிடத்தகுந்தவர். நாட்டார் வழக்காற்றியல்(நாட்டுப்புறவியல்)...தொடர்ந்து படிக்கவும் »

டான்ஸ் ஆடிய ஜெ!    
ஆக்கம்: இவன் | May 20, 2008, 1:17 am | மறுமொழிகள்

கோடை விடுமுறையை கொண்டாட கொடநாடு சென்றிருக்கும் ஜெயலலிதா அங்கு படுகர் இன மக்களுடன் மகிழ்ச்சியுடன்...தொடர்ந்து படிக்கவும் »

கலைஞனின் உடல்மொழி:ஜெயகாந்தன் ஆவணப்படம்    
ஆக்கம்: ஜெயமோகன் | May 19, 2008, 9:33 pm | மறுமொழிகள்

ஒரு எழுத்தாளனை எதற்காக ஆவணப்படம் எடுக்க வேண்டும்? அவனுக்காக அவனது எழுத்துக்கள் பேசும். அவன் போனபின்னும் அவை பேசிக் கொண்டிருக்கும். கலைஞனின் சொற்கள் அழியாது. தன் ஆக்கங்களில் பேசியவற்றுக்கு அப்பால் அவன் ஒரு பேட்டியிலோ அல்லது ஆவணப்படத்திலோ ஒன்றும் சொல்லிவிடப்போவதில்லை. இலக்கியம் சாந்த நோக்கில் இத்தகைய ஆவணபப்டுத்தல்களுக்கு எந்த இடமும் இல்லை. ஆனால் நமக்கு...தொடர்ந்து படிக்கவும் »

இளையராஜா-தமிழ் மண்ணின் இசை......    
ஆக்கம்: மணி.செந்தில்குமார் | May 19, 2008, 12:39 pm | மறுமொழிகள்

வணக்கம் தோழர்களே....சமீபநாட்களாகவே இசைஞானி இளையராஜா குறித்து பலவித விமர்சனங்கள் எழுந்து வருவதன் நீட்சியாக இக்கட்டுரை அமைகிறது...இளையராஜா என்ற உன்னத இசையமைப்பாளனின் தனி மனித வாழ்வியலில் நுழைந்து எட்டிப் பார்த்து அதை விமர்சிக்கிற உரிமை எனக்கில்லை என்ற அடிப்படை கருதுகோளோடு துவங்கும் நான் அவரின் இசை சித்திரங்களில் நான் அறிந்த ,உணர்ந்தவைகளை நிறுவுவதன் மூலம் அந்த...தொடர்ந்து படிக்கவும் »

பேராசிரியர்: எஸ். கே. ஆர் (Prof. S. K. Rangarajan)    
ஆக்கம்: அருள் செல்வன் கந்தசுவாமி | May 17, 2008, 1:03 pm | மறுமொழிகள்

பேராசிரியர்: எஸ். கே. ஆர் எஸ்கேஆர் என்றே அறியப்பட்ட பேராசிரியர் கிருஷ்ணமாச்சாரி ரங்கராஜன் கடந்த 29 ஆம் தினம் தம் 75ஆம் அகவையில் காலமானார். இந்திய அறிவியல் கழகத்தில் கனிம வேதியியல் துறையில் பணிபுரிந்தார். மாணவனாக இருக்கும் போது பல முறை அவர் பேசக் கேட்டிருக்கிறேன். இஅக- விற்கு என்று சில தனித்தன்மைகள் உண்டு. அங்கு பணிபுரியும் அறிவியலாளர்களில் பலரும் தம் துறைதவிர பிற...தொடர்ந்து படிக்கவும் »

மாபஸான்: ஓர் எளிய அறிமுகம்    
ஆக்கம்: செல்வேந்திரன் | May 16, 2008, 11:56 pm | மறுமொழிகள்

'சிறுகதைகளின் தந்தை' என வர்ணிக்கப்பட்ட மாபஸான், 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு எழுத்தாளர். பாரீஸில் வழக்கறிஞர் பட்டம் பெற்ற இவர், பிராங்கோ-பிரஸ்ஸியன் போரின் போது ராணுவத்தில் சேர்ந்து தேச சேவை புரிந்தார். போருக்குப் பின் பாரிஸீக்குத் திரும்பிய இவருக்கு கஸ்தேவ் ப்ளாபர்ட் போன்ற எழுத்தாளுமைகளோடு ஏற்பட்ட நட்பு இலக்கிய பரிச்சயத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியது....தொடர்ந்து படிக்கவும் »

ஷாருக்கான் : Entertainer-in-Chief    
ஆக்கம்: ஹாரி | May 15, 2008, 7:12 am | மறுமொழிகள்

இன்னிக்கெல்லாம் ஷாருக்கான் முகத்தை பார்க்காமல், ஷாருக்கான் பெயரை கேட்க்காமல் ஒரு நாள் வாழ வேண்டுமானால், செவ்வாய் கிரகம் வரை பயணம் செய்ய வேண்டிவரும். எங்கெல்லாம் திரும்பினாலும் அவரைத்தான் பார்க்க முடிகிறது.போனவாரம் வந்த இந்தியா டுடே கவர் ஸ்டோரி : KHAN POWER . அட்டையில் சிரிக்கிறார் ஷாருக்கான்.ஷாருக்கானை இந்தியாவின் Entertainer-in-Chief என்கிறது அந்த கவர் ஸ்டோரி. உண்மைதான், ஒரு சராசரி...தொடர்ந்து படிக்கவும் »

299,பாதைகள்    
ஆக்கம்: வல்லிசிம்ஹன் | May 13, 2008, 7:47 am | மறுமொழிகள்

சௌண்ட் ஆஃப் மியூசிக் படம் 1965ல் நாங்கள் பார்த்தோம்.அது ஒரு காதல் கதைதான். இருந்தாலும் எடுக்கப்பட்ட விதம் மனதை இனிக்க வைக்கும்.எல்லாப்பாடல்களும் சூப்பர் ஹிட்தான்.அதில் ஒன்றே ஒன்று ரொம்ப சீரிய அர்த்தத்தோடு எல்லாக் காலத்துக்கும் பொருத்தமா இருக்கிறது.யூ டியூபில் போட்டுக் கேட்கும் போது இப்பவும் உற்சாகப் படுத்தும் விதத்தில் தான் ஒலிக்கிறது.அதன் தமிழ்ப்...தொடர்ந்து படிக்கவும் »

வாழும் கலைஞன்    
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 8:50 am | மறுமொழிகள்

சா. கந்தசாமி கே.எம். ஆதிமூலம் இந்தியாவின் நவீன ஓவியர்யர்களில் மிக முக்கியமானவர். நவீனத்துவத்தை நவீனமாகவே கண்டவர். நவீன ஓவியம் என்பதை வர்ணங்களைக் கொண்டு அரூபமாகவே நிலைநாட்டியவர். அறிந்த நிறங்களில் இருந்து அறியாத பிரபஞ்சத்தை அறிந்துகொள்ளும் வகையில் செய்தவர். கலாபூரணமான கலைஞர். மனத்தளவில் - படைப்பு அளவில் தன் காலத்தின் பல ஓவியர்களைவிட...தொடர்ந்து படிக்கவும் »

ஆதிமூலம் - தமிழ்க் காண்பியல் மரபின் நவீன அடையாளம்    
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 8:49 am | மறுமொழிகள்

டிராட்ஸ்கி மருது அழுத்தமான தீர்க்கத்துடன் பெரும் வெளியில் ஓடித் திரிகிற கோட்டின் வேகத்திற்கு மரணம் ஏது? செல்கிற வழி எல்லாம் உயிர்ப்பை ஏற்படுத்தும் நிலைக்கும் உண்மையை மட்டும் பேச முடிந்த தூரிகைக்கும் கருப்பு மை நிறைந்த பேனாமுனை தொட்டு ஓடுகிற கணம் நிறைந்த வாழ்விற்கும் மரணம் இருக்கிறதா? ஒருபோதும் நாம் மரணம் என்கிற வார்த்தைக்குப்...தொடர்ந்து படிக்கவும் »

மறைந்தும் மறையாத ஆதிமூலம்    
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 8:48 am | மறுமொழிகள்

ந. முத்துசாமி முந்தாநாள் இரவு ராமகிருஷ்ணனிடமிருந்து டெலிபோன் வந்தது. ஆதிமூலம் இறந்துவிட்டார் என்று சொன்னார். அய்யய்யோ என்று நான் சொன்னேன். சில தினங்களுக்கு முன்புதான் மருத்துவமனையிலிருந்து நான் வெளியில் வந்தேன். மிகவும் பலவீனமாகவும் நடக்க முடியாமலும் வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டிருந்தேன். இந்தச் செய்தியை ராமகிருஷ்ணன்...தொடர்ந்து படிக்கவும் »

இராம. திரு. சம்பந்தம்    
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 8:17 am | மறுமொழிகள்

ராஜமார்த்தாண்டன் 1980களின் பிற்பகுதியில், தினமணி நாளிதழ் மதுரைப் பதிப்பின் ஆசிரியர் குழுவில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தினமணியின் இணைப்பான தமிழ்மணியில் 'புதுமைப்பித்தன் கதைகளில் பெண்கள்' என்னும் கட்டுரை எழுதியிருந்தேன். அதைப் பாராட்டி அப்போதைய ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் எனக்குக் கடிதம் எழுதியதுடன், மதுரைப் பதிப்பின் செய்தி...தொடர்ந்து படிக்கவும் »

தேவசகாயம் லூர்து - சில நினைவுகள்    
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 8:16 am | மறுமொழிகள்

ஆ. சிவசுப்பிரமணியன் 'லூர்து சார்' என்று மாணவர்களாலும் நண்பர்களாலும் அன்போடும் உரிமையோடும் அழைக்கப்பட்டுவந்த முனைவர் தேவசகாயம் லூர்து தமது 71ஆம் வயதில் காலமானார். எளிமையான தோற்றத்துடன் கூடிய அவர் ஒரு கிராமத்துக்காரரைப் போன்று எதையும் மறைக்காது வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று வெளிப்படையாகப் பேசக்கூடியவர். தம் கோபத்தை மறைக்கத் தெரியாதவர்....தொடர்ந்து படிக்கவும் »

கடம்மனிட்ட ராமகிருஷ்ணன்    
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 8:15 am | மறுமொழிகள்

சுகுமாரன் நவீன மலையாளக் கவிதையின் கர்ஜனை கடம்மனிட்ட ராமகிருஷ்ணன். நவீனர்களில் வெகு மக்கள் கவிஞரும் அவரே. நவீனத்துவப் போக்கை வைத்துப் பார்த்தால் இந்த இரண்டு தகுதிகளும் தீண்டாமைக்குரியவை. ஆனால், அவற்றை நவீனத்துவத்தின் அடையாளமாக மாற்றியதில் பெரும் வெற்றி கண்டவர் கடம்மனிட்ட. மலையாளக் கவிதையில் நவீனத்துவப் போக்கு நடைமுறையிலிருந்த காலத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

க்ளார்க் - பெருவெளி மனிதர்    
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 8:10 am | மறுமொழிகள்

பி. ஏ. கிருஷ்ணன் க்ளார்க்கின் முதல் விதி - புகழ் பெற்ற, குறைந்த வயதுள்ள ஒரு விஞ்ஞானி ஒரு (அறிவியல்) நிகழ்வு நடக்கும் என்று சொன்னால், அவர் சொல்வது அநேகமாகச் சரியாக இருக்கும். அவர் இது நடக்காது என்று உறுதியாகச் சொன்னால், அவர் சொல்வது அநேகமாகத் தவறாக இருக்கும்.1உலகத்தின் அழிவைப் பற்றி மனிதன் அவன் மனிதனான (Homo Sapiens) நாளிலிருந்து சிந்திக்கத்...தொடர்ந்து படிக்கவும் »

புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ    
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 6:57 pm | மறுமொழிகள்

ஜுலை 20 புரூஸ் லீயின் முப்பத்து நான்காவது நினைவு தினம். தற்காப்பு கலைக்கு உலக அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தவர் புரூஸ் லீ. இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன். உடம்பை எங்ஙனம் பேணுவது என உலகுக்கு கற்றுக் கொடுத்த ஆசான். தனது 33-வது வயதிலேயே புரூஸ் லீ மரணத்தை தழுவியது மகத்தான சோகம். புரூஸ் லீ சண்டையிடும் வேகம் பிரமிக்கத்தக்கது. இவரது கைகளும் கால்களும் எதிரியை தாக்கும் வேகத்துக்கு...தொடர்ந்து படிக்கவும் »

அப்பாஸ் கிராஸ்தமி    
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 6:56 pm | மறுமொழிகள்

அது என்ன அசல் கலைஞர்கள்? இன்றைய தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியானது யதார்த்த உலகை மிகை யதார்த்த (hyper reality) உலகமாக மாற்றியுள்ளது. பங்கு சந்தையில் எப்படி உற்பத்திக்கு சம்பந்தமில்லாதவர்கள், உற்பத்திக்கு சம்பந்தமில்லாத வகையில் பங்குகளின் விலையை தங்களின் தேவைக்கேற்ப உயர்த்தவோ குறைக்கவோ செய்து ஒரு மாய யதார்த்தத்தை உருவாக்குகிறார்களோ அதுபோல. காட்சி ஊடகங்களும், அச்சு...தொடர்ந்து படிக்கவும் »

சுஜாதா: நட்சத்திர எழுத்தாளர் (1935 - 2008)    
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 6:49 pm | மறுமொழிகள்

குவளைக் கண்ணன் 1979, 80இல் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கும்போது என் வகுப்புத் தோழனான ஸ்ரீதர் வீட்டுக்குப் போக ஆரம்பித்தேன். அந்த வீடு எனக்குப் பெரிய ஆச்சரியத்தை வைத்திருந்தது. வீட்டின் பல இடங்களில் சுவரை மறைத்துக்கொண்டு புத்தகங்கள் நிரம்பிய கண்ணாடி வைத்த மர அலமாரிகள் நின்றன. மேசை நாற்காலிகள்மீது பக்க அடையாளம் வைக்கப்பட்ட புத்தகங்கள் கிடந்தன. பாடப்...தொடர்ந்து படிக்கவும் »

இவரைத் தெரியமா?    
ஆக்கம்: SP.VR. SUBBIAH | May 7, 2008, 7:44 pm | மறுமொழிகள்

இவரைத் தெரியமா?தெரியவில்லையா?சரி, க்ளூ வேண்டுமா?ஒன்றல்ல, நான்கு க்ளுக்கள் தருகிறேன்1. தமிழக அரசியலில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கியவர்2. காரைக்குடிக்காரர்3. இவர் பிறந்தது 1908ஆம் ஆண்டு4. 1940 முதல் 1980 வரை, காரைக்குடிக்குச் சென்ற இரண்டு பெரிய அரசியல்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் இவரைப் பார்க்காமல் திரும்பியிருக்க மாட்டார்கள்யார்...தொடர்ந்து படிக்கவும் »

ஞாநி பேசுகிறார்!    
ஆக்கம்: MSV Muthu | May 5, 2008, 5:43 pm | மறுமொழிகள்

குமுதம் டாட் காமில் ஞாநி பாலகுமாரனிடம் நடத்திய பேட்டி பார்த்தீர்களா? நான் பார்த்தேன். இன்று காலை மூனு மணிக்கு உக்காந்து பார்த்தேன். எனக்கு ரொம்பவும் பாவமாக இருந்தது. பாலகுமாரனுக்கு ஞாநியை சமாளிக்க முடியவில்லையோ என்று தோண்றியது! சகிப்புத்தன்மைன்றார் இல்லைன்றார். கொள்கைங்கறார். கேட்டாங்க எழுதிக்கொடுத்தேங்கறார். தலித் பற்றி ஏன் எழுதவில்லை என்ற கேள்விக்கு அவங்க...தொடர்ந்து படிக்கவும் »


எல் டொராடோ பற்றி மார்க்வெஸ்    
ஆக்கம்: நாகார்ஜுனன் | May 4, 2008, 1:06 am | மறுமொழிகள்

"எல் டொராடோ – தங்கம் கிடைப்பதாக மிகப்பல ஆண்டுகளாக பல்வேறுவகை வரைபடங்களில் இடம்பெற்று வந்திருக்கிறது இந்த இடம்.இப்படியாகத்தான் மெக்ஸிகோ நாட்டின் வடக்குப்பகுதியில் அல்வார் நூனஸ் கபெஸ்ஸா தெ வாக்கா, தம்முடைய வாழ்க்கையின் இளமைப்பருவத்தை எட்டு ஆண்டுகள் வரை தேடியபோது, அவருடன் சென்ற அறுநூறு பேரில் பரஸ்பரம் புசித்து மீண்டவர்கள், ஐந்தே பேர்...இதைவிட மர்மமான விஷயம்,...தொடர்ந்து படிக்கவும் »


பதிவர் ஸ்கேன் ரிப்போர்ட் - கவிஞர் யெஸ்.பாலபாரதி!!    
ஆக்கம்: லக்கிலுக் | May 3, 2008, 1:34 am | மறுமொழிகள்

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக சிறப்பு வகுப்பு எடுக்கும் ஆசிரியை அவர். இந்தத் துறையில் இருப்பவர்களில் தமிழ்நாட்டிலேயே குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவுக்கு சாதனை படைத்தவர். அவரை சந்திக்க பாலா அண்ணா சென்றிருந்தார், உடன் நானும் இருந்தேன்.“வணக்கம். நான் பாலபாரதி!”“வணக்கம்”“இது என்னோட தம்பி கிருஷ்ணகுமார்!”“வணக்கம். உங்களுக்கு ஒரே தம்பியா?”“இவன் உடன்பிறந்த தம்பி...தொடர்ந்து படிக்கவும் »

மிஷெல் ஸெர் பற்றி - 2    
ஆக்கம்: நாகார்ஜுனன் | May 2, 2008, 6:30 pm | மறுமொழிகள்

சமகால ஃப்ரெஞ்சு சிந்தனையாளர் மிஷெல் ஸெர்ரின் ஆக்கங்களில் கலை-தத்துவம்-அறவியல்-அறிவியல் இணையும் புள்ளிகள் குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.பத்தாண்டுகள் முன்பு மிஷெல் ஸெர் தம் துணைவியாருடன் சென்னை வந்திருந்த போது இவர் நீண்ட உரையை முதன்முதலாகக் கேட்க முடிந்தது. அதற்கு நானும் எழுத்தாளர் கோணங்கியும் சென்றிருந்தோம். அன்று, பத்தொன்பதாம் நூற்றாண்டில்...தொடர்ந்து படிக்கவும் »

M G R ஐ சுட்டது ஏன்?- M.R. ராதா SPEACH    
ஆக்கம்: narsim | May 2, 2008, 5:10 am | மறுமொழிகள்

எம்ஜியாரை சுட்டது பற்றியும், தமிழன் பற்றியும்,தமிழ் நாடு பற்றியும்,கடவுள் பற்றியும் தனது பாணியில் ராதா மலேஸியாவில் ஆற்றிய உரை.எம்ஜியாரை சுட்டது பற்றி கூறும் முதல் வாக்கியத்தில்.. நக்கல்,நையாண்டியின் பிறப்பிடம் ராதாதான் என்பது உறுதியாகிறது.எத்தனை...தொடர்ந்து படிக்கவும் »

அஞ்சலி - தீதி நிர்மலா தேஷ்பாண்டே    
ஆக்கம்: ஆயில்யன். | May 1, 2008, 1:46 am | மறுமொழிகள்

காந்தியவாதியும் ராஜ்யசபா உறுப்பினருமான நிர்மலா தேஷ்பாண்டே அவர்கள் இன்று அதிகாலை உடல்நலகுறைவால்,அவர்தம் 79வது வயதில் இயற்கை எய்தினார்!இல்லற வாழ்வில் இணையாமல், தம் வாழ்நாள் முழுவதும் காந்தியடிகளின் கொள்கைகளினை பின்பற்றி சமூக சேவைகளில் தம்மை ஆட்படுத்திக்கொண்டதொரு ஆத்மா இன்று நிரந்தர அமைதி வேண்டிச்சென்றுவிட்டது!டெல்லியிலுள்ள காந்தி சமாதிக்கு ஒவ்வொரு முறையும்...தொடர்ந்து படிக்கவும் »

சந்தித்தேன் பாட்டுத் தலைவனை!    
ஆக்கம்: ரவிபிரகாஷ் | April 30, 2008, 12:36 pm | மறுமொழிகள்

டி.எம்.எஸ்.! தமிழக மக்களைத் தனது கம்பீரக் குரலால் நாலு தலைமுறைகளாகக் கட்டிப் போட்டு வைத்திருந்த ஏழிசை வேந்தன். தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு, தெள்ளத் தெளிவாக உச்சரித்துப் பாடிய பாட்டுத் தலைவன். பாடல் வரிகளில் உணர்ச்சியைக் குழைத்து, உயிரூட்டிய இசை பிரம்மா. தமிழ் மக்கள் எம்.ஜி.ஆர். ரசிகர்கள், சிவாஜி ரசிகர்கள் என இரண்டாகப் பிரிந்திருந்த காலத்தில், இரு தரப்பினரின்...தொடர்ந்து படிக்கவும் »

இன்னிசை சகாப்தம் டி.எம்.எஸ்.!    
ஆக்கம்: ரவிபிரகாஷ் | April 30, 2008, 12:22 pm | மறுமொழிகள்

அரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் என்றால், எனக்கு அலர்ஜி! பத்திரிகைத் துறைக்கு நான் வந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகியும், பத்திரிகை தொடர்பாகக் கூட அவர்களைச் சந்திப்பதை நான் தவிர்த்தே வந்திருக்கிறேன்.விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் நான் பி.யு.சி. படித்துக்கொண்டு இருந்தபோது, ஆண்டு விழாவில் நடிகர்திலகம் சிவாஜிகணேசனைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள்....தொடர்ந்து படிக்கவும் »

ஜக்கி வாசுதேவ்    
ஆக்கம்: ஜெயமோகன் | April 29, 2008, 10:14 am | மறுமொழிகள்

ஜக்கி வாசுதேவ் பற்றி என்னிடம் முதலில் சொன்னவர் நண்பர் தண்டபாணி. யுவன் சந்திரசேகரின் உயிர் நண்பர். அவரது மனைவிக்கு பலவிதமான உடல்நலச்சிக்கல்கள். அந்த மன அழுத்தத்தில் அவர் தேடிப்போன பலரில் ஜக்கியும் ஒருவர். பின்னர்  ஜூனியர்விகடனில் அவரைப்பற்றிய அவதூறுகள் வந்தன. அவரது மனைவி மர்மமான முறையில் இறந்தார் என்பதும் அங்கே இளம்பெண் நடமாட்டம் அதிகம் என்பதும்....தொடர்ந்து படிக்கவும் »

பரம்பரை கண்ட பாவேந்தர்    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | April 29, 2008, 6:41 am | மறுமொழிகள்

காரைக்குடிக்கு அருகில் உள்ள ஆத்தங்குடி என்னும் ஊரில் திராவிடர் கழகத்தின் கிளை தொடங்குவதற்கு ஏற்பாடாகி, மாலை 5.30 மணிக்குக் கூட்டம் தொடங்கியது. அப்பகுதியின் பெரிய மனிதர் ஒருவர் வேட்டையாடுவதில் வல்லவர். காட்டிற்குச் சென்று பறவைகளை, விலங்குகளைத் துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். அப்பெரிய மனிதரின் முரட்டுத்தனம் அப்பகுதி மக்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

பாவேந்தர் பாரதிதாசனார்    
ஆக்கம்: Suba Nargunan / சுப.நற்குணன் | April 29, 2008, 4:13 am | மறுமொழிகள்

(29-4-2008ஆம் நாள் பாவேந்தர் பாரதிதாசனார் தமிழரிடையே தமிழ் மண்ணில் பிறந்த நினைவு நாள். அவருடைய நினைவேந்தலாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது)பாரதிதாசன்....! உண்மைத் தமிழ் உணர்வாளர்களுக்கு நன்கு பழகிய பெயர். தமிழர் உள்ளங்களிலும் நாவிலும் என்றென்றும் நிலவிவரும் தமிழ் உரு ஒன்றின் சொல்லுருவம் அது!எனக்குக் குயிலின் பாடலும்; மயிலின் ஆடலும்; வண்டின் யாழும்; அருவியின் முழவும்...தொடர்ந்து படிக்கவும் »

சேவக லீலா!    
ஆக்கம்: லக்கிலுக் | April 29, 2008, 12:20 am | மறுமொழிகள்

அபத்தமாக பேசுபவர்களையும், எழுதுபவர்களையும் கண்டால் எல்லோருக்கும் எரிச்சல் மண்டுவது இயல்பு. ஆயினும் சில நேரங்களில் நம்முடைய ஆதர்சங்களே அபத்தமாக சிந்தித்து, அதையும் எழுதியோ, பேசியோ தொலைக்கும்போது எரிச்சலோடு, கோபமும் இணைந்துக் கொள்கிறது. அதுபோன்ற சீற்றமான, நிதானமற்ற மனநிலையில் இப்போது எழுதுகிறேன்.சிறுவயதிலிருந்தே ஏதாவது பத்திரிகைகளில் சாரு நிவேதிதா என்ற பெயரை...தொடர்ந்து படிக்கவும் »

என் மானசீக குரு ஜாக்கிசானிடம் கற்றுக்கொள்ளுங்கள்    
ஆக்கம்: jackiesekar | April 28, 2008, 9:34 am | மறுமொழிகள்

சரியாக 18 வருடங்களுக்கு முன் நான் ஆட்டோ ஓட்டியிருக்கிறேன் , மெரினா பீச்சில் டீ விற்று இருக்கிறேன் , அப்போது வாழ்க்கை பற்றிய பயம் அதிகம் இருந்தது. அந்த கஷ்டங்களி்ன் போது சொல்லிதர எவரும் எனக்கு இல்லாதபோது, armor of god படம் வெளியானது ,என் வாழ்வின் சோக பக்கங்களுக்கு அந்த படமே பெரிய ஆறுதல் , உங்களில் பலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம் . அந்த நடிகனின் சிரிப்பு என்னை கவர்ந்தது ,...தொடர்ந்து படிக்கவும் »

பண்பால் கவர்ந்த ஜாக்கிசான்!    
ஆக்கம்: ஜோ / Joe | April 28, 2008, 1:02 am | மறுமொழிகள்

சமீபத்தில் நடைபெற்ற கலைஞானி கமல்ஹாசனின் தசாதாவரம் பட பாடல் குறுந்தட்டு வெளியீட்டு விழாவில் தன்னுடைய எதார்த்த நடவடிக்கைகளின் மூலம் அனைவரையும் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்தவர் உலக நட்சத்திரம் ஜாக்கிசான்.குறுந்தட்டை கலைஞர் வெளியிட ஜாக்கிசான் பெற்றுக் கொண்டார் .அப்போது குறுந்தகட்டை சுற்றியிருந்த கவரையும் , நாடாவையும் வழக்கம் போல கீழே போட்டுவிட ,கொஞ்சம்...தொடர்ந்து படிக்கவும் »

பாவேந்தர் இன்றிருந்தால் என்ன செய்திருப்பார்?    
ஆக்கம்: nayanan | April 26, 2008, 1:54 pm | மறுமொழிகள்

இஃது எனது நட்சத்திர வார நிறைவுப் பதிவு.விருப்புடன் படித்த அனைத்து நண்பர்களுக்கும்,மறுமொழிகள், பின்னூட்டுகள் அளித்த அனைத்துநண்பர்களுக்கும், தமிழ்மணத்துக்கும் எனதுநன்றிகளும் வணக்கங்களும்.அன்புடன்நாக.இளங்கோவன்பாவேந்தர் இன்றிருந்தால் என்ன செய்திருப்பார்?தமிழ் அரசுகள் உள்ள மூன்று நிலங்களில் ஒன்று புதுவை.புதுவை ஈன்ற இருபெரும் கவிஞர்களில் ஒருவர்பாவேந்தர்...தொடர்ந்து படிக்கவும் »

மிஷெல் ஃபூக்கோ விரிவுரைகள், புத்தகங்களாக    
ஆக்கம்: நாகார்ஜுனன் | April 23, 2008, 6:02 am | மறுமொழிகள்

பாரீஸ் நகரில் இயங்கும் Collège de France என்ற பிரத்யேக உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பில் 1969-ஆம் ஆண்டு தொடங்கி தம்முடைய வாழ்நாள் இறுதிவரை - அதாவது 1984-ஆம் ஆண்டு வரை - பேராசிரியாரகப் பணியாற்றினார் மிஷெல் ஃபூக்கோ. "சிந்தனை-அமைப்புக்களின் வரலாறு குறித்து ஆராயும் பேராசிரியர்" என அவருடைய பொறுப்பு வர்ணிக்கப்பெற்றது.Collège de France கல்வி-அமைப்பில் பேராசிரியர்கள், தங்கள் ஆய்வுகளை,...தொடர்ந்து படிக்கவும் »

லெனின் : உலகைக் குலுக்கிய ரசியப் புரட்சி    
ஆக்கம்: தமிழரங்கம் | April 22, 2008, 2:48 pm | மறுமொழிகள்

1917 நவம்பர். பிரம்மாண்டமான ரசியா கரைந்து உருமாறிக் கொண்டிருந்தது. 1917 பிப்ரவரி முதலாளித்துவ புரட்சி பழைய ஆட்சியின் செல்லரித்துப் போன அமைப்பை நீடிக்க வைத்ததற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாமல் முடிவுற்றது. ஆனால் இப்போது போல்ஷ்விக்கு புரட்சியாளர்கள் இந்த அமைப்பைச் சிதறச் செய்துவிட்டனர்.பழைய ரசியா இல்லாதொழிந்தது. ஊழிக்காலத் தீயிலே மானுட சமுதாயம் உருகித் திரவமாய்...தொடர்ந்து படிக்கவும் »

இன்றைய மரம் நடும் விழாக்களின் தந்தை.    
ஆக்கம்: வின்சென்ட். | April 21, 2008, 5:44 pm | மறுமொழிகள்

திரு. ஜுலியஸ் ஸ்டெர்லிங் மோர்டன் 1854 ஆண்டு புது மனைவியுடன் அமெரிக்காவின் மிசிகன் பகுதியிலிருந்து நெப்ரஸ்கா பகுதிக்கு குடிய