மாற்று! » பகுப்புகள்

கதை 

கடிவாளம் இல்லா “கடன் அட்டை’ கலாசாரம்    
ஆக்கம்: முதுவை ஹிதாயத் | August 4, 2008, 9:19 am | தலைப்புப் பக்கம்

கடிவாளம் இல்லா “கடன் அட்டை’ கலாசாரம் சென்னை, ஆக 3 : கடன் அட்டை வியாபாரம் கடிவாளம் இல்லாத குதிரையைப் போல மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் ஒரு கோடி மக்கள் கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் இதைப் பயன்படுத்தும் பத்து லட்சம் மக்களில் சென்னையில் மட்டும் ஏழு லட்சம் பேர் உள்ளனர். மாதத்திற்கு பத்து கோடி ரூபாய் தமிழ்நாட்டிலிருந்து கடன்...தொடர்ந்து படிக்கவும் »

மூன்று தங்கமுடி ராட்சசன்    
ஆக்கம்: Badri | August 3, 2008, 3:40 am | தலைப்புப் பக்கம்

[Grimms' Fairy Tales, The Giant with the Three Golden Hairs]ஒரு பெற்றோருக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. பிறந்த நேரத்தைக் கணக்கில் எடுத்த அந்த கிராமத்தவர் அனைவரும் இந்தப் பையன் நிச்சயம் ராஜாவின் மகளை மணம் செய்துகொள்வான் என்றனர்.அந்தப் பக்கமாக அந்த நாட்டு ராஜா மாறுவேஷத்தில் போய்க்கொண்டிருந்தார். அவர் மக்களிடம் என்ன விசேஷம் என்று கேட்டார். அவர்களும் ராஜாவின் மகளை மணந்துகொள்ளப்போகும் பையன் அந்த ஊரில்...தொடர்ந்து படிக்கவும் »

பசுமைப் புரட்சி    
ஆக்கம்: cinemavirumbi | August 1, 2008, 6:45 am | தலைப்புப் பக்கம்

மரம் வெட்டும்  தொழிலாளி   ஒதுங்கினான்  லாரி  நிழலில்.  முதலாளி  சொன்னார்  “இந்தாப்பா  கூலி , ...தொடர்ந்து படிக்கவும் »

சென்னை இன்னும் இந்தியாவில்தான் இருக்கிறது!!!    
ஆக்கம்: ச்சின்னப் பையன் | July 22, 2008, 4:00 am | தலைப்புப் பக்கம்

கிபி 2080 - சென்னை. அம்மா, அப்பா மற்றும் ஒரு பையன் உள்ள ஒரு குடும்பம். ஒரு உயர்தர சீன உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருக்கின்றனர்.பையன்: அம்மா, இன்னிக்கும் எனக்கு நூடுல்ஸ் போதும். அம்மா: என்னப்பா, அது மட்டும் எப்படி போதும்? வேறே ஏதாவது சாப்பிடு.பையன்: போம்மா. ஒரே போரடிக்குது.அம்மா: ஏங்க, இவன் எப்போ பாத்தாலும் இப்பத்தான் போரடிக்குது, போரடிக்குதுன்னு சொல்லிட்டிருக்கான். இந்த...தொடர்ந்து படிக்கவும் »

“தாம்தூம் சொறக்கா டூம்” - குள்ளனின் குட்டிக்கதைகள் - 1    
ஆக்கம்: vizhiyan | July 9, 2008, 5:27 am | தலைப்புப் பக்கம்

“தாம்தூம் சொறக்கா டூம்” - குள்ளனின் குட்டிக்கதைகள் - 1 (சிறுவர்களுக்கான நாடோடி சிறுகதைகள்) குள்ள மனிதனை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆமாம் அவனே தான். கட்டைவிரல் அளவிற்கு மட்டுமே வளர்ந்த அவனை பற்றிய கதைகள் தான் குள்ளனின் லீலைகள். நீண்டவருடங்களுக்கு முன்னர் நடந்த கதைகள் இவை. குள்ளன் படிப்பறிவு இல்லாதவன்.குள்ளன் ஒரு குறும்புக்காரன். குள்ளன் ஒரு சோம்பேறி.ஏதோ...தொடர்ந்து படிக்கவும் »

ஒடோகொயிலியஸ் விர்ஜினியனுஸ்(Odocoileus virginianus ) – அறிவியல் புனைக்க...    
ஆக்கம்: நிலாரசிகன் | July 3, 2008, 1:02 am | தலைப்புப் பக்கம்

உலகப் புகழ் பெற்ற திருநெல்வேலி ஐ.ஐடியில் படித்த தனக்கு இப்படி ஒரு நிலைமை வந்ததை எண்ணி வருந்தினான் ஜேம்ஸ். உலகின் இளம் விஞ்ஞானி என்கிற பட்டமெல்லாம் தனக்கிருந்து என்ன பயன் என்று நொந்துகொண்டே ஹாலில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். ஜெனி மீது முதல் முறையாக கோபம் வந்தது.அதை விட அதிகமாக ஜெனியின் கொள்ளுப்பாட்டன் மீது கோபம் வந்தது. நேற்று டிஜிட்டல் நூலகத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

அனாதைகள் - சிறுகதை    
ஆக்கம்: கதிர் சயந்தன் | July 1, 2008, 6:25 am | தலைப்புப் பக்கம்

(1) குப்பியைக் கடித்துவிடக் கூடாது என முன்னரே திட்டமிட்டிருந்தார்களோ என்னவோ சாகீரின் கையிரண்டையும் பின் முதுகில் சேர்த்து அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள். சாகீர் தலையை உயர்த்த முடியாதபடி இன்னொரு கை தரையோடு தலையை இறுக்கி வைத்திருந்தது. சர்வ நிச்சயமாய் தன்னைக் குறிவைத்துக் கொத்தியிருக்கிறார்கள் என்பது அவனுக்கு விளங்கியது. ´´செத்து விட வேண்டும்´´....தொடர்ந்து படிக்கவும் »

அறிவியல் சிறுகதைப் போட்டி    
ஆக்கம்: சிறில் அலெக்ஸ் | June 26, 2008, 4:44 pm | தலைப்புப் பக்கம்

பதிவுலகம். விசித்திரம் நிறைந்த பல போட்டிகளை சந்தித்துள்ளது. புதுமையான படைப்புக்களை கண்டிருக்கிறது. ஆனால் இந்த போட்டி விசித்திரமும் அல்ல போட்டி நடத்தும் நானும் புதுமையானவனல்ல. பதிவுப் பாதையிலே சர்வ சாதாரணமாக நடத்தப்படும் ஒரு போட்டிதான் இது. ‘இசங்களைப் பேசிக்கொண்டிருக்கிறோம், கோஷ்டி சேர்த்து சண்டை போடுகிறோம்’ குற்றம் சாட்டப்பட்டிருக்கிறோம் இப்படியெல்லாம்....தொடர்ந்து படிக்கவும் »

கடைசிக் குறிப்பு    
ஆக்கம்: லதானந்த் | June 25, 2008, 8:21 am | தலைப்புப் பக்கம்

“புரபசர் நரேந்திரன்! நீங்க பூரணமா குணமாயிட்டீங்க. நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆயிடலாம்” என்றபடி கை குலுக்கினார் டாக்டர் மாதப்பன். “ஆனா அதுக்கு முன்னாடி நீங்க சந்திக்க வேண்டிய ஒரு முக்கியமான பேஷண்ட் பக்கத்து அறையில் இருக்கார். நீங்க அவசியம் சந்திக்கணும்” என்று பக்கத்து அறைக்குப் புரபசர் நரேந்திரனை அழைத்துச் சென்றார்.கோவையின் மிகப் பெரிய தனியார் மருத்துவ மனை அது....தொடர்ந்து படிக்கவும் »

மனிதர்கள் - சினிமாவில் தொலைந்தவன்    
ஆக்கம்: Sai Ram | June 14, 2008, 1:18 am | தலைப்புப் பக்கம்

ஒரு சினிமா படப்பிடிப்பு தளம். வழக்கம் போல எல்லாரும் பிசியாக இருக்கிறார்கள். ஓர் ஓரத்தில் சிவா நின்று கொண்டிருக்கிறான். நான்கு நாள் தாடி. மெலிந்த உருவம். ஒரு கோணத்தில் அந்த சினிமா டைரக்டரை பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்தது போலவே இருக்கிறது. டைரக்டரின் கடைக்கண் பார்வைக்காக தான் சிவா நின்று கொண்டிருக்கிறான். அவரும் தினமும் அவனை பார்க்கிறார். பார்க்கிறார் என்பதை விட...தொடர்ந்து படிக்கவும் »

மனிதர்கள் - நான் கடவுள்    
ஆக்கம்: Sai Ram | June 11, 2008, 12:00 am | தலைப்புப் பக்கம்

அவரது பெயர் சீனிவாசன். சீனா என்று சொன்னால் தான் பலருக்கு அவரை தெரியும். திரைக்கதை எழுதுவதில் திறமைசாலி. பல நிறுவனங்களில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கபட்டன. முழு திறமையையும் காட்ட வேண்டிய காலகட்டத்தில் திடீரென மனநிலை பிறழ்ந்து பைத்தியமாகி போனார்.சீனா வட சென்னையில் ஒரு மனநல காப்பகத்தில் இருந்த போது தான் நான் அவரை முதன்முதலாக சந்தித்தேன். நண்பர்களுடன் வேறொரு பணிக்காக...தொடர்ந்து படிக்கவும் »

மனிதர்கள் - போதையே வாழ்க்கை    
ஆக்கம்: Sai Ram | June 5, 2008, 12:10 pm | தலைப்புப் பக்கம்

லீமா அவனுடைய பெயர். மணிப்பூரை சேர்ந்தவன். என்னுடன் கல்லூரியில் படித்தவன். மணிப்பூர் மாநிலத்தில் ஒரு பெரிய செல்வந்தர் குடும்பம் அவனுடையது. தாய் சிறு வயதிலே இறந்து விட்டாள். தந்தையின் நான்காவது மனைவியின் பெயர் கூட அவனுக்கு நினைவில்லை. மணிப்பூரில் அவனிருந்த பகுதியில் தினமும் கலவரம் நடக்கும் என்பதால் தொலைதூரத்தில் அவனை படிக்க அனுப்பியிருக்கிறார் அவனது தந்தை. மற்றொரு...தொடர்ந்து படிக்கவும் »

ஐந்து தலை யானை முட்டைக் கதை (பாகம் 3):முடிவு    
ஆக்கம்: ஆகாய நதி | June 3, 2008, 2:12 am | தலைப்புப் பக்கம்

பார்த்தா உள்ள யானையோட யானையோட உவ்வே சாணி இருந்துச்சு :):)க‌டைக்கார‌ருக்கு ஒரே கோவ‌ம் இந்த யானைக்கார‌ன் மேல‌. உட‌னே அவர் அவ‌னை ஆன‌யூர் காவ‌லாளிக‌ள் கிட்ட ஏமாத்திக்கார‌ன் அப்டினு க‌ம்ப்ளெயின்ட் ப‌ண்ணி புடிச்சு குடுத்துட்டார் அவ்ளோத‌ன் அந்த யானைக்கார‌ன் ந‌ல்லா மாட்டிக்கிட்டான். வ‌ழ‌க்கு ராஜா கிட்ட விசார‌ணைக்கு போச்சு. அந்த‌ ராஜா அவ‌ன்கிட்ட அந்த முட்டை ஏதுனு கேக்க...தொடர்ந்து படிக்கவும் »

ஐந்து தலை யானை முட்டை கதை‍(பாகம் 2 )    
ஆக்கம்: ஆகாய நதி | June 3, 2008, 1:16 am | தலைப்புப் பக்கம்

இப்ப‌டியே தொடர்ந்து ரொம்ப நாட்களா அந்த யானை நிறைய சாப்பாடு சாப்பிட்டுகிட்டு ஜாலியா அவன் வீட்டுல ராணி மாதிரி இருந்துச்சு.......ஆனால் அந்த யானைக்காரன் யோசிக்க ஆரம்பிச்சான் "என்ன இந்த யானை தங்க முட்டை போடவே மாட்டேங்குதுனு" அவனுக்கு கோவம் வந்துருச்சு. இது அந்த யானைக்கு தெரிய வந்ததும் அது இதுதான் அவனுக்கு தண்டனை கொடுக்க சரியான சமயம் அப்டினு திட்டம் போட்டுது. அதோட திட்டப்...தொடர்ந்து படிக்கவும் »

ஐந்து தலை யானை முட்டைக் கதை‍(பாகம்1)    
ஆக்கம்: ஆகாய நதி | May 30, 2008, 7:22 am | தலைப்புப் பக்கம்

ஒரு காலத்துல (இப்டிதானே கதை சொல்ல ஆரம்பிக்கனும்) ஆனையூர் அப்டினு ஒரு ஊர் இருந்துச்சு. அங்க ஒரு யானைக்காரன் வாழ்ந்துட்டு இருந்தான் அவன் நான்கு யானைகள வளத்துட்டு இருந்தான். அவன் ரொம்ப பேராசை புடிச்சவனா இருந்தானா...அதனால அவனோட யானைகள ரொம்ப கொடுமை படுத்தினான். தினமும் நாலு யானைகளும் அந்த ஊர்ல உள்ள எல்லா வீதிகளுக்கும் வித்தை காட்டி காசு சம்பாதிக்க போகனும். அந்த நாலு...தொடர்ந்து படிக்கவும் »

கடைசி ஓவரில் ஒரு ஆபரேஷன்    
ஆக்கம்: parisalkaaran | May 26, 2008, 11:51 pm | தலைப்புப் பக்கம்

டென்ஷனின் உச்சத்தில் இருந்தேன் நான். ராஜஸ்தான் அணிக்கு கடைசி ஓவரில் பதினைந்து ரன்கள் தேவை. மும்பை அணி வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ஆடிக்கொண்டிருக்கிறது. தோற்றால் அரையிறுதி வாய்ப்பு பறிபோகும். 19-வது ஓவர் முடிந்து விளம்பரம் போட்டிருந்த வேளையின் போன் ஒலித்தது. சௌந்தர்!உடனே எடுத்தேன்.."சௌந்தர்.. மேட்ச் பாக்கறியா?""இல்லடா. நான் ஃபேக்டரிலதான் இருக்கேன். இன்னைக்கு நைட்...தொடர்ந்து படிக்கவும் »

நானும் மழைக்குப் பொறுப்பான கடவுளும்    
ஆக்கம்: கதிர் சயந்தன் | May 23, 2008, 11:17 am | தலைப்புப் பக்கம்

சும்மா ஒரு இசையும் கதையும் மாதிரி செய்து பார்க்கலாமென்றுதான் . பெரிதா சீரியசாக எடுத்துக்காதீங்க.. இசையும் கதையும் செய்யலையே என்ற குறையைத் தீர்க்கும் வண்ணம் ஏற்கனவே இங்கே இருக்கிற பிரதியொன்றைச்...தொடர்ந்து படிக்கவும் »

அமெரிக்க வரன்    
ஆக்கம்: Sreelatha | May 14, 2008, 7:01 pm | தலைப்புப் பக்கம்

"நமஸ்காரம், வாசுகி அம்மா. எப்பிடி இருக்கீங்க? உங்க மகளுக்கு ஏதாவது வரன் வந்ததா?"."ஏதாவது இல்லை, ஸ்வாமி. அமெரிக்க வரனா வரனும். நான் தினம் வந்து இந்த முருகனை வேண்டிக்கிறேன், ஒரு அமெரிக்க வரனா கிடைக்கணும்னு. இன்னும் இந்த முருகன் மனசு வெக்கலை"."என்ன வாசுகி அம்மா, முருகனுக்கு கல்யாண உற்சவம் செய்யப் போறிங்களாமே"."ஆமாம், சிவகாமி. உங்களுக்கு போன் பண்ணிணேன். லைன் கிடைக்கல. தப்பாம...தொடர்ந்து படிக்கவும் »

''பாரதிகிருஷ்ண குமார்'' அவர்களின் முதல் சிறுகதை,இது    
ஆக்கம்: *athisivamb@chennai* | May 12, 2008, 11:34 am | தலைப்புப் பக்கம்

( ஜனவரி 2008''உயிர் எழுத்து'' என்ற மாத இதழில் வெளிவந்த ''பாரதிகிருஷ்ண குமார்'' அவர்களின் முதல் சிறுகதை,இது... )அம்மாவும், அந்தோன் சேக்கவும்அம்மா ஒருமுறைகூட,தன் தேவைகளுக்காகப் பிறர் உதவியை நாடியது கிடையாது.அந்த ராத்திரியில்,குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டு எழுப்பியது ஆச்சரியமாக இருந்து."ரொம்பத் தொண்டையெல்லாங் காஞ்சு போச்சு..எந்திரிக்க முடியாம தாகம் அமுக்குது..தம்பீ..தண்ணீ...தொடர்ந்து படிக்கவும் »

புவியீர்ப்புக் கட்டணம்    
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 7:29 pm | தலைப்புப் பக்கம்

அ. முத்துலிங்கம் கடிதத்தைப் பிரிக்கும்போதே அவனுக்குக் கை நடுங்கியது. அது எங்கேயிருந்து வந்திருக்கிறது என்பது தெரியும். இது மூன்றாவது நினைவூட்டல். மூன்று மாதங்களாக அவன் புவியீர்ப்புக் கட்டணம் கட்டவில்லை. இப்போது உடனே அதைக் கட்ட வேண்டும் என்று இறுதிக் கடிதம் வந்திருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாகத்தான் இந்தத் தொல்லை. அதற்கு முன் இப்படி...தொடர்ந்து படிக்கவும் »

அறை எண் 786ல் கடவுள்!    
ஆக்கம்: லக்கிலுக் | May 5, 2008, 1:51 am | தலைப்புப் பக்கம்

சரவணன் செல்லும் நூற்றி எட்டாவது நேர்முகத்தேர்வு இது. “ஆண்டவா இந்த வேலையாவது எனக்கு கிடைச்சா லஸ் கார்னர் பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைக்கிறேன்” மனதுக்குள் வேண்டியவாறு அந்த அதிகாரியின் அறைக்குள் நுழைந்தான்.“வாங்க மிஸ்டர் சரவணன்! வாட்ஸ் யுவர் குவாலிஃபிகேஷன்?”“ப்ளீஸ் ஹேவ் எ லுக் சார்” சான்றிதழ்களோடு இருந்த கோப்பினை நீட்டினான்.கோப்பினைப் புரட்டியவாறே, “குட்....தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்ச்செல்வியின் 'கீதாரி'    
ஆக்கம்: காயத்ரி | April 20, 2008, 2:30 am | தலைப்புப் பக்கம்

" நீ வளர்ந்திருக்க.. அவ்ளோ தான். இன்னும் வாழவே ஆரம்பிக்கல"எப்போதோ பேச்சுவாக்கில் அம்மா சொன்னது இது! காற்றில் திசையறுந்த பட்டம் போல் மனக்கிளை ஒன்றில் மாட்டிக் கொண்டு எப்போதும் படபடத்துக் கொண்டே இருக்கிறது இந்த வரி. கால் நூற்றாண்டைக் கடந்தாயிற்று.. இன்னும் வாழவில்லை என்றால் எப்படி?நிஜம்தான். என்றோ துயரமென மறுகியவை புன்னகையாகவும், மகிழ்வெனக் கொண்டாடியவை கண்ணீராகவும்...தொடர்ந்து படிக்கவும் »

சேரர் கோட்டை (சரித்திரத் தொடர்)    
ஆக்கம்: seshadrigokul@yahoo.com(சே. கோகுல்) | April 19, 2008, 7:00 pm | தலைப்புப் பக்கம்

வரலாறு டாட் காமில் வெளியான முந்தைய சரித்திரத் தொடர்களான இராஜகேசரி மற்றும் பைசாசம் நாவல்களைப் படித்து விட்டீர்களா ?புதிய அத்தியாயங்கள்அத்தியாயம் 29 - சங்கிராம விஹாரைஅத்தியாயம் 30 - மோசம் போனோம்அத்தியாயம் 31 - மாயை தெளிந்ததுஅத்தியாயம் 32 - இனி உங்கள் பணிமுந்தைய அத்தியாயங்கள்அத்தியாயம் 01 - மணியிலங்கு நெடுமாட மதில்விழிஞம்அத்தியாயம் 02 - கோட்டையில் கூட்டம்அத்தியாயம் 03 - விபரீத...தொடர்ந்து படிக்கவும் »

சிறுகதை கன்று    
ஆக்கம்: தமிழ்மகன் | April 19, 2008, 10:04 am | தலைப்புப் பக்கம்

தமிழ்மகன் ஓட்டலுக்குள் நுழைவதற்கு முன் அந்தச் சிறுமியைப் பார்த்தேன். அவள் கையில் ஒரு அலுமினிய தட்டும் ஒரு பர்ஸýம் இருந்தது. பர்ஸ் வைத்திருக்கும் பிச்சைக்காரச் சிறுமி என்பது புதுமையாகவும் பார்க்க அழகாகவும் இருந்தது. அவளைக் குமரியென்றும் கூறலாம்தான். அதற்கு ஒன்றும் அவசரமில்லை. அந்தப் பாவாடைச் சட்டையில் ரெட்டை ஜடை போட்டு சிவப்பு ரிப்பன் கட்டியிருந்த அந்த ஒரு கண...தொடர்ந்து படிக்கவும் »

கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 19.    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | April 18, 2008, 1:36 am | தலைப்புப் பக்கம்

ராமன் காட்டுக்குச் சென்ற ஆறு நாட்கள் கழிந்த பின்னரே தசரதன் இறந்ததாய் வால்மீகி குறிப்பிடக் கம்பரோ சுமந்திரர் திரும்பி வந்து, தன்னுடன் ராமன் வரவில்லை எனக் கூறியதுமே உயிர் பிரிந்ததாய்க் கூறுகின்றார். சுமந்திரர் திரும்பியதுமே வசிஷ்டர் முகத்தைப் பார்த்ததுமே மன்னன் இவ்வாறு நினைத்தானாம்: "தைலமாட்டு படலம்: பாடல்: 582, 583"இல்லை என்று உரைக்கலாற்றான் ஏங்கினன் முனிவன்...தொடர்ந்து படிக்கவும் »

தலைப்புல ரெண்டு கட்டாயம் வரணும்- வ.வா சங்க போட்டிக்கு    
ஆக்கம்: ramachandranusha(உஷா) | April 17, 2008, 11:10 am | தலைப்புப் பக்கம்

"எதுனாலும் ரொண்டு ரொண்டுன்னு வர்ணும் மேடம்" தெலுங்கு மணக்க தமிழில் கண்டிப்பாய் சொன்னார் தயாரிப்பாளர். ஏகாம்பரி முழித்தாள்.சின்னதாய் ஒரு பிளாஷ் பேக்.தொலைக்காட்சியில் தொடர் எழுத அழைப்பு வருகிறது ஏகாம்பரிக்கு. வாழ்க்கையில் ஒரு கட்டத்திற்கு மேல் போய்விட்டால், இந்தகைய சந்தர்ப்பங்கள் பெரிய பிரமிப்பை தருவதில்லை. அதனால் சாதாரணமாய், அவர்கள் அனுப்பிய காரில் பயணித்து...தொடர்ந்து படிக்கவும் »

ரங்க பவனம் - VII    
ஆக்கம்: SathyaPriyan | April 15, 2008, 6:29 pm | தலைப்புப் பக்கம்

பார்கவ் தான் அவளது தேர்வு முடிவை முதலில் பார்த்தவன். மதியம் 12 மணிக்கே முடிவு வெளியானாலும், 2 மணிக்கு தான் IIM இணையதளம் உயிர்ப்பு பெற்றது. அவனுக்கு தெரியும், tension காரணமாக சௌம்யா முடிவுகளை பார்க்க வரமாட்டாள் என்று. அதனால் அவ்வளவு நேரம் பொருமையாக இருந்து முதலில் பார்த்து அவளிடம் சொல்ல வேண்டும் என்பதற்காக கணிணி முன்பே அமர்ந்து இருந்தான். அவளது முடிவு தெரிந்த உடன் அவனுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

எனக்கென ஏற்கெனவே.....பிறந்தவள் இவளோ??? - பகுதி 2    
ஆக்கம்: Divya | April 15, 2008, 10:38 am | தலைப்புப் பக்கம்

பகுதி-1 நான் சற்றும் எதிர்பார்கவே இல்லை....மீரா என் காலடியில் மயங்கி....சுருண்டு விழுந்து , மூர்ச்சையற்று போனாள்."மீ....ரா.........மீரா......."அவளை எழுப்ப முயன்று தோற்றேன்!!ரூமிற்கு வெளியில் ஓடி சென்று என் அம்மா , அக்காவை மட்டும் அழைத்து வந்தேன், மூர்ச்சையான மீரா கண்விழிக்காததால், அருகில் இருந்த நர்ஸிங் ஹோமிற்கு என் காரில் அழைத்துச் சென்றோம், நான் டென்ஷனுடன் பட்டு வேஷ்டியில்...தொடர்ந்து படிக்கவும் »

அந்த ஒரு சொல்    
ஆக்கம்: ramachandranusha(உஷா) | April 15, 2008, 9:44 am | தலைப்புப் பக்கம்

எத்தனை வருடங்கள் னாலும் திருவல்லிக்கேணி மட்டும் மாறவே மாறாது. சந்து சந்தாய் தெருக்கள். சாணி நாற்றம், மூத்திர வாடை, வாசலில் கோலம், பச்சை பசுமையாய் காய்கறிக்கூடைகள். சில புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் மட்டும் கண்களை உறுத்தின.ஆட்டோ இடதுபக்க சந்தில் திரும்பியதும், கடற்காற்று ஜில் என்று முகத்தில் மோதியது. படபடத்த புடைவையை இழுத்து சொருகிக் கொண்டேன்.மணியைப்...தொடர்ந்து படிக்கவும் »

இராமநவமி: அன்புத் தம்பியைக் கொன்ற அண்ணனே ராமன்! - 1    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | April 14, 2008, 12:29 pm | தலைப்புப் பக்கம்

காவியத்தில் இராமனைப் பிடிக்குமா, இலக்குவனைப் பிடிக்குமா-ன்னு பல பதிவர்களைக் கேட்டுப் பாருங்க! இலக்குவனைத் தான் பிடிக்கும்-னு சொல்லுவாய்ங்க! ஏன் தெரியுமா?ஹிஹி...இராமனைச் சுத்தமாப் பிடிக்காது! அவர்களைப் பொறுத்தவரை புனித பிம்பம்! Unrealistic:-)ஆனா இலக்குவன் அப்படியில்லை! கோவக்காரன்! Straightforward! :-)சரி இலக்குவனைப் பிடிக்கும்-னு சொல்றீங்களே, இலக்குவன் செய்தது போல் நீங்களும்...தொடர்ந்து படிக்கவும் »

ரங்க பவனம் - VI    
ஆக்கம்: SathyaPriyan | April 14, 2008, 10:53 am | தலைப்புப் பக்கம்

ஒரு 6 மாத காலம் கடந்த பிறகு, அந்த சனிக்கிழமை ராமனாதனை சந்தித்தான் பார்கவ். அவனிடம் அதுவரை நடந்த அனைத்தையும் கூறியவன் இத்தனை நாள் சொல்லாமல் விட்டதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டான். தீபா அதைப் பற்றியெல்லாம் அவனிடம் ஒன்றும் சொல்லாதது அவனுக்கு தீபாவின் மீது இருந்த மதிப்பை பல மடங்கு கூட்டியது. ஆனால் ராமனாதனோ அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டான். அவன் முன்னரே ஊகித்த ஒன்று...தொடர்ந்து படிக்கவும் »

இச்சாதாரி பாம்பா?    
ஆக்கம்: சின்னக்குட்டி | April 14, 2008, 3:38 am | தலைப்புப் பக்கம்

உந்த புலுடா எல்லாம் நம்பிறேல்லை. ஆனால் அம்மா அடிச்சு சொன்னா. அந்த வெளிச்சம் அசைந்து சென்றதை கண்டது என்று. பழைய நம்பிக்கையுள்ள மனிசி தான் என்றாலும் வேணுமென்று சொல்லாது.எனக்கென்னவோ விடிய எழும்பி பார்க்கோணுமென்றுட்டு நானும் தம்பி எழும்பி பார்த்தம் .உண்மையாய் அந்த சிறிய வெளிச்சம் அசைந்து தான் கொண்டிருந்தது. எங்கட வீட்டுக்கு பக்கத்திலை பழைய வீடொன்று...தொடர்ந்து படிக்கவும் »

கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 15    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | April 14, 2008, 2:10 am | தலைப்புப் பக்கம்

கைகேயியிடம் இருந்து விடைபெற்றதுமே ஸ்ரீராமர் தன் பரிவாரங்களையும், தன் தேரையும், தன் அரச மரியாதைக்குரிய சின்னங்களையும் துறந்து, அம்மாளிகையில் இருந்து கால்நடையாகவே தன் பெற்ற தாயான கோசலையின் மாளிகைக்குச் சென்றார். கூடவே கண்ணீருடன் லட்சுமணன் பின் தொடர்கின்றான். இங்கே கைகேயியின் மாளிகைப் பெண்டிரிடையே பெரும் கலக்கம் ஏற்பட்டிருந்தது. ராமர் கோசலையின் மாளிகையை அடைந்து...தொடர்ந்து படிக்கவும் »

உண்மைத்தமிழர் எங்கிருந்தாலும் வகுப்பிற்கு வரவும்!    
ஆக்கம்: SP.VR. SUBBIAH | April 12, 2008, 7:00 am | தலைப்புப் பக்கம்

உண்மைத்தமிழர் எங்கிருந்தாலும் வகுப்பிற்கு வரவும்!முன் பதிவின் தொடர்ச்சிப் பதிவு இது: அதன் சுட்டி இங்கே!அந்தப் பதிவைப் படித்துவிட்டு, இதைப் படிக்கவும்!--------------------------------------------------------------------------/////உண்மைத் தமிழன்(15270788164745573644) said... வாத்தியாரே.. குரு கேட்டது "உங்களைப் போனற ஒழுக்கமான, அடக்கமானசீடர்களை நீங்கள் பிடிக்கவே கூடாது" என்ற வரமா..? ஏனெனில் என் கதையில் இது அப்படியே உல்டாவாகிவிட்டது....தொடர்ந்து படிக்கவும் »

சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - பகுதி 4    
ஆக்கம்: SP.VR. SUBBIAH | April 12, 2008, 12:01 am | தலைப்புப் பக்கம்

========================================================ஜோதிடக் கட்டுரைகள் - பகுதி 1உட்தலைப்பு: சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - பகுதி 4முந்தைய பகுதிகள் இங்கே!-------------------------------------------------------------------------கதையில் இரண்டு க்ளைமாக்ஸ் காட்சிகள்.இப்போது முதல் க்ளைமாக்ஸ் காட்சி!---------------------------------------------------------------------------சனீஸ்வரன் எல்லாப் பாடங்களையும் கற்றுத் தேர்ந்தார்ஆர்வமும், முயற்சியும், தன்முனைப்பும், ஈடுபாடும் இருந்தால்...தொடர்ந்து படிக்கவும் »

இட ஒதுக்கீடு    
ஆக்கம்: feedback@tamiloviam.com ("வினையூக்கி" செல்வா) | April 11, 2008, 11:50 pm | தலைப்புப் பக்கம்

SC upholds OBC quota, TWENTY-SEVEN PER CENT QUOTA FOR OBCs என தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த செய்தியைப் பார்த்ததும் மகிழ்ச்சி வெள்ளத்தில் முதல் வேளையாக என்னுடைய தூரத்து மாமா பையன் சேகரை...தொடர்ந்து படிக்கவும் »

நடுநிசியில் நானும் அவளும் ! ஒரு நிமிடக்கதை    
ஆக்கம்: feedback@tamiloviam.com (ஸ்ரீதரன்) | April 11, 2008, 11:50 pm | தலைப்புப் பக்கம்

அறை பலமாக விழுந்திருக்க வேண்டும். கன்னத்தைத் தடவிக்கொண்டே குழப்பமாக என்னை ஏற இறங்க ஒருமுறைப்...தொடர்ந்து படிக்கவும் »

கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 13.    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | April 11, 2008, 8:50 pm | தலைப்புப் பக்கம்

தசரதர் செய்த பாபம் என்றால் சிரவணகுமாரனை யாரெனெத் தெரியாத நிலையில் கொன்றது ஒன்றே. பாபம் என்பதை அறியாமல் செய்த அவருடைய அந்தத் தவற்றின் பலனை அவர் இனி அனுபவிக்கப் போகின்றார். மேன்மை வாய்ந்த மன்னன் ஆனாலும் சரி, கடவுளே, மனிதராய் அவதரித்தாலும் சரி, அவரவர்களின் கர்மவினையை அவரவர்கள் அனுபவித்தே தீரவேண்டும் என்பது இறைவனின் தீர்ப்பு மட்டுமின்றிக் காலதேவனின் நியாயமும் கூட....தொடர்ந்து படிக்கவும் »

சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - பகுதி 3    
ஆக்கம்: SP.VR. SUBBIAH | April 11, 2008, 1:14 pm | தலைப்புப் பக்கம்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ஜோதிடக் கட்டுரைகள் - பகுதி 1உட்தலைப்பு: சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - பகுதி 3முந்தைய பகுதிகள் இங்கே!1. பகுதி 12. பகுதி 2அவற்றைப் படித்துவிட்டு வாருங்கள் - இல்லையென்றால்இந்தப் பகுதி சத்தியமாகப் புரியாது! மற்றும் சுவைக்காது!-----------------------------------------------------------------------'நெகிழ்ந்து போன தலைமை ஆசிரியர், வந்திருப்பது யாரென்று தெரியாமலேயே,அனுமதிச் சீட்டை வழங்கினார்' என்ற...தொடர்ந்து படிக்கவும் »

என் இரண்டாம் காதலி.....    
ஆக்கம்: சென்ஷி | April 11, 2008, 10:09 am | தலைப்புப் பக்கம்

படித்து முடித்த மர்ம நாவலை மீண்டும் படிப்பதை விட கொடுமையானது இரண்டாம் முறை காதலிப்பது. எப்படியும் தெரிந்த முடிவுதான் என்ற போதிலும் காதலித்தலில் உள்ள சுவாரசியம் எப்படி தோற்கும் என்று தெரிந்து கொள்வதற்காக பொறுமை காப்பதுதான். ஆனால் முதல் காதலில் தோற்றபின் தாடி வளரும்வரை அவள் முகம் காணக்கூடாது என்று ஒளிந்து போகும் அசௌகரியம் இரண்டாம் காதலில் இருப்பதில்லை....தொடர்ந்து படிக்கவும் »

ஒரு நடிகனின் கதை!    
ஆக்கம்: லக்கிலுக் | April 11, 2008, 4:55 am | தலைப்புப் பக்கம்

சுரேஷுக்கு என்னைவிட ஆறு அல்லது ஏழு வயது அதிகமிருக்கலாம். நல்ல சிவந்த நிறம். உயரமானவர் என்று சொல்லமுடியாவிட்டாலும் நடுத்தர உயரம். மெல்லிய ஃப்ரேம் போட்ட மூக்குக் கண்ணாடி தலையில் கேசம் கொஞ்சமாக அப்போது அவருக்கு கொட்ட ஆரம்பித்திருந்தது. தலைமுடியை பாதுகாக்க நிறைய மூலிகைத் தைலம், சிகிச்சை என்று ஆயிரக்கணக்கில் செலவு செய்துகொண்டிருந்தார். டீக்காக ட்ரெஸ் செய்வார்....தொடர்ந்து படிக்கவும் »

கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 12    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | April 11, 2008, 2:07 am | தலைப்புப் பக்கம்

மன்னன் தசரதன், தன் மகனாகிய ராமனுக்கு முடிசூட்டும் எண்ணத்தை நகரெங்கும் பறையறிவிக்கச் செய்ததாய்க் கம்பர் கூறுகின்றார். வள்ளுவன் பறையறிவித்ததைக் கேட்ட நகர மாந்தர் அனைவரும்:"ஆர்த்தனர் களித்தனர் ஆடிப் பாடினர்வேர்த்தனர் தடித்தனர் சிலிர்த்து மெய்ம்மயிர்போர்த்தனர் மன்னனைப்புகழ்ந்து வாழ்த்தினர்தூர்த்தனர் நீள் நிதி சொல்லினார்க்கு எல்லாம்" என்று இவ்விதம் நகரமாந்தர்...தொடர்ந்து படிக்கவும் »

மேலைத்தத்துவம் ஓரு விவாதம்    
ஆக்கம்: ஜெயமோகன் | April 11, 2008, 12:41 am | தலைப்புப் பக்கம்

 டெல்லியில் ஜவகர்லால் பல்கலையில் அகில தத்துவ மாநாட்டுக்காக உலகமெங்கிலும் இருந்து தத்துவப்பேராசிரியர்கள் வந்து குழுமி, பல ஐரோப்பிய மொழிகளில் குழறி, காகிதக்கோப்பைகளில் காப்பி குடித்து, ‘வேணுமானா நீயே எடுத்து தின்னுக்கோ’ முறையில் வரிசையாக நின்று உணவருந்தி, கைகுலுக்கியபின் அதிகாரபூர்வமாக கருத்தரங்கு முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்களை...தொடர்ந்து படிக்கவும் »

"கொலையும் செய்வாள் பத்தினி??" [4]    
ஆக்கம்: VSK | April 10, 2008, 8:48 pm | தலைப்புப் பக்கம்

"கொலையும் செய்வாள் பத்தினி??" [4] 3-ம் பதிவு இங்கே! "தான் குற்றவாளி இல்லை; இது தற்செயலாக நடந்த ஒரு விபத்து மட்டுமே" என க்ளாரா வாதிடுகிறார்.நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு!நல்ல வேளையாக, வண்டி நிறுத்துமிடத்தில் இருந்த தானியங்கிப் பதிவு இயந்திரத்தின் மூலம் பதிசெய்யப்பட்ட ஒளிக்காட்சி கிடைக்கிறது!வேண்டுமென்றே வந்து மோதியதும், பின்னர் 3-4 முறை சுற்றிச் சுற்றி வந்ததும், பின்,...தொடர்ந்து படிக்கவும் »

எனக்கென ஏற்கெனவே.....பிறந்தவள் இவளோ!!! - பகுதி 1    
ஆக்கம்: Divya | April 10, 2008, 10:53 am | தலைப்புப் பக்கம்

வெள்ளிக்கிழமை ஒரு நாள் லீவு போட்டிவிட்டு, சனி ஞாயிறுடன் சேர்ந்தார்போல் 3 நாட்கள் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள தன் சொந்த கிராமத்திற்கு சென்றிருந்தான் ரகு.இன்னிக்கு திங்கள் கிழமை, ஊரிலிருந்து சென்னை திரும்பியிருப்பான், office க்கு வந்ததும் நேரா என் கூபிற்கு தான் வருவான், வெள்ளிக்கிழமை நான் பெண் பார்க்க போன விஷயம் என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்காம அவன் தலை வெடிச்சிரும்....தொடர்ந்து படிக்கவும் »

ரங்க பவனம் - V    
ஆக்கம்: SathyaPriyan | April 10, 2008, 10:31 am | தலைப்புப் பக்கம்

"Hello!" என்றான் பார்கவ்."Hello! என்ன ரெண்டு நாளா phone பண்ணலே? "சும்மா தான். Nothing unusual." "Deepi வேற ஏதோ சொன்னா? Is it true?" "அவ உன் தங்கை Saumi. அவ உண்மை சொல்றாளா பொய் சொல்றாளான்னு உனக்கு தானே தெரியும். எனக்கு எப்படி தெரியும்?" "Be serious Bharghav." "Okie, I'm serious. I love you Saumi. I love you with all my heart." "Serious ஆ சொல்றியா?, இல்லை எப்போதும் மத்த பொண்ணுங்க கிட்ட விளையாடற மாதிரி விளையாடறயா?" "100% serious." "இதை பத்தி யோசிச்சு பார்த்தியா?" "எதை பத்தி?" "You are 2...தொடர்ந்து படிக்கவும் »

மோரியோடான செவ்வாய் கிழமைகள் - 4    
ஆக்கம்: Siddharth | April 10, 2008, 9:49 am | தலைப்புப் பக்கம்

ஒளியும் ஒலியும் 1995ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு நாள். ஏ.பி.சி தொலைக்காட்சியின் “நைட்லைன்” நிகழ்ச்சியை நடத்தும் டெட் கோப்பலின் கார்  மேற்கு நியூட்டன், மாஸஷூடஸ்சில் உள்ள  பனிபடர்ந்த மோரியின் வீட்டை அடைந்தது…  இப்போதெல்லாம் மோரி எந்நேரமும் சக்கர நாற்காலியிலேயே இருந்தார். தன்னை தனது உதவியாளர்கள் சாக்கு மூட்டையைப் போல படுக்கைக்கும் நாற்காலிக்கும் மாற்றுவதற்கு...தொடர்ந்து படிக்கவும் »

கதை கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 11    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | April 10, 2008, 8:56 am | தலைப்புப் பக்கம்

நேற்றுக் கிடைக்காத அருணகிரிநாதரின் ராமாயணத்தில் வில் முறிந்தது பற்றிய பாடல் கீழே தந்திருக்கிறேன். திரு புஷ்பா ராகவன் அவர்கள் தான் கண்டுபிடித்துக் கொடுத்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. திருவிடைக்கழி, திருப்புகழில் 799-ம் பாடல் இது. திருவிடைக்கழியிலேயே தேடியும் நேற்றுக் கண்ணில் படாமல் போய் விட்டது! :(//அரன ரிப்பிர மர்கள்முதல் வழிப டப்பிரி யமும்வர அவர வர்க்கொரு...தொடர்ந்து படிக்கவும் »

சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம்    
ஆக்கம்: SP.VR. SUBBIAH | April 10, 2008, 7:55 am | தலைப்புப் பக்கம்

=====================================================ஜோதிடக் கட்டுரைகள் - பகுதி 1உட்தலைப்பு: சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம்!கிரகங்களில் ‘சனி'க்கு மட்டும்தான் ஈஸ்வரன் என்கிற பட்டம் உண்டு. சூரியன் உட்படமற்ற எந்தக் கிரகத்திற்கும் அந்தப் பெருமை இல்லை!நமது கர்மங்களை - காரியங்களை - செயல்பாடுகளை - activitiesகளை நடத்துபவன்அவன்தான்.கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிப்பான்.தண்டிக்க வேண்டிய இடத்தில் தண்டிப்பான்.தட்ட...தொடர்ந்து படிக்கவும் »

வால்மீகியே எழுதினாரா? இல்லை எழுதப் பட்டதா?    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | April 10, 2008, 3:34 am | தலைப்புப் பக்கம்

பின்னூட்டங்களுக்குப் பதில் அளிக்க முடியாமையாலோ என்னமோ யாரும் பின்னூட்டம் கொடுப்பதில்லை, ராமாயணத் தொடருக்கு. என்றாலும் ஒரு சிலர் படித்து வருகிறார்கள் என்பதும் தெரியும், அப்படியே யாரும் படிக்காவிட்டாலும், எனக்குள்ளேயே ஒரு அலசல் என்ற அளவிலாவது இருக்கும். எனவே தொடரை முடித்துவிட்டுத் தான் மறுவேலை வச்சுக்கணும். சந்தேகங்களுக்கு மட்டுமே விரிவான விளக்கம்...தொடர்ந்து படிக்கவும் »

தொலைபேசி எண் - ஒரு நிமிடக்கதை    
ஆக்கம்: வினையூக்கி | April 10, 2008, 12:49 am | தலைப்புப் பக்கம்

குழந்தை அஞ்சலியுடன் விளையாடிக்கொண்டே இருந்த கார்த்தி, வீட்டு வேலைகளை முடித்து அருகில் வந்து உட்கார்ந்த ரம்யாவிடம் "ரம்யா, என்னோட புது மொபைல் நம்பரை குறிச்சுக்கோ!” “கார்த்தி, என் மொபைலுக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுங்க, ஸ்டோர் பண்ணிடுறேன்”ரம்யா சொன்னவாறே செய்துவிட்டு குழந்தை அஞ்சலிக்கு தனது உலாபேசியின் எண்ணை மனனம் செய்யவைத்த கார்த்தி அஞ்சலிபாப்பாவிடம். “கார்த்திபா...தொடர்ந்து படிக்கவும் »

"கொலையும் செய்வாள் பத்தினி??" [3]    
ஆக்கம்: VSK | April 9, 2008, 7:21 pm | தலைப்புப் பக்கம்

"கொலையும் செய்வாள் பத்தினி??" [3]மறுநாள் மாலை!டேவிட் வீட்டில் இல்லை.பதறுகிறாள் க்ளாரா!தனது வளர்ப்பு மகள் லிண்டாவையும் கூட்டிக் கொண்டு தனது பென்ஸ் காரை எடுத்துக் கொண்டு கிளம்புகிறாள்.அந்தப் பகுதியில் இருக்கும் சில பெரிய உணவு விடுதிகளைத் தேடிச் செல்கிறாள்.எங்கும் டேவிட்டின் காரைக் காணவில்லை!பதட்டம் அதிகமாகிறது க்ளாராவுக்கு!அப்போது, பக்கத்தில் இருந்த ஒரு பெரிய ஓட்டல்...தொடர்ந்து படிக்கவும் »

சந்தேக விளக்கங்கள் மட்டும்!    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | April 9, 2008, 3:28 am | தலைப்புப் பக்கம்

யோசிப்பவருக்கும், ரசிகனுக்கும் சில சந்தேகங்கள் இருக்கு அகலிகையின் வாழ்க்கையில். முதலில் ரசிகனுக்குப் பதில்: அகலிகையின் நிலையைக் கொஞ்சமும் மாற்றாமலேயே வர்ணிக்கின்றார் வால்மீகி. அவள் தவறு செய்வதையும், பின்னர் மனம் வருந்துவதையும் அதனால் கிடைக்கும் சாபத்தையும், சாபத்தின் பலனால் அன்ன, ஆகாரமின்றிக் காற்றையே உணவாய்க் கொண்டு, எவர் கண்ணிலும் படாமல் நூற்றாண்டுகளுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

கதை கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 10    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | April 9, 2008, 2:32 am | தலைப்புப் பக்கம்

கம்பர் மிக நிதானமாய்த் திருமணக் காட்சிகளை வர்ணிக்கின்றார். மிக மிக நிதானமாய் ஒவ்வொரு காட்சியாக வர்ணித்து விட்டுப் பின்னர் திருமணத்திற்கு வருகின்றார். அந்த மாதிரியாகவே வால்மீகியும் திருமண வைபவங்களை விவரிக்கின்றார். இன்னும் சொல்லப் போனால் குலம், கோத்திரம் போன்ற வர்ணனைகள் நிறையவே வருகின்றன. பெரும்பாலான இந்துத் திருமணங்களில் சொல்லப் படும் பாட்டன், முப்பாட்டன்...தொடர்ந்து படிக்கவும் »

"கொலையும் செய்வாள் பத்தினி??" [2]    
ஆக்கம்: VSK | April 8, 2008, 9:10 pm | தலைப்புப் பக்கம்

"கொலையும் செய்வாள் பத்தினி??" [2] முதல் பதிவு இங்கே!2.தொழில் வளர்ச்சி, குடும்ப நிலைமை காரணமாக, இருவரும் சந்தித்துக் கொள்வதே அரிதாயிற்று.குழந்தைகளும், பெற்றோர் இல்லாவிடினும், தாத்தா, பாட்டி அன்பில் நன்றாகவே வளர்ந்ததால், அந்தக் கவலையும் இல்லை!இந்த நேரத்தில்தான், இவர்களது ஒரு சிகிச்சை மையத்தில் வரவேற்பாளராகச் சேர்ந்த லோரா, டேவிட்டின் கவனத்தைக் கவர்ந்தாள்.அவளது திறந்த...தொடர்ந்து படிக்கவும் »

ரங்க பவனம் - IV    
ஆக்கம்: SathyaPriyan | April 8, 2008, 2:29 pm | தலைப்புப் பக்கம்

அவன் எதிர் பார்த்தபடியே வெளியிலேயே காத்திருந்தாள் தீபா. "என்ன? சீக்கிரம் சொல்லு. அப்பா இன்னும் தூங்கலே." "இங்கே சொல்ல முடியாது. வா மொட்டை மாடிக்கு போகலாம்." என்று கூறி அவளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஆறாவது மாடியை கடந்து மொட்டை மாடிக்கு விரைந்தான். "என்ன? இப்போவாவது சொல்லு." "Deepa...." 'Deepi' என்பது 'Deepa' ஆனதை கவனித்தாள். அதிலிருந்தே சொல்ல வந்த விஷயம் மிக முக்கியமானது என்பதை...தொடர்ந்து படிக்கவும் »

நடைபாதை இட்லிக்கடையும் நானும் - ஒரு நிமிடக்கதை    
ஆக்கம்: வினையூக்கி | April 8, 2008, 4:52 am | தலைப்புப் பக்கம்

நள்ளிரவைக்கடந்தும் விழித்து இருந்து, டான் பிரவுனின் ஏஞ்சல் அண்ட் டெமொன்ஸ் புத்தகத்தை வாசித்து விட்டு அப்படியேத் தூங்கிப்போன நான், எழுந்தபோது மணி எட்டரை. கூன்பாட்டியின் நினைவு வந்தது. அவசர அவசரமாகக் குளித்துவிட்டு நான் வழக்கமாக காலை உணவு சாப்பிடும் உணவகத்தை நோக்கி வண்டியை விரட்டினேன். என்னை என் அலுவலக மக்கள் கஞ்சன் என அழைப்பதற்கு இந்த உணவகத்தில் சாப்பிடுவதும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

"கொலையும் செய்வாள் பத்தினி??" [1]    
ஆக்கம்: VSK | April 7, 2008, 11:12 pm | தலைப்புப் பக்கம்

"கொலையும் செய்வாள் பத்தினி??" [1]அமெரிக்கத் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு கதை என்னை மிகவும் பாதித்தது! இது ஒரு உண்மைக் கதை. 'ட்ரூ டிவி'[Tru TV] இதை நேற்று ஒளிபரப்பியது! மறந்துவிடாமல் இருக்க உடனே இதைப் பதிவு செய்கிறேன்! படித்துவிட்டுக் கருத்து சொல்லுங்கள்! 4 பதிவுகள் வரை வரும்! 1.க்ளாரா ஒரு துணிச்சலான பெண்! வாழ்க்கையில் எதையேனும் சாதித்துக் காட்ட வேண்டும் என்னும் அவா நிரம்பியவள்!...தொடர்ந்து படிக்கவும் »

'அம்மா! உனக்கு கல்யாணமாயிடுச்சா?'    
ஆக்கம்: நானானி | April 7, 2008, 2:25 pm | தலைப்புப் பக்கம்

செல்லம்மாள் காலையிலிருந்தே பரபரவென்று இயங்கினாள். வேலைக்காரியை விரட்டுவிரட்டென்றுவிரட்டி வேலை வாங்கினாள். கணவரையும் காலையில் எழுப்பி குளித்து தயாராக இருக்கச்சொன்னாள்.பள்ளி செல்லும் குழந்தைகளுக்குத் தேவையானதைச் செய்துகொண்டிருந்த மருமகளையும் துரிதப்படுத்தினாள், 'சுஜிதா! பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பியதும் நீயும் எங்கும் கிளம்பிவிடாதே! நீயும் தயாராகி...தொடர்ந்து படிக்கவும் »

தீக்குள் விரலை வைத்தால் ..    
ஆக்கம்: கயல்விழி முத்துலெட்சுமி | April 7, 2008, 5:57 am | தலைப்புப் பக்கம்

நான் உள்ளே நுழையும் நேரம் அந்த பெண் பாடிக்கொண்டிருந்தாள். நிறம், நல்ல தென்னிந்திய நிறம். மை இடப்படமாலே பெரியதாக தெரியும் வகையான கண்கள். நான் அமர்வதற்கு நல்ல அமைப்பான இடம் தேடிக்கொண்டிருந்தேன். தூணுக்கருகில் பாடகர்களை நன்றாக கவனிக்கும்படியாக நேர் பார்வையில் அதே சமயம் காற்றும் வெளிச்சமும் ஒரு சேர கிடைக்கும் படி ஒரு இடம் கண்களில் பட்டது. அமர்ந்த சில நொடிகளில்...தொடர்ந்து படிக்கவும் »

மோரியோடான செவ்வாக்கிழமைகள் - 3    
ஆக்கம்: Siddharth | April 7, 2008, 12:57 am | தலைப்புப் பக்கம்

மாணவன் அந்த கோடை நாளில் எனது பேராசிரியரை கட்டிப்பிடித்து, தொடர்பில் இருப்பேன் என கூறிய பிறகு எனக்கு என்ன நிகழ்ந்தது என்பதை இந்த கட்டத்தில் சொல்ல வேண்டும். நான் அவருடன் தொடர்பில் இருக்கவில்லை. உண்மையில், என்னுடன் பியர் குடித்த தோழர்கள், நான் முதன்முதலில் படுத்துறங்கி விழித்தப்பெண் என நண்பர்கள் பலருடனும் எனக்கு தொடர்பற்றுபோயிருந்தது. பட்டமளிப்பிற்கு பின் வந்த...தொடர்ந்து படிக்கவும் »

கதை கதையாம் காரணமாம் ராமாயணம் - பகுதி 9    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | April 6, 2008, 9:29 pm | தலைப்புப் பக்கம்

அஹல்யை செய்தது என்னமோ மாபெரும் தவறு. ஆனால் அதற்கு ராமர் மன்னித்து அருள் புரிவதும், அவளைத் திரும்ப கெளதமர் ஏற்றுக் கொண்டதும், சரியா என்ற தர்ம சங்கடமான கேள்வி எழும். அஹல்யை தவறுதான் செய்தாள். துளசி ராமாயணத்தில் இந்த விஷயமே வரலைனு நினைக்கிறேன். கம்பர் இவளை ஒரு கல்லாக மாறினாள் என்று சொல்கின்றார். ஆனால் வால்மீகி ராமாயணப் படி இந்தக் கல் எல்லாம் ஒன்றும் கிடையாது. யார்...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு நிமிடக் கதைகள் (மூன்றாம் பத்து)    
ஆக்கம்: ரவிபிரகாஷ் | April 6, 2008, 3:46 am | தலைப்புப் பக்கம்

சிக்கனம்ரமேஷின் மனைவி சுதா, மாதாமாதம் வீட்டுச் செலவுக்காக அவன் தரும் சம்பளப் பணத்தில் மிச்சம் பிடித்து, ரெண்டாயிரம் ரூபாய் வீதம் சேமித்து வருகிறாள். ரமேஷின் சம்பளம்தான் அண்ணன் ராஜேஷுக்கும்! ஆனால், அவன் மனைவி மாதம் நூறு, இருநூறு சேமித்தால் அதிகம். இதில் அவனுக்கு ரொம்பவே வருத்தம்தான். அன்றைக்கு ரமேஷ், ராஜேஷ் வீட்டுக்கு வந்திருந்து ரொம்ப நேரம் பேசிக்கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »

செக்ஸ் வறட்சி (அ) மீண்டும் மீண்டும்    
ஆக்கம்: ஜ்யோவ்ராம் சுந்தர் | April 5, 2008, 2:00 am | தலைப்புப் பக்கம்

இருளாக இருந்தது. சோடியம் வேப்பர் விளக்குகள் வெளிச்சத்தை முடிந்தவரை விசிறியடித்துக் கொண்டிருந்தது. மர நிழல்களில் பதுங்கிப் பதுங்கி வருவது போல் நடந்து கொண்டிருந்தான். நடையில் ல