மாற்று! » பகுப்புகள்

உணவு 

Coconut Sorbet    
ஆக்கம்: Thooya | July 7, 2008, 11:58 pm | மறுமொழிகள்

ரொம்ப நாட்களாக சமையல்கட்டிற்கு விடுமுறை விட்டாச்சு. இனிமேலும் விடுமுறை எடுத்தால் சமையல்கட்டிற்கே மரியாதை இல்லாமல் போய்விடுமே. இங்கு எங்களுக்கு நல்ல குளிர். குளிரில் குளிர்களி சாப்பிடுவது தானே எங்களுக்கு மிகவும் பிடித்த விடயம். எப்போதும் குளிர்களி சாப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. புதிதாக ஏதும் முயற்சிக்கலாமே என நினைக்கும் போது தான் என் அண்ணன் ஒருவர்...தொடர்ந்து படிக்கவும் »

செட்டிநாட்டு இறால் வறுவல்    
ஆக்கம்: Thooya | June 24, 2008, 7:14 am | மறுமொழிகள்

தேவையானப் பொருட்கள்இறால் - 1/4 கிலோ கிராம்வெங்காயம் - 2 பெரியது ( நறுக்கிக்கொள்ளவும் )பூண்டு - 10 பெரிய பல்சோம்பு - ஒரு தேக்கரண்டிசீரகம் - ஒரு தேக்கரண்டிதக்காளி - 2 பழம்தேங்காய் - கால் மூடி ( துருவியது)உப்பு - 1 தேக்கரண்டிமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டிஇஞ்சி - ஒரு விரலளவுஎண்ணெய் - 2 தேக்கரண்டிகறிவேப்பிலை - ஒரு கையளவுவத்தல் மிளகாய் - 20 பெருசு பூண்டையும் இஞ்சியையும் நன்கு...தொடர்ந்து படிக்கவும் »

டிப்ஸ் வாங்கலையா......டிப்ஸு    
ஆக்கம்: துளசி கோபால் | June 18, 2008, 10:59 pm | மறுமொழிகள்

அடுக்களை டிப்ஸ். சமையல் மட்டும் செஞ்சுகாமிச்சாப் போதாதாமே. இப்படிச் சமையல் வகுப்பு நடத்தறவங்க அப்பப்ப நேரம்/பணம் சேமிக்கும் டிப்ஸ்களையும் கொடுக்கணுமாம். இந்தக் கணக்கில் ஃப்ரீஸர் டிப்ஸ் இன்னிக்குப் பார்க்கலாம்:-) ரங்கி பி ரங்கியா ( கலர்க்கலரான்னு தமிழில்(?) அர்த்தம்) கிடைக்கும் (சீஸனில் மலிவாக் கிடைக்குமே அப்ப) குடமிளகாய்களைக் கொஞ்சம் வாங்கிக்குங்க. தண்ணீரில்...தொடர்ந்து படிக்கவும் »

பிரியாணி    
ஆக்கம்: பிரேமலதா | June 5, 2008, 9:02 am | மறுமொழிகள்

முதலில் என்ன நோட்ஸ். இஞ்சி அதிகம் பூண்டு - 7 - 8 பல் கெ.தழை கிராம்பு - 6 ஏ - 6 பட்டை - சி.து. எ…..-பி. 1, ஆ.2. ப. 2 ஏ, 2கி. வெ. ப. மிள அரைச்சது.. சிம் தக்காளி - 1 உப்பு மிள வெஜ்ஜ் தயிர் - 2spoon water, press cook அரிசி - 2 கப் water gaske கெ. புதினா open boiling   6-7 min  ———0———- இப்போ தேவையான பொருட்கள் (இரண்டுபேருக்கு ஆகும் அரிசிக்கு) அரைக்க இஞ்சி - அதிகம் பூண்டு - 7 அ 8 பல் கொத்தமல்லைத் தழை கிராம்பு - 6 ஏலக்காய் - 6 பட்டை - சிறு துண்டு பச்சை மிளகாய்...தொடர்ந்து படிக்கவும் »

போய்யா வெண்ணை......    
ஆக்கம்: துளசி கோபால் | June 3, 2008, 8:31 pm | மறுமொழிகள்

போய்யா வெண்ணை...... இருடீ.... ராஜம்மா வரட்டும்.அப்ப இருக்கு உனக்கு!வண்ணம் இல்லாமல் சோகையா வெளுத்துக்கிடக்கும் இது என்ன?பார்க்க அச்சு அசலா நம்ம பீன்ஸ் போலத்தானே இருக்கு? ஆஹா....'கப்'னு புடிச்சுட்டீங்களே. இங்கே இதுக்குப் பெயர் 'பட்டர் பீன்ஸ்'செஞ்சுதான் பார்க்கலாமுன்னுக் கொஞ்சம் வாங்கியாந்தேன். அந்தக் காலத்தில் நம்ம வீட்டுலே எப்பவும் பீன்ஸ் பொரியலுன்னாவே அது பருப்பு,...தொடர்ந்து படிக்கவும் »

மீன் சொதி    
ஆக்கம்: Thooya | June 3, 2008, 7:54 am | மறுமொழிகள்

எங்க சொதி இத்தனை பிரபலம் என எனக்கு தெரியாது. சொதி செய்முறை தெரியுமா? சொதி என்றால் என்ன? சொதி செய்முறை எப்ப எழுதுறிங்க என பல உறவுகள் கேட்டுக்கொண்டேயுள்ளனர். எத்தனை நாளுக்கு தான் "விரைவில் எழுதுகிறேன்" என ஏமாற்றுவது. சொதியில் பல வகை உண்டு: சைவம் & அசைவம். சைவ சொதியில் வெள்ளைச்சொதி, மஞ்சள் சொதி என இருவகை உண்டு. அசைவத்தில்....அப்பப்பா எண்ணிலடங்கா..சுவையோ சொல்லில்...தொடர்ந்து படிக்கவும் »

ஈஸியாக செய்யும் குழம்பு வகைகள் :    
ஆக்கம்: சித்ரா | June 3, 2008, 3:16 am | மறுமொழிகள்

மெக்ரோனி புளிகுழம்பு:தேவையானவை: மெக்ரோனி- 200கிராம்,பெரிய வெங்காயம்- 2,தக்காளி-5,புளி விழுது- 1 ஸ்பூன்,இஞ்சி, பூண்டு விழுது- 1 ஸ்பூன்,மிளகாய்தூள்- 1 ஸ்பூன்,மல்லி தூள்- 1/2 ஸ்பூன்,உப்பு தேவையானவை.வெந்தயம், சோம்பு, - 1/4 ஸ்பூன்.எண்ணெய்- 50 கிராம்.செய்முறை: மெக்ரோனியை சுடுநீரில் போட்டு கொதி வந்தவுடன் வடித்து, மறுபடியும் நீர் ஊற்றி வடித்து வைக்கவும். வெந்தயத்தை லேசாக...தொடர்ந்து படிக்கவும் »

மிளகு ரசம்    
ஆக்கம்: Thooya | June 1, 2008, 7:22 am | மறுமொழிகள்

பொதுவாக சைவ உணவு உட்கொள்ளும் நாட்களில் "ரசம்" நிச்சயமாக எங்க வீட்டில் இருக்கும். பொதுவாக வெள்ளிகிழமைகளில் பல ஈழ தழிழர்கள் வீட்டில் ரசம் இல்லாமல் இருப்பதில்லை என்றே கூறலாம். சொதியை நேருக்கு நேரே மோதும் தகுதி கொண்டது இது தான். பல வகையான ரசம் இருப்பினும், மிளகு ரசத்திற்கு குடுக்கப்படும் ஆதரவு போல் மற்றவற்றுக்கு கிடைப்பதில்லை எனலாம். திடிரென சமைக்கும் போது கை...தொடர்ந்து படிக்கவும் »

கேரட் சட்னி / carrot chutney    
ஆக்கம்: கீதா | May 31, 2008, 9:47 pm | மறுமொழிகள்

தேவையான பொருட்கள் கேரட் - 4 பச்சை மிளகாய் - 3 பூண்டு - 3 பற்கள் புளி - நெல்லிக்காய் அளவு எள் - 1 தே. கரண்டி சீரகம் - 1 தே. கரண்டி தேங்காய் துருவல் - 3 தே. கரண்டி (தேவைப்பட்டால்) உப்பு - தேவையான அளவு கடுகு, உளுந்து, பெருங்காயம் - தாளிக்க எண்ணை - சிறிதளவு செய்முறை கேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் எள், சீரகம் இவற்றை எண்ணை விடாமல் வறுத்து எடுத்து பொடித்து...தொடர்ந்து படிக்கவும் »

இடிச்ச சம்பல்    
ஆக்கம்: Thooya | May 31, 2008, 6:00 am | மறுமொழிகள்

இடிச்ச சம்பலை பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஈழத்தவர்களிடையே மிகவும் பிரபல்யமான உணவு வகை என்பதை தான் முதலில் சொல்ல வேண்டும். இடி சம்பல் / இடிச்ச சம்பல் என செல்ல பெயர்களால் அழைக்கப்படும் இந்த சம்பல் ஈழத்தில் அனைத்து ஊர்களிலும் பிரபலம் (என்ன உறைப்பு தான் ஊருக்கு ஊர் கூடி குறையும்). அதே இது சமயம் தினமும் செய்யும் ஒரு சாதாரண உணவும் கூட. ஈழத்தில் தென்னை மரங்கள் அதிகம்...தொடர்ந்து படிக்கவும் »

மனிதனும் மர்மங்களும்    
ஆக்கம்: Iniyal | May 30, 2008, 11:28 pm | மறுமொழிகள்

சில நாட்களாக என் வாசிப்பு கொஞ்சம் குறைந்து விட்டிருந்தது, அதை கொஞ்சம் தட்டி எழுப்பிய புத்தகம் மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும், அருமையான புத்தகம்.புத்தகமுகப்பிலேயே இது கொஞ்சம் பய அனுபவத்தை எற்படுத்தும் என்ற உணர்வை தரும் விதத்தில் எலும்புக்கூடுகள் காட்சி அளிக்கின்றன, எனினும் அதுவே ஆர்வத்தை தூண்டுவதாக இருந்தது. பல பேய்கள் பற்றிய உண்மைகள் ஆராய்ச்சிகள் நமக்கு தெரிய...தொடர்ந்து படிக்கவும் »

ப்பைனாப்பிள் தயிர்க் குழம்பு    
ஆக்கம்: viji | May 29, 2008, 2:08 pm | மறுமொழிகள்

இது ரொம்ப நாள் முன்னாலேயே என் நண்பர் ஜேம்ஸிடமிருந்து கற்றது. எழுதனும்னு நினச்சி சோம்பேரித்தனதால இவ்ளோ நாளாகிடுச்சி, போனாவாரம் சன்டே மார்கட்ல 50 சென்ட்க்கு ப்பைனாப்பிள் பார்த்த உடனேயே வாங்கிட்டு வந்தாச்சி. சமையல்ல எக்ஸ்பிரிமெண்ட் செஞ்சு பார்க்க நண்பர்கள் இருக்கும் போது என்ன கவலை. இதோ புதுசா தயிர்க் குழம்பு( மோர்க் குழம்பு இல்லீங்கே இது )சரி என்னேல்லாம் வேனும்:கெட்டி...தொடர்ந்து படிக்கவும் »

அவல் உப்புமா    
ஆக்கம்: சித்ரா | May 28, 2008, 12:18 am | மறுமொழிகள்

தேவையானவை; கெட்டியான அவல்- 1 கப்,பெரிய வெங்காயம்-2,பச்சை மிளகாய்-5,இஞ்சி- சிறிய துண்டு,தேவையான காய்கள் பொடியாக நறுக்கி கொள்ளவும்-1 கப்தக்காளி-2, பொடியாக நறுக்கி கொள்ளவும்.உப்பு- தேவையானவை.எண்ணெய்- தேவையானது.செய்முறை; அவலை மிக்ஸியில் ரவையாக உடைத்து 2 முறை கழுவி உடனே சுத்தமாக தண்ணீரை வடித்து வைத்து விட வேண்டும். அதனுள் இருக்கும் நீரே ஊற போதும். கொஞ்ச நேரத்தில் ஊறி கையில்...தொடர்ந்து படிக்கவும் »

இட்லி உப்புமா    
ஆக்கம்: சித்ரா | May 28, 2008, 12:06 am | மறுமொழிகள்

தேவையானவை; இட்லி- 10,பெரிய வெங்காயம்-2,இஞ்சி- பொடியாக நறுக்கியது- 1/4 ஸ்பூன்,பச்சை மிளகாய்-5,பீன்ஸ், கேரட், குடமிளகாய்- பொடியாக நறுக்கியது- 1 கப்உப்பு- கொஞ்சம்,செய்முறை; இட்லியை ப்ரிஜ்ஜில் வைத்தால் உதிர்த்தால் உதிராக வரும். கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சைமிளகாய் இஞ்சி, போட்டு வதக்கி, அதனுடன் காய்கள், உப்பும் போட்டு 1...தொடர்ந்து படிக்கவும் »

ரவா உப்புமா    
ஆக்கம்: சித்ரா | May 27, 2008, 4:26 am | மறுமொழிகள்

தேவையான பொருள்கள்; ரவை - 1 கப்,பெரிய வெங்காயம்- 2 ,இஞ்சி- சிறியதுண்டு,பச்சை மிளகாய்-5,உப்பு- தேவையானவை,கறிவேப்பிலை, மல்லி கொஞ்சம்.தாளிக்க- கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைபருப்பு.செய்முறை; ரவை வாணலியில் சிவக்க வறுக்க வேண்டும். அதே வாணலியில் 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். கொஞ்ச...தொடர்ந்து படிக்கவும் »

அரிசி ரவை மிளகு உப்புமா.    
ஆக்கம்: சித்ரா | May 27, 2008, 4:09 am | மறுமொழிகள்

தேவையான பொருள்கள்; பச்சரிசி [அ] புழுங்கல் அரிசி-1கப்துவரம்பருப்பு-2 ஸ்பூன்,கடலைபருப்பு-2 ஸ்பூன்,சீரகம்-1/4 ஸ்பூன்,மிளகு--1 ஸ்பூன்,வரமிளகாய்- 4,துறுவிய தேங்காய்- கொஞ்சம்,உப்பு- தேவையான அளவு.பிடித்தமான எண்ணெய்- கொஞ்சம்.தாளிக்க- கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, பெருங்காயம் கொஞ்சம்,கறிவேப்பிலை, மல்லி இலை- கொஞ்சம்.செய்முறை:அரிசி பருப்புகளை லேசாக வறுத்து மிக்ஸியில்...தொடர்ந்து படிக்கவும் »

கத்தி குடுத்த வீரத்தழும்புகள்    
ஆக்கம்: Thooya | May 26, 2008, 11:19 pm | மறுமொழிகள்

சமையல் என்றது எத்தனை பெரிய விசயம் என்று உங்களுக்கே தெரியும். வலைப்பூக்களையே எடுங்க, சமையல் வலைப்பூக்களில் மறுமொழிகள் வருதோ இல்லையே, பல பார்வையாளர்களா இருப்பாங்க. சிலருக்கு சமைக்க பிடிக்கும். சிலருக்கு சமைச்சாகணுமே என அலுத்திட்டு சமைப்பாங்க. எது எப்படியாயினும் சமைக்கிறதில மூன்று கொடுமையான விசயம் இருக்கு.1. கத்தியால் வெட்டுவது [மத்தவங்களை இல்லப்பா][நம்ம...தொடர்ந்து படிக்கவும் »

வெஜிடபுள் உப்புமா    
ஆக்கம்: சித்ரா | May 26, 2008, 10:22 am | மறுமொழிகள்

தேவையானவை: ரவை- 1 கப் பொன் கலரில் வறுத்துகொள்ள வேண்டும்பிடித்த காய்கள் எல்லாவற்றையும் சேர்க்கலாம்.பட்டை-1லவங்கம்-2ஏலக்காய்-2இஞ்சி- பொடியாக 1 ஸ்பூன், பூண்டு - 10 பற்கள்சோம்பு-1/2 ஸ்பூன்பெரிய வெங்காயம்- 2 பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.உப்பு- தேவையானது, எண்ணெய் தேவையானவை.செய்முறை: மசாலா பொருள்களை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்து கொண்டு, வாணலியில் கடுகு...தொடர்ந்து படிக்கவும் »

ரவா குஸ்கா    
ஆக்கம்: சித்ரா | May 26, 2008, 9:58 am | மறுமொழிகள்

தேவையானவை: ரவை- 1 கப்,பெரிய வெங்காயம்- 2 நீளமாக மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்,இஞ்சி, பூண்டு விழுது- 2 ஸ்பூன்,பச்சை மிளகாய்- 5 கீறி கொள்ளவும்,பட்டை-1 லவங்கம்-2உப்பு, எண்ணெய் தேவையான அளவு.தேங்காய் பால் -2 கப், [அ] சாதாரணபாலில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து வைத்து கொள்ளவும்.செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்தபின் பட்டை, லவங்கம், இஞ்சி,பூண்டு...தொடர்ந்து படிக்கவும் »

மிளகு, சீரக உப்புமா    
ஆக்கம்: சித்ரா | May 26, 2008, 9:46 am | மறுமொழிகள்

தேவையானவை: ரவை- 1 கப் [ ரவை எண்ணெய் விடாமல் வறுத்து கொள்ளவும்]பெரிய வெங்காயம்- 1இஞ்சி பொடியாக நறுக்கியது- 1/2 ஸ்பூன்மிளகு, சீரகம்- தலா- 1 ஸ்பூன்தண்ணீர்- 2 கப்உப்பு கொஞ்சம்தாளிக்க கடுகு, எண்ணெய்.செய்முறை: மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவேண்டும். கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து கடுகு தாளித்து, பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும். பின் மிளகு,சீரகபொடியை போட்டு...தொடர்ந்து படிக்கவும் »

உப்புமா வகைகள்    
ஆக்கம்: சித்ரா | May 26, 2008, 9:14 am | மறுமொழிகள்

உப்புமாவை ருசியாக செய்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதை ருசியாக செய்யகூடிய பக்குவம் தெரியாததால் பலரும் செய்வது இல்லை. உப்புமா என்றால் வேண்டாம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அதை சரியானபடி, வெவ்வேறு சுவைகளில் செய்தால் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். உப்புமாவை உதிராக சாப்பிடுபவர்களும் உண்டு. கொஞ்சம் குழைவாக சாப்பிடுபவர்களும் உண்டு....தொடர்ந்து படிக்கவும் »

என்று தணியும் இந்த மக்களின் கொடூர ரசனை :-(    
ஆக்கம்: கிரி | May 26, 2008, 8:24 am | மறுமொழிகள்

இந்த வீடியோ காட்சி மனிதர்கள் மிருகம் ஆகி கொண்டு இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. இனி வரும் காலங்களை நினைத்து பயமாக இருக்கிறது, இவர்களின் இந்த நிலை பின்னாளில் எங்கே சென்று முடியும் என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று தெரிகிறது மனிதர்கள் மனிதாபிமானம் என்ற ஒன்றை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »

விலையை குறைத்தால் மட்டும் போதுமா ?    
ஆக்கம்: Abdul Malik | May 26, 2008, 12:16 am | மறுமொழிகள்

தமிழக உணவகங்களிலே, உணவுகளுக்கு விலைகுறைப்பு செய்ய வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.உணவக அதிபர்களும் விலை குறைப்பு செய்வதாக ஒப்புக்கொண்டனர் என்று செய்தி வெளியானது.கடந்த 3 ஆண்டுகளில் உணவுப் பொருட்கள் மீதான விலை அசுரத்தனமாக எகிறியுள்ளது என்றுதான் கூறவேண்டும். 2 ரூபாய் இருந்த டீ 2.50 ஆகி இப்போது 3 ரூபாயாக உயர்ந்து விட்டது. வடையும் 3 ரூபாயாக...தொடர்ந்து படிக்கவும் »

நம்மாத்து க்ரானியும் கடையில் வாங்குனக் கேரட்டும்.    
ஆக்கம்: துளசி கோபால் | May 25, 2008, 4:20 am | மறுமொழிகள்

ஹாங்காங் ஹோட்டலில் என் பல் தேய்க்கும் பிரஷை மறந்து வச்சுட்டு வந்துட்டேன். போதாக்குறைக்கு அங்கே வாங்குன ஒரு ஸ்வெட்டரையும் பெரிய பெட்டிக்குள்ளே வச்சுட்டு, ப்ளைட் முழுக்க 'பாட்டு'க் கேக்கவேண்டியதாப் போச்சு. 'எத்தனை முறை சொன்னேன், அதை ஹேண்ட் லக்கேஜ்லே வச்சுக்கோன்னு.......''பெட்டியை அடுக்குனது யாரு? இவர்தானே? அப்பக் கவனிச்சிருக்கக்கூடாதா?' மனசுக்குள்ளே பொறுமினேன். நான்...தொடர்ந்து படிக்கவும் »

பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai    
ஆக்கம்: கீதா | May 23, 2008, 11:12 am | மறுமொழிகள்

தேவையான பொருட்கள் 2 பேருக்கு பயத்தம்பருப்பு [சிறுபருப்பு] - 1 கப் தயிர் - 1/2 கப் பச்சை மிளகாய் - 5 அல்லது 6 பூண்டு - 3 அல்லது 4 பல் உப்பு தேவையான அளவு செய்முறை பயத்தம் பருப்பை தாராளமாக தண்ணீர் விட்டு 5 அல்லது 6 மணி நேரம் ஊரவிடவும். நன்கு ஊரியதும் பச்சை மிளகாய், பூண்டு,தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவில் தயிர்,உப்பு சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்திற்கு...தொடர்ந்து படிக்கவும் »

ஃப்ரைட் இட்லி / fried idly    
ஆக்கம்: கீதா | May 22, 2008, 3:41 pm | மறுமொழிகள்

தேவையான பொருட்கள் மீதமான இட்லிகள் : 5/6 மைதா மாவு : 5 தே. கரண்டி மிளகாய்த் தூள்: 1 தே. கரண்டி (உங்கள் தேவைக்கு ஏற்ப) பிரட் கிரம்ஸ்: 1/2 கப் உப்பு : தேவையான அளவு எண்ணை பொரித்தெடுக்க செய்முறை: இட்டிலியை 8 துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதாமாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். (பஜ்ஜி மாவு பதத்திற்கு) ஒரு அகலமான தட்டில் பிரட்...தொடர்ந்து படிக்கவும் »

சம்மர் ஷ்பெஷல்    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | May 22, 2008, 1:20 am | மறுமொழிகள்

சரியா வெயில்காலத்துல இந்தியா போறியேன்னு கேட்டதோழிகள் எல்லாம் கூட பெருமூச்சு விட்ட அயிட்டம்நுங்கு, சீசன் பழமான மாம்பழம்....கோடைவெயில் கொளுத்தினாலும், இதெல்லாம்நல்ல எஞ்சாய் செஞ்சுட்டோம்ல.. :) இந்த அயிட்டங்களும் நல்லா இருக்கும்முதலில் பார்க்கப்போவது "ஜால் ஜீரா"இது பஞ்சாபி அயிட்டம். சும்மா சூப்பராஇருக்கும். என்னிய மாதிரி நோகாம நோன்புகும்பிடறவங்களுக்கு இந்த...தொடர்ந்து படிக்கவும் »

மணப்பது சுவை !    
ஆக்கம்: சதங்கா (Sathanga) | May 21, 2008, 8:05 pm | மறுமொழிகள்

பதிவென்றால் கவிதையும், கதையும் தானா ? இந்த எண் சாண் வயிறு பத்தி அக்கறையில்லாதவர் எவரேனும் இருக்கத்தான் முடியுமா !!!நம்மூர் பழங்கதைகள் மாதிரி இங்க சொல்லும் ஒரு கதை. "ஒரு ஊருல ஒரு பெரிய வெவசாயக் குடும்பம் இருந்துச்சாம். தினம் அவங்க வேலை எல்லாம் முடிச்சிட்டுஆண்கள் முதலில் சாப்பிடுவாங்களாம். தினம், தினம் கோழியும், கறியும், வித விதமா அந்த வீட்டுப் பெண்கள் சமைச்சுப்...தொடர்ந்து படிக்கவும் »

புதிய மொந்தையில் பழைய கள்ளு    
ஆக்கம்: துளசி கோபால் | May 20, 2008, 3:48 pm | மறுமொழிகள்

வெய்யில் வந்துருச்சாம்லெ! அது வீணாப் போகலாமோ?பரீட்சை முடிஞ்சு பெரிய லீவு விட்டதும் ஒரு திருவிழா மாதிரிதான் நம்மூட்டுலே வத்தல் வடாம் போட ஆரம்பிச்சுருவாங்க. இதுக்குன்னே ஒரு ஈவெண்ட் கோஆர்டினேட்டர் வந்துருவாங்கப்பா ஊருலே இருந்து. எல்லாம் எங்க பெரியம்மாதான்.பசங்க காக்காமாதிரி சுத்தறோமுன்னு எங்களை வச்சே காக்கா விரட்டப் போடும் திட்டம்தான் இது.திட்டம் பக்காவா...தொடர்ந்து படிக்கவும் »

சீனிச்சம்பல்    
ஆக்கம்: Thooya | May 19, 2008, 3:47 am | மறுமொழிகள்

வீட்டில் அடிக்கடி செய்யும் பதார்த்த என்பதாலேயே என்னமோ சீனிசம்பல் செய்முறை எழுதணும் என தோணவேயில்லை. யாழில் சகோதரன் லீ கேட்டுக்கொண்டதிற்காக செய்முறையை எழுதியே ஆகணும் என தோன்றி எழுதுகின்றேன்.சீனிசம்பல் என்றதும் “அடப்பாவிகளா சக்கரையிலுமா சம்பல்?” என என்னிடமே பலர் கேட்டதுண்டு. யாரோ பேர் வச்ச மகராசன் இப்படி வச்சிட்டான். நாங்க இப்ப பதில் சொல்லிட்டு இருக்க...தொடர்ந்து படிக்கவும் »

காரட் அல்வா    
ஆக்கம்: viji | May 17, 2008, 10:43 pm | மறுமொழிகள்

அன்பு நண்பர்களே, கொஞ்ச நாள் இடைவெளிக்குப் பிறகு இந்த புதிய ரெசிப்பி. ஒரு வார விடுமுறைல நிறைய காரட் ரூம்ல கிடந்தது நண்பர்களோட பேசிட்டு இருக்கும் போது ஒரு வட இந்திய நண்பன் சொன்னான் ஏன் நாம காரட் அல்வா செய்யாக் கூடாதுனு. ஜெர்மனில இருந்து இந்திய இனிப்பே பார்த்து ரொம்ப நாளாகிட்டதாலே உடனே செயல்ல இறங்கியாச்சி.என்னேல்லாம் வேனும்:காரட் - 1/2 கிலோபால் - 1 லிட்டர்(கொழுப்பு சத்து...தொடர்ந்து படிக்கவும் »

முட்டை பீட்ஸா    
ஆக்கம்: Thooya | May 16, 2008, 9:07 pm | மறுமொழிகள்

Dedicated to லக்கிண்ணா :)பொதுவா நாம முட்டை பொறியல் செய்யும் போது வெங்காயம், மிளகாயை சின்னதா அரிந்து அதை முட்டையுடன் போட்டு நல்லா அடிச்சு பொரிப்பம். ஆனால் இதில தனி தனியா செய்யனும். அவ்வளவு தான் வித்தியாசம். ஆனால் சுவையில் வித்தியாசம் கட்டாயம இருக்கு. தேவையானது:3 முட்டை1 வெங்காயம்2 பச்சை மிளகாய்1 தே.க மிளகுத்தூள்1/2 தே.க உள்ளி+இஞ்சி விழுதுஉப்பு தேவைக்கேற்பகறிவேப்பிலைகொத்தமல்லி இலை...தொடர்ந்து படிக்கவும் »

நுங்கு    
ஆக்கம்: J. Ramki | May 12, 2008, 1:32 am | மறுமொழிகள்

பணகுடிக்கு பக்கத்தில் தென்காசி செல்லும் சாலையில் திரும்பிக் கொண்டிருக்கும்போது கண்ணில் பட்டது நுங்கு. கொதது கொத்தாக சாலையோரம் அடுக்கி வைத்திருந்தார்கள்.  கேட்டவுடன்  சரசரவென்று சீவிக் கொடுத்தார்கள். கையை விட்டு நுங்குவை நெம்பி எடுப்பதற்கு கஷ்டப்பட வேண்டியிருந்தது. எங்கள் ஊரில் அவர்களே உரித்துக் கொடுப்பார்கள். நுங்கு பிஞ்சுதான் கிடைக்கும். முட்டை சைஸில்...தொடர்ந்து படிக்கவும் »

கத்தரி சாம்பார்    
ஆக்கம்: Thooya | May 11, 2008, 3:28 am | மறுமொழிகள்

அதென்ன கத்தரி சாம்பார் என்று கேட்பிங்களே? நீங்க கேட்காட்டியும் நான் சொல்லிதான் தீருவேன். வீடுகளில் பொதுவாக வெங்காய சாம்பார் அடிக்கடி வைப்பார்கள். அதே செய்முறையில் வெங்காயத்திற்கு பதில் கத்தரிக்கயை போட்டால் எப்படி இருக்கும் என ஒரு கேள்வி என்னுள்ளே. உடனே அதை பரிசோதித்து தான் பார்த்திடுவமே என ஆரம்பித்தேன். [நீ சமைப்பதே ஒரு பரிசோதனை தானே என்ற கேள்வியெல்லாம் இங்கே...தொடர்ந்து படிக்கவும் »

குளிர்ந்த தேனீர் (ஜஸ் ரீ/ரே) தயாரிக்கும் முறை.    
ஆக்கம்: பிருந்தன் | May 7, 2008, 3:15 am | மறுமொழிகள்

தேவையான பொருட்கள்10 லீற்றர் தண்ணீர்6 சித்திரோன்(மஞ்சள் எலுமிச்சை)6 லெமன் ( பச்சை எலுமிச்சை)6 ஒறேன்ஞ்( சாத்துக்குடி/ஒறேன்ஞ் தோடம்பழம்)சிறிதளவு மின்ஸ் இலை10 லீற்ற தண்ணீருக்கு தேள்வையான அளவு தேயிலை தூள்.500 g சீனி/சர்கரை.செய்முறைமுதலில் சித்திரோன்,லெமன்,ஒறேன்ஞ் மூண்றினது தோலையும் சீவி, துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் இட்டு, நன்று கசக்கவும். இத்தோடு மின்ஸ் இலையையும்...தொடர்ந்து படிக்கவும் »

சேமியாவில் பலவகை உணவு செய்யலாம்[ மெல்லியதாக இருக்கும்]குறிப்பாக அணில்...    
ஆக்கம்: சித்ரா | May 7, 2008, 1:51 am | மறுமொழிகள்

1. இப்போது எல்லாம் வறுத்த சேமியாவே கிடைக்குது. முதலில் தேவையான தண்ணீர் கொதிக்க விட்டு கொஞ்சம் உப்பு, 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் சேமியாவைபோட்டு 1 நிமிடம் போட்டு வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும். ஏனெனில் அதில் உள்ள மாவு வாசனை போகும்.மெல்லியதாக இருப்பதால் 1 நிமிடம் போதும்.அதை தட்டில் போட்டு ஆற விடவும். இதை வைத்து பலவகை டிஷ் செய்யலாம்.2.தேங்காய் சேமியா: கெட்டியான வாணலியில்...தொடர்ந்து படிக்கவும் »

மாங்காய்கள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்!    
ஆக்கம்: ஷைலஜா | May 6, 2008, 11:56 pm | மறுமொழிகள்

மாங்கா சீசன் ஆரம்பிச்சாச்சு..பீச்ல ரோட்ல எல்லாம் மாங்காயை சீப்பின் பற்களா நறுக்கி வச்சி உச்சில சிவப்பா மிள்காப்பொடி ஜொலிக்க வியாபாரம் செய்யறாங்க...பத்தை மாங்காய்! எங்கும் மாங்காய் பத்தையாவதாரம்!! தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலாம்! மாம்பழம்கூட மெதுவா எட்டிப்பார்க்குது.ஆனா இன்னும் நல்லதரமான மாம்பழம் மார்கெட்லவரல்...பச்சைபச்சையாவும் அசட்டு மஞ்சளாகவும்...தொடர்ந்து படிக்கவும் »

இட்லியில் பலவகை செய்யலாம்.    
ஆக்கம்: சித்ரா | May 6, 2008, 9:02 am | மறுமொழிகள்

1. முதலில் இட்லி பூப்போல் வர இட்லி மாவில் [இட்லி ஊற்றும் போது தேவையான மாவை தனியாக எடுத்து கொள்ள வேண்டும் அதில் கொஞ்சம் [Eno salt ] போட்டு மாவை நன்கு கலந்து இட்லி ஊற்றினால் மிகவும் சாப்டாக வரும். ஆனால் ஒவ்வொரு முறையும் இட்லி ஊற்றும் சமயம் [Eno salt] கலக்க வேண்டும். மாவின் பதம் மாறி போயிருந்தால் கூட இட்லி மென்மையாக இருக்கும்.1. தயிர் இட்லி: இட்லி தேவையானதை செய்து கொண்டு, ...தொடர்ந்து படிக்கவும் »

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு உணவு பாகம்: 4    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | May 6, 2008, 4:06 am | மறுமொழிகள்

என்ன எல்லோரும் நலமா? ரொம்ப நாளைக்கு அப்புறம் சந்திக்கிறோம்.கொஞ்சம் பிஸியாகிட்டேன். அதான்.நீங்களும் பசங்க பரிட்சை, விடுமுறைன்னு பிசியா இருந்திருப்பீங்க.. :)பிளையின் நூடில்ஸில் என்னென்ன செய்யலாம் அப்படின்னுபார்ப்போமா?1. வெஜி நூடில்ஸ்:தேவையான பொருட்கள்:ஹக்கா நூடில்ஸ் (பிளையின் நூடில்ஸ்) தேவையான அளவு.பட்டர், மிளகுத்தூள், (துருவிய கேரட், முட்டை கோஸ்,வெங்காயத்தாள், பீன்ஸ்,...தொடர்ந்து படிக்கவும் »

பாலக் பன்னீர் (Tofu)    
ஆக்கம்: Thooya | May 5, 2008, 11:31 pm | மறுமொழிகள்

இங்கு எந்தவொரு இந்திய உணவகத்திற்கு சென்றாலும் எப்போதும் கிடைக்க கூடியது பாலக் பன்னீர். பன்னீரும், ஸ்பினச் கீரையும் சேர்த்து செய்திருப்பார்கள். சின்ன வயதில் எனக்கு பாலக் பன்னீரை கண்ணிலும் காட்டக் கூடாது. அதற்கு காரணம் பக்கத்து வீட்டு கிழவி தான். என் பெரியண்ணனும், அவரின் பேரனும் நண்பர்கள். ஆக அடிக்கடி கிழவியின் சமையலை சாப்பிட வேண்டிய கட்டாயம் இருந்தது. பச்சை களியில்...தொடர்ந்து படிக்கவும் »

பப்பாளி பழ அல்வா (Papaya halwa )    
ஆக்கம்: கீதா | May 2, 2008, 5:47 pm | மறுமொழிகள்

தேவையான பொருட்கள்: பப்பாளி பழ துண்டுகள் : 3 கப் சர்க்கரை : 3/4 கப் (உங்கள் தேவைக்கேற்ப) நெய் : 4 தே. கரண்டி காய்ச்சின பால் : 1/2 கப் (உங்கள் தேவைக்கேற்ப) ஏலப்பொடி - சிறிதளவு முந்திரி - 7 பாதாம் பருப்பு - 7 செய்முறை: முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். பாதம் பருப்பை மெலிதாக நறுக்கிக்கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய்விட்டு பப்பாளி பழ...தொடர்ந்து படிக்கவும் »

வெயில் காலத்திற்க்கு பயன்படும் டிப்ஸ்    
ஆக்கம்: சித்ரா | April 30, 2008, 2:23 am | மறுமொழிகள்

1. கோசாப்பழம்[ தர்பூசணி] வெயில் காலத்தில் நிறைய சாப்பிடகூடாது. அதிகம் சாப்பிட்டால் யூரினரி ட்ராக் இன்ஃபெக்‌ஷனில் கொண்டுவிடும். ஒரு நாளைக்கு 2 பீஸ் சாப்பிட்டால் பிரச்சனை வராது.2. முலாம்பழம், கிர்ணிபழம் நல்லது. உடலுக்கு குளிர்ச்சியை தரும்.3. வெள்ளை பூசணிக்காயை நிறைய சாப்பிடலாம். தோல் சீவி , அதனுடன், கொஞ்சம் கேரட், கொஞ்சம் வெள்ளரிக்காய், வெள்ளைமிளகுதூள் கலந்து,உப்பு போட்டு...தொடர்ந்து படிக்கவும் »

மசாலா மோர்    
ஆக்கம்: சித்ரா | April 30, 2008, 2:13 am | மறுமொழிகள்

செய்முறை: மோர்- தேவையான அளவு, பூண்டு- 2 பற்கள், சிறிய வெங்காயம்-5,கறிவேப்பிலை -10 இலை, இஞ்சி- சிறிய துண்டு, பச்சை மிளகாய்-2 உப்பு- தேவைக்கு ஏற்ப. தாளிக்க கடுகு- 1/4 ஸ்பூன்.செய்முறை: மேலே கூறியுள்ள எல்லா பொருட்களையும் மிக்ஸியில் நன்கு அடித்து வடிகட்டி, கடுகு தாளித்து குடிக்கலாம். ஜில்லுன்னு வேண்டும் எனில் ஐஸ் கட்டிகளை மேலே மிதக்கவிட்டு குடிக்கவும். கொஞ்சநேரம் ஃப்ரிஜில்...தொடர்ந்து படிக்கவும் »

பாதாம் கீர்    
ஆக்கம்: சித்ரா | April 30, 2008, 1:58 am | மறுமொழிகள்

தேவையான பொருட்கள்; பாதாம் பருப்பு-200 கிராம்சர்க்கரை-150 கிராம்லெமன் எல்லோ- கொஞ்சம்பாதாம் எசன்ஸ்- 2 ஸ்பூன்தனண்ணீர்-1/4 டம்ளர்சிட்ரிக் ஆசிட்- கொஞ்சம்செய்முறை: பாதாம் பருப்பை தண்ணீரில் போட்டு ஊறவிட்டு தோலை உரித்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். தண்ணீரில் சர்க்கரையை கலந்து கொதிக்க விட்டு ஆறியபின் பாதாம்விழுது, மற்ற மேலே உள்ள பொருட்கள் அனைத்தையும் கலந்து டம்ளரில் ஊற்றி ஐஸ்...தொடர்ந்து படிக்கவும் »

மசாலா மில்க் ஷேக்    
ஆக்கம்: சித்ரா | April 30, 2008, 1:43 am | மறுமொழிகள்

தேவையான பொருள்கள்; கெட்டியான பாலை காய்ச்சி ஆற வைத்து குளிர வைக்கவும். [ தேவையான அளவு] சிறிய பட்டை, 1 லவங்கம், ஏலக்காய்-2 வெள்ளை மிளகு-2 பனங்கல்கண்டு- 4 ஸ்பூன், தேவையான [Ice] கட்டிகள்செய்முறை: பாலுடன் எல்லா மசாலா பொருட்களையும் போட்டு மிக்ஸியில் நன்றாக அடித்து நுரைத்து வரும் சமயம் டம்ளரில் ஊற்றி மேலெ [Ice]கட்டிகளை போட்டு குடிக்கவும். வெயில் காலத்தில் வரும்...தொடர்ந்து படிக்கவும் »

ரோஸ் சிரப்    
ஆக்கம்: சித்ரா | April 30, 2008, 1:30 am | மறுமொழிகள்

தேவையான பொருட்கள்; கெட்டியான ரோஸ் எசன்ஸ்- 3 ஸ்பூன், சர்க்கரை-150 கிராம், தண்ணீர்- 2, கப், ரோஸ் கலர்- கொஞ்சம், எலுமிச்சை பழம்-2, எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும். மேலே கூறி உள்ள எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்து மிக்ஸியில் நன்கு அடித்து [எல்லாம் ஒரே மாதிரி கலக்க] டம்ளரில் ஊற்றி [Ice] கட்டிகளை மேலே போட்டு குடிக்கலாம். இல்லையெனில் ஃப்ரிஜில் வைத்துதேவைபடும்...தொடர்ந்து படிக்கவும் »

கம்பு கூழ்    
ஆக்கம்: சித்ரா | April 29, 2008, 10:44 am | மறுமொழிகள்

தேவையான பொருள்கள்;சுத்தம் செய்த கம்பு- 1/4 கிலோதண்ணீர்- 2 டம்ளர்மோர்- 2 டம்ளர்சிறிய வெங்காயம்-10உப்பு- கொஞ்சம்மோர் மிளகாய்- வறுத்தது=2[அ]4செய்முறை: சுத்தம் செய்த கம்பை நன்கு கழுவி வடிகட்டி துணியில் போட்டு நன்கு காய விட்டு மிக்ஸியில் மாவாக அரைத்து கொள்ளவும். கெட்டியான பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் கம்பு மாவை போட்டு நன்கு கிளறவும்.[ பச்சை தண்ணீரில் மாவை கலந்தால்...தொடர்ந்து படிக்கவும் »

புதினா, சீரக ஜூஸ்    
ஆக்கம்: சித்ரா | April 29, 2008, 10:33 am | மறுமொழிகள்

தேவையான பொருட்கள்; புதினா- 1 சிறிய கட்டுசீரகம்- 3 ஸ்பூன்சர்க்கரை- 100 கிராம்சிறிய மாங்காய் நறுக்கியது- 10 துண்டுகள்தண்ணீர்- 2 டம்ளர்உப்பு- ருசிக்கு கொஞ்சம்செய்முறை: புதினாவில் இலைகளை மட்டும் ஆய்ந்து அதில் சீரகபொடி,தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். மாங்காயை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி அதன் சாறையும் கலந்துக் கொள்ளவும். சர்க்கரையை நன்கு கலந்து அப்படியே குடிக்கலாம்....தொடர்ந்து படிக்கவும் »

கேரட் ஜுஸ்    
ஆக்கம்: சித்ரா | April 29, 2008, 10:26 am | மறுமொழிகள்

தேவையான பொருட்கள்;கேரட்-1/4 கிலோகெட்டியான காய்ச்சிய பால்-2 டம்ளர்சர்க்கரை-50கிராம்ஏலக்காய் பொடி- கொஞ்சம்செய்முறை: கேரட்டை நன்கு சுத்தம் செய்து துறுவி மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து பிழிந்து சாறு எடுத்து, அதனுடன் ஆறிய பால், ஏலக்காய், சர்க்கரை போட்டு நன்கு கலந்து [Ice] கட்டிகளை போட்டு கப்புகளில்...தொடர்ந்து படிக்கவும் »

ரவா பொங்கல் / Rawa pongal    
ஆக்கம்: கீதா | April 29, 2008, 9:22 am | மறுமொழிகள்

தேவையான பொருட்கள் (2 பேருக்கு) _________________________________ ரவை - 1 1/2 கப் பயத்தம் பருப்பு - 1/2 கப் முந்திரி - சிறிதளவு மிளகு - 1 தே. கரண்டி சீரகம் - 1 தே. கரண்டி இஞ்சி - சிறு துண்டு பச்சை மிளகாய் - 1 அல்லது 2 உப்பு தேவையான அளவு நெய் தாளிக்க செய்முறை ___________ *நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். *மிளகு , சீரகம் வறுத்து லேசாக பொடித்து தனியே வைக்கவும். *பச்சை மிளகாயை நீளவாக்கில்...தொடர்ந்து படிக்கவும் »

பானகம்.    
ஆக்கம்: சித்ரா | April 29, 2008, 3:49 am | மறுமொழிகள்

தேவையானவை; வெல்லம்- 100கிராம்எலுமிச்சை பழம்- 2ஏலக்காய் பொடி- 1 ஸ்பூன்சுக்கு தூள்-1/2 ஸ்பூன்தண்ணீர்- 3 கப்கொஞ்சம்-உப்ப [ 1சிட்டிகை]செய்முறை: வெல்லத்தை தண்ணீரில் நன்கு கரையவிட்டு,அதில் எலுமிச்சை பழத்தை பிழியவும். ஏலக்காய்பொடி, சுக்குபொடி, உப்பு போட்டு நன்கு கலந்து குடிக்கவும். தேவையானால் [ice ] கட்டிகள் போட்டும் குடிக்கலாம். வெயிலுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

கோடைக்கு ஏற்ற பானங்கள்    
ஆக்கம்: சித்ரா | April 29, 2008, 3:35 am | மறுமொழிகள்

கேரட், வெள்ளரி ஜுஸ். [100 கிராம் சீரகத்தை வெறும் வாணலியில் லேசாக வறுத்து பொடி செய்து வைத்து கொள்ளவும். இது ஜுஸுக்கு தேவை, உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். வயிறு சம்பந்தபட்ட கோளாறுகளுக்கு நல்லது.]தேவையானவை: தயிர்- 2-கப்கேரட்- 2வெள்ளரி காய்-பிஞ்சாக- 2இஞ்சி- சிறிய துண்டுஉப்பு- தேவையானவை.செய்முறை: கேரட், வெள்ளரியை நன்கு கழுவி கொண்டு பொடியாக நறுக்கி, இஞ்சி, உப்பு, சேர்த்து...தொடர்ந்து படிக்கவும் »

மோர் குழம்பு பொடி    
ஆக்கம்: சித்ரா | April 28, 2008, 10:07 am | மறுமொழிகள்

தேவையானவை: கொப்பரை தேங்காய் - 1பச்சை மிளகாய்- 20சீரகம் - 25கிராம்இஞ்சி - 10கிராம்உப்பு - 1/4 ஸ்பூன்செய்முறை:தேங்காயை துறுவி கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி கொண்டு, இதனுடன் சீரகத்தை சேர்த்து மிக்ஸியில் நன்கு பொடியாக செய்து கொள்ளவும். இதை ஃப்ரிஸரில் வைத்து தேவையான போது எடுத்து செய்யவும். தேவையான காய்கறிகள் போட்டு வெந்தபின்...தொடர்ந்து படிக்கவும் »

தந்தூரி மசாலா பொடி    
ஆக்கம்: சித்ரா | April 28, 2008, 9:52 am | மறுமொழிகள்

தேவையானவை: புதிய மிளகாய் தூள் பொடி - 100 கிராம் (நன்கு சிகப்பாக இருக்கனும்)தனியா பொடி- 50 கிராம்சீரகபொடி-25 கிராம்கரம் மசாலா- 25 கிராம்கருப்பு உப்பு -[ இந்துப்பு] 10 கிராம்அஜினமோட்டோ- 25 கிராம்லைம் சால்ட்- 10 கிராம்ஆரஞ்சு கலர் - 1/2 ஸ்பூன்செய்முரை:இந்த போருட்களை எல்லாம் ஒன்றாக கலந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி கொண்டு நன்கு கலந்த பின் உபயோகிக்கவும்.காலிஃப்ளவர்...தொடர்ந்து படிக்கவும் »

செட்டி நாடு மசாலா பொடி    
ஆக்கம்: சித்ரா | April 28, 2008, 9:43 am | மறுமொழிகள்

தேவையான பொருள்கள்:வர மிளகாய்- 1/4 கிலோ (நன்கு சிகப்பாக இருக்க வேண்டும்)சீரகம்- 25 கிராம்மிளகு-25கிராம்சோம்பு-25 கிராம்கல் உப்பு- 1 ஸ்பூன்செய்முறை:மேலே கூறி உள்ள பொருட்களை எல்லாம் நன்கு வெயிலில் காய வைத்து வறுக்காமல் மிக்ஸியில் நன்கு பவுடராக செய்து கொள்ள வேண்டும். சல்லடையில் சலித்து, (சலித்து செய்தால் நன்கு பவுடராக வரும். ஒரே மாதிரியாக இருக்கும்.) ஆறிய பின் பாட்டிலில்...தொடர்ந்து படிக்கவும் »

வறுவல் பொடி    
ஆக்கம்: சித்ரா | April 28, 2008, 9:33 am | மறுமொழிகள்

தேவையான பொருள்கள்:கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 50 கிராம்சிகப்பு மிளகாய் - 50கிராம்பட்டை-1 [சிறிய துண்டு]லவங்கம்- 2 மட்டும் போதும்மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்கல் உப்பு - 1 ஸ்பூன்செய்முரை:மிளகாயை தவிர எல்லா பொருட்களையும் எண்ணெய் விடாமல் வறுத்து மிளகாயும் கலந்து நல்ல வெயிலில் காய வைத்து மிக்ஸியில் நன்கு பொடி செய்து கொள்ளவும். எந்த காய்கறிகளை வதக்கி பொறியல் செய்யும் போது...தொடர்ந்து படிக்கவும் »

சாட் மசாலா பொடி    
ஆக்கம்: சித்ரா | April 28, 2008, 9:27 am | மறுமொழிகள்

தேவையான பொருள்கள்:இந்துப்பூ- 50கிராம் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)மேலே கூறிய கரம் மசாலா பவுடருடன் [50] மிக்ஸியில் போட்டு இரண்டையும் போட்டு பொடி செய்து நன்கு கலந்து கொள்ளவும். இதுதான்...தொடர்ந்து படிக்கவும் »

கரம் மசாலா பொடி    
ஆக்கம்: சித்ரா | April 28, 2008, 9:18 am | மறுமொழிகள்

தேவையான பொருள்கள்:பட்டை- 50 கிராம்லவங்கம்- 50 கிராம்ஏலக்காய்- 5 கிராம்சோம்பு-10 கிராம்மல்லி-[தனியா] 100 கிராம்கல் உப்பு- 1 ஸ்பூன்செய்முறை:மேலே கூறி உள்ள பொருள்களை எல்லாம் நன்கு வெயிலில் காய வைத்து மிக்ஸியில் பொடிசெய்து சலித்து பவுடராக இருக்கனும். அப்போதுதான் வாசனையாக இருக்கும். பிரியாணி செய்யும்போது காய்களை வதக்கியபின் இந்த பொடி 1/2 ஸ்பூன் ...தொடர்ந்து படிக்கவும் »

சைனீஷ் ஃபிரைடு ரைஸ் மசாலா    
ஆக்கம்: சித்ரா | April 28, 2008, 9:05 am | மறுமொழிகள்

தேவையான பொருள்கள்:வெள்ளை மிளகு தூள்- 50 கிராம்அஜினமோட்டோ -30 கிராம்கல் ஊப்பு - 1 ஸ்பூன்செய்முறை: மேலே கூறி உள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பவுடராக செய்து கொள்ளவும். ஃபிரைடு ரைஸ் செய்யும் போது சாதத்தை உதிராக வடித்துக் கொள்ளவேண்டும். தேவையான காய்கறிகளை அவரவர் விருப்பபடி நறுக்கிக்கொண்டு எண்ணெய் விட்டு வதக்கி 1/2 நிமிடம் மட்டும் காய் வதங்க வேண்டும். பின் மேலே கூறிஉள்ள பொடியை...தொடர்ந்து படிக்கவும் »

பிரியாணி பொடி    
ஆக்கம்: சித்ரா | April 28, 2008, 8:48 am | மறுமொழிகள்

தேவையான பொருள்கள்:பட்டை- 10கிராம்லவங்கம்-10கிராம்கசகசா- 20-கிராம்மிளகாய்-50கிராம்கல் உப்பு- 1 ஸ்பூன்செய்முறை: மேலே கூறி உள்ள எல்லா பொருட்களையும் வெயிலில் நன்கு காய வைத்து மிக்ஸியில் பவுடராக அரைத்து கொண்டு பிரியாணி செய்யும்போது செய்யவும். கல் உப்பு போட்டு அரைப்பதால்...தொடர்ந்து படிக்கவும் »

கத்திரிக்காய் சட்னி    
ஆக்கம்: கீதா | April 26, 2008, 9:45 pm | மறுமொழிகள்

(4 பேருக்கு)தேவையான பொருட்கள் _________________________________ பெரிய கத்திரிக்காய் - 5 வரமிளகாய் - 8 (தேவைக்கேற்ப குறைத்துக்கொள்ளவும்) உளுந்து - 2 தே. கரண்டி புளி - சிறிதளவு உப்பு தேவையான அளவு சர்க்கரை - 1 தே.கரண்டி (விருப்பமானால்) கடுகு,உளுந்து,பெருங்காயம் - தாளிக்க எண்ணை - தாளிக்க செய்முறை ___________ * கத்திரிக்காயின் தோலைச்சுற்றிலும் சிறிதளவு எண்ணை தேய்த்து அடுப்புத் தீயில் நன்றாக சுட்டு எடுக்கவும்....தொடர்ந்து படிக்கவும் »

முட்டை சம்பல் (Egg Sambol)    
ஆக்கம்: Thooya | April 26, 2008, 12:04 am | மறுமொழிகள்

மலேசியா, சிங்கப்பூருக்கு செல்லும் நேரங்களில் எல்லாம் நான் அதிக நேரம் செலவு செய்வது புத்தகக்கடைகளில் தான். அதுவும் செய்முறை புத்தகங்களில் ஐந்தையாவாது வாங்காமல் வீடு திரும்புவதில்லை. இரு நாட்டிலும் மலே சமையல், சீன சமையல், இந்திய சமையல், இது அனைத்தும் கலந்த ரீ-மிக்ஸ் சமையல் என கிடைக்கும். அதிலும் உடாங் சம்பல் (இறால் சம்பல்), நசி லமக், முட்டை சம்பல் என்றால் யாருக்கு தான்...தொடர்ந்து படிக்கவும் »

கட்லெட் (Vegetable cutlet)    
ஆக்கம்: கீதா | April 25, 2008, 7:39 am | மறுமொழிகள்

தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு : 7 குடைமிளகாய் : 1 (சிறு துண்டுகளாக நறுக்கியது) கேரட்,பீட்ரூட்,பட்டாணி போன்ற விருப்பமான காய்கறிகள் : 2 கப் (நன்றாக நறுக்கியது) பிரட் கிரம்ஸ் : 1 கப் சோளமாவு/மைதா மாவு : 2 அல்லது 3 ஸ்பூன் எண்ணை தேவையான அளவு உப்பு தேவையான அளவு சிறிதளவு சோம்பு (உடைத்தது.) செய்முறை: * முதலில் உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து தண்ணீர்விடாமல் கெட்டியாக மசித்து...தொடர்ந்து படிக்கவும் »

பாப்பி தினமும், ஆன்ஸாக் பிஸ்கெட்டும்    
ஆக்கம்: துளசி கோபால் | April 25, 2008, 5:02 am | மறுமொழிகள்

இங்கத்துக் கொடிநாள்தாங்க இந்த ஆன்ஸாக் டே என்றது. இந்த 'ஆ' ஆஸ்தராலியாவையும் 'ன்ஸா' என்பது நியூஸிலாந்தையும் குறிக்கும்.அடுத்து வரும் a ஆர்மி யையும் c என்றது corps.A + NZ +AC = ANZAC. சரிதானேங்க.நம்மூர்லே கொடிநாளுக்கு உண்டியல் குலுக்கிக், காசு போட்டவுடன் குட்டியா தேசியக்கொடி தருவாங்க இல்லே. அதே போல இங்கே கொடிக்குப் பதிலா சிகப்பு நிறமுள்ள பாப்பிப் பூ.இந்தப் பாப்பிப் பூ என்றது கசகசாச்...தொடர்ந்து படிக்கவும் »

டயமன்ட் பர்பி [Diamond Burfy]    
ஆக்கம்: தூயா [Thooya] | April 20, 2008, 3:13 am | மறுமொழிகள்

இனிப்பில் நாட்டம் குறைவாக இருப்பதால், இனிப்பு பலகாரங்களை நான் இப்பொழுது தான் எப்படி செய்வது என்று யோசிக்கவே ஆரம்பித்திருக்கேன். அதிலும் இனிப்பு வகைகள் செய்யும் போதும் கரண்டியும் கையுமாக இருக்க வேண்டும். இல்லையேல் இனிப்பும் போய், சட்டியும் போய், கையும் போய்விடும். இதனாலேயே இனிப்பு வகைகளை சமைக்க பழக நாட்கள் ஆகிவிட்டன.இன்று கிமீக்காவின் டயமன்ட் பர்பியை ஒரு கை...தொடர்ந்து படிக்கவும் »

வெங்காய சம்பல்    
ஆக்கம்: தூயா [Thooya] | April 19, 2008, 4:46 am | மறுமொழிகள்

மிகவும் இலகுவாக, உடனே தாயாரிக்க கூடிய பக்க உணவு என்றால் அது வெங்காய சம்பல் தான். இதையே onion salad / onion raita என்றும் அழைக்கிறார்கள். நாங்க வெங்காய சம்பல் என அழைப்போம். "சம்பல்" என்ற வார்த்தையை மொத்தமா குத்தகைக்கு எடுத்திருக்கமே!அசைவ உணவு வகைகளுக்கு இந்த வெங்காய சம்பல் சுவையை அதிகமாக்கும். பிரியாணி, சப்பாத்தி, ரொட்டி, பூரி என எதுவாகினும் சேர்த்து உண்ண அசைவம் இருக்கும் வேளையில்,...தொடர்ந்து படிக்கவும் »

தர்பூசணி    
ஆக்கம்: Kamala | April 19, 2008, 4:15 am | மறுமொழிகள்

கோடைக் காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம், உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு, இரும்புச் சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும். பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, முள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம்.சிறிது உப்பும், மிளகு