மாற்று! » பகுப்புகள்

அனுபவம் 

விடுபட்டவை 8 ஜூலை 2008    
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | July 8, 2008, 12:19 am | மறுமொழிகள்

சனிக்கிழமை மாலை இசையருவி(கலைஞர்) தொலைக்காட்சியின் தமிழிசை விருது வழங்கும் விழாவுக்கு போய் இருந்தேன்.(வேடிக்கை பார்க்க என்று நான் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இது.. ) பொதுவாக இப்படியான விழாக்கள் அலர்ஜி என்பதால் போவதில்லை. இலவச பாஸ் என்று நண்பர்கள் அழைக்க, பிக்-அப் அண்டு டிராப்க்கும் ஆள் இருக்க கிளம்பி விட்டேன்.  ஆறு மணிக்கு துவங்கும் விழாவுக்கு ஐந்து மணிக்கு...தொடர்ந்து படிக்கவும் »

நகரம் மற்றும் கிராமம் சார்ந்தவைகளைப் பற்றிய சில அர்த்தமற்ற புலம்பல்கள்    
ஆக்கம்: நந்தா | July 7, 2008, 1:07 pm | மறுமொழிகள்

முகத்தில் அணிந்திருக்கும் அறிவு ஜீவி முகமூடியைக் களைந்து விட்டு, எந்த வித போலித்தனமுமில்லாமல் அர்த்தங்களற்று பேசித்திரிய மனது விரும்புகின்றது. நகர வாழ்க்கையின் வெம்மை என்னை கொஞ்ச கொஞ்சமாய் விழுங்கிக் கொண்டிருக்கிறது! நின்று நிதானித்து கடந்த சில நாட்களாய் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று திரும்பிப் பார்த்தால் ஒன்று மட்டுமே புரிந்திருக்கின்றது. நான்...தொடர்ந்து படிக்கவும் »

நரைத்த கண்ணீர்    
ஆக்கம்: த.அகிலன் | July 3, 2008, 8:06 am | மறுமொழிகள்

01. மரணமும் அது குறித்தான சேதிகளும் ஒரு கொடு நிழலைப்போல் என்னைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஒப்பாரிகளையும் துப்பாக்கி வெடிக்கும் ஓசைகளையும் கடந்து வந்து விட்டேன் என்கிற எனது கனவுகளை அந்தக்கிழவர் இன்றைக்குத் தகர்த்துவிட்டார். எனது புன்னகையைத் தன்கையில் எடுத்து வைத்துக்கொண்டு அது  வெறும் புன்னகை மெழுகு பூசப்பட்டிருக்கும் துயரத்தின் பொம்மை என்று...தொடர்ந்து படிக்கவும் »

விடுபட்டவை 2ஜூலை 2008    
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | July 2, 2008, 7:52 am | மறுமொழிகள்

கடந்த ஞாயிறு மதியம் வேளச்சேரி செக்போஸ்ட் பகுதியில் வசிக்கும் நண்பர் ஒருவரின் வீட்டில் மதிய சாப்பாட்டிற்காக போய் இருந்தேன். சாப்பிடவே சிரம்பப்படும் அளவுக்கு மிகுந்த காரமாக இருந்தது. சாப்பாடு முடிந்த வெளியே வந்தோம். சிகரெட்டை புகைத்து விட்டு கதையளந்தபடி நடந்தோம். சந்துக்குள்ளிருந்து மெயின் ரோட்டுக்கு வந்ததும் நண்பரை அனுப்பி விட்டு, தியாகராயா நகர் போக வேண்டி...தொடர்ந்து படிக்கவும் »

புலம் பெயர்ந்த NRI    
ஆக்கம்: ambi | July 2, 2008, 4:46 am | மறுமொழிகள்

சென்னைக்கும் பெங்களூருக்கும் நான் சீசன் டிக்கட் எடுத்து வைத்திருப்பதால் தான் லாலுவால் துண்டு விழாமல் ரயில்வே பட்ஜெட் போட முடிகிறது என இப்பதிவை ஆரம்பித்தால் இதுவும் பட்டர்பிளை எபக்ட் தான் என பின்னூட்டம் விழற வாய்ப்புக்கள் பிரகாசமாக இருக்கிறபடியால் நேரே மேட்டருக்கு வருகிறேன். (மேட்டர் என்றால் விஷயம் என இங்கு பொருள் கொள்ளவும், என்ன செய்ய? தமிழ்மண நிலமை அப்படி)உலக...தொடர்ந்து படிக்கவும் »

சந்திரா என்றொரு அழகி    
ஆக்கம்: `மழை` ஷ்ரேயா(Shreya) | June 30, 2008, 12:59 am | மறுமொழிகள்

என்னதான் படித்தாலும், நல்லோர் சகவாசம் இருந்தாலும் எவ்வளவு விதிக்கப்பட்டதோ அவ்வளவுதான் மதி என்று நிறுவிக் காட்டவும் சிலர். இவர்களை நினைத்தாலே கோபமும், அனுதாபமும், சிரிப்பும் ஒருங்கே வருகிறது. (தயவு செய்து யார், ஏன், என்ன என்றெல்லாம் கேட்காதீர்கள்.)---- சரி, தொலையட்டும் அந்தக் கதை. சந்திராவைப் பற்றிப் பேசலாம்.எடுத்துப் பேசும் போதெல்லாம் "எப்படியிருக்கிறாய்" என்ற...தொடர்ந்து படிக்கவும் »

பின்னிரவுக் குறிப்புக்கள்    
ஆக்கம்: கதிர் சயந்தன் | June 23, 2008, 6:36 pm | மறுமொழிகள்

சிறுகதைகள் எழுதுவதற்கு நான் வோர்க் அவுட் (work out) செய்வதில்லையென சோமிதரன் கடிந்து கொண்டான். ஆவணப்படம் எடுக்கிற அவனுக்கு பீல்ட் வேர்க் சரி. எனக்கெதுக்கு என புரியவில்லை. அடப் போடா.. எனக்கு நடந்ததையும் பார்த்ததையும் கலந்து கட்டி எழுதுறதுக்கு எதற்கு பீல்ட் வேர்க் செய்யோணும்..? ரொம்ப முக்கியம் என்றேன் நான். நீ பத்து வருசத்துக்கு முதல் எழுதிய கதைகள் அப்போதைக்கு தரம்....தொடர்ந்து படிக்கவும் »

விடுபட்டவை 19 ஜூன் 2008    
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | June 19, 2008, 12:32 pm | மறுமொழிகள்

மாயமோ? என்னமோ தெரியலை.. எனக்கு பயர் பாக்ஸ் மீது கொள்ள ஆசை இருந்துவருகிறது. ஜூன் 18ம் தேதி பயர்பாக்ஸின் மூன்றாவது வர்சன் வெளிவருகிறது. அதனை அதே நாளில் தரவிரக்கிக்கொள்ளுங்கள் என்று நம்ம கோபி எழுதி இருந்தார். இந்திய தேதியா.. அமெரிக்க தேதியான்னு தெரியலை. ஆனா.. அமெரிக்க தேதியில.. நான் புதிய பயர்பாக்ஸை தரவிறக்கிக்கொண்டேன். இனி பயர் பாக்ஸில் align=justify தொல்லை இல்லாமல்.. தமிழை படிக்க...தொடர்ந்து படிக்கவும் »

❒ திண்ணை அனுபவங்கள்    
ஆக்கம்: ☆ சிந்தாநதி | June 16, 2008, 1:30 am | மறுமொழிகள்

தனது பதிவில் பாலபாரதி திண்ணை வைத்த வீடுபற்றிய அனுவங்களை எழுத தூண்டி இருந்தார். நான் பிறந்த வீட்டில் (அம்மா வீடு) ஓட்டு வீடானாலும் மாடி வீடு. மாடிக்கு தரையாக மரப்பலகைகள் வைத்து அடிக்கப் பட்டிருக்கும். மாடிக்குச் செல்ல அகலமான மரப்படிகளுடன் ஏணி போன்ற அமைப்பு. மாடியில் பெரிய நெல்பத்தாயமும் சுவர்களில் பழைய இரும்பு ஆயுதங்களும் இருக்கும். குங்குமம் வைக்கப் பட்டு பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »

விடுபட்டவை 15 ஜூன் 2008    
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | June 15, 2008, 12:34 pm | மறுமொழிகள்

தமிழ்மணப் பதிவர்களுடன், நிர்வாகிகளின் சந்திப்பு இனிமையாக நடந்து முடிந்தது. எதிர்பார்த்ததை விட.. அதிகமான பதிவர்கள் வந்திருந்தார்கள். ஆசிப் அண்ணாச்சியின் வருகை இன்ப அதிர்ச்சி..! நன்கு நடந்து முடிந்த பதிவர் சந்திப்பு பற்றிய பதிவுகளை நம்மவர்கள் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன். அலுவலக வேலை அதிகமாகி விட்டது. பதிவுகளை படிக்கவோ.. எழுதவோ கூட பழையபடி நேரமில்லாமல் போய்...தொடர்ந்து படிக்கவும் »

திண்ணையைப் பற்றிய எனது நினைவுகள்.....!    
ஆக்கம்: நாடோடி இலக்கியன் | June 13, 2008, 1:17 am | மறுமொழிகள்

"அண்ணன் எப்போ போவான்,திண்ணை எப்போ காலியாகும்" என்று ஒரு சொல் உண்டு,ஆனால் இங்கே என் அண்ணனே (தஞ்சாவூரான்) மனமுவந்து, "இந்தாடா தம்பி திண்ணை" என்று கொடுத்திருக்கிறார்.இப்போ இந்தத் திண்ணையை வைத்துக் கொண்டு என்ன செய்வது,ஒன்னுமே தோணல. திண்ணையைப் பற்றி ஆளாளுக்கு எழுதிய பிறகு, எழுத புதிதாக ஒன்றுமில்லையென்றாலும்,என்னையும் மதிச்சு எழுத சொன்னதால, ஏதோ எனக்குத் தெரிந்த,அறிந்த...தொடர்ந்து படிக்கவும் »

விடுபட்டவை 06 ஜூன் 2008    
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | June 6, 2008, 12:53 am | மறுமொழிகள்

நான் வழக்கமாக சாப்பிடும் கடை நேற்று பூட்டியிருந்தது.(இன்றும் தான்). அதனால்.. வேறு ஒரு கடையில் சாப்பிட்டேன். அது என்னமோ செய்ய.. இரவெல்லாம் ஒரே அவதி! இரவில் எழுத வேண்டிய பதிவை.. இன்று அதிகாலை எழுதி.. நேற்றைய தேதியில் எடிட் பகுதியில் செட் செய்து.. காலையில் போஸ்ட் போட்டு விட்டேன். அதில் எழுதி இருந்த திண்ணைக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது....தொடர்ந்து படிக்கவும் »

ஈழத்தில் நேரில் கண்டது - 21 ஆண்டுகள் முன்பு    
ஆக்கம்: நாகார்ஜுனன் | June 5, 2008, 6:01 pm | மறுமொழிகள்

குளிர் மதியம்.ஈழத்தின் காடு மற்றும் கடலின் ஊடே இந்திய விமானம் திருகோணமலைத் துறைமுகத்தை நெருங்கியபோது நிருபர்கள் அனைவரும் குலுக்கலையும் மீறி வட்டக்கண்ணாடி ஜன்னலருகில் முகங்களைப் புதைக்கிறோம்.கடல்சூழ் மலையும் மலைசூழ் கடலும் தூரத்திலிருந்து கோணேஸவரர் ஆலயமும் குரங்குப்பாலமும் ஜன்னலில் பார்க்கப்பார்கக் மறைய, நேர்கீழே இந்தியக் கடற்படைக் கப்பல்கள்,...தொடர்ந்து படிக்கவும் »

விடுபட்டவை 05 ஜூன் 2008    
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | June 5, 2008, 1:06 pm | மறுமொழிகள்

எப்போதுமே என் மீது எனக்கு மீது பரிதாப உணர்ச்சியும், கழிவிரக்கமும் உண்டு. அதே அளவுக்கு என் மீது எனக்கு கோபமும், வருத்தமும் கூட உண்டு. இவை இருப்பதால் தான்.. உள்ளுக்குள் உந்தப்பட்டு மேலே மேலே என்று வர முயன்றுகொண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் என் அருகில் இருப்பவர்கள் மீது நான் காட்டும் கோபம் கோழிக் காமம் மாதிரி.. வர்றதும் தெரியாது, போறதும் தெரியாது. ஆனால்.. முன்பு எல்லா...தொடர்ந்து படிக்கவும் »

எச்சரிக்கை    
ஆக்கம்: தாரணி பிரியா | June 4, 2008, 4:50 am | மறுமொழிகள்

என்னுடைய நெருங்கிய தோழி ஒருத்தியின் தம்பி எனக்குமே அவன் தம்பி மாதிரிதான். அறிவான அழகான பையன். அவனுடன் பேசும் எல்லோருக்குமே பத்தாவது நிமிடத்தில் அவனை பிடித்துவிடும் அவ்வளவு நட்பான பையன். பிரியாக்கா என்று அவன் உரிமையாய் அழைத்து பேசும் போதெல்லாம் இவன் நிஜமாவே நம்ம கூட பிறந்து இருக்க கூடாதா என்று தோன்றும், அவன் இருக்குமிடத்தில் சிரிப்பு சத்தம் கேட்டு கொண்டே...தொடர்ந்து படிக்கவும் »

விடுபட்டவை 4 ஜூன் 2008    
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | June 4, 2008, 12:36 am | மறுமொழிகள்

புதிய அலுவலகத்தில் வேலைக்கு சேர்த்துக்கொள்ளுவதற்கு முன் மெடிக்கல் செக்கப் எடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். அவர்களே ஒரு இடத்தையும் பிக்ஸ் செய்து, ஒரு கடிதத்தை கொடுத்து டெஸ்ட் பண்ணிட்டு மட்டும் வந்துடுங்க என்றும் சொல்லி விட்டார்கள். அதில் கொடுமை என்னவென்றால்.. வெறும் வயிற்றுடன் காலை 7.30 மணிக்கு ஸ்கேன் செண்டரில் இருக்கவேண்டும் என்ற உத்தரவு வேறு. தரமணியில்...தொடர்ந்து படிக்கவும் »

மழையே மழையே மெத்த பெய் வண்ணான் வீட்டில் நிறைய பெய்    
ஆக்கம்: Thooya | June 3, 2008, 8:59 pm | மறுமொழிகள்

மழை காலத்தில் தூங்கவிடாமல் எழுப்புவது பாவம் என்றால், எழுப்பியதோடு நில்லாமல் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதை நினைவுபடுத்துவது பெரும் பாவம். இந்த பாவத்தையும், பெரும்பாவத்தையும் என் மாமா செய்து கொண்டிருக்கிறார். என்ன கொடுமை, அட வேலைக்கு போய் தான் ஆகணும் என்றால் அவங்க அவங்க போக வேண்டியது தானே! எதுக்கு என்னை எழுப்பி, என் சாபத்தை வாங்கிட்டு!எங்க ஊர்ல மழைகொட்டிட்டு...தொடர்ந்து படிக்கவும் »

மனிதர்கள் - பிரம்பு டீச்சரம்மா    
ஆக்கம்: Sai Ram | June 3, 2008, 2:29 pm | மறுமொழிகள்

நான் பள்ளியில் இருந்த போது பிரம்பிற்கு பேர் பெற்ற ஒரு டீச்சரம்மா இருந்தார்கள். அவரை கண்டாலே மாணவர்கள் நடுங்குவார்கள். ஐந்தாம் வகுப்பு வரை இருந்த ஒரு கிருஸ்துவ பள்ளி அது. ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் தாம் மூத்தவர்கள். அவர்களின் வகுப்பு ஆசிரியை தான் நம்ம பிரம்பு டீச்சரம்மா.நான்காம் வகுப்பில் இருக்கும் போதே அடுத்த வருடம் பிரம்பு டீச்சரம்மாவிடம் பிரம்படி வாங்க வேண்டுமே...தொடர்ந்து படிக்கவும் »

கிழக்கு ப்ளஸ் - 10    
ஆக்கம்: para | June 3, 2008, 12:44 am | மறுமொழிகள்

இந்தச் சிறு தொடரை எழுத ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை வந்துகொண்டிருக்கும் மின்னஞ்சல்கள்மூலம் கிழக்கின் வளர்ச்சியின்பால் வாசகர்களுக்கு உள்ள அக்கறையும் ஆர்வமும் தெரிகிறது. அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இப்போது பேசிய சில விஷயங்களை நான் முன்பே பேசியிருந்தால் பல மனக்கசப்புகளை - இணையத்தில் தவிர்த்திருக்கலாமே என்று சில நண்பர்கள் கேட்டார்கள். என்...தொடர்ந்து படிக்கவும் »

விடுபட்டவை 2 ஜூன் 2008    
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | June 2, 2008, 12:51 pm | மறுமொழிகள்

வீட்டை விட்டு வெளியே வந்து பல வருடங்கள் ஆகி விட்டது. பெரும்பாலும் ஓட்டல் சாப்பாடு தான். சமைத்த சமயங்களிலும் கூட வேலைக்கு போகும் அவசரத்திற்கு தகுந்த மாதிரி கலவைச் சோறு சமைத்து ஓடி  இருக்கிறேன். வீட்டில்  சாப்பாடு போடுகிறேன் வா.. என்று எவர் அழைத்தாலும் போதும்.. தொலைவு பற்றிய பயமில்லாது கிளம்பி விடுவேன்.  வீட்டு சாப்பாட்டிற்கு ஒரு மணம் உண்டு! தொடர்ந்து வீட்டுச்சாப்பாடு...தொடர்ந்து படிக்கவும் »

கிழக்கு ப்ளஸ் - 9    
ஆக்கம்: para | June 1, 2008, 11:42 pm | மறுமொழிகள்

அந்தப் புத்தகக் கண்காட்சியை மறக்கமுடியாது. கிழக்கு ஆரம்பிப்பதற்கு முந்தைய வருட சென்னை புத்தகக் கண்காட்சி. நானும் பத்ரியும் கூட்டத்தில் நீந்தியபடி ஒவ்வொரு கடையாக நகர்ந்துகொண்டே இருக்கிறோம். புத்தி முழுக்க விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் புதிய புத்தகங்களின் மீதுதான். என்னென்ன வகைகள், என்னென்ன விதங்கள், யார் யார் எழுத்தாளர்கள், லே அவுட் எப்படி, பேகேஜிங் எப்படி,...தொடர்ந்து படிக்கவும் »

அப்பாக்களுக்கான ஒரு டெம்பிளேட் பதிவு!!    
ஆக்கம்: அபி அப்பா | May 30, 2008, 11:53 am | மறுமொழிகள்

நான் என் வயசுக்கும் இத்தன ஒரு விஷமத்தை பார்த்ததில்லை. அய்யோ என்னா விஷமம் என்னா விஷமம். அவனை பார்த்துகறத்துக்கே நாலு ஆளு வேணும்.காலையிலே அவங்க அம்மா எழுந்திருக்கும் போதே எழுந்துடுவான். ஆனா பாருங்க அப்பத்திலே இருந்து என் கிட்டத்தான் விளையாடிகிட்டு இருப்பான். நான்னா அவனுக்கு உசிரு.ராத்திரி தூக்கத்திலே எங்கே புரண்டு படுத்திருந்தாலும் முழிப்பு வந்துச்சுன்னா ஓடி...தொடர்ந்து படிக்கவும் »

PIT ஜூன் மாசம் போட்டிக்கு வந்துட்டோம்ல    
ஆக்கம்: இம்சை | May 30, 2008, 6:04 am | மறுமொழிகள்

மக்கா நீங்க கேட்ட தலைப்புல போட்டிருக்கேன் பாத்துக்கோங்க....1. குழந்தைக்குச் சோறூட்டும் தாய்3. ஆணி புடுங்கிக் கொண்டிருக்கும் உங்கள் சக ஊழியர்4. வண்டியை இழுத்துச் செல்லும் மாடு2. வீட்டுப்பாடம் எழுதும் பள்ளிச்சிறுவன்எங்க வீட்டு சின்ன இம்சை இன்னும் பள்ளிகூடம் போகல அதனால இந்த படம் கொஞ்சம் அட்ஜெஸ் மாடி...6. யாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் மளிகை கடைகாரர்யாபாரத்தில...தொடர்ந்து படிக்கவும் »

கிழக்கு ப்ளஸ் - 8    
ஆக்கம்: para | May 23, 2008, 5:16 pm | மறுமொழிகள்

புத்தகம் என்று பேசத் தொடங்கும்போதே பத்து மொழிகள் என்று முடிவு செய்துவிட்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் NHM. என்றைக்கு முடியும், எப்படி முடியும் என்றெல்லாம் அதிகம் நாங்கள் கவலைப்படவில்லை. எப்படியும் முடியும் என்பதில் சந்தேகம் இருக்கவில்லை. புத்தகங்களைப் பொறுத்த அளவில், சரியான எடிட்டர்கள் அமையும்போது எந்த மொழிக்கும் செல்லமுடியும். என்னவேண்டுமானாலும் செய்யவும்...தொடர்ந்து படிக்கவும் »

மோகன் அண்ணா!    
ஆக்கம்: லக்கிலுக் | May 21, 2008, 5:36 am | மறுமொழிகள்

எனக்கு சிறுவயதாக இருந்தபோது மடிப்பாக்கத்தில் முடிவெட்டும் கடை எல்லாம் இருந்ததாக நினைவில்லை. கன்னியப்பன் ஒவ்வொருத்தர் வீடாக வந்து முடிவெட்டி விட்டு செல்வார். ஞாயிற்றுக்கிழமைகளில் அவருக்கு வேலை அதிகம். பெருசுகள் எல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் முடிவெட்டிக் கொள்ளும் என்பதால் வாரநாட்களில் தான் பையன்களுக்கு முடிவெட்டுவார். அதுவும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில்...தொடர்ந்து படிக்கவும் »

தேவாரமும் நானும்    
ஆக்கம்: ஆ.கோகுலன் | May 17, 2008, 8:07 am | மறுமொழிகள்

சிறுவயதில் தேவாரம் பாடமாக்குதல் என்பது மிகப்பெரிய சவால்। கோவில்களில் தேவாரம் பாடினால் தான் கடவுள் வரம் தருவார் என்றும் சொல்லப்பட்டது। 'சொற்றுணை வேதியன்॥' பாடும்போது கல்லைக்கட்டி கடலில் போட்டபோது அவர் பாடியதை சும்மா நின்று கும்பிட்டுக்கொண்டிருக்கும் நான் ஏன் பாடவேண்டும் என நினைத்த காலங்களும் உண்டு। (கல்லைக்கட்டி கடலில் போட்டாலும் எமக்கு இன்னும்...தொடர்ந்து படிக்கவும் »

கூத்துப் பார்க்கப் போன கூத்து    
ஆக்கம்: த.அகிலன் | May 17, 2008, 12:14 am | மறுமொழிகள்

மாப்பிள்ளை வாறார் மாப்பிள்ளை வாறார் மாட்டு வண்டியில பொண்ணு வாறா பொண்ணு வாறா பொட்டு வண்டியில எப்போதாவது அம்மம்மா வீட்டில் தங்க நேர்கிற சந்தர்ப்பங்களில் அம்மம்மா பாடுகிற பாடல்வரிகளில் எனக்கு நினைவிருக்கிற மிகவும் பிடித்த இரண்டு வரிகள் இவை. அம்மம்மா எப்போதும் இரவுகளில் தூங்குவதில்லை மாலை ஆறுமணிக்கு மேல் துணையின்றித் தனியாக ஒன்றுக்கும் போகத் தைரியம் வராத வயசில்...தொடர்ந்து படிக்கவும் »

நினைவழியா நாட்கள் - 2    
ஆக்கம்: கதிர் சயந்தன் | May 15, 2008, 11:40 am | மறுமொழிகள்

அடுத்த நாள் வெள்ளனவே அப்பையாண்ணை வீட்டை வந்திட்டார். அப்பையாண்ணை எண்ட பெயர் எனக்குச் சிரிப்பாக் கிடக்கும். அதென்ன அப்பு பிறகு ஐயா பிறகு அண்ணை எண்டு நான் அம்மாட்டைக் கேட்பதுண்டு. ஆனா அவாவும் அப்பிடித்தான் கூப்பிடுறவ. அவரை மட்டுமில்ல அவரின்ர மூத்த மகளையும் நான் தங்கச்சியக்கா எண்டுதான் கூப்பிடுறனான். அப்பையாண்ணை வீட்டை வரேக்கையே எங்கையெங்கை செல் விழுந்தது எண்ட...தொடர்ந்து படிக்கவும் »

அப்பா......    
ஆக்கம்: கிருத்திகா | May 15, 2008, 4:59 am | மறுமொழிகள்

அப்பா என் ஞாபக அடுக்குகளில் என்றுமே படர்ந்திருக்கும் ஓர் இனிமயான உறவு। சூரியனின் கதிர்கள் யாருடைய உத்தரவும் இல்லாமல் நம் பூட்டியிருக்கும் புத்தக அறைக்குள் நுழைவதுபோல் இந்த மூன்றெழுத்து வார்த்தை என்னுள் எப்போதும் திறந்து விடும் பல ஞாபகக்கதவுகளை என் உணர்வுகளின் அனுமதியின்று.இரண்டும் பெண்களென்ற போது பெண்ணென்ற பேதமற்று என்னை எனக்கான எந்த ஒரு சுதந்திரத்திலும்...தொடர்ந்து படிக்கவும் »

தண்டவாளத்து வண்டவாளங்கள்…..    
ஆக்கம்: த.அகிலன் | May 14, 2008, 12:45 am | மறுமொழிகள்

“வண்டி வண்டி புகைவண்டி வாகாய் ஓடும் புகைவண்டி கண்டி காலி கொழும்பெல்லாம் காணப்போகும் புகைவண்டி. சுக்குப் பக்குக் சுக்குப் பக்சுக் கூகூகூகூகூகூகூகூகூ” புகைவண்டியாகத்தான் எனக்கு இரயில் பழக்கமானது. ஆனாலும் இந்தப்பாடலைக் கேட்பதற்கு முன்னாலேயே நான் இரயிலில் பயணித்திருப்பதாக அம்மா பின்னாட்களில் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு நினைவிருப்பது இந்தப்பாடலை...தொடர்ந்து படிக்கவும் »

கிழக்கு ப்ளஸ் - 7    
ஆக்கம்: para | May 13, 2008, 7:33 pm | மறுமொழிகள்

இருபத்தி ஐந்து ரூபாய். இதற்குமேல் இருபத்தி ஐந்து பைசா கூட விலை இருக்கக்கூடாது என்பதுதான் Prodigy தொடங்கியபோது நாங்கள் வகுத்துக்கொண்ட முதல் விதி. சிறுவர்களும் குழந்தைகளும் வாங்கிப்படிக்க வேண்டும். என்றால், அவர்கள் வாங்கக்கூடிய விலையில் இருக்கவேண்டும். அது முடியாதபட்சத்தில் செய்யாமலேயே இருக்கலாம். இரண்டாவது, சிறுவர்களும் குழந்தைகளும் விரும்பக்கூடிய தரத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

ஆஸ்பத்திரி ராணிகள்…..    
ஆக்கம்: த.அகிலன் | May 13, 2008, 1:24 am | மறுமொழிகள்

அந்த வேதனையிலும் எனக்குப் பொத்துக்கொண்டு சிரிப்பு வந்தது. பின்ன நாலு நளா கோல்ட் ஆக்ட்,சமஹன்,பனடோல்,ஆக்சன் 500 எண்டு முயற்சி செய்து செய்து தோத்துப்போய் ஆஸ்பத்திரிக்குப்போனா. போன உடனேயே ஒரு நர்சம்மா வாயில தெர்மா மீட்டரை செருகி உடைஞ்சா 100 ரூபாய் எண்டு சொன்னா சிரிப்பு வருமா வராதா? ஒரு வேளை நோயால் துவண்டு போயிருக்கும் நோயாளிகளை கொஞ்சம் சிரிப்பு மூட்டத்தான் அவா இந்த...தொடர்ந்து படிக்கவும் »

அத்தை மகனே !    
ஆக்கம்: சுரேகா.. | May 12, 2008, 10:00 pm | மறுமொழிகள்

          என் அத்தைமகனை நான் என் பாட்டி வீட்டுக்குப்போகும்போதுதான் பார்த்தேன். மிகவும் அழகாக படியப்படிய தலையை வாரிக்கொண்டு, என்னை குறுகுறுவென்று பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அப்போதுதான் என் பாட்டி , தாத்தா , பெற்றோர் எல்லோரும் சொன்னார்கள்! இவனோடுதான் உன்னை பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடப்போகிறேன் என்று! அதற்கு முன்னரே ஒரு கிராமத்தில் காரணமே இல்லாமல்,...தொடர்ந்து படிக்கவும் »

பா.கே.ப - திண்டுக்கல் பயணம்!    
ஆக்கம்: லக்கிலுக் | May 12, 2008, 12:03 am | மறுமொழிகள்

* ஏற்கனவே திண்டுக்கல்லுக்கு சிலமுறை சென்றிருந்தாலும், அவை அலுவலகரீதியான பயணமாக நண்பர்களுடனான உல்லாசப் பயணமாக இருந்தது. இதுவரை அரசு பேருந்தில் தனியாக இவ்வளவு தூரம் பயணம் செய்ததில்லை. அருகில் அமர்ந்திருந்த பயணிகள் உம்மணாம்மூஞ்சிகளாக அமைந்துவிட்டதால் தனிமை கொன்றது. 'திண்டுக்கல் சர்தார்' அண்ணன் உண்மைத்தமிழன் பத்துமணி நேர பேருந்துப் பயணம் என்று சொல்லியிருந்தார்....தொடர்ந்து படிக்கவும் »

கிழக்கு ப்ளஸ் - 6    
ஆக்கம்: para | May 11, 2008, 10:20 pm | மறுமொழிகள்

முதல் வருடம் ஐம்பது புத்தகங்கள். இரண்டாம் வருடம் இன்னொரு ஐம்பது. இடைப்பட்ட எழுநூறு தினங்களில் சுமார் ஐந்தாறு புத்தகக் கண்காட்சிகளுக்குச் சென்று வந்தோம். அனுபவம். நானும் பத்ரியும் பொதுவாக புத்தகக் கண்காட்சியில் அப்போதெல்லாம் உட்காருகிற வழக்கம் இல்லை. எங்கள் ஸ்டாலில் அநேகமாக இருக்கவே மாட்டோம். ஆளுக்கொரு திசை பிரித்துக்கொண்டு மற்றக் கடைகளில்தான்...தொடர்ந்து படிக்கவும் »

கிழக்கு ப்ளஸ் - 2    
ஆக்கம்: para | May 6, 2008, 10:56 pm | மறுமொழிகள்

பகுதி 1  குழந்தைகளுக்காக, சிறுவர்களுக்காக நாம் பிரத்தியேகப் பதிப்புகள் ஆரம்பிக்கவேண்டும். ஆடியோ புத்தகங்கள் செய்துபார்க்க வேண்டும். அனிமேஷன் சிடி உருவாக்கும் கலையை முயற்சி செய்யவேண்டும். தமிழில் மட்டுமல்லாமல் சாத்தியமுள்ள பிற அனைத்து மொழிகளுக்கும் பரவவேண்டும். ஆங்கிலத்திலும் புத்தகங்கள் வெளியிடவேண்டும். இவையெல்லாம் கிழக்கு ஆரம்பிப்பதற்கு முன்னால் - அதாவது 2003ம்...தொடர்ந்து படிக்கவும் »

சதாப்தி எக்ஸ்பிரஸ்    
ஆக்கம்: Narain | May 3, 2008, 4:06 am | மறுமொழிகள்

மூன்று நாட்கள் பெங்களூரு வாசம். 30-ஆம் தேதி காலையில் அரக்க பரக்க ஆட்டோ பிடித்து சென் ட்ரல் போனால், சரியாக 7 நிமிடங்கள் கழித்து தான் வண்டி ஊர ஆரம்பித்தது. இதனிடையில், தனியாக போனதால் மூன்று இருக்கைகள் மாற்றம் வேறு. சதாப்தியில் பயணிப்பது ஒரு தனி அனுபவம். முதலில் சாப்பாடு, தொடர்ச்சியாக காலை 6.15க்கு ஆரம்பித்து 9.00 மணி வரை எதாவது ஒன்று வந்து கொண்டே இருக்கும் [தண்ணீர்,...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு பயணம்… பயங்கள்… மேலும் சில பரவசங்கள்…    
ஆக்கம்: தமிழ்நதி | May 2, 2008, 12:06 am | மறுமொழிகள்

விமானம் உயரம் விழுங்கித் தரைதாழ்கிறது. பிரமாண்டப் பஞ்சுப்பொதிகள் ஐதானதில் குறுஞ்செடிகளாய் தெரியவாரம்பித்த தென்னைகளின் அழகிலும் வேறு ஏதோவோர் உணர்விலும் (அதை நீங்கள் பிறந்த பொன்னாடு இன்னபிறவற்றின் கலவை என உணரலாம்) மனம் இளகி பரவசம் பொங்க அதுவரை முகம்பார்க்காதிருந்த சகபயணியின் பக்கம் திரும்பி ‘அழகு’என்கிறேன். ‘பச்சை நிலம்’என அவரும் வழிமொழிகிறார். கொழும்பு...தொடர்ந்து படிக்கவும் »

எனது இந்திய பயணம் - சென்னை ஒரு பார்வை    
ஆக்கம்: கிரி | April 24, 2008, 11:28 am | மறுமொழிகள்

சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் காலை 4 மணிக்கு போக்குவரத்து நெரிசல், புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகே சாலை அமைக்கும் பணி நடந்ததால் மற்றும் பாதை மிக குறுகலாக இருந்ததாலும், குண்டும் குழியுமாக இருந்ததாலும் இந்த நெரிசல். நம்மை விடுங்கள் பழகி விட்டது, ஒரு வெளிநாட்டினர் வருகிறார் என்றால் அவருக்கு முதல் அனுபவமே இப்படி விமான நிலையத்திலேயே...தொடர்ந்து படிக்கவும் »

சென்னை விமான நிலையத்தில் திருடப்பட்ட என் பொருட்கள்    
ஆக்கம்: கிரி | April 21, 2008, 1:53 pm | மறுமொழிகள்

நான் இந்த முறை சிங்கப்பூர் ல் இருந்து இந்தியா செல்ல ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் முன்பதிவு செய்து இருந்தேன். பயணத்திற்காக விமான நிலையம் சென்ற போது வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. நான் வரிசையில் சென்று நின்ற போது என் அருகே வந்த ஒருவர் என் அனுமதி இல்லாமலேயே என் பெட்டிகளை ட்ராலியில் வைக்க உதவினார். நான் அவர் ஏர் இந்தியா ஊழியரோ என்று நினைத்து விட்டேன்,...தொடர்ந்து படிக்கவும் »

மத்திய கிழக்கிலிருந்து ஒரு கடிதம்...1    
ஆக்கம்: King... | April 21, 2008, 8:10 am | மறுமொழிகள்

கிட்டடியில என்ரை சினேகிதன் ஒருவன் சவுதியில இருந்து தொடர்ந்து கடிதம் அனுப்பியிருந்தான் நான் முதல் கடிதத்துக்கு பதில் போடுறதுக்கு முன்னமே அவன் மூன்று கடிதம் அனுப்பி விட்டான் அதனால கிட்டடியில என்று சொல்லியிருக்க கூடாதுதான் சில மாதங்களுக்கு முன்னர் என்று வைத்துக்கொள்வோம்...மூன்றும் கடிதம் என்று சொல்ல முடியாது முறையாக அதை தொகுக்கத் தெரிஞ்ச ஒரு ஆளுட்டை குடுத்தா அதில...தொடர்ந்து படிக்கவும் »

நடத்துனர் எச்சில் நமக்கில்லை    
ஆக்கம்: வடுவூர் குமார் | April 19, 2008, 9:44 pm | மறுமொழிகள்

1980 களில் சென்னை வந்த புதிதில் பல பஸ்களில் பயணம் செய்யும் போது நடத்துனர்களின் இந்த எச்சில் பழக்கம் வெகுவாகவே என்னை கஷ்டப்படுத்தும்.அந்த மாதிரி சமயங்களிலும் ஓரிரு பஸ்களில் உள்ள நடத்துனர்கள் கைவிரலில் ஒரு மோதிரம் போட்டுக்கொண்டு அதன் மேல் பகுதியில் சின்ன ஈர பஞ்ஜை வைத்துக்கொண்டு அதனை தொட்டுக்கொண்டு பயணச்சீட்டு கொடுப்பார். அப்போது அது ஒரு அருமையான கண்டுபிடிப்பாக...தொடர்ந்து படிக்கவும் »

கல்லூரி - II    
ஆக்கம்: தென்றல் | April 19, 2008, 7:37 am | மறுமொழிகள்

கல்லூரி - Iநண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த பஜ்ஜி, சொஜ்ஜி, சூடான காபிக்கு பின்..... கலந்துரையாடல் தொடர்ந்தது...கொஞ்சம் 'காரமாகவே' ...160 வருடம் பழமைவாய்ந்த ஒரு கல்லூரி......ஒரு காலத்தில் தொழில்ஙட்ப கல்லூரிகளில் மட்டுமே இருந்த MCA போன்ற வகுப்புகள் முதல்முறையாக கலைக்கல்லூரியில் ஆரம்பித்த பெருமை தூயவளனார் கல்லூரிக்கு உண்டு.எப்படி LIBA ஆரம்பித்த சில வருடங்களில் அதன் தரம் உயர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »

புத்தகங்களை விற்பது - 1    
ஆக்கம்: Badri | April 19, 2008, 3:31 am | மறுமொழிகள்

நியூ ஹொரைசன் மீடியா தொடங்கி நான்கு வருடங்கள் முடிந்து ஐந்தாவது வருடம் ஆரம்பித்துவிட்டது. முதலாம் ஆண்டில் நான் முழுவதுமாக இந்தத் தொழிலில் ஈடுபடவில்லை. அப்போது கிரிக்கின்ஃபோவில் வேலை செய்துவந்தேன். அதனால் மாலையிலும் வார இறுதியிலும் மட்டும் பதிப்பகத் தொழிலின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வேன்.இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் 17 ஏப்ரல் 2005-ல் முடிந்த...தொடர்ந்து படிக்கவும் »

காத்திருந்த காலம்    
ஆக்கம்: para | April 19, 2008, 1:59 am | மறுமொழிகள்

சமீபத்தில் சுமார் பத்து தினங்கள் அப்போலோ மருத்துவமனையின் EDU காத்திருப்போர் அறையில் வாழவேண்டி நேர்ந்தது. வீடு, அலுவலகம், எழுத்து, படிப்பு என்று வழக்கமான அனைத்துப் பணிகளும் அடியோடு பாதிக்கப்பட்டு இரண்டு காரியங்களை மட்டுமே செய்தேன். 1. காத்திருப்போர் அறையில் இருபத்தி நான்கு மணிநேரமும் ஓடிக்கொண்டிருக்கும் கேடிவியில் தினம் இரண்டு  அல்லது மூன்று திரைப்படங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

வெளிக்கிடடி விசுவமடுக்கு என்று ஒரு காலம்    
ஆக்கம்: சின்னக்குட்டி | April 18, 2008, 4:40 am | மறுமொழிகள்

இரவு இரவாய் கூத்து வயல் வெளியிலை கோயிலுக்கு முன்னால் மேடை அமைத்து நடக்கும்,, காத்தவராயன், சீறி வள்ளி அரிசந்திரா. அதுவும் விடிய விடிய மயான காண்டம் என்று எங்கட கே கே எஸ் வைரமுத்து பாடுவார் யாரடி கள்ளி என்று அந்த சுடலையிலை பாடுவாரே அந்த பாடடு படு பேமஸ். நம்ம சிவாஜி சாரும் அரிசந்திரா படம் நடிச்சவர். அவரே நம்ம வைரமுத்தின் திறமையை பாராட்டினாரென்று கேள்வி.காத்தவராயன் கூத்து...தொடர்ந்து படிக்கவும் »

சென்னை - புதிய முகம்    
ஆக்கம்: வடுவூர் குமார் | April 17, 2008, 8:47 pm | மறுமொழிகள்

நாளுக்கு நாள் சென்னையின் முகம் மாறிக்கொண்டு வருகிறது.நேற்று மின்வண்டி எடுக்கும் நேரத்தில் ஒரு ஓரத்தில் இந்த மாதிரி ஒன்றை நிறுத்திவைத்திருந்தார்கள்,என்ன ஏது என்று பார்க்கும் வரை அதன் பக்கம் மனித சஞ்சாரமே இல்லை.ஆதாவது வரிசை பிடித்து நிற்காமல் ஸ்மார்ட் கார்ட் கொண்டு பயணச்சீட்டு வாங்க வைத்துள்ளார்களாம்.அதிலும் ஏதோ குளருபடிகள் நிகழ்வதால் அந்த பக்கம் மக்கள் கூட்டமே...தொடர்ந்து படிக்கவும் »

புயல் அடிக்கும் போது    
ஆக்கம்: சின்னக்குட்டி | April 17, 2008, 12:02 pm | மறுமொழிகள்

இந்த டொரனடோ, கத்திரினா என்று உந்த அமெரிக்காவிலை பயங்காட்டுற சூறாவளியள் போலை. எங்கடை இலங்கை பக்கம் இருக்கிற வங்காள விரிகுடா பக்கம் தாழ்வு அமுக்கம் வந்து உது மாதிரி சேட்டையள் விட்டுட்டு போறது. உந்த சூறாவளி மையங்கொள்ளுற விளையாட்டாலை அநேகமாக பாதிக்க படுகிற பகுதியள் இலங்கையின்ரை மட்டக்களப்பு தமிழ் நாட்டின்ரை நாகபட்டினம், பங்களாதிசின்ரை சிட்டாங் போன்றவை...தொடர்ந்து படிக்கவும் »

பலான பலான    
ஆக்கம்: subbudu@kirukkal.com | April 17, 2008, 8:34 am | மறுமொழிகள்

இப்படி எங்காவது 'பலான' என்ற வார்த்தையை பார்த்தாலும்/கேட்டாலும், எதோ ஒரு கவர்ச்சி நடிகை எசகுபிசகாக உட்கார்ந்து கொண்டு கண்களில் ஏக்கத்தோடு உங்களைப் பார்த்து கண் அடிப்பது போல் தோன்றுகிறதென்றால் நீங்கள் பலான விஷயத்தில் பழுத்துப் போனவர். இந்த 'பலான' என்பது தமிழில் உள்ள ஒரு வினோதமான, பிரபலமான சொல். காரணம் எந்த அகராதியிலும் இல்லாத, ஆனால் வழக்கத்தில் மட்டும் இருக்கும் பல...தொடர்ந்து படிக்கவும் »

ரெட்டை ஜடை வயசு - II    
ஆக்கம்: ambi | April 17, 2008, 5:52 am | மறுமொழிகள்

Part-Iமேக்கப் என்னவோ திருவள்ளுவர் மாதிரி போட்டாச்சு. நான் நினைத்த அனிமேஷனை எப்படி கொண்டு வருவது? என ஒரே யோசனை. பரமார்த்த குரு தன் சிஷ்ய புள்ளைகளிடன் யோசனை கேட்பது மாதிரி என் விசுவாச மாணவர்களிடமே மேட்டரை விளக்கினேன். ஒரு ஊஞ்சலில் வள்ளுவரை உக்காத்தி திரைக்கு பின்னாடி இருந்து இயக்கலாம்!னு சொல்றான் ஒருத்தன், வள்ளுவரையே கயிறு கட்டி மேடைக்கு மேலிருந்து தூக்கலாம்னு சொல்றான்...தொடர்ந்து படிக்கவும் »

நான் மகேந்திர பல்லவனா ?    
ஆக்கம்: சந்திரமௌளீஸ்வரன் | April 16, 2008, 9:20 pm | மறுமொழிகள்

“மூணு நாள் லீவு சிதம்பரம், சீர்காழி கோவில் எல்லாம் பார்த்துட்டு வரலாமா?” நண்பர் எல் ஐ சி வெங்கட்ராமன் ஆரம்பித்து வைத்தது தான்.”வைத்தீஸ்வரன் கோவில் போய் நாடி ஜோஸ்யம் பார்ர்கலாம்” என் சகா தியாகராஜன் ஆர்வத்தை ஜாஸ்தியாக்கினான்.“அதென்னப்பா நாடி ஜோஸ்யம் அடிக்கடி போறியே கொஞ்சம் விவரமாத்தான் சொல்லேன்” என்று நான் கேட்டது தான் தாமதம்.”அதாவது உலகத்தில் பிறந்த, பிறக்கப் போற...தொடர்ந்து படிக்கவும் »

தேசம்    
ஆக்கம்: ஜெயமோகன் | April 16, 2008, 2:59 pm | மறுமொழிகள்

ஜெயமோகன் 1988ல் நான் வாரங்கல் ரயில்நிலையத்தை அடைந்தபோது எனக்கு வயது 26. இந்தியாவை தானும் கண்டடையத் துடித்து கிளம்பிய தனித்த பயணி. கடலில் சம்பிரதாயமாக குளித்தபிறகு என் பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கினேன். காளஹஸ்தியின் உடைந்த கோயில்களையும் திருப்பதியின் நெரிசலிடும் கூட்டத்தையும் கண்டபிறகு வடக்குநோக்கி செல்ல ரயில் பிடிக்கும்பொருட்டு வாரங்கல் வந்தேன்...தொடர்ந்து படிக்கவும் »

நேரடி அஞ்சல்    
ஆக்கம்: சின்னக்குட்டி | April 16, 2008, 10:59 am | மறுமொழிகள்

வால்ராஜா முனையிலிருந்து ஹரியானா மாநிலம் பெற்றெடுத்த சிங்கம் கபில்தேவ் பந்து வீசி கொண்டிருக்கிறார் அழகிய தமிழில் சென்னை வானொலியில் வர்ணணையாளர் மணியின் குரல் அழகிய தமிழில் கூவி கொண்டிருக்கார். உந்த கிரிக்கற் மச்சுக்கள் நடந்தால் காதோரம் வைத்து உந்த டிரான்சிஸ்ட் பெட்டிகளோடு மாரடிச்சு கொணடிருப்பன். விடிஞ்சால் பொழுதுவிட்டால் உதோடை கிடக்கிறாய் மோனை வேற வேலை...தொடர்ந்து படிக்கவும் »

அங்கிள்... அங்கிள்... அங்கிள்...!    
ஆக்கம்: இரா. வசந்த குமார். | April 16, 2008, 7:40 am | மறுமொழிகள்

"SIM Lockedனு வந்திருக்கு. ஏதோ நம்பர் கேட்டிருக்கு. இவன், என் தம்பி தான், ஏதோ நம்பர் ப்ரெஸ் பண்ணி இருக்கான். இப்படி லாக் ஆகிடுச்சு. இதை ஏதாவது பண்ணி சரி பண்ணித் தர முடியுமா, அங்கிள்...?"அங்கிள்... அங்கிள்... அங்கிள்...! சென்னையில் இருந்து நகர்ந்து எர்ணாகுளம் நெருங்கிக் கொண்டிருந்தது சென்னை மெயில். ரிசர்வ்டு கம்பார்ட்மெண்டில் முக்கால் பாகம் சபரிமலைக்குப் போகும் சாமிகளால் நிரம்பி...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு கொலை வழக்கு    
ஆக்கம்: சின்னக்குட்டி | April 15, 2008, 9:17 am | மறுமொழிகள்

அந்த காலம் எங்கட பெரிசுகள் கோகிலாம்பாள் கொலையை தான் பெரிசாய் கதைப்பினம். வேறொரு ஆணோடைய தொடர்புடைய பெண் தனது கணவனையே கொலை செய்து கிழங்கு பாத்திக்கு கீழே புதைத்ததிருந்ததாகவும் அதை நாய் கிண்டி தலையை வெளி கொண்டதால் அந்த கதை வெளி வந்ததாக கூறுவர். பெண்டுகளை எச்சிரிக்கிறதுக்காகவோ என்னவோ அந்த கதையை அடிக்கடி கூறுவர்..இந்த வழக்கை கன்னி வழக்காக எடுத்து...தொடர்ந்து படிக்கவும் »

இரு கடிதங்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | April 15, 2008, 7:31 am | மறுமொழிகள்

அன்புள்ள ஜெயமோகன் சாப்ளின் மற்றும் பஸ்டர் கீட்டன் பற்றிய குறிப்புகள் அருமையாக இருந்தன. ஓயாமல் உலக சினிமா பற்றி எழுதும் நம்முடைய சினிமா விமரிசகர்கள் யாராவது பஸ்டர் கீட்டன் பற்றி எழுதியிருக்கிறார்களா? செல்வம் அன்புள்ள செல்வம். எனக்குத்தெரிந்த வரை தமிழில் யாருமெ ழுதியதில்லை. இரு இணைப்புகளை நண்பர் ரகுநாதன் கனகராஜ் அனுப்பித்தந்தார். http://www.youtube.com/watch?v=3TMjTVeVHtk&feature=related ...தொடர்ந்து படிக்கவும் »

நேதாஜி மேர்ஸ்ஸீ ஹோம்    
ஆக்கம்: நிவேதிதா | April 15, 2008, 4:57 am | மறுமொழிகள்

பள்ளி, கல்லூரி நாட்களில் விஷேச தினங்களில் வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்தோ அல்லது தூங்கியோ பொழுதைக் கழிப்பதுண்டு. அப்போது எல்லாம் உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும் என்று தோன்றும். ஆனால் என்ன செய்வது, யாரிடம் கேட்பது என்று எதுவும் தெரியாது. வீட்டுக்குள்ளே ஒரு கிணற்றுத் தவளைப் போல வாழ்ந்துக் கொண்டிருந்த காலம் அது. வெளி உலகம் அவ்வளவாக பரிட்சியம் இல்லாத...தொடர்ந்து படிக்கவும் »

கோல்ட்ஸ்டோன் ஐஸ்கிரீம்    
ஆக்கம்: நானானி | April 14, 2008, 6:35 pm | மறுமொழிகள்

நாம ஜிகர்தண்டா பாத்தாச்சு, நன்னாரிபால் சுவைக்காமலேயே கேள்விப்பட்டாச்சு.இனி அமெரிக்காவில் மிகவும் பிரபலமான கோல்ட்ஸ்டோன் ஐஸ்கிரீம் பத்தி எனக்குத் தெரிந்ததைப்பார்ப்போமா?எந்த 'மால்'க்குள் நுழைந்தாலும் கட்டாயம் நம் கண்களில் தென்படுவது 'கோல்ட்ஸ்டோன்'ஐஸ்கிரீம் பார்லர்கள்.இங்கே ஐஸ்கிரீம் பார்லர்களில் விதவிதமான கலர்களிலும் ருசிகளிலும் ஐஸ்கிரீம்களும் அதற்கு...தொடர்ந்து படிக்கவும் »

மயிலாடுதுறை ஆசிரியை ஜெயசீதா    
ஆக்கம்: மயிலாடுதுறை சிவா | April 14, 2008, 2:11 pm | மறுமொழிகள்

வாசிங்டன். ஏப்ரல் 2008ஆசிரியர் தொழில் ஓரு புனிதமான தொழில். நாம் கடந்த வந்த பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் சில ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை நிச்சயம் நம்மால் என்றும் மறக்க முடியாது. அப்படி ஓரு மறக்க முடியாத மற்றோரு ஆசிரியர் ஜெயசீதா கணக்குப் பாடம் சொல்லி கொடுக்கும் தன்னலமற்ற ஓரு ஆசிரியர் இவர். மயிலாடுதுறையில் உள்ள தி.ப.ர.அர. தேசிய மேல்நிலைப் பள்ளியில் வேலைப் பார்க்கும்...தொடர்ந்து படிக்கவும் »

அந்த துவிச்சக்கர வண்டி    
ஆக்கம்: சின்னக்குட்டி | April 14, 2008, 11:19 am | மறுமொழிகள்

அந்த மனிசன் நெடுகவும் அரியண்டம் கொடுத்தபடி...அந்த சைக்கிளை எப்பன் நிழலாய் கொண்டு போய் விடு மோனை என்ற படி.... எந்த நேரமும் கரிச்சு கொட்டும். உந்த அப்பு.உதை. பெரிய பொக்கிசம் மாதிரி.உதை பெரிய பென்ஸ் கார் என்ற நினைப்பு அவருக்கு. தன்ரை கடைசி நேரம் என்னை பெத்து போட்டு உந்த ஓட்டை கறள் பிடிச்ச சைக்கிளையும் தந்து போய் வா என்று விடுது.உதை அப்பா என்று சொல்லவும் வெட்கமாக...தொடர்ந்து படிக்கவும் »

உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்ததுண்டா ?    
ஆக்கம்: கோவி.கண்ணன் | April 14, 2008, 8:33 am | மறுமொழிகள்

எந்த ஒருவருக்கும் உலகத்திலேயே மிகவும் பிடித்தது அவரது முகம் தான். ஒரு சில தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் தவிர்த்து தானாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளாத முகம் என்ற புரிந்துணர்வு இருப்பதாலும், நமக்கு கிடைத்தது இது என்ற மனநிறைவு இருப்பதாலும் தத்தமது முகத்தை, தோற்றத்தை நேசிக்காதவர் மிகக் குறைவே.ஒரு மனிதர் கோபப்படும் போது முகத்தில் இருக்கும் 46 தசைகளில் அதன் தூண்டல்...தொடர்ந்து படிக்கவும் »

"காக்கா பூன் வித்தை காட்டறியா"?    
ஆக்கம்: முத்துக்கண்ணு | April 14, 2008, 6:58 am | மறுமொழிகள்

"காக்கா பூன் வித்தை காட்டறியா"? வெகு காலத்திற்கு முன் அம்மா பேச்சில் வெளிப்படும் எடுத்துக் காட்டுகளில் ஒன்றாக, வீட்டிற்குள் விளையாடிய சொற்றொடர்கள். தற்போது முதுமையின் போட்டியில், பயன்பாடு குறைந்த சொல்லாடல்கள்."மரமூஞ்சி,சிங்கிளி,போக்கத்தவன்,", "ஒரு ரூபா குடுத்துட்டு ஓயாம அடிப்பான்", வேலைக்காரன் திறமையை வெயிலில் பாரு" போன்ற எண்ணற்ற எடுத்துக் காட்டுகள் மற்றும் மரபுச்...தொடர்ந்து படிக்கவும் »

பொய்யைக் கண்டறிய சில வழிகள் !    
ஆக்கம்: சேவியர் | April 14, 2008, 1:36 am | மறுமொழிகள்

( தமிழ் ஓசை - களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை) பொய் பேசுபவர்களோடு பழகவும், இணைந்து பணியாற்றவும், வாழவும் வேண்டிய சூழல் எல்லோருக்குமே நேரிடுகிறது. பொய் பேசுபவர்களிடம் அகப்பட்டு பணத்தையும், பொருளையும், நிம்மதியையும் இழந்து திரியும் மக்களைக் குறித்த செய்திகள் நாளேடுகளில் தினமும் இடம் பெறுகின்றன. பொய் மெய்யுடன் கலந்து மெய்யும் பொய்யும் செம்புலப் பெயல் நீர் போல இன்று...தொடர்ந்து படிக்கவும் »

மோக்ளி - Dramatic Life.    
ஆக்கம்: இரா. வசந்த குமார். | April 13, 2008, 2:25 pm | மறுமொழிகள்

ஆரம்ப காலத்தில் ஒரு டேப் ரிக்கார்டர் வீட்டில் இருந்து வந்தது. அதில் தான் 'உயிரே உனக்காக' மற்றும் 'நானும் ஒரு தொழிலாளி' என்ற காம்பினேஷன் கேஸட் (TDK) கேட்ட நினைவு இருக்கிறது. ஒரு முரை அதில் ஏதோ ரிப்பேர் ஆகி விட , அதைச் சரி செய்யக் கொடுத்த கடையில் ஸ்வாஹா செய்து விட்டு கொஞ்சம் பைசா கொடுத்தார்கள்.அத்தோடு பாடல்கள் கேட்கும் பழக்கம் வானொலி (His Master's Voice) மூலம் மட்டுமே நிறைவேற்றப்பட்டது....தொடர்ந்து படிக்கவும் »