மாற்று! » பதிவர்கள்

veenaapponavan

பேசாதே, போ    
February 3, 2010, 12:04 pm | தலைப்புப் பக்கம்

‘பேசணும் போல இருக்கு’ என்றுஉன் முதல் செய்தி வந்தது.அழைப்பதற்குள் அடுத்த செய்தி வந்தது,‘ஆனால் கூப்பிடாதே’ என்று.இரண்டு செய்திகளுக்கும் இடையிலானஉன் தயக்கம்சற்றே தாமதமாக வந்தடைந்ததுஎன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மூக்கில்    
September 4, 2009, 1:52 am | தலைப்புப் பக்கம்

சினிமாப் பத்திரிகையில் இருந்தநடிகைகளின் மூக்கின் மேல்வட்டப் பொட்டுவரைந்து கொண்டிருந்தசிறுமியைமூக்கில் மச்சம் கொண்டஅவள் அம்மா வந்துஅதட்டிக் கூட்டிப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பாபு இறந்து விட்டார்    
July 24, 2009, 12:51 am | தலைப்புப் பக்கம்

இரவு 9 மணி அளவில்மின்வண்டி பல்லாவரத்தை நெருங்கும்போதுஎன் சக பயணிக்கு அலைபேசியில் தகவல் வந்தது.பாபு எறந்துட்டாரு என்று.அவருடன் கூட வந்தவர் மெதுவாகத் தலையை ஆட்டி அந்தத் தகவலை ஏற்றுக் கொண்டார்.அவர் மனைவி சேலைத் தலைப்பால்தன வாயை மூடிக் கொண்டார்.அவர்களின் பயணத் திட்டம் மாற்றப்பட்டுஅப்படியே அரசு மருத்துவமனைக்குப் போகமுடிவானது.கையெழுத்து கிய்யெழுத்து போட்டு பாடியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

விளம்பர இடைவேளைக்கு நடுவே    
May 29, 2009, 7:56 am | தலைப்புப் பக்கம்

பித்துப் பிடித்த மனநிலையின்உச்சத்தில் பிறந்தகவிதைகளின் தொகுப்பு எனகவிஞன் சொல்லி இருந்தான்தன் முன்னுரையில்.இடம், தேதி குறிப்பிட்டுமுடித்திருந்தஅந்த முன்னுரைக்குக் கீழேகவிதைகள் வெளியானஇதழ்களின் பெயர்களும்,புத்தகத் தயாரிப்பில்உறுதுணையாக இருந்தநண்பர்களின் பெயர்களும்பட்டியலிடப்பட்டு இருந்தன.ஒழுங்கு கலைந்த மனத்தின்பேச்சாக விரிந்தகவிதைகளுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தேடப்படும் தீவிரவாதி    
May 11, 2009, 10:13 am | தலைப்புப் பக்கம்

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தின்மெட்டல் டிடெக்டர் வாயிலுக்குள்வலது கால் வைத்து உள்ளே நுழைந்தேன்.நூற்றுக்கணக்கானவர்கள்கடந்து கொண்டிருந்த இடத்தில்என்னை மட்டும் சோதனைக்கு அழைத்தாள்போலீஸ்காரி.பையையும், பயணச்சீட்டையும்,அடையாள அட்டையையும் சோதித்துவிவரங்களைப் பதிவு செய்து கொண்டுவிடுவித்தாள் என்னை.அடுத்த வாரம் அதே மாதிரிரயில் நிலையத்துக்குள் நுழைந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

என்னிடம் பெரிதாக    
May 2, 2009, 3:15 am | தலைப்புப் பக்கம்

'வாழ்க்கை எப்படிப் போகிறது' என்று கேட்டான்ரொம்ப நாள் கழித்து சாட்டில் வந்த நண்பன்.முன் தினம் சரவணபவனில்பெரிய தோசை வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கிசாப்பிட முடியாமல் முழித்துக் கொண்டிருந்த சிறுமியைப் பற்றி சொன்னேன்.'அப்புறம் பார்க்கலாம்' என்றுமறைந்து போனான்.என்னிடம் பெரிதாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அம்மாச்சி    
April 23, 2009, 4:29 am | தலைப்புப் பக்கம்

படுத்த படுக்கையான அம்மாச்சிஓயாமல் பேசிக்கொண்டே இருந்தாள்.தன் கல்யாணம் எப்படி நடந்தது என்பதைத் திரும்பத் திரும்பமூன்று நாட்களுக்கு சொன்னவள் நான்காம் நாள் தன் பேத்தியை அழைத்துபக்கத்தில் உட்கார வைத்துபின் கழுத்தில் குங்குமம் வைத்துக் கொள்வதைப் பற்றிஎடுத்து உரைத்தாள்.கவிதை எழுதும் பழக்கமுள்ள பேத்திஇப்போதும் சிலசமயம்சிமிழில் இருந்துவிரலால் தொட்டுகுங்குமத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இணைப்புகள்    
April 9, 2009, 3:03 pm | தலைப்புப் பக்கம்

இணைப்புகள் எல்லாம் உபயோகத்தில் உள்ளதாகஅறிவித்தவளின் குரல்மிகவும் மெல்லிசாய்க்கேட்டது.ஒருவேளை துணி மடித்து வைத்தவாறேபேசுகிறாளோ என்னவோ;நான் அழைத்த எண்ணில்இருப்பவளைப் போலவே....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஏப்ரல் ஒன்று    
April 3, 2009, 1:14 am | தலைப்புப் பக்கம்

முட்டாள்கள் தினத்தன்று காலைதயங்காமல் உன்னிடம் என் காதலைச் சொன்னேன்.'நானே சொல்லலாம் என்றிருந்தேன்' என்றாய்.'இன்று ஏப்ரல் ஒன்று' என்ற வாக்கியம்என் காதல் பேச்சுக்குப் பின்னால்கத்தியைப் போல்மறைத்து வைக்கப்பட்டிருந்தது.'எனக்கும் தெரியும் இன்று ஏப்ரல் ஒன்று' என்றவாக்கியத்தின் பின்னால் மறைந்து கொண்டுநீயும் காதல் பேசினாய்.இந்த உரையாடலின் ஒரு பகுதிஎன்றாவது நம் கனவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மழை நிலா    
March 29, 2009, 1:15 am | தலைப்புப் பக்கம்

மழையில் நிலா பார்த்தஇரவில்நிலவில்மழை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தனிமையின் விளிம்பு    
March 27, 2009, 1:53 am | தலைப்புப் பக்கம்

கிண்ணத்தில் அளந்துதட்டில் கவிழ்க்கப்பட்டஅளவுச் சாப்பாட்டின்வட்ட விளிம்பில்பிரதிபலிக்கிறதுஎன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

உன் வார்த்தை    
February 28, 2009, 1:29 am | தலைப்புப் பக்கம்

கையில் பிடித்த மீன் போலதுள்ளுகிறது உன் வார்த்தை.சில சமயம்கை நழுவிகடலில் கலந்து விடுகிறது.சில சமயம்என் கூடையில் சேர்ந்துசெத்துப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தயங்கி தயங்கி    
February 28, 2009, 1:26 am | தலைப்புப் பக்கம்

அம்மாவின் கை பிடித்துமெதுவாகப் படி இறங்குகிறதுகுழந்தை.சீராகப் போய்க் கொண்டிருந்தகாலம்சற்று தயங்கித்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நாய் பொம்மை    
December 20, 2008, 12:29 pm | தலைப்புப் பக்கம்

1வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தநாய் பொம்மைகளில்குழந்தை விளையாடி விட்டுவைத்துச் சென்ற பொம்மையின் முகத்தில் மட்டும்கூடுதல் சிரிப்பு. 2தன் பெயரின் முதல் எழுத்தைகழுத்தில் மாட்டிய பொம்மையை எடுத்து வைத்துக் கொண்டுதன் காதலன் பெயருக்கான பொம்மையை ஆவலுடன் தேடுகிறாள் காதலி.3பொம்மை வாங்க இயலாத ஒருவன்தன் குழந்தைக்குச் சொல்ல ஒருநாய்க் கதையை உருவாக்கிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வீட்டின் வரைபடம்    
November 23, 2008, 3:23 am | தலைப்புப் பக்கம்

எழுந்திருக்கும் போது சில சமயம்எதிர்பார்க்காத இடங்களில் சுவர்களும், கதவுகளும்,அறைகளும் தோன்றி மறைகின்றன.எந்த இடத்தில் தூங்கினால் குழப்பம் குறையும் என்று கண்டுபிடிக்க முடிவு செய்தேன்.சொந்த ஊரில் நான் பிறந்து வளர்ந்த வீட்டின் வரைபடத்தை வைத்து அதன் மேல் இப்போது தனியாக தங்கி இருக்கும் வீட்டின் வரைபடத்தை வைத்து வெட்டுப் புள்ளிகளை குறித்துக் கொண்டேன்.இரண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஓரிரு    
November 23, 2008, 12:52 am | தலைப்புப் பக்கம்

சனிக்கிழமை காலை உணவுவாங்கப் போனபோதுநான்கு விரல்களைக் காட்டி தோசையையும் சுட்டிக் காட்டி சைகையிலேயே பார்சல் பண்ண சொல்லி எடுத்துக் கொண்டு வந்தேன். வார இறுதி நாட்களில் இவனிடம் மட்டும்தானே பேசுவோம் என்ற சந்தேகம் எழுந்தது.ஓரிரு நிமிடங்களில் அதை சரிபார்த்துக் கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பிரிவைக் குறித்து    
November 22, 2008, 7:35 pm | தலைப்புப் பக்கம்

கதவு பிரிவைக் குறிக்கிறது குழந்தைக்கு. கதவு அருகே போனாலே அழ ஆரம்பித்து விடுகிறது. அதனால் தினமும் சுவர் வழியாக வெளியேறி அலுவலகம் போய் வருகிறான்புது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சற்றே    
November 22, 2008, 12:39 pm | தலைப்புப் பக்கம்

மஞ்சள் விளக்கு சிகப்பாவதற்கு முன் பிணம் சாலையைக் கடந்து விட்டது.பின்னால் வந்தவர்கள் தயங்கிய நொடியில் குறுக்கே வண்டிகள் ஓட ஆரம்பித்து விட்டன. மீண்டும் பச்சை வரும்வரை சவ ஊர்வலத்தின் சோகம் சற்றே குறைந்தது போல தோன்றியது பஸ்ஸின் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தவனுக்கு....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இடி    
November 22, 2008, 11:21 am | தலைப்புப் பக்கம்

சரிதா எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு வந்து கொண்டிருந்தன அந்த வட்டாரத்தில் இடி விழுந்து பழுதான டிவிக்கள்.கடை முன்னால் கூட்டமாக நின்று மரணவீடு போல மெதுவாக விசாரித்துக் கொண்டிருந்தார்கள். மழை மறுபடியும் ஆரம்பித்தது.கடைக்காரன் இரவு விடிய விடிய கடையை மூடாமல் ஈயத்தை உருக்கி மின் இணைப்புகளை சரி செய்து கொண்டிருந்தான்.விடியும் நேரம் ஒரு இடி இடிக்க ஆரம்பித்தது.ஒரு துளி ஈயத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

உள்ளே வெளியே    
November 8, 2008, 11:40 am | தலைப்புப் பக்கம்

குளிர்பதன வோல்வோ பஸ்ஸில் இருந்துவெளியேற முடியாமல்கண்ணாடிகளில் முட்டி முட்டிதடுமாறிக் கொண்டிருக்கிறதுபட்டாம்பூச்சி.சிக்னலில் பஸ் நின்றபோதுதிறக்க முடியாத ஜன்னலில்செய்தித்தாள் வாங்கச சொல்லி கண்ணாடியை தட்டுகிறான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

குழல் 1    
October 28, 2008, 4:49 am | தலைப்புப் பக்கம்

ஓடும் ரயிலில்அடம் பிடித்து வாங்கிய குழலில்அதை விற்றவன் வாசித்த பாடலைசலிக்காமல் தேடிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பச்சைப் புன்னகை    
October 11, 2008, 4:25 am | தலைப்புப் பக்கம்

புறநகர் ரயில்வே ஸ்டேஷனில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவள்ரயிலுக்குப் பச்சை சிக்னல் காட்டமிகவும் தயங்குகிறாள்.எல்லோரும் ஏறி இறங்கியதைஉறுதிப்படுத்திக் கொண்டபின்னரேரயிலை எடுக்க அனுமதிக்கிறாள்.ஒரு வாரமாக அந்த ஸ்டேஷனில் ரயில்ஒரு நிமிடம் தாமதித்தே செல்கிறது.சில பயணிகள்அவளைப் பார்த்துப் புன்னகைக்கின்றனர்.அவள் தன் வேலையில் கவனமாக இருக்கிறாள்.வண்டியை எடுக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

ப்ரிஸில்லாவை அணைத்தல்    
June 1, 2008, 7:24 am | தலைப்புப் பக்கம்

காசு கொடுத்த போதுபெயர் கேட்கத் தோன்றவில்லை.அணைத்துக் கொள்ளும் போதுபெயர் அவசியமாக இருந்தது.ஒரு கணம் யோசித்து ப்ரிஸில்லா என்றாள்.அவளை அணைத்து முடிக்கஅந்தப் பெயரின் நீளம் போதவில்லை.ப்ரிஸில்லா ப்ரிஸில்லாவாக மாற்றி மாற்றி வைத்துஅணைத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கிளிக் கதை    
June 1, 2008, 7:18 am | தலைப்புப் பக்கம்

ஞாயிற்றுக் கிழமை காலைக்காட்சிகூட்டம் குறைவாக இருந்தமலையாளப் படத்துக்குதன் கிளியுடன் வந்திருந்தான்பஸ் ஸ்டாண்ட் கிளி ஜோசியக்காரன்.அவ்வபோது கிளியின் குரல்கேட்டுக் கொண்டிருந்தது தியேட்டரில்.படம் முடிந்து போகும்போதுகூண்டுக்குள் சிதறிக் கிடந்தபாப்கார்னை பார்த்துக் கொண்டுசோர்வாக உட்கார்ந்திருந்தது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பூ பறித்தல்    
June 1, 2008, 12:45 am | தலைப்புப் பக்கம்

வழியில் அழுது அடம் பிடிக்கும்குழந்தையை மிரட்டஇருப்பதிலேயே சின்ன கிளையைசாலையோர மரத்தில் தேடுகிறாள் அம்மா.அழுகையை நிறுத்திய குழந்தைஅதே மரத்தின்பூ வேண்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

யார் வேணும்    
June 1, 2008, 12:14 am | தலைப்புப் பக்கம்

காலியாக இருந்தமதுரை மீனாட்சி கோயில் உள்ளேதயக்கமாக நுழைந்தேன்."யார் வேணும்?" என்றவயதான பெண் குரல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வட்டம் வட்டமாய்    
February 16, 2008, 1:07 am | தலைப்புப் பக்கம்

அதிகாலை வந்திறங்கிபனிக் குல்லாயைக் கழற்றி விட்டுதிறந்த வாய் மூடாமல்சென்ட்ரல் ஸ்டேஷனைப்பார்த்தது கைக்குழந்தைவாழ்க்கையில் முதல் முறையாய்.உயரமான கூரையை அண்ணாந்துபார்த்துக் கொண்டிருந்த போது'நல்லா இருக்கா..இதான் சென்ட்ரல் ஸ்டேஷன்' என்றுஅம்மாவின் குரல் காதருகேமெதுவாய்க் கேட்டது.திரும்பி அம்மாவைப் பார்த்து சிரித்தது.அப்படியே நான்காவது நடைமேடையில் இருந்தஎடை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் கவிதை

முகம் திருத்துதல்    
December 12, 2007, 5:03 am | தலைப்புப் பக்கம்

மேல் பெர்த்தில் இருந்துஇறக்கி விட்டதற்காகஅம்மாவிடம் கோபித்துக் கொண்டுமுகத்தைத் திருப்பிப் படுத்துக் கொண்டவள்ஐந்து நிமிஷத்தில் அப்படியேதூங்கியும் விட்டாள்.கோபமாகத் தூங்குகிற மகளைகொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தஅவள் அம்மா அப்புறம்போர்வையை ஒழுங்கு செய்வது போல்மகளின் முகத்தை சரி செய்து விட்டாள்.தூக்கம் கலையாமல்பட்டுப் பாவாடையை கழற்றி விட்டுபழைய கவுனை அணிவிப்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அழுகுரல் ஊஞ்சல்    
December 12, 2007, 5:00 am | தலைப்புப் பக்கம்

அழும் குழந்தையைதூக்கி வைத்துக் கொண்டுமுன்னும் பின்னும்நடந்து கொண்டிருந்தனர்ஓடும் ரயிலில்.மேல் பெர்த்தில்அழுகுரல் ஊஞ்சலில்ஆடிக்கொண்டேதூங்க ஆரம்பித்தேன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஒரு இரவுக்கான கூடு    
December 12, 2007, 4:17 am | தலைப்புப் பக்கம்

பிள்ளைகளுடன் மேல் பெர்த்துக்குப்போன அம்மாசாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரித்துஊட்டி விட ஆரம்பித்தாள்.அப்பா குருவி வெளியே போய்தண்ணீர் பாட்டில் வாங்கி வந்தது.ஒரு இரவுக்கான கூடுஉருவாகியிருந்ததுரயில் கிளம்புவதற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

முன்பல் விழுந்த ரயில் பெட்டி    
October 19, 2007, 6:38 am | தலைப்புப் பக்கம்

அத்தனை சிறிய சிறுமிக்கும்தனி இருக்கை பதிவு செய்திருந்தார்கள்ரயில் பெட்டியில்.அவள் அங்கு உட்காராமல்பெட்டி முழுவதும்பறந்து திரிந்து கொண்டிருந்தாள்.எல்லா இருக்கைகளும் நிரம்பிஅவள் இடம் மட்டும்காலியாக இருந்ததுபயணம் முழுவதும்.அந்தப் பெட்டியேமுன்பல் விழுந்தஅவளது சிரிப்பைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை குழந்தைகள்

காற்று இறக்கும் கடவுள்    
October 19, 2007, 2:05 am | தலைப்புப் பக்கம்

புது வண்டிகளை ஆசீர்வதிக்கும்கடவுள் ஒருவர் தோன்றி இருக்கிறார்எங்கள் ஏரியாவில்.இரண்டு, மூன்று, நான்கு சக்கரவாகனங்களை வாங்கியவுடன்இவரிடம் அழைத்து வருகிறார்கள்.அவற்றின் மேல் நீர் தெளித்துசந்தனம், குங்குமம் தடவிஆசீர்வதித்து அனுப்புகிறார்.புறக்கணிக்கப்பட்ட பழைய கடவுளோகையில் ஆணியுடன்பக்கத்து சிக்னலில்சுற்றிக் கொண்டிருக்கிறார்,வண்டிகளில் இருந்து காற்று இறக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சுரங்கப்பாதை வாத்து    
October 19, 2007, 1:50 am | தலைப்புப் பக்கம்

சுரங்கப்பாதை பொம்மை வியாபாரிஇரண்டு வாத்துகளுக்குசாவி கொடுத்துதயாராக வைத்திருந்தான்.ரயில் விட்டுகூட்டம் இறங்கி வர ஆரம்பித்ததும்ஒன்றன்பின் ஒன்றாகவாத்துகளை விடுவித்தான்.முதல் வாத்து ஓடிப் போய்ஒரு சிறுமியின் காலை முட்டியது.பிரியப்பட்டு அவள் அதை வாங்கிக் கொண்டாள்.பின்னால் போன வாத்துசாவி தளர்ந்துதனியாய்த் திரும்பி வந்தது.சிறுமி வாங்கிப் போன வாத்துஅவள் வீடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பாரதிபுரம் அமர்ந்தவள்    
October 15, 2007, 4:56 am | தலைப்புப் பக்கம்

நெமிலிச்சேரி மெயின்ரோடு, பாரதிபுரம்அருள்மிகு ஸ்றீ முத்துமாரியம்மன் ஆலய18-ஆம் ஆண்டு ஆடி மாத திருவிழாஅழைப்பிதழில் இருந்த செய்யுளில்'முத்துமாரி, முப்பெருந்தேவி,சங்கரி, பராசக்தி' என்ற பெயர்களுடன்'பாரதிபுரம் அமர்ந்தவள்' என்றபுதுப் பெயரும் இருந்தது.நெமிலிச்சேரி மெயின் ரோட்டில் நடந்த யுத்தத்தில்அசுரர்களை அழித்து விட்டுசினம் தணிய பாரதிபுரத்தில்அமர்ந்து விட்டாளோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மிச்சமிருந்த கனவு    
September 25, 2007, 5:37 am | தலைப்புப் பக்கம்

விடிகாலையில் எழுந்துவிளக்கைப் போட்டதும்கரப்பான்பூச்சி போலஓடி மறைந்ததுமிச்சமிருந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நான்தான் மின்விளக்கு    
September 17, 2007, 6:19 am | தலைப்புப் பக்கம்

"நான்தான் மின் விளக்கு" என்றுஅறிவித்தாள் சிறுமிமாறுவேடச் சுற்றில்.தொப்பி அணிந்து அதன் மேல்ஒரு பல்பு பொருத்தி இருந்தாள்.மேலும் அவள் சொன்னாள்:என்னை 1869-ஆம் ஆண்டுஅக்டோபர் மாதம் 9-ஆம் தேதிதாமஸ் ஆல்வா எடிசன்கண்டு பிடித்தார்.அன்று முதல் நான் இந்தஉலகத்துக்கு ஒளி அளித்து வருகிறேன்.என்னை ஈரக் கையால் தொடக் கூடாதுஎன்ற எச்சரிக்கையுடன் முடித்தாள்."அது சரி. இந்த பல்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ரயில் பெண்    
September 3, 2007, 9:58 am | தலைப்புப் பக்கம்

பெட்டிகள் இன்றி தனியாகப் போன எஞ்சினைப்பார்த்து 'குட்டி ட்ரெயின்' என்று கூவுகிறாய்.ஸ்டேஷன் குழாயில் தண்ணீர் பிடித்துநடை மேடை மேல் மெதுவாக நடந்து போய்பூச் செடிகளுக்கு ஊற்றுவதைப் போல்தண்டவாளத்துக்கு தண்ணீர் ஊற்றுகிறாய்.அதை அப்படியே வீடு வரை வளர்த்து விட்டுகுட்டி ட்ரெயினைப் பிடித்து வீட்டுக்குக்கிளம்பி விடுவாயோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நீர் தெளித்து விளையாடுதல்    
August 20, 2007, 10:13 am | தலைப்புப் பக்கம்

முன்பின் பழக்கம் இல்லாதபயண வழி உணவு விடுதியில்சாப்பிட்டு விட்டுகை கழுவப் போனேன்.சாதாரண உயரத்தில்இரண்டு வாஷ்பேசின்-களும்மிகக் குறைந்த உயரத்தில்ஒரு வாஷ்பேசினும் இருந்தன.கை கழுவும் போதுகாரணம் தெரிந்து விட்டது.குள்ள வாஷ்பேசின் முன்இல்லாத குழந்தையின் மேல்செல்லமாக தண்ணீர் தெளித்துவிளையாடி விட்டுவிரைவாக வெளியே வந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மரமுதிர் காலம்    
July 25, 2007, 4:41 am | தலைப்புப் பக்கம்

அதிகாலை நடை பழகும் போதுஇரவு பெய்த மழையில்விழுந்து கிடந்தபெருமரத்தைப் பார்த்தேன்.வழியில் உள்ள மரங்களை எல்லாம்உற்றுப் பார்த்துக் கொண்டேவீடு வந்து சேர்ந்தேன்.கொஞ்சமும் நம்பிக்கை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மாயாண்டி    
July 23, 2007, 5:11 am | தலைப்புப் பக்கம்

நம்பியாரின் காட்டு பங்களாவில்நாயகியையும் குழந்தைகளையும்கட்டிப் போட்டு விட்டுவயதான பெரியவரை மிரட்டிபொய்யாய் தயாரித்த உயிலில்கையெழுத்து வாங்கிஅங்கேயே அவரை சுட்டுத் தள்ளியகாட்சியைப் பார்த்தேன்.அந்த உயில் பத்திரத்தில்என்ன எழுதி இருந்தது என்றுதெரிந்து கொள்ள ஆசைப்பட்டுஎன் பயணத்தைத் தொடங்கினேன்.படிப்படியாக விசாரித்துவிறகுக்கடை வைத்திருக்கும்பழைய துணை நடிகரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

'ன்'னில் முடியும் பெயர்    
July 9, 2007, 5:55 am | தலைப்புப் பக்கம்

அழுக்காய்ப் போன படுக்கை விரிப்பைதிருப்பிப் போட்டுக் கொண்டேன்.படுக்கை விரிப்புக்குஇரண்டு பக்கம் இருப்பதுஎவ்வளவு வசதியாக இருக்கிறது.இரண்டு பக்கம் கொண்ட விரிப்பைகண்டுபிடித்தவன் பெயரைத் தேடினேன்.ரேடியோ, கலர் டிவி, விமானம் போன்றவைகளைக்கண்டுபிடித்தவர்களின் பெயர்கள் அடங்கியபுத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்து வந்தேன்.'படுக்கை விரிப்பு' பகுதியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இன்றே கடைசி    
July 2, 2007, 3:55 am | தலைப்புப் பக்கம்

இன்று நள்ளிரவு முதல்மாநிலத்தில் சாராய விற்பனைதடை செய்யப்படுகிறது.உலகத்தின் கடைசி நாள்10 ரூபாய்க்கு 3 பாக்கெட்டுகள்சாராயத்துடன் ஆரம்பித்தது.கொஞ்ச நேரத்திலேயேஒரு பாக்கெட் இரண்டு ரூபாயாகக் குறைந்தது.அப்புறம் ஒரு ரூபாய் ஆனது.குடிக்காதவர்களெல்லாம்குடிக்க ஆரம்பித்தார்கள்.நண்பகல் ஆகியும்சூரியன் வெளியே வராமல்பதுங்கிக் கிடந்தது.காசு கொடுத்தல், சில்லறை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தென்மேற்குப் பருவமழை    
June 23, 2007, 2:55 am | தலைப்புப் பக்கம்

தென்மேற்குப் பருவமழைதீவிரம் அடைந்ததைத் தொடர்ந்துகுற்றால அருவிகளில் எல்லாம்அபாய நிலையைத் தாண்டிவெள்ளம் பாய்ந்து கொண்டிருப்பதாகவும்அதனால் சுற்றுலா பயணிகள்அருவிகளில் குளிக்கத்தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும்டிவியில் சொன்னார்கள்.விடுமுறையைக் கழிக்க வந்த நேரத்தில்இப்படி ஆகிவிட்டது என்றுடிவிகாரர்களின் மைக்கில் சொன்னார்திருச்சியிலிருந்து குடும்பத்தோடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

0683 யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ்    
June 11, 2007, 4:12 am | தலைப்புப் பக்கம்

நடு இரவில் விழிப்பு வந்த போது கவனித்தேன்என் கம்பார்ட்மெண்ட் காலியாக இருப்பதை.நம்ப முடியாமல்முன்னும் பின்னும் நடந்து பார்த்தேன்.ஒருவர் கூட இல்லை.எல்லா விளக்கையும் போட்டு விட்டுபடபடப்புடன் உட்கார்ந்தேன்.விளக்கை அணைக்கச் சொல்லும்குரல் எதுவும் எழவில்லை.இரண்டு இருக்கைகளுக்கு நடுவில்உடற்பயிற்சி செய்தேன்.எல்லா இருக்கைகளிலும் உட்கார்ந்துபுத்தகம் படித்தேன்.வெளியே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

முத்த அறுவடை    
June 4, 2007, 3:52 am | தலைப்புப் பக்கம்

கல்யாண வீட்டில் அவள்நடந்து சென்ற பாதை எங்கும்முத்தம் பூத்தது.தன் சிகப்பு நிற குட்டிப் பாவாடையில்பிஞ்சு வெண்டைக்காய்களைப் போல்முத்தங்களை அள்ளிச் சென்றுஅம்மாவிடம் கொட்டினாள்.வேலையாய் இருந்த அவள் அம்மா'கல்யாண சமையலுக்கு இது போதாது'என்று சொல்லி மறுபடியும்விரட்டி விட்டாள் அவளை.மழை ஆரம்பித்தவுடன்மடித்து வைக்க நேரமில்லாமல்அப்படியே அள்ளிக் கொண்டு வரும்மொட்டை மாடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பெரும்பழம்    
February 20, 2007, 6:20 am | தலைப்புப் பக்கம்

ஒருத்தனுக்கு எதற்குஒரு முழு தர்பூசனிப் பழம்?யோசிக்காமல் வாங்கி வந்து விட்டேன்.புத்தகங்களும் தினசரிகளும்அடுக்கி வைத்திருக்கும்இருட்டு சமையல் அறையில்வைத்தேன் அந்தப் பழத்தை.வீட்டில் நடமாடும் போதெல்லாம்கண்ணில் பட்டு திகில் ஊட்டுகிறது.நிறைவேற்ற முடியாத சத்தியத்தைப் போலகனமாக இருக்கிறது,மிச்சத்தை என்ன செய்வது என்று தெரியாமல்அப்படியே வைத்திருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

5 ரூபாய் வசந்தம்    
October 22, 2006, 3:52 am | தலைப்புப் பக்கம்

மெல்லிய பச்சை நிறத்தில்புத்தம் புதிய 5 ரூபாய் நோட்டு ஒன்றுதுளிர்த்திருந்தது என் பர்ஸில்.சரசரவெனெ எல்லா கிளைகளிலும்தோன்றி விட்டன தளிர்கள்.முன்னொரு பருவத்தில்,அழுக்கான கிழிந்த 5 ரூபாய் நோட்டுக்கள்சருகுகளாய் உதிர்ந்து நிரம்பிய கடைகளுக்குள்வசந்தம் வந்து விட்டது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

என் பங்கு சூரியன்    
October 22, 2006, 3:44 am | தலைப்புப் பக்கம்

என் பங்கு சூரியனைநான் பல வழிகளில்செலவழித்து விட்டேன்.மாரியம்மன் கோயில் வாசல்பெட்டிக்கடையில் வாங்கியஃபிலிமை ஊடுருவிதரையில் படம் காட்டியதில் கொஞ்சம்.கலைடாஸ்கோப் வைத்து விளையாடியதில் கொஞ்சம்.லென்ஸினால் கதிர்களைக் குவித்துசருகுகளைப் பற்ற வைத்ததோடுஎன் பங்கு தீர்ந்து விட்டது.இப்போது என் நிழல் கீழே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

குட்டி    
October 9, 2006, 10:00 am | தலைப்புப் பக்கம்

குட்டி தலையணை, குட்டி போர்வை,குட்டி டம்ளர் மற்றும்குட்டி கொட்டாவியுடன்குழந்தைகள் உருவாக்குகிறார்கள்ஒரு குட்டி உலகத்தை.அதில் பெற்றோர்களின் பெரிய விரல்களுக்குகுட்டி கவளங்களை செய்யும்பயிற்சியைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் கவிதை

கிழமை மயக்கம்    
October 5, 2006, 3:43 am | தலைப்புப் பக்கம்

சனிக்கிழமை ஒளிபரப்பாகி வந்ததொலைக்காட்சித் தொடரைவெள்ளிக்கிழமைக்கு மாற்றி விட்டார்கள்.இதனால் சனிக்கிழமை போல்தோற்றம் கொண்டது வெள்ளிக்கிழமை.பெரிய அக்காவின் உடையைஅணிந்து கொண்டு விளையாடும்குட்டித் தங்கையை வேடிக்கை பார்ப்பது போலவெள்ளிக்கிழமையை வேடிக்கை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சாவியின் நுனியில் மின்னல்    
September 24, 2006, 2:13 am | தலைப்புப் பக்கம்

காலையில் அணைக்க மறந்த விளக்குகாத்துக் கொண்டிருந்தது.இருட்டில் வீடு திரும்பியவன்சாவியை உரசிய போதுசாவி துவாரம் வழியாகமின்னல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மனப்பாட மீன்குட்டி    
September 3, 2006, 2:08 am | தலைப்புப் பக்கம்

குறுகிய பால்கனியில்முன்னும் பின்னும் நடந்துபாடம் படிக்கிறாள் சிறுமி.அவள் உதடுகள்முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றனகண்ணாடித் தொட்டியின் மீன்குட்டியைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் கவிதை

அதிகாலை முகூர்த்தம்    
August 21, 2006, 3:46 am | தலைப்புப் பக்கம்

குளித்து, தலை வாரி,குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டுபிறந்த நாள் கொண்டாடி விட்டுவீடுகளுக்கு பேப்பர் போட கிளம்பினான் சின்னப்பையன்.திருமண அழைப்பிதழ் போல்வினியோகித்தான் அன்றைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சொந்தமாக விழுந்து உடைந்த கோப்பை    
August 19, 2006, 1:11 pm | தலைப்புப் பக்கம்

விளையாட்டில் வீட்டுப் பொருட்களைகாலம் காலமாகஉடைத்து வருகின்றனர் குழந்தைகள்.உடைந்த சத்ததுக்கும்ஓடி வந்து பெரியவர்கள் போடும் சத்தத்துக்கும்நடுவில் இருக்கும் மவுனத்தில்சிதறிய துண்டுகளில் இருந்துதப்பிக்கும் வாக்கியங்களைஇயற்றுகிறார்கள்.போன வாரம் கண்ணாடிக் கோப்பை ஒன்றைகை தவறி உடைத்த அதிமதுராஅவள் அம்மாவுக்கு 'சொந்தமா விழுந்து உடைஞ்சி போச்சு'என்ற வாக்கியத்தைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் கவிதை

ஒன்றாம் வகுப்பு F செக்ஷனுக்கு வந்த போலீஸ் நாய்    
August 19, 2006, 1:05 pm | தலைப்புப் பக்கம்

வெடிகுண்டு புரளியை அடுத்துஅந்த குழந்தைகள் பள்ளிக்குள்போலீஸ் நுழைந்தது.ஒன்றாம் வகுப்பு F செக்ஷனில்மோப்பநாய் சோதனை நடத்திய போதுஎடுத்த படம் மறுநாள் வெளியானது.அவசரமாக பெஞ்ச் மேல் ஏறிய சிறுமிகளில் ஒருத்திஒரு கையில் நோட்டுப்புத்தகம், பென்சில்இன்னொரு கையில் பள்ளிக்கூடப் பையுடன்குதூகலமாக நின்று கொண்டிருக்கிறாள்.அவள் எடுக்காமல் விட்ட ரப்பரையும்மூடாமல் விட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் கவிதை

ஈரம் போக    
August 17, 2006, 4:27 am | தலைப்புப் பக்கம்

கை, கால், முகத்தை எல்லாம்ஈரம் போக துடைத்துக் கொண்டேன்.இந்த நாக்கை என்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை