என் மதம், என் கடவுள் : ஜடாயு கடிதத்தை முன்வைத்து.
August 28, 2008, 3:33 am | தலைப்புப் பக்கம்
August 28, 2008, 3:33 am | தலைப்புப் பக்கம்
என்னுடைய வாழ்வார்கள் கட்டுரைக்கு எதிர்வினையாக நண்பர் ஜடாயு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அவரது அனுமதியுடன் அதனைக் கீழே பிரசுரிக்கிறேன். கடிதத்துக்கு என்னுடைய பதில், அதற்குக் கீழே.
அன்புள்ள பாரா,
கிருஷ்ண ஜயந்தி பற்றி ரொம்ப ரசமாக எழுதியிருக்கிறீர்கள். படிக்க நன்றாக இருக்கிறது.
கடைசியில் இப்படி சொல்கிறீர்கள்:
எனக்கு மாவா மாதிரி பெரியாழ்வாருக்கு கிருஷ்ணன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்
வலி உணரும் நேரம்
August 27, 2008, 6:05 pm | தலைப்புப் பக்கம்
August 27, 2008, 6:05 pm | தலைப்புப் பக்கம்
(இது ஒரு மீள்பதிவு - 7/10/2004 அன்று எழுதியது.)
நேற்று தற்செயலாக அடையாறு பக்கம் போகவேண்டி இருந்தது. மேம்பாலம் கடக்கும்போது கண்ணில்பட்ட சத்யா ஸ்டுடியோ, பல பழைய நினைவுகளைக் கிளறிவிட்டுப் பின்னால் போய் மறைந்தது.
எனக்கும் சத்யா ஸ்டுடியோவுக்குமான உறவு மொத்தம் ஒன்பது மாத காலம் ஆகும். அப்போதே அது பாதிதான் ஸ்டுடியோ. மீதி இடத்தை குடோன் ஆக்கிக்கொண்டிருந்தார்கள். பிறகு கொஞ்சநாள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை
ஒரு மாணவனின் புத்தகம்
August 8, 2008, 12:21 am | தலைப்புப் பக்கம்
August 8, 2008, 12:21 am | தலைப்புப் பக்கம்
* அகிராவுக்கு நான் அதிகமொன்றும் சொல்லித்தந்ததில்லை. அவன் என்னிடம் கற்றதெல்லாம் எப்படியெல்லாம் விதவிதமாகக் குடிக்கலாம் என்பதைத்தான். - யாமாசான்
* உதவி இயக்குநர்கள் பயில்வதற்காகத் தன் படத்தையே நாசமாக்கலாம் என்று அவர் நினைத்தார். அவரையொத்த சிறந்த ஆசிரியர்கள் கிடைப்பது அரிது. - அகிரா குரோசாவா.
கடந்த வார இறுதி தினங்களில் ஜப்பானிய [என்பது தவறு; உலக] திரைப்பட இயக்குநர்...தொடர்ந்து படிக்கவும் »
அலெக்சாண்டர் சோல்செனிட்ஸின் [11.12.1918 - 03.08.2008]
August 5, 2008, 2:15 am | தலைப்புப் பக்கம்
August 5, 2008, 2:15 am | தலைப்புப் பக்கம்
1970ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற [அன்றைய] சோவியத் எழுத்தாளர் அலெக்சாண்டர் சோல்செனிட்ஸின், நேற்று தமது 89வது வயதில் மாஸ்கோவில் காலமானார். மாரடைப்பு காரணம்.
சோவியத் இலக்கியத்தில் சோல்செனிட்ஸினின் படைப்புகளுக்குத் தனி அந்தஸ்து உண்டு. அவர் நோபல் பரிசெல்லாம் வாங்கி, எழுதி ஓய்ந்த பிற்பாடு இன்றைக்கு அவருடையதெல்லாம் அத்தனையொன்றும் உத்தமமான இலக்கியப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்
குசேலன்
August 1, 2008, 7:27 am | தலைப்புப் பக்கம்
August 1, 2008, 7:27 am | தலைப்புப் பக்கம்
இந்தப் படத்தில் ஒரே ஒரு ஷாட்டை நான் மிகவும் ரசித்தேன். சலூன் வைத்திருக்கும் ஹீரோவான பசுபதி, கட்டிங் - ஷேவிங்குக்கு அதிரடி விலைக்குறைப்பு செய்து ஒரு போர்ட் எழுதி வைப்பார்.
கடைசி வரியாக ‘கண்டிப்பாக அக்குள் ஷேவிங் கிடையாது’ என்றிருக்கும்.
துரதிருஷ்டவசமாக பி.வாசு இப்படம் முழுதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
பாதி வித்வான்
July 27, 2008, 10:06 pm | தலைப்புப் பக்கம்
July 27, 2008, 10:06 pm | தலைப்புப் பக்கம்
[முந்தைய கட்டுரையில் எனது கிரிக்கெட் - வீணை அனுபவங்கள் குறித்து எழுதிய கட்டுரைகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். சில நண்பர்கள் அந்தக் கட்டுரைகளை இங்கே தரக் கேட்டார்கள். வீணை வாசிப்பு அனுபவம் குறித்த கட்டுரையை இப்போது தருகிறேன். கிரிக்கெட் கட்டுரை நாளைக்கு. சிறு நினைவுத் தடுமாற்றத்தால் இரண்டு கட்டுரைகளும் குமுதத்தில் வெளிவந்தவை என்று சொல்லிவிட்டேன். கிரிக்கெட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை
நாலு ரன், ரெண்டு விக்கெட்
July 26, 2008, 8:20 pm | தலைப்புப் பக்கம்
July 26, 2008, 8:20 pm | தலைப்புப் பக்கம்
மிகப் பல வருடங்களுக்குப் பிறகு நேற்று மாலை மெரினா கடற்கரையில் அலுவலக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் சந்தர்ப்பம். இடது முழங்கை - வலது கால் முட்டியில் சிராய்ப்பு, இடது கணுக்கால் - வலது கால் முட்டிக்கு ஒன்றரை இஞ்ச்சுக்குக் கீழே சுளுக்கு என்று விழுப்புண்களுடனும், நான்கு ரன்கள் மற்றும் இரண்டு விக்கெட்டுகளுடனும் வெற்றிகரமாக வீடு திரும்பினேன்.
அலுப்பில் அப்போது...தொடர்ந்து படிக்கவும் »
சுப்ரமணியபுரம் - நிறைவேறிய கனவு!
July 24, 2008, 12:45 am | தலைப்புப் பக்கம்
July 24, 2008, 12:45 am | தலைப்புப் பக்கம்
[கிழக்கு பதிப்பகத்தின் சீனியர் துணையாசிரியர்களுள் ஒருவனும் என் நண்பனுமான ச.ந. கண்ணன், தன்னை நல்லவிதமாகவோ, கெட்டவிதமாகவோ பாதிக்கும் படங்களைக் குறித்துத் தனது நண்பர்கள் அனைவருக்கும் மின்னஞ்சலில் ஒரு கட்டுரை எழுதி அனுப்புவான். நேற்று சுப்பிரமணியபுரம் பார்த்துவிட்டு அவன் அனுப்பிய மடல் இது. கருத்தளவில் எனக்கும் இதில் உடன்பாடென்பதால் தனியே நான் ஒன்று எழுதவிருந்ததைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
சுப்ரமணியபுரம்
July 24, 2008, 12:03 am | தலைப்புப் பக்கம்
July 24, 2008, 12:03 am | தலைப்புப் பக்கம்
படுகொலை என்பதுதான் களம். அது தனி நபரா, சக மனிதர் ஒருவர் மீதொருவர் வைக்கும் நம்பிக்கையா என்பதல்ல முக்கியம். கொல், கொன்றுவிடு. தீர்ந்தது விஷயம்.
உலகிலேயே ஜனநாயகம் தழைப்பதற்காக, அதனையே கற்பழித்து அடித்துக்கொன்று புதைத்துக் கோயில் கட்டி ஆறு கால பூஜையும் செய்யும் ஒரே தேசம் நம்முடையது. நடந்து முடிந்த காங்கிரஸ் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புத் திருவிழா நிறைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்
இன்னும் கொஞ்சம் ரசிக்கலாம்
July 17, 2008, 3:59 am | தலைப்புப் பக்கம்
July 17, 2008, 3:59 am | தலைப்புப் பக்கம்
சமீபத்தில் நான் வியந்து ரசித்த இரண்டு கட்டுரைகள் இணையத்தில் எழுதப்பட்டவை. ஒன்று அருள் செல்வனுடையது. அடுத்தது ஆசாத் எழுதியது.
அருளின் நோக்கம் அறிவியல். அதை எளிமையாகப் புரியவைப்பது. அதற்கு ஒரு திரைப்பாடலை அவர் உதாரணத்துக்கு எடுத்துக்கொள்கிறார். அதன் மூலம் மெய்யியல் புரிதலுக்கு அஸ்திவாரமிடுகிறார்.
ஆசாத்துக்கு சினிமா ரசனை என்பது தவிர வேறு நோக்கங்கள் இல்லை.
இருவரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை
பல்லே பல்லே…
July 9, 2008, 3:56 am | தலைப்புப் பக்கம்
July 9, 2008, 3:56 am | தலைப்புப் பக்கம்
நாகராஜன் ருசித்துப் பார்த்து, அறிமுகப்படுத்திவைக்க, நேற்று செனடாஃப் சாலையில் உள்ள தாபா எக்ஸ்பிரஸில் மதிய உணவுக்காகச் சென்றேன். சந்தேகமில்லாமல் அடிமையாக்குகிறது. இன்றைக்கு மதியம் மீண்டும்.
பல வருடங்களுக்கு முன்னர், திரைப்பட விழாக்களுக்காகப் புது தில்லி செல்லும்போது சாலையோரத் தள்ளுவண்டி தாபாக்களில் சாப்பிட்டிருக்கிறேன். ஆகிருதியான சர்தார்ஜிக்கள் ஒரு வேள்வி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு
ஞான் அவிடெ…
June 22, 2008, 7:23 am | தலைப்புப் பக்கம்
June 22, 2008, 7:23 am | தலைப்புப் பக்கம்
ஐ.எஸ்.ஆர்.ஓ. நம்பி நாராயணன் விவகாரம் உச்சத்தில் இருந்தபோது சென்றதுதான் கடைசி. பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் திருவனந்தபுரத்துக்குத் திரும்பச் செல்கிறேன். அதே குறைந்தபட்ச டிராஃபிக். அதே அழகான சூழ்நிலை. அதைவிட அழகான பெண்கள். செடிகள் காற்றில் அசைந்தாடுவதுபோல் அனைத்துப் பெண்களின் கூந்தலும் காற்றில் அலைபாய்கிறது. யாரும் பின்னல் போடுவதில்லை.
இன்னும் உண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்
தசாவதாரம் குருவி-2
June 14, 2008, 12:38 am | தலைப்புப் பக்கம்
June 14, 2008, 12:38 am | தலைப்புப் பக்கம்
உங்களில் எத்தனை பேர் விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த குருவி படத்தைப் பார்த்திருப்பீர்கள் என்று தெரியாது. கமல்ஹாசனின் தசாவதாரம் தொடக்கம் முதலே எனக்கு ஏனோ குருவியை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது.
அதில் விஜய் சிங்கப்பூரிலிருந்து ஒரு வைரக்கல்லைத் தூக்கிக்கொண்டும் பிறகு துரத்திக்கொண்டும் இந்தியா வருகிறார். இதில் கமல் அமெரிக்காவிலிருந்து ஆந்திராக்ஸ் போன்ற ஏதோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
நடந்த கதை
June 3, 2008, 11:19 pm | தலைப்புப் பக்கம்
June 3, 2008, 11:19 pm | தலைப்புப் பக்கம்
நீண்டநாள் விருப்பம் ஒன்று இன்றைக்கு நிறைவேறியது.
சென்னை மெரினா கடற்கரையில் காலை நடைப்பயிற்சி செய்யவேண்டும் என்று எட்டு மாதங்களாக - எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நாள் தொடங்கி ஆசைப்பட்டேன். நான் வசிக்கும் பேட்டையிலிருந்து மெரினாவுக்கு வந்து சேரச் சாதாரணமாக ஒன்றே முக்கால் மணி நேரம் ஆகும். சாலை காலியாக இருந்தால் ஐம்பத்தைந்து நிமிஷம். எனவே இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
கிழக்கு ப்ளஸ் - 10
June 3, 2008, 12:44 am | தலைப்புப் பக்கம்
June 3, 2008, 12:44 am | தலைப்புப் பக்கம்
இந்தச் சிறு தொடரை எழுத ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை வந்துகொண்டிருக்கும் மின்னஞ்சல்கள்மூலம் கிழக்கின் வளர்ச்சியின்பால் வாசகர்களுக்கு உள்ள அக்கறையும் ஆர்வமும் தெரிகிறது. அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இப்போது பேசிய சில விஷயங்களை நான் முன்பே பேசியிருந்தால் பல மனக்கசப்புகளை - இணையத்தில் தவிர்த்திருக்கலாமே என்று சில நண்பர்கள் கேட்டார்கள்.
என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்
கிழக்கு ப்ளஸ் - 9
June 1, 2008, 11:42 pm | தலைப்புப் பக்கம்
June 1, 2008, 11:42 pm | தலைப்புப் பக்கம்
அந்தப் புத்தகக் கண்காட்சியை மறக்கமுடியாது. கிழக்கு ஆரம்பிப்பதற்கு முந்தைய வருட சென்னை புத்தகக் கண்காட்சி.
நானும் பத்ரியும் கூட்டத்தில் நீந்தியபடி ஒவ்வொரு கடையாக நகர்ந்துகொண்டே இருக்கிறோம். புத்தி முழுக்க விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் புதிய புத்தகங்களின் மீதுதான். என்னென்ன வகைகள், என்னென்ன விதங்கள், யார் யார் எழுத்தாளர்கள், லே அவுட் எப்படி, பேகேஜிங் எப்படி,...தொடர்ந்து படிக்கவும் »
நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2008
May 28, 2008, 2:20 am | தலைப்புப் பக்கம்
May 28, 2008, 2:20 am | தலைப்புப் பக்கம்
நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2008, எதிர்வரும் ஜூலை 5ம் தேதி தொடங்குகிறது. ஜூலை 14ம் தேதி வரை நெய்வேலி நகர புத்தகக் கண்காட்சி மைதானத்தில் நடைபெறுகிறது.
கண்காட்சியில் கிழக்கு பதிப்பகமும் [அரங்கு எண் 115, 116] Prodigyயும் [அரங்கு எண் 123, 124] தனித்தனி ஸ்டால்கள் அமைக்கின்றன. New Horizon Mediaவின் பிற அனைத்து பதிப்புகளும் இந்தக் கண்காட்சியில் இடம்பெறும்.
இக்கண்காட்சியை ஒட்டி நெய்வேலி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்
பூங்குலலி
May 25, 2008, 10:40 pm | தலைப்புப் பக்கம்
May 25, 2008, 10:40 pm | தலைப்புப் பக்கம்
திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் நான் அதிகம் கவனிப்பது அங்கே இசை நிகழ்ச்சிகள் நடத்துபவர்களை. சுகமான ராகம், இசைக்குயில், மெல்லிசை மேகங்கள், இளராகங்கள் என்கிற பெயரில் எட்டுக்கு நாலு அளவில் பேனர் கட்டி ஒரு டிரம் செட், ஒரு யாமஹா கீபோர்ட், ஒரு செட் தபேலா, ஒரு ஜால்ரா, ஒரு கிடார் மற்றும் இரண்டு மைக்குகளுடன் எப்போதும் செக், செக் செக் என்று உதட்டுக்குள் சொல்லிக்கொண்டிருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை
கிழக்கு ப்ளஸ் - 8
May 23, 2008, 5:16 pm | தலைப்புப் பக்கம்
May 23, 2008, 5:16 pm | தலைப்புப் பக்கம்
புத்தகம் என்று பேசத் தொடங்கும்போதே பத்து மொழிகள் என்று முடிவு செய்துவிட்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் NHM. என்றைக்கு முடியும், எப்படி முடியும் என்றெல்லாம் அதிகம் நாங்கள் கவலைப்படவில்லை. எப்படியும் முடியும் என்பதில் சந்தேகம் இருக்கவில்லை. புத்தகங்களைப் பொறுத்த அளவில், சரியான எடிட்டர்கள் அமையும்போது எந்த மொழிக்கும் செல்லமுடியும். என்னவேண்டுமானாலும் செய்யவும்...தொடர்ந்து படிக்கவும் »
கிழக்கு ப்ளஸ் - 7
May 13, 2008, 7:33 pm | தலைப்புப் பக்கம்
May 13, 2008, 7:33 pm | தலைப்புப் பக்கம்
இருபத்தி ஐந்து ரூபாய். இதற்குமேல் இருபத்தி ஐந்து பைசா கூட விலை இருக்கக்கூடாது என்பதுதான் Prodigy தொடங்கியபோது நாங்கள் வகுத்துக்கொண்ட முதல் விதி.
சிறுவர்களும் குழந்தைகளும் வாங்கிப்படிக்க வேண்டும். என்றால், அவர்கள் வாங்கக்கூடிய விலையில் இருக்கவேண்டும். அது முடியாதபட்சத்தில் செய்யாமலேயே இருக்கலாம்.
இரண்டாவது, சிறுவர்களும் குழந்தைகளும் விரும்பக்கூடிய தரத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
கிழக்கு ப்ளஸ் - 6
May 11, 2008, 10:20 pm | தலைப்புப் பக்கம்
May 11, 2008, 10:20 pm | தலைப்புப் பக்கம்
முதல் வருடம் ஐம்பது புத்தகங்கள். இரண்டாம் வருடம் இன்னொரு ஐம்பது. இடைப்பட்ட எழுநூறு தினங்களில் சுமார் ஐந்தாறு புத்தகக் கண்காட்சிகளுக்குச் சென்று வந்தோம். அனுபவம்.
நானும் பத்ரியும் பொதுவாக புத்தகக் கண்காட்சியில் அப்போதெல்லாம் உட்காருகிற வழக்கம் இல்லை. எங்கள் ஸ்டாலில் அநேகமாக இருக்கவே மாட்டோம். ஆளுக்கொரு திசை பிரித்துக்கொண்டு மற்றக் கடைகளில்தான்...தொடர்ந்து படிக்கவும் »
கிழக்கு ப்ளஸ் - 2
May 6, 2008, 10:56 pm | தலைப்புப் பக்கம்
May 6, 2008, 10:56 pm | தலைப்புப் பக்கம்
பகுதி 1
குழந்தைகளுக்காக, சிறுவர்களுக்காக நாம் பிரத்தியேகப் பதிப்புகள் ஆரம்பிக்கவேண்டும். ஆடியோ புத்தகங்கள் செய்துபார்க்க வேண்டும். அனிமேஷன் சிடி உருவாக்கும் கலையை முயற்சி செய்யவேண்டும். தமிழில் மட்டுமல்லாமல் சாத்தியமுள்ள பிற அனைத்து மொழிகளுக்கும் பரவவேண்டும். ஆங்கிலத்திலும் புத்தகங்கள் வெளியிடவேண்டும்.
இவையெல்லாம் கிழக்கு ஆரம்பிப்பதற்கு முன்னால் - அதாவது 2003ம்...தொடர்ந்து படிக்கவும் »
குருவி
May 3, 2008, 9:54 am | தலைப்புப் பக்கம்
May 3, 2008, 9:54 am | தலைப்புப் பக்கம்
காம்பவுண்டு சுவருக்கு மேலே ஏறி நின்று அண்டர்வேர் தெரிய லுங்கியை மடித்துக் கட்டிய தாடிக்காரன் ஒருவன் பால் பாக்கெட்டைப் பல்லால் கடித்துப் பிய்த்தான். ஸ்பீக்கர் செட் வைத்து உள்ளே வந்த வண்டி டண்டண்டன் டர்னா என்றது. இளைய தளபதியின் முகத்தில் ஆவின் பால் பீய்ச்சியடிக்கப்பட்டது.
ஒன்று. இரண்டு. மூன்று. நாலு. பத்து. இருபது. அதற்குமேல் எண்ணமுடியவில்லை. வினைல் போர்டுகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
மீட்டர் போட்ட ஆட்டோ
April 25, 2008, 11:28 pm | தலைப்புப் பக்கம்
April 25, 2008, 11:28 pm | தலைப்புப் பக்கம்
விடியும் பொழுதில் இன்று ஓர் அதிசயம்.
ஒரு காரியமாக கேகே நகருக்கு இரவு சென்றிருந்தேன். காலை ஆறுக்கு அங்கிருந்து புறப்பட்டு அலுவலகம் உள்ள ஆழ்வார்பேட்டைக்கு ஆட்டோ கூப்பிட்டு, ‘எவ்ளோ?’ என்று கேட்டேன்.
‘மீட்டர் போடுறேன் சார்’ என்று பதில் வந்தது.
ஒரு கணம் நம்பமுடியாமல் அவரைப் பார்த்தேன். சென்னை நகர ஆட்டோக்களில் மீட்டர் என்பது ஒரு செட் ப்ராபர்டி. யாரும் பொதுவில் அதனைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
காத்திருந்த காலம்
April 19, 2008, 1:59 am | தலைப்புப் பக்கம்
April 19, 2008, 1:59 am | தலைப்புப் பக்கம்
சமீபத்தில் சுமார் பத்து தினங்கள் அப்போலோ மருத்துவமனையின் EDU காத்திருப்போர் அறையில் வாழவேண்டி நேர்ந்தது. வீடு, அலுவலகம், எழுத்து, படிப்பு என்று வழக்கமான அனைத்துப் பணிகளும் அடியோடு பாதிக்கப்பட்டு இரண்டு காரியங்களை மட்டுமே செய்தேன்.
1. காத்திருப்போர் அறையில் இருபத்தி நான்கு மணிநேரமும் ஓடிக்கொண்டிருக்கும் கேடிவியில் தினம் இரண்டு அல்லது மூன்று திரைப்படங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
சோலையில் சஞ்சீவனம்
April 3, 2008, 4:43 am | தலைப்புப் பக்கம்
April 3, 2008, 4:43 am | தலைப்புப் பக்கம்
இன்றைய மதிய உணவு நுங்கம்பாக்கத்தில் உள்ள ‘சோலையில் சஞ்சீவனம்’ என்னும் மெடிமிக்ஸ் நிறுவனத்தின் உணவகத்தில் அமைந்தது. அலுவலக நண்பர்களுடன் உணவகத்தினுள் நுழைந்தபோது தோன்றிய எண்ணம் : புத்தருக்கு போதி மரம். நம்மாழ்வாருக்குப் புளியமரம். நமக்கு சஞ்சீவனம்.
ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒருநாள் இதே உணவகத்தில் சாப்பிட நேர்ந்தபோதுதான் உடல் நலம் குறித்தும் டயட் குறித்தும் முதல்...தொடர்ந்து படிக்கவும் »
Fitna - தேவையற்ற அச்சுறுத்தல்
April 2, 2008, 6:16 am | தலைப்புப் பக்கம்
April 2, 2008, 6:16 am | தலைப்புப் பக்கம்
குமுதம் ரிப்போர்ட்டரில் கடந்த 198 இதழ்களாக வெளிவந்துகொண்டிருக்கும் என்னுடைய ‘மாயவலை’ தொடரின் இறுதி அத்தியாயங்களை எழுதிக்கொண்டிருந்த வேளையில், நெதர்லந்த் அரசியல்வாதி கீர்ட் வைல்டர்ஸின் (Geert Wilders) ஃபித்னா (Fitna) என்னும் குறும்படத்தைக் காண நேர்ந்தது.
பரம சுதந்தர மனோபாவம் மற்றும் வாழ்க்கை முறைக்குப் பெயர் பெற்ற நெதர்லந்தில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை சமீப காலங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
March 30, 2008, 1:45 pm | தலைப்புப் பக்கம்
March 30, 2008, 1:45 pm | தலைப்புப் பக்கம்
நண்பர்களுக்கு வணக்கம். கடந்த ஆறு மாதகாலமாகக் ‘காணாமல் போயிருந்த’ என்னுடைய writerpara ஜிமெயில் முகவரி சற்றுமுன் எனக்குத் திரும்பக் கிடைத்திருக்கிறது.
இந்த மின்னஞ்சல் முகவரியைச் சிலகாலம் எடுத்துக்கொண்டு விளையாடிய நண்பர்கள் அது குறித்து இணையத்தில் எழுதியிருந்ததைக் கண்டிருப்பீர்கள். அதன் தொடர்ச்சியாக மேற்கொண்ட சில நடவடிக்கைகளின் விளைவாக இப்போது இந்த முகவரி எனக்குத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்
ம்ஹும்!
March 27, 2008, 3:04 am | தலைப்புப் பக்கம்
March 27, 2008, 3:04 am | தலைப்புப் பக்கம்
கி. ராஜநாராயணன் குறித்து புதுவை இளவேனில் தயரித்திருக்கும் ‘இடைசெவல்’ என்கிற டாக்குமெண்டரி படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எழுத்தாளர் ஒருவரைப் பற்றி ஆவணப்படம் எடுப்பது எத்தனை சிரமமானது என்பது புரிந்தது.
முன்பும் சில படங்கள் பார்த்திருக்கிறேன். அசோகமித்திரன் குறித்து அம்ஷன் குமார் எடுத்த படம். ஜெயகாந்தன் குறித்த படம். வைக்கம் முஹம்மத் பஷீர், ஓ.வி. விஜயன்,...தொடர்ந்து படிக்கவும் »
தீராப் பிரச்னைகள் [தொடர்ச்சி]
March 24, 2008, 1:58 am | தலைப்புப் பக்கம்
March 24, 2008, 1:58 am | தலைப்புப் பக்கம்
6. நான் இலக்கியவாதி இல்லை. குறிப்பாக, தமிழ் இலக்கியவாதி இல்லவே இல்லை. எழுதுபவன். அவ்வளவே. ஆனால் என் கனவுகளில் பெரும்பாலும் இலக்கிய அடிதடிக் காட்சிகள் மட்டுமே வருகின்றன. இத்தனைக்கும் நான் இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்வதே இல்லை. பக்கத்தில் எங்காவது நவீன இலக்கியக் கூட்டம் நடக்கிறது என்று தெரிந்தால் இருபத்தைந்து ரூபாய் ஏசி பஸ் பிடித்து இருபத்தைந்து கிலோ மீட்டர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்
தீராப் பிரச்னைகள்
March 22, 2008, 5:00 am | தலைப்புப் பக்கம்
March 22, 2008, 5:00 am | தலைப்புப் பக்கம்
இந்தக் கட்டுரையில் இடம்பெறும் விஷயத்தைப் பற்றி நீங்கள் இரண்டுவிதமாக நினைக்கலாம்.
* இம்மாதிரியெல்லாமும் பிரச்னைகள் சாத்தியமா?
* சே. இதெல்லாம் ஒரு பிரச்னையா?
வெறுமனே புன்னகை செய்துவிட்டு நகர்ந்துவிடுவீர்களானால் நான் சொல்ல ஒன்றுமில்லை. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இனி ஒரு பாவப்பட்ட ஜென்மத்தின் பதினோரு பிரச்னைகள். என் வாழ்வில் நான் மிக அதிகம் அவதிப்படுவது இந்தப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்
ஒரு கொலை, ஒரு சொட்டுக் கண்ணீர்
March 11, 2008, 12:15 am | தலைப்புப் பக்கம்
March 11, 2008, 12:15 am | தலைப்புப் பக்கம்
இதே மார்ச். இதே 11ம் தேதி. சரியாகப் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இதே நாளில்தான் அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பாளையங்கோட்டையில் பத்திரிகையாளர் நண்பர் முப்பிடாதியின் உதவியுடன் சிறைச்சாலைக்குச் சென்று அவனைச் சந்தித்தபோது காக்கி அரை நிக்கரும் கைவைத்த பனியனும் நெற்றியில் துலங்கிய திருநீறுமாக என்னை அன்புடன் வரவேற்றான்.
‘எனக்குத் தெரியும் சார். கண்டிப்பா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை
