மாற்று! » பதிவர்கள்

aravind

இயல் இசை நாடகம் திரை    
March 21, 2010, 3:09 pm | தலைப்புப் பக்கம்

ஷீபா முதலில் பேசத் துவங்குவது கடற்கரைகளைப் பற்றி. உலகத்திலேயே தனக்கு மிகப்பிடித்த கடற்கரை என்று குறிப்பிடும் அந்தக் கடற்கரையின் மணல்வெளியெங்கும் நீல மற்றும் பச்சைக் கற்கள். முழுக்க முழுக்க இந்த நிறக்கற்களால் ஆன மணல்வெளி எப்படியிருக்கும்? எப்படி அந்த கற்கள் அங்கு வந்தன? கேளிக்கை விரும்பும் மாந்தர்கள் மது அருந்தி விட்டு கண்ணாடிக் குப்பிகளை கீழே போட்டு உடைத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

உன்னைப் போல் ஒருவன்    
September 21, 2009, 3:12 pm | தலைப்புப் பக்கம்

அத்தனை ஆர்பாட்டங்களும், ஆவேசங்களும், வார்த்தைப் போரும் முடிந்த பின்னர், ‘லேப்டாப்’ கட்டிக்கொண்டு கிளம்புகையில் கமல், மோகன்லாலிடம் ‘Nice meeting you’ என்று சொல்லும் போது, அத்தனை இறுக்கத்தையும் மீறி நமக்கு ஒரு சின்னப் புன்னகை வருகிறது. இந்திய திரை ராஜாங்கத்தின் இரண்டு நடிப்பரசர்கள் ஒரு படத்தில் இணைவது எத்தனை விஷேஷம்? இதற்கு எத்தனை காத்திருப்பு? அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பிம்பங்கள் #2    
June 24, 2009, 4:08 pm | தலைப்புப் பக்கம்

அகிரா குரோசாவாவைப் பற்றி என்னிடம் பேசாத உலக சினிமா ஆர்வலர் இல்லை. ‘ஓ, நீங்க உலக சினிமா பாப்பீங்களா?’ என்ற கேள்வி வந்த பின் மூன்றாவது கேள்வி இவரைப் பற்றியே இருக்கும். போர் வீரர்கள் பெரிய கொண்டை இட்டுக்கொண்டு அதில் ஒரு பெரிய ஊசி போன்ற ஒன்றை சொருகி வைத்து, ஆக்ரோஷமாக முகம் காட்டும் ஸ்டில்களோ, ‘யோஜிம்போ‘ போன்ற படத்தின் பெயர்களோ – எதுவோ ஒன்று அவர் படங்களைப் பார்க்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மூன்றாம் பிறை    
March 15, 2009, 5:09 pm | தலைப்புப் பக்கம்

சீனு வீட்டுக்கு திரும்பி வருகிறான். கோபம் குறைந்திருக்கிறது. வீடு திறந்து கிடக்கிறது. ‘விஜி?’. எல்லா அறைகளிலும் தேடுகிறான். ‘விஜி, உனக்கு சாப்பாடு வேணுமா? வேணாமா?’. விஜியைக் காணவில்லை. சுப்பிரமணி கட்டிலில் போர்வைக்குள் நகர்ந்து கொண்டிருக்கிறது. பக்கத்து வீட்டு பாட்டியிடம் போய் விசாரிக்கிறான். இன்னும் கொஞ்ச தூரம் போய் அண்டை வீடுகளில் கேட்டுப் பார்க்கிறான். மழை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நான் கடவுள்    
February 14, 2009, 8:59 am | தலைப்புப் பக்கம்

(படம் பார்க்காதவர்களுக்கு - நிறைய காட்சிகள் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. மேற்கொண்டு படிப்பதை பற்றி யோசிக்கவும்) (விமர்சனம் எழுதுவதில் நம்பிக்கை குறைந்து விட்டதாலும், இந்தப் படத்துக்கு ‘விமர்சனம்’ என்று கட்டமைத்து எழுத இயலாது என்று தோன்றுவதாலும், கடந்த மூன்று நாட்களாக என் சிந்தனையை தின்று கொண்டிருக்கிற இந்தப் படத்தைப் பற்றிய என் எண்ணங்களை வைக்கிறேன். என்னிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

6வது சென்னை திரைப்பட விழா - #2    
January 11, 2009, 5:49 am | தலைப்புப் பக்கம்

# மஜித் மஜிதியின் “The Song of Sparrows” படத்திற்கு நிச்சயம் இடம் கிடைக்காது என்று எனக்குத் தெரிந்திருந்தது. நல்ல வேளையாக, சீக்கிரம் சென்று விட்டேன். மிகவும் பரிச்சயமான இயக்குனர் என்பதால் கூட்டம் அலைமோதியது. ‘பூ’ பட இயக்குனர் சசி தொடங்கி ஜோடி நம்பர் 1 ராஜேஷ் வரை பல முகங்களை பார்க்க முடிந்தது. ஒரு கிராமத்தானுக்கு வாய்ப்புகளும் பணமும் அதிகம் புழலுகின்ற நகரத்தில் ஏற்படுகிற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பூ    
December 7, 2008, 3:15 pm | தலைப்புப் பக்கம்

மனதை மயக்கும் வாசம் வீசும் பெண்ணின் பேரன்பு தான் ‘பூ’. சா.தமிழ்ச்செல்வனின் ‘வெயிலோடு போய்’ சிறுகதையை திரையில் வாழ்ந்து பார்த்திருக்கிறார்கள். சின்னப்பிள்ளைகளின் கையெழுத்தில் பெயர்கள் காட்டப்படுகின்றன, சிலிர்க்க வைக்கும் பிண்ணனி இசையுடன். ஸ்ரீகாந்த தவிர எல்லாம் புதுமுகங்கள்! நாயகி மாரியின் இன்றைய சந்தோஷமான வாழ்க்கையை கொஞ்சம் காட்டிவிட்டு, நினைவுகளில் மூழ்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மும்பை – சில கேள்விகள்    
November 30, 2008, 3:53 pm | தலைப்புப் பக்கம்

1) லஷ்கர் இ தொய்பா தாஜ் ஹோட்டலை தாக்கக்கூடும் என செப்டம்பெர் 2008ல் RAW சொல்லியிருக்கிறது. நவம்பர் 18ம் தேதி அதே RAW கடல் வழியாக தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழையக் கூடும் என்று சொல்லியிருக்கிறது. அவ்வளவு ஏன், ‘சாட்டிலை ஃபோன்’ மூலம் நடைபெற்ற சந்தேகத்திற்கு இடமான உரையாடலை கேட்டதாகவும் சொல்லியிருக்கிறது. இதற்கு மேல் என்ன இண்டெலிஜெண்ஸ் தேவை? இது இண்டெலிஜென்ஸ் ஃபெயிலியரா?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பண்பாடு

செல்லுலாய்ட் கவிதைகள் - 8    
November 22, 2008, 10:44 am | தலைப்புப் பக்கம்

படம் ஒரு நீண்ட மௌனத்தில் துவங்குகிறது. ரொமானியாவின் ஒரு பல்கலைகழக விடுதி அது. அறைத் தோழிகளான ஒட்டிலியாவும் கபீட்டாவும் நீண்டதொரு விவாதத்தை அப்போது தான் முடித்திருக்கிறார்கள். பார்வையில் தைரியம் கொப்பளிக்கிற ஒட்டிலியா; மருண்ட கபீட்டா; ஒட்டிலியா ‘சரி’ என்கிறாள். கபீட்டா நன்றி சொல்கிறாள். ஒட்டிலியா எழுந்து வெளியே சென்று அன்றைய பொழுதுக்கு தேவையான பொருட்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வாரணம் ஆயிரம்    
November 18, 2008, 4:36 am | தலைப்புப் பக்கம்

ஒருவனின் வாழ்விலிருந்து ஆயிரம் புகைப்படங்கள் கொண்ட கலர்ஃபுல் ஆல்பம். டைட்டில் கார்டு அசத்துகிறது. டிஜிடல் ஜாலத்தில் சுழலும் இசைத்தட்டும், பிண்ணனியில் அமெச்சூர் குரல்கள் பாடும் ‘உறவுகள் தொடர்கதை’ தொடங்கி 80களின் பாடல்களின் கதம்பமும் செம ஜில். ப்ளாஷ்பேக்கில் பயணிக்கிறது முழுப்படமும். அப்பாவுக்கு மகன் தன் மனக்குரலில் எழுதும் குரல் கடிதம் தான் படம். சிறு வயது தொடங்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வாரணம் ஆயிரம்    
November 16, 2008, 4:34 pm | தலைப்புப் பக்கம்

தம் வாசுதேவ மேனனின் வாழ்விலிருந்து ஆயிரம் புகைப்படங்கள் கொண்ட கலர்ஃபுல் ஆல்பம். டைட்டில் கார்டு அசத்துகிறது. டிஜிடல் ஜாலத்தில் சுழலும் இசைத்தட்டும், பிண்ணனியில் அமெச்சூர் குரல்கள் பாடும் ‘அவள் ஒரு தொடர்கதை’ தொடங்கி 80களின் பாடல்களின் கதம்பமும் செம ஜில். ப்ளாஷ்பேக்கில் பயணிக்கிறது முழுப்படமும். அப்பாவுக்கு மகன் தன் மனக்குரலில் எழுதும் குரல் கடிதம் தான் படம். சிறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வாரணம் ஆயிரம் (இசை)    
September 28, 2008, 4:49 am | தலைப்புப் பக்கம்

ஹாரிஸ் ரொம்ப காபி அடிக்கிறார் என்று பரவலான ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. நான் அதைப் பற்றி பெரிதாக கண்டுகொள்வதில்லை. கௌதம் - ஹாரிஸ் - தாமரை கூட்டணியின் ரசிகன் நான். ஏழு பாட்டு என்பது சர்ப்ரைஸ். இசை விமர்சனம் செய்ய உன்னிடம் என்ன இருக்கு என்று கேட்டால், ரெண்டு காதுகளை தவிர வேறொன்றும் இல்லை! நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை (ஹரிஹரன்/ தேவன்/பிரசன்னா. ) கிட்டார் வாசிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தி மோட்டார் சைக்கிள் டைரிஸ்    
September 14, 2008, 5:01 pm | தலைப்புப் பக்கம்

1952. சேகுவேராவிற்கு வயது 22. இன்னும் இரண்டு பாடம் எழுதினால் மருத்துவ படிப்பு முடிந்து விடும். ஆனால் அதற்குள் அவருடைய பத்து வருடக் கனவை நனவாக்கிற அவசரம் முந்திக்கொள்கிறது. அர்ஜெண்டினாவில் துவங்கி வெனிசுலா வரை லத்தீன் அமெரிக்காவை முழுதும் கடந்து சென்று பார்க்க வேண்டுமென்ற கனவு. தான் பிறந்த தேசத்தை, அதன் மக்களை கண்டறிய வேண்டி ஆசை. சுமார் 8000 மைல்கள். துணைக்கு நண்பன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஜெயம்கொண்டான்    
September 3, 2008, 1:31 pm | தலைப்புப் பக்கம்

அடிதடிகளை கண்டு விலகும் சாதாரண மக்கள் பயம்கொண்டான்கள் இல்லை என்ற மெஸேஜோடு முதல் படத்தை தந்திருக்கிறார், மணிரத்ன மாணவன் இயக்குனர் கண்ணன். இந்த மெஸேஜோடு இன்ன பிற அயிட்டங்கள் அனைத்தையும் சேர்த்து (அயிட்டம் நம்பர் இல்லை, நன்றி!) கமர்ஷியல் காம்போ மீல்ஸ் ஆக்கியிருக்கிறார்.     முதல் காட்சியில் தடா புடா என்றெல்லாம் அதிரடிக்காமல், லேகாவும் வினயும் காருக்குள் லட்சியங்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தேநீரில் சிநேகிதம் - 1    
August 16, 2008, 5:31 pm | தலைப்புப் பக்கம்

நானும் கொஞ்சம் செய்கிறேன் Random ramblings அலைபேசி காதலர்களுக்கு  ஒரு வரப்பிரசாதம் என நிறைய பேர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது அவர்களுக்கு மட்டுமே அப்படி, நமக்கல்ல என்று நான் புரிந்து கொண்டேன். எங்கள் பேருந்தில் தினமும் ஏறுகிற போதே அந்தப் பெண் அலைபேசியில் பேசியபடியே தான் ஏறுவாள். பேருந்து அலுவலகம் போய் சேரும் வரை பேச்சு. அவள் பேச்சுகள் இரைச்சலில் பெரும்பாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

வோல்வர்    
August 3, 2008, 7:56 am | தலைப்புப் பக்கம்

பெத்ரோ அல்மொதவார் ரகளையான இயக்குனர். ஸ்பெயினை தனியாளாக உலக சினிமா அரங்கில் அரங்கேற்றியவர். அதுவும் எப்படி ?  - உடல் சிக்கல், மனச்சிக்கல், உறவுச்சிக்கல் என களேபரமான கதைக்களங்கள். ஆண்கள் பெண்களாக மாறுவது , பெண்கள் ஆண்களாக மாறியபின்னும் குழந்தை பெறுவது, கன்னிகாஸ்திரிகள் எய்ட்சால் பாதிக்கபடுவது, ஓரினச் சேர்க்கை பிரியர்கள் என  நீங்கள் பார்த்திராத, பார்க்க விரும்பாத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தாரே ஜமீன் பர்    
July 22, 2008, 4:46 pm | தலைப்புப் பக்கம்

அமீர் கான் தமிழ்ல “தாரே ஸமீன் பர்” படத்த தயாரிக்கப் போறதா நியூஸ் வருது. இதுக்காக முண்ணனி இயக்குனர்கள் கிட்ட பேசறதுக்காக ஒரு மீட்டிங் வெக்கறாரு. அதுல ஷாருக் கான், சல்மான் கான், அவரோட நாய், ப்ளாக், இம்ரான் கான் எல்லார பத்தி பேசி முடிச்சுட்டு டைரக்டர்ஸ் எல்லாரும் ரொம்ப கெஞ்சி கேட்டுக்கிட்டதால கதையோட ஒன் லைன் சொல்றாரு - “பையனுக்கு எழுத்தெல்லாம் ஆடுது” .உடனே டைட்டில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

ஜன்னல் - சில குறிப்புகள்    
June 19, 2008, 3:33 pm | தலைப்புப் பக்கம்

  மழையில் நனைய முடியாதவர்கள் ஜன்னல் அருகே அமர்ந்தபடி ஒட்டுக் கேட்கிறார்கள் அதன் பாடலை. —————————————— என் ஜன்னலில் இந்த மேகம் மீன். அடுத்த ஜன்னலில் இதே மேகம் முயல்? —————————————— ஒரு அவசர சிறகசைப்பின் படபடப்பை மட்டும் பின்விட்டபடி நொடியில் நிழலெனப் பறந்துவிடும் ஜன்னல் மாறி வந்தமரும் ஏதோ ஒரு பறவை. —————————————— கொக்கிகள் இடப்படாத ஜன்னல்கள் படாரென காற்றின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தசாவதாரம்    
June 15, 2008, 1:46 pm | தலைப்புப் பக்கம்

கதையா?? மூச்ச்!! எதற்கு கமல் பத்து வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற கேள்வியில் அர்த்தம் இல்லை! தன் குரு செய்த சாதனையை இன்னும் நீட்டித்து வருங்கால சிஷ்யர்களின் சாதனை அளவுகோலை உயர்த்தும் ஆர்வம் படம் நெடுக பளிச்!! தொடக்கமே தலை வாழை விருந்து! அதில் தமிழை வேறு பரிமாறி புல்லரிக்கவைக்கிறார்கள்! பத்து நிமிடமே என்றாலும் எல்லாரும் உயிரைக் கொடுத்து வேலை செய்திருக்கிறார்கள்! அதன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சுடர்களின் நடனம்    
May 20, 2008, 4:11 am | தலைப்புப் பக்கம்

மார்கோ அவ்வளவு சாதாரணமாக அழுபவன் அல்ல. ஒரு காதல் நிறைவேறாமல் போன பின்னும் அவன் அழவில்லை. லிடியாவைச் சந்தித்த சில நாட்களே ஆகிறது. அவள் காளைச் சண்டை வீராங்கனை. அபாயகரமான விதியுடன் கழிகிற ஒவ்வொரு நாளுடன் இருவருக்குள்ளான காதலும் பெருகுகிறது. நாளை பற்றியே நினைவே ஏதோ ஒரு பயத்தை தருகிறது. வீட்டில் பாம்பு புகுந்ததில் தொடங்கி எல்லாமே கெட்ட சகுணங்களாக தெரிகின்றன. ஒரு நல்ல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

Colour of paradise    
May 8, 2008, 3:31 am | தலைப்புப் பக்கம்

Color of paradise - ஒரு fairy tale! காணக் காண திகட்டாத அழகான நிலப்பரப்பில், மலைப்பிரதேசக் குளுமையில், கற்பனைக்கெட்டாத அழகழகான இடங்களில் நம்மை பதைபதைக்க வைக்கிற ஒரு படம். மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நீங்கள் கேட்டவை    
May 6, 2008, 5:21 am | தலைப்புப் பக்கம்

திருச்சியைச் சேர்ந்த ரமேஷுக்கு என் வயதிருக்குமா? வெள்ளமேடு காவேரி நிச்சயம் அழகாகத் தான் இருப்பாள் என்று நினைக்கிறேன் சவுக்கார்பேட்டை திருநாவுக்கரசு நடுவயதை தாண்டியவர் என்று தோன்றுகிறது நாங்கள் நால்வரும் விரும்பிக் கேட்ட பாடல் வானலைகளில் தவழ்ந்து வருவதாக சொன்னாள் வானொலி தொகுப்பாளினி திடீரென நெருக்கமாகி விட்டோம் நாங்கள் நால்வரும் அவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நடை எழுத்து    
April 22, 2008, 4:28 am | தலைப்புப் பக்கம்

வானத்தை நிமிர்ந்து பார்க்கும் போது மூக்கின் நுனியில் துளி நீலம் ஒட்டிக்கொண்டதாக ஒரு கவிதையில் எழுதிக்கொண்டிருந்தேன். திடீரென அது எத்தனை பொய் என்று தோன்றியது. நான் வானத்தை அண்ணாந்து பார்த்தே பல நாட்கள் ஆகி விட்டது. நிச்சயம் என் தவறு தான். பார்க்க எனக்கு நேரமில்லை என்று நான் புரிந்துகொண்டதை போல அச்சமூட்டும் மற்றொரு புரிதல் என் சமீப கால நினைவுகளில் இல்லை. கவிதையின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அபார்ட்மெண்ட் - சில குறிப்புகள்    
April 7, 2008, 6:49 pm | தலைப்புப் பக்கம்

நாளெல்லாம் ஆர்வத்துடன் எட்டிப்பார்த்துவிட்டு மாலைக்குள்     வாடிப் போகிறது பகலில் ஆளில்லாத ஃப்ளாட்களின் பால்கனி தொட்டிச் செடி ரோஜாவும் சில குழந்தைகளும் ****** வாயில் முழுதும் செருப்புகள் தொலைக்காட்சி இரையாமல் பார்த்துக்கொண்டோம் அனாவசியமாக சிரிக்கவில்லை கதவைத் திறக்கையிலெல்லாம் என்ன பாவனை கொள்வது எனத் தவித்தோம் வீட்டுக்குள்ளேயே அடைந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மரத்தடி    
April 3, 2008, 4:26 am | தலைப்புப் பக்கம்

கடலைக் காண செல்லும் போதெல்லாம் நான் எனக்குள் ஏதேனும் ரகசியம் இருக்கிறதாவென பார்ப்பேன். ஏதேனும் ஒரு ரகசியத்தை எழுதி ஒரு கண்ணாடிக் குப்பியில் அடைத்து கடலுக்குள் வீசுவது என் நினைவிற்கு வரும். அப்படி ஒரு எண்ணத்தை எங்கிருந்து பெற்றேன் என்று தெரியவில்லை. எங்கேனும் படித்தேனா, யாராவது கதையின் தொடக்கமாக சொன்னார்களா என தெரியவில்லை. ரொம்ப காலமாக அந்த எண்ணம் என்னுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

A Walk to remember    
March 20, 2008, 4:58 am | தலைப்புப் பக்கம்

இதமான தரமான சுவையான காதல் படம். மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

செல்லுலாய்ட் கவிதைகள் - 4    
March 20, 2008, 4:40 am | தலைப்புப் பக்கம்

இரவு சுமார் பத்து மணி. ஐந்தாறு இளைஞர் இளைஞிகள் கொண்ட கூட்டம் தனித்தனியாக காரில் வந்து இறங்குகின்றது. அவர்கள் நண்பர் குழாமில் புதிதாக ஒருவன் சேர விரும்புகிறான். அவனுக்கு அதற்காக வைக்கப்பட்டிற்கும் ஒரு பந்தயம் - இருபதடி உயரத்திலிருந்து ஒரு குளத்தில் குதிப்பது. அவனை ஏற்றிவிட்டு வேடிக்கை பார்க்கிறது பொறுப்பற்ற அந்த கூட்டம். குதித்தவனுக்கு படுகாயம். காவல்துறையினரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

எங்கள் தெருமுனையில் வந்திருக்கிறது புதிய கடவுளின் சின்ன    
March 13, 2008, 5:55 am | தலைப்புப் பக்கம்

எங்கள் தெருமுனையில் வந்திருக்கிறது புதிய கடவுளின் சின்ன ஏ.டி.எம் நமக்கு சேரவேண்டியதை நமக்கே பொறுப்பாக தந்துவிடுவதாக அதிகப்படியான புகழ் இப்போதெல்லாம் அவரின் மதிப்புக்கூட்டப்பட்ட சேவைகள் பற்றிய பேச்சைப் போல பரவுகிறது தீ. பக்கத்து தெரு கடவுளின் திருப்பதிப்படாத ஏ.டி.எம் வாடிக்கையாளர்கள் அவ்வபோது இங்கு தென்படுகிறார்கள் எங்களுக்கு கூட புலப்படாத நல்ல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மரத்தடி    
February 21, 2008, 7:04 am | தலைப்புப் பக்கம்

நள்ளிரவை நெருங்குகிற பொழுதுகளில் அலுவலகத்திலிருந்து கிளம்புகிற நாட்களில் அது நாள் வரை இருந்த போக்குவரத்து நெரிசலை பழிவாங்குவது போல கார்கள் பறக்கின்றன. கட்டுப்பாடென்பதில்லாமல் சீறிப் பாய்கின்றன. தடுப்பதற்கு எதுவுமில்லை என்பது போல தார் சாலையில் வழுக்கிக் கொண்டு செல்கிறோம். “உச்சிப் பொட்டு தெறிக்கிற” இசையுடன் ஒரு இரவு அப்படி சென்றுக் கொண்டிருக்கையில் கார் அழகான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

Socks relief 2007    
February 12, 2008, 6:58 am | தலைப்புப் பக்கம்

ரொம்பவே பிரபலமான “தமிழன்” “இமயம்” “ராஜ் டிஜிட்டல் பிளஸ்” சேனல்கள்ல வெயில் கொளுத்துற மதியானத்துல ஒரு ப்ரோக்ராம் வரும் பாத்திருக்கீங்களா? அரைகுறை ட்ரெஸ்ல அஞ்சாறு வெள்ளக்காரன்/காரி எதேதோ எக்ஸர்சைஸ் மிஷின வெச்சிகிட்டு மிதிக்கிறாங்க, ஓடுறாங்க, ஆடுறாங்க… ஒவ்வொண்ணும் பயங்கற உப்யோகமான பொருட்கள்… அதுவும் அவங்க பேசற தமிழ் இருக்கே, யப்பா! புல்லரிக்குது நினச்சாலே அத நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

செ.பு.க. + புத்தகங்கள் - 2007 & 2008    
January 28, 2008, 3:28 am | தலைப்புப் பக்கம்

நான் இதுவரை கொண்டாடிய இருபத்தி சொச்சம் பொங்கல் பண்டிகைகளில் இந்த பொங்கல் உருப்படியான ஒன்று. காரணம் சென்னை புத்தக கண்காட்சி(செ.பு.க.)க்கு சென்றது. முப்பதோராவது புத்தக கண்காட்சிக்கு முதல் முறையாக செல்கிறேன்(கை தட்டவும்). அதை பற்றிய சில குறிப்புகள், சென்ற வருடம் நான் படித்த புத்தகங்கள், இந்த வருடம் படிக்கப் போகும் புத்தகங்கள் அத்தனையும் இதோ இங்கே. செ.பு.க: * சுமார் இருநூறு...தொடர்ந்து படிக்கவும் »

மரத்தடி    
January 22, 2008, 7:05 am | தலைப்புப் பக்கம்

கடந்த சில வாரங்களாக எழுதுவதற்கு ஏராளமான விஷயங்கள் சேர்ந்து விட்டது. இத்தனைக்கும் தினம் ஏதாவது எழுதுகிறேன். ஒரு வாக்கியமாவது எழுதுகிறேன். பல விஷயங்கள் யோசிக்கிறேன். சில ஆழ் மனதைப் பேசும் எண்ணங்களாக இருக்கின்றன. சில மெல்லிய நகைச்சுவை முலாமுடன் இருக்கின்றன. ஒரு சில விஷயங்களை அழகானது என்று மட்டுமே வகைப்படுத்த முடிகிறது. சில இது அதுவென வகைபடுத்த முடியாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

யாருமற்ற அரங்கம்    
January 6, 2008, 4:27 am | தலைப்புப் பக்கம்

யாரேனும் காத்துக்கொண்டிருக்கலாம் இந்த நொடியில் ஒரு கடைசி சந்திப்பிற்காக. அப்போது யோசிக்கப்படலாம் இதுவரையிலான எல்லா சந்திப்பிற்கும் அடையாளமாய் சொல்லப்பட்ட அந்த மரத்தின் பெயர். இந்த சந்திப்பிற்கான வார்த்தைகள் பூத்திருக்கின்றன அந்த மரத்தில். எந்தப்பூ முதலில் உதிரும்? காத்திருப்பின் போதே உதிர்ந்து விடுகிற பூக்கள் இனி நினைவில் எப்போதும் மணக்கும். தாமதமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சொர்க்கத்தின் குழந்தைகள்    
December 31, 2007, 1:51 pm | தலைப்புப் பக்கம்

  Children of heaven என்ற எழுத்துகளோடு உடனே துவங்குகிறது படம். அழகான பிங்க் நிற ஷூ ஒன்றை தைத்துக் கொண்டிருக்கிறார் ஒருவர். மீண்டும் அணிவதற்கு ஏதுவாக அதை மாற்றுகிறார். அதை பெற்றுக் கொண்டு புறப்படுகிறான் அலி. வயது பத்து இருக்கும். அம்மாவுக்காக உருளைக்கிழங்குகள் வாங்க காய்கறிக் கடைக்கு வெளியே தன்னுடைய பைகளை வைத்து விட்டு செல்கிறான். அழுகிய காய்கறிகளை அள்ளிச் செல்லும் தள்ளுவண்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஹி ஹி - 2    
December 23, 2007, 7:03 am | தலைப்புப் பக்கம்

பக்கம் பக்கமா வசனம் பேச பிடிக்காத தமிழ் சினிமா காரெக்டரே இல்ல. இருந்தாலும், நடுவுல கொஞ்சம் வசனத்த குறச்சுட்டு, விஷுவலா சில விஷயங்கள சொல்ல ஆரம்பிச்சாங்க. சில பேர் சிம்பாலிசம் யூஸ் பண்ணாங்க. எல்லா நல்லா தான் இருக்கும். ஆனா, அதுக்காக எல்லா சினிமாலயும் ஒரு காலத்துல இதே சிம்பாலிஸம்ஸ் யூஸ் பண்ணி கழுத்தறுத்தாங்க! துணிய ஒரு லிமிட்டுக்கு மேல அடிச்சு தோச்சா கிழிஞ்சிரும்!! சரி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

குட்டிக்கவிதைகள்    
December 16, 2007, 7:16 am | தலைப்புப் பக்கம்

மௌனத்தை கிழிக்கிற சத்தம் அடங்கியபின் அதை விட சத்தமாய் மீண்டும் அறையும் மௌனம். ———- குழந்தைகள் போட்டிக்கு இல்லாத இரவில் பூங்கா ஊஞ்சலில் ஆடுகிறது காற்று. ———- இலை சிந்தும் மரமொன்றை படமாக வரைந்து வைத்தேன் அதை யார் யாரோ எடுத்துப் பார்க்கையிலெல்லாம் விழுந்தது இன்னுமொரு இலை. ——– ஆற்றைத் தொட்டும் தொடாமலும் பறக்கிற பறவையுடன் போட்டியிட்டு நீந்துகிறது அதன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கல்லூரி    
December 10, 2007, 2:25 pm | தலைப்புப் பக்கம்

எந்த உண்மையான சம்பவத்தையும் அடிப்படையாக கொண்டதல்ல இப்படம் என்ற அறிவிப்புடன் தொடங்குகிறது படம். மொத்த படத்திலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வெயில்    
December 1, 2007, 4:37 am | தலைப்புப் பக்கம்

சில நாட்களுக்கு முன் அலுவல் சம்பந்தமான ஒரு சந்திப்பிற்காக ஒரு அறையில் அமர்ர்ந்திருந்தேன். பெரிய கண்ணாடி ஜன்னல்கள் இருந்தாலும், அனைத்தும் திரையிடப்பட்டு ஊமையாக்கப்பட்டிருந்தன. குளிர் சாதனப்படுத்தப்பட்ட அறை. தனி ஒரு உலகமென இருந்த அறைக்குள் நுழைய வெளியே வெயில் முயன்றுகொண்டிருந்தது. ஏதோ ஒரு திரையின் அலட்சியத்தால் வெயிலுக்கு ஒரு வழி கிடைத்தது. பிரமாதமான தரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை அனுபவம்

அழகிய தமிழ் மகன்    
November 25, 2007, 5:10 am | தலைப்புப் பக்கம்

கல்லூரி மாணவன் குரு (விஜய்) ஓட்டப்பந்தைய வீரர். தற்செயலாக சந்திக்கிற அபிநயா(ஸ்ரேயா) மீது காதல் கொள்கிறார். அது வெற்றியும் பெறுகிறது. குருவுக்கு ESPயின் காரணமாக பின்னர் நடக்க இருக்கும் விஷயங்கள் முன்கூட்டியே தெரிய வருகிறது. அதில் ஒன்று - அபிக்கு அவர் மூலமாகவே ஆபத்து வருமென்பது. கவலையில் குரு அவரைப் பிரிகிறார். அந்த இடத்தில் வந்து சேர்கிறார் அவரைப் போலவே இருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பழைய படம் - பத்து விஷயம்    
September 15, 2007, 6:44 am | தலைப்புப் பக்கம்

அந்த காலத்து படமெல்லாம் என்ன superஆ இருந்துச்சு. எந்த பழைய படமும் இந்த பத்து விஷயம் இல்லாம இருக்காது! 10 - இண்ட்ரோ ஸீன் : பழைய படத்தோட டைட்டில்ஸ் பாக்கலனா அது என்ன...தொடர்ந்து படிக்கவும் »

கவித்தூரிகை 11    
September 12, 2007, 3:13 pm | தலைப்புப் பக்கம்

நண்பர்களுக்காக….. எதிர்பார்க்கும் போது கூட வருவதில்லை மழை. எதிர்பாராத போதும் தேடி வருகிறார்கள் நண்பர்கள். எழுதிவிட்டேன் நூறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

என் தூரம் கடப்பேனே…..    
May 13, 2007, 5:43 am | தலைப்புப் பக்கம்

எனது பத்தாவது வயதில் என் அப்பா இறந்துப் போனார். அவரின் கல்லறையை அவரின் சொந்த ஊரில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை அனுபவம்நான் அவனில்லை!    
March 26, 2007, 4:11 pm | தலைப்புப் பக்கம்

எவன்யா கண்டுபிடிச்சான் இந்த மொபைல?? இந்த மார்ச் 13ம் தேதியோடு ஒரு வருஷம் ஆகிவிட்டது மொபைல் வாங்கி. அதற்குள் என்னை இப்படி புலம்பவைத்துவிட்டார்கள். சென்ற ஆண்டு மார்ச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

காதலும் ரகசியங்களும்    
March 13, 2007, 7:06 pm | தலைப்புப் பக்கம்

சில நாட்களுக்கு முன்பு எனக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதை அப்படியே இங்கே தந்துள்ளேன். Today is “heart2heart talk”...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

மொழிதலும் புரிதலும்    
February 25, 2007, 5:54 pm | தலைப்புப் பக்கம்

பைபிளில் ஒரு சம்பவம் வரும். மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நாகரீகம் பெறத் தொடங்கிய காலத்தில் அவர்கள் கடவுளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

காணாமல் போனவர்கள்    
February 22, 2007, 12:53 pm | தலைப்புப் பக்கம்

எந்த திருவிழாவிலும் தொலைந்து போகாமலேயே என் குழந்தைப்பருவத்தைக் கடந்துவிட்டேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

பச்சைக்கிளி முத்துச்சரம்    
February 18, 2007, 2:45 pm | தலைப்புப் பக்கம்

வெங்கி என்கிற வெங்கடேஷ்(சரத்) நிறைவான சம்பளத்தில் மகிழ்ச்சியோடு வாழ்கிறார். மனைவி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நீரின் பாடல்    
February 2, 2007, 12:03 pm | தலைப்புப் பக்கம்

நதி எப்போதும் எனக்கு தொலைவாக இருப்பது போல தோன்றும். நதிகளைப் பார்த்திருக்கிறேன். மலை நதியைக் கண்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

சில நேரங்களில் சில மனிதர்கள்    
September 11, 2006, 1:34 pm | தலைப்புப் பக்கம்

உலகிலேயே மனிதர்களைப் போல சுவாரசியமான நம்மை மகிழ்விக்கக்கூடிய ஆச்சர்யப்படுத்தக்கூடிய வெறுப்பேற்றக்கூடிய சலிப்பேற்றகூடிய விலங்கு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை நகைச்சுவை

சுதந்திர தின கொண்டாட்டம்???!!!!    
August 15, 2006, 4:47 pm | தலைப்புப் பக்கம்

முதலில் எல்லோருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்! சுதந்திர தினம் வருகிறது என்று அறிந்தவுடன் போன வாரம் நம் எல்லோர் மனதிலும் இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் நிகழ்ச்சிகள்

பொழுது கண்டு இரங்கல்    
July 27, 2006, 11:51 am | தலைப்புப் பக்கம்

கல்லூரி தொடங்கியதிலிருந்து நிறைய நேரம் கிடைக்கிறது. அப்படி கிடைத்த நேரத்தில் இதை எழுதினேன். ஒரு கொலைகாரன் போல் பதுங்கியபடி என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

பேருந்தின் சுவாரசியங்கள்    
July 8, 2006, 6:40 am | தலைப்புப் பக்கம்

பயணங்கள் எப்பொதுமே சுவையானவையாக சிலரால், மிகச் சிலரால் அறியப்படுகிறது. எனக்குப் பயணங்கள் பெரிதாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

வாழ்க்கையை எழுதுதல்    
May 4, 2006, 12:25 pm | தலைப்புப் பக்கம்

நாவல்களை நேரத்தைப் போக்கும் கருவியாக பார்த்திருந்த காலங்களில் மர்ம நாவல்களும் துப்பறியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

செல்லுலாய்ட் கவிதைகள் 1    
May 4, 2006, 4:34 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அரசியலும் சினிமாவும் இரு கண்கள் போல என்று சொல்வார்கள். ஆனால் இரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

என்றும் இளைய(ராஜா) இசை - 1    
March 23, 2006, 8:52 pm | தலைப்புப் பக்கம்

இந்த வலைப்பூவில் (blog) நான் எழுத விரும்பும் விஷயங்கள் பல. அதில் முக்கியமானவை தமிழும் இளையராஜா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

கவித்தூரிகை 2    
March 5, 2006, 1:25 am | தலைப்புப் பக்கம்

காற்றில் கரையும் கானங்கள் பார்வையற்றவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கவித்தூரிகை 1    
February 28, 2006, 5:51 am | தலைப்புப் பக்கம்

சப்தத்தில் பூக்கும் மௌனங்கள் என்னைச் சுற்றிய கூச்சல்களுக்கு நன்றி என் மௌனத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை