மாற்று! » பதிவர்கள்

Thooya

Coconut Sorbet    
July 7, 2008, 11:58 pm | மறுமொழிகள்

ரொம்ப நாட்களாக சமையல்கட்டிற்கு விடுமுறை விட்டாச்சு. இனிமேலும் விடுமுறை எடுத்தால் சமையல்கட்டிற்கே மரியாதை இல்லாமல் போய்விடுமே. இங்கு எங்களுக்கு நல்ல குளிர். குளிரில் குளிர்களி சாப்பிடுவது தானே எங்களுக்கு மிகவும் பிடித்த விடயம். எப்போதும் குளிர்களி சாப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. புதிதாக ஏதும் முயற்சிக்கலாமே என நினைக்கும் போது தான் என் அண்ணன் ஒருவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

செட்டிநாட்டு இறால் வறுவல்    
June 24, 2008, 7:14 am | மறுமொழிகள்

தேவையானப் பொருட்கள்இறால் - 1/4 கிலோ கிராம்வெங்காயம் - 2 பெரியது ( நறுக்கிக்கொள்ளவும் )பூண்டு - 10 பெரிய பல்சோம்பு - ஒரு தேக்கரண்டிசீரகம் - ஒரு தேக்கரண்டிதக்காளி - 2 பழம்தேங்காய் - கால் மூடி ( துருவியது)உப்பு - 1 தேக்கரண்டிமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டிஇஞ்சி - ஒரு விரலளவுஎண்ணெய் - 2 தேக்கரண்டிகறிவேப்பிலை - ஒரு கையளவுவத்தல் மிளகாய் - 20 பெருசு பூண்டையும் இஞ்சியையும் நன்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மழையே மழையே மெத்த பெய் வண்ணான் வீட்டில் நிறைய பெய்    
June 3, 2008, 8:59 pm | மறுமொழிகள்

மழை காலத்தில் தூங்கவிடாமல் எழுப்புவது பாவம் என்றால், எழுப்பியதோடு நில்லாமல் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதை நினைவுபடுத்துவது பெரும் பாவம். இந்த பாவத்தையும், பெரும்பாவத்தையும் என் மாமா செய்து கொண்டிருக்கிறார். என்ன கொடுமை, அட வேலைக்கு போய் தான் ஆகணும் என்றால் அவங்க அவங்க போக வேண்டியது தானே! எதுக்கு என்னை எழுப்பி, என் சாபத்தை வாங்கிட்டு!எங்க ஊர்ல மழைகொட்டிட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

மீன் சொதி    
June 3, 2008, 7:54 am | மறுமொழிகள்

எங்க சொதி இத்தனை பிரபலம் என எனக்கு தெரியாது. சொதி செய்முறை தெரியுமா? சொதி என்றால் என்ன? சொதி செய்முறை எப்ப எழுதுறிங்க என பல உறவுகள் கேட்டுக்கொண்டேயுள்ளனர். எத்தனை நாளுக்கு தான் "விரைவில் எழுதுகிறேன்" என ஏமாற்றுவது. சொதியில் பல வகை உண்டு: சைவம் & அசைவம். சைவ சொதியில் வெள்ளைச்சொதி, மஞ்சள் சொதி என இருவகை உண்டு. அசைவத்தில்....அப்பப்பா எண்ணிலடங்கா..சுவையோ சொல்லில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மிளகு ரசம்    
June 1, 2008, 7:22 am | மறுமொழிகள்

பொதுவாக சைவ உணவு உட்கொள்ளும் நாட்களில் "ரசம்" நிச்சயமாக எங்க வீட்டில் இருக்கும். பொதுவாக வெள்ளிகிழமைகளில் பல ஈழ தழிழர்கள் வீட்டில் ரசம் இல்லாமல் இருப்பதில்லை என்றே கூறலாம். சொதியை நேருக்கு நேரே மோதும் தகுதி கொண்டது இது தான். பல வகையான ரசம் இருப்பினும், மிளகு ரசத்திற்கு குடுக்கப்படும் ஆதரவு போல் மற்றவற்றுக்கு கிடைப்பதில்லை எனலாம். திடிரென சமைக்கும் போது கை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

இடிச்ச சம்பல்    
May 31, 2008, 6:00 am | மறுமொழிகள்

இடிச்ச சம்பலை பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஈழத்தவர்களிடையே மிகவும் பிரபல்யமான உணவு வகை என்பதை தான் முதலில் சொல்ல வேண்டும். இடி சம்பல் / இடிச்ச சம்பல் என செல்ல பெயர்களால் அழைக்கப்படும் இந்த சம்பல் ஈழத்தில் அனைத்து ஊர்களிலும் பிரபலம் (என்ன உறைப்பு தான் ஊருக்கு ஊர் கூடி குறையும்). அதே இது சமயம் தினமும் செய்யும் ஒரு சாதாரண உணவும் கூட. ஈழத்தில் தென்னை மரங்கள் அதிகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

கத்தி குடுத்த வீரத்தழும்புகள்    
May 26, 2008, 11:19 pm | மறுமொழிகள்

சமையல் என்றது எத்தனை பெரிய விசயம் என்று உங்களுக்கே தெரியும். வலைப்பூக்களையே எடுங்க, சமையல் வலைப்பூக்களில் மறுமொழிகள் வருதோ இல்லையே, பல பார்வையாளர்களா இருப்பாங்க. சிலருக்கு சமைக்க பிடிக்கும். சிலருக்கு சமைச்சாகணுமே என அலுத்திட்டு சமைப்பாங்க. எது எப்படியாயினும் சமைக்கிறதில மூன்று கொடுமையான விசயம் இருக்கு.1. கத்தியால் வெட்டுவது [மத்தவங்களை இல்லப்பா][நம்ம...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

சீனிச்சம்பல்    
May 19, 2008, 3:47 am | மறுமொழிகள்

வீட்டில் அடிக்கடி செய்யும் பதார்த்த என்பதாலேயே என்னமோ சீனிசம்பல் செய்முறை எழுதணும் என தோணவேயில்லை. யாழில் சகோதரன் லீ கேட்டுக்கொண்டதிற்காக செய்முறையை எழுதியே ஆகணும் என தோன்றி எழுதுகின்றேன்.சீனிசம்பல் என்றதும் “அடப்பாவிகளா சக்கரையிலுமா சம்பல்?” என என்னிடமே பலர் கேட்டதுண்டு. யாரோ பேர் வச்ச மகராசன் இப்படி வச்சிட்டான். நாங்க இப்ப பதில் சொல்லிட்டு இருக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

முட்டை பீட்ஸா    
May 16, 2008, 9:07 pm | மறுமொழிகள்

Dedicated to லக்கிண்ணா :)பொதுவா நாம முட்டை பொறியல் செய்யும் போது வெங்காயம், மிளகாயை சின்னதா அரிந்து அதை முட்டையுடன் போட்டு நல்லா அடிச்சு பொரிப்பம். ஆனால் இதில தனி தனியா செய்யனும். அவ்வளவு தான் வித்தியாசம். ஆனால் சுவையில் வித்தியாசம் கட்டாயம இருக்கு. தேவையானது:3 முட்டை1 வெங்காயம்2 பச்சை மிளகாய்1 தே.க மிளகுத்தூள்1/2 தே.க உள்ளி+இஞ்சி விழுதுஉப்பு தேவைக்கேற்பகறிவேப்பிலைகொத்தமல்லி இலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

கத்தரி சாம்பார்    
May 11, 2008, 3:28 am | மறுமொழிகள்

அதென்ன கத்தரி சாம்பார் என்று கேட்பிங்களே? நீங்க கேட்காட்டியும் நான் சொல்லிதான் தீருவேன். வீடுகளில் பொதுவாக வெங்காய சாம்பார் அடிக்கடி வைப்பார்கள். அதே செய்முறையில் வெங்காயத்திற்கு பதில் கத்தரிக்கயை போட்டால் எப்படி இருக்கும் என ஒரு கேள்வி என்னுள்ளே. உடனே அதை பரிசோதித்து தான் பார்த்திடுவமே என ஆரம்பித்தேன். [நீ சமைப்பதே ஒரு பரிசோதனை தானே என்ற கேள்வியெல்லாம் இங்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பாலக் பன்னீர் (Tofu)    
May 5, 2008, 11:31 pm | மறுமொழிகள்

இங்கு எந்தவொரு இந்திய உணவகத்திற்கு சென்றாலும் எப்போதும் கிடைக்க கூடியது பாலக் பன்னீர். பன்னீரும், ஸ்பினச் கீரையும் சேர்த்து செய்திருப்பார்கள். சின்ன வயதில் எனக்கு பாலக் பன்னீரை கண்ணிலும் காட்டக் கூடாது. அதற்கு காரணம் பக்கத்து வீட்டு கிழவி தான். என் பெரியண்ணனும், அவரின் பேரனும் நண்பர்கள். ஆக அடிக்கடி கிழவியின் சமையலை சாப்பிட வேண்டிய கட்டாயம் இருந்தது. பச்சை களியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

முட்டை சம்பல் (Egg Sambol)    
April 26, 2008, 12:04 am | மறுமொழிகள்

மலேசியா, சிங்கப்பூருக்கு செல்லும் நேரங்களில் எல்லாம் நான் அதிக நேரம் செலவு செய்வது புத்தகக்கடைகளில் தான். அதுவும் செய்முறை புத்தகங்களில் ஐந்தையாவாது வாங்காமல் வீடு திரும்புவதில்லை. இரு நாட்டிலும் மலே சமையல், சீன சமையல், இந்திய சமையல், இது அனைத்தும் கலந்த ரீ-மிக்ஸ் சமையல் என கிடைக்கும். அதிலும் உடாங் சம்பல் (இறால் சம்பல்), நசி லமக், முட்டை சம்பல் என்றால் யாருக்கு தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு