மாற்று! » பதிவர்கள்

Sai Ram

சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கிறது கடவுளின் செல்போன்    
October 19, 2010, 6:21 pm | தலைப்புப் பக்கம்

கறுப்பு எறும்புகள். முனைந்து கோலம் போடும் பெண்ணைப் போல சுவற்றில் வரிசை கட்டி கொண்டிருக்கின்றன. எறும்புகளைப் பார்ப்பதும் பிறகு அலுவலக வெள்ளைப் பலகையை பார்ப்பதுமாய் இருக்கிறேன். இன்று எனது கணவரின் பிறந்த நாள். இன்றாவது சீக்கிரம் போக வேண்டுமென நினைத்திருந்த போது தான் வழக்கம் போல ஒரு குழப்பம். அவசரம்! எமர்ஜென்சி! அலுவலக வெள்ளைப் பலகையை எறும்புகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மனிதர்கள் - வீடு வீடாக சோப்பு விற்கும் மூதாட்டி    
June 25, 2009, 6:01 pm | தலைப்புப் பக்கம்

நகரத்தின் இறுக்கம் சில சமயம் யதேச்சையாக பார்க்க கிடைக்கும் சில காட்சிகளில் வெளிபடுகிறது. ஓர் ஐம்பது வயது முதியவர் டிராபிக் சிக்னலில் தனது ஸ்கூட்டருடன் விழுந்து விட்டார். சமாளித்து எழுந்து அதை உதைத்து ஸ்டார்ட் செய்ய முயல்கிறார். ஸ்கூட்டர் மீண்டும் சரிகிறது. சிக்னலில் பச்சை விளக்கு எரிகிறது. முதல் ஆளாய் நிற்கும் இந்த முதியவரை நோக்கி ஒரே சமயத்தில் ஒலிக்கின்றன பல...தொடர்ந்து படிக்கவும் »

உலகத்தில் பட்டினியால் பாதிக்கபட்ட மக்களில் 50% பேர் இந்தியர்கள்    
June 22, 2009, 5:45 pm | தலைப்புப் பக்கம்

நமது உலக மக்கள் தொகை இந்த பதிப்பு எழுதபட்டு கொண்டிருக்கும் சமயம் 692 கோடியை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறது. இதே சமயம் ஜக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் உலகத்தில் இப்போது 100 கோடி பேர் பட்டினியால் வாடுவதாக சொல்லபட்டு இருக்கிறது. அதாவது ஏழு பேரில் ஒருவர் பட்டினியால் வாடுவதாக பொதுபடையாக கொள்ளலாம் இந்தியாவின் நிலை இன்னும் மோசம் உலக ஜனதொகையில் ஆறில் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

டைம் இதழ் சொல்கிறது - ஓபாமா ஈழ தமிழர்களை காக்க தவறி விட்டார்    
May 12, 2009, 8:14 pm | தலைப்புப் பக்கம்

டைம் இதழில் சமீபத்தில் ஒரு கட்டுரை வெளி வந்து இருந்தது. பொதுவாக வெளிநாட்டு இதழ்கள் மற்ற நாட்டு பிரச்சனைகளை சரியாக அணுகுவதில்லை என்பது தான் பல சமயம் நடப்பது. ஆனால் இந்த கட்டுரையை படித்தவுடன் என்னால் என் கண்களை நம்ப முடியவில்லை. அந்த கட்டுரையின் சுருக்கத்தை கீழே தந்து இருக்கிறேன். ஓபாமா வாய் மொழி வீரர் மட்டும் தானா?ஓபாமா தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் சொன்ன ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

வோட்டு போடுவது மட்டும் தான் ஜனநாயக கடமையா?    
April 20, 2009, 12:27 pm | தலைப்புப் பக்கம்

ஜனநாயகம் என்பது என்ன?இன்று நடைமுறையில் இருப்பது உண்மையான ஜனநாயகம் தானா? ஜனநாயகம் என்பது மக்களே தங்களை தாங்களே ஆண்டு கொள்ளும் முறை என்று சொல்லபடுகிறது. அதில் கண்ணுக்கு தெரியாத சின்ன திருத்தம் ஒன்று இருக்கிறது. மக்கள் தங்களுக்கான பிரதிநிதியை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலமாக தங்களை ஆண்டு கொள்ளும் முறை என வரையறுக்கபடுகிறது. பிரதிநிதிகள் ஒழங்கானவர்கள் தானா என எப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

வருகிற தேர்தலில் ஈழப்பிரச்சனை பிரதான தாக்கம் ஏற்படுத்துமா?    
April 12, 2009, 5:16 pm | தலைப்புப் பக்கம்

வருகிற நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் ஈழப்பிரச்சனை தாக்கம் ஏற்படுத்தும் என்பது உண்மை. ஆனால் பிரதான தாக்கம் ஏற்படுத்துமா என்பது தான் கேள்வி. இந்திரா காந்தி இறந்த போது எழுந்த அனுதாப அலை, ஒரு சமயம் ஜெயலலிதா அரசின் மீதான அதிருப்தியால் அவரது கட்சியை படுதோல்வியை சந்திக்க வைத்த பொது அதிருப்தி இது போன்று ஈழப்பிரச்சனையும் வருகிற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?தமிழக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

குற்றவுணர்வின் கண்கள்    
April 7, 2009, 4:01 pm | தலைப்புப் பக்கம்

மண் புழுதி தழுவியிருக்கும் தார்சாலையின் ஓரம் ஒரு கடை முன்னால் தொங்குகிறது அந்த போஸ்டர். போஸ்டரில் நெகிழ்ந்த ஆடையில் தாராளமாய் தன்னை காட்டும் நடிகை. காகிதம் தான். விரிகின்றன என் கண்கள். ஆனால் முதுகை சுடுகின்றன ஆயிரம் பார்வைகள். நிஜத்தில் அல்லாத இந்த ஆயிரம் பார்வைகளையும் யாருமற்ற பாலைவனத்திலும் எனது முதுகில் உணர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மனிதர்கள் - சர்வர் சுந்தரம்    
March 22, 2009, 1:03 pm | தலைப்புப் பக்கம்

நடுத்தர வர்க்கத்திற்கான ஓட்டல்களில் சர்வர்கள் அலட்சியம் தாங்க முடியவில்லை. தண்ணீர் டம்ளர்களில் விரலை நுழைத்து அதை நமக்கு பருக தந்து விட்டு போகிறார்கள். என்ன இருக்கு என்றால் ஒரே நான்கு ஐட்டம் தான் சொல்வார்கள். "இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா." பக்கத்து டேபிளில் ஒருவர் குழி பனையாரத்தையும், இன்னொருவர் சாம்பார் இட்லியையும் சுவைத்து கொண்டிருக்கும் போது இந்த நான்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

தெருவெங்கும் முகமூடி அணிந்த மனிதர்கள்!    
March 16, 2009, 6:40 pm | தலைப்புப் பக்கம்

தெருவெங்கும் முகமூடி அணிந்த மனிதர்கள்! ஒவ்வொரு வீட்டிற்கு வெளியேயும் தொங்குகின்றன தொய்ந்து நைந்து போன முகமூடி! வீட்டிற்குள் வந்ததும் அவரவர் கண்ணாடியில் பார்த்து கொள்கிறார்கள் முகமூடி கழட்டபட்ட தங்கள் முகங்களை. முகமூடியை கழட்டியும் முகத்தில் தெரியவில்லை முகம். சிலர் மட்டும் கழுவி கொண்டே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை வாழ்க்கை

இருபது வருடங்கள் கழித்து ஒரு சந்திப்பு    
February 9, 2009, 6:30 pm | தலைப்புப் பக்கம்

இலையுதிர் காலம் போல நீ. காற்றில் படபடக்கும் இலைகளாய் தொய்ந்த குரல். கண்களில் குழப்பம். பேச்சில் முணுமுணுப்பின் ஆதிக்கம். சம்பந்தமில்லாத அழுகை. புரியாத சிரிப்பு. தள்ளாமையை மறைக்க முயலாத வெகுளித்தனம் புதுசு. பொங்கிய பழைய நினைவுகள் பழுப்பேறிய காகிதங்களாய். கனமாய் இருக்கிறது யதார்த்தம். அந்த நீண்ட பிரிவிற்கு பின்நாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தமிழினி மெல்ல சாகும்    
January 28, 2009, 6:47 pm | தலைப்புப் பக்கம்

எந்த ஒரு செயல் நடப்பதற்கு முன்பும் அது நடக்க போகிறது என்கிற அறிவிப்பு காட்டுகிற விதமான விஷயங்கள் நடப்பதுண்டு. ஆங்கிலத்தில் சுருக்கமாக Symptoms. தமிழ் இனத்திற்கும், தமிழ் பாரம்பரியத்திற்குமான சாவு மணி பல வருடங்களுக்கு முன்னாலே அடிக்கபட்டாலும் அதன் சாவின் முன்னோட்டம் இப்போது ஈழத்தில் அடித்து வீழ்த்தப்படும் அப்பாவி தமிழ் மக்களின் சாவுகளாலும் அதனை தொடர்ந்து எழும் தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

அதிகாரம் ஆணையிட்டால் மக்கள் கொல்லவும் துணிவார்கள் - ஆய்வு முடிவு    
December 28, 2008, 2:08 pm | தலைப்புப் பக்கம்

நமக்கு தெரிந்த தகவல் தான். ஆனால் ஆராய்ச்சி முடிவாய் வெளிவரும் போது அதிர்ச்சியாக தானே இருக்கிறது. அதிகாரம் படைத்தவர் முதலாளியோ, கம்பெனி எம்.டியோ, சிறுவர்களாய் இருந்தால் தந்தையோ, அதிகாரமிக்கவர் யாரேனும் ஆணையிட்டால் அதனை ஏற்று பெரும்பாலனோர் கொல்லவும் துணிவார்கள் அல்லது குறைந்தபட்சம் மற்றவர்களை சித்ரவதை செய்யவும் துணிவார்கள். இது சாந்தா கிளாரா பல்கலைகழகத்தில் உள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பண்பாடு

"இனி நம்ம சாதி பொம்பளைங்க சாதி மாறி ஆசை வைக்க கூடாது"    
December 15, 2008, 6:43 pm | தலைப்புப் பக்கம்

மண் புழுதி தெருவில் பறக்க அந்த அக்காவை அவர்கள் இழுத்து சென்ற காட்சியை அவள் கண்டது ஐந்து வயது சிறுமியாக. முப்பது நாற்பது வருடங்கள் உருண்டோடினாலும் அந்த மண் புழுதி இன்னும் மறையவே இல்லை. அதோடு, "இனி நம்ம சாதி பொம்பளைங்க சாதி மாறி ஆசை வைக்க கூடாது," என அந்த பெண்ணின் மாமன் சாராய வாடையோடு கர்ஜித்ததும்; பெருங்குரலெடுத்து அந்த பெண்ணின் தாயார் மண்டியிட்டு அழுததும்; அடுத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

புஷ்ஷின் மீது ஷு எறியபட்டதை பார்த்து சந்தோஷபட்டீர்களா நீங்கள்?    
December 15, 2008, 4:35 pm | தலைப்புப் பக்கம்

இன்று காலை நான் தூங்கி விழித்த போது என் படுக்கைக்கு நேர் எதிரில் இருந்த தொலைக்காட்சி பெட்டியில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஈராக்கிய பத்திரிக்கையாளர் ஒருவர் தனது ஷுவை எறிந்த காட்சி ஒளிபரப்பாவதை பார்த்தேன். இப்படியாக இந்த காட்சியை பார்த்து என்னுடைய நாள் தொடங்கியது குறித்து ஏனோ எனக்குள் ஒரு மகிழ்ச்சி. எதற்காக இந்த மகிழ்ச்சி? இன்று முழுவதும் நான் சந்தித்த...தொடர்ந்து படிக்கவும் »

இலங்கை கிழக்கு மாகாணத்தில் கருணா படைகளால் மனித உரிமை மீறல் - பிரபல மனி...    
November 26, 2008, 7:16 pm | தலைப்புப் பக்கம்

உலகளவில் பிரபலமான தன்னார்வ தொண்டு நிறுவனம் ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் (HRW - Human Rights watch.) சர்வதேச அளவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை தைரியமாய் பகிரங்கபடுத்துவதில் இந்த தன்னார்வ நிறுவனம் பெயர் பெற்றது. சில நாட்களுக்கு முன்பு இந்த நிறுவனம் இலங்கையில் உள்ள கிழக்கு மாகாண அரசாங்கத்தை குற்றம் சாட்டி, அங்கு கடுமையான மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக தெரிவித்து இருக்கிறது. இலங்கையின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

ஒரு துக்க நாள்    
October 21, 2008, 3:25 am | தலைப்புப் பக்கம்

அன்று ஜன்னல்கள் அடைக்கபட்டிருந்தன. இருளை அறையிலிருந்து வெளியே விடாதபடி துக்க வெப்பத்தில் மிதந்து கொண்டிருந்தாள் அவள். கடந்த கால காட்சிகளை தள்ள தள்ள அவை திரும்ப மேல் எழும்பி பரிகாசம் செய்தன. சுற்றி இறைந்து கிடந்த காதல் கடிதங்களில் இருந்து உயிரற்ற வார்த்தைகள் உதிர்ந்து கொண்டே இருந்தன கண்ணீரை போல. 'இது ஏற்கெனவே ஒத்திகை பார்த்து காத்திருந்த தருணம் தான்,' என உறைத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நீங்கள் எழுதும் வலைப்பதிவின் நோக்கம் என்ன?    
August 21, 2008, 12:05 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் வலைப்பதிவில் பணம் சம்பாதிக்க முடியாது என்பது 99.99% உண்மை. அப்படியானால் தமிழ் வலைப்பதிவர்களின் நோக்கம் தான் என்ன? ஒரு தமிழ் வாத்தியார் தனது சிற்றூரில், அங்கு நூலகத்தில் தான் வழக்கமாக பங்கேற்கும் வாராந்திர இலக்கிய நட்பு கூட்டத்தில், வலைப்பதிவில் எழுதுவதால் தனக்கு தனி மரியாதை கிடைக்கிறது என கருதுகிறார். எழுத்தாளர்கள் பலர் இப்போது வலைப்பதிவு மீது கவனம் செலுத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

எழுத்தாளனை துரத்தும் மரண பயம்    
August 18, 2008, 7:23 pm | தலைப்புப் பக்கம்

என் கவிதையின் கதாநாயகி இன்று என் கனவில் வந்தாள்.  என்னை கொல்லும் உக்கிரத்தோடு வந்தவள் என்னை கேள்வி கேட்டு நேரத்தை வீண்டிக்க விரும்பவில்லை. அழுவதற்கும் அவள் தயாராக இல்லை. நான் அணிவித்திருந்த வெள்ளை உடையை துறந்து கறுப்பு ஜீன்ஸ் பேண்டில் இருந்தவளை முதலில் அடையாளமே தெரியவில்லை. என்னை கொல்வதற்கு ஆயுதங்களை கொண்டு வரவில்லை. கண்களாலே கொல்ல முடியுமென நினைத்தாள் போலும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வலைப்பதிவர்களை கைது செய்ய முடியுமா?    
August 17, 2008, 4:08 pm | தலைப்புப் பக்கம்

டாக்ஸிக் ரைட்டர் என்றொரு வலைப்பதிவர். இந்த வருடம் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இவர் பிளாக்கரில் உள்ள தன் வலைப்பதிவில் மும்பையை சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனத்தை பற்றி சில குற்றச்சாட்டுகளை எழுதியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை அந்த கட்டுமான நிறுவனத்தால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அந்த வலைப்பதிவருக்கு எதிராக மான நஷ்ட ஈடு வழக்கு தொடுப்பதாக முடிவு செய்தார்கள். இதற்காக...தொடர்ந்து படிக்கவும் »

2 குழந்தைகள் - ஒன்று வேண்டாம்! ஒன்று வேண்டும்!    
August 16, 2008, 10:12 am | தலைப்புப் பக்கம்

இந்த மாதம் இரண்டு குழந்தைகளை பற்றிய இரு தனி செய்திகள் பத்திரிக்கைகளில் சர்ச்சைகளாக உருவெடுத்தன. ஒன்று மும்பையில் உள்ள ஹரீஷ் மற்றும் நீகிதா மேத்தா தம்பதியினர் கருவில் உள்ள தங்கள் (25 வார வயதுள்ள) குழந்தைக்கு இருதயத்தில் குறைபாடு உள்ளது கண்டுபிடிக்கபட்டுள்ளதால் அதனை கருகலைப்பு செய்ய அனுமதி கேட்டு மும்பை உயர் நீதிமன்றம் படியேறியதும், அதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

சுதந்திர நாட்டின் மனிதர்கள்    
August 15, 2008, 9:09 am | தலைப்புப் பக்கம்

சென்னை அண்ணா நகர். ஷேர் ஆட்டோ ஒன்றில் இரு பெண்மணிகள் பல காலம் கழித்து சந்திக்கிறார்கள். இருவருமே மத்தியவர்க்கத்தினர். வயதான பெண்மணி ஆஸ்திரேலியாவில் டாக்டருக்கு படிக்கும் தனது மகளை பற்றி பேசி கொண்டு வருகிறார். "அவ பத்தாவது, பனிரெண்டாவது படிக்கும் போது இரண்டு தடவையும் நான் இரண்டு மாசம் லீவு எடுத்து வீட்டுலயே இருந்தேன். அவளுக்கு சூப்புன்னா அவ்வளவு இன்ட்ரெஸ்ட். ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

நினைவலைகள்    
August 5, 2008, 4:40 am | தலைப்புப் பக்கம்

பாதி சொம்பு அரிசி எடுக்க அடுக்கி வைத்த மூட்டைகளில் மேல் மூட்டையை பிரிக்கவும் கொட்டி விழுந்து தரையில் பரவிய அரிசி போல் ஒரு நினைவு கோர்த்து இழுத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஆதி மொழி    
July 21, 2008, 7:54 pm | தலைப்புப் பக்கம்

மேகங்கள் கர்ஜித்து மழை ஊற்ற தயாரானது போல புயல் கிளம்பியது போல போலீஸ்காரர்கள் ஓடி வரவும் சைக்கிள் ரிக்ஷாக்காரர்கள் அவசரமாய் ஓட எத்தனிக்க பிளாட்பார்ம் வியாபாரிகள் பையை சுருட்டி தப்பிக்க முயன்றார்கள். போர்களமாய் சாலை பரபரப்பானது. ஒற்றை செருப்புகள் நிறைந்திருக்க, லத்தி உடலில் விழும் சத்தமும், வலியில் சிலர் கத்துவதும், பீதியுற்ற பார்வைகளும் அங்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நிலவில் முதல் காலடி    
July 19, 2008, 6:31 pm | தலைப்புப் பக்கம்

ஒரு கனவு மெய்ப்பட்ட சம்பவம் அது; நிலவினில் மனிதன் காலடி வைத்தான். அறிவியல் முன்னேற்றங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல கனவுகளையும் மாற்றி விட்ட தருணமது. அமெரிக்க 'நாசா' விண்வெளி ஆய்வு மையத்தின் 'அப்போலோ' திட்டங்கள் நிலவுக்கு மனிதனை அழைத்துச் செல்லும் குறிக்கோளுடன் தொடங்கப்பட்டவை. ஆறு அப்போலோ பயணங்கள் (அப்போலோக்கள் 11, 12, 14, 15, 16 & 17) இந்தக் குறிக்கோளை அடைந்தன. அப்போலோ 11, 16 ஜூலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

பணமில்லாதவன் சாகட்டும்    
July 17, 2008, 7:47 am | தலைப்புப் பக்கம்

என்னுடன் பணி புரிந்த நண்பர் ஒருவரின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. உயிருக்கு போராடி கொண்டிருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவரது உடல்நிலை அவரை வீட்டோடு முடக்கியிருந்தது. நண்பரின் தாயோ மனநிலை குன்றியவர். நண்பர் ஒரே மகன். திருமணமும் ஆகவில்லை. அவரது வாழ்க்கையே மற்றவர்கள் பார்த்து பாவப்படும் அளவில் இருந்தது. இதில் திடீரென தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

Love lies    
June 16, 2008, 7:46 am | தலைப்புப் பக்கம்

பல வருடங்கள் கழித்து அன்று கல்லூரி நண்பன் ஒருவனை பார்த்தேன். தன் புது ஹோண்டா காரில் வந்திருந்தான். பரஸ்பர நலம் விசாரித்தல், பிறகு நண்பர்களை பற்றி குலாவுதல் என உற்சாகமாய் பேசி கொண்டிருந்தோம். ஒரு நல்ல ஏசி பாருக்கு மது அருந்த அழைத்து சென்றான்.தொடர்ந்து இரண்டு மணி நேரம் உரையாடி விட்டு அடுத்து பேச என்ன என தெரியாமல் ஓர் அமைதி நிலவியது. பாரில் ஓர் ஓரத்தில் சுவரில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மனிதர்கள் - சினிமாவில் தொலைந்தவன்    
June 14, 2008, 6:18 am | தலைப்புப் பக்கம்

ஒரு சினிமா படப்பிடிப்பு தளம். வழக்கம் போல எல்லாரும் பிசியாக இருக்கிறார்கள். ஓர் ஓரத்தில் சிவா நின்று கொண்டிருக்கிறான். நான்கு நாள் தாடி. மெலிந்த உருவம். ஒரு கோணத்தில் அந்த சினிமா டைரக்டரை பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்தது போலவே இருக்கிறது. டைரக்டரின் கடைக்கண் பார்வைக்காக தான் சிவா நின்று கொண்டிருக்கிறான். அவரும் தினமும் அவனை பார்க்கிறார். பார்க்கிறார் என்பதை விட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

மனிதர்கள் - நான் கடவுள்    
June 11, 2008, 5:00 am | தலைப்புப் பக்கம்

அவரது பெயர் சீனிவாசன். சீனா என்று சொன்னால் தான் பலருக்கு அவரை தெரியும். திரைக்கதை எழுதுவதில் திறமைசாலி. பல நிறுவனங்களில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கபட்டன. முழு திறமையையும் காட்ட வேண்டிய காலகட்டத்தில் திடீரென மனநிலை பிறழ்ந்து பைத்தியமாகி போனார்.சீனா வட சென்னையில் ஒரு மனநல காப்பகத்தில் இருந்த போது தான் நான் அவரை முதன்முதலாக சந்தித்தேன். நண்பர்களுடன் வேறொரு பணிக்காக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

மனிதர்கள் - கொலை செய்யபட்ட ரவுடி    
June 9, 2008, 6:26 am | தலைப்புப் பக்கம்

பாண்டிச்சேரி பஸ் நிலையம் அருகே உள்ள கண் டாக்டர் தோட்டம் பாலியல் தொழிலுக்கும் ரவுடித்தனத்திற்கும் பேர் பெற்றது. இங்கே சில வருடங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். என்னுடன் பணபுரியும் பாண்டிச்சேரி நிருபர் அங்குள்ள மனிதர்களை எனக்கு அறிமுகபடுத்தி வைத்தார். சந்துரு என்ற 20 வயது இளைஞன் எனக்கு அறிமுகமானது இப்படி தான்.சந்துருவின் மீது பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன் - புது தகவல்கள்    
June 8, 2008, 5:38 pm | தலைப்புப் பக்கம்

நாம் வாழும் பிரபஞ்சம் எப்படி உருவானது? அதற்கு முன் என்ன இருந்தது? தொடக்கத்திற்கு முன் எதாவது இருந்ததா? ஒன்றுமில்லாத நிலையில் இருந்து பிரபஞ்சம் உருவானதா? ஒன்றுமில்லாத நிலை என்று ஒன்றுண்டா? இப்படி பல கேள்விகள் எல்லாருக்கும் உண்டு. இதற்கெல்லாம் அறிவியல் பதில் கண்டு பிடித்து விட்டதா என்றால் இல்லை. ஆனால் இப்படியாக இருக்கலாம் என சில அறிவியல் தத்துவங்கள் உண்டு. அத்தகைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

மனிதர்கள் - காப்ரே நடன பெண்ணை மணந்தவன்    
June 7, 2008, 5:55 pm | தலைப்புப் பக்கம்

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பணிபுரிந்த போது எனக்கு கல்யாண் என்னும் மனிதரின் அறிமுகம் கிடைத்தது. கல்யாணிற்கு 35 வயதிருக்கும். சினிமாவில் சின்ன சின்ன ரோல்களில் அவ்வபோது நடித்து கொண்டிருப்பவர். தவிர ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொருவிதமான வேலை செய்து பிழைத்து கொண்டிருப்பவர்.சில வருடங்களுக்கு முன்பு எல்லா ஆண்களை போலவே கல்யாணிற்கும் காதல் பிறந்தது. பிறந்த இடம் தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

ஜுன் 6 - இந்தியாவில் இன்று பெரும்பாலனோருக்கு பிறந்த நாள்    
June 6, 2008, 4:56 pm | தலைப்புப் பக்கம்

"எங்களுக்கு எல்லா அரசியல்வாதிகளோட, நடிகர்களோட பிறந்த நாள் நல்லா நினைவிருக்கு. மறக்காம அன்னிக்கு ஏரியாவுல எல்லாருக்கும் சாக்லெட் கொடுத்து கொண்டாடுவோம். ஆனா எங்க பிறந்த நாள் எங்களுக்கு தெரியாது."இது ஒரு தமிழ் படத்துல கேட்ட வசனம். தமிழக சமூகங்கள் பலவற்றிற்கு பிறந்த நாளை நினைவில் வைத்திருப்பதும் கொண்டாடுவதும் சமீப காலமாக வந்த பழக்கம். இதனால் தான் பள்ளிக்கூடங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மனிதர்கள் - போதையே வாழ்க்கை    
June 5, 2008, 5:10 pm | தலைப்புப் பக்கம்

லீமா அவனுடைய பெயர். மணிப்பூரை சேர்ந்தவன். என்னுடன் கல்லூரியில் படித்தவன். மணிப்பூர் மாநிலத்தில் ஒரு பெரிய செல்வந்தர் குடும்பம் அவனுடையது. தாய் சிறு வயதிலே இறந்து விட்டாள். தந்தையின் நான்காவது மனைவியின் பெயர் கூட அவனுக்கு நினைவில்லை. மணிப்பூரில் அவனிருந்த பகுதியில் தினமும் கலவரம் நடக்கும் என்பதால் தொலைதூரத்தில் அவனை படிக்க அனுப்பியிருக்கிறார் அவனது தந்தை. மற்றொரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

மனிதர்கள் - பிரம்பு டீச்சரம்மா    
June 3, 2008, 7:29 pm | தலைப்புப் பக்கம்

நான் பள்ளியில் இருந்த போது பிரம்பிற்கு பேர் பெற்ற ஒரு டீச்சரம்மா இருந்தார்கள். அவரை கண்டாலே மாணவர்கள் நடுங்குவார்கள். ஐந்தாம் வகுப்பு வரை இருந்த ஒரு கிருஸ்துவ பள்ளி அது. ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் தாம் மூத்தவர்கள். அவர்களின் வகுப்பு ஆசிரியை தான் நம்ம பிரம்பு டீச்சரம்மா.நான்காம் வகுப்பில் இருக்கும் போதே அடுத்த வருடம் பிரம்பு டீச்சரம்மாவிடம் பிரம்படி வாங்க வேண்டுமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

காதலிக்காக காத்திருக்கும் போது நடந்த விபத்து    
June 3, 2008, 7:46 am | தலைப்புப் பக்கம்

தூரத்தில் காதலியின் உருவம் தோன்றும் போது காத்திருத்தலின் சுவை குன்றி, கண்களின் தேடுதல் மங்கி இரு கால்களிடையே தலையை கொடுத்து அழுது கொண்டிருந்தேன் நான்.ஆறுதல் வார்த்தைகளோ அன்பு அரவணைப்போ எதிர்பார்க்கவில்லை. போய் விடு.எனக்கான துக்கத்தை நான் தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சபரிமலை மகரவிளக்கு மனிதர்களால் உருவாக்கபடுகிறது என ஒப்பு கொண்டது தேவஸ்...    
June 1, 2008, 2:17 pm | தலைப்புப் பக்கம்

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பக்தர்களின் பார்வைக்கு காண கிடைக்கிறது மகரவிளக்கு. கோயில் பிரதேசத்திற்கு அருகில் இருக்கும் வனத்தில் ஓர் ஓளி தோன்றுகிறது. சில நிமிடங்களே தோன்றும் இந்த ஒளியினை மகரவிளக்கு என மிக புனிதமாக பக்தர்கள் கருதி வருகிறார்கள். இந்த ஒளியை பார்க்க மிக பெரிய கூட்டம் திரள்வதுண்டு....தொடர்ந்து படிக்கவும் »

கரிய வெயிலாய் இருட்டு    
May 20, 2008, 9:44 am | தலைப்புப் பக்கம்

கரிய வெயிலாய் இருட்டுதுளிதுளியாய் வியர்வையை உறிஞ்ச,குரல் நூறு குரலாய் எதிரொலிக்கும்முடிவில்லா குகையினுள் தனியே நின்று கொண்டிருப்பதுபயமாக இருக்கிறது.கால்கள் சோம்பினாலும்பயம் முன்னால் இழுத்து செல்கிறது.இங்கு வெறுமையை தவிர வேறு எதுவும் இல்லையா?மனம் தன் அனல்வெறுமையில்ஆயிரம் ஆவிகள் என்னை சூழ்ந்து நிற்பதை பார்க்கிறது.பிரகாசிக்கும் வெண் பற்கள்.அதன் மேலே இரத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தலைப்பு செய்தியை தீர்மானிப்பது யார்?    
May 15, 2008, 11:38 am | தலைப்புப் பக்கம்

ஒரு காலத்தில் எல்லா பேப்பர்களிலும் ஆட்டோ சங்கர் பற்றிய தகவல்களாய் இருந்தது. பிறகு வீரப்பன். ஹர்ஷத் மேத்தா, சிவகாசி ஜெயலட்சமி, டாக்டர் பிரகாஷ் என ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு செய்தி பிரதானமாய் ஊடகங்களில் அடிபடும். பிறகு நிறைய செய்தி தொலைக்காட்சி சானல்கள், பரபரப்பு பத்திரிக்கைகள் தோன்றின. ஊடகங்கள் மத்தியில் வளரும் போட்டி மனப்பான்மை காரணத்தால் இன்று பெரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

மொட்டை மாடியில் உலாவுபவர்கள்    
May 13, 2008, 7:00 am | தலைப்புப் பக்கம்

மொட்டை மாடியில் தொடர்ந்து உலாவுபவர்களைசாதாரணமாய் வெளியிடங்களில் இனம் காண முடியாது.நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களும்இருபது வயதிற்கு உட்பட்டவர்களுமே அதிகம்.கிராமத்தில் தனது வீடு மட்டுமே காங்கிரீட் வீடு என்கிறஅகங்காரத்தின் காரணத்தினால்தன் மொட்டை மாடியில் உலா வந்த சிறுவன் பாண்டி.இளைஞன் ஆன பின் கல்லூரி ஹாஸ்டலிலேமொட்டை மாடியில் தான் அரட்டை கச்சேரிவிடிய விடிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

22 ஆண்டுகளாக ஒரே அறையில்    
May 6, 2008, 6:58 am | தலைப்புப் பக்கம்

இருளை தவிர வேறு பொருளில்லை.என் குரலை தவிர வேறு ஓலியில்லை.தோல் எல்லாம் சொரசொரப்பாய் உதிர்கிறது.தரையெங்கும் என் தலைமுடிகள் பரவி கிடக்கின்றன.காலும் கையும் ஒரே பணியை தான் செய்கின்றன.இந்த நான்கு சுவர்களை தாண்டி உலகம் அழிந்து போயிருக்கக்கூடும்.பஞ்சு மேகங்களாய் கடந்த கால நினைவுகள்தெளிவில்லாமல் அவ்வபோது கனவில் தோன்றும்.என் பழைய மொழியில் உறுமல் மட்டுமே நினைவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வெப் 2.0 & வாழ்க்கை 2.0    
April 23, 2008, 8:04 am | தலைப்புப் பக்கம்

இணையத்தின் பாய்ச்சல் அசுரத்தனமாக இருந்தாலும் அதன் கிளை அம்சங்கள் மிக விரைவிலே அழிந்து விடுகின்றன என்பதை பற்றி ஏற்கெனவே இங்கே நாம் பேசியிருக்கிறோம். இதன் பின்னணியில் நமது வாழ்க்கை இன்று அதன் முந்தைய வெர்ஷன் 1.0லிருந்து புது வெர்ஷனான 2.0க்கு மாறி விட்டது என்றே தோன்றுகிறது. இதன் மூலம் வாழ்வின் பல அம்சங்கள் தனக்கான கால சக்கரத்தை இணையம் போலவே மாற்றி அமைத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இறந்தும் இருக்கும் மனிதர்கள்    
April 8, 2008, 4:45 pm | தலைப்புப் பக்கம்

இறந்த போன மனிதர்கள்உயிருடன் இருப்பதாய்பாவ்லா செய்கிறார்கள்.தெருவெங்கும் இவர்களது கூட்டம்தங்களை தாங்களே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தூக்கத்தில் வாழ்பவர்கள்    
April 1, 2008, 5:13 am | தலைப்புப் பக்கம்

நாய் முகம் போன்று அந்த வீட்டு முகப்பு. சரிந்தே விடுவேன் என பயமுறுத்தும் நான்கு அடுக்கு.படிக்கட்டுகளுக்கு கீழும் ஓர் அறை.பக்கத்து வீட்டுக்காரர்களின் இரண்டு மூன்று அடியையும் இணைத்து கொண்டு மூச்சு விட முடியாமல்பம்மி பெருத்திருக்கிறது கட்டிடம்.இல்லாத காருக்கு கட்டிய இடத்தில் ஒரு கிழவி வைத்திருக்கிறாள் 300 ரூபாய் வாடகைக்கு ஒரு கடை.எல்லாம் ஆழ்ந்திருக்கிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

எல்லா பாதைகளும் சேருமிடம் ஒன்று தான்    
March 17, 2008, 7:33 pm | தலைப்புப் பக்கம்

மஞ்சள் வெயில் போர்த்திய வனத்தில் இரு பாதைகளுக்கு முன் நான் நின்றிருந்தேன். எந்த பாதையை தேர்ந்தெடுப்பது? மனித கால்கள் படாத இலைசருகுகள் மிகுந்த பாதை நான் அப்போது தேர்ந்தெடுத்தது. தேர்ந்தெடுக்காத பாதையை பற்றியசிந்தனைகளுடன் தான் பயணம் கழிந்தது.பாதைகள் இன்று எனக்கு பயனற்று போன சூழ்நிலையில் இப்போது பாதைகள் எல்லாம் சேருமிடம் ஒன்று தான் என தெரிந்தும் என்ன பயன்? ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வெக்கையடிக்கும் அறையின் ஜன்னல்    
March 11, 2008, 12:46 pm | தலைப்புப் பக்கம்

வெக்கையடிக்கும் அறையின் ஒரு மூலை. அதில் பாதி திறந்து கிடக்கிறது ஒரு ஜன்னல். பச்சை தென்னை கிளைகளும், கரும் காகங்களும் அதனுள்ளே நுழைந்து அவன் மனதை திசை திருப்ப தான் பார்க்கின்றன. அவன் பார்வையில் ஜன்னல் மூடப்பட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கடைசியாக நட்சத்திரங்களை ரசித்தது எப்போது?    
March 3, 2008, 7:03 pm | தலைப்புப் பக்கம்

பறப்பதாய் கனவு கண்டது எப்போது? ஒரு குழந்தை புன்னகைத்ததை நினைவுபடுத்தி பார்த்தது எப்போது? கவிதை கிறுக்கி பார்த்தது, வாய்விட்டு சந்தோஷமாய் கத்தியது, முதல் முத்தத்தின் சுவையை நினைவுபடுத்தி பார்த்தது, ...எப்போது? ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மனமும் நிஜமும்    
February 26, 2008, 9:33 am | தலைப்புப் பக்கம்

வெறுமையின் சூடு பரவி கொண்டிருக்கிறது. கண்களுக்கு எட்டிய தூரம் பாலைவனம். தூசு காற்று அலை அலையாய் படையெடுக்கிறது. சூரியன் கூட வெப்பம் தாங்காமல் மஞ்சளாக மாறி விட்டான். மணல்வெளி மணலாலே முழுங்கபடலாம். மனம் முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறது தாகம். நைந்து போன உடைகள் இன்னும் கிழிந்து தொங்குகின்றன. எலும்புகள் கெஞ்சுகின்றன. திருவல்லிகேணி சாந்தாராம் மேன்சன். ரூம் எண் 18யை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நிறைந்த பேச்சு    
February 19, 2008, 6:08 am | தலைப்புப் பக்கம்

மிகவும் சாதாரண உரையாடல் தாம். பரஸ்பர நலம் விசாரிப்பு. பார்க்கலாமென சம்பிரதாய விடை பெறுதல். பல மணி நேரம் கழித்து திருமண மண்டபத்தை காலி செய்து நாற்காலிகளை அடுக்கி கொண்டிருக்கிறார்கள். மண்டபமெங்கும் நிறைந்திருக்கின்றன அவள் கண்களால் உரையாடியவற்றின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வித்தியாசம்    
January 29, 2008, 8:44 am | தலைப்புப் பக்கம்

இளஞ்சூட்டு தென்றலில் மென்மையாய் வருடியபடி செல்லும் இறகாய் உன் காமம். விறைக்க செய்யும் குளிரில் புயற்காற்றில் படபடத்து முகத்தில் அறையும் இலைச்சருகாய் எனது. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

முரண்    
January 29, 2008, 8:37 am | தலைப்புப் பக்கம்

உன்னையும் என்னையும் பிரிப்பதாய் நான் நினைத்த சுவர்கள் தாம் இன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

360 டிகிரி    
January 29, 2008, 8:34 am | தலைப்புப் பக்கம்

சுற்றும் கடிகாரத்தில் சுற்றி கொண்டிருக்கிறேன் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை