மாற்று! » பதிவர்கள்

Para

ஆவணி அவஸ்தைகள்    
October 4, 2010, 5:36 am | தலைப்புப் பக்கம்

பாவப்பட்ட ஆனி, ஆடி மாதங்கள் முடிந்து, தாவணிகளுக்கு ப்ரமோஷன் கொடுக்கும் ஆவணிக்காலம் பிறந்தது முதல், நாளொரு கல்யாணம், பொழுதொரு ரிசப்ஷன். கல்யாண வயசில் எனக்கு இத்தனைபேர் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதே இப்போதுதான் தெரியவருகிறது. கடந்த பத்துப் பதினைந்து நாள்களுக்கு மேலாக அதிதீவிரத் திருமணத் தாக்குதல்களால் என் அன்றாட நடவடிக்கைகள் முற்றிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

காதலன், யுகேஜி-தேர்ட் க்ரூப்    
February 13, 2010, 1:49 am | தலைப்புப் பக்கம்

'அப்பா, இந்த சீனிவாசன் ஏந்தான் இப்படி பண்றானோ தெரியல.’ ‘என்னடா கண்ணு பண்றான்?’ ‘இதுவரைக்கும் மூணுபேரை லவ் பண்ணிட்டான்.’ ‘யார் யாரு?’ ‘நித்யப்ரீதா, சம்யுக்தா, தீப்தி.’ ‘ஓ! பெரிய பிரச்னைதான்.’ ‘அவன் சம்யுக்தாவ லவ் பண்றது எனக்குப் பிடிக்கலை.’ ‘ஏண்டா செல்லம்?’ ‘அவ என் பெஸ்ட் ஃப்ரெண்ட்.’ ‘ரொம்ப நியாயம்.’ ‘எனக்குவேற லெட்டர் குடுக்கப்போறேன்னு சொல்றாம்பா.’ ‘என்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

தில்லிக்குப் போன விண்வெளி வீரன்    
February 5, 2010, 4:28 am | தலைப்புப் பக்கம்

தில்லி உலகப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றுவந்தேன். எனக்குத் தனிப்பட்ட முறையில், பணி சார்ந்து பேருதவியாக அமைந்த அனுபவம். எனினும் பொதுவில் பகிர்ந்துகொள்ளவும் சில விஷயங்கள் உண்டு. வந்ததுமே அதுபற்றி எழுத நினைத்தேன். ஆனால் முடியவில்லை. காரணம் கால்வலி. ஏற்கெனவே உடல்நலம் சரியில்லாத நிலையில்தான் தில்லிக்குச் சென்றேன். நல்ல மலேரியாவும் சுமாரான சிக்குன் குன்யாவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மயிலைத் திருவிழா படங்கள்    
January 22, 2010, 11:05 am | தலைப்புப் பக்கம்

மயிலாப்பூர் ஃபெஸ்டிவல் நேற்று முதல் நடக்கிறது. நேற்று சில படங்கள் எடுத்தேன். சுமாராக வந்தவற்றுள் சில இங்கே. பஜ்ஜிக்கடையில் வியாபாரம் அமோகம். மைலாப்பூர் மாமிகளின் கைவண்ணத்தில் ரவா கேசரி, வெண்பொங்கல், கிச்சடி, சுண்டல் வகையறாக்களும் உண்டு. இடம்: லேடி சிவசாமி பள்ளிக்கு வெளியே. கோலக் குழல்கள் கொள்ளை அழகாக இருக்கின்றன. ஒவ்வொன்றும் விலை ரூ. 20 வீதியோர ஓவியர்கள் உட்கார...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஆடு, பாம்பு, யானை மற்றும் எம்.ஜி.ஆர்.    
June 9, 2009, 6:13 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் நான் வியந்து வாசித்த புத்தகம், சின்னப்பா தேவருடைய வாழ்க்கை வரலாறு. ஒரு திரைப்படத் தயாரிப்பாளர், பல்வேறு கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பழக வாய்த்தவர் வாழ்வில் அனுபவங்களுக்குப் பஞ்சம் இராது என்பது உண்மைதான். ஆனால் தேவருடைய அனுபவங்கள் சாதாரணமாக வேறு யாருக்கும் வாய்க்க முடியாதவை. அபாரமான கடவுள் பக்தி, கண்மூடித்தனமான பக்தி. [முருகனை மயிராண்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தமிழ் பேசும் ஷெர்லாக் ஹோம்ஸ்    
June 3, 2009, 6:19 pm | தலைப்புப் பக்கம்

யாரை எப்போது என்ன நோய் தாக்கும் என்று யாருக்குத் தெரியும்? ஒரு வருடம் முன்னர் வரை கூட பத்ரி நன்றாகத்தான் இருந்தார். திடீரென்று அவருக்கு மொழிபெயர்ப்பு ஜுரம் வந்ததற்குக் காரணம், எங்கள் நிறுவனத்திலிருந்து வெளிவந்த சில மொழிபெயர்ப்புகளின் அதி உன்னதத் தரம்தான் என்று நினைக்கிறேன். பொதுவாக எனக்கு மொழிபெயர்ப்புகள் என்றால் ஒவ்வாமை உண்டு. வாசிப்பதிலேயே அதிக ஆர்வம் செலுத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

நான் கடவுள்    
February 8, 2009, 4:08 am | தலைப்புப் பக்கம்

தவறாகப் புரிந்துகொள்ளப்படும் ஆன்மிகம், சரியாகப் புரிந்துகொள்ளப்படும் தீவிரவாதத்தைக் காட்டிலும் அபாயகரமானது. பாலாவின் நான் கடவுள் திரைப்படத்தை நேற்றிரவு பார்த்தேன். வியப்பும் ஏமாற்றமும் ஒருங்கே தோன்றியது. வியப்பு, அவரது செய்நேர்த்தி பற்றியது. படத்தின் ஒரு ஃப்ரேமைக் கூட அலங்கரிக்காமல் விடவில்லை. ஒரு கதாபாத்திரம் கூட வெறுமனே வந்துபோகவில்லை. ஒரு காட்சிகூட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

புளித்த பழம்    
February 4, 2009, 5:50 pm | தலைப்புப் பக்கம்

இது தொடர்பாக எழுதவே கூடாது என்று தீர்மானமாக இருந்தேன். ஏனோ முடியவில்லை. காலை செய்தித் தாளில் கலைஞரின் செயற்குழுப் பேச்சு விவரங்கள் பார்த்தபிறகு இந்தியாவில் அல்ல, உலகிலேயே இவருக்கு நிகரான இன்னொரு அரசியல்வாதி இருக்கமுடியாது என்று தோன்றிவிட்டது. எத்தனையோ பல வருடங்களுக்கு முன்பு வாசித்த பிரபாகரனின் ஒரு பேட்டியின்போதே ஈழப்போராட்டம் தனக்குப் புளித்துவிட்டதாகச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

சுகம் பிரம்மாஸ்மி - 6    
February 3, 2009, 7:14 pm | தலைப்புப் பக்கம்

அரைகுறைப் படிப்பு, கலவையான ஆர்வங்கள், எதிலும் முழுத்தேர்ச்சி இன்மை, மிகவும் உணர்ச்சிவசப்படும் இயல்பு, கேளிக்கைகளில் மிகுவிருப்பம், வீட்டுக்கோ, நட்புகளுக்கோ, உறவுகளுக்கோ, எனக்கேகூட உபயோகமின்மை, நேர்மையின்மை, வசதிக்கு - தேவைக்கு ஏற்ப விதிமுறைகளை வளைக்கும் அல்லது ஒடிக்கும் இயல்பு, எதையாவது பெரிதாகச் செய்துவிடவேண்டுமென்கிற வெறி அல்லது வேட்கை, ஆனால் எதையும் செய்யத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை ஆன்மீகம்

சுகம் பிரம்மாஸ்மி - 5    
February 2, 2009, 7:10 pm | தலைப்புப் பக்கம்

நான் கடவுளை விட்டு வெகு தூரம் விலகி இருந்த நாள்கள் என்று யோசித்தால் அடையாறு செண்ட்ரல் பாலிடெக்னிக்கில் படித்த மூன்று வருடங்களைத்தான் சொல்லத் தோன்றுகிறது. படித்த என்றா சொன்னேன்? மன்னிக்கவும். இருந்த. இப்போது யோசித்துப் பார்த்தால் அன்றைய என்னுடைய அத்தனை பொறுக்கித்தனங்களுக்கும் அடிப்படைக் காரணம், படிப்பு வரவில்லையே என்கிற பயம்தான் என்று தோன்றுகிறது. பத்தாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை ஆன்மீகம்

சுகம் பிரம்மாஸ்மி - 4    
January 31, 2009, 6:37 pm | தலைப்புப் பக்கம்

என்ன காரணம் என்று இப்போது சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் ராமகிருஷ்ண பரமஹம்சரைப் படித்ததிலிருந்து, சன்னியாசி ஆகிவிடவேண்டும் என்கிற எண்ணம் மிகத் தீவிரமாக ஏற்பட்டுவிட்டது. படிப்பில் எனக்கு நாட்டமில்லாமல் இருந்தது, என்னைவிட என்னுடைய தம்பிகள் கெட்டிக்காரர்களாக வளர்ந்துகொண்டிருந்தது, வாத்தியார் பிள்ளை மக்கு என்கிற பழமொழிக்குப் பொருத்தமானவனாக நான் என்னை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எழுதாத நாள்கள்    
January 27, 2009, 5:52 pm | தலைப்புப் பக்கம்

வாசகர்கள் மன்னிக்க வேண்டும். சுகம் பிரம்மாஸ்மி ஆரம்பித்த வேளை சரியில்லை. சிவல்புரி சிங்காரத்திடம் கேட்டுவிட்டுத் தொடங்கியிருக்கலாம். உட்கார்ந்து எழுதவே முடியவில்லை. தவிர்க்கவே முடியாத ரிப்போர்ட்டர் தொடர் தவிர வேறு எதுவுமே இந்நாள்களில் எழுதுவதில்லை. கால், கால்வாசிதான் குணமாகியிருக்கிறது. இப்போது எழுந்து நிற்க முடிகிறது. ஒரு சில நிமிடங்கள். ஆனால் நடக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சுகம் பிரம்மாஸ்மி - 3    
January 14, 2009, 9:46 pm | தலைப்புப் பக்கம்

நான் கடவுளைப் பார்த்தேன், உனக்கு அவனைக் காட்டுகிறேன். ராமகிருஷ்ண பரமஹம்சரின் இந்த confidence என்னை மிகவும் உலுக்கியது. நம்பமுடியாமல் திரும்பத் திரும்ப இந்த வரிகளைப் பல சமயம் வாசித்துக்கொண்டே இருந்தேன். இந்த வரிகளின் எளிமை, நேரடித் தன்மை, ஆறே சொற்களில் முந்தைய அனைத்து சொற்பிதங்களையும் பெருக்கித் தள்ளிவிடும் லாகவம், மேலான சிநேகபாவம் - எது என்று சொல்வதற்கில்லை. விவேகானந்தர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை ஆன்மீகம்

சுகம் பிரம்மாஸ்மி - 2    
January 12, 2009, 11:28 pm | தலைப்புப் பக்கம்

அப்பா எனக்கு உபநயனம் செய்யவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்த நாள்களில் இனாயத்துல்லாவுக்கு அவன் வீட்டில் சுன்னத் கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்கள். சரியாக ஒரு மாதம். அவன் வீட்டில் விசேஷம் வந்துவிட்டது. எங்கள் வீட்டில் ஒரு மூன்று வருடங்கள் தள்ளிப்போட்டு, குரோம்பேட்டைக்குக் குடிவந்த பிறகுதான் அதைச் செய்தார்கள். இனாயத்துல்லா திகிலும் பரவசமுமாகத் தனக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சுகம் பிரம்மாஸ்மி - 1    
January 12, 2009, 5:46 am | தலைப்புப் பக்கம்

இது ஒரு வெகுநாள் திட்டம். எழுத நேரம் கூடாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேலாகவே சிந்தித்துக்கொண்டிருந்தேன். அவ்வப்போது பத்ரியிடம் மட்டும் பேசுவதுண்டு. எனக்கு மிகவும் நெருக்கமானவர்களாக நான் நினைப்பவர்களுள் முதன்மையான ஒருவரைப் பற்றி எழுதிப் பார்க்கவேண்டும். திரைகள், தடைகள் எதையும் அனுமதிக்காமல் மிகவும் நிர்வாணமாகச் சிந்தித்து,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை ஆன்மீகம்

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 - வரைபடம்    
January 6, 2009, 2:03 pm | தலைப்புப் பக்கம்

சேத்துப்பட்டு அல்லது அமைந்தகரை என்று இரண்டு பெயர்களையும் சொல்கிறார்கள். பச்சையப்பா கல்லூரிக்கு எதிரே உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் [பூந்தமல்லி நெடுஞ்சாலை.] நடைபெறவிருக்கிற சென்னை புத்தகக் கண்காட்சி 2009ன் அரங்க வரைபடத்தினைக் கீழே தந்திருக்கிறேன். படத்தில் கிழக்கு, நலம், வரம், பிராடிஜி, ஒலிப்புத்தகங்கள், கிழக்கு இலக்கிய நூல்கள்...தொடர்ந்து படிக்கவும் »

Top 100 புத்தகங்கள்    
January 6, 2009, 8:28 am | தலைப்புப் பக்கம்

புத்தகக் கண்காட்சியில் இந்த வருடம் என்னென்ன முக்கியம் என்று நண்பர்கள் சிலர் மின்னஞ்சலில் கேட்டார்கள். உண்மையில் எனக்கு இன்னும் முழு விவரம் தெரியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிவரும் சில வெளியீட்டு அழைப்பிதழ்கள், புத்தக மதிப்புரைகளின்மூலம் ஒன்றிரண்டு நூல்களைத்தான் குறித்து வைத்திருக்கிறேன். ஒன்றிரண்டு தினங்களில், புதிதாக வருகிற நூல்களுள் எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சென்னை புத்தகக் கண்காட்சி - சில விவரங்கள்    
January 6, 2009, 3:40 am | தலைப்புப் பக்கம்

நாளை மறுநாள் வியாழக்கிழமை சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. சில விவரங்கள்: * அப்துல் கலாம், கண்காட்சியைத் தொடங்கிவைக்கிறார். * இடம், வழக்கமான பூந்தமல்லி நெடுஞ்சாலை, செயிண்ட் ஜார்ஜ் பள்ளி மைதானம். * மொத்த ஸ்டால்கள் 600. பரப்பளவு ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் சதுர அடி. * வருபவர்களுக்குத் தேவையான உணவு, பானங்கள் வசதிக்காக 5000 சதுர அடியில் தனி வளாகம். * இந்த வருட கருணாநிதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

சில வினாக்கள், சில புத்தகங்கள், சில எண்ணங்கள்    
January 5, 2009, 10:19 pm | தலைப்புப் பக்கம்

1. புத்தகக் கண்காட்சியில் உங்களைச் சந்திக்கலாமா? கிழக்கு அரங்கில் எப்போதும் இருப்பீர்களா? 2. இந்தக் கண்காட்சியில் வாங்குவதற்கென நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள் எவை? 3. பிளாட்பாரக் கடைகளில் புத்தகம் தேடி வாங்கியதுண்டா? 4. கண்காட்சியில் கூடுதல் டிஸ்கவுண்ட் கிடைக்க வழியுண்டா? 5. கண்காட்சி குறித்து தினமும் எழுதுவீர்களா? 6. புத்தகக் கண்காட்சிக்காக திண்டுக்கல்லில்...தொடர்ந்து படிக்கவும் »

இந்த வருடம் என்ன செய்தேன்?    
December 22, 2008, 9:56 am | தலைப்புப் பக்கம்

* மிகக் குறைவான திரைப்படங்களையே பார்த்திருக்கிறேன். மனத்தில் நிற்பது சுப்ரமணியபுரம் மட்டும். தமிழல்லாத வகையில் Gloomy Sunday. * கிழக்கு சேர்த்து, படித்தது மொத்தம் 149 புத்தகங்கள். குறிப்பிடத் தோன்றுபவை: ஆன்மிகத்தில் பொருந்தாத ஒரு மறைஞானியின் சுயசரிதம் (கண்ணதாசன் பதிப்பகம்), பிரம்ம சூத்திரம் (விளக்கம்: அ. சுகவனேச்வரன்), சுதந்தர வேட்கை (அடேல் பாலசிங்கம்), ஜாமிஉத் திர்மிதி, அங்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

புலிகள் துரத்துகின்றன    
December 5, 2008, 11:55 am | தலைப்புப் பக்கம்

உறக்கத்துக்கு பதிலாக உறக்கமின்மை, செழுமைக்கு பதிலாக வறுமை, பெருமைக்கு பதிலாக எளிமை என நீங்கள் மாற்றிக் கொள்ளாதவரை நீங்கள் சூஃபிகளின் கூட்டத்தில் இணைய முடியாது - இப்ராஹீம் இப்னு அதஹம். இஸ்லாத்தின் ஒரு பிரிவினரான சூஃபி ஞானிகள் பற்றி அங்குமிங்குமாகக் கொஞ்சம் படித்திருக்கிறேன். பவுத்தத்தில் ஒரு ஜென் போல இஸ்லாத்துக்கு சூஃபித்துவம் என்று வெகுநாள்கள் வரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மூன்று விஷயங்கள்    
November 28, 2008, 10:33 am | தலைப்புப் பக்கம்

நகரம் நனைந்திருக்கிறது. நல்ல மழை. இடைவிடாமல் மூன்று தினங்களாகப் பெய்துகொண்டிருப்பதால் அனைத்துச் சாலைகளும் குறைந்தபட்சம் கணுக்கால் அளவு நீருக்கு அடியில்தான் இருக்கின்றன. பல இடங்களில் முழங்காலுக்கு மேல் தண்ணீர். நேற்றைக்குச் சற்று அதிகம். சுரங்கப்பாதைகளெல்லாம் நீச்சல் குளங்கள் போல் ஆகியிருக்கின்றன. மாம்பலத்தை தியாகராயநகருடன் இணைக்கும் அரங்கநாதன், கோவிந்தன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ரயில் வண்டிகளின் மகாராஜா    
November 21, 2008, 9:31 am | தலைப்புப் பக்கம்

வாழ்வில் நம்மையறியாமல் நேர்ந்துவிடுகிற சில அபத்தங்கள்கூட சமயத்தில் சரித்திர முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன. என்னைப் பொருத்தவரை, அ. முத்துலிங்கத்தை நான் வாசிக்கத் தவறவிட்டது ஒரு மிக முக்கியமான அபத்தம். எப்படி விட்டேன், எப்படி விட்டேன் என்று இப்போது உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால் பல காரணங்கள் தோன்றுகின்றன. எல்லாமே அந்தந்தத் தருணங்களுக்குப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சில குறிப்புகள் - விடுபட்டவை    
November 8, 2008, 11:52 pm | தலைப்புப் பக்கம்

முதல்முறையாக இம்முறை நகர தீபாவளி. போக்குவரத்து நிறைய உள்ள சாலைகளில்கூட சகட்டு மேனிக்கு வெடி வைக்கும் மக்கள் மிகுந்த அச்சம் தந்தார்கள். காலை எட்டு மணி சுமாருக்கு மாவா வாங்க வண்டி எடுத்துக்கொண்டு கிளம்பி, நான்கு இடங்களில் தடுமாறி விழப்போகுமளவுக்கு இன்னும் மக்களின் வெடி விருப்பம் தீரவில்லை. குறிப்பாக இளம் பெண்கள். வாழ்க. சன் டிவியில் அப்துல் கலாமை விவேக் பேட்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பேட்டை புராணம்    
October 3, 2008, 4:24 pm | தலைப்புப் பக்கம்

சில நடைமுறை வசதிகளை உத்தேசித்து என் இருப்பிடத்தை மாற்ற முடிவு செய்தேன். குரோம்பேட்டையிலிருந்து கோடம்பாக்கத்துக்கு. சம்பிரதாயங்கள்மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட என் பெற்றோர் உடன் வந்து பால் காய்ச்சி சர்க்கரை போட்டு எனக்கு ஒரு தம்ளர் கொடுத்துவிட்டு அவர்களும் ஆளுக்கொரு வாய் சாப்பிட்டுவிட்டு, ‘வீடு நல்லாருக்குடா’ என்று சொன்னார்கள்.[ஆனால் வாடகை அத்தனை நன்றாக இல்லை.]...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

a-s-d-f-g-f ;-l-k-j-h-j    
September 19, 2008, 6:18 pm | தலைப்புப் பக்கம்

இன்றைக்கு கோடம்பாக்கம் [பழைய] ராம் தியேட்டர் அருகே போய்க்கொண்டிருந்தபோது அவளைப் பார்த்தேன். என்னுடைய பதினைந்தாவது வயதில் முதல் முதலில் பார்த்தபோது தென்பட்டதுபோல் அத்தனை பேரழகியாக இல்லை. இந்தக் கட்டுரை அவளைப் பற்றியதில்லை. அவளைப் போலவே தன் அடையாளம் துறந்துவிட்ட எங்கள் ஊர் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் பற்றியது. அங்கேதான் அவள் எனக்கு அறிமுகமானாள். எங்காவது இன்றைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

நன்றி, திரு. ஹெமிங்வே!    
September 16, 2008, 8:40 am | தலைப்புப் பக்கம்

எப்போது எடுத்துவைத்த குறிப்பு என்று நினைவில்லை. ‘மின்னபொலீஸ் டிரிப்யூன்’ என்ற இதழின் செய்தியாளர் ஆர்நால்ட் சாமுவேல்சனுக்கு எர்னஸ்ட் ஹெமிங்வே அளித்த ஒரு நேர்காணலின் சில பகுதிகள் இவை. முன்னெப்போதாவது இணையத்தில் இதனை வெளியிட்டிருக்கிறேனா என்றும் நினைவில்லை. எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடிய சில குறிப்புகள். இனி ஹெமிங்வே: எழுதுவதைப் பற்றி நான் முக்கியமாகத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம் புத்தகம்

பாரதியாருக்கு பக்கோடா வாங்கித் தந்தவர்    
September 11, 2008, 8:42 am | தலைப்புப் பக்கம்

என் அம்மா வழி தாத்தாவின் பெயர் ராமசாமி. அவரது பெற்றோர், முன்னோர், சொந்த ஊர், சகோதர சகோதரிகள் குறித்த எந்த விவரமும் எனக்குத் தெரியாது. நானறிந்த தாத்தா, சைதாப்பேட்டை பெருமாள் கோயில் தெருவில் உள்ள நாற்பதாம் எண் வீட்டின் வாசலில் மாலை ஆறு மணிக்குப் பிறகு எப்போதும் மரத்தாலான ஒரு பெரிய ஈசி சேரைப் போட்டு அதில் சாய்ந்து அமர்ந்து ரேடியோ கேட்டுக்கொண்டிருப்பார். எப்போதாவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

என் மதம், என் கடவுள் : ஜடாயு கடிதத்தை முன்வைத்து.    
August 28, 2008, 8:33 am | தலைப்புப் பக்கம்

என்னுடைய வாழ்வார்கள் கட்டுரைக்கு எதிர்வினையாக நண்பர் ஜடாயு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அவரது அனுமதியுடன் அதனைக் கீழே பிரசுரிக்கிறேன். கடிதத்துக்கு என்னுடைய பதில், அதற்குக் கீழே. அன்புள்ள பாரா, கிருஷ்ண ஜயந்தி பற்றி ரொம்ப ரசமாக எழுதியிருக்கிறீர்கள்.  படிக்க நன்றாக இருக்கிறது. கடைசியில் இப்படி சொல்கிறீர்கள்: எனக்கு மாவா மாதிரி பெரியாழ்வாருக்கு கிருஷ்ணன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

வலி உணரும் நேரம்    
August 27, 2008, 11:05 pm | தலைப்புப் பக்கம்

(இது ஒரு மீள்பதிவு - 7/10/2004  அன்று எழுதியது.) நேற்று தற்செயலாக அடையாறு பக்கம் போகவேண்டி இருந்தது. மேம்பாலம் கடக்கும்போது கண்ணில்பட்ட சத்யா ஸ்டுடியோ, பல பழைய நினைவுகளைக் கிளறிவிட்டுப் பின்னால் போய் மறைந்தது. எனக்கும் சத்யா ஸ்டுடியோவுக்குமான உறவு மொத்தம் ஒன்பது மாத காலம் ஆகும். அப்போதே அது பாதிதான் ஸ்டுடியோ. மீதி இடத்தை குடோன் ஆக்கிக்கொண்டிருந்தார்கள். பிறகு கொஞ்சநாள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

ஒரு மாணவனின் புத்தகம்    
August 8, 2008, 5:21 am | தலைப்புப் பக்கம்

* அகிராவுக்கு நான் அதிகமொன்றும் சொல்லித்தந்ததில்லை. அவன் என்னிடம் கற்றதெல்லாம் எப்படியெல்லாம் விதவிதமாகக் குடிக்கலாம் என்பதைத்தான். - யாமாசான் * உதவி இயக்குநர்கள் பயில்வதற்காகத் தன் படத்தையே நாசமாக்கலாம் என்று அவர் நினைத்தார். அவரையொத்த சிறந்த ஆசிரியர்கள் கிடைப்பது அரிது. - அகிரா குரோசாவா. கடந்த வார இறுதி தினங்களில் ஜப்பானிய [என்பது தவறு; உலக] திரைப்பட இயக்குநர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் திரைப்படம்

அலெக்சாண்டர் சோல்செனிட்ஸின் [11.12.1918 - 03.08.2008]    
August 5, 2008, 7:15 am | தலைப்புப் பக்கம்

1970ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற [அன்றைய] சோவியத் எழுத்தாளர் அலெக்சாண்டர் சோல்செனிட்ஸின், நேற்று தமது 89வது வயதில் மாஸ்கோவில் காலமானார். மாரடைப்பு காரணம். சோவியத் இலக்கியத்தில் சோல்செனிட்ஸினின் படைப்புகளுக்குத் தனி அந்தஸ்து உண்டு. அவர் நோபல் பரிசெல்லாம் வாங்கி, எழுதி ஓய்ந்த பிற்பாடு இன்றைக்கு அவருடையதெல்லாம் அத்தனையொன்றும் உத்தமமான இலக்கியப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

குசேலன்    
August 1, 2008, 12:27 pm | தலைப்புப் பக்கம்

இந்தப் படத்தில் ஒரே ஒரு ஷாட்டை நான் மிகவும் ரசித்தேன். சலூன் வைத்திருக்கும் ஹீரோவான பசுபதி, கட்டிங் - ஷேவிங்குக்கு அதிரடி விலைக்குறைப்பு செய்து ஒரு போர்ட் எழுதி வைப்பார். கடைசி வரியாக ‘கண்டிப்பாக அக்குள் ஷேவிங் கிடையாது’ என்றிருக்கும். துரதிருஷ்டவசமாக பி.வாசு இப்படம் முழுதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பாதி வித்வான்    
July 28, 2008, 3:06 am | தலைப்புப் பக்கம்

[முந்தைய கட்டுரையில் எனது கிரிக்கெட் - வீணை அனுபவங்கள் குறித்து எழுதிய கட்டுரைகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். சில நண்பர்கள் அந்தக் கட்டுரைகளை இங்கே தரக் கேட்டார்கள். வீணை வாசிப்பு அனுபவம் குறித்த கட்டுரையை இப்போது தருகிறேன். கிரிக்கெட் கட்டுரை நாளைக்கு. சிறு நினைவுத் தடுமாற்றத்தால் இரண்டு கட்டுரைகளும் குமுதத்தில் வெளிவந்தவை என்று சொல்லிவிட்டேன். கிரிக்கெட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

நாலு ரன், ரெண்டு விக்கெட்    
July 27, 2008, 1:20 am | தலைப்புப் பக்கம்

மிகப் பல வருடங்களுக்குப் பிறகு நேற்று மாலை மெரினா கடற்கரையில் அலுவலக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் சந்தர்ப்பம். இடது முழங்கை - வலது கால் முட்டியில் சிராய்ப்பு, இடது கணுக்கால் - வலது கால் முட்டிக்கு ஒன்றரை இஞ்ச்சுக்குக் கீழே சுளுக்கு என்று விழுப்புண்களுடனும், நான்கு ரன்கள் மற்றும் இரண்டு விக்கெட்டுகளுடனும் வெற்றிகரமாக வீடு திரும்பினேன். அலுப்பில் அப்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு அனுபவம்

சுப்ரமணியபுரம் - நிறைவேறிய கனவு!    
July 24, 2008, 5:45 am | தலைப்புப் பக்கம்

[கிழக்கு பதிப்பகத்தின் சீனியர் துணையாசிரியர்களுள் ஒருவனும் என் நண்பனுமான ச.ந. கண்ணன், தன்னை நல்லவிதமாகவோ, கெட்டவிதமாகவோ பாதிக்கும் படங்களைக் குறித்துத் தனது நண்பர்கள் அனைவருக்கும் மின்னஞ்சலில் ஒரு கட்டுரை எழுதி அனுப்புவான். நேற்று சுப்பிரமணியபுரம் பார்த்துவிட்டு அவன் அனுப்பிய மடல் இது. கருத்தளவில் எனக்கும் இதில் உடன்பாடென்பதால் தனியே நான் ஒன்று எழுதவிருந்ததைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சுப்ரமணியபுரம்    
July 24, 2008, 5:03 am | தலைப்புப் பக்கம்

படுகொலை என்பதுதான் களம். அது தனி நபரா, சக மனிதர் ஒருவர் மீதொருவர் வைக்கும் நம்பிக்கையா என்பதல்ல முக்கியம்.  கொல், கொன்றுவிடு. தீர்ந்தது விஷயம். உலகிலேயே ஜனநாயகம் தழைப்பதற்காக, அதனையே கற்பழித்து அடித்துக்கொன்று புதைத்துக் கோயில் கட்டி ஆறு கால பூஜையும் செய்யும் ஒரே தேசம் நம்முடையது. நடந்து முடிந்த காங்கிரஸ் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புத் திருவிழா நிறைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

இன்னும் கொஞ்சம் ரசிக்கலாம்    
July 17, 2008, 8:59 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் நான் வியந்து ரசித்த இரண்டு கட்டுரைகள் இணையத்தில் எழுதப்பட்டவை. ஒன்று அருள் செல்வனுடையது. அடுத்தது ஆசாத் எழுதியது. அருளின் நோக்கம் அறிவியல். அதை எளிமையாகப் புரியவைப்பது. அதற்கு ஒரு திரைப்பாடலை அவர் உதாரணத்துக்கு எடுத்துக்கொள்கிறார். அதன் மூலம் மெய்யியல் புரிதலுக்கு அஸ்திவாரமிடுகிறார். ஆசாத்துக்கு சினிமா ரசனை என்பது தவிர வேறு நோக்கங்கள் இல்லை. இருவரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

பல்லே பல்லே…    
July 9, 2008, 8:56 am | தலைப்புப் பக்கம்

நாகராஜன் ருசித்துப் பார்த்து, அறிமுகப்படுத்திவைக்க, நேற்று செனடாஃப் சாலையில் உள்ள தாபா எக்ஸ்பிரஸில் மதிய உணவுக்காகச் சென்றேன். சந்தேகமில்லாமல் அடிமையாக்குகிறது. இன்றைக்கு மதியம் மீண்டும். பல வருடங்களுக்கு முன்னர், திரைப்பட விழாக்களுக்காகப் புது தில்லி செல்லும்போது சாலையோரத் தள்ளுவண்டி தாபாக்களில் சாப்பிட்டிருக்கிறேன். ஆகிருதியான சர்தார்ஜிக்கள் ஒரு வேள்வி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

ஞான் அவிடெ…    
June 22, 2008, 12:23 pm | தலைப்புப் பக்கம்

ஐ.எஸ்.ஆர்.ஓ. நம்பி நாராயணன் விவகாரம் உச்சத்தில் இருந்தபோது சென்றதுதான் கடைசி. பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் திருவனந்தபுரத்துக்குத் திரும்பச் செல்கிறேன். அதே குறைந்தபட்ச டிராஃபிக். அதே அழகான சூழ்நிலை. அதைவிட அழகான பெண்கள். செடிகள் காற்றில் அசைந்தாடுவதுபோல் அனைத்துப் பெண்களின் கூந்தலும் காற்றில் அலைபாய்கிறது. யாரும் பின்னல் போடுவதில்லை. இன்னும் உண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

தசாவதாரம் குருவி-2    
June 14, 2008, 5:38 am | தலைப்புப் பக்கம்

உங்களில் எத்தனை பேர் விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த குருவி படத்தைப் பார்த்திருப்பீர்கள் என்று தெரியாது. கமல்ஹாசனின் தசாவதாரம் தொடக்கம் முதலே எனக்கு ஏனோ குருவியை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது. அதில் விஜய் சிங்கப்பூரிலிருந்து ஒரு வைரக்கல்லைத் தூக்கிக்கொண்டும் பிறகு துரத்திக்கொண்டும் இந்தியா வருகிறார். இதில் கமல் அமெரிக்காவிலிருந்து ஆந்திராக்ஸ் போன்ற ஏதோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நடந்த கதை    
June 4, 2008, 4:19 am | தலைப்புப் பக்கம்

நீண்டநாள் விருப்பம் ஒன்று இன்றைக்கு நிறைவேறியது. சென்னை மெரினா கடற்கரையில் காலை நடைப்பயிற்சி செய்யவேண்டும் என்று எட்டு மாதங்களாக - எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நாள் தொடங்கி ஆசைப்பட்டேன். நான் வசிக்கும் பேட்டையிலிருந்து மெரினாவுக்கு வந்து சேரச் சாதாரணமாக ஒன்றே முக்கால் மணி நேரம் ஆகும். சாலை காலியாக இருந்தால் ஐம்பத்தைந்து நிமிஷம். எனவே இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கிழக்கு ப்ளஸ் - 10    
June 3, 2008, 5:44 am | தலைப்புப் பக்கம்

இந்தச் சிறு தொடரை எழுத ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை வந்துகொண்டிருக்கும் மின்னஞ்சல்கள்மூலம் கிழக்கின் வளர்ச்சியின்பால் வாசகர்களுக்கு உள்ள அக்கறையும் ஆர்வமும் தெரிகிறது. அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இப்போது பேசிய சில விஷயங்களை நான் முன்பே பேசியிருந்தால் பல மனக்கசப்புகளை - இணையத்தில் தவிர்த்திருக்கலாமே என்று சில நண்பர்கள் கேட்டார்கள். என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

கிழக்கு ப்ளஸ் - 9    
June 2, 2008, 4:42 am | தலைப்புப் பக்கம்

அந்தப் புத்தகக் கண்காட்சியை மறக்கமுடியாது. கிழக்கு ஆரம்பிப்பதற்கு முந்தைய வருட சென்னை புத்தகக் கண்காட்சி. நானும் பத்ரியும் கூட்டத்தில் நீந்தியபடி ஒவ்வொரு கடையாக நகர்ந்துகொண்டே இருக்கிறோம். புத்தி முழுக்க விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் புதிய புத்தகங்களின் மீதுதான். என்னென்ன வகைகள், என்னென்ன விதங்கள், யார் யார் எழுத்தாளர்கள், லே அவுட் எப்படி, பேகேஜிங் எப்படி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் அனுபவம்

நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2008    
May 28, 2008, 7:20 am | தலைப்புப் பக்கம்

நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2008, எதிர்வரும் ஜூலை 5ம் தேதி தொடங்குகிறது. ஜூலை 14ம் தேதி வரை நெய்வேலி நகர புத்தகக் கண்காட்சி மைதானத்தில் நடைபெறுகிறது. கண்காட்சியில் கிழக்கு பதிப்பகமும் [அரங்கு எண் 115, 116] Prodigyயும் [அரங்கு எண் 123, 124] தனித்தனி ஸ்டால்கள் அமைக்கின்றன.  New Horizon Mediaவின் பிற அனைத்து பதிப்புகளும் இந்தக் கண்காட்சியில் இடம்பெறும். இக்கண்காட்சியை ஒட்டி நெய்வேலி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

பூங்குலலி    
May 26, 2008, 3:40 am | தலைப்புப் பக்கம்

திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் நான் அதிகம் கவனிப்பது அங்கே இசை நிகழ்ச்சிகள் நடத்துபவர்களை. சுகமான ராகம், இசைக்குயில், மெல்லிசை மேகங்கள், இளராகங்கள் என்கிற பெயரில் எட்டுக்கு நாலு அளவில் பேனர் கட்டி ஒரு டிரம் செட், ஒரு யாமஹா கீபோர்ட், ஒரு செட் தபேலா, ஒரு ஜால்ரா, ஒரு கிடார் மற்றும் இரண்டு மைக்குகளுடன் எப்போதும் செக், செக் செக் என்று உதட்டுக்குள் சொல்லிக்கொண்டிருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

கிழக்கு ப்ளஸ் - 8    
May 23, 2008, 10:16 pm | தலைப்புப் பக்கம்

புத்தகம் என்று பேசத் தொடங்கும்போதே பத்து மொழிகள் என்று முடிவு செய்துவிட்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் NHM. என்றைக்கு முடியும், எப்படி முடியும் என்றெல்லாம் அதிகம் நாங்கள் கவலைப்படவில்லை. எப்படியும் முடியும் என்பதில் சந்தேகம் இருக்கவில்லை. புத்தகங்களைப் பொறுத்த அளவில், சரியான எடிட்டர்கள் அமையும்போது எந்த மொழிக்கும் செல்லமுடியும். என்னவேண்டுமானாலும் செய்யவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம் அனுபவம்

கிழக்கு ப்ளஸ் - 7    
May 14, 2008, 12:33 am | தலைப்புப் பக்கம்

இருபத்தி ஐந்து ரூபாய். இதற்குமேல் இருபத்தி ஐந்து பைசா கூட விலை இருக்கக்கூடாது என்பதுதான் Prodigy தொடங்கியபோது நாங்கள் வகுத்துக்கொண்ட முதல் விதி. சிறுவர்களும் குழந்தைகளும் வாங்கிப்படிக்க வேண்டும். என்றால், அவர்கள் வாங்கக்கூடிய விலையில் இருக்கவேண்டும். அது முடியாதபட்சத்தில் செய்யாமலேயே இருக்கலாம். இரண்டாவது, சிறுவர்களும் குழந்தைகளும் விரும்பக்கூடிய தரத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் அனுபவம்

கிழக்கு ப்ளஸ் - 6    
May 12, 2008, 3:20 am | தலைப்புப் பக்கம்

முதல் வருடம் ஐம்பது புத்தகங்கள். இரண்டாம் வருடம் இன்னொரு ஐம்பது. இடைப்பட்ட எழுநூறு தினங்களில் சுமார் ஐந்தாறு புத்தகக் கண்காட்சிகளுக்குச் சென்று வந்தோம். அனுபவம். நானும் பத்ரியும் பொதுவாக புத்தகக் கண்காட்சியில் அப்போதெல்லாம் உட்காருகிற வழக்கம் இல்லை. எங்கள் ஸ்டாலில் அநேகமாக இருக்கவே மாட்டோம். ஆளுக்கொரு திசை பிரித்துக்கொண்டு மற்றக் கடைகளில்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் அனுபவம்

கிழக்கு ப்ளஸ் - 2    
May 7, 2008, 3:56 am | தலைப்புப் பக்கம்

பகுதி 1  குழந்தைகளுக்காக, சிறுவர்களுக்காக நாம் பிரத்தியேகப் பதிப்புகள் ஆரம்பிக்கவேண்டும். ஆடியோ புத்தகங்கள் செய்துபார்க்க வேண்டும். அனிமேஷன் சிடி உருவாக்கும் கலையை முயற்சி செய்யவேண்டும். தமிழில் மட்டுமல்லாமல் சாத்தியமுள்ள பிற அனைத்து மொழிகளுக்கும் பரவவேண்டும். ஆங்கிலத்திலும் புத்தகங்கள் வெளியிடவேண்டும். இவையெல்லாம் கிழக்கு ஆரம்பிப்பதற்கு முன்னால் - அதாவது 2003ம்...தொடர்ந்து படிக்கவும் »

குருவி    
May 3, 2008, 2:54 pm | தலைப்புப் பக்கம்

காம்பவுண்டு சுவருக்கு மேலே ஏறி நின்று அண்டர்வேர் தெரிய லுங்கியை மடித்துக் கட்டிய தாடிக்காரன் ஒருவன் பால் பாக்கெட்டைப் பல்லால் கடித்துப் பிய்த்தான். ஸ்பீக்கர் செட் வைத்து உள்ளே வந்த வண்டி டண்டண்டன் டர்னா என்றது. இளைய தளபதியின் முகத்தில் ஆவின் பால் பீய்ச்சியடிக்கப்பட்டது. ஒன்று. இரண்டு. மூன்று. நாலு. பத்து. இருபது. அதற்குமேல் எண்ணமுடியவில்லை. வினைல் போர்டுகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மீட்டர் போட்ட ஆட்டோ    
April 26, 2008, 4:28 am | தலைப்புப் பக்கம்

  விடியும் பொழுதில் இன்று ஓர் அதிசயம். ஒரு காரியமாக கேகே நகருக்கு இரவு சென்றிருந்தேன். காலை ஆறுக்கு அங்கிருந்து புறப்பட்டு அலுவலகம் உள்ள ஆழ்வார்பேட்டைக்கு ஆட்டோ கூப்பிட்டு, ‘எவ்ளோ?’ என்று கேட்டேன். ‘மீட்டர் போடுறேன் சார்’ என்று பதில் வந்தது. ஒரு கணம் நம்பமுடியாமல் அவரைப் பார்த்தேன். சென்னை நகர ஆட்டோக்களில் மீட்டர் என்பது ஒரு செட் ப்ராபர்டி. யாரும் பொதுவில் அதனைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

காத்திருந்த காலம்    
April 19, 2008, 6:59 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் சுமார் பத்து தினங்கள் அப்போலோ மருத்துவமனையின் EDU காத்திருப்போர் அறையில் வாழவேண்டி நேர்ந்தது. வீடு, அலுவலகம், எழுத்து, படிப்பு என்று வழக்கமான அனைத்துப் பணிகளும் அடியோடு பாதிக்கப்பட்டு இரண்டு காரியங்களை மட்டுமே செய்தேன். 1. காத்திருப்போர் அறையில் இருபத்தி நான்கு மணிநேரமும் ஓடிக்கொண்டிருக்கும் கேடிவியில் தினம் இரண்டு  அல்லது மூன்று திரைப்படங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை அனுபவம்

சோலையில் சஞ்சீவனம்    
April 3, 2008, 9:43 am | தலைப்புப் பக்கம்

இன்றைய மதிய உணவு நுங்கம்பாக்கத்தில் உள்ள ‘சோலையில் சஞ்சீவனம்’ என்னும் மெடிமிக்ஸ் நிறுவனத்தின் உணவகத்தில் அமைந்தது. அலுவலக நண்பர்களுடன் உணவகத்தினுள் நுழைந்தபோது தோன்றிய எண்ணம் : புத்தருக்கு போதி மரம். நம்மாழ்வாருக்குப் புளியமரம். நமக்கு சஞ்சீவனம். ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒருநாள் இதே உணவகத்தில் சாப்பிட நேர்ந்தபோதுதான் உடல் நலம் குறித்தும் டயட் குறித்தும் முதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு நலவாழ்வு

Fitna - தேவையற்ற அச்சுறுத்தல்    
April 2, 2008, 11:16 am | தலைப்புப் பக்கம்

குமுதம் ரிப்போர்ட்டரில் கடந்த 198 இதழ்களாக வெளிவந்துகொண்டிருக்கும் என்னுடைய ‘மாயவலை’ தொடரின் இறுதி அத்தியாயங்களை எழுதிக்கொண்டிருந்த வேளையில், நெதர்லந்த் அரசியல்வாதி கீர்ட் வைல்டர்ஸின் (Geert Wilders) ஃபித்னா (Fitna) என்னும் குறும்படத்தைக் காண நேர்ந்தது. பரம சுதந்தர மனோபாவம் மற்றும் வாழ்க்கை முறைக்குப் பெயர் பெற்ற நெதர்லந்தில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை சமீப காலங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.    
March 30, 2008, 6:45 pm | தலைப்புப் பக்கம்

நண்பர்களுக்கு வணக்கம். கடந்த ஆறு மாதகாலமாகக் ‘காணாமல் போயிருந்த’ என்னுடைய writerpara ஜிமெயில் முகவரி சற்றுமுன் எனக்குத் திரும்பக் கிடைத்திருக்கிறது. இந்த மின்னஞ்சல் முகவரியைச் சிலகாலம் எடுத்துக்கொண்டு விளையாடிய நண்பர்கள் அது குறித்து இணையத்தில் எழுதியிருந்ததைக் கண்டிருப்பீர்கள். அதன் தொடர்ச்சியாக மேற்கொண்ட சில நடவடிக்கைகளின் விளைவாக இப்போது இந்த முகவரி எனக்குத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

ம்ஹும்!    
March 27, 2008, 8:04 am | தலைப்புப் பக்கம்

கி. ராஜநாராயணன் குறித்து புதுவை இளவேனில் தயரித்திருக்கும் ‘இடைசெவல்’ என்கிற டாக்குமெண்டரி படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எழுத்தாளர் ஒருவரைப் பற்றி ஆவணப்படம் எடுப்பது எத்தனை சிரமமானது என்பது புரிந்தது. முன்பும் சில படங்கள் பார்த்திருக்கிறேன். அசோகமித்திரன் குறித்து அம்ஷன் குமார் எடுத்த படம். ஜெயகாந்தன் குறித்த படம். வைக்கம் முஹம்மத் பஷீர், ஓ.வி. விஜயன்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் திரைப்படம்

தீராப் பிரச்னைகள் [தொடர்ச்சி]    
March 24, 2008, 6:58 am | தலைப்புப் பக்கம்

6. நான் இலக்கியவாதி இல்லை. குறிப்பாக, தமிழ் இலக்கியவாதி இல்லவே இல்லை. எழுதுபவன். அவ்வளவே. ஆனால் என் கனவுகளில் பெரும்பாலும் இலக்கிய அடிதடிக் காட்சிகள் மட்டுமே வருகின்றன. இத்தனைக்கும் நான் இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்வதே இல்லை. பக்கத்தில் எங்காவது நவீன இலக்கியக் கூட்டம் நடக்கிறது என்று தெரிந்தால் இருபத்தைந்து ரூபாய் ஏசி பஸ் பிடித்து இருபத்தைந்து கிலோ மீட்டர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

தீராப் பிரச்னைகள்    
March 22, 2008, 10:00 am | தலைப்புப் பக்கம்

இந்தக் கட்டுரையில் இடம்பெறும் விஷயத்தைப் பற்றி நீங்கள் இரண்டுவிதமாக நினைக்கலாம். * இம்மாதிரியெல்லாமும் பிரச்னைகள் சாத்தியமா? * சே. இதெல்லாம் ஒரு பிரச்னையா? வெறுமனே புன்னகை செய்துவிட்டு நகர்ந்துவிடுவீர்களானால் நான் சொல்ல ஒன்றுமில்லை. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இனி ஒரு பாவப்பட்ட ஜென்மத்தின் பதினோரு பிரச்னைகள். என் வாழ்வில் நான் மிக அதிகம் அவதிப்படுவது இந்தப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஒரு கொலை, ஒரு சொட்டுக் கண்ணீர்    
March 11, 2008, 5:15 am | தலைப்புப் பக்கம்

இதே மார்ச். இதே 11ம் தேதி. சரியாகப் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இதே நாளில்தான் அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பாளையங்கோட்டையில் பத்திரிகையாளர் நண்பர் முப்பிடாதியின் உதவியுடன் சிறைச்சாலைக்குச் சென்று அவனைச் சந்தித்தபோது காக்கி அரை நிக்கரும் கைவைத்த பனியனும் நெற்றியில் துலங்கிய திருநீறுமாக என்னை அன்புடன் வரவேற்றான். ‘எனக்குத் தெரியும் சார். கண்டிப்பா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை