மாற்று! » பதிவர்கள்

Mugil

Because…    
February 13, 2010, 7:48 am | தலைப்புப் பக்கம்

‘நான் ஏதாவது ஹெல்ப் பண்ணவா?’ ‘……’ ‘தயங்காம சொல்லு.’ ‘……’ ‘உனக்கு இந்த சப்ஜெக்ட் புதுசுல்ல. ப்ரொகிராமிங் எல்லாம் முதல்ல அப்படித்தான் இருக்கும். போகப்போக ஈஸியா இருக்கும்.’ அருகில் உட்கார்ந்தான். அனிச்சையாக நகர்ந்துகொண்டாள். சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான். ப்ரொகிராம் சரியான விடையைக் கொடுத்தது. ஆனால் அவளிடமிருந்த பயமும் அவன் மீதான தயக்கமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நாடோடிகள் - 2009ன் சுப்ரமணியபுரம்!    
June 26, 2009, 12:48 pm | தலைப்புப் பக்கம்

தனது மூன்றாவது முயற்சியிலும் வெற்றி பெற்றிருக்கிறார் சசிகுமார், கதாநாயகனாக. இயக்குநராக சமுத்திரக்கனிக்கு இந்தப் படம் பெருவாழ்வு. எல்லா சென்டர்களிலும் வசூலை அள்ளப்போகிறது நாடோடிகள். படத்தின் கதையை விலாவாரியாகச் சொல்லமாட்டேன். அது திரையில் ரசிக்க வேண்டியது. என்  நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன். படத்தில் ஒரு வரி இதுதான். நண்பனின் (நண்பன்) காதலைச் சேர்த்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அப்பன் மவனே! அருமை யுவனே!    
June 15, 2009, 11:03 am | தலைப்புப் பக்கம்

இன்னும் கொஞ்ச நாள்களில் தில் படத்தில் ‘உன் சமையலறையில்’ பாடல்போல இந்தப் பாடலும்  மூலை, முடுக்களில் எல்லாம் நீக்கமற நிறைந்து அருள்பாலிக்கப் போகிறது. எந்தப் பாடல்? அது  கட்டுரையின் கடைசியில். சமீப வாரங்களில் ஏகப்பட்ட படங்களுக்கான பாடல்கள் வெளியாகிவிட்டன. உட்கார்ந்து  பொறுமையாக ரசித்து கேட்பதற்குத்தான் நேரம் இல்லை. கேட்ட, கேட்டுக்கொண்டிருக்கிற, கேட்கின்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் இசை

கூறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.    
April 15, 2009, 10:55 am | தலைப்புப் பக்கம்

வெயில், வியர்வை, பவர்கட், தண்ணீர்ப் பஞ்சம், மரியாதை ரிலீஸ் என ஏகப்பட்ட பிரச்னைகளுக்கிடையே தேர்தலையும் எதிர்கொள்ள நாம தெளிவாத்தான் இருக்கோமான்னு தெரிஞ்சுக்க ஒரு ‘சுய தேர்தல் பரிட்சை’ இது. பேப்பர், பேனா, இங்க் புட்டி, அடிஸ்கேல், ரப்பரு, ஜியாமெண்ட்ரி பாக்ஸ், லாக் புக், வாக்காளர் அடையாள அட்டை சகிதமா ரெடியாகிட்டீங்களா? மத்திய அரசுப் பொதுத் தேர்வு மொத்த மதிப்பெண்கள் :...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் நகைச்சுவை

விடுகதையா பொது வாழ்க்கை? - வைகோ விரக்தி    
April 2, 2009, 12:20 pm | தலைப்புப் பக்கம்

(வைகோவின் சோகப்பாட்டு) விடுகதையா பொது வாழ்க்கை? விடைதருவார் இங்கு யாரோ? எனது ‘சிஸ்டர்’எனை அடிப்பதுவோ? மாம்பழம் கொண்டு துரத்துவதோ? ஏழு என்றிருந்த என் நினைப்பில், மூன்றுலாரி மண் விழுகிறதோ? ஏனென்று கேட்கவும் நாதியில்ல. ஏழையின் கட்சிக்கு சின்னமுண்டு, சீட்டு இல்லை பம்பரம் சுற்றுமென்று படம்காட்ட முடியும் சாட்டையைப் பிடுங்கிட்டால் சகிக்கவா முடியும்? கட்சியில்...தொடர்ந்து படிக்கவும் »

ரோல்ஸ்-ராய்ஸ் நினைவுகள்!    
February 27, 2009, 12:42 pm | தலைப்புப் பக்கம்

ரோல்ஸ் ராய்ஸ். பெயரை உச்சரிக்கும்போதே புருவம் உயர வைக்கும் ராயல் வாகனம். கௌரவத்தின் அடையாளம். அழகும் கம்பீரமும் சரிவிகிதத்தில் கலந்த கட்டமைப்பு. வேகத்திலும் சளைக்காதது. RR என்று சுருக்கமாவும் கீழே Rolls Royce என்று முழுமையாகவும் பொறிக்கப்பட்ட முத்திரை. முகப்பில் வெள்ளியால் செய்யப்பட்ட சிறகு விரித்துப் பறக்கும் தேவதை. பளபளா உடல். இப்படிப்பட்ட ரோல்ஸ்-ராய்ஸ்களை வைத்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

அடால்ஃப் ராஜபக்‌ஷே!    
February 13, 2009, 11:55 am | தலைப்புப் பக்கம்

1933, ஜனவரி 30, அதாவது இரண்டாவது உலக யுத்தம் தொடங்குவதற்கு ஆறு ஆண்டுகள் முன்பு, ஹிட்லர் ஜெர்மனியின் ஆட்சியைப் பிடித்தார். 1935-ல் யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எல்லாம் ஹிட்லரால் நியூரெம்பெர்க் சட்டங்கள் (Nuremberg Laws) என்ற பெயரில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டன. ஜெர்மனி வாழ் யூதர்கள் அனைவரும் தீண்டத்தகாதவர்களே. இரண்டாம் தரக் குடிமக்களே. எத்தனை தலைமுறைகள் அங்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

செ.பு.கா.நா.வா.பு.    
January 20, 2009, 6:08 pm | தலைப்புப் பக்கம்

எந்தப் புண்ணியவான் என்ன காரணத்துக்காக ஆரம்பித்து வைத்தானோ தெரியவில்லை. பலரும்  செய்கிறார்கள். ஆகவே நீண்ட யோசனைக்குப் பிறகு நானும் அதைச் செய்வதாக முடிவெடுத்து  துணிந்து இறங்கிவிட்டேன். என்ன நோக்கத்தில் அவர்கள் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.  ஆனால் உள்நோக்கம் ஏதுமின்றி நானும் செய்கிறேன். இந்தச் செயலும் கொட்டாவி போலத்தான். பரவுகிறது. யாராவது ஒருவர் திடீரென...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

வில்லு லொள்ளு!    
January 12, 2009, 9:57 am | தலைப்புப் பக்கம்

வில்லு இன்று ரிலீஸ். பொதுவாக எனக்கு விஜய் படங்களில் விருப்பமில்லை. ஆதி என்றொரு படத்தை கல்கியில் விமரிசனம் எழுதுவதற்காக பார்த்தேன். அதற்குபின் விஜய் படங்களோடு உறவை முறித்துக்கொண்டேன். கெட்-அப் மாற்றக்கூட தயங்கும் விஜய், மாறாத ஒரே கமர்ஷியல் ஃபார்முலா, காது ஜவ்வைக் கிழிக்கும் தமிழ்க்கொலை பாடல்கள் - இளைய தளபதி என்னைப் பொருத்தவரையில் என்றும் தளபதியாக மட்டும்தான்...தொடர்ந்து படிக்கவும் »

மறுமாத்தம் தெரியுமா?    
January 12, 2009, 9:26 am | தலைப்புப் பக்கம்

ஆயிரம் வேலை நெருக்கடிகள் இருந்தாலும், சென்னை புத்தகக் காட்சி ஜெகஜ்ஜோதியாக நடந் துகொண்டிருந்தாலும் பொங்கலுக்கு தூத்துக்குடிக்கு ஓடிவிடுவேன். இழக்க விரும்பாத பண்டிகை  அது. தீபாவளி, பொங்கல் அன்று தூத்துக்குடியில் சொந்தவீட்டில் இருந்தால்தான் எனக்குச் சந்தோஷம். விடிந்துகொண்டிருக்கும் வேளையில் வீட்டுவாசலில் பனைஓலை மணத்துடன் அம்மாவோடு ÷ சர்ந்து பொங்கல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பண்பாடு

வேர் இஸ் தி பார்ட்டி? ஆங்.. திருமங்கலத்துல!    
January 6, 2009, 10:01 am | தலைப்புப் பக்கம்

இன்னாமா பண்ணலாம் வோட்டுக் கேட்கப் போவலாம் குவாலிஸில் ஏறலாம் நோட்டு நோட்டா வீசலாம். அல்ரெடி நாளுமாச்சு தேர்தல் தேதி நெருங்கிப் போச்சு வேர் இஸ் தி பார்ட்டி? ஆங் திருமங்கலத்துல பார்ட்டி. வேர் இஸ் தி பார்ட்டி? அழகிரி வூட்டுல பார்ட்டி உள்ளவா உள்ளவா…. வா வா வா…. சன் டீவி இப்போ நம்ம செட் ஆனதே சன்-இன்-லாஸ் டீலிங்கு ஃபிக்ஸ் ஆனதே As usual ஏடிஎம்கே ஹர்ட் பண்ணுதே வாயால விஜி தம்பி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

லொள்ளு அவார்ட்ஸ் 2008    
December 31, 2008, 9:57 am | தலைப்புப் பக்கம்

2008ன் லொள்ளு அவார்ட்களுக்காக, பல்வேறு பிரிவுகளின்கீழ் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டவர்கள். சிறந்த குடும்பச் சித்திரம் சிறந்த உண்மை விளம்பி சிறந்த சுய விளம்பரதாரர் சிறந்த ஆக்‌ஷன் காட்சி சிறந்த உலகம் சுற்றும் வாலிபி & புடைவைக் கடை மாடல் சிறந்த உலக சினிமா சிறந்த ரங்க ராட்டினம் சிறந்த காதல் காட்சி சிறந்த ட்யூப் லைட் வாழ்நாள் சாதனையாளர் விருது இனிய புத்தாண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

டாப் 10 புத்தகங்கள் - 2008    
December 27, 2008, 8:57 am | தலைப்புப் பக்கம்

இந்த ஆண்டில் வெளியான புத்தகங்களில் எந்தக் கடையிலுமே எப்போதுமே கிடைக்காத அளவுக்கு விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் சிறந்த 10 புத்தகங்களின் தரவரிசைப் பட்டியல். 10 மனம் is a மனம் ஆசிரியர் : சுவாமி சுனாமியானந்தா மனம் என்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம். மனதை அடக்கி ஆள்வது என்பது லாரிக்கு பின் நின்று கூட்டத்தில் முட்டி மோதி ஓட்டைக்குடத்தில் தண்ணீர் பிடிப்பதற்குச் சமம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை