மாற்று! » பதிவர்கள்

ஸ்ரீதர் நாராயணன்

ஜூனியர் குறிப்புகள்    
November 2, 2010, 3:02 pm | தலைப்புப் பக்கம்

ஜூனியருக்கு பாவனை விளையாட்டுகள் (Pretension games) விளையாடுவது நிரம்பவும் பிடித்தமானது. நாங்கள் அவரை கவனிக்காமல் பேசிக் கொண்டிருந்தாலோ, டீவி பார்த்துக் கொண்டிருந்தாலோ அவர் பாட்டுக்கு ‘அடுத்தவருடன்’ பேச ஆரம்பித்து விடுவார். ‘யார்ட்டடா பேசறே?’ ‘தோ.. இவன்ட்டதான். என் ஃப்ரெண்ட்’ பக்கத்தில் காலியிடத்தைக் கை காட்டுவார். ‘இது என்ன லாங்வேஜ்டா? ஒண்ணுமே புரியலயே. தமிழா, இங்க்லீஷா இல்ல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஜூனியர் குறிப்புகள்    
October 25, 2010, 1:05 pm | தலைப்புப் பக்கம்

தினமும் நான் குளித்து உடைமாற்றும் சமயம் ஜூனியருக்கு (மூன்றரை வயது) மிகவும் உற்சாகமான நேரம். ”அந்த ரெட் கொயர் சர்ட் போட்டு ரொம்ப நாளாச்சு... அத ஏன் நீங்க போடக்கூடாது” என்பது போன்ற டிசைன் டிசைனான கேள்விகளோடு அறையைச் சுற்றி வருவார். அவருடைய இடுப்பு சுற்றளவிற்கு தகுந்தமாதிரி நல்ல லெதர் பெல்ட் சரியாக அமையாத (அல்லது வாங்கி தராத) காரணத்தினாலோ என்னவோ, அப்பாவின் பெல்ட் மேல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பியானோ கலைஞன்    
October 23, 2010, 10:29 pm | தலைப்புப் பக்கம்

ரோமன் பொலான்ஸ்கியின் படங்கள் இதுவரை பார்த்ததில்லை. சொக்கநாதரை துரத்தும் பிரும்மஹத்தி போல இருபத்தைந்து வருடங்களாக அமெரிக்க போலிஸ் அவருக்காக ஏர்போர்டிலேயே காத்திருக்க, ஸ்விஸ் நாட்டு அரசாங்கம் அமெரிக்காவின் extradition கோரிக்கையை மறுதளித்தபோதுதான் அவரைப் பற்றி அதிகம் படிக்க நேர்ந்தது. அதில் ஒன்று சமந்தாவின் வாக்குமூலம். சமந்தா கெய்மர் வழக்கின் உள்ளடுக்குகளில் புகுந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பிரக்ஞை (சவால் சிறுகதை)    
October 15, 2010, 1:18 pm | தலைப்புப் பக்கம்

சவால் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.”சமர்ப்பணம் ஆரம்பிச்சிட்டான் தெய்வா... வர்லியா நீ?” என்று பரபரப்பாக சொன்னவாறே தணிகை கண்ணாடியை துடைத்துப் போட்டுக் கொண்டார்.தேதிவாரியாக அடுக்கிவைக்கப்பட்ட தினசரிகளும், சஞ்சிகைகளும், சைஸ்வாரியாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் மருந்து குப்பிகளும், கொடியில் கும்பலாக தொங்காத துணிகளும், குப்பை இல்லாத மேஜையும் பரபரப்பற்ற,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Steven Spielberg - அசத்தும் ஆளுமை    
August 19, 2008, 9:29 pm | தலைப்புப் பக்கம்

ஜாஸ், இண்டியானா ஜோன்ஸ், ஈ.டி, ஜுராசிக் பார்க், ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், மைனாரிட்டி ரிப்போர்ட்... இப்படி எத்தனையோ பிரம்மாண்டமான திரைப்படங்களை சொல்லிக் கொண்டே போகலாம். உங்களுக்கு பிடித்த 10 படங்களில் கண்டிப்பாக ஸ்பீல்பர்கின் படங்கள் இல்லாமல் இருக்காது. இவரைப் பற்றி முழுமையாக படிக்க விக்கிப்பீடியா வாருங்கள். தொலைக்காட்சிப் படங்கள், திரைப்படங்கள், அனிமேஷன் படங்கள் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் திரைப்படம்

Roshomon - பார்வைகளால் ஆன உலகம்    
August 14, 2008, 1:51 am | தலைப்புப் பக்கம்

இரண்டு கண்களும் இணைந்து பார்க்கும் பொழுது முப்பரிமாண தோற்றம் கிடைக்கிறது. இந்த இரு கண்களும் மூளைக்கு செலுத்தும் செய்திகள் மாறுபட்டால் என்னவாகும்? காட்சிகள் பிழற்ந்து போகும். இந்த உலகத்தில் நாம் காணும் உண்மை, பொய், வலியது, இகழ்ந்தது எல்லாமே நாம் பார்க்கும் பார்வையினால்தானே (perspectives). Beauty is in the Beholder's eyes. ரஷமோன் - பல பரிமாணம் கொண்ட ஒரு திரைப்படம். முதலில் அடித்து பிய்க்கும் மழை. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ரைஃபிளால் நான் சுட்டபொழுது...    
August 11, 2008, 7:00 pm | தலைப்புப் பக்கம்

'யே ஹை ஃபையரிங் பின். அபி காலி ஹை. க்யோங் கி யே ப்ராக்டிஸ் கர்னேகா ரைஃபிள் ஹை' நாயக் (இரண்டுப் பட்டி) உண்ணி கிருஷ்ணன் NCC Cadets-களுக்கு .303 ரைஃபிளை பிரித்துப் போட்டு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.மதுரை B4 போலீஸ் ஸ்டேஷன் போய் 11 ரைஃபிள் எடுத்துக் கொண்டு சேதுபதி ஸ்கூல் மைதானத்தில் நாங்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தோம். பத்தாம் வகுப்பு. அடுத்த மாதம் பரீட்சை. அதை B சர்டிபிகேட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

குசேலன் பற்றிய கதைகளும், விமர்சனங்களும்    
August 1, 2008, 7:53 pm | தலைப்புப் பக்கம்

முதல் கதை: பாகவத புராணத்தில் வருகிறது. கண்ணனும், குசேலர் (எ) சுதாமருக்கும் உள்ள நட்பு பற்றிய கதை. பத்தாவது காண்டத்தில் வரும் இந்தக் கதையில் குசேலர் கண்ணனின் ஆயர்பாடி தோழன். பின்னர் கண்ணன் அரசனானவுடன் அவனிடம் உதவி கேட்டுப் போகிறார். குருசேத்திரப் போர் முடிந்தவுடன் கண்ணனுடன் தத்துவ விசாரங்களிலும் ஈடுபடுகிறார். இரண்டாம் கதை: சுஜாதா எழுதியது. மத்யமர் தொடரிலா / தூண்டில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சுப்ரமணியபுரம் சொல்லும் கதைகள்    
July 28, 2008, 7:13 pm | தலைப்புப் பக்கம்

நமது பிராந்திய மொழிகளில் எடுக்கப்படும் பெரும்பாலான திரைப்படங்களில் பொதுவான ஒரு அம்சமாக எனக்குத் தெரிவது இவை எந்த மொழிக்கும் சூழலுக்கும் ஏற்றவாறு இருக்கும். இப்படி எடுப்பது ஒரு பாணி. அந்தந்த மொழிக்கு தேவையான 'skin'ஐ மட்டும் மாற்றிவிட்டால் அது தெலுங்குப் படமா, தமிழ்ப் படமா என்று வித்தியாசம் தெரியாது. தமிழ் சினிமாவின் நிகழ்கால சுனாமியான ஜே.கே.ரித்தீஷ் கூட தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அபர்ணா சென் - 15 Park Avenue    
July 24, 2008, 7:34 pm | தலைப்புப் பக்கம்

அபர்ணா சென் எனக்கு மிகவும் பிடித்த ஒரு திரைப்பட இயக்குநர். எனக்கு எளிமையான திரைப்படங்களில் ஈடுபாடு நிறையவே உண்டு. இந்தப் படங்கள் ஒரு புத்தகம் படிக்கும் உணர்வை தருகின்றன என்பது எனது எண்ணம்.திரைப்படம் என்பது ஒரு புனைவுலகம் என்றாலும் அதில் நம்மை அடையாளப் படுத்திக் கொள்வதில்தான் அந்த திரைப்படத்தின் வெற்றி இருக்கிறது. 3 வருடங்களுக்கு முன்னர் வந்த படம் தான் 15, Park Avenue. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

GodFather: இது ஒரு **ப் படம்    
July 12, 2008, 4:32 pm | தலைப்புப் பக்கம்

சமீபமாக Netflix-ன் தயவில் வாரம் 2-3 படங்கள் பார்க்கும் வாய்ப்பு. இதையே சாக்காக வைத்து 'வாரம் ஒரு திரைப்படம்' அப்படின்னு ஏதாவது மொக்கை போடலாம்னு நினைச்சப்போ (ஆசை யாரை விட்டது!) முதலில் தோன்றியது Godfather படம்தான். மூன்று பகுதிகளையும் தொடர்ச்சியாக பார்த்து முடித்தேன். முன்னமே பார்த்திருந்தாலும் இப்படி ஒன்றாக சேர்த்து பார்ப்பது இதுவே முதன் முறை. அது ஒரு சிறந்த அனுபவம். இந்தப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்