மாற்று! » பதிவர்கள்

யுவகிருஷ்ணா

சொன்னதை செய்பவர்!    
April 5, 2011, 5:48 am | தலைப்புப் பக்கம்

டிவியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்த ரகுவன்ஷ் கன்வாருக்கு தனது கண்களையே நம்ப முடியவில்லை. அவர் பீகாரின் அரசு ஊழியர். மோட்டர் வெய்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றிக் கொண்டிருந்தார். ஃப்ளாஷ் செய்திகளில் அவரது பெயர்தான் ஓடிக் கொண்டிருந்தது. பீகாரின் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பி.கே.சஹி ஒரு பொதுக்கூட்டத்தில் கன்வாரின் பெயரை உச்சரித்திருந்தார். ஆனால் கன்வாருக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

சென்னைப் புத்தகக் காட்சி - சில பரிந்துரைகள்    
January 12, 2011, 10:55 am | தலைப்புப் பக்கம்

புத்தகக்காட்சிக்கு செல்லும் நண்பர்கள், ஏதாவது புத்தகங்களை பரிந்துரையுங்களேன் என்று கேட்கிறார்கள். என்னமாதிரியான ஒரு வறட்சியான இலக்கியச் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு மிகச்சரியான உதாரணம் இது. பின்னே, இம்சை அரசன் வடிவேலுவிடம் பார்க்க வேண்டிய உலகப் படங்கள் பட்டியலை கேட்கலாமா? நாம் அவ்வளவு ஒர்த் இல்லை சார். 'சென்னையில் ஃபிகர் வெட்ட ஏற்ற இடங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு தோட்டா.. ஒரு உயிர்!    
November 3, 2010, 5:59 am | தலைப்புப் பக்கம்

பூட்ஸ் கால் அந்த மண்ணை மிதித்தபோது அவரது உடல் சிலிர்த்து அடங்குகிறது.உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளக்கூடாத பதவியில் இருப்பவர் அவர். ராணுவமிடுக்குக்குள் ஒளிந்திருக்கும் மனித உணர்ச்சி ஒரு நொடி தலைகாட்டிமறுநொடியிலேயே அடங்குகிறது. புன்னகையோடு அந்த கிராமத்துக்குள் நுழைகிறார்லெப்டிணெண்ட் கர்னல் டி.பி.கே.பிள்ளை.அந்த கிராமம் லோங்டி பாப்ரம். மணிப்பூர் மாநிலத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வீம்புக்காரத் தமிழர்!    
October 22, 2010, 5:53 am | தலைப்புப் பக்கம்

1980களில் தமிழகம் முழுக்கவே கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு. கோடைக்காலத்தில் கிணறுகளில் தண்ணீர் சுரப்பதற்கான சுவடுகளே தெரியாது. அவர் ஒரு கடப்பாரை, ஒரு கூடை, ஒரு கயிறு இதை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு குழி வெட்டத் தொடங்கினார். உண்மையில் தானே ஒரு ஆழமான கிணறு தோண்டி தன் வீட்டுக்குத் தேவையான நீர்த்தேவையை பூர்த்தி செய்வது அவரது திட்டம். விலங்கியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் நபர்கள்

டாஸ்மாக் இல்லாத ஊர்!    
September 14, 2010, 5:09 am | தலைப்புப் பக்கம்

‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது பழமொழி. இந்த ஊரில் கோயில் இல்லை. இருப்பினும் சுமார் 800 பேர் குடியிருக்கிறார்கள். “கோயில் மட்டுமில்லை. சாராயக் கடையும் இங்கே இல்லை. அதனாலேதான் நாங்க நிம்மதியா வாழமுடியுது” என்கிறார் கிராமவாசி ஒருவர்.நிஜமாகவே ஆச்சரியம்தான்! இங்கே ‘டாஸ்மாக்’ மதுக்கடை இல்லவேயில்லை. இங்கே மட்டுமல்ல. இந்த ஊர் அமைந்திருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஆடிட்டர் ஆக ஆசையா?    
April 21, 2010, 9:28 am | தலைப்புப் பக்கம்

ஒரு சின்ன புள்ளி விபரம். இன்றைய இந்தியாவுக்கு குறைந்தபட்சம் ஏழு லட்சம் ஆடிட்டர்கள் தேவை. ஆனால் இருப்பதோ கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் மட்டுமே. ஆண்டுதோறும் புதியதாக பத்தாயிரம் ஆடிட்டர்கள் வந்தாலும், ஐந்தாயிரம் ஆடிட்டர்கள் ஓய்வு பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். எனவே என்றைக்குமே இந்த வேலைக்கு தேவை இருந்துகொண்டேயிருக்கும் என்பது நிச்சயம்.ஆடிட்டர் ஆக சி.ஏ., (Chartered Accountant)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கான் - ஒரு எதிர்வினை!    
February 25, 2010, 6:05 am | தலைப்புப் பக்கம்

Hi I do not know why you guys always support Muslims in the first place. If the same movie has been taken by a Hindu, will you appreciate?Immediately, You and Your groups will start writing about SECULARISM Have you ever written about those hindus who are staying in Pakistan and do not have rights to vote also? Think man. Think and write before you think again. During mogul period what has happened to our country. Imagine. Go and read the books. You will know the truth. Sooner the...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அசல் - ஜக்குபாய்    
February 10, 2010, 5:30 am | தலைப்புப் பக்கம்

அஜித்துக்கு விடிவே கிடையாது போலிருக்கிறது. இன்னமும் பில்லா ஃபீவரிலேயே அலைகிறார். கிட்டத்தட்ட வரலாறு கெட்டப்பில் அப்பா கேரக்டர். பில்லா டைப்பில் மகன் கேரக்டர். இரட்டை வேடத்தில் நடித்ததால் வாலி ஹிட் ஆகவில்லை. அதில் கதையும் இருந்தது என்பதை யாராவது அஜித்துக்கு எடுத்துச் சொல்லலாம்.சரண், அஜீத், யூகிசேது என்று மூன்று பேருடைய பெயர் டைட்டிலில் ‘கதை’ என்று வருகிறது. இல்லாத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கோவா!    
February 4, 2010, 5:37 am | தலைப்புப் பக்கம்

அந்த காலத்தில் சுந்தர்ராஜன் படம் இயக்கும் ஸ்டைலைப் பற்றி சினிமாப்பெருசுகள் சிலாகிப்பதுண்டு. படப்பிடிப்புத் தளத்துக்கு போய்விட்டு யூனிட் ஆட்களோடு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பாராம். தலையில் போட்ட துண்டோடு தயாரிப்பாளர் வந்து, “நிலத்தை அடமானம் வெச்சி காசை போட்டிருக்கேன். ஏதாவது சீன் ஷூட் பண்ணு அப்பு!” என்று கெஞ்சியபிறகே, உட்கார்ந்து ‘சீன்’ எழுதுவாராம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

RSS FEED!    
January 28, 2010, 10:35 am | தலைப்புப் பக்கம்

நம் புண்ணியபூமியாம் பாரதத்தில் தோன்றியிருக்கும் இந்து மதத்தின் பெருமைகளை உலகுக்கு பறைஸாற்ற தேஸ விடுதலைக்குப் போராடிய தேஸபக்தர்களால் அமைக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினை வகுப்புவாத அமைப்பு என்று சில திம்மிக்கள் அவதூறு பரப்பிய நிலையில் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீமான் மருத்துவர் விண்ஸெண்டு என்பவர் ஆர்.எஸ்.எஸ். ஒரு வகுப்புவாத இயக்கம் அல்ல என்று கூறி விஷச்செடிகளின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சைபர் க்ரைம் - ஒரு விமர்சனம்!    
January 23, 2010, 11:28 am | தலைப்புப் பக்கம்

யுவகிருஷ்ணா எழுதிய "சைபர் க்ரைம்" புத்தகத்தை படித்தேன். குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வந்த இந்த கட்டுரைகளை ஒரே கோப்பையில் பருகிய திருப்த்தி கிடைத்தது."தொழில்நுட்பம் கத்தி மாதிரி, காய்கறி வெட்டவும் பயன்படுத்தலாம், குரல்வளை அறுக்கவும் உபயோகிக்கலாம்."யுவகிருஷ்ணா குறிப்பிட்டிருக்கும் இந்த வாசகங்கள் முற்றிலும் உண்மை. பரபப்பான இந்த உலக சூழ்நிலையில், வளர்ந்து வரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

க்ரீன் டெக்னாலஜி : ஒரு சுருக்கம்!    
January 20, 2010, 8:35 am | தலைப்புப் பக்கம்

‘க்ரீன் டெக்னாலஜி’ என்னும் சொல் கோபன்ஹேகன் மாநாட்டுக்குப் பிறகு பரபரப்பாக பேசப்படும் ஒரு சொல்லாகியிருக்கிறது. தமிழில் பச்சை தொழில்நுட்பம் என்று பச்சையாக மொழிப்பெயர்க்காமல் ‘சுற்றுச்சூழல் தொழில்நுட்பம்’ என்று நம் வசதிக்கு அழகாக மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.இந்த ஆண்டிலிருந்து பொருளாதார கேந்திரமான வால்ஸ்ட்ரீட் சுற்றுச்சூழல் தொழில்நுட்பத்தை மையமாக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஆயிரத்தில் ஒருவன் (2010)    
January 19, 2010, 7:25 am | தலைப்புப் பக்கம்

பொங்கலுக்கு முன்பாக திருவண்ணாமலை செல்ல வேண்டியிருந்தது. கோயம்பேட்டில் இருந்து அரசுப்பேருந்து. பூமோ, தூமோ ஏதோ ஒரு பிரத்யேக டிவி சேனல். குணா ஓடிக்கொண்டிருந்தது. ஏற்கனவே ஐம்பது முறைக்கு மேல் பார்த்துவிட்டதால் அசுவாரஸ்யமாக ஹெட்போனை காதில் மாட்டினேன். ‘கரிகாலன் காலைப்போல...’ வேட்டைக்காரன் அலறினான்.ஐந்துமுறைக்கும் மேலாக ‘மந்தரிச்ச உதடை’ திரும்ப திரும்ப கேட்டு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஆயிரத்தில் ஒருவன்!    
January 13, 2010, 5:59 am | தலைப்புப் பக்கம்

'வெற்றி! வெற்றி' என்ற செண்டிமெண்டலான வசனத்தோடு தொடங்குகிறது படம். மணிமாறன் என்ற சாமானிய வைத்தியர், பெரிய புரட்சிக்காரனாக உருவாவதை 'திடுக்' திருப்பங்களோடு, இனிய பாடல்களோடு படமாக்கியிருக்கிறார்கள். இப்படத்தின் தாக்கம் ஐம்பதாண்டுகள் கழித்து எடுக்கப்பட்ட ஹாலிவுட் படங்களான கிளாடியேட்டர், பைரேட்ஸ் ஆஃப்ட த கரீபியன் ஆகியவற்றில் கூட இருப்பது ஆச்சரியமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

காசி    
January 12, 2010, 7:05 am | தலைப்புப் பக்கம்

இரண்டு நாட்களாக காசியோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். சதா சர்வநொடியும் நிழலாய் தொடர்கிறான். கூடவே ஒருவன் இருப்பது அந்தரங்க விஷயங்களுக்கு அச்சுறுத்தல் என்றாலும், அவனை தனியாக இருக்க வைக்க மனம் ஒப்பவில்லை.ஏனெனில் போனவருஷம் இதே மாதத்தில் தான் காசி தற்கொலை செய்துகொண்டு பிழைத்து விட்டான். கல்யாணம் செய்துகொண்ட நான்காவது மாதம், சவர பிளேடால் கழுத்தை ஆழ அறுத்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஜேம்ஸ் கேமரூன் : அரசன் அல்ல கடவுள்!    
January 9, 2010, 5:44 am | தலைப்புப் பக்கம்

பண்ணிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான டைட்டானிக் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அதன் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ஒருமுறை சொன்னார். “நான் இந்த உலகுக்கு அரசன்”. ,‘அவதார்’ திரைப்படத்தின் முதல் காட்சியை இங்கே கண்டுகளித்த இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான ராம்கோபால் வர்மா சொல்கிறார். “கேமரூன் அரசன் அல்ல....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பார்வை மட்டும் போதுமா?    
December 3, 2009, 9:47 am | தலைப்புப் பக்கம்

சுமார் முன்னூறு மாணவ, மாணவிகள் இறுக்கமாக அந்த அறையில் உட்கார்ந்திருக்கிறார்கள். அனைவருமே இன்ஜினியரிங் முதலாமாண்டுக்கு சமீபத்தில் சேர்ந்தவர்கள். சில மாதங்களுக்கு முன்புதான் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் என்பதால் இதுபோன்ற கூட்டத்தில் எப்படி நடந்துகொள்வது, எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்ற குழப்பம் அவர்களது முகத்தில் பளிச்சிடுகிறது. முயல்களைப் போல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

விமர்சனம் எனும் அரிப்பு!    
November 26, 2009, 11:29 am | தலைப்புப் பக்கம்

கால்நடைகள் புல்லை அசைப்போடுவதை போல மனிதனுக்கு எதையாவது விமர்சித்துக் கொண்டோ அல்லது கிசுகிசுத்துக் கொண்டோ இல்லாவிட்டால் தலை வெடித்து விடும் என்று எந்த வேதாளமோ எந்த யுகத்திலோ சாபமிட்டிருக்க வேண்டும். அரசு, அரசியல்வாதிகளுக்கு அடுத்தபடியாக இப்போது அதிகமாக விமர்சிக்கப்படும் துறையாக திரைத்துறை மாறியிருக்கிறது. திரையில் மின்னும் நட்சத்திரங்களின் தொழில் திறமை மீதான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நீங்க நல்லவரா? கெட்டவரா?    
November 25, 2009, 5:41 am | தலைப்புப் பக்கம்

நீங்க நல்லவரா? கெட்டவரா? என்று கேட்டால் ‘தெரியலியேப்பா!’ என்று நாயகன் கமல் மாதிரி பதில் சொல்லக்கூடும். சென்னை கோடம்பாக்கத்துக்குப் போய் தெருமுக்கில் நின்றுகொண்டு, இதே கேள்வியைக் கேட்டால் ‘நாங்கள்லாம் ரொம்ப நல்லவங்க!’ என்று நெஞ்சை நிமிர்த்தி, பெருமிதமாய் பதில் சொல்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ‘நல்லோர் வட்டத்தை’ சேர்ந்தவர்கள்.தெற்கு சிவன் கோயில் பகுதிக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை சமூகம்

வாயாடிகளுக்கு சம்பளம்!    
October 24, 2009, 5:15 am | தலைப்புப் பக்கம்

எப்போதும் வளவளவென்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பேசுவதற்கு யாராவது சம்பளம் வழங்கினால் மாட்டேன் என்றா சொல்வீர்கள். கொடுக்கிறார்களே? ரேடியோ நிறுவனங்களில் வாயாடிகளை தேடிப்பிடித்து ஆயிரக்கணக்கில் சம்பளம் கொடுக்கிறார்கள். பந்தயங்களில் குதிரை ஓட்டுபவர்கள் வெறும் ‘ஜாக்கி’. ரேடியோவில் நேயர்களை ஓட்டோ ஓட்டுவென்று ஓட்டுபவர்கள் ரேடியோ ஜாக்கி. சுருக்கமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கல்யாணம்!    
September 20, 2009, 2:36 pm | தலைப்புப் பக்கம்

கிருஷ்ணன் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பான். நாகேஷைப் போல ஒல்லியான வெடவெட தேகம். நிற்கும்போது கூட ஏதாவது சாய்மானம் அவனுக்கு தேவைப்படும். துறுதுறுவென்று எதையாவது செய்து கொண்டிருப்பான். கையையும், காலையும் வெச்சுக்கிட்டு சும்மாவே இருக்கமாட்டியாடா என்று அவனை கேட்போம். இரவு 12 மணிக்கு முன்னதாக அவன் வீட்டுக்கு சென்றதாக சரித்திரமேயில்லை. தினமும் பீர், பீச்சு, பிகர்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

உதிரத்துணி!    
September 5, 2009, 7:00 am | தலைப்புப் பக்கம்

”இலங்கையில் தமிழர்களை சிங்களவர்கள் கொல்கிறார்கள்!” என்ற ஒற்றைவரியினை தவிர்த்து, ஈழப்பிரச்சினை குறித்த போதுமான அறிவும், தீவிரமான புரிதலும் இல்லாமலேயே முப்பது ஆண்டுகளாக உலகத் தமிழர்கள் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சில வருடங்களாக இணையமும், புலம்பெயர் தமிழர்கள் எழுதும் சில புத்தகங்களும் ஓரளவுக்கு நடந்தவற்றையும், தற்போதைய நடப்பையும் தெளிவாக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பன்றிக் காய்ச்சல் - ஊடகங்கள்!    
August 12, 2009, 6:50 am | தலைப்புப் பக்கம்

பாரதிக்கு வயது 20. கடந்த மார்ச் மாதம் தான் திருமணம் நடந்தது. கணவர் மாடசாமி. மடிப்பாக்கத்தில் மளிகைக்கடை வைத்திருக்கிறார். ஆடிமாசத்துக்காக தாய்வீட்டுக்கு வந்த பாரதிக்கு திடீர் காய்ச்சல். உள்ளூர் மருத்துவர்களிடம் சிகிச்சைப் பெற்றும் காய்ச்சல் சரியாகவில்லை. சீரியஸான நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பன்றிக்காய்ச்சலுக்கான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

அழியப் போகிறதா உலகம்?    
August 5, 2009, 9:57 am | தலைப்புப் பக்கம்

கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? ஜாதகம், பெயர்ராசி எல்லாம் பார்க்காமல், வத்தலோ தொத்தலோ கிடைத்த பெண்ணை மணந்து கொள்ளுங்கள்.யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் ஆசைப்படுங்கள். ஆசைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள். ஸ்டாக் மார்க்கெட், பொருளாதார மந்தம், வேலை இழப்பு, இடைத்தேர்தல், மின்னணு இயந்திரம் குளறுபடி, ஜெயலலிதா, கொடைநாடு, கலைஞர் கடிதம், பெட்ரோல் விலை உயர்வு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

லக் - மரணவிளையாட்டு!    
July 25, 2009, 5:30 am | தலைப்புப் பக்கம்

ஒரிஜினல்! டூப்ளிகேட்! பிரெஞ்ச் படமான ட்ஸாமெடியை (Tzameti) யாருக்கும் தெரியாமல் நைசாக இயக்குனர் சோஹம்ஷா உருவிவிட்டதாக பாலிவுட் வட்டாரத்தில் புகைந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் வந்த ஹாலிவுட் மொக்கையான டெத்ரேஸ் (Death race 2008) படத்தின் பாதிப்பும் நிறைய உண்டு இந்த லக்கில்.லக்கியான ஆட்களைப் பற்றிய படமிது. சஞ்சய்தத் ஒரு லக்கியான ஆள். கரப்பான் பூச்சி மாதிரி. காலில் போட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அப்பாவி அடிமைகளுக்கு!    
July 24, 2009, 10:48 am | தலைப்புப் பக்கம்

"அம்மா! ராமு புதுசா பேட் வாங்கியிருக்கான். அவன் கூட கிரவுண்டுக்கு வெளையாட போறேம்மா""கிருஷ்ணா ஒழுங்கா சமர்த்தா போய் படுத்து தூங்கு. லீவு வந்தாலே போதுமே. வெய்யில்ல சுத்த கிளம்பிடுவியே""அம்மா. ப்ளீஸ்மா ஹோம் ஒர்க் எல்லாம் சமர்த்தா முடிச்சிட்டேம்மா. ப்ளீஸ்மா.""சொன்னா கேட்க மாட்டே. டாடி வந்தா அடிச்சுடுவார். போயி தூங்குடா"----------------------------------------------------------------"சார் பையன் மேத்ஸ், சயின்ஸ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பைக்    
July 20, 2009, 3:30 am | தலைப்புப் பக்கம்

பிரகாஷ்க்கு அந்த வயதிலேயே பைக் என்றால் வெறி. அந்த வயது என்றால் பதிமூன்று வயது. ஏழாவதோ எட்டாவதோ படித்துக் கொண்டிருந்தபோது ஒருநாள் சொன்னான். “போக்கிரிராஜாவில் தலைவர் ரெண்டு கையையும் உட்டுட்டு சிகரெட் பத்தவெச்சுட்டு புல்லட் ஓட்டுவாரே? பெரியவனானதுக்கப்புறமா அதுமாதிரி ஓட்டுவேன்”. எனக்கு அவனளவுக்கு பைக் வெறி இருந்ததில்லை. ஆனால் மற்ற வெறி(கள்) ஏராளமாக இருந்தது. ரோடில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

திருவிளையாடல்    
July 18, 2009, 6:19 pm | தலைப்புப் பக்கம்

வெங்கடேசுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் என்பது பள்ளியின் புல் பூண்டுக்கு கூடத்தெரியும். இருந்தும் இரண்டு பேரும் எப்போதும் ஒரே ஜமாவில் கும்மியடிப்பது பலருக்கு ஆச்சரியம். என்னைப் பொறுத்தவரை கருத்து வேறு, நட்பு வேறு. அவனுக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.எங்கள் பள்ளியையும், பக்கத்தில் இருக்கும் மகளிர் மேல்நிலைப் பள்ளியையும் பிரிப்பது ஒரு ஐந்தடி உயர சுவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மென்பொருள் கூலிகளின் அவலம்!    
June 18, 2009, 10:03 pm | தலைப்புப் பக்கம்

நம் தெருவில் நம்மை மாதிரியே சாமானியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பம் ஒன்றிருக்கும். அந்த வீட்டு பசங்களும் நம்மை மாதிரியே கேரம்போர்டுக்கும், உட்டன் செஸ்போர்டுக்கும் ஏங்கும் பயல்களாக இருந்திருக்கலாம். திடீரென்று அந்த குடும்பத்தில் யாருக்கோ நல்லவேலை கிடைத்து நிறைய பணம் மரத்தில் காய்க்க ஆரம்பித்து விட்டால் என்ன நடக்கும்?தெருவில் கோலியும், பம்பரமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

போலி!    
May 21, 2009, 9:26 pm | தலைப்புப் பக்கம்

"நான் ஒண்ணாவது படிக்கறப்பவே அவன் பிரச்சினை ஆரம்பிச்சிடிச்சி. நான் எந்த கலர் டிரஸ் போடுறனோ அதே கலர்லே அவனும் டிரஸ் பண்ணுவான். நான் எதுவெல்லாம் வாங்குறனோ அதுவெல்லாம் அவனும் அடம்பிடிச்சி வாங்குவான். என்னோட பக்கத்து வீட்டு பையன் என்கிறதாலே நான் என்னவெல்லாம் பண்ணுறேன்னு பாக்குறது அவனுக்கு ரொம்ப ஈஸி""இண்ட்ரெஸ்டிங்.. அப்புறம்?""ஒவ்வொரு விஷயத்துலேயும் என்னை இமிடேட் பண்ண...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: