மாற்று! » பதிவர்கள்

பிரபு ராஜதுரை

‘ஈழ’த்தமிழர்களுக்கு உண்டு, இந்தியாவில் உயர்கல்வி!    
June 18, 2009, 6:36 pm | தலைப்புப் பக்கம்

இலங்கையிலிருந்து சுமதி இந்தியாவிற்கு குடி பெயர்ந்த பொழுது, அவளது வயது எட்டு. இலங்கையில் நிகழ்ந்த போர்ச்சூழலுக்கு பயந்து, அவளது பாட்டிதான் முதலில் ‘வாழ்ந்தது போதும்’ என்று சுமதியை அழைத்து கொண்டு அவளது பூர்வீக ஊரான புதுக்கோட்டைக்கு வந்தார்.பின்னர் சுமதியின் தாயும், தந்தையும் இலங்கையின் ஞாபகங்களை மட்டுமே சுமந்து கொண்டு இந்தியாவிற்கு வந்து விட்டனர்.வரும் பொழுது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் சட்டம்

கேவலமான நடத்தையுள்ள ஒரு பெண்!    
April 7, 2009, 2:44 am | தலைப்புப் பக்கம்

சரசுவதி பாய், கணவனால் கைவிடப்பட்ட பின்னர் அமோல் சிங் என்பவருடன் மத்திய பிரதேசத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தார். ஆனாலும் அமோல் சிங்கின் எதிரியான ராஜு சேத் என்பவரிடம் கூட்டுக் குத்தகைக்கு நிலம் விவசாயம் செய்து வந்ததால், அமோல் சிங் அவரிடம் சண்டையிட்டு வந்தார்.சம்பவம் நடந்த 17.03.92 அன்று இரவு 8.00 மணிக்கு சரசுவதியின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் வசித்தவர்கள் பலர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அமெரிக்காவைப் பார்...    
March 20, 2009, 6:15 pm | தலைப்புப் பக்கம்

நடந்து முடிந்த வழக்குரைஞர்கள் வேலை நிறுத்தத்தைப் பற்றி 19/03/09 தேதியிட்ட ‘இந்து’வில் அதன் அமெரிக்க வாசகர் ஒருவர் எழுதிய கடிதம் கவனத்தை ஈர்ப்பதாயிருந்தது. அதாவது அமெரிக்காவில், ஒரு வழக்காடி தன்னுடைய வழக்கினை தானே நடத்தக்கூடிய உரிமை உள்ளதாம். வழக்குரைஞர் வேலை நிறுத்தம் காரணமாக, தமிழ்நாட்டிலும் வழக்காடிகள் தங்களுடைய வழக்கினை தாங்களே நடத்தும் உரிமையினைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

தீர்ப்புகள் விமர்சிக்கப்படலாம், முழுவதும் படித்த பின்னர்...    
March 3, 2009, 12:11 pm | தலைப்புப் பக்கம்

கடந்த மாதம், தில்லி உயர்நீதிமன்றம் ‘பாலியல் பலாத்கார’ வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் தண்டனைக் காலத்தை 5 1/2 ஆண்டுகளாக குறைத்தது, பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பினை ரத்து செய்ய வேண்டுமென்று மகளிர் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக மனுச்செய்யும் அளவிற்கு இந்த தீர்ப்பின் சாரம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதற்கு, வழக்கம் போலவே இதனைப் பற்றிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

கொஞ்சம் இரக்கம் மட்டும் போதும்!    
February 4, 2009, 3:49 am | தலைப்புப் பக்கம்

சில வருடங்களுக்கு முன்னர், சில பயங்கரவாதிகள் இந்திய விமானமொன்றினை ஆப்கானிஸ்தானுக்கு கடத்திச் சென்றனர். அவர்களிடம் சிக்கிக் கொண்ட சுமார் நூறு பயணிகளின் உயிரினைக் காக்க, அவர்களின் உறவினர்கள் தில்லியில் ஆர்ப்பாட்டம் செய்தனர். “48 மணி நேரம்தான், பயணிகள் விமானத்திலிருந்து வெளியேறவில்லையெனில், அவர்கள் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல” என்று இந்திய அரசு கூறவில்லை.சில...தொடர்ந்து படிக்கவும் »

வலைபதியும் நீதிபதிகள்!    
January 13, 2009, 11:58 am | தலைப்புப் பக்கம்

கிழக்கு பதிப்பகம், பத்ரி நாராயணனை ஒருமுறை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அமெரிக்காவில் உள்ள பொருளாதார பேராசிரியர் ஒருவரும், நீதிபதி ஒருவரும் இணைந்து சட்டம், அரசியல் மற்றும் பொருளாதார விடயங்களைக் குறித்து விவாதிக்கும் ‘பெக்கர் போஸ்னர் வலைப்பதிவு’ (Becker-Posner-blog) என்ற பதிவினை எனக்கு அறிமுகப்படுத்தி, ‘இது போல இந்தியாவிலுள்ள நீதிபதிகளும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

பயங்கரவாதமும், சட்ட உதவியும்...    
December 22, 2008, 7:30 pm | தலைப்புப் பக்கம்

மும்பை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ‘பிடிபட்ட தீவிரவாதிக்கு வழக்குரைஞரின் உதவி அளிக்கப்படலாமா, கூடாதா?’ என்ற ஒரு கேள்வி எழுப்பப்பட்டு ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. தானாக முன்வந்து மனு தாக்கல் செய்த வழக்குரைஞரின் வீடு சிவசேனா தொண்டர்களால் தாக்கப்பட்டுள்ளது.சிவசேனை தொண்டர்கள், நாட்டுப்பற்றினை தங்களது செயலுக்கு காரணமாக கூறினாலும், அவர்களது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

நளினிக்கு கருணை, கானல் நீர்தானா? - 3    
October 16, 2008, 6:25 pm | தலைப்புப் பக்கம்

ஆயுள் தண்டனைக்கான அர்த்தம், குற்றவாளியின் ஆயுள் வரைதான் என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 45 ஆயுள் என்பது ஒரு மனிதனின் ஆயுளைக் குறிக்கும் என்று விளக்கமளிப்பதிலிருந்து ஆயுள் தண்டனை என்பதற்கு வேறு எவ்வித விளக்கமும் கூற இயலாது.இதையே மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோபால் கோட்சே தன்னை 14 ஆண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

உச்ச நீதிமன்றமும், குழப்பமான தீர்ப்புகளும்!    
July 8, 2008, 6:45 pm | தலைப்புப் பக்கம்

நமது உச்சநீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பில் கூறப்படும் சட்டக் கருத்துகளை இந்தியாவில் செயல்படும் அனைத்து நீதிமன்றங்களும் பின்பற்ற வேண்டும். (Article 141 of Constitution of India) எனவே உச்சநீதிமன்றமானது தன் முன் உள்ள எந்த ஒரு வழக்கினையும் ஆய்ந்து அறிந்து தீர்க்க வேண்டிய அவசியம் உள்ளது.ஏனெனில் அவர்கள் தீர்ப்பில் எழுதக் கூடிய ஒவ்வொரு வாசகமும், இந்தியா முழுவதும் உள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

நீதிமன்ற புறக்கணிப்பும்...சோம்பேறி மனதும்    
July 8, 2008, 6:45 pm | தலைப்புப் பக்கம்

கடந்த ஒரு வாரமாக வழக்குரைஞர்கள் தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களை புறக்கணித்து வருகின்றனர். இவ்வாறான் தொடர்ச்சியான போராட்டங்களில் வழக்கமாக பங்கு எடுக்காத, மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்குரைஞர்களும் நீதிமன்றங்களை புறக்கணிப்பதால், தமிழக நீதித்துறையில் பெரும் பிரச்னை எழுந்துள்ளது.வழக்குரைஞர்கள் இவ்வாறு நீதிமன்றங்களைப் புறக்கணிப்பது, முறையல்ல என்று உச்ச...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

பொதுநல வழக்குகள், நீதிபதிகள் மற்றும் தமிழ்!    
April 28, 2008, 5:31 pm | தலைப்புப் பக்கம்

உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளைக் குறித்து, சட்ட நிபுணர்கள் பலர் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் பதிவு ஒன்றினைப் பற்றி எனது முந்தைய பதிவு ஒன்றில் குறிப்பிட்டேன். சமீபத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ அவர்கள் பொதுநல வழக்குகளைக் குறித்து தெரிவித்த கருத்துகளைக் குறித்து சில பதிவுகளை அங்கு கண்ணுற நேர்ந்தது.ஒரு பிரச்சினையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

சாய் பாபாவும் இராமரின் மோதிரமும்!    
April 18, 2008, 3:05 am | தலைப்புப் பக்கம்

கடந்த மாதம் ஏதோவொரு தொலைக்காட்சியில், புட்டபர்த்தி சத்திய சாய்பாபாவை பற்றிய அவரது நிறுவனம் தயாரித்த ஆவணபடம் ஒன்றினை பார்த்தேன். இறுதியில் பொது நிகழ்ச்சியில், தனது வாயிலிருந்து பெரிய பச்சைக்கல் பதித்த மோதிரமொன்றினை எடுத்துக் காட்டி, ‘திருமணத்தின் பொழுது ராமர் சீதைக்கு அணிவித்த மோதிரம்’ என்று தெரிவித்தார். கூட்டம் வியப்பிலாழ மோதிரத்தினை அவரது முன்னே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

‘ஞாநி’களும் மேற்போக்காக மேய்தலும்...    
March 31, 2008, 5:54 pm | தலைப்புப் பக்கம்

“திருமணத்தை ரத்து செய்வதற்கான உரிமை குரான் விதிகளின்படி இஸ்லாமியப் பெண்களுக்கும் உண்டு என்று அறிவித்து அதற்கான விதிமுறைகளை வெளியிட்டிருப்பதற்காக அனைந்திந்திய முஸ்லீம் சட்ட வாரியத்துக்கு இ.வா.பூச்செண்டு” - எழுத்தாளர் ஞாநி!‘ஞாநிகளுக்கு எதற்கு அறிவு? என்ற எனது பதிவினை தொடர்ந்து, தனது கருத்துகளை ‘செத்த மரங்களில் செதுக்கும் கலைஞர்கள்’ என்று தனது வலைப்பதிவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

‘ஞாநி’களுக்கு எதற்கு அறிவு?    
March 30, 2008, 11:49 am | தலைப்புப் பக்கம்

மும்பையில் இருக்கையில், மிட் டே (Midday) டைம்ஸ் ஆப் இந்தியா (times of India) ஆகிய தினசரிகளில் ரஜ்தீப் சர்தேசாய், ஷோபா டே, கங்காதர், சுவாமிநாத ஐயர் மற்றும் பல பத்தி எளுத்தாளர்கள் (columnists) எழுதும் கட்டுரைகளை (column) மிகவும் ஆர்வமுடன் படிப்பேன். நாமும் இப்படி எழுதிப் பார்த்தால் என்ன என்ற ஆசை அவ்வப்பொழுது எழுந்தாலும், அவர்களைப் போல மொழியின் மீது ஆளுமையும், அறிவும் நமக்கு வாய்க்குமா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

இந்திய ஆட்சி மொழியும் நீதிமன்ற நிலைப்பாடும் - பகுதி III    
March 29, 2008, 12:44 pm | தலைப்புப் பக்கம்

தனது கட்டுரையில் வெங்கட் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய மொழிகளில் கிடைக்கிறதா? என்று ஒரு கேள்வியையும் எழுப்பியிருந்தார்.பல சட்டங்களின் தமிழ் வடிவம் கிடைக்கும் என்றாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் எழலாம். உதாரணமாக சட்ட பிரிவுகளில் காணப்படும் 'shall', 'may', 'as' போன்ற வார்த்தைகளின் நுணுக்கமான அர்த்தம் பற்றிக் கூட பல சமயங்களில் விவாதம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

இந்திய ஆட்சி மொழியும் நீதிமன்ற நிலைப்பாடும் - பகுதி II    
March 29, 2008, 12:21 pm | தலைப்புப் பக்கம்

ஹிந்தி வேண்டாம் என்றால் ஆங்கிலம் மட்டும் அந்நிய மொழியில்லையா? அதன் தேவை என்ன? உணர்வு பூர்வமாக அணுகினால் இந்த வாதம் சரியே! ஆனால் நடைமுறையில், இந்தியா ஒன்றுபட்டிருப்பதற்கு ஆங்கிலம் முக்கியமான ஒரு காரணம் என்று நான் உணர்கிறேன். இதை நான் சந்தித்த பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.உதாரணமாக, அரசியலமைப்புச் சட்டத்தின் 345வது பிரிவின் படி மாநில அரசுகள் ஹிந்தியையோ அல்லது அந்தந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

இந்திய ஆட்சி மொழியும் நீதிமன்ற நிலைப்பாடும் - பகுதி I    
March 29, 2008, 10:46 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் 'பிராந்திய மொழிகளில் சிறந்த வலைப்பதிவாக' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 'சைன் குவா நான்' என்ற வலைப்பதிவில் அதன் உரிமையாளரான வெங்கட் இந்து பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு செய்தியினை முன்னிறுத்தி தனது கருத்துகளை வெளியிட்டு இருக்கிறார். இந்துப் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியின் தலைப்பும் ஏதோ இந்தியாவின் ஆட்சி மொழி 18லிருந்து 22க உயருவதாக ஒரு தோற்றத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

நிலைத்த அன்பின் நீடித்த அடையாளம்?    
March 22, 2008, 4:56 pm | தலைப்புப் பக்கம்

செய்தித் தாள் படிப்பவரா நீங்கள்? அவ்வாறென்றால் சில நாட்களுக்கு முன்னர் ஆயுள் காப்பீட்டுக் கழகம்' குறித்த வழக்கு ஒன்றில் சென்னை மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பினைக் குறித்த செய்தியினை படித்த ஞாபகம் இருக்கலாம். பலருக்கு ஞாபகம் இருக்க வாய்ப்பில்லை என்பது எனது கணிப்பு. அதாவது கொலையுண்ட ஒரு மனிதனின் மரணத்தினை விபத்தாகக் கருதி, டபுள் பெனிஃபிட்'...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிதி சட்டம்

பெண்கள் தத்து எடுக்க இயலாதா?    
March 16, 2008, 9:26 am | தலைப்புப் பக்கம்

‘திருமணம் நிலுவையில் இருக்கையில் இந்துப் பெண்கள் தத்து எடுக்க முடியாது - உச்ச நீதிமன்றம்’ (Hindu woman can’t adopt child when marriage holds)இது உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றினைப் பற்றி, 18.01.08 அன்று இந்து நாளிதழில் வெளிவந்த செய்தியின் தலைப்பு. இந்த தலைப்பானது, ஏதோ இந்து சட்டத்தில், தத்து எடுப்பது குறித்து ஆண்களுக்கு உள்ள உரிமை பெண்களுக்கு இல்லை என்பது போன்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பறவைகள் பலவிதம்!    
March 7, 2008, 12:46 pm | தலைப்புப் பக்கம்

இன்றைய கோகுலம் இதழில், போன வருடம் எனது மகள் அனுப்பிய கவிதை...இதனை எவ்வாறு கூறுவது என்று தெரியாதலால், கவிதை என்கிறேன். எனது நவீன கவிதை நண்பர்கள், இது கவிதையா? என்று சண்டைக்கு வர...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் கவிதை

ஊழியரின் மரணத்திற்கு சோமி மிட்டல் பொறுப்பா?    
February 22, 2008, 4:35 pm | தலைப்புப் பக்கம்

“BPO பெண் மரணத்திற்கு நிறுவன நிர்வாகியே பொறுப்பு: உச்சநீதிமன்றம்” நேற்று இப்படி ஒரு தலைப்பு, அவசர உலகில், செய்திகளுக்கு நான் சார்ந்திருக்கும் ‘சற்றுமுன்’னில்!சற்றுமுன் என்பது, தன்னார்வமிக்க இளைஞர்களின் முயற்சியில் விளைந்த இணைய செய்திச் சேவை. இணையத்தில் உலாவும் வழக்கமுடைய பல தமிழர்களுக்கு பல்வேறு செய்திகளை உடனடியாக சென்று சேர்க்கும் அதன் பணி பாராட்டுக்குறியது....தொடர்ந்து படிக்கவும் »

ஐடி நிறுவனமென்றால், ஆண்டையா?    
February 16, 2008, 12:51 pm | தலைப்புப் பக்கம்

‘சந்தோஷ் பக்கங்கள்’ என்ற வலைப்பதிவில், ஐய்டி நிறுவன ஊழியர்களை தடாலடியாக வேலையிலிருந்து நீக்குவது பற்றி விவாதம் நடைபெற்று வருகிறது. எதிர்வினையாக எழுத விரும்பிதை இங்கு தனிப்பதிவாக...முக்கியமாக கருத்து தெரிவித்த பலரும், ஐய்டி ஊழியர்களுக்கு ஏதும் சட்டப் பாதுகாப்பு இல்லை என்பது போலவே எழுதியிருக்கிறார்கள். சட்டத்தின் நான்கு மூலைகளுக்கும் உள்ளாக கொண்டு வர முடியாமல்...தொடர்ந்து படிக்கவும் »

COMMERCIAL (S)HIT    
February 9, 2008, 2:54 am | தலைப்புப் பக்கம்

'காளை' என்ற தமிழ்ப்படத்திற்கு எத்தனையோ விமர்சனங்கள் எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் இன்றைய செய்தித்தாளில் படத்தயாரிப்பாளர்களே செய்து கொண்ட விமர்சனத்தை விட பொறுத்தமான விமர்சனம் யாரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

அலங்காநல்லூர் சல்லிக்கட்டு படங்கள்    
January 17, 2008, 4:50 pm | தலைப்புப் பக்கம்

அலங்காநல்லூரில் இன்று சல்லிக்கட்டு நடைபெற்றது. இதனை வீர விளையாட்டு என்பதை விட திறமை விளையாட்டு (game of skill) என்பது வீரர்களுக்கு நாம் செய்யும் மரியாதை என்று விளையாட்டினை பார்த்த எனக்கு தோன்றியது.மாட்டினை அணையும் தூரம் சில அடிகளே! மாட்டிற்கு துன்புறுத்துதல் என்பது இல்லை. மாட்டினை அடித்தலோ வாலைப்பிடித்து இழுத்தலோ இல்லை. இழுத்த இரு வீரர்கள் உடனடியாக அகற்றப்பட்டனர்....தொடர்ந்து படிக்கவும் »

சக் தே! பில்லா மற்றும் சில படங்கள்...    
January 16, 2008, 11:20 am | தலைப்புப் பக்கம்

Big Temple, Thanjavurஷோலேயைத் தவிர வேறு எந்த ஹிந்திப்படமும் எனக்குப் பிடித்ததில்லை பார்ப்பதிலும் விருப்பம் இல்லை என்று கூறிக் கொண்டிருந்தேன், ராம் கோபால் வர்மாவின் ‘சத்யா’ (Satya) பார்க்கும் வரை!இத்தனைக்கும் நான் ‘சத்யா’ கேபிள் இணைப்பில் மோசமான ஒலித்தரத்துடன் பார்த்தேன். ஆனாலும் இரண்டு மூன்று நாட்களுக்கு என்னை சத்யா நினைவுகள் துரத்தியடித்ததற்கு முக்கிய காரணம், அதன் தெளிவான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சல்லிக்கட்டு வழக்கும் நானும்!    
January 14, 2008, 11:17 am | தலைப்புப் பக்கம்

இன்று தமிழகத்தின் முக்கிய செய்திகளில் ஒன்றாக அலசப்படும் சல்லிக்கட்டு வழக்கு, கடந்த 2006ம் ஆண்டு மாட்டு வண்டிப் பந்தயத்திற்கு (Rekla Race) அனுமதி கிடையாது என்று காவல்துறை வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில் தொடங்கியது.தொண்ணூறுகளில் கோவாவில், சூதாட்டத்திற்காக மாடுகளை மோதவிட்டு நடைபெறும் காளை சண்டையினை (bull fight) எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அதனை தடை செய்து மும்பை...தொடர்ந்து படிக்கவும் »

மேலும் கேள்விகள், ஆங்கிலத்தில்    
December 30, 2007, 5:48 pm | தலைப்புப் பக்கம்

கடந்த பதிவில் கேள்வி கேட்டிருந்த நண்பர் மேலும் சில கேள்விகளை கேட்டிருந்தார். ஒரு ஆவணமாக இருக்கட்டுமே என்று எனது பதிவிலியே பதில்களை தருகிறேன். சுவராசியமாக ஏதும் இருக்காது, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலையுச்சியிலுள்ள முதலியார் ஊத்து என்ற இடத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்தை தவிர...Question : Is the photographs/video taken using Mobile phones/Digitalcameras are accepted by Indian...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

பயணம் 1 - வேட்டங்குடி    
December 30, 2007, 9:36 am | தலைப்புப் பக்கம்

Vettangudi Birds Sanctuary மதுரை - மேலூர் - திருப்பத்தூர் சாலையில், திருப்பத்தூருக்கு சில கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது வேட்டங்குடி பறவைகள் சரணாலயம். அதிக அளவில் பிரபலமாகாத இந்த சரணாலயத்திற்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு இருநாட்களுக்கு முன்பு போனது நல்ல அனுபவம்.பறவைகளைப் பார்ப்பதற்கு வசதியாக உயரமான கண்காணிப்பு கோபுரம் உள்ளது. சரணாலயத்தை ஒட்டி உள்ள குடியிருப்பினை விட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

மீண்டும் மீண்டும் மரணதண்டனை!    
December 24, 2007, 11:39 am | தலைப்புப் பக்கம்

“The mood and temper of the public with regard to the treatment of crime and criminals is one of the most unfailing tests of the civilizations of any country”-Winston Churchillவின்ஸ்டன் சர்ச்சில் மீது எனக்கு பெரிய அளவில் மரியாதை ஏதும் இல்லையெனினும், தனது எண்ணங்களை சிறந்த முறையில் வெளியிடும் அவரது ஆற்றல் குறித்து வியப்பு கலந்த மதிப்பு உண்டு. கடந்த நூறு ஆண்டுகளில் தோன்றிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

மலர்கள்-புகைப்பட போட்டிக்காக...    
December 1, 2007, 11:51 am | தலைப்புப் பக்கம்

என் வீட்டுத் தோட்டத்தில்...Canon Powershot S5ISAutoEx 1/250secISO200AV F 2.71FL 6.0mmSuper Macroஎன் வீட்டுப் பக்கத்தில்...ManualEx 1/1600 secondsISO 800AV F 4.51FL 6.00...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

கண்ணீர்த்துளி, கட்டிடமாக!    
November 3, 2007, 6:00 pm | தலைப்புப் பக்கம்

தாஜ்மகாலைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வம், பெரிதாக எதுவும் எனக்கு இருந்ததில்லை. தாஜ்மகால் படங்களை சிறுவனாக இருக்கையில் காண்கையில், இதில் என்ன அப்படி உலக அதிசயம் இருக்க முடியும் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

நீதிமன்ற அவமதிப்பு - நீதிக்கு அவமரியாதை?    
September 22, 2007, 6:10 pm | தலைப்புப் பக்கம்

கடந்த வெள்ளிக்கிழமை, மும்பை ‘மிட் டே’ பத்திரிக்கையாளர்கள் சிலரை, நீதிமன்றத்தின் மாண்பினை குறைப்பது போல செயல்பட்டதாக கூறி டெல்லி உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்படி (Contempts...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

கலீல் கிப்ரானும், குழந்தை வளர்ப்பும்!    
September 15, 2007, 10:51 am | தலைப்புப் பக்கம்

திரைப்படப் பாடல்கள் எத்தனையோ கேட்கிறோம்…ஆயினும் கவித்துவமான வரிகள் உடனடியாக மனதில் பதிவதில்லை. ஆனால், முக்கியமான ஒரு சம்பவத்தோடு வரிகள் தொடர்பு கொள்ளும்போதுதான் அவற்றின் முழு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை சட்டம்

கர்ப்பிணிக்கு மரண தண்டனை!    
September 10, 2007, 6:12 pm | தலைப்புப் பக்கம்

ரஜினிகாந்தும், பிரபுவும் இணைந்து நடித்த திரைப்படம். பெயர் ஞாபகம் இல்லை. இருவரும் சிறையில் கைதிகள். அதே சிறையில் பாண்டியன் தூக்குத் தண்டனையினை எதிர்நோக்கியிருக்கும் கைதி. பாண்டியன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

முனைவர்களும் டாக்டர்களும்...    
September 8, 2007, 5:27 pm | தலைப்புப் பக்கம்

நடிகர் விஜய், ஜேப்பியார் போன்றவர்களுக்கு சமீபத்தில் தமிழக பல்கலைக்கழகம் ஒன்று ‘கெளரவ டாக்டர்’ பட்டங்களை வழங்கியது. எதிர்பார்த்தது போல கேலியுடனே இந்தச் செய்தியானது அணுகப்பட்டது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சட்டப்படி சரியான தீர்ப்பா?    
August 26, 2007, 11:26 am | தலைப்புப் பக்கம்

சட்டம் குறித்தான விழிப்புணர்வினை மக்களிடையே ஏற்ப்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படும் ‘மக்கள் சட்டம்’ என்ற வலைப்பதிவில் மோட்டார் வாகன விபத்து குறித்து, சமீபத்தில் உச்ச நீதிமன்றம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

உச்ச நீதிமன்றத்தில் இடப்பங்கீடு!    
August 24, 2007, 5:58 pm | தலைப்புப் பக்கம்

கடந்த 21ம் தேதியன்று, தமிழகத்தினை சேர்ந்த நீதிபதி திரு.சதாசிவம் உச்ச நீதிபதியாக பதவியேற்றது, தமிழக நீதித்துறையினை பொருத்தவரை முக்கியமான ஒரு நிகழ்வாகும். தமிழர் ஒருவர் உச்ச நீதிமன்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ஹாரி போட்டரும் சிவாஜியும்    
August 13, 2007, 1:37 pm | தலைப்புப் பக்கம்

“அப்பா, ஹாரி போட்டர் புத்தகம் வேணும்”“சரி”“முதல் நாளே வேணும்”“ம்ம்...பார்க்கலாம்”“அப்ப கண்டிப்பா வாங்கித்தருவீங்களா?”“சரி...வாங்கலாம்”“எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

ஜாதி என்ன?    
June 16, 2007, 4:37 pm | தலைப்புப் பக்கம்

பல வருடங்களுக்கு முன்னர் நடிகர் கமல்ஹாசன் ‘தனது மகளை பள்ளியில் சேர்க்க சென்ற பொழுது, மகளின் பள்ளி ஆவணத்தில் ஜாதி, மதம் என்ற இடத்தில் இந்தியன் என்று குறிப்பிட வேண்டியதாகவும், பள்ளி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் சட்டம்

ஏன் நிகழவில்லை, அதிசயம்?    
June 2, 2007, 11:04 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவின் சிறந்த பொருளாதார மேதைகளில் ஒருவராக கருதப்படும், பிரதமர் மன்மோகன், இன்று தனிமையில் தனக்குள்ளே சிந்திக்கும் கேள்வி இதுவாகத்தான் இருக்க முடியும். இந்தக் கேள்விக்கு விடை காண...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

விகடன் - உண்மைக் கலைஞனின் கோபம்    
May 29, 2007, 7:44 pm | தலைப்புப் பக்கம்

திரைப்பட நடிகர்களின் பின்னே விசிறி என்று சுற்றுவது முட்டாள்களின் வேலை என்று முகத்திலடிக்கும்படி கூறுகிறார் பிரகாஷ்ராஜ். ‘ஸ்பேடை ஸ்பேட்’ என்று கூறக்கூடிய ஒரு நடிகர் தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் திரைப்படம்

விகடன் - புரட்சிக் கலைஞரின் கோபம்    
May 29, 2007, 7:42 pm | தலைப்புப் பக்கம்

ஆனந்த விகடன் பேட்டியில் தனது திருமண மண்டபம் இடிக்கப்பட்டதைப் பொறுத்து பொங்கிப் பொறுமியிருக்கிறார் விஜயகாந்த்!ஏதோ மற்ற அரசியல்வாதிகளும், நீதிமன்றங்களும் இணைந்து சதி செய்து...தொடர்ந்து படிக்கவும் »

விகடன் - கலைஞரின் கோபம்    
May 29, 2007, 7:39 pm | தலைப்புப் பக்கம்

சில தினங்களுக்கு முன்னர் ‘திருப்பிக் கொடுத்தால் தாங்குவதற்கு பலம் இருக்கிறதா?’ என்று ஏறக்குறைய தினகரன் சம்பவத்தினை ஞாபகப்படுத்தும் தோரணையில் முதல்வர் கலைஞர், ஆனந்த விகடன்...தொடர்ந்து படிக்கவும் »

ஏப்ரல் மாத முதல் தேதி கதை....(மெளன ராகம்)    
May 24, 2007, 6:30 pm | தலைப்புப் பக்கம்

சட்டம், நீதிமன்றங்களைப் பற்றி மக்கள் எவ்வளவு தூரம் அறிந்திருக்கிறார்களோ தெரியாது. ஆனால் வக்கீல் நோட்டீஸ் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. திரைப்படங்களில் கூட வக்கீல் நோட்டீஸைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

தலித்துகளுக்கு தமிழக அரசு மறுக்கும் உரிமை    
May 22, 2007, 3:22 pm | தலைப்புப் பக்கம்

இட ஒதுக்கீடு பிரச்னையில் அகில இந்திய அளவில் தமிழக அரசு ஒரு முன்னோடி மாநிலமாக கூறப்பட்டாலும், ஆட்சியாளர்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ தொடர்ந்து பல வருடங்களாக தாழ்த்தப்பட்டவர்களுக்கான...தொடர்ந்து படிக்கவும் »

திரைப்படங்களில் நம்பகத்தன்மை    
May 20, 2007, 9:31 am | தலைப்புப் பக்கம்

சில நாட்களுக்கு முன்னர் 'டைனோ' என்பவர் ராகாகி குழுமத்தில் நடந்த ஒரு விவாதத்தில் ஹாலிவுட் திரைப்பட இயக்குஞர்கள் காட்சியமைப்பின் நம்பகத்தன்மைக்காக எவ்வளவு மெனக்கெடுகிறார்கள்...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு நாள் பிரபலங்கள்?    
May 19, 2007, 1:14 am | தலைப்புப் பக்கம்

வருடா வருடம், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவருகையில், மற்ற செய்திகளை பின் தள்ளி நம்மில் பெரும்பாலோனோர் ஆர்வத்துடன் கவனிப்பது, யார் மாநிலத்திலேயே முதலாவதாக வந்தவர்...தொடர்ந்து படிக்கவும் »

புகழின் சங்கடங்கள் aka புகழ் தரும் புனிதம்-II    
May 10, 2007, 4:53 pm | தலைப்புப் பக்கம்

நான் பழகிய பல சீனியர் வழக்கறிஞர்களிலேயே சுவராசியமான மனிதர் யாரென்று கேட்டால் அவரைத்தான் சொல்ல வேண்டும். அவரது அலுவலகத்தில் சட்டம், வழக்குகள் பற்றி விவாதித்ததை விட மற்ற பல பொது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் அனுபவம்

காட் பாதர் - நாயகன் = தேவர் மகன்!    
May 7, 2007, 6:20 pm | தலைப்புப் பக்கம்

மணிரத்னத்தின் இரவல் சிந்தனைகள் என்ற கட்டுரையினை சென்னைக் கச்சேரி என்ற தனது வலைப்பதிவில் பதிவர் தேவ் எழுதியிருக்கிறார். பின்னூட்டங்களும் சுவையானவை! படித்ததும் நானும் எனது அனுமானம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சுஜாதா, சுப்பிரமணியசுவாமி, சூத்திரர்...    
May 1, 2007, 6:37 pm | தலைப்புப் பக்கம்

எதிரொலி என்ற தனது வலைப்பதிவில் சகோதரர் நல்லடியார், ‘இபிகோவும் இந்து மதமும்’ என்ற தலைப்பில் எழுதியுள்ள பதிவில் கூறியுள்ள ஒரு கருத்தினைப் பற்றி சில விளக்கங்கள் அளிப்பது சிறந்தது என...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்