மாற்று! » பதிவர்கள்

நற்கீரன்

அறிவியல் தமிழின் தேக்க நிலை    
October 27, 2009, 6:00 am | தலைப்புப் பக்கம்

அறிவியல் தமிழ் ஒரு தேக்க நிலையில் தொடர்ந்து இருந்து வருகிறது. துறைசார் இதழ்கள், ஆய்வேடுகள் தமிழில் அரிது அல்லது இல்லை. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற துறைகளில் உயர் கல்வி தமிழில் இல்லை. இலக்கியத்தில், சமயத்தில், அரசியலில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவது போன்று, இதர துறைகளில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவது இல்லை. இது கடந்த சில நூற்றாண்டுகளின் அறிவியல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் மொழி

17 000 கட்டுரைகளைத் தாண்டி    
February 23, 2009, 5:46 pm | தலைப்புப் பக்கம்

தற்போது தமிழ் விக்கிப்பீடியா 17 000 கட்டுரைகள் மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த நவம்பர் நடுப்பகுதியில் 16 000 கட்டுரைகளை எட்டியது. ஏறத்தாழ 3 மாதங்களில் பெரிதும் சிறுதுமான 1000 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. சராசரியாக மாதம் 333 கட்டுரைகள் எழுதப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 12-14 கட்டுரைகள் எழுதப்படுகின்றன. எமது தொடக்க ஆண்டுகளில் இருந்து இது குறிப்பிடத்தக்க முன்னேற்றம். எனினும் நாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

இணையத்தில் இந்திய மொழிகள்    
February 6, 2009, 3:43 pm | தலைப்புப் பக்கம்

உலகில் ஆறில் ஒரு மனிதர் இந்தியாவில் வாழ்கின்றார். இந்தியா ஒரு பல்லின பல்மொழி நாடு. 22 மொழிகள் அங்கிகரிக்கப்பட்ட மொழிகளாகவும், இந்தி தேசிய மொழியாகவும் உள்ளது. ஆங்கிலம் இணைப்பு மொழியாக செயற்படுகிறது. மரபு வழி ஊடகங்களில் இந்திய மொழிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பத்திரிகைகள், இதழ்கள், தொலைக்காட்சி, திரைப்படம் ஆகியவை பெரும்பான்மையாக இந்திய மொழிகளிலேயே உள்ளன. இது...தொடர்ந்து படிக்கவும் »

2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை    
January 6, 2009, 3:02 am | தலைப்புப் பக்கம்

நவம்பர் 2008 இல் தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவானது. ஒரு சில பயனர்களின் தொலைநோக்கில் தொடங்கிய இந்தப் பயணம் இப்போது சில பத்து பயனர்களின் தொடர்ந்த பங்களிப்பால் வளர்ந்து வருகிறது. இந்த ஆண்டு கட்டுரைகளின் எண்ணிக்கை 16,000 க்கும் மேலாக கூடியுள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும்பொழுது பதிவு செய்த பயனர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி, 5400 க்கும் மேலாக கூடியுள்ளது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

அறிவியல் மொழிகள்    
November 26, 2008, 2:49 am | தலைப்புப் பக்கம்

தற்கால அறிவியல் அணுகுமுறை மேற்குலகில் ஏறக்குறைய கி.பி 1550 ஆண்டுக்கு பின்னர் தோற்றம் பெற்றது. அறிவியல் அணுகுமுறையின் ஒரு முக்கிய செயற்பாடு தகவல்களைத் துல்லியமாக பகிர்வதாகும். அதற்கு துணையாக துறைசார்களால் தரம் அறியப்பட்ட அல்லது மீள்பார்வை செய்யப்பட்ட ஆய்வு ஏடுகளில் அறிவியல் முன்னேற்றங்கள் பதிவுசெய்யப்படுகின்றன. எந்த மொழியில் இந்த ஏடுகள் கூடுதலாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மொழி

அனைத்துலக மொழிகள்    
November 25, 2008, 12:51 pm | தலைப்புப் பக்கம்

அனைத்துலக மொழி என்று ஒரு மொழியைத் தீர்மானிப்பது அம்மொழியை பேசுபவர்களின் எண்ணிக்கை, துறைகளில் ஒரு மொழிக்கு இருக்கும் செல்வாக்கு, வரலாற்று, அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கூறுகள் ஆகிய காரணிகள் ஆகும். இன்று ஆங்கிலமே அதி முக்கியத்துவம் கொண்ட அனைத்துலக மொழியாக இருக்கிறது. ஜோர்ஜ் வெபர் (George Weber) என்பவரின் ஆய்வுக் கட்டுரைக்கிணங்க[1] பின்வரும் மொழிகளின் அடுக்கமைவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

இந்திய மொழிகளின் விக்கிப்பீடியாக்களின் இன்றைய நிலை    
November 22, 2008, 3:35 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் 22 மொழிகள் அரச அங்கீகாரம் பெற்ற மொழிகள். இவை தவிர இந்தியாவில் 400 மேற்பட்ட மொழிகள் உண்டு. இவை எல்லாவற்றிலும் ஒரு விக்கிப்பீடியாத் திட்டம் இன்னும் இல்லை. 18 இந்திய மொழிகளில்தான் விக்கிப்பீடியாக்கள் உண்டு. பெரிய இந்திய மொழிகளின் விக்கிப்பீடியாக்கள் கூட சிறிய ஐரோப்பிய மொழி விக்கிப்பீடியாக்களை விட வளர்ச்சி குன்றியவை. மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, வங்காளம்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

பயனர் பங்களிப்பு - குறுங்கட்டுரையாக்கம்    
November 20, 2008, 3:37 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் விக்கிப்பீடியாவில் பல முக்கிய தலைப்புகளில் ஆழமாக கட்டுரைகள் எழுதப்படவேண்டும். பல துறைகள் அகலமாக அலசப்படவேண்டும். இரண்டுக்கும் ஒரு தொடக்கமாக குறுங்கட்டுரைகள் அமைகின்றன. ஒரு குறுங்கட்டுரை என்பது ஒரு தலைப்பில் குறைந்தது 3 வசனங்கள் எழுதிவதாகும். விக்கி இடை இணைப்புகள், விக்கி உள் இணைப்புகள், வெளி இணைப்புகள், படங்கள் ஆகியவை இணைத்து குறுங்கட்டுரையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

16000 கட்டுரைகளை நோக்கி, தமிழ் 67 வது நிலையில்    
November 8, 2008, 12:58 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் விக்கிப்பீடியா 16000 கட்டுரைகளை விரைவில் எட்டிவிடும். ஆங்கிலத்தில் 2600000 கட்டுரைகளுக்கு மேலே உண்டு. அப்படி பாக்கையில் தமிழ் ஒரு துளிதான். ஆங்கிலம் தவிர்த்து மற்ற 22 மொழிகளில் 100 000 மேலே கட்டுரைகள் உண்டு. இவற்றுள் சீனம், ஜப்பானிஸ் தவிர்த்து மற்ற எல்லாம் ஐரோப்பிய மொழிகளே. இந்திய மொழிகளில் கட்டுரை எண்ணிக்கையில் தெலுங்கு, இந்தி, மாராத்தி 20000 கட்டுரைகளுக்கு மேலே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

தமிழ் விக்கிப்பீடியா 15000 கட்டுரைகளை எட்டிவிட்டது    
August 17, 2008, 8:53 pm | தலைப்புப் பக்கம்

செல்வா கருத்துஇன்னும் ஓரிரு நாட்களில் 15,000 கட்டுரைகளை எட்ட இருக்கின்றோம்! நவம்பர் 7, 2007 அன்று 12,000 கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியா எட்டியது என்று கருதும்பொழுது, நாம் சற்று மெதுவாகவே நகர்வதாக உணர்கிறேன். அதாவது பங்களிப்புகள் செய்வதை விட்டுப் போவோரைக் காட்டிலும் வந்து சேர்வோர் எண்ணிக்கை கூடுதலாகவும், ஆளொருவருக்கான சராசரி கட்டுரை ஆக்க எண்ணிக்கையும் ஓரளவுக்குக் கூடுதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

தமிழ் விக்கிப்பீடியா - தமிழின் அறிவியல் தொழில்நுட்ப களம்    
July 29, 2008, 2:26 pm | தலைப்புப் பக்கம்

எத்தனையோ சமய இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டிருந்தாலும், தமிழ் சமய மொழியாக இருக்க முடியுமா என்பதை சிலர் கேள்விக்குட்படுத்தினர். தமிழில் அர்ச்சனையா என்றும் சிலர் முரண்பட்டனர். தமிழரின் தாயகங்களிலேயே தமிழ் அரச மொழியாக வழங்குவதற்கு பல தடைகள் இருந்தன. இந்தி, சிங்களம் என மொழித் திணிப்பு முயற்சிகளும் இடம்பெற்றன. இதை மீறியும் தமிழ் இந்தியா (தமிழ்நாடு), இலங்கை,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

விக்கித் திட்டம் பொறியியல்    
April 8, 2008, 8:24 pm | தலைப்புப் பக்கம்

விக்கித் திட்டம் பொறியியல்விக்கித் திட்டம் பொறியியல் தமிழ் விக்கிப்பீடியாவில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய சீர்தரமானதும் செறிவுடையதுமான கட்டுரைகளை எழுதும் பணிகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் அமைகிறது.பொறியியல் துறைசார்ந்த கட்டுரைகளை குறைந்த அளவு தொழில் நுட்ப புரிதல் கொண்டவர்களும் படித்து புரிந்துகொள்ளத்தக்க வகையில் எளிமையாகவும் செறிவாகவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்

தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ், தமிழர்    
April 8, 2008, 8:11 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் விக்கிப்பீடியாவில் எளிய தமிழில் தரமான கட்டற்ற கலைக்களஞ்சியத்தை ஆக்குவதே எமது முதன்மைக் குறிக்கோள். அதற்கமைய பல்வேறு துறை சார் தகவல்களை சேர்த்து வருகிறோம். தமிழ் தமிழர் பற்றிய தகவல்களும் அவற்றுள் அடங்கும். அனேகமான கட்டுரைகள் ஒரு தொடக்க நிலையிலேயே உள்ளன. அக்கட்டுரைகளை மேம்படுத்த உங்கள் அனைவரின் பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது. உங்களின் கருத்துக்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்