மாற்று! » பதிவர்கள்

த.அகிலன்

படகில் நுழையாக் கடல்    
April 21, 2010, 3:58 pm | தலைப்புப் பக்கம்

அத்தனை எளிதன்று அகதியாதலும் அதனின்று விடுபடலும். நீண்ட அலைதலின் முடிவில் நதி மருங்கில் தேங்கிய துரும்பைப் போலவோ அல்லது கடல் வீசியெறிந்த தகரப் பேணியைப்போலவோ எறியப்பட்டிருக்கிறது வாழ்வு. துரும்பைத் திரும்பவும் அலைகளில் எறியும் அறியாச்சிறுவனின் எத்தனங்களோடிருக்கிறது உலகம். அலைதலும் தொலைதலும் எறியப்படுதலின் வலியும் துரும்பே அறியும். திடுக்கிட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை மனிதம்

My name is Agiilan and I am not a terrorist    
February 20, 2010, 7:30 am | தலைப்புப் பக்கம்

xx.xx.2007 அகிலன்:    அண்ணா ஓட்டோ வருமா? ஓட்டுனர்:    எங்க போணும்பா? அகி:        வளசரவாக்கம் போகோணும் வருவீங்களா? ஓட்:        ஆ போலாம்பா அகி:        எவ்வளவு ஓட்;:        நீ சிலோனாப்பா?. ………………………………… 19.02.2010 அகி:    ஆட்டோ .. ஆட்டோ? ன்ணா கோடம்பாக்கம் வருமா? ஓட்:    ம் போலாம்.. அகி:    எவ்ளோ. ஓட்:    பிப்டி குடு அகி:    ஆ போலாம் ……………… ஓட்:    நமக்கு எந்தூரு தம்பி அகி:    எதுக்கு கேக்றீங்க ஓட்:   ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் திரைப்படம்

THE WAY HOME (வேர்களை அடையும் வழி)    
June 11, 2009, 5:40 am | தலைப்புப் பக்கம்

அடுத்த வரியை நீங்கள் வாசிக்கத் தொடங்குவதற்கு முதல் அவசியம் இதனைத் தெரிந்து கொள்ளவேண்டும் நீங்கள். என்னுடைய அம்மம்மாவின் பெயர் சின்னம்மா. என்னுடைய அம்மப்பாவின் பெயர் செல்லையா. காலம் 03.03.2005 இடம்: கிளிநொச்சியில் அமைந்த திருநகர் கிராமத்தில் எங்கட வீடு. நான் சைக்கிளின் முன் பிரேக்கையம் பின் பிரேக்கையும் ஒண்டா அமத்தி முத்தத்தில் அரை வட்டமடிச்சு பாட்சா ரஜனி ரேஞ்சுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

ஒப்புதல் வாக்குமூலம்.    
February 20, 2009, 10:16 am | தலைப்புப் பக்கம்

நமது தொலைபேசி உரையாடலை கேட்டுக்கொண்டிருக்கின்றன நமக்குச் சொந்தமற்ற செவிகள். பீறிட்டுக்கிளம்பும்  சொற்கள் பதுங்கிக் கொண்டபின் உலர்ந்து போன வார்த்தைகளில் நிகழ்கிறது. நீ உயிரோடிருப்பதை அறிவிக்கும் உன் ஒப்புதல் வாக்குமூலம். வெறுமனே எதிர்முனை இரையும் என் கேள்விகளின் போது நீ எச்சிலை விழுங்குகிறாயா? எதைப்பற்றியும் சொல்லவியலாச் சொற்களைச் சபித்தபடி ஒன்றுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

எங்களை மன்னித்து விடுங்கள் இனியொரு தடைவை நாங்கள் தமிழர்களாகப் பிறக்கமா...    
February 3, 2009, 7:05 am | தலைப்புப் பக்கம்

மஞ்சு ஒரு அழகான குட்டிப்பெண். 3 வயதில் அவளைத் தூக்கி நான் முத்தமிடும் போதெல்லாம் அவள் என் கறுப்பு நிறம் தனக்கும் ஒட்டிவிடப்போகிறது என்ற சின்னக்காவின் வார்த்தைகளை நம்பி தனது கைகளால் நான் முத்தமிட்ட கன்னத்தை அழுந்த துடைத்துக்கொள்வாள்.. அகிலன் மாமா ஆள்தான் கறுப்பு மனசுமுழுக்க வெள்ளை (நம்பலாம்) என்று அவளது கனவில் ஒரு பட்டாம் பூச்சி சொல்லிய நாளொன்றில். அவளது அகிலன் மாமா ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

விடுதலைப் புலிகள் சில கேள்விகள்…    
February 2, 2009, 6:36 am | தலைப்புப் பக்கம்

நானும் ஒரு பிரபலமான வலைப்பதிவராகும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டாலும் அது முயற்சியாகவேயிருக்கிறது இப்போது வரைக்கும். கடைசியா ஒரு சாத்திரியைப் போனவாரம் சந்தித்தேன். (இவர் பதிவர் சாத்திரி அல்ல டி.வி.புகழ்) அவர் சொன்னார் ஏழரைச் சனியன் உச்சத்தில் இருப்பதால் இதுபோன்ற தாமதங்கள் வரத்தான் செய்யும்.. ஆனாலும் நீர் அஞ்சக்கூடாது எண்டு. நானா அஞ்சுவதா எண்டு அவர் எதிரில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

ஒரு ஈழத் தமிழனின் இதயம் பேசுகிறது!    
January 13, 2009, 8:34 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம் வாசகர்களே.. தற்போது வெளியாகியுள்ள 'மல்லிகை மகள்' டிசம்பர் இதழிலிருந்து ஒரு கட்டுரை..நொடிக்கு நொடி ராணுவத்தின் யுத்த பசிக்கு இலக்காகும் ஈழத்தில் தாயை விட்டுவிட்டு தவிக்கும் ஒரு தமிழனின் மனக்குமுறல்.. அந்த வாழ்க்கையை கண்முன் நிறுத்துகிறது. இந்த வரிகளை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் கணத்தில் ஒரு குண்டு வீழ்ந்து வெடிக்கும். நாய்கள் குரைத்தபடி வெறிபிடித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

காதல் சிலுவையில் 05    
October 6, 2008, 9:41 pm | தலைப்புப் பக்கம்

இன்றைக்குப் பெய்த மழையும் உன் முத்தங்களை நினைவூட்டிற்று.. என்னால் உன்னைப் போல் சலனமற்றிருக்க முடியவில்லை.. நீ கலைத்துவிட்டுப்போன எனது வசிப்பிடம் ஒழுங்கற்றுகிடக்கிறது.. நான் என் பிரியங்களையெல்லாம் ஒன்று திரட்டி உனது திசைகளில் ஏவினேன்.. ஒய்ந்த மழையின் பின் சொட்டிக்கொண்டிருக்கும் இலைகளின் துளியைக் கைகளில் ஏந்திக்கொள்ளுகையில் உன் குரலின் ரகசியங்கள் அதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நீ வராப் பொழுதுகளும் ஒரு பழங்கதையும்..    
September 22, 2008, 7:25 pm | தலைப்புப் பக்கம்

01 நீ வராத    எனது காலை துயர் நிரம்பியதாயிற்று  காத்திருப்பின் கொடும் வலியை நீ உணர்ந்தாயா?  நான் உயிர் உருக்கி அழைத்தும் மெளனம் காத்த உன் தொலைபேசி உணர்த்திற்று  நம் தொலைவுகளை.. என்றைக்காவது ஒரு நாள்.. இந்தத் தொலைபேசிகளைக் கொன்றுவிடலாம்..  அன்றைக்கு  உன் காதுமடல் மெல்ல வருடி எனது பிரியத்தின்.. சங்கேதங்களை நான் ஊற்றுவேன்.. உன் புன்னகையை என் இதழ்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

உனது சமன்பாடுகளும் எனது தானங்களும்..    
September 21, 2008, 2:55 pm | தலைப்புப் பக்கம்

உனது சமன்பாடுகளினின்றும் நழுவி விழுகின்றனவென் தானங்கள்.. உன் நிறுவுதல்களில் இறுதியில் இரண்டு முடிவுகள் கிடைக்கலாம் ஒன்று நான் முடிவிலி இன்னொன்று நான் அறிவிலி நான் உன் பொருட்டு எதற்கும் சித்தமாயிருக்கிறேன்.. ஒரு சோசியக்காரனின் உத்திகளோடு.. அல்லதுபோனால் ஒரு கணக்காளனின் பார்வைகொண்டு.. நீ அனுமானிக்கிறாய் என் நேசத்தை பிரியத்தை அளவிடும் பாத்திரங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

உன் வருகையைக் காத்துக்கொண்டு.    
September 20, 2008, 10:10 pm | தலைப்புப் பக்கம்

  சூரியனுக்கு கீழே உள்ளவற்றிலெல்லாம் நான் அதிகம் நேசிப்பது உன்னைத்தான்.. உனது பனிவிழும் காலைகளில் என்னை நினைத்துக்கொள்கிறாயா.. ஒரு பூவின் மலர்தலைப்போல. எனது நாட்குறிப்பின் தாள்களை கிழித்து வீசினேன் எனை நானே கொன்றுகொள்ளும்  நினைவுகளைத் தரும் நீயற்ற பொழுதுகளை எழுதப்பிடிக்காது.. உனது  புன்னகையின் சுவடுகளை இன்னமும் பதுக்கிவைத்திருக்கிறதென் மனம் தீப்பெட்டிப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

உன் வருகையைக் காத்துக்கொண்டு.    
September 20, 2008, 10:10 pm | தலைப்புப் பக்கம்

  சூரியனுக்கு கீழே உள்ளவற்றிலெல்லாம் நான் அதிகம் நேசிப்பது உன்னைத்தான்.. உனது பனிவிழும் காலைகளில் என்னை நினைத்துக்கொள்கிறாயா.. ஒரு பூவின் மலர்தலைப்போல. எனது நாட்குறிப்பின் தாள்களை கிழித்து வீசினேன் எனை நானே கொன்றுகொள்ளும்  நினைவுகளைத் தரும் நீயற்ற பொழுதுகளை எழுதப்பிடிக்காது.. உனது  புன்னகையின் சுவடுகளை இன்னமும் பதுக்கிவைத்திருக்கிறதென் மனம் தீப்பெட்டிப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஒரு குடிகாரனின் பின்னிரவுக் குறிப்புக்கள் 3    
September 19, 2008, 7:47 am | தலைப்புப் பக்கம்

என்னைக் கொல்வதிலும் நேற்றைக்குத் தோற்றேன்.. உன் நினைவுகளாலான என்னைக் கொன்றுவிடச் சொல்லிக்கெஞ்சுகிறதென் மனம்.. நீ தேவதை தேவதைகள் கொலைசெய்யுமா என்ன? என் பிரியத்தின் சொற்கள் கொண்ட பட்டத்தின் நூலை ஒரு பொறாமைகொண்ட சிறுமியைப்போலப் பிடுங்கி வீசுகிறாய்.. காலத்தின் மின் கம்பங்களில் மாட்டிக்கொண்ட அதை.. என்னிடம் மீட்டுத்தர யாருமற்று பார்த்துக்கொண்டேயிருக்கிறேன் அழும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஒரு குடிகாரனின் பின்னிரவுக் குறிப்புக்கள்…!    
September 15, 2008, 5:30 am | தலைப்புப் பக்கம்

  நீ எடுத்துச் சென்ற பிரியங்களை வேறெதனாலும் நிரப்ப முடியவில்லை.. கண்ணாடிக்குவளைகளுள் உடைந்து சிதறும்.. நுரைகளில்.. நொருக்கிக்கொண்டிருக்கிறேன் உனது பிரியத்தை.. ஒரு கணத்தில் குவளையே உன் முகமாக வீசியெறிகிறேன் அதை ஒரமாய்.. உடைந்து சிதறிய கண்ணாடித்துண்டுகளிலெல்லாம் பல்கிப்பெருகுகிறாய் ஏளனச் சிரிப்போடு.. நீ கொடுத்ததை எல்லாம் எடுத்துக்கொள்.. ஒரு மழைநிசியில் நீ கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஒரு குடிகாரனின் பின்னிரவுக் குறிப்புக்கள்..    
September 14, 2008, 10:34 pm | தலைப்புப் பக்கம்

நீ எடுத்துச் சென்ற பிரியங்களை வேறெதனாலும் நிரப்ப முடியவில்லை.. கண்ணாடிக்குவளைகளுள் உடைந்து சிதறும்.. நுரைகளில்.. நொருக்கிக்கொண்டிருக்கிறேன் உனது பிரியத்தை.. ஒரு கணத்தில் குவளையே உன் முகமாக வீசியெறிகிறேன் அதை ஒரமாய்.. உடைந்து சிதறிய கண்ணாடித்துண்டுகளிலெல்லாம் பல்கிப்பெருகுகிறாய் ஏளனச் சிரிப்போடு.. நீ கொடுத்ததை எல்லாம் எடுத்துக்கொள்.. ஒரு மழைநிசியில் நீ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அப்பா வரும் கனவுகள் அல்லது அப்பாவின் நினைவுநாள்…    
September 14, 2008, 4:00 am | தலைப்புப் பக்கம்

அப்பா இன்றைக்கும் கனவில் வந்தார் நினைவுக்குள் மிதக்கிற சிகரட் முத்தமும் சாராயம் நெடிக்கிற கச்சான் அல்வா உருண்டையும் இன்றைக்கும் அவரிடமிருந்தது… தாடிமொய்த்த அவர் கன்னத்துக்கு நான் அளிக்கும் முத்தத்தின் விலையாய் கச்சான் அல்வாவைச் சொல்கிறார்… எப்போதும் அவர் இப்படித்தான் வருகிறார்.. அல்வாவுக்கு பதிலான புதுப் புதுப் பிரதியீடுகளுடன்…. நான் வளர்ந்ததை அப்பா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

உன் வருகையைக் கொண்டாடுதல்    
August 20, 2008, 12:34 pm | தலைப்புப் பக்கம்

  01. காலம் ஒரு கொடியகனவாயிற்று உன் பிரியங்கள் என்னை மீளெழுப்பின உனது வார்தைகள் எனது காயங்களை ஆற்றின   உன் பார்வைகள் தொலைந்து கொண்டிருந்த என்னைக் கண்டுபிடித்தன.. என்ன சொல்ல   எனது சாம்பர் மேட்டிலிருந்து புதியமுளைகளை உருவாக்கும் உனது புன்னகைகளை என்னோடே விட்டுவிடு நான் பிழைத்துப் போகிறேன்…   02. நான் தயங்குகிறேன் மிகவும் உன் பிரியத்தின் சுவர்கள் கண்ணாடிகளால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மனிதனைத் தின்னும் பல்லிகள்    
August 13, 2008, 8:32 am | தலைப்புப் பக்கம்

எந்தப் பூனையும் என் ஜன்னலில் நின்று அவசரமாய்க் குதித்திறங்குவதில்லை ஆளரவத்திற்கு சூரியன் ஒரு பொறாமை கொண்ட அயல் வீட்டுக்காரனைப்போல் எட்டிப்பார்க்கிறது ஜன்னல் வழி உடனும் அவசரமாய் வெளியேறி விடுகிறது குப்பையைப்போல் தன் தகிப்பை உள்ளே வீசி எறிந்துவிட்டு பல்லிகள் பெருகிவிட்ட இவ்வறையில் மனிதனைத் தின்னும் பல்லிகள் குறித்த கனவின் பீதி நிறைய பாதியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

(HAPPENING)கதவை மூடுங்கள் காற்று வந்துவிடும்…    
July 30, 2008, 11:29 am | தலைப்புப் பக்கம்

என்னிடம் ஒரு விநோதமான பழக்கம் இருந்தது. நான் நினைக்கிற காரியம் நடக்குமா என்பதை அறிந்து கொள்ள.. பூவா தலையா போட்டுப்பார்ப்பதைப்போல.. நான் போகிற பாதையில் ஒரு குறிப்பிட்ட தூரத்தை மூச்சே விடாமல் கடந்து பார்ப்பது மூச்சு விடாமல் கடந்தால் அந்த காரியம் வெற்றி.. இடையிலே மூச்சை விட்டு விட்டால் அந்த காரியம் தோற்றுவிடும் என்று நான் நம்பி வந்தேன்.. என்னிடம் அந்த விநோதமான பழக்கம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நரைத்த கண்ணீர்    
July 3, 2008, 1:06 pm | தலைப்புப் பக்கம்

01. மரணமும் அது குறித்தான சேதிகளும் ஒரு கொடு நிழலைப்போல் என்னைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஒப்பாரிகளையும் துப்பாக்கி வெடிக்கும் ஓசைகளையும் கடந்து வந்து விட்டேன் என்கிற எனது கனவுகளை அந்தக்கிழவர் இன்றைக்குத் தகர்த்துவிட்டார். எனது புன்னகையைத் தன்கையில் எடுத்து வைத்துக்கொண்டு அது  வெறும் புன்னகை மெழுகு பூசப்பட்டிருக்கும் துயரத்தின் பொம்மை என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அனுபவம்

பழகிய நிலவும் பழைய கிழவியும்    
May 18, 2008, 5:43 am | தலைப்புப் பக்கம்

அவளது ஊரின் புழுதிச் சாலையையும் பழகிய நிலவையும் பிரியமுடியாக் கிழவியின் புலம்பலினை ஆற்றமுடியா அலையின் வார்த்தைகள் மண்டியிட்டு வீழ்கின்றன. அவள் காலடியில். இந்தக் கடலுக்கு அப்பால்தான் நம் ஊரிருக்கிறதா? மறுபடி மறுபடி கேட்டுக்கொண்டிருக்கின்றன குழந்தைகள். தன் முதுமைச் சுருக்கங்களில் படியும் மெல்லிய பிரகாசத்துடன் தலையசைத்த படியிருக்கிறாள் கிழவி… ஆமென்று. இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கூத்துப் பார்க்கப் போன கூத்து    
May 17, 2008, 5:14 am | தலைப்புப் பக்கம்

மாப்பிள்ளை வாறார் மாப்பிள்ளை வாறார் மாட்டு வண்டியில பொண்ணு வாறா பொண்ணு வாறா பொட்டு வண்டியில எப்போதாவது அம்மம்மா வீட்டில் தங்க நேர்கிற சந்தர்ப்பங்களில் அம்மம்மா பாடுகிற பாடல்வரிகளில் எனக்கு நினைவிருக்கிற மிகவும் பிடித்த இரண்டு வரிகள் இவை. அம்மம்மா எப்போதும் இரவுகளில் தூங்குவதில்லை மாலை ஆறுமணிக்கு மேல் துணையின்றித் தனியாக ஒன்றுக்கும் போகத் தைரியம் வராத வயசில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் கலை

THE KING OF MASKS (உள்ளே ஒளிந்திருக்கும் மனம்)    
May 16, 2008, 5:44 am | தலைப்புப் பக்கம்

  (1) ஒவ்வொரு நாளும் புதுப்புது வழிமுறைகளை கையாள வேண்டியிருக்கிறது தகிக்கும் சுவர்களிடமிருந்து தப்பித்த மனோநிலையைப் பெறுவதற்காக இன்றைய இரவுக்கு ஒரு படத்தை பார்த்து விடுவதென்று தீர்மானித்தேன். தகிப்பிலிருந்து என்னை விடுவிக்கும் தன் குளுமையான காட்சிகளால் எனை விழுங்கியது tha king of masks திரைப்படம். ஒரு திருவிழா இரவில் எங்கும் வாணவேடிக்கை நிகழந்து கொண்டிருக்க.  ஓரமாய் தன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இன்றைய FM வானொலிகளில் நிகழ்த்தப்படுவதற்குப் பெயர் அறிவிப்பா? - இலங்கை ...    
May 15, 2008, 7:10 am | தலைப்புப் பக்கம்

ஹலோ! வணக்கம் யார் இது. நான் சாவகச்சேரியில் இருந்து ஞானதிரவியம் கதைக்கிறன். உங்களை திரவியம் எண்டு கூப்பிர்றதோ ஞானம் எண்டு கூப்பிர்றதோ? ஹி ஹி ஹி அது உங்கட விருப்பம். ஆ திரவியம் சொல்லுங்கோ யாருக்கு வாழ்த்துச் சொல்லப்போறீங்க? போனமாசம் 4ம் தேதி என்ர மச்சாளுக்குப் பிறந்தநாள் அவாக்கு வாழ்த்துச் சொல்லவேணும் அவாக்காக கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா எண்ட பாட்டுப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

தண்டவாளத்து வண்டவாளங்கள்…..    
May 14, 2008, 5:45 am | தலைப்புப் பக்கம்

“வண்டி வண்டி புகைவண்டி வாகாய் ஓடும் புகைவண்டி கண்டி காலி கொழும்பெல்லாம் காணப்போகும் புகைவண்டி. சுக்குப் பக்குக் சுக்குப் பக்சுக் கூகூகூகூகூகூகூகூகூ” புகைவண்டியாகத்தான் எனக்கு இரயில் பழக்கமானது. ஆனாலும் இந்தப்பாடலைக் கேட்பதற்கு முன்னாலேயே நான் இரயிலில் பயணித்திருப்பதாக அம்மா பின்னாட்களில் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு நினைவிருப்பது இந்தப்பாடலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஆஸ்பத்திரி ராணிகள்…..    
May 13, 2008, 6:24 am | தலைப்புப் பக்கம்

அந்த வேதனையிலும் எனக்குப் பொத்துக்கொண்டு சிரிப்பு வந்தது. பின்ன நாலு நளா கோல்ட் ஆக்ட்,சமஹன்,பனடோல்,ஆக்சன் 500 எண்டு முயற்சி செய்து செய்து தோத்துப்போய் ஆஸ்பத்திரிக்குப்போனா. போன உடனேயே ஒரு நர்சம்மா வாயில தெர்மா மீட்டரை செருகி உடைஞ்சா 100 ரூபாய் எண்டு சொன்னா சிரிப்பு வருமா வராதா? ஒரு வேளை நோயால் துவண்டு போயிருக்கும் நோயாளிகளை கொஞ்சம் சிரிப்பு மூட்டத்தான் அவா இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

துப்பாக்கிகளும் சில தேவதைக்கதைகளும்/01    
April 22, 2008, 8:14 am | தலைப்புப் பக்கம்

துப்பாக்கியின் கண்கள் வாசிக்கத் தொடங்கிய பிறகு சொற்கள் ஒளிக்கத் தொடங்கிவிட்டன/சபிக்கப்பட்டு விட்டன பீரங்கியின் வாய்களால் அச்சமூட்டப்பட்ட சொற்கள் கொண்டு செய்யப்படுகிறது ஒரு நாள்…. முடமான சொற்கள் கொண்டு கவிதைகள் செய்வது எங்ஙனம்? கால்களற்ற சொற்களைக் காணச் சகியாதொருவன் துப்பாக்கிகளறியாதொருகணத்தில் மொழியைப் புணர்ந்து புதிதாய் கால்முளைத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பிரியம் /01    
March 12, 2008, 7:43 am | தலைப்புப் பக்கம்

அவள் அழைத்துப்போனகனவின் பசிய நிலத்தில்வானவில்லின்வர்ணங்களைக்கொண்டபறவையின் பாடல்வழிந்து கொண்டிருந்தது திசையெங்கும்.பாடலின்திசைகளில்நான் கிறங்கிய கணத்தில்சடுதியாய் நீங்கிப்போனாள்கூடவே போயிற்றுஅவளது நிலமும்வானவில் பறவையும்நான் அலைந்துகொண்டிருக்கிறேன்.அந்த கனவுக்குள்மறுபடியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கரைகளிற்கிடையே…    
March 8, 2008, 5:46 am | தலைப்புப் பக்கம்

01.அற்புதங்கள் நிறைந்தது சூரியன் விழும் கடல் சிவப்பெனக் கரைந்து மனசுக்குள் பூக்களாய் நுரையுடைக்கும். கரையை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டிருக்கிறது கடல் என்று எங்கேயோ கேட்ட அல்லது படித்த வரிகளின் ஞாபகம் மனசுக்குள் மெதுவாய் ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லாக்கவிதைகளையும் ஞாபகம் வைத்துக்கொள்வதற்கு ஆள் அவள்தான். கடிதங்களில் கவிதைகளை நிரப்பி எழுதுவது அவனுக்குச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

நிலவு    
January 19, 2008, 8:40 am | தலைப்புப் பக்கம்

இரண்டுசிவப்பு வெளிச்சங்களிற்குமேலாலெழும் நிலவுஅன்றைக்கு மிருந்தது.ஒருவிதவைத்தாயின்இளைய மகனைஅவர்கள் களவாடிப்போனஇரவில்…பைத்தியக்காரியைப்போல்தலைவிரி கோலமாய்தெருவில் ஓடியஅவளைச் சகியாமல்மேகங்களினடியில்முகம் புதைத்துக்கொண்டது.பின்பொரு மழைநாளில்அலைகளின் மேல்ஒருவன் ஏறித்தப்புகையில்…இராமுழுதும் துணையிருந்தது…யாரும்விசாரணைகளை நிகழ்தும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சித்தி    
December 27, 2007, 7:39 am | தலைப்புப் பக்கம்

01.வன்னிவிளாங்குளத்திற்கு கிட்டவாக சித்தி கேட்டாள் தம்பி நான் கொஞ்ச தூரம் ஓடுறன் தாங்கோவன். நான் வேண்டாம் சித்தி நான் ஓடுறன் எண்டு சொன்னன். எனக்கு சைக்கிள் ஓடுறதுக்கு கஸ்டாமாகத் தான் இருந்தது. ஆனாலும் சைக்கிள் ஓடுவதை முழுத்தூரமும் யாரிடமும் கொடுக்காமல் ஓடுவது கிட்டத்தட்ட வீரம் மாதிரி. நான் வீரன் என்று பெருமைப்பட்டுக்கொள்வது மாதிரி. அப்போதெல்லாம் சைக்கிள் தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் வாழ்க்கை

இராஜாங்கத்தின் முடிவு (சுயவாழ்வின் நிலைக்கண்ணாடி.)    
December 12, 2007, 6:04 am | தலைப்புப் பக்கம்

01.எதைப்பற்றியும் கவலைப்படாத ஒருவன். உலகின் எந்த நியதிகளிற்குள்ளும் சிக்கிக்கொள்ள விரும்பாதவன் இது வரையும் சிக்கிக்கொள்ளாதவன் ரவி. அவனது உலகம் பரந்துவிரிந்தது. எந்த எல்லைகளும் அதற்குக்கிடையா, கால்கள் தீர்மானிக்கும் வரை நடக்கிறவன் வயிறு இவன் சொன்னால்தான் பசிக்கும். பசிக்கும் பணத்துக்கும் இடையில் எவ்வளவு இடைவெளியிருக்கிறது என்பதை இவனைக்கேட்டால் சரியாகச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

CHILDREN OF HEAVEN (யாரும் நுழைய முடியாச் சுவர்க்கம்)    
October 24, 2007, 12:05 pm | தலைப்புப் பக்கம்

நல்ல விசயங்கள் எனக்கு தாமதமாகவே நிகழ்கிறது. அல்லது நான் தாமதமாகவே கண்டு கொள்கிறேனோ என்னவோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சொற்களைத் திருடிய வண்ணாத்திகள்...    
September 13, 2007, 1:50 pm | தலைப்புப் பக்கம்

நான்கு சுவர்களும்மௌனித்திருந்த ஒருநாளில்எதை எழுதுவதுஎனத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சாத்தானுடன் போகும் இரவு    
September 7, 2007, 12:49 pm | தலைப்புப் பக்கம்

சாத்தான்கள்ஊருக்குள்திரும்பின.சாத்தான்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மக்கள் தொலைக்காட்சி வன்னியில் இருந்து ஓர் பார்வை...    
September 6, 2007, 2:16 pm | தலைப்புப் பக்கம்

தமிழிலான தொலைக்காட்சிகளுக்கான முன்னோடிமக்கள் தொலைக்காட்சி. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

நம்பிக்கை/காத்திருப்பு    
September 6, 2007, 9:41 am | தலைப்புப் பக்கம்

பெருமரத்தைபூதமெனப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மந்திரக்காரன்"டி" அம்மான்"டி"....    
August 27, 2007, 10:13 am | தலைப்புப் பக்கம்

அந்த முதலாமாண்டு நீலப்புத்தகப்பையை இன்னமும் நினைவிருக்கிறது. அந்த இலுப்பை மரத்தடியும் முருகுப்பிள்ளை ரீச்சரையும் கூடத்தான் ஞாபகத்தின் சுவர்களில் அழுத்தமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அனுபவம்

இரண்டாம் காதல்....    
August 24, 2007, 12:16 pm | தலைப்புப் பக்கம்

காற்றுக்கலைத்துப்போனமேகச்சிற்பத்தின்மீந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கோடையைப் பற்றி இரண்டு குறிப்புக்கள்..    
August 13, 2007, 1:24 pm | தலைப்புப் பக்கம்

01.உன்உப்புக்கரித்த முத்தத்தின்ஞாபகங்களைதனது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கோடை-01    
August 13, 2007, 7:01 am | தலைப்புப் பக்கம்

ஒருஉப்புக்கரித்த முத்தத்தின்ஞாபகங்களைதனது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை


சின்னத்தாய் இவள்...(புகைப்படம்)    
August 7, 2007, 7:53 am | தலைப்புப் பக்கம்

புகைப்படம் - த.அகிலன் செஞ்சோலைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

சுயவிசாரணை....    
August 2, 2007, 6:34 am | தலைப்புப் பக்கம்

என் அடையாளம்குறித்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

எழுதப்படாத சொற்களும் தாள்களும்....    
July 31, 2007, 9:48 am | தலைப்புப் பக்கம்

நான் வெற்றுத்தாள்களை வாசிக்கிறேன்….குருதியும் ரணங்களும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வைரமுத்துவின் மறுபக்கம் ஒரு திடுக்.....!?    
July 27, 2007, 9:48 am | தலைப்புப் பக்கம்

என்னதான் புகழ் மிக்கவராக இருந்தாலும்.பாடலாசிரியர் வைரமுத்துவின் இலக்கிய முகம் என்பது சர்ச்சைகள் நிறைந்ததாகவே யிருக்கிறது. அவருக்கு வழங்கப்பட்ட விருதுகளின் பின்னால் நிகழ்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

ஆவிகளும் விமானங்களும்.....    
July 10, 2007, 10:32 am | தலைப்புப் பக்கம்

நான் எனது சின்னவயது ஞாபகங்களில் இருந்து விமானங்களைப்பற்றிய செய்திகளை நினைவுபடுத்த முயன்றேன். அப்போதிலிருந்தே அவை ஒரு விதமான அச்சமூட்டும் பொருட்களாகவே இருந்தன. கோகுலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஒருத்தீ……..    
July 9, 2007, 6:18 am | தலைப்புப் பக்கம்

1.மரணம் எப்படி அறிவிக்கப்படுகிறது. திடீரென்று ஒரு அதிகாலைத் தொலைபேசி அழைப்பில் வெகு நிதானமாகத் தொடங்கும் உரையாடலின் இரண்டாவது மூன்றாவது இழையில் மரணம் குறித்தான சேதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

இன்று கரும்புலிகள் நாள்...    
July 5, 2007, 9:59 am | தலைப்புப் பக்கம்

இன்று உயிராயுதங்கள் என்று வர்ணிக்கப்படுகின்ற கரும்புலிகளினுடைய நாள் அதை முன்னிட்டு கவிஞர் பஹீமாஜஹான் எழுதிய ஒரு கடல் நீருற்றி என்கிற கவிதை இங்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கவிதை

ரஜினிக்கு அறையவேண்டும்.......    
July 4, 2007, 9:00 am | தலைப்புப் பக்கம்

01.அறையில் பத்து மணிக்கு மின்சாரம் போய் மறுபடியும் தீடிரென்று முளைத்தது. அணைக்கப்படாதிருந்த தொலைக்காட்சி முழித்து ஓடத்தொடங்கியிருந்தது. திடுக்கிட்டு முழிக்கையில் ஏதோ ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

நின்று போன கவிதை...    
July 2, 2007, 11:56 am | தலைப்புப் பக்கம்

உதிர்ந்து விழுகிறஇலையின்நடனம்போலநிகழ்ந்து போகிறது உன் பிரிவு...அங்கேயே..அப்போதே..நின்று போனஎன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வாழ்க்கையைப் பார்த்துப் படமெடுத்த வசந்தபாலன்    
June 29, 2007, 12:54 pm | தலைப்புப் பக்கம்

(தமிழ்த்திரையின் தலைநிமிர்த் தடப்பதிவாகி பலரது பாராட்டுகளைப் பெற்ற படம் வெயில்(2006). வாழ்க்கையைப் பார்த்துப் படமெடுத்ததாக வரவேற்பைப் பெற்ற இந்த 'வெயில்" 60வது கான்ஸ் திரைப்படவிழாவில்(2007)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் திரைப்படம்

செய்தியாக - துயரமாக - அரசியலாக..    
June 26, 2007, 6:19 am | தலைப்புப் பக்கம்

02.11.2006 அன்று கிளிநொச்சியில் நடத்தப்பட்ட விமானத்தாக்குதலில் ஒரேநாளில் பலியாகிய அந்த ஜவர்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

பலூன்காரன்....    
June 20, 2007, 6:55 am | தலைப்புப் பக்கம்

தலைகளாலானதெருவில்….குழந்தைகளின் புன்னகைள் நிரம்பிய வண்ணங்களை விற்கிற பலூன்காரன்….தன்புன்னகையைக் கேட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நிகழ்தல்....    
June 14, 2007, 7:51 am | தலைப்புப் பக்கம்

நீஎன்ன சொல்கிறாய்….னௌனம் கீறியஎன் வார்த்தைகளை விழுங்கிப்போகும் உன்பார்வைகளில்…மிதந்து வருகின்றனவா ஏதேனும்எனக்கான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வேட்டை.......    
June 11, 2007, 5:58 am | தலைப்புப் பக்கம்

விளக்கை மேயும்பூச்சி….வேட்டைக்குத் தயாராகிறது பல்லிபூனையின்நிழற்கரங்கள்தன்மீது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பகிர்ந்து கொள்ளப்படும் ஓர் அவலம்…..    
June 11, 2007, 5:16 am | தலைப்புப் பக்கம்

எனக்குத் தெரியும்…..நிச்சயம்நீங்கள் துடித்துப்போயிருப்பீர்கள்….ஏனெனில் நாங்களும் அப்படித்தானே துடித்தோம்…உயிர் ஒடுங்கி மண்டைக்குள் பட்டாம் பூச்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை ஈழம் மனிதம்

சலிப்பு...    
May 24, 2007, 3:24 pm | தலைப்புப் பக்கம்

யாரும் புரிந்து கொள்ளவியலா?ஜடமாகவே இருந்துவிடுகிறேன்நான்……காலம்என் கைகளில் திணித்துப்போன…நிறமற்ற கனவுகள்…எனக்குள்ளே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மரணத்தின் வாசனை - 04    
May 23, 2007, 5:58 am | தலைப்புப் பக்கம்

ஓர் ஊரில் ஒரு கிழவி..அவளது ஒரு பேத்திக்கு லண்டனில் அவளால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாத பெயரைக் கொண்ட ஒரு ஊரின் மண்டபத்தில் கலியாணம் நடந்த 6ம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

மழை நின்ற பிறகு...    
May 21, 2007, 5:35 am | தலைப்புப் பக்கம்

மழை நின்ற பின்னால்நீ வந்துபோனதடங்களை…மறுபடியும்….கலைத்துவிட்டு போகிறதுமழை…..மறுபடியும்மழை நின்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

"தமிழ் சினிமாவில் அரவாணிகள்" பருத்திவீரன் அமீரின் சிறப்பு பே...    
May 18, 2007, 5:23 am | தலைப்புப் பக்கம்

தமிழ் சினிமாப்பரப்பில் அதிர்வுகளைக் கிளப்பியிருக்கும் பருத்திவீரன்.இயக்குநர் அமீருடனான சிறப்பு நேர்காணல். நேர்கண்டவர் த.அகிலன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

2006ன் கடைசி லஞ்சமும் 2007ன் முதல் பதிவும்…..    
January 2, 2007, 9:50 am | தலைப்புப் பக்கம்

எங்கேயோ இருந்து மெலிதாக சுப்ரபாதம் என் காதுகளிற்கு கேட்கத் தொடங்கும் போதுதான் நான் இதை எழுதத் தொடங்கினேன். எந்த ஆண்டும் நான் இப்படி உணர்ந்ததில்லை எல்லாம் மாறிப்போயிருந்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

அபிராமியின் அட்டிகை என்னாச்சு?    
October 17, 2006, 12:51 pm | தலைப்புப் பக்கம்

நண்பாகளே அபிராமியின் அட்டிகைக்கு என்னாச்சு விடுவாரா மாயாவி?கும் கும் என்று ஒரு கும்மாங்குத்து தலைப்பைத்தான் இந்த பதிவுக்க முதல் இட்டிருந்தேன் ஆனால் புளொக்கர் அந்த பதிவை தின்று...தொடர்ந்து படிக்கவும் »

புன்னகை விற்பவள்    
June 30, 2006, 2:22 am | தலைப்புப் பக்கம்

நதிஅதன் புன்னகையைஒழிக்கிறதுகடல்மடியில்அவள்அனாசயமாய்அதை எடுத்துச்சூடுகிறாள்தன் கழுத்தில்நிலவுவானில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

என்னுள் இருக்கும் நீ    
June 26, 2006, 4:39 pm | தலைப்புப் பக்கம்

என் கவிதைகளில்பேசமுடியாதவேதனைஉன்னிடமேயிருந்திருக்கிறதுசில பொழுதுகளில்வாளின் கூர்முனைகளைவென்றுவலிக்கிறதுஉன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தேவதைகளின் தேவதைக்கு    
June 25, 2006, 10:46 am | தலைப்புப் பக்கம்

அன்பேஉன் நினைவுகளில்நொருங்கும் என்னிதயத்தை நீயே வைத்துக்ககொள்…..என்தேவதையேபாசாங்குகள்எதுவுமற்ற மெல்லிய மலர் என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை


தவறி வீழ்ந்த முடிச்சு    
June 25, 2006, 4:52 am | தலைப்புப் பக்கம்

பிரபஞ்சத்தின்எங்கோ ஒரு தொலைவில்சிக்கிக்கொண்டதுதிருப்தியும் அன்பும்பின்னமுடியாதஇழைகளில்தவறி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மலர்களின் மெளனமும் நீயும்.....    
June 24, 2006, 3:08 pm | தலைப்புப் பக்கம்

மலர்களின்மெளனம் உன்னைப்போல்அழகானதுஆனால்உனது மெளனங்களோமுட்களைப்போல…….....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பள்ளிக்கூடக் கனவு    
June 24, 2006, 9:35 am | தலைப்புப் பக்கம்

எனது வெள்ளைச் சட்டையில்இரத்தம் படிந்து பிசுபிசுப்பாய் ஒட்டியதுநாற்றம் மூக்கைக் குமட்டிற்றுஎனது பள்ளியோகூரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அடுத்து வரும் கணம்......    
June 24, 2006, 3:45 am | தலைப்புப் பக்கம்

என்னுடைய காலடிச்சுவடுகள்கண்காணிக்கப் படுபவைபுன்னகைகள் விசாரணைக்கானவைஉயிர் குலையும்ஓர் ஊரின்பெரும்பயணி நான்அடுத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஒரு பிரகடனத்தின் எதிர்வினை    
June 23, 2006, 1:24 am | தலைப்புப் பக்கம்

நண்பர்களே அடிக்கடி அரசபடைகளின் கிபிர் விமானங்கள் குண்டு போட்டும் போடுவதாய் மிரட்டியும் கொண்டிருக்கும் போர் தொடங்குமா தொடங்காதா என்றெல்லாம் கணக்குப் போடுகிற அரசியல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கவிதை

காலடிகளைத்தின்கிற காற்று...    
June 22, 2006, 10:22 am | தலைப்புப் பக்கம்

நீ என்னிடம் தந்துபோனசிலமுத்தங்களும்புன்னகைகளும்மட்டும் எனக்குப்போதுமானதென்றுஉனக்கு யார் சொன்னது...?என் ஆயுளைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சிந்திப்பது குறித்து........    
June 21, 2006, 12:46 pm | தலைப்புப் பக்கம்

நான்சிந்திப்பதை நிறுத்திவிடுகிறேன்எதைப்பற்றியும்..அது என்னைக் கேள்விகளால் குடைந்து கொண்டேயிருக்கிறது.அது எப்போதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இப்போது    
June 10, 2006, 10:18 am | தலைப்புப் பக்கம்

என்னிடம் நிறைவேறாதஇக்கவிதையின்பின்னரும்தேங்கிக்கிடக்கும்வார்த்தைகள்உனக்காய்….மின்சாரமற்ற ஒரு நாளின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நிமிர்ந்து நடக்கும் நதி    
June 10, 2006, 5:28 am | தலைப்புப் பக்கம்

ஒருபுன்னகைகடந்துபோகிறதுநிமிர்ந்து நடக்கும்நதியைப்போல…..சட்டென்றுபின்தொடர்ந்து முழிக்கிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

காத்திருப்பின் வலி    
June 9, 2006, 3:41 am | தலைப்புப் பக்கம்

காத்திருப்பின் வலிமரமொன்றின்கிளையிருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

புன்னகையின் பயணம்    
June 8, 2006, 2:17 pm | தலைப்புப் பக்கம்

சூரியன்தன் ரகசியங்களோடுநுழைகின்றான் எங்கும்விசாரணைகள் ஏதுமின்றிஎங்கும் நிரம்பிவழிகிறதுசூரியனின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: