மாற்று! » பதிவர்கள்

தமிழ்நதி

தமிழிசை! நான் உன்னைப் பார்க்க விரும்பவில்லை....    
April 12, 2010, 6:31 am | தலைப்புப் பக்கம்

அவளை நான் முதன்முதலில் பார்த்தபோது, நான்கு வயதைத் தொட அவளுக்கு இரண்டு மாதங்களிருந்தன.அடர்ந்த தலைமயிர் சுருள்சுருளாக முகம்மறைத்துத் தொங்கிக்கொண்டிருக்க, இருபது வயது மதிக்கத்தக்க இயக்கப் பெடியனொருவனின் கைகளில் பெண்டுலம் போல ஆடிக்கொண்டிருந்தாள். தன்னைக் கீழே இறக்கிவிடச்சொல்லி கைகால்களை ஒருகணமேனும் நிறுத்தாமல் ஆட்டிக்கொண்டிருந்தாள். "இந்தப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பணம் பற்றிய சில குறிப்புகள்    
January 31, 2010, 3:17 am | தலைப்புப் பக்கம்

பாண்டிபஜாரின் குறுகலும் நெரிசலுமான பாதையோரக் கடைகளிலே தொங்கிக்கொண்டிருந்த காதணிகளில் கண்களைக் கொழுவியபடி ஊர்ந்துசென்றுகொண்டிருந்தேன். பக்கத்தில் எட்வின் ‘பரமபிதாவே! இவள் தான் செய்வது இன்னதென்று அறிந்தே செய்கிறாள். இருந்தாலும் இவளை மன்னியும்’என்ற குறிப்புத் தொனிக்க நடந்துவந்துகொண்டிருந்தான். குழந்தையைத் தோளில் சாத்தியபடி எங்களருகில் வந்து கைநீட்டிய பெண்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மெய்யியல்

வீடு    
January 26, 2010, 5:50 am | தலைப்புப் பக்கம்

சிறுவயதில் வீடு என்பதன் பொருள் உறவுகளாகவே இருந்திருக்கிறது. அதற்கொரு பெறுமதி உண்டென்பதையோ, சமூக மதிப்பீட்டின் அளவுகோலாக வீடுகள் இருக்கக்கூடுமென்பதையோ அறியாதிருந்தேன். பெரிய இரும்புக் கதவுகளையும் உயரமான சுற்றுமதில்களையுமுடைய விசாலமான வீடுகளின் உள்ளறைகளில் யாரெல்லாம் வசிப்பார்கள் என்று, அந்த வழிகளால் கடைதெருவுக்குப் போகும்போது யோசித்துக்கொண்டே போவேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

உடல்    
December 16, 2009, 6:47 am | தலைப்புப் பக்கம்

ஏழு மணிக்கே தெரு ஓய்ந்துவிட்டிருந்தது. திறந்திருந்த பல்கனிக் கதவின் வழியாக குளிர்காற்று சிலுசிலுவென்று உள்ளே வந்தது. மரங்களில் மிச்சமிருந்த மழை தெருவிளக்கின் ஒளியில் வெள்ளிமணிகளாக மினுங்கியது. அவ்வப்போது கிளர்ந்து அடங்கும் காற்றில் சிணுங்கி உதிரும் மழைத்துளிகளைப் பார்த்தபடியிருந்தாள். மாலையானதும் கவியும் தனிமைமூட்டம் அவளை மிகமெதுவாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நாகார்ஜூனனின் ‘நளிர்’இல் ஈழம் குறித்த வாசிப்பனுபவம்    
November 6, 2009, 5:37 am | தலைப்புப் பக்கம்

ஆசிரியர்:நாகார்ஜூனன்வெளியீடு: ஆழி பதிப்பகம்‘திணை இசை சமிக்ஞை’என்ற பெயரிலான வலைத்தளத்தில் நாகார்ஜூனனால் எழுதப்பட்ட ஆக்கங்கள், அவரால் வழங்கப்பட்ட நேர்காணல்கள், சஞ்சிகைகளில் வெளிவந்த படைப்புகள், ஆற்றிய உரைகளை உள்ளடக்கிய தொகுப்பொன்றை அண்மையில் ‘ஆழி’பதிப்பகம் வெளியிட்டிருந்தது. பித்தான்களிலிருந்து பேரழிவுகள் வரை அந்நூலில் அலசப்பட்டிருந்தது. தேடலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் இலக்கியம்

திஸநாயகத்தின் தவறுகள்    
September 16, 2009, 5:27 pm | தலைப்புப் பக்கம்

தானியக் களஞ்சியங்களைபோர் கொள்ளையடித்துவிட்ட ஒரு தேசத்தில்சகோதரனே!உண்பதற்கு மட்டுமேநீ வாயைத் திறந்திருக்க வேண்டும்।உனது எழுதுகோலுள்குருதியையும் கண்ணீரையும்ஊற்றியது யார் தவறு? உடற்சாற்றில் வழுக்கிஊடகதர்மம் அலமலந்து விழுந்துகிடக்கும் மண்ணில்உண்மையன்று;நமக்கெல்லாம் உயிரே வெல்லம் என்பதறியாயோ? 'ஜனநாயகம்' என்ற சொல்பைத்தியம் பிடித்து மலங்க மலங்க விழித்தபடிதன்...தொடர்ந்து படிக்கவும் »

‘பிரபாகரன் குற்றவாளி’ எனும் எத்துவாளி நீதிபதிகள்    
September 3, 2009, 1:38 am | தலைப்புப் பக்கம்

ஏதோவொரு பிடிப்பில், நம்பிக்கையில், ஆதார அச்சில், எதிர்பார்ப்பில், காத்திருப்பில், ஒரு புள்ளியை நோக்கிய பயணமாக இருந்த வாழ்க்கை தேங்கிவிட்டது. இரவில் அடர்காட்டில் திசை தொலைத்த திகைப்பினை நினைவுறுத்துகின்றன இந்நாட்கள்.முன்னைப்போல நண்பர்களின் முகங்களை எதிர்கொள்ள முடிவதில்லை. சந்திப்புகளைத் தவிர்த்துவிடுகிறோம். தொலைபேசி எண்களைக் கண்ணெடுக்காமலே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

‘த பியானிஸ்ட்’: சமகால வலியின் நிழல்    
August 26, 2009, 2:33 am | தலைப்புப் பக்கம்

சில சமயங்களில் நினைத்துப் பார்க்கும்போது வரலாறு திரும்பத் திரும்ப ஒரே அச்சில் சுழல்வதாகவே தோன்றுகிறது. ஆண்டுகள்தான் கழிந்துபோயினவேயன்றி, மனிதனுக்குள்ளிருக்கும் அதிகார வேட்கையானது மாற்றங்கள் ஏதுமின்றி அப்படியே இருக்கிறது. அதற்கு சமகால இரத்த சாட்சியமாக ஈழத்தில் நடந்தேறிக்கொண்டிருக்கும் இனவழிப்பைச் சொல்லலாம். எழுதவோ வாசிக்கவோ மனங்கொள்ளாத ஓரிரவில் ரோமன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் ஈழம்

தோழர் காமராஜுக்கு ஒரு கடிதம்    
July 1, 2009, 3:07 pm | தலைப்புப் பக்கம்

அன்புத் தோழர் காமராஜூக்கு,முதலில் உங்கள் அக்கறைக்கு நன்றி. இந்தப் பதிலை எழுதுவதற்கு முன்பு உங்களிடம் நான் ஒன்று சொல்லிவிடுகிறேன். "ஈழத்தமிழருக்காக நீங்கள் ஏன் பேசவில்லை, எழுதவில்லை?" என்று இனி இந்தத் தமிழகத்தில் பறக்கும் ஒரு குருவியிடம் கூட கேட்கமாட்டேன். ஏதோவொரு ஆதங்கம், பதைப்பு, நப்பாசை. கண்ணீர் விட்டுக் கதறிக் கேட்டும் கண்திறக்காமல் இருந்தன மத்திய, மாநில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

ஆதவன் தீட்சண்யா தந்த அதிர்ச்சி!    
June 29, 2009, 1:05 pm | தலைப்புப் பக்கம்

முற்குறிப்பு: கடவு இலக்கிய அமைப்பால் மதுரையில் நடத்தப்பட்ட இரண்டுநாள் ‘கூடல் சங்கமம்’நிகழ்வுக்கு நானும் தோழி உமா ஷக்தியும் சென்றிருந்தோம். அனைவரின் ஒத்துழைப்புடனும் இறுக்கமான நேரக் கட்டுப்பாட்டுடனும் பயனுள்ளதாகவும் அந்தக் கூட்டம் சிறப்பாக நடந்துமுடிந்தது. இந்தப் பதிவு, கூட்டத்தின் முடிவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பற்றியது. இரண்டுநாள் நிகழ்ச்சிகளையும் பற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கனவுகள்+கவலைகள்=கவிதைகள்    
June 25, 2009, 2:49 am | தலைப்புப் பக்கம்

ஆதிரை என்றொரு அகதிஐந்து வயதான ஆதிரைக்குகடல் புதிதுகேள்விகளாலான அவள்அன்றைக்கு மெளனமாயிருந்தாள்துவக்குச் சன்னங்களுக்குப்பிடரி கூசிஒவ்வொரு வெளிச்சப்பொட்டிலும்படகினின்று உயிர் தளும்பிய அவ்விரவில்கடல் குறித்த எல்லாக் கவிதைகளும்எனக்கும் மறந்துவிட்டிருந்தனகடல் ஒரு நீர்க்கல்லறை என்பதன்றி.கழிப்பறை வரிசை...கல் அரிசி...சேலைத் திரை மறைவில்புரியாத அசைவுகள்...காவல்...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு கவிதைத் தொகுப்பின் நதிமூலம்    
June 24, 2009, 3:22 am | தலைப்புப் பக்கம்

இருண்ட காலத்தில் பிறந்த ‘சூரியன் தனித்தலையும் பகல்’தற்காலிக வாழிடமாக சென்னையை நான் தேர்ந்தது எவ்வளவு தற்செயலானதோ அவ்வளவு தற்செயலானதே எனது கவிதைத் தொகுப்பு வெளிவந்ததும் என்று சொல்லலாம். இங்கு வரும்போது தொகுப்பொன்றைக் கொண்டுவருவது குறித்த எண்ணமே எனக்கு இருக்கவில்லை. கையில் சில கவிதைகள் இருந்தன. ஆனால், அவை கவிதைகள்தானா என்பதில் எனக்குச் சந்தேகம் இருந்தது. எனக்கான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நாடும் அகதியான காலத்திலிருந்து பேசுவது…    
June 23, 2009, 2:18 pm | தலைப்புப் பக்கம்

அண்மையில் சென்னையில் நடந்த, ஈழம் தொடர்பான ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றில் கலந்துகொள்ள நேர்ந்தது. ‘வாழ்க’, ‘ஒழிக’எனக் கத்தியபடி கூட்டம் நகர்ந்துகொண்டிருந்தது. சீரான காலசைவுடன் சென்றுகொண்டிருந்த ஊர்வலம் இனம்புரியாத பெருமிதத்தையும் கிளர்ச்சியையும் ஊட்டக்கூடியதாக இருந்ததென்பது உண்மையே. நேரம் ஆக ஆக அந்த வாசகங்கள் தன்னுணர்வின்றியும், தாளலயத்தின் ஒத்திசைவு தந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

கமலாதாஸ்: சர்ச்சைகளின் காதலி    
June 23, 2009, 5:28 am | தலைப்புப் பக்கம்

மரணம் ஞாபகங்களின் ஊற்றுக்கண்ணைத் திறக்கிறது. எஞ்சியிருப்பவர்களினிடையே, நிச்சயமற்ற இருப்பினைக் குறித்த எச்சரிக்கையினைத் தூவுகிறது. மேலும் உயிரோடு இருப்பவர்கள், இறந்தவர்களை ஏதாவதொரு சிமிழுக்குள், சட்டகத்தினுள் அடைத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தினுள் தள்ளப்பட்டவர்களைப் போல பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். இறந்தவர் பிரபலமான எழுத்தாளராக இருப்பாரேயாகில், அவர் புனைந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

ஒரு பிரகடனத்தின் எதிர்வினை    
June 2, 2009, 5:24 am | தலைப்புப் பக்கம்

இந்தக் கவிதையை முன்பொருகாலம் ஒலிவடிவில் கேட்டிருக்கிறேன். அந்த வரிகள் என் மனதை விட்டு அகலமுடியாதபடிக்கு வலி தருவனவாயிருந்தன. இப்போது இருக்கும் சூழலுக்கு இக்கவிதை பொருந்துவதால் இதை எழுதிய அகிலனின் அனுமதியோடு இங்கே பதிவாக இடுகிறேன்.எங்களுடைய புன்னகையைச் சந்தேகிக்கும்எல்லோருக்கும் சொல்கிறோம்....எங்கள் கடல் அழகாயிருந்ததுஎங்கள் நதியிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஈழவிடுதலையின் தோல்வியில் இணைந்த சாருவுக்கும், ஜெயமோகனுக்கும்…    
May 27, 2009, 6:51 am | தலைப்புப் பக்கம்

‘சுயமோகி’ என்று ஜெயமோகனை வர்ணித்த சாருவும், சாருவிடம் தொடர்ச்சியான ஒவ்வாமை கொண்டிருந்த ஜெயமோகனும் இணையும் புள்ளியாக, ஈழவிடுதலைப் போராட்டத்தின் தோல்வி அமைந்துவிட்டிருப்பதில் ஈழத்துக்காரியும் மேற்குறிப்பிடப்பட்டிருக்கிறவர்களின் வாசகியுமாகிய நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.முதலில் சாருவுக்கு,“சதாம் ஒரு நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர். அந்தத் தேசத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

விழித்தெழ முடியாத ஒரு கொடுங்கனவு    
May 26, 2009, 2:53 am | தலைப்புப் பக்கம்

நம்பிக்கை, பற்றுக்கோடு, வாழ்வின் மீதான பிடிப்பு எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு நிர்க்கதியாகத் தெருவில் விரட்டப்பட்ட அவமானத்தோடும் கோபத்தோடும், விம்மிப் பொருமும் மனதை அடக்கிக்கொண்டு இதனை எழுதுகிறேன். இது அழுது தீரும் துயரமல்ல; எதிர்ப்படும் பொருட்களை, எதிரியை அடித்து நொருக்கும் கோபம். இந்தக் கோபத்தை நான் எழுத்தில் இறக்கிவைத்துவிட வேண்டும். இல்லையெனில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இது கவிதையல்ல; கோபம்!    
May 18, 2009, 6:14 am | தலைப்புப் பக்கம்

எல்லாம் இனிதே நடக்கிறது.இன்னும் சில மணிகளில்முற்றிலும் மயானமாகிவிடும்புகை மண்டலத்தினுள்ளிருந்துசிங்கக் கொடி உயரும்நிலத்தில் வீழ்ந்துஇறந்துகொண்டிருப்பவர்கள்ஏலவே இறந்துபோனவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்ஒளி அவியும் விழிகளால்.பாதுகாப்பு வலயங்கள்கொலைக்களங்களாவதைப் பற்றிசர்வதேசம் யாதொன்றும் செய்வதற்கில்லை.அறிக்கை விடுவதில்உள்ளுர்க்காரர்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

கேக்கிறவன் கேனையன்னா எருதுகூட ஏரோப்ளேன் ஓட்டும்கிறது இதுதானா?    
April 28, 2009, 4:55 am | தலைப்புப் பக்கம்

தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க அரசியல்வாதிகள் காட்டும் செப்படிவித்தைகள் தாங்கமுடியவில்லை. கரணம் அடிக்கிறார்கள். கயிற்றில் நடக்கிறார்கள். நெருப்பு வளையத்துக்குள் பாய்கிறார்கள். சித்திரக்குள்ளர்களாகி சிரிப்பு மூட்டுகிறார்கள். காற்றில் கைவீசி பூ வரவழைத்துக் கொடுக்கிறார்கள். கட்டப்பொம்மனாகி மீசை துடிக்கப் பேசுகிறார்கள். ஜான்சிராணியாகி வாளை வீசுகிறார்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

மலைகளுக்குச் செவிகள் இல்லை    
April 4, 2009, 3:57 am | தலைப்புப் பக்கம்

மேடைகளில் கனன்ற சொற்பொறிகள்நேரே உங்கள் இதயத்துள்இரத்தம் கண்ணீராய் திரிந்தது.நம்பித்தானிருந்தோம்!பேசிய நாக்குகளைக் கைதுசெய்தார்கள்விரல்களையும்.சிறையிருளைக் கிழித்திறங்கும்ஒற்றைச் சூரியவிரல்இரத்தக்கறை படிந்த சுவர்களில் எழுதுகிறதுஉங்களில் இரக்கமுள்ளோரின் பெயர்களை.ஊர்வலங்களில் சீரான காலசைவில்எழுச்சியுற்று நடந்தீர்கள்பட்டொளிப் பதாகைகள்காக்கிகளால்...தொடர்ந்து படிக்கவும் »

யாழினி என்றொரு ‘சிலோன் பொண்ணு’    
April 1, 2009, 5:27 am | தலைப்புப் பக்கம்

வெயில் காங்கை விரட்ட, தலை கொதிக்க விரைந்து நடந்தாள் அமுதா. எட்டடிக்கு எட்டடி அறையினுள் தனியே நித்திரையாகக் கிடக்கும் குழந்தை எழுந்து அழுவாளோ.. என்ற நினைப்பில் மனம் பதைத்தது. பால் பவுடர் முடிந்துவிட்டிருக்காவிட்டால் இப்படி மண்டையைப் பாம்பாய் பிடுங்கும் வெயிலில் கடைக்குப் போயிருக்கமாட்டாள். வழக்கமாக யாழினி பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பியதும் அவளை நிலாவுக்குப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

எனக்குப் புதிர்களைப் பிடிக்கும்; நகுலனையும்.....    
March 27, 2009, 3:48 am | தலைப்புப் பக்கம்

சில புத்தகங்களை வாசித்துக்கொண்டிருக்கும்போதே ஒரு மனஇருட்டும் புழுக்கமும் வந்து கவிந்துகொள்வதை அவதானித்திருக்கிறேன். ஆனால், புகைப்படங்கள் (அண்மைய ஈழப்படுகொலைகள் தவிர்த்து) அழுகைக்குள் விழுத்தும் துயரத்தைத் தந்ததாக நினைவில்லை. நகுலனின் புகைப்படங்கள் அடங்கிய ‘கண்ணாடியாகும் கண்கள்’ மட்டுமே அதற்கு விதிவிலக்கு. அந்தப் புகைப்படங்களை காஞ்சனை சீனிவாசன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

பயணம்: அழைத்துக்கொண்டே இருக்கிறது வெளி    
March 18, 2009, 2:32 pm | தலைப்புப் பக்கம்

வீட்டிலிருக்கும்போது வெளியும், வெளியில் இருக்கும்போது வீடும் மாற்றி மாற்றி நமக்கு மட்டுமே கேட்கக்கூடிய அந்தரங்கமான குரலில் அழைத்துக்கொண்டே இருக்கின்றன. ‘நீண்ட நாட்களாக வெளியில் போகவில்லையே’என்ற நினைப்புத் தொட்ட கணத்திலிருந்து மளமளவென்று வளரத் தொடங்கியது பயணக் கிறுக்கு. அப்போது பார்த்து ‘மணல் வீடு’ சஞ்சிகையும் ‘களரி’தெருக்கூத்துப் பயிற்சிப் பட்டறையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம் மனிதம்

நாற்றமெடுக்கும் அரசியலும் நாற்காலிச் சண்டைகளும்…    
March 10, 2009, 6:38 pm | தலைப்புப் பக்கம்

தேர்தலையொட்டி வெளியாகும் செய்திகளையும் அரசியல்வாதிகளின் அறிக்கைகளையும் பார்க்கும்போது மனிதர்கள் இத்தனை குரூரமாகவும் தந்திரமாகவுமா இருப்பார்கள் என்று வியந்து மாளவில்லை. அ.தி.மு.க., தி.மு.க. ‘எசப்பாட்டு’ கச்சேரிகளில் ஈழத்தமிழர்களின் தலை உருளாமல் இருந்தாலாவது ‘போங்கய்யா நீங்களும் உங்கள் புண்ணாக்கு அரசியலும்’என்று புறக்கணித்துவிடலாம். ஆனால், தேர்தல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

நந்திதாவுக்கு ஒரு கடிதம்    
March 8, 2009, 6:26 am | தலைப்புப் பக்கம்

நந்திதா! நேற்றும் ஒரு கறுப்புநாள்தான். அதில் சந்தேகமேயில்லை. நான் உன்னைப் பார்க்க வந்திருந்தேன். நீ தலைதாழ்த்தி அமர்ந்திருந்தாய். கண்களிலிருந்து சொட்டிய கண்ணீர் உன் மடியிலிருந்த புகைப்படத்தை நனைத்துக்கொண்டிருந்தது. உனது அன்பிற்குரிய தோழன் எறிகணை வீச்சில் சிக்கிச் சிதறிப்போயிருந்தான். என்னிடம் ஒரு சொல்லுமில்லை. எல்லாச் சொற்களையும் மரணம் தின்றுசெரித்துவிட்டது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

ஒரு கண்ணீர்க் கடிதம்    
February 28, 2009, 3:11 am | தலைப்புப் பக்கம்

எனது அன்பிற்குரிய வலையுலக நண்பர்களில் ஒருவர் ‘நீங்கள் ஒவ்வொரு நாட்களும் பதிவு போடவேண்டும்’என்று கேட்டுக்கொண்டார். அந்தக் ‘கொடுமையை’நீங்கள் ஒவ்வொரு நாட்களும் அனுபவிக்க வேண்டுமா என்ன என்று நான் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். அவரோடு நிறைய நாட்கள் பழக்கமில்லை ஆதலால் ‘போடுகிறேனே’என்று பவ்யமாக ஒரு மின்னஞ்சலைத் தட்டிவிட்டேன். ஒவ்வொரு நாட்களும் பதிவிடுவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

தடுப்பு முகாம்கள்    
February 27, 2009, 4:22 am | தலைப்புப் பக்கம்

சூரியன் மஞ்சளாய் சரியும்வேளையில் கொலைக்களத்திலிருந்து புறப்படும் இராணுவ வாகனங்கள்உயிருள்ள பிணங்களைவீதியோரத்தில் கொணர்ந்து கொட்டுகின்றன. இரவானதும் தடுப்புமுகாம்களின் கம்பிவேலிகளுள்இடமாற்றப்படுகின்றவர்களின்அகலவிரிந்துறைந்த கண்களுள் விழுந்துகொண்டிருக்கின்றனசடலங்கள் மேலும் பல சடலங்கள்‘மீட்கப்பட்டவர்களை’ஓளியிழை நாடாக்கள் அவசரமாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

விழாக்காலத் துயரம்    
February 23, 2009, 3:09 am | தலைப்புப் பக்கம்

எனது கதை, கவிதைகளில் நந்திதா என்ற பெயரை விளித்துப் பேசுவது வழக்கம். இந்தக் கவிதையிலும் நந்திதா இருக்கிறாள். பொங்கலையொட்டி எழுதப்பட்ட கவிதை இது. நம்பிக்கையின் நாடித்துடிப்புமெல்ல மெல்ல அடங்கிக்கொண்டு வருகிறது நந்திதா!தேய்ந்த சொற்களால் வழிந்து தீராத கண்ணீரை எழுதுகிறேன்.நீல ஒளியுமிழும் சரவிளக்குகள்மரங்கள் தோறும் காய்த்துத் தொங்கும்இந்தத் திருவிழாத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மாபெரும் ஒன்றுகூடல் - பெப்ரவரி 22 (இன்று - ஞாயிற்றுக்கிழமை)    
February 22, 2009, 4:16 am | தலைப்புப் பக்கம்

அன்பு நண்பர்களுக்கு,வலைப்பூவில் பிரசுரிக்க அனுப்பப்பட்டதில் எழுதியிருப்பது போல எல்லாவற்றைக் குறித்தும் பேசியாயிற்று. இருந்தாலும், ஒன்றுமே பேசப்படாததுபோல ஒரு வெளி நமக்கு முன் விழுந்துகிடக்கிறது. மக்கள் எழுச்சியால் மட்டுமே இதை நிரவ முடியும். நம்மால் பெரிதாக ஒன்றும் செய்துவிட முடியாது என்பது உண்மை. ஆனால், ஏதேனும் செய்யாமல் கைகளைக் கட்டிக்கொண்டிருப்பதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

ஒரு பயணம்… சில குறிப்புகள்…    
February 18, 2009, 6:38 am | தலைப்புப் பக்கம்

விமானம் கொழும்பில் தரையிறங்கப்போகிறது என்றதும், வழக்கமாக ஒரு குதூகலம் பற்றிக்கொள்ளும். அதுநேரம்வரை ஒழுங்காக இயங்கிக்கொண்டிருந்த காலம் ஒரே முள்ளில் உறைந்ததுபோலாகிவிடும். வாய்கொள்ளாமல் அள்ளித் தின்னச் சொல்லி ஆவலாதி கூட்டும் பஞ்சுப்பொதி மேகங்களினூடே தளம்பித் தெரியும் கடலும் தென்னை மரங்களும் அழகின் பரவசத்தில் மூழ்கடிப்பன. இம்முறையும் அதே நிலம், அதே நிறங்கள்…...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் மனிதம்

முத்துக்குமார் மூட்டிய தீ: நின்றெரியுமா? அணைக்கப்படுமா?    
February 3, 2009, 5:08 am | தலைப்புப் பக்கம்

பல்லாயிரக்கணக்கமான ஈழத்தமிழர்களை மட்டுமல்லாது முத்துக்குமாரையும் கொன்று தின்று ஏப்பம் விட்டிருக்கிறது அதிகார அரசியல். நேற்று முன்தினம் (31.01.09) மூலக்கொத்தடம் சுடுகாட்டில் அந்த உணர்வாளனின் உடல் எரியூட்டப்பட்டது. முதல்நாள் நாங்கள் போனபோது, முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கொளத்தூரின் அனைத்துக் கடைகளும் -‘டாஸ்மாக்’எனப்படும் மதுக்கடை தவிர்த்து-...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

புலிகளின் பின்னகர்வு: விடை தெரியாத கேள்விகள்    
January 22, 2009, 4:50 am | தலைப்புப் பக்கம்

நேற்றுக் காலையில் என்னோடு கதைத்த கவிஞர் ஒருவர் “பிரபாகரனைப் பிடித்துவிடப் போவதாகச் செய்திகளில் சொல்லிக்கொண்டிருக்கிறார்களே.... வேதனையாக இருக்கிறது”என்று சொன்னார். எனக்கும் வேதனையாகத்தான் இருக்கிறது… தலைவர் பிரபாகரனைப் பிடித்துவிடுவார்கள் என்பதனால் அல்ல; ‘பிடித்துவிடுவோம் விடுவோம்’ என்று முழக்கமிடும் பேரினவாதிகளையும், அவர்கள் வாய்மொழியும் செய்திகளின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

தீபச்செல்வனின் 'பதுங்குகுழியில் பிறந்த குழந்தை'    
January 10, 2009, 6:21 am | தலைப்புப் பக்கம்

வெளியீடு: காலச்சுவடுஒடுக்கப்பட்ட மக்கள் ஒரு போராட்டத்தின் வழியாக தமக்கான விடுதலையைப் பெற்றுக்கொள்வதன் முன் எண்ணுக்கணக்கற்ற இழப்புகளையும் மனச்சிதைவுகளையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. பட்டியலிடாமலே அந்த மானுட அவலங்களை நாம் அறிவோம். சகமனிதர்களின் குறிப்பாக தான் வாழும் சமூகத்தின் இழப்புகளும் வலிகளும் ஒருத்தியை அன்றேல் ஒருவனைப் பாதிக்கவில்லையெனில், அவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மனிதம்

புத்தகக் கண்காட்சி: புளகாங்கிதங்கள், புழுகுகள்    
January 10, 2009, 6:01 am | தலைப்புப் பக்கம்

முன்னெப்போதிலும் முகம் பார்த்திராத, ஆனால் ஒத்த குணங்களால், ரசனைகளால் நெருக்கமான ஒரு நண்பரைப் பார்ப்பதற்கான நாளைக் குறித்து வைத்துவிட்டு அதனை எதிர்நோக்கிக் காத்திருந்த அனுபவம் உங்களுக்கு உண்டா? காதலன் அல்லது காதலி வருவதற்கு அரை மணிநேரம் முன்னதாகவே சந்திக்கும் இடத்திற்குப் போய், வீதியால் போகும் வரும் ஆட்களையெல்லாம் கண்களால் தொடர்ந்துகொண்டிருந்த நாட்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

கிளிநொச்சி: இழந்துதான் போவோமோ…?    
January 6, 2009, 6:45 am | தலைப்புப் பக்கம்

எல்லா தேவதைகளும் கைவிட்டுவிட்டனவோ என்ற ஆற்றாமையும் எதையேனும் பற்றிக்கொண்டு எழுந்துவிடவேண்டுமென்ற துடிப்பும் ஒருசேர இயங்கி குழப்பகரமான, இருண்ட மனோநிலைக்குள் தள்ளியிருக்கின்றன. ஆனையிறவும் ஆக்கிரமிப்பாளர்களின் கையில் வீழ்ந்துவிடும் என்று செய்திகள் கூவிக்கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே தென்னிலங்கையின் வீதிகளில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி ‘கிளிநொச்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தமிழ்ப்படைப்பாளிகள் கூட்டமைப்பினர் நடத்திய உண்ணாநிலைப் போராட்டம்    
December 24, 2008, 6:55 pm | தலைப்புப் பக்கம்

இப்போதுதான் ஒரு ‘சூடான’கூட்டத்திற்குப் போய்விட்டு வந்தேன். அதை ‘சூடாக’எழுதாவிட்டால் ஞாபகங்கள் ஆறிப்போய் கிடப்பில் போடவேண்டியதாகிவிடும். ‘சூடான இடுகைகள்’ பற்றிய தமிழ்மணப் பதிவையும் பின்னூட்டங்களையும் வீட்டிற்குள் நுழைந்ததும் படித்ததன் விளைவு ----------- என்ற சொல் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.‘தமிழ்நதிக்கும் போல்வார்க்கும்’என்று பதிவு போட்டாலும் சூடு சுரணையில்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் நிகழ்ச்சிகள்

சீமான் கைதும் இறை ‘ஆண்மை’யும்    
December 21, 2008, 2:08 pm | தலைப்புப் பக்கம்

சீமான்,கொளத்தூர் மணி,பெ.மணியரசனைக் கைது செய்துவிட்டார்கள். அவர்கள் செய்தது இமாலயத் தவறு. அவர்கள் வார்த்தைகள் கண்காணிக்கப்படும் ஒரு நாட்டில் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டார்கள். மறதி மன்னிக்கப்பட முடியாதது. இப்போது உங்களுக்கு சிதைந்துபோன ரஷ்யாவும் அதன் உளவுப்படையும் நினைவில் வந்தால் நான் ஒன்றும் செய்வதற்கில்லை. முகத்தை மூடாத பெண்களுக்குத் தண்டனை வழங்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் சமூகம்

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தகவல் தொழில்நுட்பவியலாளர்களின் உண்ணாநிலைப் போ...    
December 14, 2008, 8:34 am | தலைப்புப் பக்கம்

ஈழத்தமிழர்கள் துயர்ப்பட மட்டுமே பிறந்தவர்களன்று; பெருமிதப்படவும் தகுந்தவர்கள் என்ற எண்ணத்தை யாராவது இருந்திருந்துவிட்டு விசிறிச் செல்வதுண்டு. நேற்று சனிக்கிழமை கோயம்பேட்டில் தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் மாணவர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் சிங்களப் பேரினவாத அரசைக் கண்டித்தும் நடத்திய உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்துகொண்டதில் மனம் நெகிழ்வும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நிலம் மற்றுமோர் நிலா    
November 2, 2008, 1:21 pm | தலைப்புப் பக்கம்

இருபுறமும் வேகமாகப் பின்னகரும் காடுகள், கண்ணிவெடி குறித்த அபாய அறிவிப்புப் பலகைகள், நிர்விசாரமாக மேய்ந்துகொண்டிருக்கும் மாடுகள், சோதனைச்சாவடிகள்… இவை தாண்டி வவுனியாவிலிருந்து ‘ஏ ஒன்பது’ வீதியில் விரைந்த பயணமானது, விவரிக்கவியலாத கனவொன்றினை ஒத்திருந்தது. காரினுள் ஒலித்த பாடல்கள் என்னை வேறு வேறு காலங்களுள் மாற்றி மாற்றி எறிந்துகொண்டிருந்தன. ஒரு பாடலில் ஏறி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை அனுபவம் கதை

இராமேஸ்வரமும் இனவுணர்வும்    
October 20, 2008, 7:39 am | தலைப்புப் பக்கம்

அநேக வீட்டுக்கூடங்களைப் போல எங்கள் வீட்டுக் கூடத்திலும்(விறாந்தையிலும்) மாலையானதும் அழுகையும் விம்மலும் பொங்கி வழியும். தொலைக்காட்சியில் நெடுந்தொடரொன்றில் யாராவது ஒரு பெண் அழுகையையும் வசனத்தையும் சமஅளவில் கலந்து வழங்கிக்கொண்டிருப்பாள். தொலைக்காட்சியின் முன்னால் அதற்குச் சற்றும் குறைவிலாத சோகம் ததும்ப யாராவது அமர்ந்திருப்பார்கள். நேற்று எனது அறையை விட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தேவரீர் சபைக்கொரு விண்ணப்பம்    
October 13, 2008, 6:53 am | தலைப்புப் பக்கம்

ஆயுதங்களைக் கைவிடும்படியாகஅறிவித்தல் கிடைத்தது.நல்லது! எங்களுக்கு அவகாசம் கொடுங்கள் எஞ்சிய வீடுகளைநாங்களே தரைமட்டமாக்க...சுவர்களில் மூளை சிதறி வழியும்கனவுகளோடிருக்கும் உங்கள்விழிகளை ஏமாற்றிகுழந்தைகளுக்கு முன்னதாகவே நஞ்சூட்டி விட…அரச மரங்களை விடுத்துகோயில்களைத் தகர்த்துவிட…நீங்கள் வன்புணர்ந்து சிதைக்கவிருக்கும்யோனிகளுடை பெண்களைஇழிவின்முன் கொல்லவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

எழுதாத காரணம்    
October 8, 2008, 7:12 am | தலைப்புப் பக்கம்

“எழுதாத காரணம் என்ன?”என்றாய். வாசிக்கவெனப் புரட்டிய பக்கத்தினின்றுசிறகு தழைத்தெழும் விழிப்பறவைமுடிவற்ற வானில்திசைதப்பியலைகிறது.வரிகள் வழிந்தோடிவிடும் வெற்றிடங்களில்ஞாபகக் கத்திகள் சுழல்கின்றன. உபரியாய்ஊளையிடுதலே ஒரே பொழுதுபோக்கான கீழ்வீட்டு நாய்கள்…சாணை தீட்டுபவனின் கூர்மைக் குரல்…வெறுமையைத் தெளிக்கும் வெயிலை விரட்டுவதாக சதா தற்பெருமையடிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நதியறியும் கரைவிரிவு    
October 1, 2008, 7:15 am | தலைப்புப் பக்கம்

விழிப்பதற்கும் எழுவதற்கும் இடையிலானவெறுமைவெளி நிரப்பும்பட்டியல்களிடம்என் நாளைஇனியும் தோற்பதற்கில்லை.வாசிக்காத புத்தகங்களுள்அளவிலா அதிசயங்கள் எஞ்சியிருக்கின்றன.கதவுக்கு வெளியில்மனிதர்களைப் போலன்றிகருவிழி நன்றியில் மினுமினுக்கும்நாய்க்குட்டி ஒன்றுளது.என்னாலேயே மறக்கப்பட்ட (வெறுக்கப்பட்டதுமான)வரிகளைச் சிலாகித்துஇன்று எவருடையவோமின்னஞ்சல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பேசாப்பொருளைப் பேசும் படங்கள்    
August 30, 2008, 4:59 pm | தலைப்புப் பக்கம்

'பெண்கள் சந்திப்பும் சில பேய்க்கதைகளும்' என்ற பதிவுக்கும் இதற்கும் தொடர்பில்லை. "அரசாங்கம் செய்வது நமக்கெல்லோருக்கும் தெரியும்."பல்குழல் எறிகணை வீச்சு, விமானக்குண்டு வீச்சு, கடலிலிருந்து தாக்குதல் ஆகிய பன்முகத் தாக்குதல்களால் தமது வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்து வந்து மரத்தடிகள், காடுகள், வெட்டவெளிகளில் தங்கியிருக்கும் மன்னார், வன்னிப்பகுதி அகதிகளின் அவல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

புதைந்து போனவள்    
August 29, 2008, 5:07 pm | தலைப்புப் பக்கம்

அந்த முழுநிலா நாளில்வெள்ளித்தகடென விகசித்தது மொட்டைமாடி.கண்ணாடிக் குவளையூடேநரம்புகளில் புகுந்த செந்நிறத் திரவநதிஅள்ளிச்சென்றது கவலைக் கழிவுகளை.கூடுதல் நட்சத்திரங்களாய்விழிகள் மினுக்கிடஅவள் பேசிக்கொண்டிருந்தாள்.பெண்ணெழுத்து சட்டாம்பிள்ளைகளின்பிரம்போயும் முதுகெனவும்அரங்கனின் புண்ணியத்தில்ஆண்டாள் தப்பியதும்சொல்லிச் சிரித்த அதிர்வில்காலடியில் கிடந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் கவிதை

பெண்கள் சந்திப்பும் சில பேய்க்கதைகளும்    
August 7, 2008, 3:54 pm | தலைப்புப் பக்கம்

“கேட்ட கேள்விக்குப் பதில் இல்லையெனில் மௌனமாய் இருக்கப் பழகுவது நல்லது”என்ற கவிதை வரிகளை, பெண்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோது எவ்வாறு மறந்திருந்தேன் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கும்போது என்மீதே ஆயாசம் பொங்குகிறது. உரிமைகளைக் குறித்துப் பேசக் கூடிய கூட்டத்திலும் பேச்சுரிமை என்பது தனிநபர்களின் செல்வாக்கு, அவர்களுடைய பின்புலம், சமூகத்தினால்(அன்றேல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் சமூகம்

சத்தியமாய் கவிதையில்லை    
August 6, 2008, 1:30 am | தலைப்புப் பக்கம்

காதல்:நரம்புமேடையில்ஹோர்மோன்கள்நடத்தும் நாடகம்அரசியல்:அவரவர் புண்களிலிருந்துவழியும் சீழ்எழுத்து:முன்னால் நிற்பவனின்கண்ணறிந்து கடைவிரிக்கும்புனித வியாபாரம்தாம்பத்யம்:இரண்டுபேர் ஆடுகிறகண்ணாமூச்சியாட்டம்எல்லா மயிரும் தெரிந்தபிறகும்மூடுபல்லக்கில் அசைந்தசைந்துஎத்தனை நளினமாய்முகமினுக்கிப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மீள்திரும்புதலும் ஒரு வாக்குமூலமும்    
July 12, 2008, 4:05 am | தலைப்புப் பக்கம்

நந்திதா:முன்னொருபோதும் காணாத மழையா? நந்திதா 1:ஒரே மழை எத்தனை விதமாய் பெய்கிறது! நந்திதா:மனசின் கருவி கண். காட்சி பொறுப்பன்று. நந்திதா 1:நெட்டுக்குத்தாகப் பெய்திருக்க வேண்டிய மழை, காற்றின் அதிகாரத்தின் முன் தோற்றுப்போய் சாய்ந்தடிக்கிறது. சில கலைஞர்கள் நினைவில் வருகிறார்கள். நிலத்தில் குமிழியிடும் மழையின் எத்தனத்தைக் காலால் தள்ளிக் கலைக்கிறது காற்று. அதனுள்ளும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

குற்றவாளி    
May 15, 2008, 3:36 pm | தலைப்புப் பக்கம்

அனலில் ஊறிய அறைகளுள்இயலாமையுடன்கைவிரித்துச் சுழல்கின்றன மின்விசிறிகள்.வேம்பும் கருகிய வெளியைஉற்றுநோக்கி இருப்பவளின் கண்ணில்எம்மரத்தின் இலையும் தளதளப்பும்இக்கணம் அசைகிறதோ…!அன்பின் நீரூற்றுகள்மதவியாபாரிகளின் உதடுகளிலிருந்துமட்டுமே பீறிடுகின்றன.நவத்துவாரங்களிலும் தூசி இறைத்தபடிவாகனங்கள் வெறிகொண்டலையும் வீதியோரம்விழுந்து சுருண்டிருக்கும்கிழவனைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஒரு பயணம்… பயங்கள்… மேலும் சில பரவசங்கள்…    
May 2, 2008, 5:06 am | தலைப்புப் பக்கம்

விமானம் உயரம் விழுங்கித் தரைதாழ்கிறது. பிரமாண்டப் பஞ்சுப்பொதிகள் ஐதானதில் குறுஞ்செடிகளாய் தெரியவாரம்பித்த தென்னைகளின் அழகிலும் வேறு ஏதோவோர் உணர்விலும் (அதை நீங்கள் பிறந்த பொன்னாடு இன்னபிறவற்றின் கலவை என உணரலாம்) மனம் இளகி பரவசம் பொங்க அதுவரை முகம்பார்க்காதிருந்த சகபயணியின் பக்கம் திரும்பி ‘அழகு’என்கிறேன். ‘பச்சை நிலம்’என அவரும் வழிமொழிகிறார். கொழும்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

இது இப்படி முடிந்தது.....    
April 15, 2008, 3:53 am | தலைப்புப் பக்கம்

எல்லா நாட்களும் ஒன்றுபோலில்லை. கடந்த வாரம், மனசில் விழுந்த நெருப்புக்கங்காய் கனன்றுகொண்டேயிருந்தது. ஆதங்கம், பரபரப்பு, ஆற்றாமை, வஞ்சிக்கப்பட்ட துக்கம், பேசப்படுவதனாலாய சிறுபிள்ளைத்தனமான உள்ளார்ந்த கிளர்ச்சி, மின்னஞ்சல் ஆறுதல்கள், ஆலோசனைகள், அனானிகளின் மிரட்டல்கள் எல்லாம் ஏறக்குறைய இன்று ஓய்ந்துவிட்டன. அடிக்கடி உயிர்த்துயிர்த்து அழைத்துக்கொண்டிருந்த தொலைபேசி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

ஆனந்த விகடன் நேர்காணல்:தன்னிலை விளக்கம்    
April 3, 2008, 1:27 pm | தலைப்புப் பக்கம்

“கருத்து வெளிப்பாட்டுக்கான சுதந்திரம் என்பது நாம் ஆதரிக்கும் கருத்துக்களுக்கான சுதந்திரம் மட்டுமல்ல. நம்மை அதிர்ச்சி அடையச் செய்யும் கருத்துக்களுக்கான சுதந்திரமும்கூட” –நோம் சோம்ஸ்கிஏப்ரல் 9,2008 எனத் திகதியிடப்பட்ட இவ்வார ஆனந்த விகடனில் எனது நேர்காணல் வெளிவந்திருந்தது. அதை வாசித்த எனது நண்பர்கள் அதிர்ச்சியடைந்திருக்கக்கூடும். அந்த அதிர்ச்சிக்கு நானும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

கோடை மழை    
March 27, 2008, 12:56 pm | தலைப்புப் பக்கம்

இரத்தம் உறிஞ்சிபளபளக்கும் உடலோடுகழன்றுவிழுகின்றன உறவட்டைகள்.எழுதுமேசையில்திகிலுறுத்தும் கட்டணக்காகிதங்கள்முதல்தேதியை முரசறைவித்தபடி...மண்டைக்குள்சிலந்திவலை படருமிக்காலம்வாக்குறுதி மீறுகிறேன்வாய்திறக்கவியலாத புத்தகங்களே!மன்னித்துவிடுங்கள்.கோடை தீங்கங்குகளோடு வருகிறதுஅறைச்சுவர்கள் அக்கினித்தகடுகள்நீ உவமித்தபடிஒரு அகதியின் கழிவிரக்கத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நான் ஒரு மநு விரோதன் - நூல் வெளியீட்டு விழா - பேசியதும் கேட்டதும்    
March 20, 2008, 4:19 pm | தலைப்புப் பக்கம்

ஆசிரியர்:ஆதவன் தீட்சண்யாதொகுப்பு:க.பிரகதீஸ்வரன்வெளியீடு: பூபாளம் புத்தகப் பண்ணைஐந்தரை மணியாகியும் அடங்காமல் வெயில் சுளீரிட்டுக்கொண்டிருந்த தெருக்களினூடே தேவநேயப் பாவாணர் நூலக அரங்குநோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது நேரமாகிவிட்டதே என்ற பதைப்பு மிகுந்திருந்தது. ஆறேகால் மணியளவில் அரங்கிற்குள் நுழைந்தபோது இருபத்தைந்து பேர்வரை ஆங்காங்கே சாவதானமாக...தொடர்ந்து படிக்கவும் »

என் விமர்சனம்    
March 8, 2008, 6:16 am | தலைப்புப் பக்கம்

உனது புத்தகத்தைத் தந்துபோகிறாய்சொல்விழிகளால் அதுஅண்ணாந்து பார்க்கிறது விமர்சனங்களுக்கும் இதயங்களுக்கும்இடையிலோர் பெருங்கடல்இருள் திரைகளில் தீட்டப்படும்பைசாச ஓவியங்கள்மதுச்சாலைகளில்கண்ணாடிக்குவளைகளை உயர்த்தி உரசிய ஒலிசில நாட்களில் மீள்ரீங்கரிக்கிறதுசஞ்சிகையொன்றில். அறிவாய் நண்ப!கடன்பட்டவர்களும்சில வார்த்தைகளுக்குக் கடமைப்பட்டவர்களே! விருந்தாட போன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஒரு இரவின் பதிவு    
March 6, 2008, 5:31 am | தலைப்புப் பக்கம்

கைவிடப்பட்டதான இந்த மனோநிலையை எழுத்தின் முதுகில் இறக்கிவிட முடியுமா என்று தெரியவில்லை. அதுவும் எத்தனைக்கென்றுதான் தாங்கும்? சுமைதாங்கவியலாமல் ஒருநாள் இடிந்து அமர்ந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. ‘என்னை விட்டுவிடுங்கள்’என்று கதறியபடி தெருவில் இறங்கி ஓடவாரம்பித்துவிட்டால் என்ன செய்வது? இன்றைக்கு ஏனிப்படித் துயரப்பனி பொழிகிறது? பல்கனியில் பிரம்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் வாழ்க்கை

சில மனிதர்கள்… சில ஞாபகங்கள்… - ஒன்று    
March 3, 2008, 2:12 pm | தலைப்புப் பக்கம்

அன்புள்ள உங்களுக்கு,எழுத்து புனைவுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு வேறெங்கோ சென்றுகொண்டிருப்பதான ஓருணர்வை அண்மைய வாசிப்புகளின்போது பெற்றுக்கொள்ள முடிகிறது. அது புனைவும் உண்மையும் கலந்து நெய்யப்பட்ட புதுவடிவாய் அழகுருக் காட்டுகிறது. முற்றிலும் கற்பனித்து எழுதுவதென்பது சுயவதையே! வார்த்தைகளின் பின்னால் கையேந்தியபடி நீண்டகாலத்திற்குத் திரியவியலாது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை வாழ்க்கை

கவிதைச் சுழி    
February 22, 2008, 5:54 am | தலைப்புப் பக்கம்

புனிதமென விதந்துரைக்கப்பட்ட யாவற்றின் மீதும் கேள்விகள் எழுகின்றன. அவற்றின் மீது படிந்திருந்த மாயப்புகை மெல்ல மெல்லக் கலைந்துசெல்கிறது. அதற்கிணங்க, எழுத்து என்பதும்கூட வாழ்வினை உயர்த்திப் பிடிப்பதற்காக எம்மால் கற்பிக்கப்பட்டிருக்கும் காரணங்களில் ஒன்றுதானோ… என்ற ஐயம் மிகுந்துவருகிறது. இத்தனைக்குள்ளும் கவிதையானது, மேற்குறித்த புறநிலை யதார்த்தத்தைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை இலக்கியம்

நதியின் ஆழத்தில்… -2    
February 10, 2008, 1:26 pm | தலைப்புப் பக்கம்

இடையமர்ந்த குடத்தினின்றுபுதுப்பெண்ணின் வெட்கமெனதெருவெல்லாம் தளும்பும்.சேலைநுனிவிரல்செல்லும் வழியெழுத நீர்க்கோலமாகும்.பொசிந்து வேரிறங்கிகரைமரத்தின் பசுந்துளிருள் புகுந்தோடி வெயில்மினுக்கில் பகட்டும்..பறித்துவைத்த பள்ளங்களில்காலிடறி விழுந்து வெயில் நக்க கானலெனும் பழிசுமந்துவீதிகளில் விளையாடித் திரியும்.ஊர்ந்துசெல்லும் ஊர்களின்மேல்சொட்டுமதன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

‘குற்றவுணர்வின் மொழி’: ஒரு கவிதை அனுபவம்    
January 16, 2008, 5:19 am | தலைப்புப் பக்கம்

ஒரு படைப்பை மதிப்பீடு செய்தல்,திறனாய்தல்,விமர்சித்தல்,பார்வை இப்படிப் பல பெயர்களாலாய செயல் எவ்வளவிற்குச் சாத்தியமுடையது என்பதில் எனக்குச் சந்தேகமிருக்கிறது. மேற்கண்ட வாக்கியம் கவிதையை முன்வைத்தே சொல்லப்பட்டது. ஏனெனில்,மிகவும் அகவயம்சார்ந்த மொழிவெளிப்பாடாகிய கவிதையை வாசித்து, அது நமக்குள் கடத்தும் அற்புதானுபவத்தைப் பெற்றுக்கொள்வதுடன் நிறுத்திக்கொள்வதே...தொடர்ந்து படிக்கவும் »

வார்த்தைகளுடன் வாழ்தல்    
December 28, 2007, 1:36 pm | தலைப்புப் பக்கம்

சிறுவயதிலிருந்து நாம் எத்தனை ஆயிரம் வார்த்தைகளோடு பரிச்சயம் கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்துப்பார்க்கும்போது அதிசயமாக இருக்கிறது. அவையெல்லாம் நாளாந்த வாழ்வில் பிரயோகிக்கப்படாமல் மனதின் ஆழத்தில் வாழ்ந்துகொண்டுதானிருக்கும். வாசிப்பவர்களின் மனம் என்பது ஏறக்குறைய ஒரு அகராதி போல. அல்லது சொற்களின் கிடங்கு எனலாம். யவனிகா ஸ்ரீராமின் வார்த்தைகளில் சொல்வதானால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

ஒரு கோடைகாலமும் நதி நடந்த சுவடுகளும்…    
December 7, 2007, 2:01 pm | தலைப்புப் பக்கம்

மூசியெறியும் மழையுடன் மல்லுக்கட்டி அதனைத் தான் செல்லும் திசையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

மேலும் சிலர் மற்றும் விடைபெறுதல்    
December 6, 2007, 3:29 pm | தலைப்புப் பக்கம்

'மறதி மறதி' என்பார்களே.... என்றாலும் இந்த அளவு மறதி இருக்கக்கூடாது என்று இன்று நினைத்துக்கொள்ளும்படியாக ஆகிவிட்டது. வேறொரு வேலையில் மூழ்கிக்கிடந்ததில் வலைச்சரத்தை மறந்துபோனேன். நல்லவேளையாக 'தயார்'ப்படுத்தி வைத்திருந்ததால் தப்பித்தேன்.தமிழ்மணத்தில் எழுத வந்த ஆரம்ப நாட்களில் தமிழில் தட்டச்ச மட்டுமே தெரிந்திருந்தது. அதுவும் பத்திரிகை வேலை வலிந்து திணித்த 'அறிவு'....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

எழுத்தென்னும் இசைமடியில்...    
December 6, 2007, 1:12 pm | தலைப்புப் பக்கம்

வலைச்சரத்தின் வாசகர்கள் யார் என்ற சிந்தனை இன்று எழுந்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

கடந்து செல்லவியலாத பெயர்கள்    
December 5, 2007, 5:35 am | தலைப்புப் பக்கம்

வாழ்வின் மீதான அயர்ச்சி பெருகுமொரு நாளில் இந்தப் பதிவினைத் தொடுகிறேன். மூளை செயலற்றுக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

ஆரத்தி    
November 18, 2007, 6:57 am | தலைப்புப் பக்கம்

பாரதி நெடுநேரமாக மேடையில் வலப்புறத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை கதை

வலைச்சரம் - கவிதைகளால் கவர்ந்தவர்கள்    
November 14, 2007, 6:30 am | தலைப்புப் பக்கம்

சொந்தமாய் கொஞ்சம் புலம்பிவிட்டுப் பதிவுக்குள் செல்லலாம் என எண்ணுகிறேன். புதிய வீட்டிற்கு இன்னமும் இணையத்தொடர்பு வரவில்லை. மழைபெய்த நரகத்தின் - மன்னிக்கவும்- நகரத்தின் வீதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

தீபாவளி(லி)    
November 9, 2007, 5:44 am | தலைப்புப் பக்கம்

தொடவியலாத உயரங்களை நோக்கி எய்யமுடிந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஒரு பாடல் முயற்சி    
October 30, 2007, 7:28 am | தலைப்புப் பக்கம்

உயிரோடு ஒருநாளும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கூட வராதவன்    
October 20, 2007, 5:30 am | தலைப்புப் பக்கம்

தண்டவாளத்தை விழுங்கி விழுங்கிஏப்பமிட்டு விரைகிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

காணாமற் போகும் அழகன்கள்    
October 14, 2007, 1:15 pm | தலைப்புப் பக்கம்

“விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்கள் கைது”...தொடர்ந்து படிக்கவும் »

அறியாமை எனும் அறிவு    
October 11, 2007, 6:24 am | தலைப்புப் பக்கம்

அகாலத்தில் என்னை வந்தடையும் குறுஞ்செய்திகள்இருளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை சமூகம்

லசந்தரா மலர்சொரியும் வீடு    
October 1, 2007, 2:30 am | தலைப்புப் பக்கம்

அந்நிய நிலத்திலிருந்து வந்தவர்களைகண்ணியமாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நோய்க்கூற்றின் கண்கள்    
September 29, 2007, 3:10 pm | தலைப்புப் பக்கம்

இதுவொரு சோதனை மீள்பதிவு“இறப்பதற்குத் தனியாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

மஞ்சள் வெயில் - வாசிப்பு அனுபவம்    
September 19, 2007, 1:38 pm | தலைப்புப் பக்கம்

நூலாசிரியர்: யூமா வாசுகிகாதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை புத்தகம்

பரவாயில்லை    
September 17, 2007, 5:28 am | தலைப்புப் பக்கம்

பசியில் சுருண்ட ஒரு மனிதனின்கடைசி உயிர்த்துளி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நினைவில் உதிக்கும் நிலவு    
August 31, 2007, 4:13 am | தலைப்புப் பக்கம்

வானம் இருண்டு கடல் மூடஇரைச்சலுடன் ஆர்த்துவரும் மழை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை


காதல் கவிதைப் போட்டி முடிவு    
July 16, 2007, 3:32 am | தலைப்புப் பக்கம்

நானும் கவிதை எழுதுவதாக நம்பும் நண்பர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருவதாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை


ஆண்மை    
July 6, 2007, 2:21 am | தலைப்புப் பக்கம்

ஊரே மெல்லுறக்கம் கொள்ளும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பேசப்படாதவள்    
June 21, 2007, 7:22 am | தலைப்புப் பக்கம்

பூக்கள் இறைந்த கனவின் வழியில்இதழ்பிரியச் சிரித்த முகம்விலக்கிஇருளுள் கரைகிறான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஒரு நாளும் இரண்டு அறைகளும்    
June 15, 2007, 7:14 am | தலைப்புப் பக்கம்

ஒரு கவிதையை வாசலிலேயே வழிமறித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை


சொல்லாத சொல்    
May 29, 2007, 6:01 am | தலைப்புப் பக்கம்

நமது உரையாடலின் முடிவுப்புள்ளியில்தொடங்குகிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நதியின் ஆழத்தில்…    
May 19, 2007, 2:21 pm | தலைப்புப் பக்கம்

நதியின் மேற்பரப்பில் பூக்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கவிஞர் நகுலன் நினைவாக...    
May 18, 2007, 4:09 am | தலைப்புப் பக்கம்

நகுலனின் படைப்புகளை அங்குமிங்குமாக வாசித்திருந்த நிலையில்,...தொடர்ந்து படிக்கவும் »

வெயில் எழுதியது…    
May 17, 2007, 3:29 am | தலைப்புப் பக்கம்

கூடுகையில் துணையிழந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எழுது இதற்கொரு பிரதி    
May 11, 2007, 3:50 am | தலைப்புப் பக்கம்

கறுப்பு மையால் அழித்தஉன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஒரு பயணம்… சில குறிப்புகள்…    
May 5, 2007, 1:45 pm | தலைப்புப் பக்கம்

துப்பாக்கி முனைகளின் சூடு ஆறும்வரை (அது இப்போதைக்கு ஆறாது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அனுபவம்மன்னிக்கப்படாதவளின் நாட்குறிப்பு    
April 27, 2007, 6:22 am | தலைப்புப் பக்கம்

வார்த்தைகளால் ஒரு கொலையைநிகழ்த்தி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை


அழகின் அழகு!    
April 11, 2007, 4:01 am | தலைப்புப் பக்கம்

இதன் பெயர் 'புதினம்'அழகு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

கற்பின் இருப்பு    
April 10, 2007, 5:43 am | தலைப்புப் பக்கம்

தொலைக்காட்சியை எதேச்சையாய் கடக்கையில்பண்பாடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சாத்தானின் கேள்வி    
April 9, 2007, 5:16 am | தலைப்புப் பக்கம்

ஒரு பௌர்ணமிநாளில்நீர்ப்பரப்பில் நிலவொளிபோலமெல்லப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நோய்க்கூற்றின் கண்கள்    
April 7, 2007, 6:08 am | தலைப்புப் பக்கம்

“இறப்பதற்குத் தனியாக காரணங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

தொலைவில் தெரியும் நீர்நிலைகள்    
March 15, 2007, 1:48 pm | தலைப்புப் பக்கம்

காலைக்குளிர் இன்னும் கொஞ்சம் படுத்திருக்கச் சொன்னது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பது வேறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை நபர்கள்

நன்றி: உதிரும் நட்சத்திரம்-தமிழ்நதி    
March 11, 2007, 2:08 pm | தலைப்புப் பக்கம்

கடந்த ஒரு வார காலமாக நட்சத்திர வெளிச்சத்தில் அமர்ந்து எனது பிரியத்திற்குரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்


வார்த்தைகளுடன் வாழ்தல்    
March 11, 2007, 9:38 am | தலைப்புப் பக்கம்

சிறுவயதிலிருந்து நாம் எத்தனை ஆயிரம் வார்த்தைகளோடு பரிச்சயம் கொண்டிருக்கிறோம் என்பதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

சுடும் சுடர்… சுடாத நட்சத்திரம்    
March 10, 2007, 4:50 am | தலைப்புப் பக்கம்

இந்தச் சுடர் சுற்றிச் சுற்றி வரும்போதே அது போகுமிடமெல்லாம் பயம் கலந்த...தொடர்ந்து படிக்கவும் »

கதை சொன்ன கதை    
March 10, 2007, 4:04 am | தலைப்புப் பக்கம்

எம் பேரு கதை… என்னை நானே அறிமுகப்படுத்தியும், பதிலுக்குச் சிரிக்காமப் போற ஆளுங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ஸி.கே.ஜானுவின் வாழ்க்கை வரலாறு: பாஸ்கரன்    
March 9, 2007, 3:51 am | தலைப்புப் பக்கம்

வாசிப்பு குறித்த பகிர்தல்ஜனநாயகம், சுதந்திரம், புரட்சி, மக்கள் சக்தி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

தமிழக சகோதரர்களுக்கு…    
March 8, 2007, 8:04 am | தலைப்புப் பக்கம்

‘நாங்களும் மனுசங்கதான்’முற்குறிப்பு: நட்சத்திர வாரத்துக்கும் இந்தப் பதிவுக்கும் தொடர்பில்லை.பொதுவில் சொந்தக் கதை… சோகக்கதை சொல்லி ‘ஜல்லியடிப்பதென்பதில்’எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அனுபவம் சமூகம்

பெண் எனும் ஞாபகம்    
March 8, 2007, 2:54 am | தலைப்புப் பக்கம்

சுதர்சன் எச்சில் தெறிக்க உரத்த குரலில் நெடுநேரமாகப் பேசிக்கொண்டிருந்தான்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம் பெண்கள்


நேர்காணல்: குட்டி ரேவதி- நிறைவுப்பகுதி    
March 7, 2007, 1:08 am | தலைப்புப் பக்கம்

சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட கவிஞர் குட்டி ரேவதி, பூனையைப் போல அலையும் வெளிச்சம்(2000),...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

ஓ கனடா…!    
March 6, 2007, 3:08 am | தலைப்புப் பக்கம்

உயர்தர வகுப்பில் புவியியல் படித்தவேளையில், கனடாவை நிறம் தீற்றிப் பிரித்தபோது, அது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் வாழ்க்கை

நேர்காணல்: கவிஞர் குட்டி ரேவதி    
March 6, 2007, 2:36 am | தலைப்புப் பக்கம்

பகுதி -2சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட கவிஞர் குட்டி ரேவதி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

நேர்காணல்: கவிஞர் குட்டி ரேவதி    
March 5, 2007, 3:24 am | தலைப்புப் பக்கம்

“கவிதை என்பது இலக்கியம் மட்டுமல்ல;அதுவொரு இயக்கமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் இலக்கியம்

பதேர் பாஞ்சாலி: துயரத்தின் பாடல்    
March 5, 2007, 3:16 am | தலைப்புப் பக்கம்

கவிதையொன்றை வாசிக்கிறோம். அதன் கவித்துவ மிக்க வரிகள் எம்மில் ஏதோவொரு வகையில் சலனத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வித்தைக்காரன்    
February 26, 2007, 2:31 am | தலைப்புப் பக்கம்

இளஞ்சிவப்பு மலர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நதியின் ஆழத்தில்…    
February 23, 2007, 7:17 am | தலைப்புப் பக்கம்

நதியின் மேற்பரப்பில் மிதந்துகொண்டிருக்கின்றனபூக்களும் சருகுகளும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

படம் காட்டுறாங்க…. படம்…!    
February 23, 2007, 3:39 am | தலைப்புப் பக்கம்

ஒருவர் தீபாராதனை காட்ட சாமி முகம் தெரிகிறது. அதனையடுத்து ‘எல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »

நீ… நான்… இவ்வுலகம்    
February 19, 2007, 2:12 pm | தலைப்புப் பக்கம்

நாமொரு புள்ளியில் சந்தித்துக்கொண்டோம்பிறகு எதிரெதிர் திசை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

புராணப் புனைவுகளும்...புண்பட்ட பெண்ணிலையும்    
February 18, 2007, 7:11 am | தலைப்புப் பக்கம்

கம்பர் இராமாயணத்தை எழுதினார். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும்...தொடர்ந்து படிக்கவும் »

சென்னை என்றொரு வேடந்தாங்கல்    
February 13, 2007, 1:58 pm | தலைப்புப் பக்கம்

இரண்டு மூன்று நாட்களாக வெயிலின் உக்கிரம் தணிந்திருக்கிறது. கடல் தாண்டிப்...தொடர்ந்து படிக்கவும் »

அந்த எசமாடன் கேக்கட்டும்    
February 5, 2007, 7:27 am | தலைப்புப் பக்கம்

அப்பலேர்ந்து அந்தக் கயவாணிப் பயபுள்ள ஒரு மாதிரியா என்னய உத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

இதுவும் ஒரு காதல் கதை    
February 3, 2007, 1:37 pm | தலைப்புப் பக்கம்

அவன்: நீ ஒரு ராட்சசி!அவள்: உனது தேவதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கதை கவிதை

இன்றொருநாள் எனினும்…    
January 30, 2007, 2:44 pm | தலைப்புப் பக்கம்

கண்ணாடிக் குவளையிலிருக்கும் உவகைசெந்நிறத்தில் சொட்டுச் சொட்டாக எனக்குள் பெருகி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வலை    
January 15, 2007, 2:25 pm | தலைப்புப் பக்கம்

என் பெயர் மதுவந்தி. முழுப்பெயரைச் சொல்லி அழைத்தால் வாய்நிறையும் என்று எனது தமிழாசிரியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை வாழ்க்கை