மாற்று! » பதிவர்கள்

தமிழ் சசி / Tamil SASI

செம்மொழி மாநாடு : தமிழறிஞர்களின் தமிழ் அரசியல்    
May 10, 2010, 7:05 pm | தலைப்புப் பக்கம்

மொழி என்பது மக்களின் வாழ்க்கையை எளிமையாக்கும் ஒரு கருவி. ஒருவரிடம் மற்றொருவர் உரையாடிக் கொள்வதில் தொடங்கி கருத்துக்களை படைப்புகளாக வடிவமைத்தல், பேச்சாற்றலைக் கொண்டு மக்களை ஈர்த்தல் என மொழியை வெறும் கருவியாக மட்டுமாக‌க் கூட‌ பார்க்கலாம். அதே நேரத்தில் மொழி ஒரு பண்பாட்டு தளத்தையும் உருவாக்குகிறது. அதனால் தான் ஆசியா முழுவதும் ஒரே மாதிரியாக தெரியும் பல்வேறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சமூகம்

ஈழப் போராட்டம் குறித்த என் நிலைப்பாடு, சில விளக்கங்கள்    
May 13, 2009, 2:32 am | தலைப்புப் பக்கம்

என்னுடைய கடந்த கட்டுரைக்கு வந்த விமர்சனங்கள், தனி மின்னஞ்சல்களில் சில நண்பர்கள் தெரிவித்து இருந்த கருத்துக்களைச் சார்ந்தே இந்த விளக்கங்களை கொடுக்க வேண்டிய தேவையுள்ளது. கடந்த சில மாதங்களாக மனதில் ஈழப் பிரச்சனை ஏற்படுத்திய வலியும், இயலாமையும் மட்டுமே என்னை அந்தப் பதிவு எழுத தூண்டவில்லை. கடந்த சில மாதங்களாகவே நண்பர்களுடன் இத்தகைய கருத்துக்களை பேசியும், எழுதியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

போதுமடா இந்த ஈழப் போராட்டம்    
May 10, 2009, 7:34 pm | தலைப்புப் பக்கம்

நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சிறீலங்கா அரசுக்கும் புலிகளுக்கும் நடக்கும் இந்த சண்டையில் கசாப்பு கடையில் கொல்லப்படும் ஆடுகளை விட கேவலமாக தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்தியா, சீனா மற்றும் உலக நாடுகளின் ஆதரவுடன் நடைபெறும் இந்தப் போரில் மனித உயிர்களுக்கு எந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

ஈழம் : இயலாமையின் வலி, மனதின் போராட்டம்    
April 29, 2009, 6:23 pm | தலைப்புப் பக்கம்

கடந்த சில மாத நிகழ்வுகள் ஈழ மக்களை வரலாறு காணாத கொடுமையான இனப்படுகொலைக்கு உள்ளாக்கியிருக்கிறது. உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் நிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாத சோகம் வாட்டுகிறது. தமிழக தமிழர்கள் அடைந்த வேதனைக்கு சாட்சியாக முத்துக்குமார் மற்றும் பலரின் தீக்குளிப்பு நிகழ்ந்து விட்டது.ஈழத்தமிழர்களின் மனநிலையை யாரும் வார்த்தைகளில் வடித்து விட முடியாது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

திராவிட அரசியலும், ஜெயலலிதாவிற்கான ஆதரவு ஓட்டும்    
April 26, 2009, 8:29 pm | தலைப்புப் பக்கம்

திமுக-காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற ரோசாவசந்த்தின் பதிவும், அதற்கு எதிர்வினையாக எழுதப்பட்ட ரவியின் (Voice on Wings) பதிவையும் சார்ந்ததே இந்தக் கட்டுரை.இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு செல்வதற்கு முன்பாக தமிழக அரசியல் வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டிய தேவை உள்ளது.இந்திய விடுதலைக்கு முன்பும் சரி, அதற்கு பின்பும் சரி தமிழக அரசியல் என்பது பார்பனீயம் சார்ந்த இந்திய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

ஒரு லட்சம் தமிழர்கள் கலந்து கொண்ட லண்டன் பேரணி    
April 11, 2009, 5:11 pm | தலைப்புப் பக்கம்

ஈழத்தில் நடக்கும் படுகொலைகளுக்கு எதிராக சுமார் ஒரு லட்சம் தமிழர்கள் இன்று லண்டனில் ஒரு மாபெரும் பேரணியை நடத்தினர்.பி.பி.சி. செய்திThousands on Tamil protest marchA hundred thousand protesters are marching through central London against Sri Lanka's offensive on the Tamil Tigers, according to police estimatesபுதினம் செய்திபிரித்தானியாவில் வரலாற்றுப் பேரணி: 150,000-க்கும் அதிகமான தமிழர்கள் அலையெனத் திரண்டு பேரெழுச்சிசிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலையையும் அனைத்துலக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

துப்பாக்கிகள் மீதான காதல்    
April 4, 2009, 9:38 pm | தலைப்புப் பக்கம்

துப்பாக்கிகள் போன்ற ஒரு கொடூரமான ஆயுதம் இந்த உலகத்தில் வேறு எதுவும் இருக்க முடியாது. உயிர்களை பறிக்கிறது என்பதற்காக மட்டும் அல்ல. துப்பாக்கி கையில் இருந்தால் ஒரு புது தைரியம் கிடைக்கிறது. அடுத்தவர்களின் சுதந்திரத்தையும், உரிமைகளையும் பறிக்கும் எண்ணமும்,ஆயுதங்கள் இல்லாதவர்களை தங்களை விட மிகக் கீழாக நினைக்கும் போக்கும் ஏற்பட்டு விடுகிறது. உலகின் பல இடங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தமிழக தேர்தல் கூட்டணி கணக்குகள், வியூகங்கள்    
March 26, 2009, 2:55 am | தலைப்புப் பக்கம்

தமிழக அரசியலில் தேர்தல் கூட்டணிகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. கூட்டணிகளில் எத்தனை இடங்கள், எந்த தொகுதிகள் என்பதில் இருக்கும் அக்கறையும், மந்திரிசபையில் போராடி சம்பாதிக்க கூடிய துறைகளை பெறுவதில் இருக்கும் கரிசனமும் தமிழக அரசியல்வாதிகளுக்கு மக்களின் பிரச்சனைகளுக்காகவோ, ஈழத்தில் அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழ் மக்களின் நிலைக்காகவோ ஏற்படுவதில்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

பேப்பர் வாங்கலையோ பேப்பர்    
March 24, 2009, 2:33 am | தலைப்புப் பக்கம்

இன்று ஊடகங்கள் மிகப் பெரிய வளர்ச்சி பெற்றிருக்கின்றன. உலகத்தின் எந்த இடத்தில் ஒரு சின்ன நிகழ்வு நடந்தால் கூட அது பலரையும் சென்றடையும் வழிகளை இன்று ஊடகங்கள் உருவாக்கி இருக்கின்றன. விஜய் கத்திய காட்டு கத்தல் அமெரிக்கா வரை யூடிப் மூலமாக எதிரொலிக்கிறது. தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களின் வருகைக்கு பிறகு ஊடகங்களின் வளர்ச்சி பன்மடங்கு அதிகரித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் ஊடகம்

தமிழ் பிரதமர் :-), பாஜக இனி மெல்ல அழியும்    
March 19, 2009, 3:19 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வந்து போகும் தேர்தல் திருவிழா காலம் இது. இந்த தேர்தல் காலங்களில் ஊடகங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உற்சாகமும், வேலையும் அதிகமாக இருக்கும். மக்களும் யார் யாருடன் சேர்வார்கள் ? தங்களுடைய தொகுதியில் யார் வெல்வார்கள் போன்ற விடயங்களில் ஆர்வம் காட்டுவார்கள். இந்த ஆர்வத்தை காசுக்கும் காரியத்தை ஊடகங்கள் கச்சிதமாக செய்யும்....தொடர்ந்து படிக்கவும் »

மாற்றம் : தமிழக அரசியல் தலைமையை மாற்றுவோம்    
February 23, 2009, 1:12 am | தலைப்புப் பக்கம்

இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தலுக்கு இன்னும் 100 நாட்களே உள்ளன. இந்த தேர்தல் தமிழர்களுக்கு ஒரு முக்கியமான தேர்தலாக அமையப் போகிறது. தமிழர்களுக்கு இது சோதனையான காலம். ஈழத்தில் இன அழிப்பு (Genocide) நடந்து கொண்டிருப்பது ஒரு பக்கம் என்றால் அதனை இந்திய/தமிழக அதிகாரமையங்கள் நேரடியாகவும்/மறைமுகமாகவும் ஆதரித்து கொண்டிருக்கும் சூழல் மற்றொரு புறம் உள்ளது.தமிழகம் எப்பொழுதுமே...தொடர்ந்து படிக்கவும் »

சத்யம் : பெயில் அவுட் அவசியமா ?    
January 13, 2009, 5:09 am | தலைப்புப் பக்கம்

சத்யம் நிறுவனத்தை இந்திய அரசு, அமெரிக்க பாணியில் Bailout செய்யக்கூடும் என்ற தகவலை இந்திய நடுவண் அரசின் வர்த்தக துறை அமைச்சர் கமல்நாத் வெளியிட்டிருக்கிறார் . இதனை கடுமையாக எதிர்க்க வேண்டும். அமெரிக்காவில் செய்யப்பட்டது போன்ற பெயில் அவுட் சத்யம் நிறுவனத்திற்கு பொருந்தாது. காரணம் அமெரிக்காவின் பொருளாதாரத்தையே சில நிறுவனங்களின் சரிவு கவிழ்த்து விடும் என்ற அச்சத்தால்...தொடர்ந்து படிக்கவும் »

ராமலிங்க ராஜூ கோவிந்தா, கோவிந்தா    
January 12, 2009, 2:45 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் பங்குச்சந்தையில் பங்குகளின் விலையை உயர்த்துவதற்காக நிறுவனங்களின் மதிப்பை உயர்த்தி, அதன் மூலம் முதலீட்டாளர்களின் பணத்தை "அமுக்கும்" செயல் ஒன்றும் புதிய விடயம் அல்ல. ஹர்ஷத் மேத்தாவின் ஊழல்களை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் சுசித்தா தலால் மற்றும் தேபசிஸ் பாசு எவ்வாறு பல நிறுவனங்கள் கூட்டணி அமைத்து பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களின் முதலீடுகளை...தொடர்ந்து படிக்கவும் »

கிளிநொச்சி போர் : ஒரு முடிவின் துவக்கம் ?    
January 2, 2009, 10:09 am | தலைப்புப் பக்கம்

முதல் பகுதி, இரண்டாம் பகுதி, மூன்றாவது பகுதி1996ம் ஆண்டு கிளிநொச்சியை சிறீலங்கா இராணுவம் கைபற்றியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1998ம் ஆண்டு கிளிநொச்சியை மறுபடியும் புலிகள் கைப்பற்றினர். கிளிநொச்சி மற்றும் பரந்தனை புலிகள் கைப்பற்றியது அவர்களை ஆனையிறவு வரை கொண்டு சென்றது. தற்பொழுது வரலாறு திரும்பி இருக்கிறது. பரந்தன், கிளிநொச்சி ஆகிய இரண்டு இடங்களையும் சிறீலங்கா...தொடர்ந்து படிக்கவும் »

கிளிநொச்சி போர் - ஒரு போரியல் பார்வை - 2    
December 22, 2008, 1:22 am | தலைப்புப் பக்கம்

முதல் பகுதி, இரண்டாம் பகுதிபோர் என்பது தற்காப்பு தாக்குதல் (Defensive), வலிந்த தாக்குதல் (Offensive), தந்திரோபாய பின்நகர்வு (Tactical Withdrawal), சுற்றி வளைப்பு (Flanking maneuver), Tactical Maneuver (தந்திரோபாய நகர்வு) என அனைத்தும் சேர்ந்ததது தான். போரில் ஒரு இராணுவம் இந்த அனைத்து வியூகங்களையும் ஒவ்வொரு கட்டத்திலும் கடைபிடிக்கவே செய்கிறது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு வியூகங்களை அமைக்கும் படையே போரில் வெற்றிகளை பெற...தொடர்ந்து படிக்கவும் »

கிளிநொச்சி போர் - ஒரு போரியல் பார்வை - 1    
December 20, 2008, 10:31 am | தலைப்புப் பக்கம்

முதல் பகுதி, இரண்டாம் பகுதிஈழத்திலே நான்காவது ஈழப் போர் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. தற்போதைய சூழலில் புலிகள் பலவீனமாக உள்ளனர் என்பதாக சிறீலங்கா அரசு கூறி வருகிறது. புலிகள் தங்கள் வசம் இருந்த பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை இழந்துள்ள சூழலில் இந்தக் கருத்தை பல போர் ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழர்கள், புலிகள் பலவீனமாக இல்லை, இது அவர்களின்...தொடர்ந்து படிக்கவும் »

சீமான் கைது, ராஜீவ் காந்தி, பேச்சுரிமை    
December 19, 2008, 4:40 pm | தலைப்புப் பக்கம்

தமிழகத்திலே யாரைப் பற்றி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு என யாரைப் பற்றி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். இந்திய ஜனநாயகம் அதனை தாங்கிக் கொள்ளும். இந்திய ஜனநாயகம் கொடுத்திருக்கிற அந்த அசாத்திய பேச்சுரிமை நம்மை புல்லரிக்க வைக்கும். ஆனால் ராஜீவ் காந்தியை மட்டும் "தமிழகத்தில்" விமர்சனம் செய்து விட முடியாது. உடனே தமிழகத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

காஷ்மீர் விடுதலைப் போராட்டமும், மும்பை பயங்கரவாத தாக்குதலும்...    
November 29, 2008, 10:49 pm | தலைப்புப் பக்கம்

மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை மையப்படுத்தி காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தினை சிதைக்கும் ஒரு பிரச்சாரத்தை ஹிந்து அடிப்படைவாதிகளும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் தற்பொழுது செய்து கொண்டிருக்கிறார்கள்.ஹிந்து அடிப்படைவாதிகளுக்கு இந்தியாவை ஒரு ஹிந்து தேசமாக அமைத்திருப்பதும், காஷ்மீர் மக்களின் நியாயமான விடுதலை கோரிக்கையை சிதைப்பதும் முக்கிய நோக்கமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இஸ்லாமிய அடிப்படைவாதமும், தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டமும்    
November 28, 2008, 4:14 am | தலைப்புப் பக்கம்

மும்பையில் இது வரை பார்த்திராத வண்ணம் மிகவும் கோரமான பயங்கரவாதச் செயல்களை பயங்கரவாதிகள் நிக்ழ்த்தியுள்ளனர். ஒபாமா அமெரிக்க குடியரசு தலைவராக பதவியேற்பதற்கு முன்பாக ஏதாவது பயங்கரவாதச் சம்பவத்தினை அல்கொய்தா நிகழ்த்தும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. அது போலவே அமெரிக்க, பிரிட்டிஷ், இஸ்ரேலியர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரயில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

இலங்கை தமிழர் போராட்ட க்ரைம் நாவல்    
November 24, 2008, 3:42 am | தலைப்புப் பக்கம்

சிறு வயதில் எனக்கு மிகவும் பிடித்த சரித்திர நாவல்கள் என்றால் அது சாண்டில்யன் மற்றும் கல்கியின் நாவல்கள் தான். அதுவும் சாண்டில்யன் நாவல்களை நெய்வேலி நூலகத்தில் முன்பதிவு செய்து படித்தது தனிக்கதை. சரித்திர நாவல்களை "உண்மையான வரலாறாகவே" கண்டு கொள்ளும் போக்கு தமிழக வாசகர் வட்டத்தில் இருந்து வந்துள்ளது. இன்றைக்கும் உள்ளது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை உண்மையான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

வாழ்த்துக்கள் ஒபாமா    
November 5, 2008, 5:26 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவின் முதல் கறுப்பர் இன ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒபாமாவிற்கு வாழ்த்துக்கள். மாற்றம் (CHANGE) என்ற அசைக்க முடியாத கோஷத்தை ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை மக்கள் மத்தியில் ஒபாமா முன்வைத்தார். அந்த மாற்றம் என்ற கோஷம் ஒபாமாவை வெற்றி பெற வைத்திருக்கிறது.கறுப்பர் இன மக்களின் உணர்ச்சிபூர்வமான உற்சாகத்துடன் அமெரிக்காவில் கொண்டாடங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஹிந்து ராமுக்கு மற்றொரு சிறீலங்கா விருது    
October 30, 2008, 3:13 am | தலைப்புப் பக்கம்

ஹிந்து ராம் தொடர்ச்சியாக சிறீலங்கா அரசுக்கும், சிங்கள மக்களுக்கும் ஹிந்து நாளிதழ் மூலம் செய்து வரும் சேவையை பாராட்டி மற்றொரு விருதினை சிறீலங்கா அரசு சார்ந்த NGO நிறுவனம் அளித்து இருக்கிறது. Sri Lanka Mass Media Society (a government-supported NGO to promote excellence in the media world) என்ற நிறுவனம்இதனை வழங்கியுள்ளது.சிறீலங்கா அரசு சார்ந்த ஒரு நிறுவனம் ஊடகங்களை பாராட்டி விருது வழங்குகிறதாம். புல்லரிக்கிறது. ஏன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

ஹிந்து நாளிதழை புறக்கணிப்போம்    
October 17, 2008, 5:21 am | தலைப்புப் பக்கம்

தமிழகத்தில் ஈழ மக்களுக்கு ஆதரவாக எழுந்துள்ள உணர்வுகளை ஹிந்து ஆசிரியர் என்.ராமால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் ஏற்பட்டுள்ள கடுமையான அஜீரண கோளாறு காரணமாக கருத்துச் சுதந்திரம் குறித்து எல்லாம் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். கருத்துச் சுதந்திரம் குறித்து யார் பேசுவது என்ற விவஸ்தை இல்லையா ? செய்திகளை கூட இருட்டடிப்பு செய்து வெளியிடும் ஹிந்து நாளிதழ் எல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

வெகுஜன செய்தி திரிப்பு    
August 19, 2008, 5:03 am | தலைப்புப் பக்கம்

வெகுஜன ஊடகங்களில் செய்திகள் எப்படி வெளியாகிறோ அதையொட்டி தான் வெகுஜன மக்கள் தங்கள் கருத்துக்களை வளர்த்துக் கொள்ள முடியும். செய்திகள் தணிக்கை செய்யப்படும் பொழுது வெகுஜன மக்களுக்கு அந்தச் செய்திகளைச் சார்ந்த பல கோணங்கள் மறுக்கப்படுகின்றன.ஜனநாயகத்தில் பத்திரிக்கைகள் செய்திகளை வெளியிடும் பொழுது அந்தச் செய்திகளை அப்படியே வெளியிட வேண்டும் என்பது பத்திரிக்கை மரபு....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

ஈழப் போராட்டம், இந்திய பூச்சாண்டிகள், விகடனின் Half-truth சர்வே...    
August 17, 2008, 5:27 am | தலைப்புப் பக்கம்

விடுதலைப் புலிகள் மற்றும் ஈழப் போராட்டம் குறித்த சமீபத்தைய விகடனின் கருத்து கணிப்பு பல காலங்களாக தமிழகத்தில் ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டிருந்த போலியான கருத்தாக்கத்தை தகர்த்து உள்ளது. ராஜீவ் படுகொலைக்கு பிறகு தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு எந்த ஆதரவும் இல்லை என்று இந்தியாவில் உள்ள ஊடகங்கள் தொடர்ந்து கூறி வந்ததை இந்த கருத்து கணிப்பு தகர்த்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் ஊடகம்

காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு என்ன ?    
August 15, 2008, 10:29 pm | தலைப்புப் பக்கம்

என்னுடைய கடந்த பதிவில் காஷ்மீரில் தற்பொழுது நடந்து வரும் பிரச்சனைகள் குறித்து எழுதினேன். காஷ்மீர் பிரச்சனைக்கு காஷ்மீரின் விடுதலை என்பது தீர்வா ? அப்படியெனில் இந்துக்களை அதிகம் கொண்ட ஜம்முவை காஷ்மீருக்கு அளித்து தனி நாடாக மாற்றலாமா என்பது போன்ற கேள்விகள் எழுப்பபட்டன. அதற்கு பதிலளிக்க தொடங்கி நீண்டு விட்டதால் தனிப் பதிவாகவே பதிவு செய்கிறேன்.காஷ்மீர் பிரச்சனை...தொடர்ந்து படிக்கவும் »

காஷ்மீரில் மீண்டும் விடுதலை முழக்கம்    
August 15, 2008, 1:32 am | தலைப்புப் பக்கம்

காஷ்மீரில் கடந்த சில வருடங்களாக அடங்கியிருந்த விடுதலை முழக்கம் மீண்டும் எழ தொடங்கியிருக்கிறது. இந்த வாரம் மட்டும் 20க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் போலீசாரின் துப்பாக்கி சூட்டிற்கு பலியாகியுள்ளனர். ஹூரியத் மாநாட்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஷேக் அப்துல் அஜீஸ் போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பல போலீஸ்...தொடர்ந்து படிக்கவும் »

ஒலிம்பிக் போட்டிக்காக வீடுகளில் இருந்து துரத்தப்பட்ட மக்கள்    
August 8, 2008, 3:35 am | தலைப்புப் பக்கம்

பீஜிங் ஒலிம்பிக் போட்டி இது வரை ஒலிம்பிக் வரலாற்றில் இல்லாத வகையில் மிக பிரமாண்டமாக நாளை துவங்குகிறது. இந்த ஒலிம்பிக் போட்டிக்காக சுமார் 40பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான பணத்தை சீனா செலவழித்திருக்கிறது. சிட்னி ஒலிம்பிக் போட்டிக்கு செலவழிக்கப்பட்ட தொகை 5 பில்லியன், ஏதன்ஸ் - 8.5 பில்லியன் மட்டுமே. கடந்த ஒலிம்பிக் போட்டிகளை விட பல மடங்கு அதிகமாக சீனா...தொடர்ந்து படிக்கவும் »

சென்னை, வீட்டு வாடகை, அணுசக்தி நாடகம்    
July 10, 2008, 4:00 am | தலைப்புப் பக்கம்

சென்னையை விட்டு அமெரிக்கா சென்று மூன்று ஆண்டுகளாகி விட்டது. மறுபடியும் இந்த விடுமுறையில் தான் முழுமையான சென்னைவாசியாகி இருக்கிறேன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையை பார்க்கும் பொழுது அச்சமாக இருக்கிறது. வீட்டு வாடகை உயர்வு, மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல் தட்டுபாடு, பெட்ரோல் நிலைய வாசல்களில் காணப்படும்...தொடர்ந்து படிக்கவும் »

பயங்கரவாதம், மதம், ஊடகம் : அனிதா பிரதாப்பின் உரை    
April 9, 2008, 12:19 am | தலைப்புப் பக்கம்

இலங்கையில் நடந்து வரும் ஆயுதப் போராட்டத்தையும், ஆப்கானிஸ்தானில் தாலிபன் அமைப்பினரின் அடக்குமுறையையும் களமுனைக்கு சென்று செய்தி சேகரித்தவர் அனிதா பிரதாப். இந்தியாவில் அனிதா பிரதாப் போன்று போர் முனைக்கு சென்று செய்தி சேகரித்த செய்தியாளர்கள் மிகவும் குறைவு. அதுவும் தற்போதைய இந்திய வெகுஜன ஊடகங்களில் அனிதா போன்ற பத்திரிக்கையாளர் எவரும் இல்லை என்பதை உறுதியாக சொல்ல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் ஊடகம்

போர் : மக்களுக்கு ஏற்படும் மன அழுத்தம்    
April 6, 2008, 9:04 pm | தலைப்புப் பக்கம்

போர் ஒரு சாமானிய மனிதனின் வாழ்க்கையை சிதைக்கிறது. அவனுடைய அன்றாட வாழ்வியலை கேள்விக்குறியாக்குகிறது. உயிருடன் அன்றைய பொழுதை கழிக்க முடியுமா என்ற கேள்வியுடன், தன்னைச் சார்ந்த குடும்பமும், சக மனிதர்களும் அடுத்த சில மணி நேரங்களுக்கு இருப்பார்களா அல்லது உயிரிழப்பார்களா என்ற நிலையற்ற தன்மையுடனும் வாழ்க்கையை நகர்த்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பெரும்பாலும் அதிகார...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் மனிதம்

தலாய்லாமாவுக்கும் ஒசாமா பின்லேடனுக்கும் என்ன தொடர்பு ?    
April 4, 2008, 2:34 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்கா, ஒசாமா பின்லேடனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை எவ்வாறு அமெரிக்க மக்கள் விரும்பமாட்டார்களோ அது போல தலாய்லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை சீன மக்கள் விரும்பமாட்டார்கள். எனவே சீனா தலாய்லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்.இது என் கருத்து அல்ல. தலாய்லாமா என்கிற அமைதியை விரும்புகிற தலைவருடன் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதியான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் ஊடகம்

திபெத் - இந்தியா, அகிம்சை ஜல்லி    
March 23, 2008, 11:01 pm | தலைப்புப் பக்கம்

அகிம்சை தத்துவத்தை இந்த உலகத்திற்கு முதன் முதலில் கொடுத்த நாடு இந்தியா. இந்தியாவில் தோன்றிய சமண மதமும், புத்த மதமும் வன்முறையற்ற வாழ்க்கையையும் அனைத்து உயிர்களும் சமமான நிலையில் வாழும் சூழலையும் போதித்தன. அகிம்சை குறித்த மத ரீதியிலான தத்துவங்களை புத்தர் தொடங்கி "வாடிய பயிரை கண்டபொழுதெல்லாம் வாடிய" ராமலிங்க வள்ளலார் வரை தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் பலர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் அரசியல்

ஹில்லரி Vs ஒபாமா : யார் சிறந்தவர் ?    
March 4, 2008, 3:23 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்க முன்னோட்ட தேர்தல் (Primary) கிட்டதட்ட இறுதி நிலைக்கு வந்துள்ளது. நாளை 4 முக்கிய மாநிலங்களில் நடக்கும் தேர்தல் குடியரசுக் கட்சியில் மெக்கெயினை குடியரசுக் கட்சியின் வேட்பாளாராக தேர்வு செய்யும். ஹக்கபீ தொடர்ந்து போட்டியில் இருந்தாலும், அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு சிறிதும் இல்லை. எனவே நாளை மெக்கெயின் 1,191 என்ற இலக்கினை பெறக்கூடும் என்றே தெரிகிறது.நாளை அனைவரின்...தொடர்ந்து படிக்கவும் »

ஜல்லிகட்டு தடையை ஏன் எதிர்க்க வேண்டும் ?    
January 13, 2008, 5:09 pm | தலைப்புப் பக்கம்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டுக்கு இந்தியாவின் உச்சநீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. இந்த ஆண்டு ஜல்லிகட்டு நடத்த முடியாத அளவுக்கு முழுமையான தடை என்பது அதிர்ச்சி அளிப்பது மட்டுமில்லாமல், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. இந்தியாவின் நீதிமன்றங்கள் எல்லா விடயங்களிலும் மூக்கை நுழைப்பதும், இந்தியாவில் நீதிபதிகளாக இருந்து விட்டால் பல நூறு வருடங்களாக...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு மணி நேரத்தில் திரட்டி செய்வது எப்படி ?    
December 24, 2007, 10:24 pm | தலைப்புப் பக்கம்

திரட்டி, தொழில்நுட்பம், Design என ஆளாளுக்கு பேசிக்கொண்டிருக்கும் பொழுது, நாமும் ஏதாவது பேசி தமிழ் இணைய தொழில்நுட்ப பிதாமகன் என்ற பட்டத்தை வாங்கிக்கொள்ளலாம் என்ற ஒரு சின்ன ஆசையில் திரட்டி செய்வது எப்படி என்பது குறித்து இங்கே எழுத இருக்கிறேன்.தமிழ் இணைய தொழில்நுட்பத்தில் பல நுட்பமான வேலைகளை ஆரம்பகாலங்களில் செய்து, வலைப்பதிவுகள் சுலபமாக பெருக காரணமாக இருந்த முகுந்த்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர் இணையம்

ஈழம் - தமிழகம் : தமிழக அரசியல் : கலைஞரின் ஈழ ஆதரவு    
November 23, 2007, 2:26 am | தலைப்புப் பக்கம்

தமிழ்ச்செல்வனின் படுகொலை, தமிழகத்தில் அதனால் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை எழுந்துள்ளதாக மிகைப்படுத்தும் ஈழ ஊடகங்கள், அப்படியான எந்த ஒரு உணர்வும் தமிழகத்தில் இல்லை என உண்மையை மூடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

தமிழ்ச்செல்வனின் மறைவு    
November 2, 2007, 5:23 pm | தலைப்புப் பக்கம்

புலிகளின் அரசியல் பிரிவு தலைவரும், சமாதான பேச்சு வார்த்தைகளில் புலிகளின் சார்பான குழுவின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

சிங்கள இனவெறி : பயங்கரவாதம் : ஹிலாரி    
October 24, 2007, 1:52 am | தலைப்புப் பக்கம்

அனுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது தாக்குதல் நடத்திய கரும்புலிகளின் உடல்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, அனுராதபுரம் வீதிகளில் கொண்டு சென்ற நிகழ்வு சிங்கள இனவெறியின்...தொடர்ந்து படிக்கவும் »

சேது சமுத்திர திட்டம் : Frequently Asked Questions    
October 9, 2007, 3:23 am | தலைப்புப் பக்கம்

சேது சமுத்திர திட்டம் குறித்து நான் வாசித்த வரையிலேயே எனக்கு தோன்றிய கேள்விகள், கிடைத்த பதில்கள் இவற்றை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். இந்தப் பிரச்சனை குறித்து எனக்கு புரிந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சேது சமுத்திரம் : சுற்றுப்புறச்சூழல்    
September 25, 2007, 10:03 pm | தலைப்புப் பக்கம்

சேது சமுத்திரம் திட்டம் குறித்த பொருளாதார வாய்ப்புகளை...தொடர்ந்து படிக்கவும் »

சேது சமுத்திரம் : பொருளாதார வாய்ப்புகள் : கலைஞரை ஏன் ஆதரிக்க வேண்டும் ...    
September 25, 2007, 3:17 am | தலைப்புப் பக்கம்

தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் தலைக்கு சங்பரிவார் "முட்டாள் கூட்டம்" தங்கக்காசுகளை விலையாக நிர்ணயித்து இருக்கின்ற கேலிக்கூத்தான நிகழ்வுகளும், தன்னுடைய ஓட்டு வங்கிக்காக அத்தகைய...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியா அமெரிக்காவின் கூட்டு கடற்படை போர் ஒத்திகை...    
September 4, 2007, 7:51 pm | தலைப்புப் பக்கம்

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இணைந்து வங்காள...தொடர்ந்து படிக்கவும் »

ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...    
August 19, 2007, 9:05 pm | தலைப்புப் பக்கம்

ஹிந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ? அவர் இந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் வரலாறு

காணாமல் போகும் தமிழர்கள்...    
August 12, 2007, 9:08 pm | தலைப்புப் பக்கம்

இலங்கையில் நடந்து வரும் இனப்பிரச்சனை கடந்த பல ஆண்டுகளை விட இப்பொழுது ஈழத்தமிழர்களை பலமாக தாக்கி வருகிறது. ஈழப் போராட்டத்தை முன்னெடுக்கும் "தமிழர்களை" கடத்திச் சென்று பிறகு கொல்லும்...தொடர்ந்து படிக்கவும் »