மாற்று! » பதிவர்கள்

ஜேகே - JK

ஒரு சாபம்! சில அதிர்வுகள்!    
June 22, 2009, 7:40 pm | தலைப்புப் பக்கம்

கவிஞர் தாமரையின் கவிதைச் “சாபம்” சில அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத் தமிழர்களில் பலர்(சிலர்?) கடந்த சில மாதங்களில் தமது தேசம் பற்றிய தீர்மானமான மறுபரிசீலனையை செய்யத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். அவர்களுக்கு இந்தச் சாபம் ஒரு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் இந்திய தேசியத்தில் நம்பிக்கை கொண்ட பலருக்கு இது...தொடர்ந்து படிக்கவும் »

உங்களுக்காக நாங்கள் போராடுவோம்    
May 18, 2009, 3:41 am | தலைப்புப் பக்கம்

சென்ற நூற்றாண்டின் இரத்தக்கறை நிறைந்த யூத இன அழிப்பு குரூரமானது. அதீதமான அறிவியல் மற்றும் திட்டமிடல் கொண்டு பல இலட்சம் யூதர்களை விச வாயு அறைகளில் ஹிட்லரின் நாஜிப்படை கொன்றது. கொல்லப்பட்டவர்களின் எல்லா உடைமைகளும் நாஜிக்களால் சூறையாடப்பட்டன. அவர்கள் கடைசியாக அணிந்திருந்த ஆடைகள் உட்பட. விச வாயுவால் இறந்த பிறகு அவர்களின் ஆடைகளை எளிதாக கழற்ற முடியாது என்பதற்காக, விச...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

தமிழனுக்கு உணவில்லை எனினும் சும்மா இருந்திடுவோம்    
May 5, 2009, 2:52 am | தலைப்புப் பக்கம்

இனிமேல் சாப்பிட எதுவுமே இல்லை எனும் அவலக்குரல் கொடுக்கிறர்கள் வன்னியில் உலகத்தால் சிறை பிடிக்கப்பட்டிருக்கும் சபிக்கப்பட்ட ஏழை மக்கள். அறிக்கைத் துண்டுகளின் மூலம் கூட ஆறுதல் அளிக்கத் தவறிய இவர்களா ”ஸோற்றுப் பார்சலை” விமானம் மூலம் போடப் போகிறார்கள். கண் முன்னே நடந்து கொண்டிருக்கும் இந்த அவலத்தை எப்படி ஜீரணிப்பது என்று தெரியவில்லை. அதற்குத் தேவையில்லாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

மக்களின் பேரெழுச்சியே இப்போதைய அவசரத் தேவை: சிறிதுங்கா ஜெயசூரியா    
February 15, 2009, 9:02 pm | தலைப்புப் பக்கம்

இலங்கையில் இன அழிப்புப் போரும் அதன் விளைவாக தமிழர்களின் மனித அவலமும் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் இந்த நிலையில், பெரும்பாலான சிங்களர்கள் போருக்கு ஆதரவாகவும், தமிழர்கள் தேசிய அபிலாசைகள் உலகத்திற்கே பெரிய இடரை விளைவிக்கும் என்கிற ரீதியிலும் தான் குரல் எழுப்பி வருகிறார்கள். சர்வதேச சமூகமும் ஏதோ சில தமிழ் ஆடுகள் இறந்து போகின்றன, அவற்றை கொடுமை செய்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

வேடிக்கை பார்க்கும் தமிழினமே....    
February 1, 2009, 6:16 am | தலைப்புப் பக்கம்

முத்துக் குமாரின் இறுதி ஊர்வலத்தில் எதிரொலித்த உணர்ச்சிப் பூர்வமான முழக்கங்கள் வலையுலகையும் தொடவேண்டுமென்பதற்காக நினைவிலிருந்த சில கீழேமுத்துக்குமாருக்கு...வீர வணக்கம், வீர வணக்கம்முத்துக்குமாருக்கு வீர வணக்கம்வீர வணக்கம், வீர வணக்கம்மாவீரன் முத்துக்குமாருக்குவீர வணக்கம் செய்கின்றோம்தமிழக அரசே தமிழக அரசேமுத்துக்குமாரின் தியாகத்திற்குநிதி வேண்டாம் நிதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

பலி தீர்த்த சோனியா...சோரம் போன தமிழர்கள்.    
January 27, 2009, 6:28 pm | தலைப்புப் பக்கம்

தனது கணவரை கொன்றதற்காக, புலிகளை மிகச் சாதுரியமாக சோனியா பலி தீர்த்துக் கொண்டிருக்கிறார். 40 தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவின் பேரில் அமைந்த அரசின் மூலமே இதைச் சாதித்திருக்கிறார் என்பது மலைப்பாக இருக்கிறது. தமிழக மக்கள், கூட்டணி அரசியல் தலைவர்கள், ஏன் புலிகள் கூட இதை கிஞ்சித்தும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மை.அமைதிப்படை/ராஜிவ் கொலை எனும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு பெருவாரியான ஆதரவு : இந்தியன் எக்ஸ்பிர...    
October 12, 2008, 1:30 pm | தலைப்புப் பக்கம்

இந்தியன் எக்ஸ்பிரஸ்/தினமணி குழுமம் நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் புலிகளுக்கு பெருவாரியான ஆதரவு இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்ட கேள்விகளும் அவற்றிற்கான பதில்களும் மிக ஆச்சரியமாகவும் இதுவரை ஊடகத்தால் சித்தரிக்கப்பட்ட நிலைக்கு முற்றிலும் மாறாகவும் உள்ளன.”பிரபாகரன் சுற்றி வளைக்கப்பட்டால்” என்ற கேள்விக்கு”நாம் அவரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்

குரோம் உலாவி    
September 2, 2008, 2:17 pm | தலைப்புப் பக்கம்

மைக்ரோசாப்ட்காரர்களுக்கு பெரிய அதிர்ச்சியுடன் விடிந்திருக்கும் இன்றைய தினம். மோசில்லா நிறுவனத்தின் நன்மக்களும் இந்த திடீர் தாக்குதலை எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். குரோம் எனும் வலை உலாவியை கூகிள் இன்று வெளியிடுவதாக அறிவித்திருக்கிறது. குரோம் பற்றிய செய்திகளை கூகிள் வித்தியாசமான முறையில் ஒரு காமிக்ஸ் கதை வடிவில் வெளியிட்டிருக்கிறார்கள்.குரோம் காமிக்சில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி இணையம்

2008 ஒலிம்பிக்கின் கதாநாயகர் (ஃபெல்ப்ஸ்/போல்ட் அல்ல)    
August 26, 2008, 1:53 pm | தலைப்புப் பக்கம்

இந்தியாவின் வழக்கமான ஒலிம்பிக் புலம்பல்களுக்கும் அப்பால் 3 பதக்கங்களுடன் இந்த முறை நாமெல்லாம் திருப்தியடைந்திருக்கிறோம். அபினவும், சுஷீலும், விஜேந்தரும் பதக்கங்கள் வென்ற போது தேசமே சந்தோசம் அடைந்தது என்பது மிகையாக இருக்காது. அந்த சூழலைத்தான் அப்கானிஸ்தான் தனது முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற தருணத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

Flip-Flop/அந்தர் பல்டி(குசேலன் மேட்டர் இல்லை)    
August 7, 2008, 7:02 pm | தலைப்புப் பக்கம்

இரத்தக் கறை தோய்ந்த பீஜிங் ஒலிம்பிக்கை ஆதரித்து ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் பங்கேற்க கூடாது என நடிகர் அமிர்கானுக்கு கோரிக்கை விடுத்து திறந்த மடல் எழுதினார் முன்னாள் இந்திய உளவுத்துறை முக்கியஸ்தர் பி இராமன்.I have been of the view that we should not help China in giving a great shine to the Games despite all that has been happening in Tibet, Sichuan, Gansu, Qinghai, Xinjiang and Inner Mongolia as if nothing has happened. A lot has happened in the Tibetan-inhabited areas of China. A lot of...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சோளகர் தொட்டி: வதையின் கதை    
August 3, 2008, 3:53 pm | தலைப்புப் பக்கம்

ச. பாலமுருகனின் இந்த நாவல் அன்மையில் படித்தவற்றில் என்னில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய ஒன்று. சமூக, கலாச்சார, அரசியல் ஏகாதிபத்தியத்தால் நாம் பாதிக்கப் பட்டவர்கள் மட்டுமல்ல, அந்த குற்றத்தை செய்தவர்களும் கூட என்பதை வருத்தத்துடன் உணரச் செய்கிறது இப்புதினம். "என் பெயராலும் இப்படி ஒரு அரச வன்முறை நிகழ்ந்திருக்கிறது" என நினைக்கும் பொழுது கூனிக் குறுக...தொடர்ந்து படிக்கவும் »

காதலற்ற கவிதை    
July 30, 2008, 6:48 pm | தலைப்புப் பக்கம்

நீ வன்முறைதெரிந்திருக்க நியாயமில்லைஎனக்கும்தான்முதலில்மழையின் நகக் கீறல்களுக்குஇறகற்ற சிறகுகள்ஆறுதல் அளித்த மற்றொரு சாதாரண நாளில்உன்னிடம் நான் தூதுவிட்ட மௌனச் சிதறள்களின்முகத்தில் அறைந்ததுஉன் வன்முறை விளிம்பில் நின்ற பிரளயம் நிரம்பியமனதின் தாங்கவொன்னாஉறுத்தல்உன்னிடம் அனுப்பியசொற் சிதறள்களைவெற்றிடத்தில் தெளித்தகனமெனக்கு உணர்த்திவிட்டதுஉன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

என்ன நடக்கிறது இங்கே    
July 1, 2008, 5:44 pm | தலைப்புப் பக்கம்

ஒரே நாளில் இவ்வளவு மோசமான செய்திகளா...என்ன நடக்கிறது இங்கே. மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தலைவர் பெருமக்களே! ஏதாவது செய்யுங்கள். சீக்கிரம்.1) தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் கடும் தட்டுப்பாடு. : என் வண்டியில் எண்ணை காலி. இன்று போட முடியவில்லை. நாளை அலுவலகம் செல்வது கேள்விக்குறிதான்2) நாடு முழுவதும் லாரி ஸ்ட்ரைக். இன்று நள்ளிரவு ஆரம்பம். காய்கறி விலை உயரும் அபாயம். :...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

போலந்து-ஆஷ்ச்விட்ச் சோகம் நிறைந்த குறிப்புகள்    
June 10, 2008, 6:03 pm | தலைப்புப் பக்கம்

ஆஷ்ச்விட்ச்(போலிஷ் மொழியில்: ஓஸ்விசியம்) : சில ஆண்டுகளுக்கு முன் நாஜிக்களின் யூத இன அழிப்பு பற்றிய "The Pianist", "Life is Beautiful", "Schindlers List", "Escape from Sobibor" படங்களை ஒரே மாதத்திற்குள் பார்க்க நேர்ந்தது. சோகத்தை ஃபிரேம், ஃபிரேமாக பிழிந்து இந்தப்படங்களில் அடைத்திருப்பார்களோ எனத்தோன்றும் அளவிற்கு துக்கத்தையும், துயரத்தையும் என் வீட்டின் அறைகளுக்குள்ளேயே கொணர்ந்து என்னை பாதித்தன இப்படங்கள். "The Diary of...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு மனிதம்

நெகிழும் சீனப் பெருஞ்சுவர்(வலைச்சுவர்)    
April 2, 2008, 12:18 pm | தலைப்புப் பக்கம்

என்ன ஆச்சரியம். சீனத்தின் வலைத்தடுப்புச்சுவர் நெகிழத் தொடங்கியிருக்கிறது. பல ஆண்டுகளாக முடக்கப்பட்டிருந்த BBC செய்தித்தளம் இப்பொழுது தெரிகிறது. சென்ற வாரம்கூட வலைப்பதிவுகளை படிக்க முடியவில்லை. blogspot மற்றும் wordpress முடக்கப்பட்டிருந்தது. அதையெல்லாவற்றையும் விட ஆச்சரியமானது விக்கியப்பீடியாவைக் கூட தடுத்திருந்தார்கள்.நேற்றுமுதல் வலைப்பதிவுகளை படிக்க முடிந்தது. இன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

திபெத் போராட்டங்கள்: இந்து நாளிதழ் மீது B Raman விமர்சனம்    
March 19, 2008, 6:07 pm | தலைப்புப் பக்கம்

இராணுவம், வெளியுறவு பற்றி கருத்துப்பத்திகள் எழுதும் முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி பி இராமன் தனது வலைப்பதிவில் இந்து நாளிதழை பெயர் சொல்லாமல் மிக காட்டமாக விமர்சித்துள்ளார். சமீபத்திய திபெத் போராட்டங்களைப் பற்றி, இந்து நாளிதழ் "சீன அரசாங்கப் பிரச்சாரத்"தனமான செய்திகளையே வெளியிட்டு வருகிறது. இந்துவின் சீன கம்யூனிச கட்சி சார்பு எல்லோரும் அறிந்ததே. தற்போதைய அதன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்