மாற்று! » பதிவர்கள்

சுரேஷ் கண்ணன்

நெல்சன் மண்டேலா நடித்த திரைப்படம்    
March 26, 2010, 8:44 am | தலைப்புப் பக்கம்

மேலே படத்திலுள்ளவர் யார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். அட! மார்கன் ப்ரீமேன்தானே என்று சொல்வீர்களேயானால் நீங்கள் இன்னும் INVICTUS திரைப்படத்தைப் பார்க்கவில்லை என்று அர்த்தம். இந்தத் திரைப்படத்தைப் பார்த்ததிலிருந்து மண்டேலாவின் உருவத்தில் மார்கன் ப்ரீமேனே என் மண்டைக்குள் பதிந்திருக்கிறார். பரவசமாக கூக்குரலிடும் ஜனத்திரளை நோக்கி கையசைப்பதாகட்டும், கடுமையான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஆஸ்கர் நாமினேஷன் - 3 (இன்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்)    
March 7, 2010, 11:06 am | தலைப்புப் பக்கம்

இந்த வரிசையில் மூன்றாவது திரைப்படம் Inglourious Basterds. 1978-ல் இதே பெயரில் வெளிவந்ததொரு இத்தாலியத் திரைப்படத்தின் தலைப்பால் கவரப்பட்டு அந்த பெயரையே சற்று மாற்றி உபயோகித்துக் கொண்டார் க்வெண்டின் டாரண்டினோ. இதற்கான விளக்கத்தை பத்திரிகையாளர்கள் கேட்ட போது முதலில் விளக்கமளிக்க மறுத்த அவர், பின்னர் நியோ-எக்ஸ்பிரசனிஸ ஒவியரான Jean-Michel Basquiat-ன் பாதிப்பில் இந்தத் தலைப்பில் மாற்றம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஊடகங்களின் விபச்சாரம்    
March 4, 2010, 7:36 am | தலைப்புப் பக்கம்

அன்று வீட்டுக்குத் தாமதமாகத்தான் திரும்பியதால் சமீபத்திய பரபரப்பான அந்த 'வீடியோக் காட்சிகள்' செய்தியில் ஒளிபரப்பாவது குறித்து எதுவும் தெரியாமல் உறங்கி விட்டேன். மறுநாள் காலை என்னுடைய ஒன்பது வயது மகள் தூங்கி எழுந்தவுடனே என்னிடம் கேட்ட கேள்வி "யாருப்பா அந்த ஆர் நடிகை?". எனக்குப் புரியவில்லை. முந்தைய நாள் மாலை பார்த்த அந்தச் சாமியார் செய்தியைக் குறிப்பிட்டு கேட்டாள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

லா ஸ்ராடா - துயரத்தின் காவியம்    
February 18, 2010, 8:48 am | தலைப்புப் பக்கம்

உலகத்தின் சிறந்த 10 திரைப்படங்களை பட்டியலிடச் சொன்னால் என்னால் தயக்கமேயின்றி 1954-ல் வெளிவந்த இத்தாலிய நியோ ரியலிச வகைத் திரைப்படமான 'லா ஸ்டிராடா'வைச் அதில் சேர்க்க முடியும். ரேவின் 'பதேர் பாஞ்சாலி' டிசிகாவின் 'பை சைக்கிள் தீவ்ஸ்' போல பார்வையாளனின் நெஞ்சில் ஒரு நீங்காத துயரத்தின் வடுவாக பதிந்து விடும் திரைப்படங்களின் வரிசையில் லா ஸ்டிராடாவிற்கும் முக்கிய பங்குண்டு....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அஞ்சுவண்ணம் தெரு    
February 3, 2010, 8:11 am | தலைப்புப் பக்கம்

தோப்பில் முஹம்மது மீரானின் இன்னுமொரு சுவாரசியமான புதினம்.நாஞ்சில் நாட்டின் பிரத்யேக வட்டார மொழியும் இசுலாமியச் சமூகப் பின்னணியில் இயங்குகிற காரணத்தால் ஆங்காங்கே இரைந்திருக்கிறஅரபிச் சொற்களும் வாசகனை ஒரு வேளை ஆரம்பத்தில் திணறடிக்கலாம். ஆனால் அது அதிகாலை குளிர் குளத்தில்  நீராடுவதைப் போலத்தான். மனதைத் திடப்படுத்தி முதல் முங்கை போட்டுவிட்டால் பிறகு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தமிழில் ஒரு ஹாலிவுட் சினிமா    
December 21, 2009, 2:14 am | தலைப்புப் பக்கம்

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் தலைப்பு சினிமா போஸ்டர்களிலும் பூஜைகளிலும் வெறும் சம்பிதாயத்திற்காக உபயோகப்படுத்தப்படும் வாக்கியமாக இருந்தாலும் நான் அந்த நோக்கில் அல்லாமல் அதன் மதிப்பை உணர்ந்தே குறிப்பிட்டிருக்கிறேன். சு.ரா. பாணியில் I mean, what i said. இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனின் திரைப்படமான 'கண்டு கொண்டேன்(2)-ல் ஒரு காட்சி வரும். படத்தின் நாயகன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பெரியார் திரைப்படத்திற்கு விருதா?.. அநியாயம்    
September 9, 2009, 2:24 pm | தலைப்புப் பக்கம்

2007 திரைப்படங்களுக்கான 55வது தேசியவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருதுப்பட்டியலின் கூடவே சர்ச்சைகளும் இருப்பது இயல்பான மரபு. தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான போட்டியில் ஷாரூக்கான் (chakde), அமீர்கான் (Taare zameen par), பிரகாஷ்ராஜ் (Kanchivaram) ஆகியோர் இறுதிக் கட்டத் தேர்வில் இருந்தார்கள் என்று கேள்விப்பட்டேன். இதில் ஷாரூக்கானுக்கும் பிரகாஷ்ராஜூக்கும் இடையில் போட்டி கடுமையாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சாரு, wikipedia, imdb, திரைவிமர்சனம்    
June 26, 2009, 2:16 pm | தலைப்புப் பக்கம்

இந்தப் பக்கத்தில் தன்னுடைய ஒரு சினிமா விமர்சனத்தில் குறை கண்டுபிடித்தவர்களின் மீது பாய்ந்து பிடுங்கிவிட்டார் சாருநிவேதிதா. சற்று அதீதம்தான். ஆனால் என்னால் இதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு சினிமாவை எப்படி நாம் உள்வாங்கிக் கொள்கிறோம் அல்லது எப்படி அனுபவிக்கிறோம் என்பதுதான் முக்கியமே ஒழிய அந்த அனுபவத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ளும் போது அதில் ஏற்படும் கருத்துப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சிறுபத்திரிகை எழுத்தாளனாக ஆக 10 சிறப்பு குறுக்கு வழிகள்    
June 24, 2009, 11:30 am | தலைப்புப் பக்கம்

1) 'மலைமொழிவேந்தன்', 'சிறுநகைக்கொன்றோன்' என்று யாருக்கும் புரியாத பெயரில் ஒரு முகமூடியை அணிந்து கொள்ள வேண்டும். யாராவது பெயர் விளக்கம் கேட்டால் சீறாப்புராணத்திலோ திருக்கழுக்குன்றத்திலோ (?) உள்ள ஒரு கதாபாத்திரம் தன்னை மிகவும் கவர்ந்ததாக ரீல் விடலாம்.2) கோணித்துணி பத்து மீட்டர் வாங்கி முழுக்கை சட்டை அணிந்து கொள்ள வேண்டும். ஒரம் கிழிந்த ஜோல்னாப்பை இருத்தல் நல்லது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சிறையில் அடைக்கப்பட்டிருந்த சூறாவளி    
June 23, 2009, 3:07 pm | தலைப்புப் பக்கம்

'தாமதமாக கிடைக்கப்பட்ட நீதி அநீதிக்குச் சமம்' என்பது இத் திரைப்படத்தின் சாரம். Rubin "Hurricane" Carter என்கிற குத்துச்சண்டை வீரரின் வாழ்க்கை வரலாறு 'The Hurricane' (1999) திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.அப்பாவியாக கருதப்படும் Rubin தன்னுடைய வாழ்க்கையின் 20 வருடங்களை சிறையில் கழித்ததின் காரணங்களில் ஒன்றாக 'நிறவெறி'யைச் சொல்லலாம். மனிதர்கள் இயற்கையில் எந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

'பட்டர்மில்க்'ன்னா மோரா?    
June 20, 2009, 5:15 am | தலைப்புப் பக்கம்

என் ஆங்கில அறிவு மிக மோசமாக இருந்த காலகட்டமது. இப்போதும் அப்படித்தான். ஆனால் கொஞ்சம் பரவாயில்லை. அப்போது நான் ஒரு மருந்து விற்பனையகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். வயது 20 இருக்கும். நான் பணியில் சேர்ந்த புதிதில் மருந்துச் சீட்டை யாரும் என்னிடம் கொடுக்க மாட்டார்கள். வயதில் இளையவனாக இருப்பதால் வந்த பயமா அல்லது காலனின் ஏஜெண்ட் மாதிரி தோற்றமளித்தேனோ, தெரியவில்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அற்புதமானதொரு ஆஸ்திரேலிய சினிமா    
June 17, 2009, 2:21 am | தலைப்புப் பக்கம்

ஆஸ்திரேலிய தத்துவவியல் அறிஞரான Raimond Gaita தனது தந்தையைப் பற்றிய நினைவலைகளை மையப்படுத்தி எழுதிய சுயசரித நூலான Romulus My Father 1988-ல் வெளிவந்தது. Victorian Premier's Literary Award, The Nettie Palmer Prize for Non-fiction போன்ற விருதுகளை இந்த நூல் பெற்றுள்ளது. இதன் திரைவடிவம் அதே பெயரில் 2007-ல் Richard Roxburgh-ல் இயக்கப்பட்டு வெளியானது. இந்தப் படம் முழுக்க முழுக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

திரைப்படத்தை பார்ப்பது எப்படி?    
April 6, 2009, 5:50 am | தலைப்புப் பக்கம்

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் 'நான் கடவுள்' படத்தின் இயக்குநர் பாலாவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. "இந்தப் படத்தை ரசிகர்களுடன் திரையரங்கில் கண்டு ரசித்தீர்களா? அந்த அனுபவம் எப்படி இருந்தது?". அதற்கு அவர் அளித்த பதில் மிக முக்கியமானதாக எனக்குத் தோன்றுகிறது. "பொதுவாக திரையரங்கில் திரைப்படங்களை நான் காண்பதில்லை. ஏனெனில் மக்கள் மிக அலட்சியமாக திரைப்படத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தோப்பில் முஹம்மது மீரானின் "துறைமுகம்"    
January 20, 2009, 3:26 pm | தலைப்புப் பக்கம்

துறைமுகம் - புதினம் - தோப்பில் முஹம்மது மீரான்அடையாளம் - பக்கம் 350 - விலை ரூ.175/-மீரான் தனது புதினங்களில் தொடர்ந்து உருவாக்கிக் காட்டிக் கொண்டிருக்கும் குமரி மாவட்டத்து கடற்கரை கிராம இசுலாமிய சமுதாயத்தினரின் காட்சிப்பரப்பு இந்தப் புதினத்திலும் தொடர்கிறது. சுதந்திர இந்தியாவிற்கு முன்பு நிகழும் களத்தின் பின்னணியில் மூட நம்பிக்கைகளை தங்களது மூளைகளில் அப்பிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

நூலகங்கள்... பதிப்பகங்கள்... அரசு...    
January 5, 2009, 9:26 am | தலைப்புப் பக்கம்

அரசின் பொது நூலகத்துறையின் அலட்சியத்தையும் பதிப்பகங்களின் பிரச்சினைகளையும் பற்றி பிரசன்னா சில விஷயங்களை வெளிப்படையானதொரு பதிவாக எழுதியிருக்கிறார். (காலச்சுவடு கட்டுரையை இன்னும் நான் படிக்கவில்லை). அரசின் எல்லாத்துறைகளையும் போலவே பொது நூலகத்துறையிலும் ஊழலும் பொறுப்பின்மையும் நிறைந்துள்ளது என்று இதை பொருட்படுத்தாமல் விட்டு விட முடியாது. பொறுப்பான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

நிர்வாணமாக நின்ற ஆசிரியர்கள்    
December 24, 2008, 12:51 pm | தலைப்புப் பக்கம்

மறுபடியும் ஒரு நீயா நானா நிகழ்ச்சியைப் பற்றி எழுத வேண்டுமா என்று தோன்றியது. என்றாலும் அதன் தீவிரம் காரணமாக இதை எழுதித்தான் ஆக வேண்டியிருக்கிறது. கடந்த வார நிகழச்சியில், 'ஆசிரியர்கள் தங்களின் போதிக்கும் திறனை அவ்வப்போது மேம்படுத்திக் கொள்கிறார்களா, அல்லது இருக்கிற குறைந்த பட்ச அறிவை வைத்துக் கொண்டு சமாளிக்கிறார்களா?' என்ற தலைப்பில் விவாதம் நிழந்தது. மாணவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

பா.ராகவனும் காக்டெய்ல் பரோட்டாவும்    
December 1, 2008, 7:12 am | தலைப்புப் பக்கம்

தமிழ்ப் புத்தக வாசிப்பாளர்களின் பொற்காலம் என்று இப்போதைய காலகட்டத்தை அழைக்கலாமோ (பதிப்பகங்களுக்கு பொற்காசுகளின் காலம் என்றும்) என்னுமளவிற்கு நவீன அச்சு நுட்பத்தின் உதவியோடு பல்வேறு தலைப்புகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் நான் ஓர் எழுத்தாளரின் குறிப்பிட்ட ஒரு சிறுகதைக்காக எங்கெங்கோ அலைந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

முற்போக்காளராக பாவனை செய்ய முப்பது வழிகள்    
November 21, 2008, 7:24 am | தலைப்புப் பக்கம்

ஒரு கணினியும் இணையத் தொடர்பும் இருந்தால் போதும், கண்ட கழிசடைகள் எல்லாம் (இருங்கள், இந்த ஆரம்பத்திற்கே சங்கடப்படாதீர்கள், இன்னும் நிறைய இருக்கிறது) வலைப்பூ ஆரம்பித்து எழுதித் தள்ளி இணைய எழுத்தாளர்கள் பன்றிக் குட்டிகள் போல் பெருகிவிட்டார்கள். இதன் நடுவிலே நாம் என்னதான் சிறந்த செய்திகளை சொந்தமாகவோ ஊடகங்களிலிருந்து நகல் செய்தோ பிரசுரித்தும் யாரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

மூத்திரம் முட்டும் நகைச்சுவை    
November 10, 2008, 6:15 am | தலைப்புப் பக்கம்

முந்தைய பதிவின் தொடர்ச்சி(2) The Party (1968)பிரபல பிரிட்டிஷ் நகைச்சுவை நடிகரான Peter Sellers, Hrundi V. Bakshi என்ற இந்திய நடிகராக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். ஹாலிவுட் தயாரிப்பாளர் தரும் விருந்தொன்றிற்கு பக்ஷி கலந்து கொள்வதும் அங்கு நடக்கும் கலாட்டாக்களும்தான் முழுப்படமும். விருந்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு பக்ஷிக்கு கிடைப்பதே விநோதமானதோர் நிகழ்வு. பீரியட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இயக்குநர் பாலா இதைப் பார்த்திருப்பாரா?    
November 8, 2008, 2:14 pm | தலைப்புப் பக்கம்

டைம்ஸ் ஆ·ப் இந்தியா நாளிதழின் வெள்ளி இணைப்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோடு சிறந்த படங்களின் dvd-ஐ பரிந்துரைப்பார்கள். கூடவே ஏதாவதொரு பிரபலமும் தனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். அப்படியாக இந்தி திரைப்பட மதூர் பண்டார்கர் சென்ற வாரம் பகிர்ந்து கொண்ட குறிப்புகளில் காணப்பட்ட திரைப்படங்கள் (1) Midnight Express (2) Peter Sellers-ன் The Party....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

எம்.ஜி.ஆரால் அடி வாங்கினேன்    
November 6, 2008, 9:38 am | தலைப்புப் பக்கம்

தங்கநகை போல் பழைய படங்களையும் பாலீஷ் செய்து மறுவெளியீடு செய்வது தற்போதைய பேஷன். Mughal-e-Azam வண்ணத்தில் வெளிவந்த போது அந்தப்படத்தின் ரசிகர்கள் அகமகிழந்து போனார்கள். அதே போல் எம்.ஜி.ஆரின் மன்னாதி மன்னன், அடிமைப் பெண் என்று ஆரம்பித்து சமீபத்திய 'உலகம் சுற்றும் வாலிபன்' வரையான மறுவெளியீடுகளும் வணிக ரீதியான வெற்றியைப் பெறுவதை கவனிக்கும் போது நாம் இன்னும் பழமையைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உடைந்த சிறகுகள் (இஸ்ரேல் திரைப்படம்)    
November 4, 2008, 7:20 am | தலைப்புப் பக்கம்

இப்ரூ (Hebrew) மொழியிலான இஸ்ரேல் நாட்டுத் திரைப்படம் (Broken Wings) ஒன்றை பார்த்தேன். (படம் வெளியான ஆண்டு 2002)ஆதியில் தனித்தனியாக திரிந்த மனிதஇனம் காலப்போக்கில் சிலபல காரணங்களுக்காக, வசதிகளுக்காக திருமணம், குடும்பம் போன்ற நிறுவனங்களை ஏற்படுத்திக் கொண்டது. இன்று நாம் பல மூதாதையர்களைக் கொண்ட குடும்ப அமைப்பின் உறுப்பினர்கள்தான் என்றாலும் ஒவ்வொரு மனிதனும் தனித்தனி தீவுகளே....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பாலுறவு பொம்மையும் ஒரு கூச்ச சுபாவியும்    
September 22, 2008, 1:24 pm | தலைப்புப் பக்கம்

டிவிட்டரில் சந்தோஷ்குரு இந்தப்படத்தைப் பற்றி குறிப்பிடும் போது அவரை அணுகி டோரண்ட் பைலைப் பெற்றேன். படத்தை தரவிறக்கி நீண்ட நாட்கள் வைத்திருந்து நேற்றிரவு சுமார் 11.30 மணிக்கு பார்க்க ஆரம்பித்தவன், மறுநாள் அலுவலகம் செல்ல வேண்டிய பதட்டத்துடன் தூக்கம் கண்ணைச் சுற்றியும் பாதியில் தொலைக்காட்சியை அணைக்க முடியாமல் முழுப்படத்தையும் பார்த்துவிட்டுத்தான் உறங்கப் போனேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மிஸ்டர் பொதுஜனமும் புதன்கிழமையும்    
September 13, 2008, 11:33 am | தலைப்புப் பக்கம்

இந்தியத் திரைப்படங்களுக்கே உரித்தான, கலவையான அம்சங்களுடன் கூடிய திரைக்கதையை தவிர்த்து நேர்கோடான திரைக்கதையைக் கொண்டு வரும் திரைப்படங்கள் மிக சொற்பமானது. அவ்வகையான படங்கள் தற்போது இந்திப்படவுலகில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இருமாதங்களுக்கு முன் Aamir என்கிற திரைப்படத்தைப் பார்த்தேன். அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிவரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சுப்பிரமணியபுரம் - பெருக்கெடுத்தோடும் துரோகம்    
August 5, 2008, 7:17 am | தலைப்புப் பக்கம்

சில வருடங்களுக்கு முன் மதுரையில் வாக்கிங் சென்ற ஒரு அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதும் அதன் பின்னணியில் ஒரு மூத்த அரசியல்வாதியின் மகன் இருந்ததாக பெரும்பான்மையோரால் நம்பப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதும் பின்னர் நீதிமன்றத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டதும் நமக்கு தெரியும். அவர்களின் பெயர்களை நம்மால் கூற முடியும். ஆனால் அந்தக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

குசேலனும் கொத்து பரோட்டாவும்    
July 31, 2008, 5:31 am | தலைப்புப் பக்கம்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ரஜனி பட வெளியீடு என்பதே ஒரு திருவிழாவாக மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டது. குசேலன் திரைப்படம் வரப்போகும் இந்த தருணமும் அவரது ரசிகர்களுக்கு உற்சாகமும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தக்கூடியது. கட்அவுட்களின் மீது பாலாபிஷேகம், படச்சுருளை வைத்து பூஜை, ஊர்வலம்... என்று எல்லா அபத்தமான சடங்குகளுக்கும் குறைவிருக்கப் போவதில்லை. ஆனால் தரம் என்கிற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

எழுத்தாளரின் மனைவி    
July 21, 2008, 6:22 am | தலைப்புப் பக்கம்

லோக்சபா சேனலில், கோவிந்த நிஹ்லானியின் 'Party' (1984) என்கிற திரைப்படத்தை காண நேர்ந்தது. இங்கே இயக்குநரைப் பற்றின சிறு அறிமுகம். கோவிந்த் நிஹ்லானி அடிப்படையில் ஒர் ஒளிப்பதிவுக்காரர். ஆரம்பக் காலங்களில் ஷியாம் பெனகல், க்ரீஷ் கர்னாட், ரிச்சர்ட் அட்டன்பரோ (காந்தி) போன்றோரோரின் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். பின்னர் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநராகின பிறகு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சுஜாதாவும் அசத்தலான ஒரு கொரிய திரைப்படமும்    
July 8, 2008, 12:26 pm | தலைப்புப் பக்கம்

"'வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தின் 'மூலப் படம்' இதுதான். பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்" என்று நண்பர் dvd ஒன்றை தந்தார். - Memories of Murder (2003) என்பது அந்த தென்கொரிய படத்தின் title. பூசணிக்காய் முகமும் இடுங்கிய கண்களுமாய், பிரதான வேடத்தில் நடிப்பவன் போல் தோன்றியவனின் முகத்தை குறுந்தகட்டின் மேலட்டையில் பார்த்த கணத்திலேயே எனக்குப் பிடிக்காமல் போனது. மிகவும் அசுவாரசியத்துடன், தூக்கம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கமலின் 'அபத்த' அவதாரம்    
July 2, 2008, 9:39 am | தலைப்புப் பக்கம்

இணையத்தில் ஏற்கெனவே இந்தப்படத்தை கிழித்து எறிந்தும், தூக்கிக் கொண்டாடியுமான பதிவுகளின் ஆரவாரங்கள் அடங்கின இந்தச் சமயத்தில் ஒரு அதிதாமத பதிவை எழுத என்னைத் தூண்டியது, chaos theory-ஆ, பெருமாளா, மன அரிப்பா, யாரோ, எந்த காரணமோ நானறியேன். நிறைய விமர்சனங்களைப் படித்த பின்பும் எந்த முன்தீர்மானமும் இல்லாமலிருக்க முயன்றுதான் இந்தப் படத்தை அணுகினேன். உண்மையில் இந்தப்படத்தைப் பற்றின...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கன்னிமையை இழக்காத நூலகம்    
June 26, 2008, 2:10 pm | தலைப்புப் பக்கம்

நீண்ட நாட்களாக கன்னிமரா நூலகத்திற்கு செல்ல திட்டமிருந்தது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இன்று அலுவலகப்பணிக்காக அந்தப்பக்கம் செல்ல வேண்டியிருந்ததால் திருப்பியளிக்க வேண்டிய புத்தகங்களை எடுத்துக் கொண்டேன். நூலகம் அமைந்திருக்கிற பகுதியிலேயே மியூசியம் அமைந்திருந்ததாலும் இதுவரை அங்கே போனதில்லை. மியூசியம் தியேட்டரில் அபூர்வமாக நடக்கும் நவீன நாடகங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

குருவியா, கரப்பான் பூச்சியா...?    
June 10, 2008, 12:23 pm | தலைப்புப் பக்கம்

தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறவர்களை உளவியல் மொழியில் "மஸோக்கிஸ்ட்" என்கிறார்கள். அப்படியொரு அனுபவத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுபவிக்க நேர்ந்தது. பள்ளி திறப்பதற்கு முன்னால் முடித்துவிட வேண்டிய நிபந்தனையுடன் என்னுடைய மகள் எனக்கு தந்திருந்த ஐந்து அம்சங்களில் திரைப்படத்திற்கு செல்வதும் ஒன்று. பள்ளித்திறப்பு நாளை சிறைத்தண்டனைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஜெயமோகன் - இளையராஜா விருது விழா    
April 24, 2008, 7:32 pm | தலைப்புப் பக்கம்

இளையராஜா இலக்கியப் பெருமன்றத்தின் பாவலர் விருது விழா, சரியாக என்றால் மிகச் சரியாக மாலை 04.00 மணிக்கு விழா ஆரம்பித்து விட்டது போலிருக்கிறது. வெயில் பட்டையைக் கிளப்பும் இப்போதைய பருவத்தில் 04.00 மணிக்கு இலக்கியக் கூட்டம் நடத்தும் யோசனை வந்த அமைப்பாளர்களை ஹோமோ கொரில்லா இருக்கிற கூண்டுக்குள் அடைத்துவிடலாம் என்றிருக்கிறது. பின்னே? அத்தனை வெயில். 'ஆரிய பவன்' என்றால் எளிதாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

பெண் குழந்தை..... இருவர்....... மாம்பழம்....    
April 19, 2008, 12:03 pm | தலைப்புப் பக்கம்

இன்று காலை செய்தித் தாள்களில் படித்தவொரு செய்தி என்னை மிகவும் பாதித்தது. சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் இரண்டு பெண்மணிகளுக்கு குறைந்த கால இடைவெளியில் ஆண் குழந்தை ஒன்றும் பெண் குழந்தை ஒன்றுமாக பிறந்தன. குழந்தைகள் அந்தந்த தாயாரிடம் ஒப்படைக்ப்பட்டன. ஆனால் இரவு ரவுண்ட்ஸ் வந்த மருத்துவர்கள் குழந்தைகள் மாற்றி ஒப்படைக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் திரைப்படம்

பெண் (நறுமண) வாசனையும் அல்பசினோவும்    
April 17, 2008, 1:09 pm | தலைப்புப் பக்கம்

இந்தப் பதிவு முழுவதும் அல்பசினோவின் புகழைப் பாடப் போகிறோனோ என்று என் மீது எனக்கே பயமாக இருக்கிறது. அந்தளவிற்கு இந்தப் படம் முழுவதும் (Scent of a Woman) ஒரு eccentric blindman பாத்திரத்தை மிகத் திறமையாகவும் அதே சமயத்தில் அநாயசமாகவும் வாரி இறைத்து விஸ்வரூபமெடுத்திருக்கிறார் Alpacino. நம் தமிழ்த் திரைப்படங்களில் கண்பார்வையற்ற பாத்திரம் என்றால்........... ஒரு கறுப்புக் கண்ணாடியை மாட்டிக் கொண்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Vantage Point - அசர வைத்த திரில்லர்    
April 14, 2008, 6:59 pm | தலைப்புப் பக்கம்

பொதுவாக எனக்கு ஆக்ஷன் படங்கள் பார்க்கப் பிடிக்கும். அதிலும் சுவாரசியமான, வேகமான திரைக்கதை என்றால் கதை பெரிதாக இல்லாததைதையும் மெலிதான லாஜிக் மீறல்களையும் கூட மன்னித்து பார்த்து மகிழ்வேன். ஷகிலா படமென்றாலும் கூட திரைக்கதை சுவாரசியமாக இல்லை என்றால் பிட்டுக்காக காத்திருக்காமல் எழுந்து சென்று விடுவேன். :-)vantage point-ன் குறுந்தகடு சரியாக இருக்கிறதா என்று சோதிப்பதற்காக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வந்து விட்டது சென்னை டைம்ஸ் ஆ·ப் இந்தியா    
April 14, 2008, 8:00 am | தலைப்புப் பக்கம்

"புள்ளிராஜா" யாரு? என்றொரு விஷயம் முன்னர் சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது. 'புள்ளி' வாக்கியத்தை கேட்டவுடன் சிலர் "கோலம்' போட்டு "இது ஆணுறைக்கான விளம்ரபமாகத்தான் இருக்கும் சார்" என்று கிளுகிளுப்பு ஜோசியம் சொல்லிக் கொண்டிருந்தனர். அதே போல் டைம்ஸ் ஆ·ப் இந்தியாவின் சென்னைப் பதிப்பையும் 'புலி வருது' பாணியில் சொல்லிக் கொண்டே இருந்ததில் இன்று வந்தே விட்டது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

வார்த்தை முதல் இதழ் குறித்து......    
April 10, 2008, 7:33 pm | தலைப்புப் பக்கம்

எனி இந்தியன் பதிப்பகத்தாரின் புதிய மாத இதழான 'வார்த்தை' குறித்து என்னுடைய வெளிப்படையான சில எண்ணங்களையும் / கருத்துக்களையும் / யோசனைகளையும் எழுத உத்தேசம். இலவச பல்பொடி பாக்கெட் வகையறாக்களுடன் வெளியாகும் வணிக இதழ்கள் வாசிப்பு பழக்கமுடைய குறுகிய எண்ணிக்கையைக் கொண்ட வாசகர்களிடையே பெரும்பான்மையாக கோலோச்சிக் கொண்டு, சூழலில் மாசை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இன்றைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

சத்யஜித்ரேவின் திரைப்படம் இன்றிரவு (01.03.08) 09.00 மணிக்கு    
March 1, 2008, 7:47 am | தலைப்புப் பக்கம்

இந்திய நேரப்படி இன்றிரவு 09.00 மணிக்கு "Lok Sabha" சேனலில் சத்யஜித்ரேவின் "Ganashatru" (ஜனசத்ரு) என்கிற வங்காளத்திரைப்படம் (with English sub-titles) விளம்பர இடைவேளைகளின்றி ஒளிபரப்பாகிறது. இது ஞாயிறு மதியம் 02.00 மணிக்கும் மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது. சமூகத்தின் மீது அக்கறை உள்ள மருத்துவர் ஒருவர், கோவில் ஒன்றில் பிரசாதமாக வழங்கப்படும் நீரின் மூலமாக மக்களுக்கு ஏற்படும் நோய்களையும் மரணங்களையும் பற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சுஜாதாவைப் பற்றி ஒரு எளிய வாசகனின் சில குறிப்புகள்    
February 28, 2008, 2:02 pm | தலைப்புப் பக்கம்

இதை கட்டுரை என்று சொல்ல எனக்குத் தயக்கமாக இருக்கிறது. ரங்கராஜன் என்கிற எளிய எழுத்தாளரை நான் கடந்து சென்ற தருணங்களைப் பற்றி என்னுடனேயே நான் நிகழ்த்திக் கொண்ட ஒரு அந்தரங்கமான உரையாடலின் பூர்த்தியடையாத பிரதியிது. நிச்சயம் கோர்வையாக இருக்காது. என்றாலும் எந்தவித ஒப்பனையும் பாசாங்குமின்றி பதிய முயன்றிருக்கிறேன். நான் வலைப்பக்கத்தில் எழுதி எனக்கே மறந்து போன சில வரிகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் அனுபவம்

ஆசான் சுஜாதாவிற்கு அஞ்சலி    
February 27, 2008, 5:47 pm | தலைப்புப் பக்கம்

பொதுவாக மரணச் செய்திகளை இயல்பு குலையாத நிலையுடனேயே எதிர்கொள்ளும் மனத்திறம் என்னுடைய பதின்ம வயதிலிருந்தே ஏனோ எனக்கு வாய்த்திருந்தது. யாருடைய மரணமும் என்னை முற்றிலுமாக தடுமாறவைக்கவில்லை, என் தந்தையின் மரணம் உட்பட. ஏற்கெனவே எதிர்பார்த்திருந்ததுதான் என்றாலும் எழுத்தாளர் சுஜாதாவின் மரணம் குறித்த பிரசன்னாவின் குறுஞ்செய்தி வந்த போது பாசாங்கின்றி உண்மையிலேயே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

எஸ்.ராமகிருஷ்ணனின் புதிய இணையத்தளம்    
February 15, 2008, 9:14 am | தலைப்புப் பக்கம்

தமிழ் இலக்கியத்தின் நவீன எழுத்தாளர்களுள் மிக முக்கியமானவர்களுள் ஒருவரான எஸ்.ரா என்று அறியப்படும் எஸ்.ராமகிருஷ்ணன், தனது படைப்புகளுக்கென்று பிரத்யேக ஒரு இணையத்தளத்தை துவக்கியுள்ளார். அவரின் சிறுகதைகள், நேர்காணல்கள், உலக சினிமா கட்டுரைகள், அனுபவங்களைத் தவிர சமகால நிகழ்வுகளைப் பற்றிய அவரது கருத்துக்களும் உடனுக்குடன் வெளியாகும் என்று தெரிகிறது.இணைய முகவரி:...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

பத்து குறும்படங்கள் இணைக்கப்பட்ட ஒரு திரைப்படம்    
February 13, 2008, 4:24 am | தலைப்புப் பக்கம்

தமிழ்த் திரைப்படங்களில் பரிசோதனை முயற்சி என்ற அளவில் உருவாக்கப்பட்ட படைப்புகள் சொற்பமே. அகிரா குரோசாவின் 'ரஷோமான்' பாதிப்பில் வந்த 'அந்த நாள்', (பாடல்களே இல்லாமல் வந்த படம் என்கிற வகையிலும் இதை சேர்க்கலாம்), ஒரு பொம்மையைச் சுற்றி நிகழ்வுகள் பின்னப்பட்ட எஸ்.பாலச்சந்தரின் 'பொம்மை, மருத்துவமனைக் களத்திலேயே முழுத் திரைப்படமும் சுற்றுகிற ஸ்ரீதரின் 'நெஞ்சில் ஓர் ஆலயம்',...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

'நான் வித்யா' - புத்தகப்பார்வை - இறுதிப் பகுதி    
February 5, 2008, 9:05 am | தலைப்புப் பக்கம்

பகுதி 1 | பகுதி 2 திரும்பவும் பிச்சை எடுக்கச் சென்றது குறித்து வித்யாவிற்கு வேதனையாக இருந்தது. 'எங்காவது வேலை செய்யலாம்' என்று முடிவு செய்து தனது ஊருக்கு திரும்ப முடிவு செய்கின்றார். ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல. 'நிர்வாணம்' நடந்த மற்றும் உடம்பு தேறுவதற்கான காலம் முழுதும் மூத்த திருநங்கைகளே பணம் செலவு செய்கின்றனர், எப்படியும் பின்னால் வரப்போகிறதென்று. எனவே அவர்களுக்குத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

டைம்ஸ் ஆ·ப் இந்தியா - சுஜாதா - இலக்கியச் சிறப்பிதழ்    
January 23, 2008, 6:58 am | தலைப்புப் பக்கம்

பாரம்பரியம் மிக்க நாளிதழான Times of India, (நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு கொண்டிருந்த இதன் 'சென்னை பதிப்பு' வரும் ஏப்ரலில் இருந்து வரும் என்கிறார்கள்) தமிழில் எழுத்தாளர் சுஜாதாவை தொகுப்பாசிரியராகக் கொண்டு இலக்கியச் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு 'இந்தியா டுடே'வும் வருடத்துக்கு ஒரு முறை இவ்வாறான இலக்கியச் சிறப்பிதழ்களை வெளியிட்டுக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

'நான் வித்யா' - புத்தகப்பார்வை (பகுதி -2)    
January 18, 2008, 2:44 am | தலைப்புப் பக்கம்

முந்தைய பதிவின் தொடர்ச்சிவந்தாரை வாழ வைக்கும்/மனிதத்தை சாகடிக்கும் சென்னை. நண்பர் ஒருவரின் உதவியுடன் இருக்க இடம் தேடுவதற்கான போராட்டம். திருநங்கைகளுக்கான பல தொண்டு நிறுவனங்களை அணுகுகிறார் வித்யா. திருநங்கைகளான அவர்களிடமிருந்தே கூரைக்குப் பதிலாக அறிவுரைதான் கிடைக்கிறது, ஆணாக இருந்து கொண்டே படிப்பை தொடரச் சொல்லி. ()..... படிப்பு, சமுகம், நாலு பேர் பேசும் பேச்சுக்கள்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம் வாழ்க்கை

ஒரு திருநங்கையின் வலிமிகுந்த வாழ்க்கை    
January 17, 2008, 3:32 am | தலைப்புப் பக்கம்

(பகுதி 1) நான் வித்யா - 'லிவிங் ஸ்மைல் வித்யா - கிழக்கு பதிப்பகம் - 216 பக்கங்கள் - விலை ரூ.100/-'ஒம்போது', 'பொட்டை', 'அலி' - இவ்வாறாக திருநங்கைகள் (Transgenders) குறித்து பொதுப்புத்தியுடன் அணுகுகிற மனோபாவம்தான் எனக்கும் ஒரு காலகட்டத்தில் இருந்தது. சிறுவயதில் என் அம்மாவுடன் அசைவம் வாங்குவதற்காக மீன்கள் விற்கும் கடைகளுக்கு செல்ல நேர்ந்த போதுதான் நான் முதன்முதலில் 'ஒருவரை' பார்க்க நேர்ந்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

நானும் புத்தகக் கண்காட்சியும் சில எழுத்தாளர்களும்    
January 15, 2008, 4:49 am | தலைப்புப் பக்கம்

இரண்டு மூன்று நாட்களாக கை நடுக்கம் கொண்டிருந்தது. போதைப் பொருள் உபயோகிப்பாளன் அதிலிருந்து விடுபடுவதற்கான முயற்சியின் ஆரம்ப நிலை போல் உணர்ந்தேன். இந்த வருடம் புத்தக கண்காட்சிக்கு போகவே கூடாது / எந்தப் புத்தகத்தையும் வாங்கக்கூடாது என்று முடிவு செய்ததிலிருந்து, மறுபுறம் சென்றே ஆக வேண்டும் என்று என் ஆல்டர் ஈகோ எனக்கு உத்தரவு பிறப்பித்துக் கொண்டேயிருந்தது. 'சரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

இரண்டு செருப்படிகள்    
January 4, 2008, 8:39 am | தலைப்புப் பக்கம்

சில செய்திகளைப் பற்றி அறிய வரும் போதோ, எங்காவது காணும் போதோ, அனுபவப்பூர்வமாக உணரும் போதோ அது இதயத்தின் மீது செலுத்தப்படும் அட்லிரின் மருந்து போல நேரடியாக உடனே நம்மை பாதிக்கும். கொச்சையான மொழியில் சொன்னால்.. யாரோ நம் முகத்தில் செருப்பால் அடித்தது மாதிரி இருக்கும். அம்மாதிரி சமீபத்தில் நான் உணர்ந்த தருணங்களைப் பற்றி இங்கே பகிர உத்தேசம். 'நதியின் கரையில்' என்றொரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை மனிதம்

புத்தகங்களும்... கண்காட்சியும்... சுயபுலம்பலும்...    
December 29, 2007, 2:12 am | தலைப்புப் பக்கம்

நடைபெறவிருக்கும் புத்தக கண்காட்சியை முன்னிட்டு புதிதாக வெளியிடப்பட்டுள்ள/படவுள்ள புத்தகங்களில் என் கண்ணில் பட்ட/கவனத்தை கவர்ந்த புத்தகங்களை - யாருக்காவது பயன்படும் என்கிற எண்ணத்தில் - இங்கே பகிர்ந்து கொள்ள உத்தேசம். 1) காந்திஜியின் இறுதி 200 நாட்கள் - (மொழிபெயர்ப்பு நூல்) - பாரதி புத்தகாலயம்2) பகத்சிங் பற்றிய முழுமையான பதிப்பு - பாரதி புத்தகாலயம்3) அமெரிக்காவின் உலகளாவிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

ஒரு சைக்கிளும் இரண்டு சிறுவர்களும்    
December 25, 2007, 4:14 pm | தலைப்புப் பக்கம்

Beijing Bicycle (2001)சுமார் 12 வயதாக இருந்த போது இரண்டு ரூபாய் ஒன்றை ஒரு அந்நியனிடம் திருட்டு கொடுத்ததை உணர்ந்த தருணத்தில் எனக்கு ஏற்பட்ட பதைபதைப்பும், பயமும், ஏமாற்றப்பட்ட கோபமும், திருடியவனை தப்பிக்கவிட்ட ஏமாற்றமும் ஒன்றுசேர்ந்த கலவையான உணர்ச்சி இன்னமும் என் மூளை நரம்புகளில் பத்திரமாக பொதிந்திருக்கிறது. வெற்றிகரமாக திருடுவதில் உள்ள சந்தோஷத்தை விட திருட்டுக் கொடுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உலக சினிமா ஒன்றை காண வேண்டுமா?    
December 25, 2007, 8:38 am | தலைப்புப் பக்கம்

உங்களில் பெரும்பாலோரைப் போல எனக்கும் கலைப்படம் என்றழைக்கப்படும் artfilm மீது ஒவ்வாமை இருந்ததுண்டு. 'ஒரு ஆள் பீடி பிடித்துக் கொண்டிருப்பதை அரை மணி நேரமும் ஒண்ணுக்கு போவதை கால் மணி நேரமும் காட்டிக் கொண்டிருப்பார்கள்' என்று நானும் நண்பர்களுடன் பேசிச் சிரித்திருக்கிறேன், சத்யஜித்ரேவின் படங்களை தொலைக்காட்சியில் - என்னுடைய இருபதாவது வயதில் - காணும்வரை. அதில் 'பதேர் பாஞ்சாலி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Nayak (1966) - Satyajit Ray    
December 14, 2007, 6:30 am | தலைப்புப் பக்கம்

ஒரு நடிகரின் அக, புறச் சிக்கல்களை இவ்வளவு கூர்மையாக, நெருக்கமாக அவதானித்த திரைப்படத்தை இதுவரை நான் கண்டதில்லை. சத்யஜித்ரே என்கிற திரைப்பட மேதையால் இது சாத்தியமாகியிருக்கிறது. திரைப்பட உலகை, அதன் மாந்தர்களை சித்தரித்து தயாரிக்கப்பட்ட படங்கள் வெகு சொற்பமே. தமிழ்த்திரைப்பட உலகில், இவ்வாறு எடுக்கப்படும் படங்கள் 'சென்டிமென்ட்டுக்கு' எதிரானதாகவே கருதப்படுகிறது, அவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

எவனோ ஒருவன் - திரைப்பார்வை    
December 9, 2007, 4:52 am | தலைப்புப் பக்கம்

'கல்லூரி' திரைப்படத்திற்கு போவதென்று முடிவாயிற்று. வழக்கமாக நான் திரைப்படங்களை வந்த புதிதில் பார்க்க விரும்புவதில்லை. அதன் ஆரவாரங்கள் அடங்கும் வரை காத்திருப்பேன். குடும்பத்தினரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பொல்லாதவன் - திரைப்பார்வை    
December 7, 2007, 2:25 am | தலைப்புப் பக்கம்

முதலில் இயக்குநர் வெற்றி மாறனுக்கு ஒரு பூச்செண்டு. வணிக வெற்றியையே பிரதான நோக்கமாக கொண்ட படங்கள், "சக்ஸஸ் பார்முலா" என்ற பெயரில் பரிசோதனை முயற்சி செய்யத் துணிவில்லாமல் அரைத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

லா.ச.ரா ஓர் ஆமை...    
December 3, 2007, 11:47 am | தலைப்புப் பக்கம்

லா.ச.ரா இறந்து போனதாக அறிந்து கொண்ட போது எனக்கு அதிர்ச்சியாகவெல்லாம் இல்லை. வயதான, நோயின் வாதையில் துயருற்றுக் கொண்டிருந்த "எப்ப வேணா செய்தி வரும்" என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

கால் மீது கால் போட்டதற்காக குஷ்பு மீது வழக்கு    
November 28, 2007, 12:52 pm | தலைப்புப் பக்கம்

நடிகர் பார்த்திபன் நடிக்கும் 'வல்லமை தாராயோ' என்கிற படத்திற்கான பூஜை சென்னையில் நடந்தது. பூஜைக்காக அருகில் பெரிய அளவில் முப்பெரும் தேவியர் சிலை வைக்கப்பட்டிருந்தது. அதில் நடிகை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

TSOTSI - ஓரு வன்முறையாளனின் குழந்தைமை    
November 26, 2007, 12:53 pm | தலைப்புப் பக்கம்

சவுத் ஆப்ரிக்கா திரைப்படம் (2005) ஒன்றை சமீபத்தில் காண நேரிட்டது. எல்லா மனிதர்க்குள்ளும் கடவுளும் சாத்தானும் இருப்பார்கள். சதவிகிதம்தான் வெவ்வேறு அளவில் இருக்கும். நூறு சதவிகித...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்    
November 22, 2007, 1:55 pm | தலைப்புப் பக்கம்

நண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற்படுத்தின படம் போகப்போக தீவிர வேகமாகி பட இறுதியின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கற்றது தமிழ் திரைப்படத்தின் இயக்குநர் ராமின் பேட்டி    
October 31, 2007, 1:39 pm | தலைப்புப் பக்கம்

எண்பது, தொண்ணூறுகளில் எஸ்.பி.முத்துராமன்களும், ஜெகன்னாதன்களும் வணிகப்படங்களை கொளுத்திப் போட்டுக் கொண்டேயிருக்க, மகேந்திரன், பாலுமகேந்திரா வகையறாக்களிடமிருந்து வெளிப்படும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சத்தம் போடாதே - திரைப்பார்வை    
September 21, 2007, 6:52 am | தலைப்புப் பக்கம்

ஒரு தமிழ் திரைப்படத்தின் உரையாடலில் 'அசோகமித்திரன், சுந்தரராமசாமி' போன்ற பெயர்கள் அடிபட்டால் (!) அந்தப்படம் என்னமாதிரியான வகை, யாருக்கானது என்பதை உங்களால் எளிதில் யூகித்துவிட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

குப்பி - திரைப்பார்வை    
September 11, 2007, 7:58 pm | தலைப்புப் பக்கம்

தூங்கி கண்விழித்த அந்த அதிகாலையில்தான் அதிர்ச்சியான அந்த செய்தி காதில் விழுந்தது. 'ராஜீவ் காந்தி படுகொலை". எங்கோ வடநாட்டில்தான் இது நிகழ்ந்திருக்கக்கூடும் என்று பெரும்பாலோனோரைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சஞ்சய்தத், penis, உயிர்மை........    
September 6, 2007, 9:43 am | தலைப்புப் பக்கம்

அச்சு ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மை குறித்தும், ஒன்றுக்கும் உதவாத செய்திகளை ஊதிப் பெருக்கி தலைப்புச் செய்தியாக்கி (நாம் வலைப்பதிவுகளில் செய்வதைப் போல)தம்முடைய விற்பனையைப் பெருக்கிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

போலிகளை உடனே ஒழியுங்கள்....    
September 4, 2007, 6:18 pm | தலைப்புப் பக்கம்

தமிழக அரசியல் களத்திற்கு இணையாக தமிழ் வலைப்பதிவு உலகிலும் சுவாரசியமான காட்சிகள் தினந்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அங்கே போட்டி போட்டுக் கொண்டு குப்பையை வாருகிறார்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர்

நாங்க பிலிம் காட்றம்ல...    
August 30, 2007, 4:55 pm | தலைப்புப் பக்கம்

"ஒரு படத்தின் விமர்சனம் என்பது எந்த ஊடகங்கள் மூலமாக வெளிப்பட்டாலும் சரி, அது ஒரு தனிமனித எண்ணங்களின் வெளிப்பாடுதான். ஒரு படத்தயாரிப்பாளன் (film maker) அதை பொருட்படுத்த தேவையில்லை"...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் திரைப்படம்

Reservoir Dogs (1992) திரைப்பார்வை    
August 28, 2007, 3:38 pm | தலைப்புப் பக்கம்

விநோதமான, நான்-லீனியர் திரைக்கதையமைப்பை கொண்டிருப்பதே இந்தப்படத்தின் தனித்தன்மை என்று நான் நினைக்கிறேன். ஹீரோவின் காலை முதலில் காட்டியவுடன் விசிலடிக்கும் நம்முர்காரர்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சும்மா.... கொஞ்சம் வார்ம்-அப்    
August 27, 2007, 4:01 pm | தலைப்புப் பக்கம்

வேலை வெட்டி ஏதுமில்லாத ஒரு தருணத்தில் என்னுடைய வலைப்பதிவை புரட்டிக் கொண்டிருந்த போது இந்த வருடத்தில் வெறும் ஏழே ஏழு பதிவுகளே எழுதியிருக்கிறேன் என்று தெரிய வந்தது. 'நல்ல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர்

உயிர் எழுத்து - இதழ் அறிமுகம்    
August 17, 2007, 10:43 am | தலைப்புப் பக்கம்

சி.சு.செல்லப்பா ஆரம்பித்த 'எழுத்து' முதல் கிருஷ்ணமூர்த்தி, ஞானக்கூத்தன் உள்ளிட்டோர் நிறுவிய 'கசடதபற' முதலான இதழ்கள் நவீன தமிழிலக்கிய பரப்பில் ஒரு இயக்கமாகவே தீவிரமாக இயங்கிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம் ஊடகம்

விநோதமான தேடல்கள்.......    
August 11, 2007, 6:06 am | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு ஞாயிறன்றும் இரவு 07.00 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "கோலிவுட் கோர்ட்' என்கிற நிகழ்ச்சியில் கடந்த வாரம் திரையிசைப் பாடல்கள் சேகரிப்பாளரான 'அலிகான்' என்பவரது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

சத்தம் போடாதே - இசை வெளியீட்டு விழா    
June 22, 2007, 9:27 am | தலைப்புப் பக்கம்

வழக்கமாக இந்த மாதிரி பைத்தியக்காரத்தனத்தையெல்லாம் நான் செய்வதில்லை. அதாவது போட்டிகளுக்கு SMS அனுப்புவது. "நீங்கள் சிறுநீர் கழிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு?... ஆப்ஷன் A, 2...தொடர்ந்து படிக்கவும் »

Traffic Signal - திரைப்பார்வை    
April 25, 2007, 11:47 am | தலைப்புப் பக்கம்

மதூர் பண்டார்க்கரின் படமான "சாந்தினிபார்" வெளிவந்த போது அது ஏதோ மூன்றாந்தர "பிட்டு" இந்திப்படம் என்று தவறான புரிதலோடு இருந்தேன். அந்தப் படத்தை தமிழில் "காபரே டான்சர்" என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தி.நகர் போறீங்களா?.........    
April 19, 2007, 9:35 am | தலைப்புப் பக்கம்

அட்சய திருதியை காரணமாக தங்க நகை வியாபாரம் களைகட்டி விட்டது. பத்திரிகை, தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்தால், வடிவேலு பாணியில் "ஸ்......அப்பா! இப்பவே கண்ண கட்டுதே" என்று சொல்லத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Jana Aranya (1976) The Middle Man    
February 14, 2007, 2:17 pm | தலைப்புப் பக்கம்

(photo courtesy: amazon.com)இந்திய சினிமா சர்வதேச திசையை நோக்கி பயணமளித்த ஆரம்பக்கட்டங்களை செழுமையாக்கதில் சத்யஜித்ரேவின் பங்கு பிரதானமானது. அவர் இயக்கிய ஜன ஆரண்யா என்கிற படத்தை சமீபத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஒரு வயோதிகத் தகப்பனின் நெடும் பயணம்    
July 5, 2006, 12:39 pm | தலைப்புப் பக்கம்

வெளியூரில் படித்துக் கொண்டிருக்கும் உங்கள் மகன் காவல் துறையால் கைது செய்யப்பட்டிருப்பதாக உங்களுக்கு தகவல் வருகிறது. அலறியடித்துக் கொண்டு ஓடுகிறீர்கள். காவல் துறையோ, அரசு இயந்திரமோ, அதிகார அமைப்போ எங்கிடமிருந்தும் உங்கள் மகனைப் பற்றிய தகவலை அறிய முடியவில்லை. உயிரோடு இருக்கிறானா அல்லது இறந்து போனானா... ஒன்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை. என்ன செய்வீர்கள்?நீங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

பி.கே. சிவகுமாரின் கட்டுரைகள்    
June 29, 2006, 9:49 am | தலைப்புப் பக்கம்

அழகிய சிங்கர் பல வருடமாக நடத்திக் கொண்டு வரும் சிற்றிதழான நவீன விருட்சத்தின் சமீபத்திய இதழில் (இதழ் எண்.71-72) பி.கே.சிவகுமாரின் கட்டுரைத் தொகுப்புக்காக நான் எழுதிய மதிப்புரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

அது ஒரு கனாக்காலமும் தமிழ்ச் சினிமாவின் எதிர்காலமும்    
November 17, 2005, 10:12 am | தலைப்புப் பக்கம்

தீபாவளி போன்ற பண்டிகையை, கட்டாயமாக புதுத் துணி எடுத்தோ, பட்டாசு வெடித்தோ, ஏதாவது ஒரு சினிமாவை பார்த்தோதான் கொண்டாட வேண்டும் என்கிற தமிழர்களின் சிந்தனை ஆழமாக வேறூன்றிவிட்ட நிலையில் தீபாவளிக்கு மறுநாள் அதிர்ஷ்டவசமாக விடுமுறையாக அமைந்துவிட்டபடியால் ஏதாவதொரு சினிமாவிற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென வேண்டுகோள் (அதாவது கட்டளை) என் குடும்பத்தினரால் என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நானும் என்னுடைய அந்தரங்க டைரிகளும்    
February 21, 2005, 10:26 am | தலைப்புப் பக்கம்

உங்களில் எத்தனை பேர் டைரி எழுதுகிறீர்கள் என்று தெரியவில்லை. நான் கடந்த பத்து வருடங்களாக பிடிவாதமாக விடாமல் எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்தப் பழக்கம் எப்படி ஆரம்பித்தது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்