மாற்று! » பதிவர்கள்

சுந்தரவடிவேல்

"Global War on Terror" முடிவுக்கு வந்தது!    
March 25, 2009, 8:17 am | தலைப்புப் பக்கம்

புஷ் அதிகாரத்தினால் பயன்படுத்தப்பட்டு வந்த Global War on Terror என்ற பதம், ஒபாமா அரசாங்கத்தால் நிராகரிக்கப்படுகிறது. இந்த சொற்றொடரைப் பயன்படுத்தித்தான் ஈழத்தில் விடுதலைப் போராட்டத்தை மகிந்த அரசு நசுக்கி, இனவழிப்பை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவைத் தவிர்த்து, பெரும்பாலான நாடுகள் ஈழத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் போருக்கு இலங்கை அரசுடன் உடன்படாத நிலை ஏற்பட்டுக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

'கருணா'நிதி தமிழினத்துக்குச் செய்யும் துரோகம்    
March 2, 2009, 3:01 pm | தலைப்புப் பக்கம்

குலத்தைக் கெடுக்கும் கோடாரிக் காம்புக்கு இன்னொரு உதாரணமாகப் பரிணமித்திருக்கிறார்'கலைஞர்' கருணாநிதி. ராஜபக்சே, பொன்சேகா, பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோருக்கு உடன்பிறப்பாகவும், தமிழர்களுக்கு அந்நியனாகவும் ஆகியிருக்கிறார். இவருக்கு ஒத்து ஊதிய கனிமொழி அவர்களையும், வரும் காலங்களில் இன்னொரு கோடாரிக் காம்பாகத்தான் பார்க்க வேண்டும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

வெள்ளை மாளிகைக்கு முன் அணி திரள்வோம்!    
February 15, 2009, 9:45 pm | தலைப்புப் பக்கம்

இலங்கை அரசினால் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் இனப்படுகொலையினைக் கண்டித்து, அமெரிக்க அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கனேடிய மற்றும் அமெரிக்கத் தமிழர்கள் இணைந்து, அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன் நடத்தும் மாபெரும் பேரணி! பிப்ரவரி 20ஆம் தேதி, காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையில்!அமெரிக்கா, கனடாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழர்கள் வந்து குவிய ஆயத்தம்! வந்து கலந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

வாரீர் ! நாளை அட்லாண்டா மாநகரில் பேரணி !    
February 6, 2009, 6:51 pm | தலைப்புப் பக்கம்

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்திலுள்ள அட்லாண்டா தமிழ்ச் சங்கம் ஒரு பேரணியை ஏற்பாடு செய்திருக்கிறது. அருகாமையில் வசிக்கும் அனைவரும் வந்து கலந்து கொள்ள வேண்டுகிறேன்.இடம்: சி.என்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்புநாள், நேரம்: பிப்ரவரி 7ம் தேதி, சனிக்கிழமை, காலை சரியாக 11 முதல் 1 மணி வரைநன்றி!தமிழ்ச் சங்கத்தின் செய்தி:Greater Atlanta Tamil...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

இந்தியா என் தாய்நாடு !    
January 30, 2009, 10:40 am | தலைப்புப் பக்கம்

ஈழத்தில் இத்தனை உயிர்களைக் கொன்று குவிக்கும் ஒரு இனப்படுகொலையைச் செய்யும் சிங்கள் அரசுக்கு நான் பிறந்த இந்தியத் திருநாடு பின்னிருந்து உதவி செய்கிறது. இந்தியச் சார்பு ஊடகங்கள் இதனை ஒரு இனப்படுகொலையாகப் பார்க்காமல், ஒரு இராணுவச் சண்டையாகப் பார்த்துக்கொண்டே வருவதன் பின்னணி, இந்தப் போரை இயக்குவது இந்தியா என்பதால் விளைந்த ஆதரவுதான். பின்னாலிருந்து ரணிலையும்,...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்த்திரு இரா.இளங்குமரனார்    
November 13, 2008, 11:05 am | தலைப்புப் பக்கம்

தமிழ் என்ற மொழியை, அதனோடு இணைந்த வழக்கை, பண்பாட்டை, வாழ்வு முறையைத் தலைமுறை தலைமுறையாகக் கொண்டு செல்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அத்தகைய மக்களது தொண்டினாலேயே, தமிழ் இன்றளவும் செழுமையாக வாழ்ந்து வருகிறது. அவர்களில் இன்று வாழ்ந்து வரும் ஒரு பெரியவரைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை முந்தாநாள் பார்த்தேன். அவர் இரா. இளங்குமரனார் அய்யா அவர்கள். அய்யாவைப் பற்றிச் சென்ற ஆண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் நபர்கள்

அவமானச் சுவர் மீது சில கருத்துக்கள்    
May 18, 2008, 11:41 am | தலைப்புப் பக்கம்

அவமானச் சுவரைப் பற்றிய இந்தக் கட்டுரையை ( thamuyesa (தமுஎச): அவமானச் சுவர்) வாசித்தபின் எனக்குத் தோன்றியவை:ஆதிக்க சாதி இந்துக்களுக்கு அரசு, அதிகாரிகள், காவல் துறை, கட்சிகள், பெரும் மக்கள் படை, ஊடகங்கள், செல்வம் என எல்லா ஆதரவுகளும் இருக்கின்றன. அனைத்துக்கும் மேலாகத் தாங்கள் உயர்ந்த குடியில் பிறந்தவர்கள் என்ற சாதிய இறுமாப்பும் இருக்கிறது. ஆனால் இதுநாள் வரையில் ஊரைவிட்டு...தொடர்ந்து படிக்கவும் »

நான், எங்க தாத்தா மற்றும் கமலஹாசனின் தாயுள்ளம்    
April 7, 2008, 10:00 am | தலைப்புப் பக்கம்

வாரமானாலும், வாரக் கடைசியானாலும் விடியலிலிருந்து எனக்குச் சுழல்வதாகத் தெரியும் கடிகாரம் என்னையும் நிறுத்துவதில்லை. என்னால் இந்த இயக்கமின்றியும் ஓய்ந்திருக்க முடியாது. இது சைக்கிளை மிதிப்பதை நிறுத்திவிட்டால் விழுந்துவிடுமோ என்ற அச்சங்கொண்ட ஓட்டமில்லை. காற்றைக் குடித்து நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். சில நேரம் பாயும். பதுங்கித் தேங்கும். கழிவு கலக்கும். தெளியும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சில புழுக்களை ராணியாக்குவது எப்படி?    
March 15, 2008, 10:01 am | தலைப்புப் பக்கம்

தேனீக்களின் வாழ்க்கையிலிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். சமூக ஒழுங்கு மட்டுமில்லை, புதுப்புது உயிரியல் விளக்கங்களையும் தேனீக்களிடமிருந்து பெறலாம். அதுமாதிரியாக வந்திருப்பதுதான் இந்தப் புதுக் கதை. உங்களுக்கு ராயல் ஜெல்லின்னா என்னன்னு தெரியுமா? வளர்ந்த தேனீக்களின் தலைப்பகுதியில் (உமிழ்நீர் சுரப்பிகளுக்கருகில்) ராயல் ஜெல்லி சுரக்கிறது. அதுவே தேனீக்களின் புழுப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

சுஜாதா இன்னும் இறக்கவில்லை!    
February 29, 2008, 11:16 am | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு மரணமும் ஒவ்வொருவரையும் வெவ்வேறு விதங்களில் வினைபுரியத் தூண்டுகிறது. இதிலே ஒருவரைப் பற்றிய நிறுவப்பட்ட கதைகள் மற்றும் ஊடகங்களின் முன்னேற்பாடுகள் (பில்டப்புகள்) பெரும்பங்கு வகிக்கின்றன. பெருங்கூட்டத்தின் போக்கு சரியானதாகத் தோற்றம் பெறுகிறது. அதனால்தான் இராவண வதத்தையும், வீரப்ப சம்ஹாரத்தையும் கொண்டாடுகிறோம், நகுலனை அவரது எழுத்தழகையும் தாண்டி அனாதையாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

தி இந்து பரப்பும் பொய்    
November 27, 2007, 3:50 pm | தலைப்புப் பக்கம்

தி இந்து பத்திரிகையில் மாவீரர் நாள் உரையைப் பற்றிய செய்தியில் அது பரப்பும் ஒரு தவறான சொற்றொடரைச் சுட்டிக் காட்டவே இந்தக் குறிப்பு: இந்து சொல்கிறது: "...Prabhakaran said in his annual Heroes' Day speech on his 53rd...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

தமிழ்ச் சங்கங்களைக் கடத்துவது எப்படி?    
July 11, 2007, 1:21 pm | தலைப்புப் பக்கம்

வட அமெரிக்காவில் (ஐ.அ.நா மற்றும் கனடா) உருவாக்கப்படும் தமிழ்ச் சங்கங்கள் கடத்தப்படுவதாக எனக்குத் தோன்றுகின்றது. ஒரு அமைப்பினைக் கடத்துவது ஏன், யார் அதைச் செய்கிறார்கள்...தொடர்ந்து படிக்கவும் »

முள்ளும் மலரும்    
July 3, 2007, 12:22 am | தலைப்புப் பக்கம்

வீட்டுக்குப் பக்கத்துல இப்படியொரு செடியிருக்கு. ஒரு ரெண்டு மூனடி ஒசரந்தான் இருக்கும். ஒருநாள் சும்மா அந்தப்பக்கம் திரிஞ்சப்ப ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

சில சந்திப்புகளைப் பற்றி    
July 1, 2007, 1:51 pm | தலைப்புப் பக்கம்

நேத்து ஒரு நண்பர் வீடல விருந்து. நல்ல கூட்டம். ஊருக்குப் புதுசாவும் கொஞ்சம் ஆளுக வந்திருந்தாங்க. புதுசுல செந்திலுன்னு ஒருத்தரு. அவரை அறிமுகப்படுத்திய நண்பர் சொன்னாரு, இவரு தமிழ்ல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

இந்திய ஆயுதங்கள் யாரைக் கொல்லும்?    
June 1, 2007, 1:56 am | தலைப்புப் பக்கம்

இன்னக்கி வீட்டுக்கு வந்ததுலேருந்து கிட்டத்தட்ட இதே பேச்சுத்தான். பாதிரியாரைக் கொன்னுட்டாங்க தெரியுமான்னு ஆரம்பிச்சது. இதே மாதிரிதான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

மது வடியும் ஊர்த் திருவிழா    
May 16, 2007, 10:44 am | தலைப்புப் பக்கம்

இன்னக்கி எங்க குலசாமி கோயில்ல திருவிழா. இது கரம்பக்குடியிலேருந்து அஞ்சாறு கிலோமீட்டர் தள்ளி...தொடர்ந்து படிக்கவும் »

எயிட்ஸ் நோய்க்கு நம் உடம்புக்குள்ளேயே மருந்தா?    
April 25, 2007, 11:13 am | தலைப்புப் பக்கம்

ஆமாம். ஆச்சரியமாக இருக்கிறதா? எச். ஐ.வி எனப்படும் வைரஸ் தற்போது இருக்கும் சுமார் 20 வித மருந்துகளுக்கும் போக்கு காட்டிக்கொண்டு இருக்கிறது. இப்போது ஒரு புது மருந்து வரக்கூடிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் நலவாழ்வு

மகளிர் சக்தி!    
April 10, 2007, 9:44 am | தலைப்புப் பக்கம்

அந்தக் காலத்துல தங்கமணியோட ஆய்வுக்கூடத்துக்குப் போறப்ப அங்கெ ஒரு எந்திரம் இருக்கும். Universal Testing Machine அப்படின்னு சொல்லுவான். அது என்னன்னா, ஒரு பொருள் இருக்குன்னு...தொடர்ந்து படிக்கவும் »

தேனீக்களைக் காணவில்லை - சாதாரணமில்லை!    
March 31, 2007, 9:39 am | தலைப்புப் பக்கம்

இந்தப் பயலோட போற பக்கமெல்லாம் பூச்சி, பூவுன்னு திரியிறதுனாலயோ என்னமோ தெரியல, தேனீக்கள், தேன் அப்படின்னாலே நமக்கும் ஒரு ஆர்வம். அன்னக்கி வேலையிலேருந்து வர்றப்ப ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் சூழல்

இலங்கைக்கு உதவாதீர்!!    
March 9, 2007, 2:37 am | தலைப்புப் பக்கம்

Ellyn Shander, அமெரிக்க மருத்துவரான இந்தப் பெண்மணி, சுனாமிக்குப் பின் ஈழத்திற்குச் சென்று மருத்துவ உதவிகளைச் செய்தவர். அங்கிருந்த நிலைமைகளை நேரில் கண்டபிறகு, அம்மக்களுக்குக் கிடைக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

கடத்தப்பட்ட TRO பணியாளர்களுக்கு நடந்தது என்ன?    
February 4, 2007, 2:24 pm | தலைப்புப் பக்கம்

TROன்னா தமிழர் புனர்வாழ்வுக் கழகம். இலங்கையில இருக்க ஒரு தொண்டு நிறுவனம். சுனாமிக்குப் பின்னாடியும், போர் சமயத்துலயும் இடம்பெயர்ந்து கஷ்டப் படுற மக்களுக்கு உதவி செய்ற நிறுவனம். இதோட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

மனிதவுரிமையைக் காக்க அவசர வேண்டுகோள்!    
February 3, 2007, 11:32 am | தலைப்புப் பக்கம்

இலங்கையில் தமிழர்களின் வாழ்நிலை மேலும் மேலும் மோசமாகிக்கொண்டே வருகிறது. மனிதவுரிமை மீறல்கள் எண்ணிறந்த அளவில் நடைபெற்று வருகின்றன. அரசுக்கும் புலிகளுக்குமிடையேயான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

என்னோடு ஒரு மதியம்    
January 15, 2007, 12:20 pm | தலைப்புப் பக்கம்

இன்று மதியம் செல்பேசியில்லை. வெய்யிலிருந்தது. சற்றே நடந்து வர மனமிருந்தது. அந்த ஏரிக்கு நடந்தேன். ஒரு ஒற்றை அன்னம் ஏரியில் நீந்தியது. இல்லை, அது வெறுமனே மிதந்தது. அலையில் மிதந்து,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்