மாற்று! » பதிவர்கள்

கலையரசன்

பிரிட்டனில் கடை போட்ட தமிழ் வள்ளல்கள்    
April 3, 2010, 11:00 pm | தலைப்புப் பக்கம்

( லண்டன் உங்களை வரவேற்கின்றது! - மூன்றாம் பகுதி)வீட்டு வாடகை உச்சத்தில் இருக்கும் நகரங்களில் லண்டனும் ஒன்று. செல்வந்தர்கள் மட்டுமே வசிக்கக் கூடிய மைய நகர்ப் பகுதியை விட்டு விடுவோம், புறநகர்ப் பகுதியில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்க வேண்டுமானால் சராசரி 800 பவுன் தேவை. அந்த விலைக்கும் வீடு எடுக்க ஆள் இருக்கிறது என்பதால் அங்கே ஒரு நாளும் வாடகை குறையாது. லண்டனைத் தவிர்ந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது, அல்கைதா பாய்கிறது!    
February 19, 2010, 10:45 am | தலைப்புப் பக்கம்

["அரபிக் கடலோரம் அல்கைதா வேட்டை ஆரம்பம்" - தொடரின் இரண்டாம் பகுதி]யேமன் நாட்டின் தென் பகுதி இயற்கை வளம் நிறைந்தது. சனத்தொகை அடர்த்தியும் மிகக்குறைவு. இருப்பினும் தென்னகத்து மக்களுக்கு ஒரு பெருங் குறை இருந்தது. "வடக்கு வளர்கிறது. தெற்கு தேய்கிறது." போன்ற கோஷமெல்லாம் அங்கே பிரபலம். சிலர் இதனை பிராந்தியவாதம் என அழைக்கலாம். எனினும் அவர்கள் தமது நலன்கள் குறித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

வாள் முனையில் இருந்து பிறக்கும் மத அதிகாரம்    
February 8, 2010, 12:00 pm | தலைப்புப் பக்கம்

["இஸ்லாம் - ஓர் அரேபியக் கலாச்சாரப் புரட்சி" தொடரின் 3 ம் பகுதி]சராசரி மனிதனின் வாழ்வில், முப்பது வயதிற்கு பின்னர் பக்குவம் ஏற்படுகின்றது. இயேசுவும், முகமதுவும் தமது முப்பதாவது வயதில் இருந்தே மதப் பிரசங்கங்களை ஆரம்பிக்கின்றனர். கி.பி. 600 ம் ஆண்டளவில் முதன் முறையாக பிரசங்கித்த முகமதுவுக்கு, "கப்ரியேல்" என்ற தேவதை மூலமாக "குர் ஆன்" என்ற திருமறை இறக்கப்பட்டது. கிறிஸ்தவ மதம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கடவுளின் நிறம் என்ன?    
February 5, 2010, 9:30 am | தலைப்புப் பக்கம்

1992 ம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரு கறுப்பின வாலிபனை வெள்ளை போலீசார் தாக்கினார்கள். அந்த சம்பவம் வீடியோவில் பதிவாகி நீதிமன்றத்தில் சாட்சியமாக்கப்பட்டும், குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர். இதனால் லொஸ் எஞ்செல்ஸ் நகரில் கலவரம் வெடித்ததை உலகம் மறந்திருக்காது. இதன் தாக்கம் டைரக்டர் ஸ்பைக் லீயை "மல்கம் எக்ஸ்" திரைப்படம் எடுக்க தூண்டியிருக்க வேண்டும். கறுப்பின இளைஞனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

புலம்பெயர்ந்த தமிழ் தேசியம்    
January 27, 2010, 10:30 am | தலைப்புப் பக்கம்

1978 ம் ஆண்டு, அக்டோபர் 5 ம் திகதி. 150 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும், ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த அமர்வு. இலங்கையின் பிரதிநிதியை பேச அழைக்கிறார்கள். பொது மேடைக்கு வந்த ஒருவர் கணீரென்ற குரலில் பேச ஆர்மபிக்கின்றார். "என்னுடைய பெயர் கிருஷ்ணா. சிறி லங்காவிற்கும், இந்தியாவிற்கும் நடுவில் அமைந்திருக்கும், இரண்டரை மில்லியன் சனத்தொகையை கொண்ட தமிழீழம் என்ற தேசத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஐ.நா. அமைதிப் படையின் அட்டூழியங்கள்    
January 26, 2010, 6:00 am | தலைப்புப் பக்கம்

("ஐக்கிய நாடுகள் சபை ஈழத்திற்கு ஆதரவளிக்குமா?" - கட்டுரையின் இரண்டாம் பகுதி)பேரழிவைக் கொண்டு வந்த கொரிய யுத்தத்தை தொடர்ந்து உலகம், அமெரிக்க சார்பு, சோவியத் சார்பு என இரு துருவங்களாக பிரிந்தது. இரு மேன்நிலை வல்லரசுகளும் தமது சார்பான நாட்டுப் பிரச்சினைகளில் தலையிட்டு வீட்டோ அதிகாரத்தை பிரயோகித்தனர். இதனால் பல நாடுகளின் உள் நாட்டுப் பிரச்சினைகள் தீர்க்கப் படவில்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஐக்கிய நாடுகள் சபை ஈழத்திற்கு ஆதரவளிக்குமா?    
January 25, 2010, 3:30 pm | தலைப்புப் பக்கம்

(பகுதி: ஒன்று)ஈழ சுதந்திரப் போர் ஆரம்பமான காலந் தொட்டு இன்று வரை, ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டிலான சமாதானத்தை அங்கலாய்ப்போடு எதிர்பார்க்கும் பலர் உள்ளனர். ஐ.நா. சபையின் அரசியல் பின்னணி பற்றி தெளிவான அறிவிருந்தால், தாமே ஏமாந்து தலைவிதியை நொந்து கொள்ள வேண்டியிருக்காது. ஐ.நா.சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் இலங்கை தொடர்பாக வருடாவருடம் அறிக்கை ஒன்றை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஹெய்ட்டி பூகம்பம், அமெரிக்க ஆயுதம் விளைவித்த பேரழிவு?    
January 24, 2010, 6:50 am | தலைப்புப் பக்கம்

(Press TV, 23-1-10)"லட்சக்கணக்கான உயிர்கள் பலியான ஹெய்ட்டி பூகம்பம், அமெரிக்க கடற்படையின் நவீன ஆயுதம் ஒன்றை பரீட்சித்ததால் விளைந்த பேரழிவு!" ரஷ்யாவின் வட-துருவ கடற்படையின் உறுதிப்படுத்தாத அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. ரஷ்ய அரசு உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளாத அறிக்கையை மேற்கோள் காட்டி, வெனிசுவேலா தொலைக்காட்சி அறிவித்துள்ளது. மார்ச், 2002 ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் பதிவான 7.2 magnitude...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஒபாமாவுக்கு ஒரு ஹைத்தி அகதியின் திறந்த மடல்    
January 18, 2010, 6:36 am | தலைப்புப் பக்கம்

அன்புடன் ஒபாமாவுக்கு,அமெரிக்கா உலகில் மிக முன்னேறிய ஜனநாயக நாடு என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஹைத்தியின் நிலநடுக்கத்தில் அந்த நம்பிக்கை நொறுங்கி விட்டது. நிலநடுக்கத்திற்கு மறு நாள், "நிவாரணப் பணிக்கென 2000 மரைன் துருப்புகளை இன்னும் சில நாட்களில் அனுப்புவதாக" புதன்கிழமை AP செய்தி தெரிவித்தது. "இன்னும் சில தினங்களில்?" திருவாளர் ஒபாமா அவர்களே, அமெரிக்காவில்...தொடர்ந்து படிக்கவும் »

இஸ்லாம் - ஓர் அரேபிய கலாச்சாரப் புரட்சி    
January 17, 2010, 6:00 am | தலைப்புப் பக்கம்

இலங்கையில் முதன்முதலாக இஸ்லாமிய மதம் அரேபிய வணிகர்களால் அறிமுகப்படுத்தப் பட்டது. அதே காலத்தில் இந்தியாவிலும் கேரளா கரையோரம் இஸ்லாம் என்ற புதிய மதத்தை கண்டுகொண்டது. உண்மையில் இஸ்லாமிய மதத்தின் தோற்றத்திற்கு முன்னரே, அரேபிய வணிகர்கள் இந்திய உப கண்டத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர். பண்டைய காலத்தில் வருடக்கணக்கான கடல் போக்குவரத்தின் ஆயாசம் காரணமாக, புலம்பெயர்ந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஏழைகளை சுரண்டி லாபமடைவது எப்படி? -JP Morgan    
January 15, 2010, 11:00 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்க ஏழைகளுக்கு வழங்கப்படும் உணவு முத்திரைகளால் நன்மையடைவது யார்? உணவு முத்திரைகளை அச்சடித்து வழங்கும் JP Morgan வங்கி, பணப் புழக்கத்தை உருவாக்குகின்றது. Food Stamp Profits?Audio Report By Stacy Herbert & Max KeiserHow JP Morgan gets rich with...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அமெரிக்காவில் அதிகரிக்கும் வெள்ளை நிற வெறி    
January 15, 2010, 6:00 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவில் பகிரங்கமாக நாஸிஸ பிரச்சாரம் செய்யும், ஹிட்லர் துதி பாடும் வெள்ளை நிற வெறி அமைப்புகள் பெருகி வருகின்றன. அவற்றின் உறுப்பினர் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரிக்கின்றன. அண்மைய பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட தீய விளைவு இது. கடந்த வருடம் மட்டும் பதிவு செய்யப்பட்ட இனவெறித் தாக்குதல்கள் முன்னெப்போதையும் விட அதிகம்.வெள்ளை நிற வெறி அமைப்புகளினுள் ஊடுருவி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஜப்பான்: மேற்கே உதிக்கும் சூரியன்    
January 14, 2010, 7:00 am | தலைப்புப் பக்கம்

முன்னொரு காலத்தில், பசுபிக் சமுத்திரத்தின் மத்தியில் இருக்கும் ஹவாய் தீவுகளை, லிலியோகலானி என்ற அரசி ஆண்டு வந்தாள். அங்கே கிடைக்கும் இயற்கை வளங்களைக்கொண்டு, திருப்தியான வாழ்க்கை வாழ்ந்த, பூர்வீகக் குடிமக்களை ஓரங்கட்டி விட்டு, சிறுபான்மையினரான வெள்ளை அமெரிக்கர்கள் பல சலுகைகளை அனுபவித்து வந்தனர். பூர்வீக மக்களின் நன்மை கருதி அரசி புதிய சட்டங்களை இயற்றினார். வெள்ளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இந்திய படையினரை கல் வீசி விரட்டும் வீரப் பெண் (வீடியோ)    
January 12, 2010, 6:20 am | தலைப்புப் பக்கம்

அசாமில் தன்னை மானபங்கப் படுத்த முனைந்த இந்திய இராணுவ வீரனை, பொது இடத்தில் வைத்து செங்கற்களை வீசி விரட்டும் வீர நங்கை. சம்பவத்தை வேடிக்கை பார்த்த ஒருவரின் கைத்தொலைபேசியால் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது. அசாமை ஆக்கிரமித்துள்ள இந்திய இராணுவம் அப்பாவி மக்களை வதைப்பதும், அத்துமீறலுக்கு எதிராக மக்கள் போராட்டமும் தொடர்கின்றன. வெறுங்கையால் இராணுவத்துடன் போராடும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அமெரிக்காவில் பெருகி வரும் கம்யூனிச பண்ணைகள்    
January 3, 2010, 11:51 am | தலைப்புப் பக்கம்

வேலையின்மை, வீடிழப்பு, கடன் சுமை, டாலரின் வீழ்ச்சி. முடிவுறாது நீளும் முதலாளித்துவ பொருளாதார பிரச்சினைகள். மாற்று வழி தேடிய அமெரிக்கர்கள் தற்போது கம்யூனிச வாழ்க்கை முறைக்கு மாறி வருகின்றனர். இன்று அமெரிக்கா முழுவதும் பத்தாயிரத்துக்கும் அதிகமான கம்யூனிச கூட்டுறவுப் பண்ணைகள் உருவாகி விட்டன. கூட்டு உழைப்பினால் கிடைக்கும் வருவாயை பங்கிட்டுக் கொள்ளும் கம்யூனிச...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இஸ்ரேலிய இராணுவத்தின் இரகசியங்கள்    
December 25, 2009, 5:30 am | தலைப்புப் பக்கம்

(போர்க்களமான புனித பூமி, பகுதி 3)உங்களுக்கும், குடும்பத்திற்கும் அரசாங்க செலவில் வசதியான வீடும், சமூக கொடுப்பனவுகளும், கூடவே ஒரு துப்பாக்கியும் வேண்டுமா? இஸ்ரேலில் குடியேறினால் அதெல்லாம் கிடைக்கும். ஒரேயொரு நிபந்தனை: யூதராக இருக்க வேண்டும். உலகில் யார் வேண்டுமானாலும் யூதராக மதம் மாறி, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலத்தில் சென்று குடியேறலாம். உலகின் எந்த மூலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

தனி நாடு கண்ட யூதர்களும், தாயகம் இழந்த பாலஸ்தீனியரும்    
December 24, 2009, 6:30 am | தலைப்புப் பக்கம்

("போர்க்களமான புனித பூமி" தொடரின் இரண்டாம் பகுதி)இரண்டாம் உலகப்போரின் முடிவு உலகில் பல மாற்றங்களை உருவாக்கியிருந்தது. போரில் பாதிக்கப்பட்ட பிரிட்டன் தனது காலனிகளை பராமரிக்க முடியாமல் தடுமாறியது. இதற்கிடையே அமெரிக்கா புதிய வல்லரசாக உருவாகியிருந்தது. ஹிட்லரின் யூத மக்கள் படுகொலை, உலகம் முழுவதும் யூதர்களுக்கு சார்பான அனுதாப அலைகளை தோற்றிவித்தது. ஆரம்ப காலங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

போர்க்களமான புனித பூமி    
December 23, 2009, 5:30 am | தலைப்புப் பக்கம்

"இயேசு கிறிஸ்து மீண்டும் பூமிக்கு வருவாராமே?" "யாருக்குத் தெரியும்? அவர் ஏற்கனவே வந்திருப்பார். ஆனால் அவர் பிறந்த இடம், யுத்தபூமியாக வருந்துவது கண்டு வெறுத்துப் போய் சொர்க்கத்திற்கே திரும்பிப் போயிருப்பார்." இந்த நகைச்சுவை துணுக்கு, மும்மதத்தவராலும் உரிமை கோரப்படும் புனித பூமியின் அவல நிலையை படம் பிடித்துக் காட்டுகின்றது. இன்று உலகில் அனைவரது பார்வையும் மத்திய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஸ்ரீ லங்கா ஜனாதிபதியை கைது செய்வது தொடர்பாக...    
December 19, 2009, 11:10 pm | தலைப்புப் பக்கம்

(2001 ம் ஆண்டு, சந்திரிக்கா குமாரதுங்க சிறி லங்கா ஜனாதிபதியாக வீற்றிருந்த காலத்தில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டது. ஈழப்போர் உச்சத்தில் இருந்த காலத்தில் நெதர்லாந்து வந்திருந்த சந்திரிக்காவை கைது செய்யுமாறு வழக்குப் போடப்பட்டது. அன்றிருந்த சர்வதேச சூழ்நிலை இன்றும் பெரிதாக மாறிவிடவில்லை என்பதை இந்த ஆய்வு எடுத்துக் கூறும். "உயிர்நிழல்" (மார்ச்-ஏப்ரல் 2001 ) சஞ்சிகைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இருண்ட ஐரோப்பாவை நோக்கி...    
December 16, 2009, 3:44 pm | தலைப்புப் பக்கம்

(16 ,17 ஜூன் 1997 ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற Eurotop மாநாடு ஐரோப்பாவின் தலைவிதியை மாற்றியமைத்தது. மாநாட்டுக்கு எதிரான மக்கள் எழுச்சியை மையமாக கொண்டு எழுதப்பட்ட எனது கட்டுரை. "சரிநிகர்" பத்திரிகையில் பிரசுரமானது.)சிறந்த ஜனநாயக மரபுகளை பேணிப் பாதுகாப்பதாகவும், மனித உரிமைகளை மதிப்பதாகவும் மார் தட்டிக் கொள்வதில் நெதர்லாந்தும் சளைத்ததல்ல. உலகத்தில் சிறந்த பல ஜனநாயக நாடுகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

11/26 அமெரிக்க இன அழிப்பு நினைவு தினம்    
November 29, 2009, 7:45 am | தலைப்புப் பக்கம்

ஐரோப்பாவில் இருந்து சென்ற வெள்ளையின வந்தேறுகுடிகள் பூர்வீக அமெரிக்க மக்களை படுகொலை செய்து நிலங்களை ஆக்கிரமித்தனர். இன அழிப்பின் பின்னர் ஐரோப்பியமயமாக்கப்பட்ட அமெரிக்காவில் "நன்றி கூறும் தினம்" வருடந்தோறும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அதாவது ஐரோப்பிய வந்தேறுகுடிகளை தங்க அனுமதித்ததற்காக பூர்வீக அமெரிக்கர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்களாம். இனவழிப்பு செய்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வீடியோ: சிறுவர்களை அடிக்கும் பிரிட்டிஷ் காட்டுமிராண்டிப் படை    
November 21, 2009, 3:25 pm | தலைப்புப் பக்கம்

ஈராக் கைதிகளை சித்திரவதை செய்து கொடுமைப்படுத்துவதில், பிரிட்டிஷ் படையினரும் சளைத்தவர்களல்ல. ஈராக்கில் 2004 ம் ஆண்டுக்கு பின்னர் பிரிட்டிஷ் இராணுவத்தால் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வருகின்றன. ஈராக் மனித உரிமைகள் ஆர்வலர் மாசின் யூனிஸ், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசி, பல சம்பவங்களை தொகுத்துள்ளார். அவரது அறிக்கையிலிருந்து, பிரிட்டிஷ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இந்த ஏழைகள் வாழ்வது அவுஸ்திரேலியாவில்    
November 21, 2009, 1:28 pm | தலைப்புப் பக்கம்

"வெறும் பாலைவனக் கட்டாந்தரையில் பாய் போட்டு படுக்கும் இடத்திற்காக அரசாங்கத்திற்கு வாடகை கொடுக்கிறோம்." Elise என்ற பெண்மணி தன்னைக் காண வந்த சர்வதேச மன்னிப்புசபை செயலதிபரிடம் கூறியவை. The unheard truth in the heart of Australia முதலாம் உலகம் என்று அழைக்கப்படும் பணக்கார நாடான அவுஸ்திரேலியாவில், "Utopia" என்ற பெயரிலான பூர்வீக குடிகளுக்கான பிரதேசம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு வாழும் "அபோரிஜன்"...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இலவச கல்விக்கு ஆதரவாக உலக மாணவர்கள் போராட்டம்    
November 15, 2009, 9:27 am | தலைப்புப் பக்கம்

ஐரோப்பாவில் மிக அண்மைக்காலம் வரையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, போலந்து போன்ற நாடுகளில் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஐரோப்பிய யூனியன், நவ-லிபரலிச அடிப்படைவாத பொருளாதார சீர்திருத்தங்களை திணித்து வருகின்றது. நலன்புரி அரசு பெற்றுத் தந்த மக்களின் உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறித்து வருகின்றது. அதன் ஒரு கட்டமாக பல்கலைக்கழகங்கள் பெற்று வந்த அரச...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

அக்டோபர் 1917 - காலத்தால் அழியாத உலக சினிமா    
November 6, 2009, 11:15 pm | தலைப்புப் பக்கம்

இணையத்தில், ரஷ்ய திரையுலக மேதை செர்கெய் ஐசன்ஸ்டைனின் மகத்தான திரைக் காவியம். ஒக்டோபர் புரட்சியின் நினைவாக பதிவிடப்படுகின்றது. Part 1Part 2Part 3Part 4Part 5Part 6Part 7Part 8Part 9Part 10Part 11Part ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கொழும்பில் பண வெறிக்கு பலியாகும் தமிழ் சிறுமிகள்    
October 16, 2009, 5:13 am | தலைப்புப் பக்கம்

ஆகஸ்ட் 15 ல் கொழும்பு மாநகரில் இரு தமிழ் சிறுமிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த செய்தி பெருமளவு தமிழ் ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. காரணம், அந்த தமிழ் சிறுமிகளை கொன்றவர்கள் இனவெறியர்கள் அல்ல, மாறாக பணவெறியர்கள். மலையக ஏழைத் தமிழ் சிறுமிகளை வீட்டு வேலைக்காரிகளாக வைத்திருந்து உழைப்பை சுரண்டும் கொழும்பு பணக்காரர்கள் செய்த கொலை அது. அதனால் அனைத்துலக தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை சமூகம்

வெடி குண்டுகள் விளையும் பூமி - ஆவணப்படம்    
October 15, 2009, 5:00 am | தலைப்புப் பக்கம்

லாவோஸ், உலகில் அதிகமானோரால் அறியப்படாத அந்த நாட்டின் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. ஒன்றல்ல, இரண்டல்ல வருடக்கணக்காக தொடர்ந்து குண்டுவீசினார்கள். உலகில் இதுவரை இல்லாத அளவு மிக அதிகமான குண்டுகள் லாவோஸ் மீது போடப்பட்டன. ஊடகங்களின் கண்களைக் கட்டி நடந்த யுத்தம் அது. அதனால் அயலில் உள்ள வியட்நாம் போர் சர்வதேச கவனத்தை ஈர்த்த அளவிற்கு லாவோஸ் பற்றி யாரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் நிகழ்படம்

அகதி முகாம் அழிப்பு: பிரான்சின் ரமழான் பரிசு    
September 28, 2009, 4:36 am | தலைப்புப் பக்கம்

"நாம் இங்கே (பிரான்ஸில்) மிருகங்களைப் போல நடத்தப்படுகிறோம். ஆப்கானிஸ்தானில் எனக்கு அழகான வீடு ஒன்று இருந்தது. இங்கே எந்த வசதியுமற்ற கூடாரங்களில் வாழவேண்டிய நிர்ப்பந்தம். தாலிபான்கள் எனது தந்தையும், சகோதரனையும் கொலைசெய்தனர். தாலிபான்களுக்கு அஞ்சி ஆப்கானிஸ்தானை விட்டுவெளியேறினேன். ஆப்கானிய அகதிகள்தொழுகை நடத்தும் மசூதியாக பயன்படுத்திய கூடாரத்தையும் பிரெஞ்சுப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

1965 இந்தோனேசிய இனப்படுகொலையை நினைவுகூறுவோம்    
September 20, 2009, 5:29 pm | தலைப்புப் பக்கம்

44 வருடங்களுக்கு முன்னர், இந்தோனேசியாவில் அமெரிக்காவால் ஆசீர்வதிக்கப்பட்ட சுகார்ட்டோ தலைமையிலான இராணுவ சதிப்புரட்சி, மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை அகற்றியது. சதிப்புரட்சியை தொடர்ந்துகம்யூனிஸ்ட்கள், சோஷலிஸ்ட்கள் அனைவரும் நர வேட்டையாடப்பட்டு கொன்று குவிக்கப்பட்டனர். இந்தோனேசிய வரலாறு காணாத இனப்படுகொலையில் இலட்சக்கணக்கானோர் கொள்கைக்காக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

திபெத், ஜெர்மனி கலவரங்கள் - ஓர் ஒப்பீடு (வீடியோ)    
September 16, 2009, 3:30 pm | தலைப்புப் பக்கம்

சீனாவின் தீபெத் மாநிலத்தில் நடந்த கலவரங்கள் பற்றி சர்வதேச ஊடகங்கள் மாதக்கணக்காக பேசின. சீன அரச அடக்குமுறையை அம்பலப்படுத்தி, மனித உரிமை மீறல்களை கண்டித்துக் கொண்டிருந்தன. அதேநேரம் ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களை பொலிஸ் மிருகத்தனமாக அடக்குவதை வெறும் ஒரு நாள் செய்தியாக முடித்துக் கொள்கின்றன. கலவரங்களை கட்டுப்படுத்த காவல்துறை செய்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அங்கோலாவின் அலங்கோலம் : பனிப்போரின் பதிலிப் போர்    
July 31, 2009, 5:31 am | தலைப்புப் பக்கம்

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா – 12 இங்கிலாந்து அரசவம்சத்தின் கவர்ச்சி நட்சத்திரமான டயானா, அங்கோலாவில் கண்ணிவெடி அகற்றும் தொண்டராக சென்ற போது, தொலைக்காட்சிக் காமெராக்களும் பின்தொடர்ந்தன. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்நாட்டு யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட அங்கோலாவை அப்போது தான் பலர் “கண்டுபிடித்தார்கள்”. சர்வதேச அரசியல் அறிவுள்ளவர்களுக்கு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்    
July 30, 2009, 11:18 am | தலைப்புப் பக்கம்

மலேசியாவில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கு தண்டனையாக பிரம்பால் அடித்து சித்திரவதை செய்யப்படும் கொடுஞ்செயலை சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கைகள் கண்டித்து வந்துள்ளன. நாகரிக உலகிற்கு ஒவ்வாத பிரம்படி தண்டனைக் காட்சி (இதயம் பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்)ஒன்றின் வீடியோ, இணையத்தில் வெளிவந்த பின்னர் சில ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது. இதைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் மனிதம்

இலங்கையில் சீனப் பூச்சாண்டி    
July 25, 2009, 10:44 am | தலைப்புப் பக்கம்

இலங்கையில் மார்க்சிச-லெனினிச பாதையில் இயங்கி வரும் "புதிய ஜனநாயகக் கட்சி" யினரால் மாதமொருமுறை வெளியிடப்படும் வெகுஜனப் பத்திரிகையான "புதிய பூமி"யில் வந்த கட்டுரை இங்கே நன்றியுடன் மறுபிரசுரமாகின்றது.இலங்கையில் இந்திய அமெரிக்க மேலாதிக்கப் போட்டியை மறைக்கச் சீனப் பூச்சாண்டி- மோகன் -மே மாத முற்பகுதியில் "London Times" ஏட்டிலும், அதன் இணையத்தளத்திலும் இலங்கையின் போர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

தமிழரின் பாலியல் வேட்கை - ஒரு ஐரோப்பிய கண்ணோட்டம்    
July 18, 2009, 3:22 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்த ஒரு நெதர்லாந்து எழுத்தாளர் தனது அனுபவங்களை பதிவு செய்துள்ளார். ஐரோப்பியர்கள் தம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தமிழர்களும் தெரிந்து கொள்வது நல்லது. "Te gast in India" என்ற நூலில் இருந்து தமிழாக்கம் செய்து தருகிறேன். பல நூற்றாண்டிற்கு முந்திய இந்தியாவை தமிழ்நாட்டில் தரிசிக்கலாம். ஆரியரின் பழக்கமான புலால் உண்ணும் முறை இங்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

லைபீரியா: ஐக்கிய அடிமைகளின் குடியரசு    
July 12, 2009, 7:14 am | தலைப்புப் பக்கம்

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 10'யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே' என்று சொல்வார்கள். உள்நாட்டு யுத்தத்திலே மூழ்கிப் போயிருந்த, மேற்கு ஆபிரிக்க நாடான லைபீரியாவின் மீதான அமெரிக்கப் படையெடுப்புப்பற்றிய கதைகள் அடிபட்ட நேரத்தில் வந்த (முன்னாள் ஜனாதிபதி) புஷ்ஷின் ஆபிரிக்க விஜயம் அமெரிக்காவின் வருங்காலத் திட்டங்களை அறிவித்தது. நீண்ட காலமாகப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இந்தியாவில் கொந்தளிக்கும் உள்நாட்டுப் போர்    
June 25, 2009, 6:00 am | தலைப்புப் பக்கம்

"சுதந்திரத்திற்குப் பின்னர், எமது தேசத்தின் பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் மாவோயிஸ்ட்களிடம் இருந்து வந்துள்ளது." - இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் கல்கத்தா நகரில் இருந்து, 170 கி.மி. தொலைவில் உள்ள லால்கர் பிரதேசத்தை, மாவோயிஸ்ட்கள் தமது கட்டுப்பாட்டில் உள்ள, விடுதலைப் பிரதேசமாக பிரகடனம் செய்திருந்திருந்தனர். இந்த அறிவிப்பும் அதைத் தொடர்ந்த இராணுவ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஆப்கான் ஆக்கிரமிப்பின் அவலம் - நேரடி ரிப்போர்ட்    
June 20, 2009, 9:44 am | தலைப்புப் பக்கம்

தொடரும் ஆப்கான் போரும், அதன் விளைவாக ஏற்படும் அப்பாவி மக்களின் அவலமும் இன்று சர்வதேச கவனத்தை ஈர்ப்பதில்லை. அமெரிக்காவின் குண்டுவீச்சுகள் காரணமாக பொது மக்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன, நாள் தோறும் நூற்றுக்கணக்கானோர் மரணிக்கின்றனர், அல்லது அங்கவீனர் ஆகின்றனர். அதை விட பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வாழ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

இலங்கையில் காணாமற் போதல்: தடுப்பது எப்படி?    
June 18, 2009, 10:25 am | தலைப்புப் பக்கம்

சுனிலா அபயசேகர அவர்கள் இலங்கையின் ஒரு மதிப்புமிக்க பிரபலமான மனித உரிமைச் செயற்பாட்டாளர். இவர் இரண்டு பக்கத்திலும், அதாவது தமிழர்களிடையேயும் சிங்களவர்களிடையேயும் மிகுந்த மதிப்புப் பெற்றவர். இவருடைய மனித உரிமைகள் செயற்பாட்டிற்காக ஐ.நா. சபையினாலும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பினாலும் கெளரவிக்கப்பட்டுள்ளார்.கேள்வி: 3 இலட்சம் இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களில்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

இலங்கை இனப்பிரச்சினையின் பரிணாமம் - BBC வரலாற்று ஆவணப்படம்    
June 17, 2009, 3:32 pm | தலைப்புப் பக்கம்

இலங்கையில் சிங்கள-தமிழ் இனப் போரின் காரணிகளை வரலாற்றுப் பின்புலத்துடன் ஆராயும் BBC ஆவணப்படம். Evolution of the Ethnic War Part 1:Part...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

"முஸ்லிம்களை வெளியேற்றுவோம்!" - ஐரோப்பிய தொலைக்காட்சியில் ப...    
June 17, 2009, 7:24 am | தலைப்புப் பக்கம்

"லட்சக்கணக்கான கிரிமினல் முஸ்லிம்களை ஐரோப்பாவில் இருந்து வெளியேற்ற வேண்டும். அவர்களின் பிரஜாவுரிமை பறிமுதல் செய்யப்பட வேண்டும். முஸ்லிம் நாடுகளில் இருந்து குடியேற வருபவர்களை தடை செய்ய வேண்டும்." - டென்மார்க் தொலைக்காட்சியில் தீவிர வலதுசாரி வில்டர்சின் நேர்காணல்கடந்த ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்திற்கான தேர்தலில், தீவிர வலதுசாரிக் கட்சிகள் பல முதன்முறையாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

ஈரான் தேர்தல்: "எல்லா வாக்கும் இறைவனுக்கே!"    
June 14, 2009, 11:53 am | தலைப்புப் பக்கம்

"ஈரானிய அதிபர் தேர்தலில் அஹமதிநிஜாத் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தேர்தல் முடிவை ஏற்க மறுத்து தெஹ்ரான் வீதிகளில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன." மேற்குலகுடன் மோதல் போக்கை பின்பற்றும் கடும்போக்காளர் என வர்ணிக்கப்படும் அஹ்மதின்ஜாத் தேர்தலில் தோற்கடிக்கப்படுவார் என மேற்கத்திய ஊடகங்கள் பல ஆரூடம் கூறி வந்தன. அவருக்கு எதிராக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

துருக்கி/குர்து மக்களின் ஈழத்தமிழர் ஆதரவு அறிக்கை    
June 9, 2009, 4:09 pm | தலைப்புப் பக்கம்

"இலங்கையின் குர்தியர்கள் என அழைக்கப்படக்கூடிய ஈழத்தமிழரின் பிரதிநிதியாக உங்கள் முன் நிற்கிறேன். ஒடுக்கப்படும் சிறுபான்மை இனங்களான குர்தியரும், ஈழத் தமிழரும், ஏகாதிபத்தியத்திற்கெதிராக ஒருங்கிணைந்து போராடுவதன் மூலம் தான் தமது விடுதலையை வென்றெடுக்க முடியும்." துருக்கி, இஸ்தான்புல் நகரில், ICAD அமைப்பு ஒழுங்கு செய்த பத்திரிகையாளர் மகாநாட்டில் (17-5-2006) நான் ஆற்றிய உரையின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

நாடு கடத்தப்படும் நாதியற்ற தமிழீழம்    
June 5, 2009, 6:00 am | தலைப்புப் பக்கம்

"தமிழ் தேசியக் கூட்டணி போன்ற இனவெறிக் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும்." - பாதுகாப்பு செயலதிபர் கோத்தபாய ராஜபக்ஷஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான சுதந்திரக் கட்சியானது, ஹெல உறுமய, ஜே.வி.பி. ஆகிய சிங்கள கட்சிகளிடமிருந்து பல அரசியல் கொள்கைகளை கற்றுக் கொண்டுள்ளது. தமிழீழ கோரிக்கை எழுந்த பிரிவினைக்கான காரணிகளை இனங்கண்டு அழித்து, இலங்கையில் ஒற்றையாட்சியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்

கறுப்பினப் பேரழகியின் கிறிஸ்தவ சாம்ராஜ்யம்    
June 3, 2009, 3:10 pm | தலைப்புப் பக்கம்

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 8ஆப்பிரிக்க கண்டத்தில், எந்தவொரு ஐரோப்பிய வல்லரசாலும் காலனியாக்கப்படாத ஒரேயொரு நாடு எத்தியோப்பியா. 1896 ம் ஆண்டு, காலனிய விஸ்தரிப்புக்காக இத்தாலி நடத்திய போரில், எத்தியோப்பியப் படைகளிடம் அவமானகரமான தோல்வியை சந்தித்தது. துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்ற நவீன ஆயுதங்களை ஏந்தியிருந்த இத்தாலி இராணுவம், வாள், அம்பு-வில், போன்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

புலிகளின் வீழ்ச்சியும், சர்வதேச சூழ்ச்சியும்    
May 22, 2009, 4:37 am | தலைப்புப் பக்கம்

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைகள் ஓயப் போவதில்லை. ஆதரவாளர்களைப் பொறுத்த வரை சாகாவரம் பெற்ற மாமனிதராகிய பிரபாகரன் அவர்களின் இதயத்தில் குடியிருக்கலாம். நக்கீரன் போன்ற தமிழ் தேசிய நாளிதழ்கள் அதற்கான ஆதாரங்களையும் அள்ளிவீசலாம். உலகம் அதைக் கடந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்

வங்கத்தில் மையங்கொள்ளும் அரசியல் புயல்    
May 7, 2009, 7:24 pm | தலைப்புப் பக்கம்

பங்களாதேஷ்: முன்னர் கிழக்குப் பாகிஸ்தான், பின்னர் சுதந்திர பங்களாதேஷ். இப்போது நாம் காணும் வங்காளதேசம் முன்னர் எப்போதும் தற்போதைய எல்லைகளுடன் சுதந்திர நாடாக இருந்ததில்லை. பண்டையகால வரலாற்றின்படி பௌத்த வங்காளமாக, அசோகச் சக்கரவர்த்தியின் மௌரியச் சாம்ராஜ்ஜியமாக இருந்ததென்னவோ உண்மைதான். ஆனால், தற்கால எல்லைகள், எழுபதுகளில் ஏற்பட்ட இந்தியத் தலையீட்டினால் ஏற்பட்டன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

இலங்கை இனத்துவ அரசியலின் தொடக்கங்கள்    
May 3, 2009, 9:46 pm | தலைப்புப் பக்கம்

இலங்கையின் இனப்பிரச்சினை வரலாறு குறித்த ஆய்வாக "புதிய பூமி" பத்திரிகையில் இமயரவரம்பன் எழுதிவரும் கட்டுரைத் தொடரின் ஒரு பகுதியை இணைய வாசகர்களுக்காக இங்கே பதிவிடுகிறேன்.இனத்துவ அரசியலின் தொடக்கங்கள்இமயவரம்பன்அன்றைய தேசிய அரசியல் உருவாக்கத்திற் பங்களிக்கக் கூடியவர்களாகத் தமிழருஞ் சிங்களவருமே முன்னிலையில் நின்றனர். எனினும் வர்க்கமுஞ் சாதியும் அவர்களிடையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

9/11 மூன்றாவது கோபுர தகர்ப்பு மர்மம்    
April 30, 2009, 4:21 pm | தலைப்புப் பக்கம்

உங்களுக்குத் தெரியுமா? 9/11, நியூ யார்க், உலக வர்த்தக கழகத்தின் மூன்றாவது கோபுரம் ஒன்று இடிந்து விழுந்தது? ஆனால் மற்ற இரு கோபுரங்களையும் விமானங்கள் வந்து மோதியது போல, மூன்றாவது கோபுரத்தை எந்த விமானமும் மோதாமலே இடிந்து விழுந்தது. நியூ யார்க் நகரில் இருந்து பி.பி.சி. தொலைக்காட்சிக்காக நேரடி அறிவிப்புகளை செய்து கொண்டிருந்த செய்தியாளர், கட்டடம் இடிந்து விழுவதை 23...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் !    
April 29, 2009, 4:21 pm | தலைப்புப் பக்கம்

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 4முதன் முதல் ஐரோப்பிய வெள்ளையரைக் கண்ட ஆப்பிரிக்க கறுப்பர்கள் என்ன நினைத்திருப்பார்கள்? “நீலக் கண்களைக் கொண்ட, வெண்ணிற மேனியரைப் பார்த்த ஆப்பிரிக்கர்கள் கடவுள்கள் வந்து விட்டதாக நினைத்தார்கள்.” என்று ஐரோப்பிய மையவாத வரலாற்றாசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். அதை அப்படியே நாமும் நம்பி வந்திருக்கிறோம். ஆனால் கடவுள் என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

தமிழீழம் சாத்தியமா? - ஓர் ஆய்வு    
April 21, 2009, 2:33 pm | தலைப்புப் பக்கம்

-“தமிழீழத்தைவிட பரப்பளவில் சிறிய நாடுகள்கூட சுதந்திர தேசங்களாக, ஐ. நா. சபை அங்கத்தவர்களாக உள்ளன”-“அரபுமொழி பேசும் மக்களுக்கு 18 தேசங்கள் உள்ளன”-“உலகில் பல்வேறு மொழிபேசும் மக்களுமதமக்கெனத் தேசங்களைக் கொண்டுள்ளனர்!”“பல்வேறு நாடுகளில் வாழும் தமிழருக்கு மட்டும் ஒரு நாடு இல்லை!!”பலருக்கும் பரிச்சயமான மேற்குறிப்பிட்ட வாசகங்கள் இலங்கையில் தமிழ்த் தேசிய அரசியலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் உலகம்

ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை    
April 20, 2009, 5:00 am | தலைப்புப் பக்கம்

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 3ஐரோப்பியர்களின் நாகரீகம் எங்கே தோன்றியது என்று கேட்டால், கிரேக்கத்தை காட்டுவார்கள். கிறிஸ்துவுக்கு முன், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, முழு ஐரோப்பிய கண்டத்திலும் கிரேக்கர்கள் மட்டுமே வளர்ச்சியடைந்த நாகரீக சமுதாயத்தை பெற்றிருந்தனர். இருப்பினும் அன்றைய கிரேக்கர்கள், பிற ஐரோப்பியருடன் எந்த தொடர்பையும் வைத்திருக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

அமெரிக்காவின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது [வீடியோ]    
April 19, 2009, 9:00 pm | தலைப்புப் பக்கம்

"மீள முடியாத கடனுக்குள் மூழ்கியிருக்கும் அமெரிக்காவால் வெளி நாடுகளில் இருக்கும் இராணுவ தளங்களை தொடர்ந்தும் பராமரிக்க இயலுமா?" சோவியத் யூனியனைப் போல ஐக்கிய அமெரிக்க குடியரசின் வீழ்ச்சிக் காலம் நெருங்கி விட்டதாக கூறுகிறார், எழுத்தாளரும் பதிவருமான Dmitry Orlovஅவருடனான நேர்காணலை Russia Today தொலைக்காட்சி ஒளிபரப்பியது. America must work on starting a new economy and not restarting the old one or it will resemble the former Soviet Union, says author and blogger Dmitry Orlov.'The collapse...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

இத்தாலியன் குடுமி சும்மா ஆடாது    
April 19, 2009, 9:05 am | தலைப்புப் பக்கம்

கடந்த வருடம், உலகில் இதற்கு முன்னர் நடைபெறாத அதிசயம் ஒன்று நடந்தது. இத்தாலி தனது காலனியாதிக்க ஆக்கிரமிப்பிற்கு நஷ்டஈடாக, லிபியாவிற்கு 5 பில்லியன் டாலர் வழங்கியது. லிபிய மாணவர்களுக்கு இத்தாலியில் உயர்கல்வி பெறுவதற்கு புலமைப்பரிசில் திட்டம் ஒன்றையும் கூடவே அறிவித்தது. அகமகிழ்ந்த லிபிய தலைவர் கடாபியும் ஓகஸ்ட் 30 ம் திகதியை, இத்தாலி-லிபிய நட்புறவு நாளாக அறிவித்தார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

எண்ணைக் கிணறு வெட்ட வகுப்புவாதப் பூதம் கிளம்பியது    
April 18, 2009, 2:09 pm | தலைப்புப் பக்கம்

“எனக்குத் தெரிந்த ஒரு ஈராக்கிய வாலிபர் பொலிஸ் படையில் புதிதாகச் சேர்ந்தபொழுது ஏதோ ஒரு அமெரிக்கத் தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்று பயிற்சியளித்தது. பெரும்பாலான பயிற்சி நேரங்களை அந்த வாலிபர் ஜீப் வண்டி ஓட்டுவதிலும் ஆயுதங்களைக் கையாள்வதிலும் செலவிட்டார். பயிற்சி முடிந்த பின்பு ஒரு நாள் வேலைக்கு நியமித்துள்ளதாக அழைப்பு வந்தது. அவரிடம் ஒரு ஜீப்வண்டியைக் கொடுத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

கம்போடியாவின் கண்டம் ஒரு இந்துக் கோயில்    
April 16, 2009, 6:59 am | தலைப்புப் பக்கம்

"அங்கர் வட்" - கம்போடியாவிற்குச் சிறப்புச் சேர்க்கும் ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த இந்துக் கோவில். உலக அதிசயங்களில் ஒன்றான இந்தப் புராதன சின்னத்தைப் பார்ப்பவர்களுக்கு மறைந்து போன கம்போடிய பொற்காலம் நினைவிற்கு வரும். அன்றைய கிமேர் பேரரசான கம்போடியாவில் இந்துநாகரிகம் பரவியிருந்தபோது இந்த மாபெரும் கோவில் கட்டப்பட்டது. (சிலர் நினைப்பது போல, கம்போடியா இராஜராஜ சோழனின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

காங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம்    
April 13, 2009, 11:23 pm | தலைப்புப் பக்கம்

(ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 2)ஆப்பிரிக்க கண்டத்தின் வரைபடத்தை ஒருமுறை பார்த்தீர்களானால், தேச எல்லைகள் பென்சிலால் கோடு கீறியது போல இருக்கும். உண்மையில் அப்படித்தான் ஐரோப்பிய வல்லரசுகள் ஆப்பிரிக்காவை தமக்குள் பங்கு பிரித்துக் கொண்டார்கள்! 19 ம் நூற்றாண்டில், ஐரோப்பாக் கண்டத்தில் தேசிய அரசுகள் உருவாக ஆரம்பித்திருந்தன. அப்போதெல்லாம் காலனிகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏    
April 12, 2009, 8:38 am | தலைப்புப் பக்கம்

"மோசெஸ் இஸ்ரேலியருக்கு செல்வத்தையும், அதிகாரத்தையும் வாக்களித்தார். ஆனால் இயேசு கிறிஸ்துவோ ஏழ்மையையும், அதிகாரத்திற்கு அடி பணிதலையும் போதித்தார். மோசெஸ் பழிக்குப் பழி, கண்ணுக்குக்கு கண் வாங்கு என்று சொன்னது இயேசுவிடம் எடுபடவில்லை. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு எனக் கூறினார்." ரோமர் காலத்தில் வாழ்ந்த செல்சுஸ் என்ற தத்துவஞானி, கிறிஸ்தவ மதம் பற்றி...தொடர்ந்து படிக்கவும் »

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 1    
April 10, 2009, 7:50 am | தலைப்புப் பக்கம்

"ஆப்பிரிக்கா" என்றவுடன், அபிவிருத்தியின்மை, தொற்று நோய், பட்டினிச்சாவு, ஏழ்மை இவற்றிற்கு ஒத்த கருத்துள்ள சொல்லாக பலரால் புரிந்து கொள்ளப்படுகின்றது. உண்மையில் அவ்வாறான கருத்துகள் வேண்டுமென்றே மேற்குலக ஊடகங்களால் பரப்படுகின்றன. "இருண்ட கண்டம்" என்று நிறவாதம் சூட்டிய பெயர், அன்றாட பேச்சு வழக்காகி விட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஆப்பிரிக்கா பற்றிய தவறான கருத்துகளை,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பிரிட்டிஷ் தொழிற்சாலையை கைப்பற்றிய தொழிலாளர்கள்    
April 8, 2009, 4:26 pm | தலைப்புப் பக்கம்

பிரிட்டனில் மூன்று கார் உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றிய தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து விட்டு, தொழிற்சாலையை மூடிவிட நிர்வாகம் முயன்ற வேளை, தொழிலாளர்கள் தொழிற்சாலையை கைப்பற்றியுள்ளனர். அது தொடர்பான காணொளி கீழே: Hundreds of workers occupy three Visteon car manufacturing factories in Britain after the management closed them down, laying off the entire workforce with no notice, violating their contracts. This is reminiscent of the factory occupations of the 1970s. On Monday 6th April...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

திரையில் கலாச்சார மோதல், மறைவில் வல்லரசு மோதல்    
April 6, 2009, 7:37 am | தலைப்புப் பக்கம்

மேற்குலகம் சீனாவுடன் நேரடி மோதல்களை, அல்லது எதிர்கால யுத்தமொன்றை தவிர்த்து வந்தாலும், வேறு விதமாக சொன்னால், சீனாவை நட்புசக்தியாக காட்டினாலும், திரைமறைவில் பனிப்போர் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் சீனாவில் உற்பத்தி செய்த பண்டங்கள் ஐரோப்பிய-அமெரிக்க சந்தைகளில் வந்து குவிவதால், திறந்த பொருளாதார கொள்கையில் இதெல்லாம் சகஜம் என்பதால், அதனை தடுக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

1418 ம் ஆண்டு - சீனர்கள் உலகத்தை கண்டுபிடித்தனர்    
April 5, 2009, 10:19 am | தலைப்புப் பக்கம்

"செங் ஹெ"(Zheng He 1371–1433), சீன தேசத்து கடற்படை அட்மிரல். உலகம் சுற்றும் கடற்பயணங்களை மேற்கொண்ட ஐரோப்பிய மாலுமிகளான மகலன், கொலம்பஸ் போன்றோர் வரிசையில் சேர்த்து பார்க்கத்தக்கவர். கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன்னரே செங் ஹெயின் மாலுமிகள் அங்கே போயிருக்கலாம் என கருதப்படுகின்றது. அந்தக் காலத்திலேயே கட்டப்பட்ட மாபெரும் படைக்கலக் கப்பல், அதனோடு பதின்மக்கணக்கான சிறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

கறுப்பர்களுக்கு தனியான பஸ் சேவை: இத்தாலியின் இனஒதுக்கல்    
April 4, 2009, 4:58 pm | தலைப்புப் பக்கம்

கறுப்பர்களுக்கும், வெள்ளையருக்கும் வெவ்வேறு பேரூந்து சேவை. இது நடப்பது நிற வெறி தென் ஆப்பிரிக்காவில் அல்ல. நாகரிக உச்சியில் இருக்கும் மேற்கு ஐரோப்பிய நாடான இத்தாலியில். நவ-பாசிச கட்சியுடன், வலதுசாரிக் கட்சிகள் கூட்டுச் சேர்ந்து ஆட்சி நடத்தும் இன்றைய இத்தாலியில்; வெளிநாட்டு குடியேறிகளுக்கு எதிரான சட்டங்கள், நடவடிக்கைகள் இத்தாலியில் புதிது புதிதாக அறிமுகப்...தொடர்ந்து படிக்கவும் »

வட கொரியா: அணு குண்டு இராஜதந்திரம்    
April 1, 2009, 1:05 am | தலைப்புப் பக்கம்

நாடுகள் அணுகுண்டு தயாரித்து வைத்திருப்பதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன: ஒரு அந்தஸ்த்தின் அடையாளம், வல்லரசாகிவிட்டதற்கான அறிவிப்பு, பாதுகாப்பின் உறுதிப்பாடு, எதிரிநாட்டைப் பேரழிவிற்குள்ளாக்கும் நோக்கம் என இன்னபிற காரணங்கள். ஆனால் வட கொரியா அணுகுண்டு தயாரித்ததன் நோக்கம் வேறு. தற்கால சர்வதேச அரசியலில் அந்தக் குறிப்பிட்ட காரணமே முக்கியத்தவம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

புதிய தாலிபான் யுத்த தந்திரங்கள்    
March 31, 2009, 3:07 am | தலைப்புப் பக்கம்

"நான் தனிப்பட்ட முறையில் அந்த அமெரிக்க இராணுவ முகாம் கொமாண்டருடன் உரையாடியிருக்கிறேன். எமது ஊருக்கு அருகில் அந்த முகாம் இருந்தது. 22 ம் திகதி டிசம்பர் மாதம்(2002) நள்ளிரவு திடீரெனச் செல்கள் விழுந்து வெடிக்கும் சத்தம் கேட்டது. அடுத்த நாள் நான் போய் பார்த்த போது, முகாம் முற்றிலும் சேதமாகியிருந்தது. யாரும் உயிரோடு தப்பியதாகத் தெரியவில்லை. " - பாகிஸ்தான் எல்லையிலிருந்து சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

பாகிஸ்தானில் மதவாத அரசியல் கட்சிகளின் வளர்ச்சி    
March 30, 2009, 10:40 am | தலைப்புப் பக்கம்

நவீன உலகின் "முதலாவது இஸ்லாமியக் குடியரசு" பாகிஸ்தான் என்பது பலர் மறந்துவிட்ட விடயம். ஆனால் அந்த இஸ்லாமியக் குடியரசு, புதிய தேசிய அரசின் அடிப்படையாக இருந்ததே தவிர, மதம் அங்கே அரசாளவில்லை. அதாவது பிரிட்டிஸார் சொல்லிக் கொடுத்தபடிதான் பாகிஸ்தானின் அரசு நிர்வாகம் அமைந்தது. பஞ்சாபியர், சிந்திகள், பட்டாணியர் எனப் பல்வேறு மொழி பேசும் இன மக்களையும் மதம் மட்டுமே இணைக்கிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

சூடான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல், ஈரானுக்கு எச்சரிக்கை?    
March 28, 2009, 11:02 am | தலைப்புப் பக்கம்

வட சூடான் பகுதியில், இரண்டு இஸ்ரேலிய போர் விமானங்கள் ஒரு வாகனத் தொடரணியை குண்டு வீசித் தாக்கியுள்ளன. ஹமாசிற்கு ஈரானில் இருந்து ஆயுத விநியோகம் செய்த வாகனங்களையே தாக்கியதாக இஸ்ரேல் அறிவித்தது. "போர்ட் சூடான்" என்ற துறைமுக நகரில் இருந்து எகிப்து நோக்கி சென்ற வாகனங்கள், பாலைவனப் பகுதியில் விமானத் தாக்குதலுக்கு உள்ளாகின. கொல்லப்பட்டவர்கள் எரித்திரிய அகதிகள் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

இலங்கை நிலவரம்: ஐ.நா. மன்ற அறிக்கை [வீடியோ]    
March 28, 2009, 7:47 am | தலைப்புப் பக்கம்

இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் போரை தற்காலிகமாக நிறுத்தி, மனிதாபிமான பிரச்சினைக்கு முடிவு காணும் படி, ஐ.நா.சபையும், அமெரிக்காவும், பிரிட்டனும் வற்புறுத்தியுள்ளன. ஐ.நா.மனிதாபிமான பணிகளுக்கான செயலதிபர் ஜோன் ஹோல்ம்ஸ், பாதுகாப்பு கவுன்சிலில் தான் சமர்ப்பித்த அறிக்கை குறித்து, பத்திரிகையாளர் மாநாட்டில் அளித்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

கறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள் !    
March 27, 2009, 8:53 pm | தலைப்புப் பக்கம்

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 6 ருவான்டா, 1994 ம் ஆண்டு, நவீன உலகை உலுக்கிய இன அழிப்பு நடவடிக்கை, ஒரு வானொலி அறிவிப்புடன் ஆரம்பமாகியது: “ஹூட்டு சகோதரர்களே! எம்மை இதுவரை காலமும் அடிமைகளாக அடக்கி ஆண்டு வந்த துட்சி கரப்பான் பூச்சிகளை அழிக்கும் காலம் வந்துவிட்டது.” இனவாத வெறுப்பை கக்கும் அந்த அறிவிப்பை செய்த “மில் கொலின்ஸ் சுதந்திர வானொலி” ஹூட்டு பாஸிச...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

இடம்பெயர்ந்த வன்னித் தமிழர் நெருக்கடி - காணொளி    
March 26, 2009, 5:44 pm | தலைப்புப் பக்கம்

வவுனியாவில் போரினால் இடம்பெயர்ந்த மக்களை தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்கள் சில, கடந்த 13 வருடங்களாக இயங்கி வருகின்றன. அரசு வாக்களித்த படி, இவர்களை மீளக் குடியேற்றுவதற்கான நிலங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. Ya TV (ஐ.நா. நிதியில் இயங்கும் தன்னார்வ நிறுவனம்) தொலைக்காட்சி சேவை, வாழும் மக்கள் தமது பிரச்சினைகளை, , நேரே சென்று கண்டு பதிவு செய்துள்ளது. மக்களின் குறைபாடுகள் குறித்து,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

"Armsdog Millionaire": ஆயுத வியாபாரிகளின் விளம்பரப் படம்    
March 25, 2009, 12:51 pm | தலைப்புப் பக்கம்

பாலஸ்தீனிய மக்கள் மீது பரிசோதித்த ஏவுகணைகளை, இந்திய சந்தையில் விற்பதற்காக, இஸ்ரேலிய ஆயுத உற்பத்தி நிறுவனமான Rafael Advanced Defense Systems தயாரித்த விளம்பரப்படம் இது. "தகாத பாதுகாப்பு விளம்பரப்படம்" என்ற கண்டனத்தைப் பெற்றுள்ளது. Rafael Advanced Defense Systems, Israel's armament development authority, has launched a promotional film that was dubbed "the most atrocious defense video of all time" by Wired, the popular technology magazine.Israeli Armsdog-Millionaires...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் நாட்டில் நக்சலைட்களின் மீள்வருகை    
March 24, 2009, 6:01 pm | தலைப்புப் பக்கம்

Growing again in the shadowsby C Shivakumarநாயகன் கோட்டை, தருமபுரி மாவட்டம். தமிழ் நாடு மாநிலத்தில், நக்சலைட் தலைவர்களான அப்பு, பாலன் ஆகியோருக்கு சிலை வைக்கபட்டுள்ள ஒரேயொரு இடம் இது தான். "எமது இயக்கம் உச்சத்தில் இருந்த 1970 ம் ஆண்டு காலப்பகுதியில், சாதிப் பாகுபாட்டின் சின்னங்களான இரட்டைக் குவளைகள் முறையை ஒழிப்பதில் வெற்றி கண்டோம்." இவ்வாறு கூறினார் நக்சலைட் இயக்கத்தின் முன்னோடியான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சூடான்: இஸ்லாமிய வடக்கும், கிறிஸ்தவ தெற்கும்    
March 22, 2009, 11:41 pm | தலைப்புப் பக்கம்

ஆபிரிக்காவின் நிலப்பரப்பால் பெரிய நாடான சூடானின் அரபு-இஸ்லாமியப் பேரினவாத அரசுக்கும், தென்பகுதி ஆபிரிக்கப் பழங்குடியின மக்களின் விடுதலை இயக்கத்திற்கும் இடையில் நடந்த, இலட்சக்கணக்கான மக்களைப் பலிகொண்ட இருபதுவருட யுத்தம் மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தினால், வெளிநாட்டு நிர்ப்பந்தங்களால், கென்யாவில் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டு, தீர்வு காணப்பட்டுள்ளது. மத்திய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

எல்சல்வடோர் புரட்சியாளர்களின் தேர்தல் வெற்றி    
March 20, 2009, 2:44 pm | தலைப்புப் பக்கம்

பத்தாண்டுகளுக்கு முன்னர் எல் சல்வடோர் ஏழை மக்களுக்காக ஆயுதமேந்தி போராடிய FMLN என்ற இயக்கம், கடைசியாக நடந்த தேர்தலில் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. என்பதுகளில் FMLN இயக்கத்தினர் ஆட்சியை கைப்பற்றுமளவிற்கு பலமாக இருந்த போதிலும், ஆளும் கட்சிக்கான அமெரிக்க உதவி காரணமாக சமாதான பேச்சுவார்த்தைக்கு தள்ளப்பட்டனர். அந்த இயக்கம் கிறிஸ்தவ...தொடர்ந்து படிக்கவும் »

இலங்கை சமர்க்கள நிலவரம்: சுனந்த தேசப்பிரியவுடன் நேர்காணல்    
March 20, 2009, 9:08 am | தலைப்புப் பக்கம்

தன்னார்வ தொலைக்காட்சி நிறுவனமான "The Real News TV", இலங்கையின் தற்போதைய நிலமை குறித்து அறிவதற்காக, பிரபல ஊடகவியலாகர் சுனந்த தேசப்பிரியவுடன் நடத்திய நேர்காணல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

வாக்குரிமைக்காக போராடிய பெண்ணிய தீவிரவாதிகள்    
March 19, 2009, 10:36 am | தலைப்புப் பக்கம்

பெண்களின் வாக்குரிமை சில "பயங்கரவாதிகளின்" போராட்டத்தினால் கிடைத்த பலன் என்பது, இன்று தேர்தல் காலங்களில் வாக்களிக்கும், அல்லது வாக்களிக்காத பெண்கள் பலருக்கு இன்னமும் தெரியாத உண்மை. பாராளுமன்ற ஜனநாயகம் தோன்றிய ஐரோப்பாவில், 19 ம் நூற்றாண்டு வரை தேர்தலில் வாக்களிப்பது ஆண்களின் ஏகபோக உரிமையாக இருந்தது. வீட்டுவேலை செய்வதே பெண்களுக்கு விதிக்கப்பட்ட கடமை, என்ற சிந்தனை...தொடர்ந்து படிக்கவும் »

போக்கிரிகளின் புகலிடம் அமெரிக்கா - ஒரு வரலாற்று மீள்பார்வை    
March 18, 2009, 11:48 am | தலைப்புப் பக்கம்

ஐரோப்பிய நாடுகளில் வந்து குடியேறும் மக்கள், வறுமை காரணமாக புலம்பெயர்ந்த பரதேசிகள், என்ற எண்ணம் ஐரோப்பியரின் மனதில் உள்ளது. அவர்கள் பெரும்பான்மை சமூகத்துடன் ஒத்துப்போகாது, தமது பிற்போக்கு கலாச்சாரத்தை கட்டிபிடித்துக் கொண்டு இருப்பதாகவும், அதிகளவு குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும் தப்பெண்ணம் நிலவுகின்றது. ஆனால் இதே ஐரோப்பியர்கள் ஒரு காலத்தில் அமெரிக்கா சென்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

பொருளியல்: கடன் நெருக்கடி உருவானது எப்படி?    
March 17, 2009, 2:23 pm | தலைப்புப் பக்கம்

வீட்டுக் கடன் நெருக்கடி உருவானது எப்படி? ஒரு போதும் இறங்காது என நம்பப்பட்ட வீடுகளின் விலைகள் வீழ்ச்சியடைந்தது எப்படி? அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்கவாறு தயாரிக்கப்பட்ட விவரணப் படம். The Crisis of Credit VisualizedThe Crisis of Credit Visualized from Jonathan Jarvis...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம் நிதி

வெனிசுவேலாவில் தொழிலாளர் நிர்வகிக்கும் தொழிற்சாலை ( வீடியோ)    
March 16, 2009, 8:03 pm | தலைப்புப் பக்கம்

வெனிசுவேலாவில் 2006 ம் ஆண்டிலிருந்து, தொழிற்சாலை நிர்வாகத்தை தொழிலாளர்கள் பொறுப்பெடுத்து நடத்துவது அதிகரித்து வருகின்றது. முதலாளிகள் நட்டத்தில் இயங்குவதாகக் கூறி தொழிலகத்தை மூடுவதற்கு எத்தனிக்கும் வேளை, உற்பத்தி சாதனங்களை கையகப்படுத்தும் தொழிலாளர்கள், மனேஜர்களையும் விரட்டி விட்டு தாமே நடத்துகின்றனர். விற்பனையில் கிடைக்கும் லாபத்தை தொழிலாளர்கள் சமமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் உலகம்

கிரீஸின் மனித உரிமை மீறல்கள்: ஐரோப்பாவின் களங்கம்    
March 14, 2009, 11:16 pm | தலைப்புப் பக்கம்

கிரீஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆரம்ப கால அங்கத்துவ நாடுகளில் ஒன்று. அதே நேரம் ஐரோப்பாவில் மனித உரிமைகள் மீறப்படும் குற்றச் சாட்டுகளிலும் கிரீஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அண்மையில் ஆப்கானிய அகதி ஒருவரை போலிஸ் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்து கொன்ற சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது. பெப்ருவரி 15 ம் திகதி இடம்பெற்ற அந்த ஆப்கானிய அகதியின் மரணம் தொடர்பாக, அவரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

மேற்குலகிலும் தடுப்பு முகாம்கள் இருக்கின்றன - இதோ ஆதாரம்    
March 14, 2009, 7:15 pm | தலைப்புப் பக்கம்

இலங்கை அரசு வன்னித் தமிழரை தடுப்பு முகாம்கள் அடைத்து வைப்பதாக, மேற்குலக நாடுகளுக்கு முறைப்பாடு செய்பவர்கள், ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இதே மேற்குலக நாடுகள் தான், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களை, தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தின. அது மட்டுமல்ல, தற்போதும் இந்த தடுப்பு முகாம்கள், மனித உரிமைகள் பற்றி வாய்கிழிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் மனிதம்

கிரீஸில் புரட்சிகர ஆயுதப்போராட்டம் ஆரம்பம்    
March 14, 2009, 9:26 am | தலைப்புப் பக்கம்

ஏதென்ஸ் நகரத்தில், அமெரிக்காவின் சர்வதேச வங்கியான City Bank தலைமைக் கட்டிடத்தை கார்க் குண்டு வைத்து தகர்க்க முயற்சி. 125 கிலோ குண்டு வெடித்தாலும் சேதம் அதிகம் இல்லை. பத்திரிகைகளுக்கு அனுப்பபட்ட புரட்சிகர யுத்தம் என்ற அமைப்பின் உரிமை கோரல் கடிதம், "நிதி நெருக்கடிக்கு பொறுப்பான, சர்வதேச மூலதனத்தின் கிரிமினல் தலைமையகம் City Bank..." என்று தமது செயலை நியாயப்படுத்தி உள்ளது. இன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

போருக்குப் பின் ஈழத்தமிழருக்கு தீர்வு வருமா?    
March 13, 2009, 5:53 pm | தலைப்புப் பக்கம்

பிரபல ஆங்கிலேய பத்தி எழுத்தாளர் Gwynne Dyer இலங்கை இனப்பிரச்சினை பற்றி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்: மாபெரும் வெற்றிக்குப் பின்னால் மாபெரும் தவறுகள் இழைக்கப்படுகின்றன. இலங்கை 26 ஆண்டு கால தமிழ் பிரிவினைவாதத்திற்கு எதிரான தீர்மானகரமான வெற்றியை நோக்கி செல்கின்றது. அதேநேரம் மாபெரும் மாபெரும் தவறை செய்யும் நிலையில் உள்ளது.சண்டே லீடர் பத்திரிக்கை ஆசிரியர் லசந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

திருமணங்கள் கிரிமினல்களால் நிச்சயிக்கப்படுகின்றன    
March 12, 2009, 6:24 pm | தலைப்புப் பக்கம்

வெளிநாடுகளில் குற்றச் செயல்களில் ஈடுபடும் தமிழர்களைப் பற்றிய செய்திகளை நமது தமிழ் ஊடகங்கள் ஒரு நாளும் கண்டு கொள்வதில்லை. அவர்கள் பிடிபட்டால் அந்த செய்தியை இருட்டடிப்பு செய்து விடுகின்றன. ஆனால் அதற்கு மாறாக இலங்கை அரசு, அல்லது சிங்கள ஊடகங்கள் அவற்றை ஊதிப் பெரிதாக்கி, திரிபுபடுத்தி, கண், மூக்கு வைத்து வெளியிடுகின்றன. அண்மைக்காலமாக வெளிநாடுகளில் போலீசிடம் மாட்டிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

நைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் !    
February 28, 2009, 3:28 am | தலைப்புப் பக்கம்

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 4 முதன் முதல் ஐரோப்பிய வெள்ளையரைக் கண்ட ஆப்பிரிக்க கறுப்பர்கள் என்ன நினைத்திருப்பார்கள்? “நீலக் கண்களைக் கொண்ட, வெண்ணிற மேனியரைப் பார்த்த ஆப்பிரிக்கர்கள் கடவுள்கள் வந்து விட்டதாக நினைத்தார்கள்.” என்று ஐரோப்பிய மையவாத வரலாற்றாசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். அதை அப்படியே நாமும் நம்பி வந்திருக்கிறோம். ஆனால் கடவுள் என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் வரலாறு

கொலம்பியா: தென் அமெரிக்காவின் வியட்நாம்    
February 26, 2009, 10:07 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்கக் கண்டத்தைக் 'கண்டுபிடித்த' கிறிஸ்டோபர் கொலம்பஸின் நினைவாக அந்த நாட்டிற்குக் கொலம்பியா எனப் பெயர் சூட்டப்பட்டது. அதன் தலைநகர் போகோட்டாவில் இன்றைய ஜனாதிபதி தனது பதவியேற்பு வைபவத்தை கொண்டாடிக் கொண்டிருந்தார். நாட்டின் தீராத பிரச்சினையான தீவிரவாத இயக்கங்களை ஒழிப்பேன் என புதிய ஜனாதிபதி விழாமேடையில் சூளுரைத்துக் கொண்டிருந்த சமயம் , எங்கிருந்தோ வந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

தென் அமெரிக்க ஏழைகளின் விடுதலை போராளிகள் FARC    
February 25, 2009, 8:25 pm | தலைப்புப் பக்கம்

கொலம்பியா நாட்டின் FARC போராளிகள் பயங்கரவாதிகளல்லர், அவர்கள் ஏழைகளின் விடுதலைப் போராளிகள். Al Jazeera ஊடகவியலாளர் Phil Rees, FARC இயக்கத்தினுள் இருந்து வழங்கும் உள்ளக அறிக்கை. சி.ஐ.ஏ. ஒரு காலத்தில் பயங்கரவாதிகள் கையேடு ஒன்றை பிரசுரித்ததை நினைவு கூறுகின்றார். ஒருவரின் பயங்கரவாதி இன்னொருவரின் விடுதலைப் போராளி எனற தத்துவத்தை நினைவு கூறுகின்றார். America's Backyard. 17 Feb 09 - Pt 1Part...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

இலங்கை அரச பயங்கரவாதம் பற்றிய ஆவணப்படம்    
February 23, 2009, 3:37 pm | தலைப்புப் பக்கம்

இலங்கையில் நடக்கும் போரை, சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு போரின் ஓர் அங்கமாகப் பார்க்க வேண்டும் என்று கூறுகின்றது இலங்கை அரசு. புலிகள் தமக்கு விடுதலைப் போராளிகள் என்கின்றனர் தமிழர்கள். "ஒருவரின் பயங்கரவாதி, இன்னொருவரின் விடுதலைபோராளி" என்ற தத்துவத்தில் இருந்து, இலங்கைப் பிரச்சினையை அலசுகிறார் மேற்கத்திய ஊடகவியலாளர் Phil Rees (Al Jazeera). Dining with terrorists - Divided Island - 21 Feb 09 - Part 1Dining with terrorists - Divided Island - 21 Feb 09 -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் நிகழ்படம்

துபாய் என்ற கனவுலகம் கானல்நீராகின்றது    
February 20, 2009, 12:21 pm | தலைப்புப் பக்கம்

துபாய், ஒரு காலத்தில் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், விண்ணைத் தொடும் கட்டிடங்களும், கடலுக்குள் செயற்கைத்தீவுகளும் கட்டிக் கொண்டிருந்தது. அந்த நாட்டின் வளர்ச்சிக்கு வானமே எல்லை, என்று உலகம் பார்த்து வியந்து கொண்டிருந்தது. கடந்த வருடம் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடி, துபாயின் பொருளாதாரத்தை வளரவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டது. வானத்தை நோக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

"நலன்புரி முகாம்": தமிழ் மக்களை தனிமைப்படுத்தும் கிராமம்    
February 13, 2009, 6:20 am | தலைப்புப் பக்கம்

போர் நடைபெறும் இடங்களில் இருந்து தப்பி வரும் தமிழ் மக்களை, நலன் புரி முகாம்கள் என்ற பெயரில் இலங்கை அரசு தங்க வைத்து வருகின்றது. ஆனால் முட்கம்பி வேலிகளால் தனிமைப்படுத்தப்படும், இந்த முகாம்களை விரிவு படுத்தி மாதிரி கிராமங்களாக மாற்றி வருகின்றது. விடுதலை செய்வது என்ற பெயரில் மக்களை வதைக்கும் இலங்கை அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. போராளிகளையும், மக்களையும் பிரித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

பெல்ஜியம்: ஐரோப்பியச் சிறுபான்மையினர் பிரச்சினை    
February 12, 2009, 5:11 pm | தலைப்புப் பக்கம்

பெல்ஜியத்தின் தொழிற்புரட்சி வரலாற்றில் முன்னணி வகித்த துறைமுக நகரம் அன்ட்வேர்ப்பன். இரண்டாம் உலகப் போர்முடிவின் பின்னர் பெல்ஜியம் அமெரிக்க நிதியுதவியால் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றானது. இந்தப் பொருளாதார முன்னேற்றம் காரணமாக அடித்தட்டு பெல்ஜியத் தொழிலாளர் வர்க்கம் நடுத்தர நிலைக்கு உயர்ந்தனர். இதனால் ஏற்பட்ட தொழிலாளர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

7/7 லண்டன் குண்டுவெடிப்பு ஒரு உள்வீட்டு சதியா?    
February 11, 2009, 9:25 pm | தலைப்புப் பக்கம்

7/7/2005 ல், லண்டன் சுரங்க ரயில் வண்டிகளில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுவெடிப்புகள், பிரிட்டிஷ் புலனாய்வுப்பிரிவினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட உள்வீட்டு சதியா? சம்பந்தப்பட்ட "பயங்கரவாதிகள்", லண்டன் மாநகரப் பாதுகாப்பு பயிற்சிக்காக வேலைக்கமர்த்தப்பட்ட அப்பாவி முஸ்லீம் இளைஞர்களா? இது போன்ற சந்தேகங்களை கிளப்பும் வீடியோ நீண்ட காலமாகவே இணையத்தில் காணக்கிடைக்கிறது. ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் மனிதம்

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 1    
February 7, 2009, 5:43 am | தலைப்புப் பக்கம்

“ஆப்பிரிக்கா” என்றவுடன், அபிவிருத்தியின்மை, தொற்று நோய், பட்டினிச்சாவு, ஏழ்மை இவற்றிற்கு ஒத்த கருத்துள்ள சொல்லாக பலரால் புரிந்து கொள்ளப்படுகின்றது. உண்மையில் அவ்வாறான கருத்துகள் வேண்டுமென்றே மேற்குலக ஊடகங்களால் பரப்பப்படுகின்றன. “இருண்ட கண்டம்” என்று நிறவாதம் சூட்டிய பெயர், அன்றாட பேச்சு வழக்காகி விட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஆப்பிரிக்கா பற்றிய தவறான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் மனிதம்

ஸ்டாலினால் வாக்களிக்கப்பட்ட யூத தாயகம்    
February 4, 2009, 10:21 pm | தலைப்புப் பக்கம்

மத்திய-கிழக்கில் இஸ்ரேல் உருவாகுவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே, 1928 ல் சோவியத் யூனியனில், ஸ்டாலினால் யூத சுயாட்சிப் பிரதேசம் உருவாக்கப்பட்டது. இன்று மறக்கப்பட்டு விட்ட, பலர் அறிந்திருக்காத, "பிரோபிஜான்" என்ற பெயரிடப்பட்ட சோவியத் யூதர்களின் தாயகம், இன்று வரை நிலைத்து நிற்கின்றது. 70 வருடங்களுக்கு முன்னர், ரஷ்யாவின் ஆசியப்பகுதியில், ஸ்டாலின் வழங்கிய சைபீரிய நிலத்தில்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

மரணப்பொறிக்குள் இரண்டரை லட்சம் தமிழ் மக்கள் (வீடியோ)    
January 31, 2009, 2:39 pm | தலைப்புப் பக்கம்

இலங்கையில் நடைபெறும் போர் தீவிரமடைந்து வருகையில், பொது மக்களின் உயிர் இழப்புகள் அதிகரிக்கின்றன. இது குறித்து, உலகத் தமிழ் மக்கள் மட்டுமல்ல; மனிதநேய அமைப்புகள், வெளிநாட்டு அரசுகள், ஊடகங்கள் என்பனவும் தமது அனுதாபங்களை பல்வேறு வழிகளிலும் தெரிவித்து வருகின்றனர். சர்வதேச ஊடகங்கள் தயாரித்தளித்த, பக்கச் சார்பற்ற செய்தி அறிக்கைகள் சில இந்தப் பதிவில் இணைக்கப்பட்டுள்ளன....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் நிகழ்படம்

"முட்டாள் அமெரிக்கா!" - ஆவணப்படம்    
January 31, 2009, 10:44 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்க மாணவர்களின் புத்திசாதுர்யம், திறமை, கல்வித்தகமை என்பன மிக மோசமாக உள்ளன. பிற நாட்டு மாணவர்களுடன் ஒப்பிடும் போது, மிகக் குறைவாக சித்தியடைகின்றனர். வறிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கூட, அமெரிக்கர்களை விட விவேகமானவர்களாக உள்ளனர். வகுப்பறைகளில் ஒழுங்கீனம் நிலவுகின்றது. ஆசிரியர்களால் மாணவர்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியவில்லை. ஆசிரியர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் நிகழ்படம்

ராமேஸ்வரம் அகதிகள் பற்றிய ஆவணப்படம்    
January 30, 2009, 11:08 pm | தலைப்புப் பக்கம்

அல் ஜசீரா தொலைகாட்சி, இலங்கையில் நடக்கும் தமிழின விரோத போர், மற்றும் ஈழத்தமிழர் படும் துன்பங்கள் குறித்த அறிக்கைகளை தொடர்ச்சியாக ஒளிபரப்பி வரும் குறிப்பிடத்தக்க சர்வதேச ஊடகமாகும். ராமேஸ்வரம் அகதிகளின் அவலத்தை நேர்கண்ட ஆவணப்படம் ஒன்றை அண்மையில் அல் ஜசீரா ஒளிபரப்பியது. Those who’ve been able to escape the fighting in Sri Lanka face new hardships. Many leave everything behind, in search of safety in neighbouring India. Thousands of refugees have attempted to make the dangerous voyage from...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்

ஐஸ்லாந்தில் புரட்சி, ஆட்சியாளர் மிரட்சி    
January 30, 2009, 12:15 am | தலைப்புப் பக்கம்

உலகின் ஆறாவது பணக்கார நாடான ஐஸ்லாந்தில், இடம்பெற்ற வெற்றிகரமான மக்கள் புரட்சியானது, வரவிருக்கும் புரட்சிகளின் முன்னறிவித்தலா? நிதி நெருக்கடியால் ஐஸ்லாந்து அரசாங்கம் கவிழ்ந்தது, நிச்சயமாக ஒரு தொடக்கம் தான். சர்வதேசம் தனது கவனத்தை ஒபாமாவின் பதவியேற்பு வைபவத்தின் பக்கம் திசை திருப்பிய வேளை தான், அந்த அதிசயம் அரங்கேறியது. செல்வம் கொழித்த மேற்கு ஐரோப்பிய நாடொன்றில்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சர்வதேச விடுதலைப் போர்களின் திருத்தந்தை    
January 22, 2009, 10:26 pm | தலைப்புப் பக்கம்

ஜோர்ஜ் ஹப்பாஷ், 81 வயதில் மாரடைப்பால் 2008 ஜனவரி 26 ல் காலமான செய்தி பல பலஸ்தீன மக்களுக்கும், உலகில் பல்வேறு நாடுகளின் புரட்சிக்காரர்களுக்கும், பழைய இனிய நினைவுகளை கிளறி விட்டது. இஸ்ரேலின் எதிரியாக, மேற்குலக நாடுகளின் பயங்கரவாதத் திருத்தந்தையாக கணிக்கப்பட்ட ஹப்பாஷ், அதே நேரம் பலஸ்தீன மக்கள் அனைத்து பிரிவினரும் மதிக்கும் ஒருவராக, சர்வதேச விடுதலை இயக்கங்களின் தோழனாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் நபர்கள்

அல் கைதா என்ற ஆவி    
January 21, 2009, 9:52 pm | தலைப்புப் பக்கம்

அல்-கைதா இயக்கம் காணுமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பரமாத்மாவாக சர்வதேசத் தொடர்பு ஊடகங்களின் மகிமையால் காட்சி தருகின்றது. உண்மையில் அல்-கைதா இயக்கம் எவ்வளவு பெரியது? அதன் பலம் என்ன ? எநதெந்த நாடுகளில் செயற்படுகின்றது ? அதன் அரசியல் நோக்கம் என்ன ?அமெரிக்காவில் ஸோல்ட் லேக் சிற்றி என்ற இடத்தில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆயத்தங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

"அல்கைதா இல்லை!,அமெரிக்கா உருவாக்கிய கற்பனைக்கதை"-ஆவணப்படம்    
January 21, 2009, 6:20 am | தலைப்புப் பக்கம்

உலகில் அல் கைதா என்ற அமைப்பு இல்லை. அது அமெரிக்க அரசும், ஊடகங்களும் சேர்ந்து உருவாக்கிய கட்டுக்கதை. பயங்கரவாத தாக்குதல்கள் யாவும், அல் கைதா பெயரில் நடமாடும் சி.ஐ.ஏ. உளவாளிகளின் சதி வேலை. இவற்றை ஆதாரங்களுடன் விளக்குகிறது இந்த ஆவணப்படம். Al Qaeda doesn't exist (Documentary)Part 1Al Qaeda Doesn't Exist (Documentary) - 1by corbettreportPart 2Al Qaeda Doesn't Exist (Documentary) -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

"எயுஸ்கடி": ஐரோப்பாவின் மூத்தகுடி    
January 18, 2009, 2:38 pm | தலைப்புப் பக்கம்

ஐரோப்பாவில், ஸ்பெயின் நாட்டில், தனித்துவமான பாஸ்க் மொழி பேசும் மக்களுக்காக, தனிநாடு அமைக்க போராடும் ETA, ஐரோப்பிய யூனியனால் பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்டாலும், அதன் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தாலும், ஒரு நூற்றாண்டு கால பாஸ்க் விடுதலைப்போராட்டம் இன்று வரை தொடர்கின்றது. 2003 ம் ஆண்டு கோடைக்காலம். வழக்கம் போல இவ்வாண்டும் வட ஐரோப்பிய நாடுகளின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் வரலாறு

வளர்ந்த நாட்டில் ஊழல் இல்லையா? (சைப்ரஸ் தொடர்-3)    
January 15, 2009, 5:14 pm | தலைப்புப் பக்கம்

பொதுத் தேர்தல் ஒன்றில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவது, இன்றைய உலகில் அபூர்வமாக நடக்கும் விடயம் தான். சைப்ரசில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கும் அளவிற்கு, அந்நாட்டில் ஊழல், வேலையில்லாப்பிரச்சினை என்பன அதிகரித்து வருகின்றன.நான் அங்கு தங்கியிருந்த, கிறிஸ்துமஸ் பண்டிகைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

நிதி நெருக்கடியால் லாட்வியாவில் கலகம் வெடித்தது    
January 14, 2009, 11:01 pm | தலைப்புப் பக்கம்

சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்த லாட்வியாவில், பொருளாதார பிரச்சினை காரணமாக கிளர்ந்தெழுந்த மக்களின் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கலவரத்தில் முடிந்தது. தலைநகர் ரீகாவில், 13 ஜனவரி அன்று 10000 ற்கும் அதிகமான மக்கள் திரண்டு அரசுக்கெதிரான தமது வெறுப்பை வெளிக்காட்டினர். பெரும்பான்மை மக்களால் வெறுக்கப்படும், ஆளும் வலதுசாரி கட்சியை பதவி விலகக் கோரினர். பேரணியை தடுக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

தாய் மொழியில் பேசுவது குற்றம்!    
January 11, 2009, 7:41 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் பேசுவதை தரக்குறைவாக கருதி, இறக்குமதி செய்யப்பட்ட ஆங்கிலத்தை பேசும் "தங்கிலீஷ்காரர்கள்" பற்றி நான் கூறத் தேவையில்லை. உலகில் எத்தனையோ நாடுகளில், மொழிச் சிறுபான்மை மக்கள் தமது தாய்மொழியில் பேச தடை உள்ளது. பல "தேசிய அரசுகள்" அப்படித்தான் பெரும்பான்மை மொழியின் ஆதிக்கத்தை பிறரின் மீது திணித்தன. பிரான்ஸில் நீண்டகாலமாக பாஸ்க், ஒக்கிடண்டல், பிறேதைன் மற்றும் ஜெர்மன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

பாலஸ்தீன பிரச்சினை - முழுநீள ஆவணப்படம்    
January 10, 2009, 9:35 am | தலைப்புப் பக்கம்

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் இருந்து குடியேறிய யூத காலனியவாதிகளால் பாலஸ்தீன நிலங்கள் அபகரிக்கப்பட்டு, அங்கு வாழ்ந்த மக்கள் அகதிகளாக விரட்டப்பட்டு, எஞ்சியவர்கள் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் அவலநிலையை பிரபல பிரிட்டிஷ் ஊடகவியலாளர் John Pilger ஒரு முழுநீள ஆவணப்படமாக பதிவுசெய்துள்ளார். உலக வல்லரசு அமெரிக்காவை தன் பக்கத்தில் சேர்த்துக் கொண்ட இஸ்ரேலின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் நிகழ்படம்

ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட அரச பயங்கரவாதம்    
January 6, 2009, 9:01 pm | தலைப்புப் பக்கம்

"காஸா" என்ற கூண்டுக்குள் அகப்பட்ட, ஒன்றரை மில்லியன் மக்களை இஸ்ரேலிய படைகள் கொன்று குவிக்கின்றன. ஹமாஸ் மீது நடவடிக்கை எடுப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறிய போதும்; முதியவர், பெண்கள், குழந்தைகள் என்று பாராமல் எல்லோரையும் இஸ்ரேலிய ஆயுதங்கள் பலி எடுக்கின்றன. கடைசியாக கூட ஐ.நா. சபை நடத்தி வந்த பாடசாலையில் தஞ்சம் புகுந்திருந்த அகதிகள் மீது இஸ்ரேலிய படைகள் குண்டு வீசியதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

ஒரு தீவு, மூன்று தேசங்கள் (சைப்ரஸ் தொடர்-2)    
December 27, 2008, 11:39 am | தலைப்புப் பக்கம்

சைப்ரஸ் என்ற சிறிய தீவில், இரண்டு சுதந்திர நாடுகள் ஒரு தலைநகரத்தை கொண்டுள்ளன. அதைவிட முன்னாள் காலனிய எஜமானான பிரித்தானியா ஒரு சிறு பகுதிக்கு உரிமையாளர். இனப்பிரச்சினையால் பிளவுபட்ட தேசம், முப்பது ஆண்டுகள் அமைதியின் பின்னரும் ஆறுதலடையவில்லை. ஐரோப்பாவின் பிரிட்டிஷ் காலனி நாடான சைப்ரஸ், விடுதலைக்காக போராடியது EOKAS என்ற வலதுசாரி தேசியவாத இயக்கம். சுதந்திரத்திற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

இனப்பிரச்சினையின் பரிமாணங்கள் - ஒரு சைப்ரஸ் அனுபவம்    
December 24, 2008, 12:29 pm | தலைப்புப் பக்கம்

வளர்ந்த நாடுகளிலும் இனப்பிரச்சினை வளர்ந்து வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த குட்டித் தீவான சைப்ரஸ் அதற்கொரு உதாரணம். விடுமுறைக்காக அந்த நாட்டில் தங்கியிருந்த நேரம், நான் அவதானித்த சுவையான சமூக-அரசியல் நிகழ்வுகளை, பின்னணி தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். ஒருவகையில் இது எனது பயணக்கட்டுரை என்றாலும், சர்வதேச சமூக கற்கைகளுக்கான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

கிறீசிலிருந்து புரட்சிகர கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்    
December 19, 2008, 12:34 pm | தலைப்புப் பக்கம்

கிரீஸ் மாணவர் எழுச்சி அலை, பத்து நாட்களாகியும் இன்னும் ஓயவில்லை. ஆளும் வலதுசாரி அரசாங்கம் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாராளுமன்றத்தில் அறிவித்த பின்னரும் கலவரங்கள் தணியவில்லை. வாரக்கணக்காக தொடர்ந்த கலவரங்கள் காரணமாகத் தான், நாட்டில் ஊழல் ஒரு பிரச்சினை என்பதையும், அதனை இல்லாதொழிக்க வேண்டிய அவசியத்தையும் கிரீஸ் அரசாங்கம் உணர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

தொட்டில் ஜனநாயகம் தொடர் புரட்சி வரை    
December 13, 2008, 7:50 am | தலைப்புப் பக்கம்

12 ஜனவரி, 2007 ம் ஆண்டு, ஏதென்சில், கிறீஸ் நாட்டுக்கான அமெரிக்க தூதுவரின் வாசஸ்தலத்தின் மீது, ராக்கெட் லோன்ஜெர் தாக்குதல் நடத்தப்பட்டதில், அவரது குளியலறை சேதமடைந்தது. “புரட்சிகர யுத்தம்” என்ற இயக்கம் அனுப்பிய ஊடகங்களுக்கான அறிக்கையில்: “ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு பரிசு.” என்று உரிமை கோரியது. 2003 ம் ஆண்டில் இருந்து, ஏதென்ஸ் நகரம் பல குண்டுவெடிப்புகளால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

நிதி நெருக்கடியால் புரட்சி வெடிக்குமா?    
December 12, 2008, 6:54 pm | தலைப்புப் பக்கம்

"வங்கிகளுக்கு பணம், எங்களுக்கு மரணம்" - ஐரோப்பாவின் புரட்சிப்புயல் மையம் கொண்டுள்ள கிறீஸ் நாட்டு தெருக்களில் ஒலிக்கும் சுலோகம் அது. சர்வதேச தொலைக்காட்சி கமெராக்கள் மறுபக்கம் திரும்பி விட்டதால், அங்கே எல்லாம் வழமைக்கு வந்துவிட்டது என்ற அர்த்தம் இல்லை. மக்கள் சக்தியை குறைவாக கணித்த அரசாங்கத்திற்கு முன்னே இரண்டு தெரிவுகள் மட்டுமே உள்ளன. ஒன்று, முதலாளிகளுக்கு சேவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

இலங்கைத் தீவின் ஆப்பிரிக்க வம்சாவளி மக்கள்    
December 1, 2008, 3:36 am | தலைப்புப் பக்கம்

பல்லினக் கலாச்சாரம் கொண்ட இலங்கைத் தீவில், இப்போதும் வாழ்ந்து வரும் ஆப்பிரிக்க வம்சாவளி மக்கள் பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைவு. இன்றும் பலர் இலங்கையில் மொழியையும், இனத்தையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்கின்றனர். சிங்கள மொழியும், தமிழ் மொழியும் பல்வேறு பூர்வீக கலாச்சாரக் கூறுகளை கொண்ட மக்களை தன்னுள் உள்வாங்கியுள்ளன. சரித்திர காலத்திற்கு முந்திய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

யார் இந்த யூதர்கள்? - ஒரு வரலாறு    
November 28, 2008, 6:29 pm | தலைப்புப் பக்கம்

“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் உருவான தேசியவாத எழுச்சியின் எதிர்வினையாகத் தான், சியோனிச அரசியல் அமைப்பு உருவானது. அவர்களது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் வரலாறு

அதிகம் சம்பாதிப்பது தேச நலனுக்கு கேடாகலாம்    
November 26, 2008, 7:33 pm | தலைப்புப் பக்கம்

"அதிகம் படித்தல் = அதிகம் சம்பாதித்தல்" மத்தியதர வர்க்க குடும்ப பெற்றோர்களால், தம் பிள்ளைகளை சமூகப்-பொருளாதார ஓட்டப்போட்டியில் முன்னுக்கு வர பயிற்றுவிக்கும் மந்திரம் அது. அரசியல் பொருளாதார கற்பிதங்கள் பலருக்கு இரத்தத்தோடு ஊறி விட்ட ஒன்று. அதிலும் குறிப்பாக என்பதுகளுக்கு பின்னர் பிள்ளை வளர்ப்பென்பது, "தட்சரிசம்" (அல்லது "றீகனிசம்") என்ற பொருளாதார கொள்கைகளுக்குள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

பெல்ஜியம் மீது தாக்குதல்? - வீடியோ பயங்கரவாதம்    
November 25, 2008, 9:18 pm | தலைப்புப் பக்கம்

பெல்ஜியத்தின் பிரதான செய்தி நிலையங்களின் ( VRT, VTM) முகவரிகளுக்கு, ஒரு டி.வி.டி. தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. பெல்ஜியத்தின் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கும் வீடியோ செய்தி அது. நான்கு நிமிடங்களே ஓடும் அந்த வீடியோ படத்தில், அல் கைதா பாணியில் முகமூடியணிந்த மூன்று நபர்கள், சைகைகள் மூலம் சொல்ல வரும் செய்தி, நெதர்லாந்து மொழியில் (பெல்ஜியத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

கணணி மென்பொருளே! கலியுக பரம்பொருளே!!    
November 23, 2008, 10:20 am | தலைப்புப் பக்கம்

பத்தாண்டுகளுக்கு முன்னர், தகவல் தொழிற்புரட்சி சமுதாயத்தை மாற்றிக்கொண்டிருந்த காலம் அது. தொழிற்கல்வி கற்க விரும்பும் பிள்ளைகளில், அதிபுத்திசாலிகளை மட்டும் தெரிந்தெடுத்து கணிப்பொறி வல்லுனராக்க அனுப்பிக் கொண்டிருந்த காலமது. ஒவ்வொரு நிறுவனமும் தனது உற்பத்தியை துரிதப்படுத்தவும், ஆட்குறைப்பு செய்து செலவை மிச்சம் பிடிக்கவும் என கணணி மயப்படுத்தப்பட்டன. அவற்றிக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

கிழக்கே நகரும் உலக அதிகார மையம்    
November 22, 2008, 6:36 pm | தலைப்புப் பக்கம்

உலகில் அமெரிக்கா என்ற ஒரேயொரு அதிகார மையம் மறைந்து, அந்த இடத்தில் சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற பல அதிகார மையங்கள் உருவாக்கி வருவதாக, அமெரிக்க தேசிய புலனாய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இத்தகைய நிலையை ஏற்கனவே பலர் சரியாக கணித்து இருந்த போதும், அமெரிக்க அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனமொன்று அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே நெதர்லாந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

சோமாலியா, உலகின் குப்பைத் தொட்டியா?    
November 21, 2008, 5:24 pm | தலைப்புப் பக்கம்

ஐ.நா. அனுமதியுடன் கடற்கொள்ளைக்காரர்களை வேட்டையாட போகும் இந்திய கடற்படையினர், சோமாலிய கடலில் அணு உலை, மற்றும் இரசாயன நச்சுக் கழிவுகளை திருட்டுத்தனமாக கொட்டும் பன்னாட்டு கப்பல்களையும் பிடித்து தண்டிப்பார்களா?சோமாலியா, அரசு இல்லாத தேசம். தட்டிக் கேட்க ஆள் இல்லையென்றால் யாரும் எது வேண்டுமானாலும் செய்யலாம். தொன்னூறுகளில் சோமாலிய பிரச்சினையை தீர்க்கப் போகிறேன் சொல்லி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

இன்று கடற்கொள்ளையர்கள், நாளை கம்பெனி முதலாளிகள்    
November 19, 2008, 11:58 am | தலைப்புப் பக்கம்

"நமது நாட்டை சிங்கப்பூர் போல மாற்றிக் காட்ட வேண்டும்." இவ்வாறு அரசியல்வாதிகள் முதல் சாதாரண மக்கள் வரை, ஒரு ஆசிய நாடான சிங்கப்பூர் பணக்கார நாடாக இருப்பதை உதாரணமாக காட்டி, வியந்துரைப்பதை பலர் கேட்டிருக்கலாம். ஆனால் "சிங்கப்பூர் செல்வந்த நாடானது எப்படி?" என்ற இரகசியம் தெரிந்தவர்கள் மிகக் குறைவு. ஒரு காலத்தில் மீனவர்களின் தீவாக இருந்து, பிற்காலத்தில் சீன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

சோவியத் இளைஞர் மன்றத்திற்கு 90 வயது    
November 16, 2008, 7:30 pm | தலைப்புப் பக்கம்

"கொம்சொமோல்"(Komsomol) என்ற ரஷ்ய பெயரால் அழைக்கப்படும் முன்னாள் சோவியத் யூனியனின் இளைஞர் அமைப்பு, கடந்த 29 ஒக்டோபர் தனது 90 வது பிறந்த நாளை கொண்டாடியது. இன்று அந்த அமைப்பு முக்கியத்துவம் இழந்து விட்டாலும், (கொள்கைரீதியாக பிரிந்துள்ள) பல்வேறு ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிகளினதும் இளைஞர் அணியினர், கொம்சொமொலின் 90 வது பிறந்தநாள் விழாவை பரவலாக ரஷ்யாவெங்கும் கொண்டாடியுள்ளனர். இன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

ஐரோப்பா: சர்வதேச போர்களின் தொடக்கப்புள்ளி    
November 15, 2008, 3:45 pm | தலைப்புப் பக்கம்

கடந்த பத்தாண்டுகளாக ஐரோப்பிய நாடுகளின் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. ஆனால் அவர்களது தாயக பூமியில் மக்கள் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கையில், ஆயிரம் மைல்களுக்கு அப்பால் ஐரோப்பிய படைகள் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் குண்டு வீசிக் கொண்டிருக்கின்றனர். ஐரோப்பாவில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் இராணுவ முகாம்கள், தம் நாட்டு சிப்பாய்களை யுத்தகளத்திற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

நிதியால் சிறுத்த ஐஸ்லாந்து சினத்தால் சிவக்கிறது    
November 14, 2008, 9:36 pm | தலைப்புப் பக்கம்

ஐஸ்லாந்து என்ற பணக்கார நாடு திவாலாகின்றது, என்ற செய்தி கேள்விப்பட்டு பல சர்வதேச ஊடகங்கள் ஐஸ்லாந்தை மொய்த்தன. மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்காக வரிசையில் நிற்கும் காட்சியை படம் பிடிக்க ஓடோடி வந்தன. ஆனால் அவர்களின் ஆசை நிறைவேறாத படி ஐஸ்லாந்து மக்கள் தமது நிதி நெருக்கடியை மறைத்துக் கொண்டனர். தாம் வாங்கிய வீடுகளுக்கு இரண்டு மடங்கு கடன் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

பாலஸ்தீனியனுக்கு வீடியோவும் ஆயுதம்    
November 11, 2008, 11:12 pm | தலைப்புப் பக்கம்

பாலஸ்தீன பிரச்சினை பற்றி அண்மைக்காலமாக ஊடகங்களில் எந்த செய்தியும் இல்லை. செய்தியே இல்லையென்றால், எப்போதும் அது நல்ல செய்தி தானென்று அர்த்தமாகி விடாது. இஸ்ரேலில் தற்கொலைக் குண்டு வெடித்து சில மனித உயிர்கள் (அல்லது பெறுமதி மிக்க இஸ்ரேலிய உயிர்கள்) பலியானால் மட்டுமே, எமது ஊடகங்கள் இரத்தம் கண்டு சிலிர்த்தெழுந்து "அங்கே பார் பயங்கரவாதம்!" என்று அலறுவது வழமை. பாலஸ்தீன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

உங்கள் கணணியில் உதிரம் வடிகின்றது!    
November 10, 2008, 9:48 pm | தலைப்புப் பக்கம்

கணணி அல்லது மொபைல் போன் பாவிக்கும் அனைவரும் எதோ ஒரு வகையில் கொங்கோவில் நடக்கும் இனப்படுகொலை யுத்தத்துடன் தொடர்புபட்டவர்கள் தான். யாராவது ஒரு திருடன், சொத்துக்கு உரிமையாளரை கொலை செய்துவிட்டு, கொள்ளையடித்த பொருட்களை குறைந்த விலை கொடுத்து வாங்கினால், நாமும் அந்த கொலைக்கும், கொள்ளைக்கும் உடந்தையாக இருந்ததாக குற்ற உணர்ச்சி எழுவதில்லையா? ஆனால் அந்த பாவத்தை நாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

பொருளாதார நெருக்கடியும், பொருளீட்டும் பொறுக்கிகளும்    
November 9, 2008, 2:38 pm | தலைப்புப் பக்கம்

"அமெரிக்கா ஒரு கனவு". அதிக விலை கொடுக்கும் முதலாளிக்கு தனது உழைப்பை/சேவையை விற்க தயாராகும் பல்லாயிரக்கணக்கான படித்த நடுத்தர வர்க்கத்தினருக்கும், தொழில்நுட்ப அறிவற்ற சாதாரண உழைப்பாளிக்கும் உள்ள கனவு. போதுமென்ற மனதை கொண்டிருக்க சொல்லும் பழமொழியை தற்போது யாரும் நம்புவதில்லை. பேராசை, பேரவா, சுயநலம், இவ்வாறு எவையெல்லாம் தப்பென்று நீதி நூல்கள் சொல்கின்றனவோ, அவையெல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

பிரெஞ்சு இராணுவம்: குற்றவாளிகளும் விண்ணப்பிக்கலாம்    
November 8, 2008, 4:05 am | தலைப்புப் பக்கம்

ஏதாவதொரு குற்றச்செயல்களுக்காக சொந்த நாட்டில் தேடப்படும் நபர்களை பிரான்ஸ் வரவேற்கிறது. பிரான்ஸில் வெளிநாட்டவர்களை மட்டுமே கொண்ட கூலிப்படையில் சேர்வதற்கு உலகெங்கும் இருந்து விண்ணப்பதாரிகள் கோரப்படுகின்றனர். உங்கள் கடந்த காலம் பற்றி அக்கறையில்லை. சொந்த நாட்டில் கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வன்முறை போன்ற எந்தவொரு கிரிமினல் குற்றத்தில் ஈடுபட்ட நபராயினும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

ஆங்கில மோகமும் தமிழின் தாகமும்    
November 2, 2008, 9:35 pm | தலைப்புப் பக்கம்

ஆங்கிலம் பேசுவோர் சர்வதேசவாதிகள்! தமிழ் பேசுவோர் இனவாதிகள்!!” இவ்வாறு கூறிக்கொள்ளும், அல்லது நம்பிக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கப் பிரிவொன்று இன்றும் எம்மத்தியில் இருக்கின்றது. மக்களுக்குள் பல குழுக்கள் தத்தம் உலகங்களின் உள்ளே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சில நேரம் இப்படியான வெவேறு உலகங்களுக்குள் நுளையக்கிடைக்கும் சந்தர்ப்பங்களில் கிடைக்கும் அனுபவங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி மொழி

ஒரு பெண் போராளியின் கதை    
October 24, 2008, 2:48 am | தலைப்புப் பக்கம்

Guerrillera(பெண் போராளி) ஆவணப் படம். கொலம்பியா நாட்டின் புரட்சி இராணுவமான FARC இல் இணைந்த ஒரு பெண் போராளியின் கதை, படமாக்கப்பட்டிருக்கிறது. அடர்ந்த காட்டுக்குள், அந்த இயக்கத்தின் இராணுவப்பயிற்சி, அரசியல் வகுப்புகள், மற்றும் போராளிகளின் நாளாந்த வாழ்க்கை ஆகியவற்றை இந்த படத்தில் பார்க்கலாம். ஸ்பானிய மொழி பேசும் படம் ஆங்கில உப தலைப்புகளுடன்.Guerrillera The translation of the introduction___________________________________Two hundred years...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சேரிக்குள் தஞ்சமடையும் அமெரிக்க கனவு    
October 20, 2008, 8:30 pm | தலைப்புப் பக்கம்

வாரந்தோறும் 10000 அமெரிக்கர்கள் பலவந்தமாக, அவர்கள் குடியிருந்த வீடுகளில் இருந்து விரட்டப்பட்டு வீதிக்கு வருகின்றனர். வெட்டவெளியில் கூடாரமடித்து தங்கி வரும் வீடற்றவர்கள், அமெரிக்க நகரங்களில் புதிய சேரிகளை உருவாக்கி வருகின்றனர். பலர் தமது வீடுகளை விட்டு எழும்ப மறுத்து வருகின்றனர். சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். சில இடங்களில் கொலை கூட நடந்துள்ளது. ஊடகங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

தனியொருவனுக்கு உணவில்லையெனில் கடைகளை சூறையாடுவோம்    
October 18, 2008, 1:15 pm | தலைப்புப் பக்கம்

கிரீஸ் நாட்டில் "சூபர் மார்க்கெட்" ஒன்றில் உணவுப்பொருட்களை சூறையாடிய இடதுசாரி இளைஞர்கள் அவற்றை பொது மக்களுக்கு இலவசமாக வழங்கினர். "நவீன ராபின் ஹூட்கள்" என்று உள்ளூர் ஊடகங்கள் வர்ணித்த இந்த சம்பவம், கிரீசின் வடபகுதி நகரமான தெஸ்ஸலொனிகியில் நடந்துள்ளது. உலகில் அண்மைக்காலமாக உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதும், அதன் காரணமாக மக்கள் கலவரங்களில் ஈடுபடுவதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

அமெரிக்காவில் பாஸிச-சர்வாதிகார சதிப்புரட்சி?    
October 16, 2008, 2:15 pm | தலைப்புப் பக்கம்

"அனேகமாக இது தான் அமெரிக்காவின் கடைசி பொதுத் தேர்தலாக இருக்கும். குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் மக் கெய்ன் வென்றால் அதிக காலம் உயிரோடு இருக்கப் போவதில்லை. அதற்குப்பின்னர் ஆட்சிக்கு வரும் துணை ஜனாதிபதி சாரா பாலின், புஷ்ஷின் கொள்கை வகுப்பாளர்களுடன் ஒரு சர்வாதிகார ஆட்சியை நிறுவ இருக்கிறார்." - இவ்வாறு கூறுகிறார் Naomi Wolf என்ற பிரபல அமெரிக்க எழுத்தாளர். இவர் எழுதிய "End of...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

காஸ்ட்ரோ பார்வையில் அமெரிக்க நிதி நெருக்கடி    
October 14, 2008, 9:38 pm | தலைப்புப் பக்கம்

சமூகங்களுக்கும், நாடுகளுக்குமிடையிலான வர்த்தகமானது, மனிதர் உற்பத்தி செய்த பண்டங்களினதும், சேவைகளினதும் பரிமாற்றமாக உள்ளது. உற்பத்தி சாதனங்களின் சொந்தக்காரர்கள் லாபத்தையும் தமக்கே உரித்தாக்கி கொள்கின்றனர். முதலாளித்துவ தேசத்தின் தலைவர்களாக வீற்றிருக்கும் இந்த வர்க்கமானது, தாம் வணங்கும் தெய்வமான சந்தையின் மூலம் தமது வளத்தை பெருக்கிக் கொள்கின்றது. ஒவ்வொரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

பாகிஸ்தானில் எல்லை கடந்த ஏகாதிபத்தியவாதம்    
September 17, 2008, 3:58 pm | தலைப்புப் பக்கம்

தாலிபான் வேட்டையில் இறங்கிய அமெரிக்க துருப்புகள், பாகிஸ்தானின் எல்லை கடந்தும் யுத்தத்தை விரிவாக்கியதால், தற்போது பாகிஸ்தானிய இராணுவத்துடன் மோதும் நிலை உருவாகியுள்ளது. அமெரிக்க இராணுவ நடவடிக்கையில், சாதாரண பாகிஸ்தான் பொதுமக்களும் கொல்லப்பட்டதால், அந்நாடு முழுவதும் அமெரிக்க எதிர்ப்புணர்வு அதிகரித்துள்ளது. இதனால் எப்பாடுபட்டாகிலும் அமெரிக்க படைகளின் நகர்வுகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

பொலிவியா கலவரம், அமெரிக்க தூதுவர் வெளியேற்றம்    
September 13, 2008, 7:06 pm | தலைப்புப் பக்கம்

ஜனநாயக விரோத சதிப்புரட்சி மூலம், பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி அரசாங்கங்களை கவிழ்க்கும் முயற்சிகளை அமெரிக்கா இன்னும் கைவிடவில்லை போல் தெரிகின்றது. 11 செப்டம்பர் 1973 சிலியில் அய்யெண்டேயின் ஜனநாயக அரசாங்கத்தை, இராணுவ சதிப்புரட்சி மூலம் தூக்கி எறிந்தது. இன்று சரியாக35 வருடங்களுக்கு பின்னர், சதிப்புரட்சிக்கு திட்டமிட்டதாக குற்றம் சாட்டி, பொலிவியா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

ஸ்டாலின் கால வாழ்க்கை: "எல்லாமே புரட்சிக்காக!"    
September 7, 2008, 8:26 am | தலைப்புப் பக்கம்

"புத்திஜீவி", "சுயநலவாதி" என்பன ஒருவரை திட்டுவதற்கான மோசமான வார்த்தைப் பிரயோகங்கள். மேல்தட்டு அல்லது உயர் மத்தியதர(பூர்சுவா) வர்க்க பின்னணியை கொண்ட மாணவர்கள், கணவன்மார், மனைவிமார் தமது குடும்பப்பின்னணியை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. ஒருகாலத்தில் சமூகப்படிநிலையில் உயர்ந்தநிலையில் இருந்து கொண்டு, அனைத்து பொருள் சுகங்களையும் அனுபவித்து வந்த பணக்காரர்களும், வசதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

ஈராக், ஒரு தேசம் விற்பனைக்கு    
September 5, 2008, 11:19 am | தலைப்புப் பக்கம்

ஈராக் மீதான ஆக்கிரமிப்பு, பல அமெரிக்க தனியார் கம்பனிகளுக்கு லாபம் தரும் வர்த்தகமாக மாறியுள்ளது. "ஈராக் விற்பனைக்கு" என்ற ஆவணப்படம், அமெரிக்க அரசு ஈராக்கை எவ்வாறு தனியார் கம்பெனிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் விற்றுள்ளது, என்பதை சாட்சிகளின் அடிப்படையில் விளக்குகின்றது. Halliburton, Titan, Parsons, Dyncorp, Black Water, Transatlantic Traders இவையெல்லாம் ஈராக் போரில் லாபம் சம்பாதிக்கும் அமெரிக்க நிறுவனங்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்