மாற்று! » பதிவர்கள்

கனவுகளின் காதலன்

ஏலகிரியில் சிறுத்தை வேட்டை    
April 18, 2010, 5:55 am | தலைப்புப் பக்கம்

காட்டு விலங்குகளிலேயே மிகவும் திறமையானதும், அபாயகரமானதுமான சிறுத்தையுடன் நீங்கள் பலப் பரீட்சை செய்ய விரும்பினால், அதற்கு காட்டைக் குறித்த நுண்ணறிவும், சிறுத்தையைப் போன்ற உள்ளமும் கொண்டவராக நீங்கள் இருக்க வேண்டும் என்கிறார் பிரபல வேட்டைக்காரரும், காட்டுயிர் ஆர்வலருமான Kenneth Anderson. அவரது அனுபவங்கள் சிலவற்றின் தொகுப்பாகவே ஏலகிரியில் சிறுத்தை வேட்டை எனும் நூல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

பச்சை [பொய்] வலயம்    
April 15, 2010, 2:31 pm | தலைப்புப் பக்கம்

ஈராக்கின் கைவசம் மனித குலத்திற்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் இருப்பதற்கான தகுந்த ஆதாரங்கள் உண்டு எனக் காரணம் காட்டி, அந்த நாட்டின் மீது 2003ல் அமெரிக்கா யுத்தம் தொடுத்தது. ஈராக் ராணுவத்திடமிருந்து பெரும் எதிர்ப்புக்கள் இல்லாத நிலையில் ஈராக் நாட்டை அமெரிக்காவும், அதனது தோழமை நாடுகளும் இலகுவாக தம்வசப்படுத்தின. இந்நிலையில் ஈராக் நாட்டில் மறைத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அற்புத உலகில் ஆலிஸ்    
March 26, 2010, 12:21 pm | தலைப்புப் பக்கம்

சிறுமியான ஆலிஸ், தன் தூக்கத்தில் வினோதமான கனவொன்றைக் காண்கிறாள். நீண்டு செல்லும் ஆழமான குழி ஒன்றினுள் விழும் அவள், அங்கு ஒரு விந்தை உலகையும் விசித்திரமான மனிதர்களையும், பிராணிகளையும் அறிந்து கொள்வதாக அந்தக் கனவு அமைந்திருக்கிறது. தனக்கு வரும் இந்தக் கனவு குறித்து தன் தந்தையிடம் மனதைத் திறக்கிறாள் ஆலிஸ். ஆலிஸின் தந்தையோ இது வெறும் கனவு மட்டுமே, எப்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நிழல் எழுத்தாளன்    
March 11, 2010, 12:16 pm | தலைப்புப் பக்கம்

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ஆடம் லாங் [Pierce Brosnan] அவர்களின் சுயசரிதையை எழுதி வரும் எழுத்தாளரான மைக் மக்காரா, அமெரிக்காவில் ஆடம் லாங் தங்கியிருக்கும் வீட்டிற்கு அருகிலிருக்கும் கடற்கரையில் கரை ஒதுங்கிய பிணமாக கண்டெடுக்கப்படுகிறார். அவரது மரணம் ஒரு விபத்து அல்லது தற்கொலையாக இருக்கலாம் என்று முடிவாகிறது. மைக் மக்காராவின் மரணத்தையடுத்து, ஆடம் லாங்கின் சுயசரிதையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தனி மனிதன்    
March 6, 2010, 9:13 am | தலைப்புப் பக்கம்

லாஸ் ஏஞ்சலேஸில் இருக்கும் கல்லூரி ஒன்றில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வருகிறான் ஜார்ஜ். மிகவும் உன்னிப்பான ஒழுங்கு முறை நிறைந்த நடவடிக்கைகளை கொண்ட அவனிற்கு ஜிம் எனும் காதலன் இருக்கிறான். ஜிம்மை விட ஜார்ஜிற்கு வயது அதிகம் என்றாலும் அவர்கள் வாழ்க்கை அன்பாலும், காதலாலும் நிறைந்ததாக இருக்கிறது. ஒரு நாள் தன் தாயாரைக் கண்டு வருவதற்காக காரில் பயணம் கிளம்பும் ஜிம், பனி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பஷீருடன் ஒரு நடனம்    
March 3, 2010, 1:18 pm | தலைப்புப் பக்கம்

இஸ்ரேலின் குளிர் நிறைந்த ஜனவரியின் இரவொன்றில் அரியின் நண்பன் பாவோஸ் அவனைத் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறான். தன் நண்பனின் அழைப்பை ஏற்று மதுபான விடுதி ஒன்றில் அவனைச் சந்திப்பதற்காக செல்கிறான் அரி. விடுதிக்கு வெளியே குளிர்காலத்தின் மழை சோம்பலுடன் தெருக்களை ஈரமாக்கிக் கொண்டிருந்தது. இடையிடையே தெறித்த மின்னல்கள், விடுதியின் மென்னிருளை நொடிநேரம் பிரகாசிக்க செய்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஷட்டர் ஐலண்ட்    
February 27, 2010, 11:33 am | தலைப்புப் பக்கம்

யு. எஸ் மார்ஷல்களான டெடி டானியல்ஸும் [Leonardo DiCaprio], சக்கும் [Mark Ruffalo] பெரி கப்பல் ஒன்றில் ஷட்டர் தீவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். ஷட்டர் தீவில் அமைந்திருக்கும் குற்றவாளிகளிற்கான மனநல மருத்துவமனை ஒன்றிலிருந்து காணாமல் போய்விட்ட பெண் கைதியான[நோயாளியான] ரேச்சலின் மறைவு குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுவதே அவர்களின் நோக்கம். தீவை வந்தடையும் அவர்கள் மருத்துவமனையின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பிலிப் மொரிஸின் காதலன்    
February 19, 2010, 12:43 pm | தலைப்புப் பக்கம்

ஒரினச் சேர்க்கையாளர்களின் வாழ்க்கையைக் குறித்த திரைப்படங்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே வெகுஜன சினிமா ரசிகர்களின் பார்வைக்கு முன்வைக்கப்படுகின்றன. இவ்வரிகளை எழுதும்போது என் வலிமையற்ற நினைவாற்றல் மூலம் Philadelphia, The Birdcage ஆகிய இரு திரைப்படங்களையே என்னால் மீட்டெடுக்க முடிகிறது. பிலடெல்பியா, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஒரினச் சேர்க்கையாளன் தான் பணிபுரிந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மின்னல் திருடன்    
February 15, 2010, 1:36 pm | தலைப்புப் பக்கம்

நியூயார்க் நகரின் யான்சிக் கல்லூரியில் கல்வி பயிலும் ஒரு சாதாரண மாணவன் பெர்சி ஜாக்சன். பெர்சிக்கு எழுத்துக்களை வாசிப்பதில் சிரமம் இருக்கிறது. ஒரு இடத்தில் கையைக் காலை ஆட்டாது அவனால் இருக்க முடியாது. மிகையான துறுதுறுப்பு கொண்ட இளைஞனாக அவன் இருக்கிறான். கல்லூரியில் அவன் உற்ற நண்பணாக குரோவர் எனும் இளைஞன் இருக்கிறான். யான்சிக் கல்லூரியின் ஆசிரியர்களில் ஒருவரான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ப்ளம் பழங்களில் சமைத்த கோழி    
February 14, 2010, 7:09 am | தலைப்புப் பக்கம்

தெஹரான், 1958. தெஹரானின் வெயில் படிந்த தெருக்களில் நடந்து சென்று கொண்டிருக்கிறான் நாசீர் அலி. Tar எனப்படும் தந்தி வாத்தியக் கருவியை அற்புதமாக இசைக்கும் இசைக் கலைஞன் அவன். நாசீர் அலி திருமணமானவன், அவனிற்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர். நாசீரின் மனைவியே வீட்டில் நிரந்தர வருமானம் உள்ளவளாகவும், வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்பவளாகவும் இருக்கிறாள்.இசைக்கலைஞனாக தன்னை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஓநாய் மனிதன்    
February 11, 2010, 12:23 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவில் இருந்து லண்டன் நகரிற்கு தன் நாடகக் குழுவுடன் விஜயம் செய்து, மேடை நாடகங்களில் திறம்பட நடித்துக் கொண்டிருக்கிறான் லாரன்ஸ் டால்பாட் [Benicio Del Toro]. லாரன்ஸ், லண்டன் நகரில் இருப்பதை அறிந்து கொள்ளும் க்வன் கொன்லிஃப் [Emily Blunt] எனும் இளம் பெண் அவனிற்கு ஒரு மடலை எழுதுகிறாள். லாரன்ஸின் சகோதரனாகிய பென் டால்பாட்டிற்கு திருமணத்திற்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணாக தன்னை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நாணல்களுடன் ஆடும் நடனம்    
February 9, 2010, 12:26 pm | தலைப்புப் பக்கம்

பரந்து விரிந்த நாணல் புற்பரப்பு. காற்று, நாணல்களுடன் நடனமாடிக் கொண்டிருக்கிறது. காற்றின் முனகல் கடல் அலைகள் போல் ஒலிக்கிறது. அந்தப் பழுப்பேறிய புற்பரப்பினூடாக தயங்கிய அடிகளில் நடந்து வருகிறாள் அந்தப் பெண். சற்று வயதானவள். கண்களில் அயர்ச்சி கலந்த சோகம். தன் நடையை ஒரு கணம் நிறுத்தி அழுக்கேறிய தன் கைகளைப் பார்க்கிறாள் அவள். புற்களிற்குள் உறையும் பூச்சிகளின் கீறிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

முத்தம் கேட்கும் தவளை    
February 3, 2010, 12:19 pm | தலைப்புப் பக்கம்

கேளிக்கைகளிற்கும், ஜாஸ் இசைக்கும் பெயர் போன நியூ ஆர்லியன்ஸ் நகரம். அந்நகரின் பிரபல்யமான செல்வந்தர்களில் ஒருவராக பிக் டாடி லா வுஃப் திகழ்கிறார். அவரது ஒரே செல்ல மகள் சார்லொட். தன் அன்பு மகளை அவள் கேட்பதற்கும் மேலாக பரிசுகளால் மூழ்கடிக்கிறார் பிக் டாடி. சிறு வயதில் தேவதைக் கதைகளைக் கேட்டு மகிழும் சார்லொட் மனதில் ஒரு இளவரசனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனும் ஆசை...தொடர்ந்து படிக்கவும் »

பெர்சியன் பூனைகள்    
January 27, 2010, 12:17 pm | தலைப்புப் பக்கம்

ஈரானின் தற்போதைய அதிகாரமானது மேலைத்தேய இசை குறித்து கொண்டுள்ள பார்வை வேறானது. ராக் போன்ற இசை வகைகளை கேட்பதற்கோ, இசைப்பதற்கோ ஏறக்குறைய தடை விதிக்கபபட்டுள்ள ஒரு நிலை அங்கு நிலவுகிறது. ஆஷ்கானும், அவனது காதலி நேகாரும் மேலைத்தேய இசை குறித்த ஈரான் அதிகாரத்தின் ஒழுங்கு விதிகளை மீறியதால் சிறையில் அடைக்கபட்டு சிறிது கால தண்டனையின்பின்பாக விடுதலையாகிறார்கள். ராக் இசை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தோற்கடிக்க முடியாத ஆன்மா    
January 20, 2010, 12:35 pm | தலைப்புப் பக்கம்

ஏறக்குறைய முப்பது வருட சிறைத்தண்டனையின் பின்பாக 1990ல் சிறையிலிருந்து விடுவிக்கப்படும் நெல்சன் மண்டேலா, 1994ல் தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொள்கிறார். அக்காலத்தில் தென்னாபிரிக்கா நாடு வேலையின்மை, பொருளாதாரத்தில் பின்னடைவு, குற்றச் செயல்களின் அதிகரிப்பு, வெள்ளை, கறுப்பு இன மக்களிற்கிடையில் முற்றிலுமாக மலர்ந்திருக்காத புரிந்துணர்வு என்பவற்றை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கற்களை வீசிய புனிதர்கள்    
January 15, 2010, 2:50 pm | தலைப்புப் பக்கம்

கிறிஸ்துவிற்கு பின் நான்காம் நூற்றாண்டு. எகிப்தின் பிரபலமான துறைமுக நகரமான அலெக்ஸாண்ட்ரியா, எண்ணற்ற அறிஞர்களின் எழுத்துக்கள் நிரம்பிய அதன் நூலகத்திற்கும், மத்திய தரைக்கடலை கண்சிமிட்டாது நோக்கிக் கொண்டிருக்கும் அதன் கலங்கரை விளக்கத்திற்கும் பேர் போனது. அலெக்ஸாண்ட்ரியா நகரம் ரோம அதிகாரத்தின் கீழ் இயங்கி வரும் ஒரு நகரமாகும். கிரேக்க ரோம நாகரீகம் அங்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மான்டோகிறிஸ்டோ மர்மம்    
January 13, 2010, 12:25 pm | தலைப்புப் பக்கம்

சர்வதிகார ஆட்சிகளாலும், அதன் பின் நிகழ்ந்த கப்சா புரட்சிகளாலும் அல்லல்பட்ட தென்னமெரிக்காவின் சிறு நாடுகளில் ஒன்று கொஸ்டா வேர்ட். NSAயின் இயக்குனன் ஜியோர்டினோவின் கொடூரக் கொலைஞர்களின் சதிப்பொறிகளிலிருந்து வெற்றிகரமாகத் தப்பிக்கும் மக்லேன், அமெரிக்காவை நீங்கி தன் முன்னாள் காதலி[மனைவி!] மரியா ஜனாதிபதியாகவிருக்கும் கொஸ்டா வெர்ட் நாட்டை வந்தடைகிறான். கொஸ்டா வெர்ட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

விபத்து    
January 7, 2010, 3:38 pm | தலைப்புப் பக்கம்

ஹாங்காங்கில் இயங்கும் தொழில்முறைக் கொலைகாரர் குழுவொன்றின் தலைவனாக செயற்பட்டு வருகிறான் Ho. ஹோவின் குழு தாங்கள் செய்யும் கொலைகளை எதிர்பாரமல் அல்லது தற்செயலாக நிகழ்ந்த ஒரு விபத்து போல் அரங்கேற்றி, நடாத்தி முடிப்பதில் கைதேர்ந்த கில்லாடிகளாகத் திகழ்கிறது. கொலைகளைத் திட்டமிடுவதிலும், அதற்கான ஆயத்தங்களிலும், ஒத்திகைகளிலும், பின் அக்கொலைகளை செயற்படுத்துவதிலும் மிக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

முசோலினியின் மனைவி    
January 1, 2010, 7:04 am | தலைப்புப் பக்கம்

இத்தாலியின் மிலான் நகரத்தில் 1914ல் இத்தாலிய சோசலிசக் கட்சியை சேர்ந்தவனான பெனிட்டோ முசோலினி, அதிகாரத்திற்கு எதிராக தொழிற்சங்கங்களுடன் இணைந்து மிலான் தெருக்களில் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை முன்னின்று நடாத்துகிறான். முசோலினியின் ஆளுமையால் வெகுவாகப் கவரப்படும் Ida Dalser எனும் பெண் அவன் மீது காதல் வயப்படுகிறாள். ஐடா, மிலான் நகரில் ஒரு அழகுநிலையம் ஒன்றினை நடாத்தி வருகிறாள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சாலமன் கேன்    
December 28, 2009, 7:32 am | தலைப்புப் பக்கம்

பில்லி சூனியங்களும், பைசாசங்களும், இருளும் தங்கள் கிளைகளைத் தடையற்று விரித்துக் கொண்டிருந்த 17ம் நூற்றாண்டின் ஆரம்ப காலம். தீமையின் கருவான சாத்தானையும், அவன் ஏவலர்களையும் எதிர்த்துப் போராட எவருமே இல்லை என்பதால் தீமை தன் எல்லைகளை உலகில் விரிவு படுத்திக் கொண்டிருந்தது. சாலமன் கேன், இங்கிலாந்து நாட்டிற்காக யுத்தங்களில் பங்கு கொள்ளும் ஒரு போர் வெறியன். போர்க்களமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நதியில் அமிழ்ந்த பிம்பம்    
December 20, 2009, 12:57 pm | தலைப்புப் பக்கம்

Chuk Auleன் விரல்களின் பிடியிலிருந்து நழுவிய சிகரெட் புகை, Teddy Danielsன் முகத்தை உரசியவாறே கடந்து கடலில் வீழ்ந்தது. சிறுகப்பலின் மேற்தளத்தில் சாய்ந்தவாறே கடற்காற்றில் உப்பு பார்த்துக் கொண்டிருக்கும் அவர்களிருவரும் Federal Marsahalகள் [ நீதித்துறைக் காவல் அதிகாரிகள்]. கப்பலிற்கு மேலாக படர்ந்திருந்த வானம் கருமை கொண்டிருந்தது. வரவிருக்கும் புயலொன்றின் முன்னறிவிப்பாக அதன் படர்வில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஒன்று, இரண்டு... XIII- ஒரு இருளின் ஒரு நாள் காதலன்    
December 13, 2009, 6:05 am | தலைப்புப் பக்கம்

அடித்துக் கொட்டும் மழையினுடாக இருளை விரட்டியவாறே விரைந்து கொண்டிருக்கிறது ஓக்லாண்ட்- லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கிச் செல்லும் ரயில் வண்டி. ரயிலில் சென்று கொண்டிருக்கும் மக்லேன், தென்னமெரிக்காவிலிருக்கும் சிறிய நாடொன்றில் தஞ்சம் கொண்டிருக்கும் தன் நலன் விரும்பிகளான ஜெனரல் காரிங்டன், மேஜர் ஜோன்ஸ் ஆகியோருடன் சென்றிணைந்து கொள்ள விரும்புகிறான். இதற்கு அவன் அமெரிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தீராமல் தழுவும் தாகம்    
October 8, 2009, 11:20 am | தலைப்புப் பக்கம்

கொரிய நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க குருவான Sang Hyun இறைவனின் சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வாழ்ந்து வருபவன். மருத்துவ மனையொன்றில் தங்கியிருக்கும் நோயாளிகளிற்கு மனதிற்கு ஆறுதல் தரும் வார்த்தைகளை கூறுபவனாகவும், பிரார்த்தனை சடங்குகளை நிறைவேற்றுபவனாகவும் கையுன் செயற்பட்டு வருகிறான். நாள் தோறும் அவன் காணும் நோயாளிகளின் வேதனை அவனையும் வேதனையுறச் செய்கிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பாக்தாத்தில் பறக்கும் பட்டம்    
September 27, 2009, 3:44 pm | தலைப்புப் பக்கம்

பாக்தாத்தில் நிலை கொண்டிருக்கும் அமெரிக்க துருப்புகளின் ஒர் பிரிவாக இயங்கிக் கொண்டிருக்கிறது Bravo அணி. ப்ராவோ அணியின் பணி நகரத்தில் எதிரிகளால் வைக்கப்படும் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்வதாகும். ப்ராவோ அணியின் தலைவனாக தாம்சன்(Guy Pearce) என்பவனும் அவனின் தலைமையின் கீழ் சான்போர்ன் (Anthony Mackie) மற்றும் எல்ரிட்ஜ் (Brian Geraghty) என இருவரும் கடமையாற்றி வருகிறார்கள். நகரில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தகரத்தில் பூக்கும் ரோஜாக்கள்    
September 20, 2009, 2:32 pm | தலைப்புப் பக்கம்

இருபது வருடங்களிற்கு முன்பாக தென்னாபிரிக்காவின் ஜோகானாஸ்பெர்க் நகரத்தின் மீது செயலிழந்து விடுகிறது வேற்றுக் கிரகவாசிகளின் ஒர் விண்கலம். செயலிழந்த விண்கலத்தின் உள்ளே நுழையும் அதிகாரிகள் அங்கு மிகப் பலவீனமான நிலையில் இருக்கும், இறால் போல் தோற்றமளிக்கும் வேற்றுக் கிரகவாசிகளைக் காண்கிறார்கள். வேற்றுக் கிரகவாசிகளின் கலம், அது அந்தரத்தில் நிற்குமிடத்தை விட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

துயில் கலையும் நதி    
September 18, 2009, 11:45 am | தலைப்புப் பக்கம்

ஜெனொவா நகரின் யுத்தத்தில், யுத்தக் கைதியாக்கப்பட்ட மார்க்கோ போலோ, நகரின் சிறையில் அடைக்கப்படுகிறான். சிறையில் தன் பிரயாண அனுபவங்களை சக கைதிகளிடம் விடுவிக்கிறான் மார்க்கோ. கைதிகள் மத்தியில் மார்க்கோவின் பயணக் கதைகள் புகழ் பெறுகின்றன. இந்நிலையில் சிறையில் மார்க்கோவை அணுகுகிறான் அதே சிறையில் கைதியாக இருக்கும் Luigi Rustichello De Pise. மார்க்கோவின் பயண அனுபவங்களை ஒர் புத்தகமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: