மாற்று! » பதிவர்கள்

கதிர் சயந்தன்

போர் நிறுத்தத்திற்கு பிறகு கொல்லப்படுபவர்கள் - வீடியோ    
April 27, 2009, 10:22 am | தலைப்புப் பக்கம்

யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த சிறிலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை சிறிலங்கா அரசு உறுதியாக மறுத்துள்ளது. இருப்பினும் கனரக ஆயுதங்களை மற்றும் விமானத்தாக்குதல்களை மோதல் களங்களில் பயன்படுத்த வேண்டாமென அரசாங்கம் இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால், வன்னியில் இன்றும் கடுமையான வான் தாக்கதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

சென்னை போடா வெண்ணை என்றது    
April 7, 2009, 7:16 pm | தலைப்புப் பக்கம்

அண்மைய ஈழப்போரில் ஏற்படுகிற அழிவுகளுக்கு இந்திய தொடர்பினை அம்பலப்படுத்தி செய்திகள் வருகின்றன. புலிகளின் தாக்குதல்களில் சிதைந்த 58வது படைப்பிரிவினை நிரப்பியும் 59வது படைப்பிரிவின் அரைவாசியிலுமாக இந்தியப் படையினர் பங்கு கொள்வதாக ஒரு செய்தியில் படித்தேன். 200 வரையான இந்திய இராணுவ உடலங்கள் பூனேக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அச்செய்தி சொல்கிறது. தாக்குதல்களைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்


வடலி அல்லது நாங்க புத்தகம் போட்ட குறிப்புகள்    
March 17, 2009, 10:22 pm | தலைப்புப் பக்கம்

இந்த வருடத்தின் முதல் நாள். சோமிதரனோடு பேசிக் கொண்டிருந்த போது தமிழகத்தின் பதிப்பகம் ஒன்றினால் வெளியிடத் தயாராயிருந்த நண்பர் அகிலனது புத்தகமொன்று வெளிவரமுடியாத சிக்கலில் இருப்பதாகச் சொன்னார். காரணம் அப் புத்தகத்தின் பெயர்! மரணத்தின் வாசனை ! பெயரினை மாற்றுவது குறித்த தமிழக பதிப்பகம் ஆலோசித்ததாகவும் அதற்கு உடன்படவில்லையெனவும் அகிலன் சொன்னார். ஓ.....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

துண்டிக்கப்பட்ட தலையொன்றின் புன்னகை    
March 10, 2009, 10:00 pm | தலைப்புப் பக்கம்

உண்ணாவிரத மேடையோரம் அமைக்கப் பட்டிருந்தது ஓட்டுச் சாவடி பசித்திருந்த மனிதர்களின் அணைப்பிலிருந்தன செத்துப் போன குழந்தைகள். பந்தல் அலங்காரச் சேலைகளில் தெறித்திருந்தன ரத்தங்களும் தசைகளும்.. நிவாரண நிதியில் வாங்கிக் குவிக்கப்பட்ட சவப் பெட்டிகளுக்கு போதாதிருந்தன பிணங்கள். ரத்தம் சொட்டும் உடைந்த கையொன்றை முடிவிடத்தில் பற்றியிருந்தது மனிதச்...தொடர்ந்து படிக்கவும் »

கையறு நிலையுற்ற ஓர் இரவின் குறிப்புக்கள்    
March 7, 2009, 10:45 am | தலைப்புப் பக்கம்

சிறிதும் பெரிதுமாய் மண்மூடைகள் சிதைந்து கிடக்கின்றன. தெருவெங்கும் வனமெங்கும் பதுங்கு குழி வாயில்களிலும் கடற்கரைக் கொட்டில்களிலும் சிதறிக் கிடக்கின்றன அவை. அடுக்கி வைத்த மண் மூடைகளின் பின்னே குறி பார்க்கின்றன துப்பாக்கிகள். முன்னேயும் தான்! சூடுகளிலும் பொஸ்பரஸ் எரிவுகளிலும் க்ளஸ்ரர் குண்டுகளிலும் மண்மூடைகள் வயிறு பிழந்து விழுகின்றன. புதிய மண்மூடைகளை...தொடர்ந்து படிக்கவும் »

தமிழகத்தின் மனச் சாட்சிக்கு - வீடியோ    
February 23, 2009, 9:47 pm | தலைப்புப் பக்கம்

பத்துத் தலைமுறைக்கு சொத்துச் சேர்த்து செத்து விடும் சொப்பனங்கள் எதுவும் எம்மிடமில்லை. கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று. உயிர் வாழ்வதற்கான ஒரு உத்தர வாதம். மிருக வதைக்கெதிராக ஐ நா வரையும் பேசுகிறார்களாம். நாம்தான் மிருகங்களிலும் கீழாகிப் போனோமே! - புதுவை இரத்தினதுரை ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் மனிதம்

வன்னிச் செய்தியாளர் சத்தியமூர்த்தி சாவடைந்தார்.    
February 13, 2009, 7:47 am | தலைப்புப் பக்கம்

சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சத்தியமூத்தி மரணமடைந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் மனிதம்

27.01- வன்னியில் மக்களின் கருத்துக்கள் - வீடியோ    
January 27, 2009, 10:42 pm | தலைப்புப் பக்கம்

வன்னியில் நடந்துவரும் மனிதப்பேரவலத்தில் சிக்கியிருக்கும் மக்கள் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு இது. வன்னியில் உள்ள மக்களை வெளியேற விடாது புலிகள் தடுத்து வைத்துள்ளனர் என அரசும், அவ்வாறெதுவும் இல்லை. நேரில் வந்து அறிந்து கொள்ளவும் என புலிகளும் தெரிவித்து வருகின்றனர். Get the Flash Player to see this player. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

அவர்கள் விரும்பியதைச் செய்யட்டும்!    
January 15, 2009, 12:04 am | தலைப்புப் பக்கம்

வன்னியிலிருந்து வந்த ஒரு ஒளிக்காட்சித் துண்டு அது. செல் வீச்சொன்றின் பின் அவ்விடச் சூழலை பதிவாக்குகிறது கமரா. தற்காலிக குடிசையின் முன்றலில் யாரோ கைகளை மேலே குவித்து தலை சிதறிக் கிடக்கிறார். குடிசை சிதைந்து போய் விசிறியெறியப் பட்டிருக்கிறது. காயப்பட்ட சிறுமியொருத்தியை தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள். கமரா அனைத்தையும் கடக்கிறது. வேலியோரத்தில் கையில் ரத்தம் தோய்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் வாழ்க்கை மனிதம்

பிரபாகரனுக்கு பின்பு அல்ல!    
December 20, 2008, 10:07 am | தலைப்புப் பக்கம்

இலங்கை ஆங்கிலேயர் ஆட்சியின் கீழிருந்த போது புகையிரத சேவை அறிமுகப் படுத்தப்பட்டது. தமிழரின் பாரம்பரிய பிரதேசங்களைப் புறக்கணித்து தமது பெருந்தோட்ட வர்த்தகத்தின் இலாபத்தைக் குறிவைத்து சிங்கள பகுதிகளூடாக புகையிரத சேவையை நடாத்துவதற்கு அவர்கள் திட்டமிட்டிருந்தனர். தமிழர் பகுதிகளுக்கும் புகையிரத் சேவையை வழங்குமாறு தமிழர் தரப்பிலிருந்து வேண்டுகோள்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

மும்பை அட்டாக், ஹரி சீன் மச்சாங்!    
December 18, 2008, 2:02 pm | தலைப்புப் பக்கம்

மும்பை அட்டாக் ஹரி சீன் மச்சாங் - சிங்கள கருத்துக் களமொன்றில் எழுதப்பட்டிருந்த இச் சிங்களச் சொற்றொடரை புரிந்து கொள்வது அத்தனை சிரமமானதல்ல. தமிழில், ஆம் ! தமிழில் சொல்வதென்றால் மும்பை அட்டாக் சூப்பர் மச்சியென்பது போல இது பொருள் படும். மும்பையில் அப்பாவி மக்கள் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்த சம நேரத்தில் Dailymirror போன்ற கருத்தெழுதும் களங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

பெரியம்மா - சிறுகதை    
November 27, 2008, 6:38 am | தலைப்புப் பக்கம்

பெரியம்மாவிற்கு புலிகளைக் கண்ணிலும் காட்டக் கூடாது. அவவுக்கு முன்னால் புலிகளைப் பற்றிப் பேசுவதே கையிலிருக்கும் அகப்பைக் காம்பால், குடையால், சுள்ளித் தடியால் அடிவாங்குமளவிற்கு ஆபத்தானது. அதனால் புலிகளுக்கான, எனது சப்போர்ட்டை அவவுக்குத் தெரியாமல் நான் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. எனது சப்போர்ட் என்பது அதிகபட்சம் பிரபாகரனின் அடர்ந்த மீசையுடனான பொக்கட் சைஸ்...தொடர்ந்து படிக்கவும் »

ஒருவேளை ஒபாமா இலங்கையில் பிறந்திருந்தால் ?    
November 16, 2008, 8:45 pm | தலைப்புப் பக்கம்

மின்னஞ்சல் சுற்றில் கிடைத்த படம். மிகச் சரியாகத் தான் கணித்திருக்கிறார்கள். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

இந்திய - ஈழப் போரின் முதற் புள்ளி என்ன ?    
November 10, 2008, 10:52 pm | தலைப்புப் பக்கம்

எல்லோரும் சேர்ந்து கொள்ளியெடுத்து நெருப்பு மூட்டி பற்றியெரிய வைத்து விட்டு - இப்போ எரியூட்டிய கைகள் கூட தங்கள் கொள்ளிக் கட்டைகளை மறைத்து வைத்து விட்டு தனியே ஒரு கையை மட்டும் சுட்டிக் காட்டி அதோ அதோ அந்தக் கைதான் எரித்தது எனச் சொல்வதிலுள்ள நியாயம் என்ன ? அன்டன் பாலசிங்கம் அவர்களின் போரும் சமாதானமும் நூலில் இருந்து …. தமிழீழ அரசியல் போராட்ட வரலாற்றில் ஒரு இருள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

இரண்டு வாரக் கெடுவும் எண்ணங்களும் படங்களும்    
October 14, 2008, 11:07 pm | தலைப்புப் பக்கம்

தமிழகத்தில் கட்சி மட்டங்களிலும், பொது மக்கள் மத்தியிலும் எழுந்திருக்கும் ஈழமக்கள் ஆதரவு நிலை, ஈழத்தில் போரில் அல்லற்பட்டு இடம்பெயர்ந்தோடும் மக்கள் மத்தியில், மனோ ரீதியான வலிமையைத் தந்திருக்கிறது என்பது உண்மைதான் என்றார் இன்னமும் கிளிநொச்சியில் இருந்து ஒலித்துக் கொண்டிருக்கும் புலிகளின் குரல் வானொலியைச் சேர்ந்தவர். ஆமி வந்துதான் பார்க்கட்டுமே, என...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்

ஆசிரியன் செத்து விட்டான்    
October 14, 2008, 5:05 am | தலைப்புப் பக்கம்

பின்னவீனத்துவம் என்றால் தாவு தீர்ந்து டவுசர் கிழிகிறதா உங்களுக்கு? மையம் விளிம்பு குறித்த அறிதல்களைப் பெறுவது சிரமமாயிருக்கின்றதா? கோட்பாடுகள் தத்துவங்கள் சூத்திரங்கள் என குழப்பமாக இருக்கின்றதா ? பின்னவீனத்துவ கோட்பாடு குறித்து தமிழில் தெளிவாக அறிந்து கொள்ள முடியாதிருக்கிறதா? அல்லது மொழி ஒரு தடையாக இருக்கின்றதா? ஆமாய்யா ஆமா அப்படியானால் நீங்களே எம் இலக்கு....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

பிழைப்பைக் கெடுக்கும் நினைப்புகள்    
October 8, 2008, 12:04 am | தலைப்புப் பக்கம்

என்னடாப்பா தமிழகத்தில நல்ல மாற்றங்கள் எல்லாம் நடக்குது. கேள்விப் பட்டனியோ என்றார் அவர். ம் என்றேன் நான். மன்மோகன் சிங் இலங்கைத் தூதரை அழைத்து யுத்தத்தை உடனடியா நிறுத்தச் சொல்லியிருக்கிறாராம். உண்மையோ என அவர் கேட்டார். அப்பிடியொண்டுமில்லை என நான் மறுதலித்தேன். ச்சே அங்கை கருணாநிதியோடு கதைச்சிருக்கிறாராம். உடனை தூதரை அழைத்து எல்லாத்தையும் நிறுத்தச் சொல்லி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

இந்தியாவின் நலன் என்பது….. !    
October 2, 2008, 1:51 pm | தலைப்புப் பக்கம்

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இன்று தமிழகமெங்கும் நடைபெறுகின்ற உண்ணா விரதப் போராட்டத்தில் அதிமுக கலந்து கொள்கிறது என செல்வி ஜெ ஜெயலலிதா அறிவித்ததும் ஈழத்தமிழர்கள் அதிகம் பங்கு வகிக்கும் கருத்துக் களமொன்றில் ஆரவாரம் வெளிக் கிளம்பியது. இப்போதாவது ஈழத்தமிழர் மனங்களைப் புரிந்து கொண்டாரே அம்மா என்ற ரீதியிலும் கூட இருக்கும் வைகோவே இதற்குக் காரணமெனவும் ஆளாளுக்குச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்

சீலம்பாய்களும் சிரிப்பு நடிகரின் செவ்வியும்    
September 23, 2008, 10:13 am | தலைப்புப் பக்கம்

புலம் பெயர் நாடுகளில் இவ்வாறு உருவாகும் எத்தகைய ஒரு சினிமா முயற்சியும் நாம் தமிழ் நாட்டுக்கு வெளியே தமிழ் சினிமாவை உருவாக்குவதற்க்கு துணை போகும். காதல் படம் எடுக்காதை என்றோ, டிஸ்யூம் டிஸ்யூம் படம் எடுக்காதையெண்டோ சொல்லி அந்த முயற்சியையும் தடுத்து விட்டால் அங்கு பின்னால் அந்த வழியே வரக்கூடிய ஒரு நல்ல சினிமாவுக்கான பாதையையும் சேர்த்தே அடைத்து...தொடர்ந்து படிக்கவும் »

அந்தக் கண்களும் சில காதல்களும்    
September 17, 2008, 8:13 pm | தலைப்புப் பக்கம்

கிழிந்த கிடுகுகள் நிறைந்த வேலி முற்றத்தின் மத்தியில் பெயர் தெரியா ஒரு ஒற்றைப் பூமரம் எப்போதாவது எனைச் சந்தித்து சில மொழிகள் பேசும் இரு விழிகள் 0 0 0 சுப்ரமணியபுரம் பார்த்து முடித்த போது மனதைப் பாதித்த நம்பிக்கைத் துரோகத்திற்குமப்பால் இற்றைவரை துரத்துவதும் அதனூடே காலங்களைக் கிளறி மனதை அலைக்கழிப்பதுவும் படத்தில் குறிப்பிட்ட தூரம் வரை ஒரு கவிதையைப் போல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

சட்டவிரோத ´குடி` யேற்ற வாசிகள்    
September 2, 2008, 10:35 am | தலைப்புப் பக்கம்

நீண்ட நாட்களுக்கு பிறகு சுவாரசியமான பொழுது நேற்றமைந்தது. இணையம் வழி அறிமுகமாகி இப்போது இணைந்து பணியாற்றும் நண்பர்களுடன் போனதப்பொழுது. லண்டனிலிருந்து ஒருபேப்பர்காரன்கள் / காரிகள் பிரான்சில் இருந்து சிறியண்ணன் (சாத்திரி) ஜேர்மனிலிருந்து சபேசன் உட்பட்ட சிறு குழுவொன்று சுவிஸ் வந்திருந்தது. சுவிஸ் எனச் சொல்ல முடியாதவாறு பிரான்ஸ் ஜேர்மனி எல்லைப் பகுதிகளிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஆ(வா)ய்வுத் தொல்லையும் `ஆ´ என்ற வாய்களும்    
August 22, 2008, 9:51 pm | தலைப்புப் பக்கம்

ஈழத்தின் வடபகுதி, வன்னியில் சிறிலங்கா அரச பயங்கரவாதப் படைகளின் இராணுவ நடவடிக்கைகளின் பெறுபேறாய் நடந்தேறும் சொல்லொணாத் துயர் மிகும் மனிதப் பேரவலங்கள் மனதிற்குள் விரக்தி வெறுப்பு ஓர்மம் கையறு நிலையென உணர்வுக் கலவையின் திரளென உருவாகித் தணிந்தெழுகின்றன. வீடும் ஊரும் இழந்து உறவுகளைத் திக்கொன்றாய்த் தொலைத்துவிட்டு இலக்கின்றி வரும் அயல் தேசத்தின் அன்பளிப்புக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

என்ன ஜென்மங்கள் நீங்கள் / நாங்கள்    
July 30, 2008, 10:58 pm | தலைப்புப் பக்கம்

இடம் கிளிநொச்சியில் ஒரு மண்டபம் காலம் சமாதானம் கண்ணாமூச்சி ஆடிய, வந்தவர்கள் பத்திரமாகத் திரும்பிச் செல்ல முடிந்த ஒரு வருடம் மேடையில் இயக்குனர் பாரதிராஜா உரையாற்றிக் கொண்டிருக்கிறார். ஆக்ரோசமான பேச்சு. அனல் வார்த்தைகளில் பறக்கிறது. அமைதியாக உட்கார்ந்திருக்கிறது மக்கட் கூட்டம். மேடையில் பேசும் போது முன்னிருக்கும் மக்கட் கூட்டத்தை கற்களாக உருவகப் படுத்தி கொள்ளச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் திரைப்படம்

எரியும் நினைவுகள்! வானொலி அறிமுகம்    
July 5, 2008, 3:51 pm | தலைப்புப் பக்கம்

எரியும் நினைவுகள் ஆவணப்படம் குறித்து புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பான அறிமுக நிகழ்ச்சி இது. படைப்புக்கள், கலைஞர்களை அறிமுகப்படுத்தும் நூலகம் நிகழ்ச்சியில் இவ் அறிமுகம் இடம் பெற்றது. நூலகம் நிகழ்ச்சி பிரதி வெள்ளி தோறும் தாயக நேரம் இரவு ஏழு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் ஒலிப்பதிவு

அனாதைகள் - சிறுகதை    
July 1, 2008, 11:25 am | தலைப்புப் பக்கம்

(1) குப்பியைக் கடித்துவிடக் கூடாது என முன்னரே திட்டமிட்டிருந்தார்களோ என்னவோ சாகீரின் கையிரண்டையும் பின் முதுகில் சேர்த்து அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள். சாகீர் தலையை உயர்த்த முடியாதபடி இன்னொரு கை தரையோடு தலையை இறுக்கி வைத்திருந்தது. சர்வ நிச்சயமாய் தன்னைக் குறிவைத்துக் கொத்தியிருக்கிறார்கள் என்பது அவனுக்கு விளங்கியது. ´´செத்து விட வேண்டும்´´....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

பின்னிரவுக் குறிப்புக்கள்    
June 23, 2008, 11:36 pm | தலைப்புப் பக்கம்

சிறுகதைகள் எழுதுவதற்கு நான் வோர்க் அவுட் (work out) செய்வதில்லையென சோமிதரன் கடிந்து கொண்டான். ஆவணப்படம் எடுக்கிற அவனுக்கு பீல்ட் வேர்க் சரி. எனக்கெதுக்கு என புரியவில்லை. அடப் போடா.. எனக்கு நடந்ததையும் பார்த்ததையும் கலந்து கட்டி எழுதுறதுக்கு எதற்கு பீல்ட் வேர்க் செய்யோணும்..? ரொம்ப முக்கியம் என்றேன் நான். நீ பத்து வருசத்துக்கு முதல் எழுதிய கதைகள் அப்போதைக்கு தரம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

கடைசியில என்னையும் ஒரு தமிழ் பதிவர் ஆக்கிட்டாங்க..    
June 16, 2008, 8:35 pm | தலைப்புப் பக்கம்

தசாவதாரம் சில கேள்விகள் சந்தானபாரதி, பி வாசு, சிட்டிபாபு, பட்டாபி பாஸ்கர், வையாபுரி, அசின், கபிலன் இந்த வேடங்களிலெல்லாம் ஏன் கமல் நடிக்கவில்லை? சுனாமியின் சேதங்களை ஜெயலலிதா பார்வையிடும் காட்சியின் வீடியோத் தரம் மோசமாக இருந்தது. ஏன் - கருணாநிதிக்கு/ மன்மோகன்சிங்கிற்கு போட்டது போல் ஜெயலலிதாக்கு டூப் போட ஆளில்லையா ? தசாவதாரம் படம் எடுப்பதற்கு இரண்டு வருடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஒரு பேப்பரில் வெளியான சோமிதரனின் செவ்வி    
June 7, 2008, 7:22 pm | தலைப்புப் பக்கம்

கடந்த 65 வருட கால சினிமா வாழ்க்கையில் என் மக்களுக்காக நான் என்ன செய்தேன் என சிந்தித்து பார்க்கின்றேன். இந்த நூலகத்தைப் பயன்படுத்தியவன் அதனை அனுபவித்தவன் என்ற காரணங்களிருப்பினும் அது குறித்து நான் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. ஆனால் நூலகம் எரிக்கப்பட்டபோது பிறந்த குழந்தை அது தொடர்பான ஆவணப் படத்தை எடுத்து என் கைகளில் தரும் போது என் இயலாமையை உணர்கிறேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் திரைப்படம்

சேம் சேம் பப்பி சேம்…    
June 3, 2008, 7:59 pm | தலைப்புப் பக்கம்

அப்பிடி என்னதான் விஜய்யிடம் இருக்கோ தெரியவில்லை. நான்கு ஐந்து ஆறு வயது குழந்தைகள் எல்லாமே விஜய் புராணம் பாடிக்கொண்டு திரிகிறார்கள். கடந்த கிறிஸ்மஸ் ஒன்று கூடல் ஒன்றுக்குப் போயிருந்தேன். ஏதோ ஒரு சிறிய நிகழ்ச்சி. சிறுவர்களை அழைத்து கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எதற்காகவோ பிடித்த நடிகர் யார் என்ற கேள்வியையும் அதனுள் சேர்த்திருந்தார்கள். வரிசையாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தாலி அணிவது மூட நம்பிக்கை! அணியாதிருப்பது ?    
June 2, 2008, 8:43 am | தலைப்புப் பக்கம்

தாலி குறித்தோ அதன் உண்மையான அரசியல் பின்புலங்கள் குறித்தோ அது தொடர்பான பெண்ணிய ஆண் மையப் பார்வைகள் குறித்தோ நான் எழுதியதில்லை. விவாதங்களில் கலந்து கொண்டதும் இல்லை. நேற்று நீண்ட பயணமொன்றின் போது கூட வந்தவருடன் இது குறித்து நிறையப் பேசிக்கொண்டேன். (நானோ அவரோ நித்திரை கொள்ளாதிருப்பதற்காகத்தான் இந்த வழமை. ஒரு முறை அருகிலிருந்து வந்த நான் நித்திரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

எனக்கு ஆறுதல் சொல்வீர்களா..?    
May 30, 2008, 8:48 am | தலைப்புப் பக்கம்

சே.. எப்பவுமே ஒன்றைச் செய்து விட்டு பின்னர் வருத்தப்படுவதே வேலையாயிற்று எனக்கு. எனக்கென்னாச்சு.. எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். குருவி பார்க்கப் போகலாம் என்ற போது அழிவை வலிந்து தேடிக்கொள்ள வேண்டாம் என்று ஆலோசனை சொல்லியிருந்த நானா இப்படி ? கடைக்காரர் குருவி கிளியர் டிவிடி வந்திருக்கப்பா எடுத்திட்டுப்போ.. 2 ப்ராங்தான் என்ற போது சும்மா தந்தாலும் வேண்டாம் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மெல்பேண் இன்னிசைக் குசு    
May 27, 2008, 2:00 pm | தலைப்புப் பக்கம்

மூன்று வருடங்களுக்கு முன்பு மெல்பேணில் ஓர் இன்னிசை நிகழ்விற்குப் போயிருந்தேன். தமிழீழ பொருளாதர வள ஆலோசகரும் ஒரு கனவினைப் போல் முடிவடைந்து விட்ட கடந்த சமாதானப் பேச்சுக்களில் புலிகள் சார்பில் கலந்து கொண்டவருமான ஜோய் மகேஸ்வரனின் சொந்த இசைக்குழுவின் இன்னிசை நிகழ்வு அது. மேடையில் வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டியில் Melbourne Innisai Kulu என்றிருந்தது இலேசான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

எரியும் நினைவுகள் - ஒரு முன்னோட்டம்    
May 26, 2008, 5:47 pm | தலைப்புப் பக்கம்

யாழ்ப்பாணம் நூல்நிலைய எரிப்புத் தொடர்பாக வெளிவந்துள்ள எரியும் நினைவுகள் ஆவணப்படத்தின் ஒரு முன்னோட்டம் நடிகர் நாசர் அவர்களின் குரலில் விரிகிறது. Get the Flash Player to see this...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

தமிழீழம் அமைத்திட இந்திய அரசு தக்க வழி காண வேண்டும் -கலைஞர் கடிதம்    
May 26, 2008, 9:46 am | தலைப்புப் பக்கம்

இந்திய அரசு - இலங்கையில் தமிழ் ஈழம் அமைத்தட தக்க வழி காண முன்வர வேண்டுமென கலைஞர்.மு. கருணாநிதி அவர்கள் முரசொலி இதழில் கடிதம் தீட்டியுள்ளார். கடிதத்தின் விபரம் வருமாறு - உடன் பிறப்பே அக்டோபர் திங்கள் 13 ம் தேதியன்று வேலூரில் நடைபெற்ற தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) நடத்திய பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் நண்பர் நெடுமாறன் அவர்கள் கலந்து கொள்ள இயலவில்லையென்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் வரலாறு

நானும் மழைக்குப் பொறுப்பான கடவுளும்    
May 23, 2008, 4:17 pm | தலைப்புப் பக்கம்

சும்மா ஒரு இசையும் கதையும் மாதிரி செய்து பார்க்கலாமென்றுதான் . பெரிதா சீரியசாக எடுத்துக்காதீங்க.. இசையும் கதையும் செய்யலையே என்ற குறையைத் தீர்க்கும் வண்ணம் ஏற்கனவே இங்கே இருக்கிற பிரதியொன்றைச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை ஒலிப்பதிவு

தமிழ் - ஆங்கிலம் - தமிங்கிலம் - சில பகிர்வுகள்    
May 22, 2008, 10:17 pm | தலைப்புப் பக்கம்

திருச்சியில் பெயர் நினைவிலற்ற ஒரு கொன்வென்ற் (கான்வென்ட்) ஒன்றில் அனுமதிக்காக போய் நிற்கின்றேன். கையில் குறுக்காக ஓடும் மடிப்புக்கள் தெரியும் O/L பரீட்சையின் (பத்தாவது) பெறுபேற்றுத்தாள். (அது கூட பின்னர் வந்த நண்பனொருவனால் கொண்டு வந்து தரப்பட்டது ) அதைத்தவிர என் கல்வி நிலையைச் சொல்லும் வேறெந்தச் சான்றும் என்னிடமிருக்கவில்லை. ஒரு பக்கத்தில் தட்டச்சியிருந்த அத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் கல்வி

நினைவழியா நாட்கள் - 2    
May 15, 2008, 4:40 pm | தலைப்புப் பக்கம்

அடுத்த நாள் வெள்ளனவே அப்பையாண்ணை வீட்டை வந்திட்டார். அப்பையாண்ணை எண்ட பெயர் எனக்குச் சிரிப்பாக் கிடக்கும். அதென்ன அப்பு பிறகு ஐயா பிறகு அண்ணை எண்டு நான் அம்மாட்டைக் கேட்பதுண்டு. ஆனா அவாவும் அப்பிடித்தான் கூப்பிடுறவ. அவரை மட்டுமில்ல அவரின்ர மூத்த மகளையும் நான் தங்கச்சியக்கா எண்டுதான் கூப்பிடுறனான். அப்பையாண்ணை வீட்டை வரேக்கையே எங்கையெங்கை செல் விழுந்தது எண்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்