மாற்று! » பதிவர்கள்

உமாஷக்தி

தலை நிமிர வைத்த பெண் இயக்குனர்கள்    
August 11, 2010, 3:30 am | தலைப்புப் பக்கம்

அபர்ணா சென் சினிமா என்பது தனி உலகம். கண்ணதாசன் வரிகளில் ‘இது வேறு உலகம்’ மொத்த உலகத்தின் கனவுத் தொழிற்சாலை அது. இங்கு ஜெயிப்பது மாபெரும் சூதாட்டம். ஆண்களுக்கே சவாலாக இருக்கும் திரைத்துறையில் பெண்களின் பங்களிப்பு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. இந்திய அளவில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிற்கே பெண்கள் இயக்குனர்களாகியுள்ளார்கள். அதிலும் வெற்றி பெற்ற இயக்குனராக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

The Song of Sparrows    
July 22, 2010, 4:20 am | தலைப்புப் பக்கம்

அழகியலுடன் கூடிய ஒரு கவித்துவமான சிறுகதையை வாசித்தது போன்ற உணர்வை தருகிறது இரானிய இயக்குனரான மஜித் மஜீதியின் ’தி சாங் ஆஃப் ஸ்பாரோஸ்’ திரைப்படத்தைப் பார்க்கையில். புறநகரில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் கரீமிற்கு நெருப்புக் கோழி பண்ணையில் செய்யும் வேலைதான் வாழ்வாதாராம். நெடிது வளர்ந்திருக்கும் அக்கோழிகளை பராமரிப்பதும், அதன் முட்டைகளை வேனில் ஏற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

A Short Film About Love    
April 29, 2010, 5:54 am | தலைப்புப் பக்கம்

மொழி – பொலிஷ்இயக்குனர் – க்ரிஸ்டோஃப் கீஸ்லோவஸ்கிநடிகர்கள் – ஒலஃப் லூபன்ஸ்கோ (Olaf Lubaszenko)/க்ரேஸ்யனா (Grażyna Szapołowska)‘மலரினும் மெல்லியது காமம் சிலர் அதன்செவ்வி தலைப்படுவார்’காதலின்பம் மலரை விட மென்மையானது. அந்த உண்மையை உணர்ந்து நற்பயன் பெறுபவர் இவ்வுலகில் வெகு சிலரே என்கிறார் திருவள்ளுவர். இதைவிட காதலைப் பற்றி சிறப்பாகக் கூறிய வரிகள் ஏதுமிருக்க முடியாது. அத்தகைய மெல்லிய...தொடர்ந்து படிக்கவும் »

The Lemon Tree    
October 22, 2009, 7:14 pm | தலைப்புப் பக்கம்

பாலஸ்தீன விதவைப் பெண் சல்மா (நடிகை ஹியாம் அப்பாஸ்). தன் அப்பா விட்டுச் சென்ற பெரிய அழகான அடர்த்தியான எலுமிச்சைத் தோட்டத்தை தன் உயிருக்கு நிகராக போற்றி பராமரித்து வருகிறாள். அதில் கிடைக்கும் சொற்ப வருமானமே அவளின் ஜீவாதாரம். இவ்வாறு இருக்கையில் அந்த நாட்டின் முக்கிய குடிமகனான பாதுகாப்பு அமைச்சரும் அவரின் மனைவியும் மிராவும் பக்கத்து வீட்டுக்கு குடியேறுகிறார்கள். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அவனுக்கு ப்ரியம் என்று பெயர்    
October 3, 2009, 6:54 pm | தலைப்புப் பக்கம்

வெகு நாள் கழித்து மனம் லேசாகி சந்தோஷத்தில் மிதந்தது. குழந்தைகளைத் தூக்கி தட்டாமாலை சுத்தி அவர்களுக்குப் பிடித்தவற்றை வாங்கித் தந்தேன். என்னம்மா ஆச்சு என்றார்கள். என்னுடைய லேப்டாப்பில் ’ஓ பட்டர்ஃப்ளை பாடலை’ ஒலிக்கச் செய்து ஹெட் போனில் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நேற்றின் கொதிநிலைகள் இன்று காணாமல் கரைந்து போகும் போது எத்தனை ஆசுவாசமாக இருக்கிறது. என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை அனுபவம்

எனது நண்பனே    
September 30, 2009, 8:35 am | தலைப்புப் பக்கம்

எனது நண்பனேஎனது நண்பனே,நான் புலப்படுவதைப் போலநான் இல்லைபுலப்படுவதென்பதுநான் அணியும்ஓர் ஆடை –மிகக் கவனமுடன்நெய்யப்பட்டதோர் ஆடை –உமது விசாரனைகளிலிருந்தும்உன் மீதான எனதுஅக்கறையின்மையிலிருந்தும்என்னைக் காக்கும்ஓர் ஆடை!என்னுள் உள்ள இந்த ‘நான்’எனது நண்ப!மெளன இல்லத்தில்வசிக்கிறது;அதற்குள்ளேயேஅந்த ‘நான்’அணுக முடியாமலும்இருக்கும் எப்போதும்!என்ன சொல்கிறேன் நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை இலக்கியம்

இரண்டு கவிதைகள்    
August 13, 2009, 11:01 am | தலைப்புப் பக்கம்

1. தோற்ற மானுடம் பிரிவை மறந்த விரல்கள் அலைபேசி எண்ணை அழுத்துகிறது தொடர்பு எல்லைக்கு அப்பால் அவன் சென்றிருக்கக் கூடுமாம் தினம் பார்க்கக் கிடைக்கும் கடல் வெறும் மணற்பரப்பாய்... வாசித்து முடித்த கவிதை வெறும் சொற்களாய் கேட்கவாரம்பித்த பாடல்கள் மாய ஒலிகளாய்.. எந்த ரகசிய கனவிலிருந்து உயிர்த்தெழுந்தாயோ உன்னில் எப்போதும் தோற்கும் மானுடமாய் நான். 2. பறவைகள் எங்கே போயின? ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தலைவன் இருக்கின்றானா?    
May 18, 2009, 11:50 am | தலைப்புப் பக்கம்

என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியாத சூழலில் மனச் சோர்வுடன் இந்த நாள் கடக்க இயலாத துயரத்தை தருகின்றது. ந்யூஸ் சேனல்களில் காணும் காட்சிகள் பதைபதைக்கச் செய்கிறது. எல்லா நம்பிக்கைகளும் நீர்த்துப் போய்விட்ட கடைசி தருணமாகி விட்டது. இனி கொல்வதற்கு யாருமில்லை, சொல்வதற்கும் ஏதுமில்லை....என் முகத்தில் எதைக் காண்கிறாய் என்று வினவியது போர்இடிபாடுகளை என்றான் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

Volver – To Return (திரும்புதல்)    
February 3, 2009, 8:29 am | தலைப்புப் பக்கம்

சில சமயம் வாழ்வின் சம்பவங்கள் விசித்திரமானவை. நாம் எதிர்ப்பார்ப்பது போல் பெரும்பாலும் இருக்காது வாழ்க்கை. குரூரங்கள் நம்ப முடியாத விதய்ங்கள், அவலங்கள் எல்லாம் சேர்ந்து இரு சகோதரிகளின் வாழ்வின் ஊடாக ஸ்பெயினில் வாழும் ஆறு பெண்களின் வாழ்க்கைச் சிக்கலை திரைப்படுத்துகிறார் பெட்ரோ அல்மதோவர் (Pedro Almodóvar).லா மன்ச்சா எனும் கிராமம். கடுமையான பனிக்காற்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

எங்கெங்கும் புத்தகங்கள்    
January 22, 2009, 6:46 am | தலைப்புப் பக்கம்

புத்தகங்கள் சூழ்ந்திருக்கும் அறையில் நான் என்றுமே தனிமையின் தீவிரத்தை உணர்ந்ததில்லை. என் கட்டிலில், தலையணைக்கு அடியில், டேபிளில், டீவி அடுக்குகள், கிச்சனில் மேல் ஷெல்பில், என எங்கும் எங்கும் புத்தகங்கள் நிறைந்திருக்கும், அலுவலகத்திலும் side table லில் எனக்கு பிடித்தமான புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பேன்..அங்கு வாசிக்கிறேனோ இல்லையோ, அவை என் கண் பார்வைக்குள்ளே இருக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

அவள் பெயர் தேவதை - நெடுந் தொடர்    
December 18, 2008, 11:21 am | தலைப்புப் பக்கம்

எவ்வளவு உறவுகள் இருந்தாலும் நம் உடன் பிறந்தவர்களின் உறவு மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கும். அதுவும் நம்மை விட வயதில் ஒன்றிரண்டு வயது சிறியவர்கள் நம் ப்ரியத்துக்கு உரியவர்களாகிவிடுவார்கள் (அவர்களுக்கு முன்னோடியாக நாமே நம்மை நினைத்துக் கொள்வோம்) என் தங்கை தேவி என்னை விட இரண்டு வயதே சிறியவள்.ஒரு குட்டி ப்ளாஷ்பேக்.ஆச்சி - உமாக்குட்டி, இன்னிக்கு தான் உனக்கு தொட்டில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது    
December 16, 2008, 11:13 am | தலைப்புப் பக்கம்

வெகு நாள் கழித்து நிறைவான வாசிப்பை அளித்தது தமிழ்நதியின் இச்சிறுகதைத் தொகுப்பு. பதினெட்டுக் கதைகள் கொண்ட இத்தொகுப்பில் எல்லாக் கதைகளுமே ஆழமானவை. மீள் வாசிப்பு செய்யத் தூண்டுபவை. எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகள் ‘நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது’,‘காத்திருப்பு’, ‘என் பெயர் அகதி’ ‘பெண் எனும் ஞாபகம்’ கவரிமான்கள்’ .’மனக்கூத்து’ விழுதின் கண்ணீர்...‘அந்த எசமாடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வாரணம் ஆயிரம்    
December 15, 2008, 9:27 am | தலைப்புப் பக்கம்

நண்பர்களின் அச்சுறுத்தல்களை மீறி இப்படத்தை நேற்று பார்த்தேன். நிறைகளை விட குறைகள் இருக்கத் தான் செய்தது. ஆனால் முற்றிலும் வெறுக்கத் தக்க வகையைச் சார்ந்தது அல்ல ‘வாரணம் ஆயிரம்’ பொதுவாக படம் பார்த்து விட்டு வீட்டுக்கு செல்லும் வழிதோறும் படத்தின் ஏதோ ஒரு அம்சம் நம் மனதை இம்சை செய்யும், அது இசையாகவோ ஏதோ ஒரு காட்சியாகவோ, நகைச்சுவையாகவோ இருக்கலாம். அது போதும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

புத்தரும் நானும்    
December 6, 2008, 11:52 am | தலைப்புப் பக்கம்

ஈரத்தெருக்களை ரசித்தவாறேமெதுவாய் நடந்து கொண்டிருந்தேன்..உற்றுப் பார்த்த விழிகளுக்குள் புத்தர்புத்தரா என வினவியதற்குஆமென்று தலையசைத்தார்இலங்கையிலிருந்து திரும்பியிருந்த புத்தர்முடிவில்லா வன்முறைகளைப் பற்றியஎன் கேள்விகளுக்கெல்லாம்புன்னகை பிரியாமல் சொல்லிக்கொண்டிருந்தார்புத்தர்கள் தோன்றுவது இங்கு வீண் என்று.மக்கள் திடீரென்று திரண்டனர்;சிலர் அவரைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் சமூகம் கவிதை

ராஜன் மகள்    
December 2, 2008, 5:09 am | தலைப்புப் பக்கம்

ஆறு வருடங்கள் முன் ‘ராஜன் மகள்’ ( பா.வெங்கடேசன்) என்னும் புத்தகத்தை அதன் அட்டைப் படம் வசீகரித்ததால் வாங்கிவிட்டேன். ஆனால் அது வாசிக்கப்படாமல் என் அலமாரியில் அழகான ஒரு அலங்காரப் பொருளாக மட்டும் இருந்துவந்தது. தோழி ஒருத்தியின் பிறந்த நாளிற்கு அப்புத்தகத்தை பரிசாக கொடுத்துவிட்டேன். அத்துடன் மறந்துவிட்டேன். பின்னொரு நாள் காலச்சுவடு பதிப்பகத்திற்கு ஒருமுறை போன போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மழை - மேலும் சில குறிப்புகள்    
November 26, 2008, 5:11 am | தலைப்புப் பக்கம்

மழை இப்படி கொட்டுதே ஆபிஸுக்கு போய்த்தான் ஆகணுமா? முன்பு அம்மாவிடமிருந்து இதே கேள்வி வரும் ஆபிஸ் என்பதற்கு பதில் 'ஸ்கூல்' என் பதில் எப்போதும் 'கட்டாயம் போக வேண்டும்' மழைக் காரணத்தால் போர்வைக்குள் கிடக்க ஆசைதான். ஆனால் மழையை ரசிக்காமல், மழையில் நனையாமல் மழைக்காலம் போன பின் மழைக்காக ஏங்குவது மடத்தனம் என்பதால் மழையில் நனைதல் என்பது எப்போதும் எனக்குப் பிடிக்கும். லேசான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இரண்டு கவிதைகள்    
November 25, 2008, 12:17 pm | தலைப்புப் பக்கம்

(ஒன்று)மீட்டப் படாத வீணையொன்றின் சாயலைக் கொண்டிருந்தன,உன்னால் வாசிக்கப்படாத எனது கடிதங்கள்....நீயொரு மிதக்கும் வெளியில்,நானொரு தனிமை நெருப்பில்-நமக்கு எப்போது வாய்க்கும்தண்ணீர் தேசம்?காதல் தாங்கிய என் கவிதைகளை,நீயொரு நாள் வாசிக்க நினைக்கும்போது அவை தன்,உள்ளொளியை இழந்திருக்கக் கூடும்...எதற்கும் தயாராகவே இருந்துக் கொள்-உன்னவளின் ஈர ரத்தம் அந்தக்கவிதைக்குள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

3 Iron    
November 18, 2008, 7:37 am | தலைப்புப் பக்கம்

3 ஐயர்ன் (3 Iron) என்னும் கொரியன் படம் நேற்று இரவு பார்த்தேன். இன்னும் அது என்னை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அழகியல், செய்நேர்த்தி, கதை சொல்லும் முறை, என்று அந்தப் படம் ஒரு திரை ஓவியம் போல இருந்தது. சாதரண கதையினூடே அற்புதமான மன எழுச்சியை அப்படம் தோற்றுவித்தது.டி-சுக் அழகான இளைஞன். பகலில் தன் அதி நவீன பைக்கில் வீதி வீதியாக சென்று வீடுகளில் விளம்பர நோட்டீஸ்களை ஒட்டுவான், இரவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை திரைப்படம்

வீடு திரும்புதல்    
November 9, 2008, 7:15 am | தலைப்புப் பக்கம்

மரங்களும் சாலைகளும்முடிந்து போன ஒரு புள்ளியில்இருந்ததாக ஞாபகம்எனக்கொரு வீடு!எனது செளந்தர்யத்தையும்இளமையும் எடுத்துக் கொண்டுதன் தனிமையும் துயரையும்திருப்பித் தந்தது அது!ஆவேசமற்ற ஆற்றாமையுடன்அதனிடம் முறையிட்டப் போதுஇறுக்க சாத்திக் கொண்டதுதன் கதவுகளையும் யன்னல்களையும்!வளையல்கள் உடைய ரத்தம் கசியதட்டியும் ஒரு போதும்திறக்கவில்லை அவ்வாழ்வின் கதவுகள்.அசைக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை