மாற்று! » பதிவர்கள்

உதய தாரகை

ஜெஸ்ஸியும் மக்னீஸியமும்    
March 12, 2010, 1:13 am | தலைப்புப் பக்கம்

திரைப்படங்கள் எல்லாமே ஒவ்வொருவரிலும் அதிர்வுகளை எந்நேரமும் ஏற்படுத்துவது கிடையாது. சொல்ல வந்த விடயம், சொல்லிய விதம், அதை பார்ப்பவர்கள் விளங்கிக் கொண்ட விதம் என எல்லாமே திரைப்பட ஊடகத்தின் உயிர்நாடிகள் தாம். திரையில் கண்ட விடயத்தை ஒருவர் புரியும் ரசிக்கும் விதம், மற்றவர்களாலும் அவ்வாறே ரசிக்கப்பட வேண்டுமென்கின்ற எந்த விதிமுறைகளும் கிடையாது. ஆனால், சிலவேளைகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அழியும் உலகமும் அழியாத ஆசைகளும்    
November 20, 2009, 1:32 am | தலைப்புப் பக்கம்

அற்புதமாக வாழ்க்கையை வாழ்வது எப்படி என்று சொல்லித்தரும் ‘வர்த்தகர்களை’ நீங்கள் பார்த்திருக்கக்கூடும். வாழ்க்கை அந்தளவுக்கு சொல்லிக் கொடுத்துப் புரியக்கூடிய விடயமா? அப்படியானால், வாழும் முறைகளைச் சொல்லிக் கொடுத்துவிட்டால் அனைவருக்கும் அற்புதமான வாழ்க்கைதான் கிடைத்து விடுமா? கேள்விகள் பல எனக்குள் நேற்று எழுந்தது. வாழ்க்கையை அற்புதமாக பலரும் காண்பது அவர்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Google Wave இல் அலையடித்த அனுபவங்கள்    
October 11, 2009, 7:50 pm | தலைப்புப் பக்கம்

கடந்த மாதம் இறுதி நாளின் காலை நேரம் எங்கும் அமைதியாகவே விடிந்தது. விடிந்தது என்றே நம்புகிறேன். ஆனால், இணையவெளி எல்லாமே ஒரே ஆரவாரம், கும்மாளம், ஆரவாரிப்பு, ஆவல், காத்திருப்பு என எல்லாமே பரந்து விரிந்து கிடந்தன. காரணங்கள் எதுவுமே இல்லாமல், எந்த விடயங்களும் நடப்பதில்லை. அப்படித்தான் அன்றைய பொழுதின் இணைய ஆரவாரங்களுக்கும் காரணமிருந்தது. Google Wave என்ற கூகிளின் மிகப்புதிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

தொற்றிக் கொள்ளும் உணர்வுகள்    
April 8, 2008, 12:08 am | தலைப்புப் பக்கம்

விடியாத இரவொன்று இல்லை என்பது போலவே, எமது வாழ்விலும் துன்பங்களில்லாத நிலை இல்லையென்றே சொல்ல வேண்டும். இவ்வாறு எமக்கு துன்பங்கள் நேரும் போது அதனைச் சகித்துக் கொண்டு அதனை வெல்லக்கூடிய மனப்பக்குவம் வருவதென்பது கடினமான விடயம் தான். ஆனாலும், எவ்வாறான துன்பங்கள் நேரந்து விட்டபோதிலும் அவற்றை இன்பமயமாக மாற்றிக் கொள்வதற்கு எமக்கு நிறையத் தெரிவுகள் காணப்படுகின்றன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

அதுதான் வாழ்க்கை!    
April 7, 2008, 12:08 pm | தலைப்புப் பக்கம்

எமது வாழ்வின் ஒவ்வொரு புதிய நாளும் புதிய ஆரம்பத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் நிலைகளைச் சாத்தியமாக்கும் தன்மை கொண்டது. வாழ்தலின் ஒவ்வொரு கணத்தையும் மிகவும் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டியது தொடர்பில் நாமே நடவடிக்கை எடுக்க வேண்டும். எமது கையில் தான் எமது இன்றைய நாளின் இனிமையில் சதவீதம் தங்கியுள்ளதென்றால் மறுக்கத்தான் முடியுமா? எமது வாழ்க்கையில் நாம் சந்திக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

கடவுச்சொல்லின் வலிமையைக் கண்டறிதல்    
April 1, 2008, 5:15 am | தலைப்புப் பக்கம்

இணையப்பரப்பில் Password என்று சொல்லப்படும் கடவுச்சொல்லுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இந்த கடவுச்சொல் மூலமே அனைத்து விதமான சகல இணையச் சேவை நிலைகளும் மிகத் தெளிவாக நடைமுறை செய்யப்படுகின்றன. இந்தக் கடவுச் சொல்களை எவரும் அனுமானிக்க முடியாத வகையில் அமைத்துக் கொள்ளல் கட்டாயமான தேவையாகும். அப்போதுதான், இணையப் பரப்பில் எமது தனிமனித சுதந்திரத்திற்கு உரித்தான பாதுகாப்புக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

மகிழ்ச்சியைக் கண்டடைதல்    
March 2, 2008, 12:41 pm | தலைப்புப் பக்கம்

ஆமா… நீங்க நினைப்பது எனக்கு நன்றாகவே புரிகிறது. இவரு யாரு…? “எங்களுக்கு மகிழ்ச்சி பற்றிச் சொல்லித் தருவதற்கு? நாங்க மகிழ்ச்சியாத்தான் இருக்கோம்… மகிழ்ச்சியை தொலைச்சவங்கதான் மகிழ்ச்சியை கண்டடைதல் என்று தலைப்புப் போட்டு மகிழ்ச்சியைத் தேடித் திரிய வேணும் - நாங்க அல்ல..!” என்றெல்லாம் அல்லவா நினைக்கிறீர்கள்..? உண்மையும் கூடத்தான்.. மகிழ்ச்சியைக் கண்டடைதல் என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

அன்புதான் தியாகம். அழுகைதான் தியானம்    
February 14, 2008, 2:59 am | தலைப்புப் பக்கம்

“உன் காலடி மட்டும் தருவாய் தாயே! சுவர்க்கம் என்பது பொய்யே!” என்பது ஒரு பாடலில் வரும் வரிகள். “பெண்ணைப் படைத்தான், மண்ணைப் படைத்தான், காற்றும் மழையும் ஒளியும் படைத்தான். பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை. சாமி தவித்தான் - தாயைப் படைத்தான்.” என அப்பாடல் தொடர்ந்து செல்லும். “உயிரும் நீயே.. உடலும் நீயே..” என்ற பாடலிலேயே இவ்வரிகள் வருகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். அன்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

எனது பெயரும் வெங்காயமும்    
January 28, 2008, 5:57 am | தலைப்புப் பக்கம்

உலகம் என்பது விந்தை, வினோதம் என விரியும் வியப்புகளின் தொகுப்பு என்றால் நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். ஒரு மனிதனின் உடல் அமைப்பிலேயே ஆயிரமாயிரம் அற்புதங்கள், அதிசயங்கள். ஏன், தாவரங்களிலும் எத்துணை வகை விந்தைகள். இவற்றையெல்லாம் எண்ணும் போது, எம்மால் பூமியில் உள்ள அனைத்து அற்புதங்களையும் கண்டறிய முடியாமல் போய்விடும் என்பது உண்மையே. விலங்குகளின் நடத்தைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

என்னது!!? பகற்கனவு காண்பதா?    
January 22, 2008, 7:36 am | தலைப்புப் பக்கம்

கடந்த பல நாட்களாக நிறம் வலைப்பதிவில் புதிதாக எதனையும் சேர்க்க முடியாமல் போனதை எண்ணி எனக்கும் வருத்தம் தான். மின்னஞ்சல் வாயிலாக “ஏன் நிறத்தில் புதிய ஆக்கங்கள் இல்லை?” என விசாரித்த நிறத்தின் நேசமான வாசகர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த நாட்களில் சில தவிர்க்க முடியாத நிகழ்வுகள் இருந்ததால் நிறத்தில் ஏதும் புதியவைகளைச் சேர்க்க முடியவில்லை. இனி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஞாபகமிருக்கிறதா கண்ணே!!?    
December 31, 2007, 7:45 am | தலைப்புப் பக்கம்

ஒரு வருடத்திற்கு முன்னர் நிறம் வலைப்பதிவில் “இன்னொரு ஆண்டு பிறக்கிறது” என்ற தலைப்பில் ஒரு பதிவை பிரசுரித்த ஞாபகம் எனக்கு இன்னும் பசுமையாகவே இருக்கிறது. நாம் வாழும் உலக நிலையில் நாட்கள் அதிக வேகமாகப் பயணிக்கிறதோ என்ற சந்தேகத்தைக் கூட இவ்வாறு ஆண்டுகளின் வேகமான வருகை சிலவேளை தோற்றுவிப்பதுமுண்டு. நாளை இன்னொரு ஆண்டும் உதயமாகப்போகிறது. கடந்த செல்லவுள்ள இந்த 2007...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

இப்படிச் சொல்வதற்கு வெலி சொலி..    
December 10, 2007, 10:54 am | தலைப்புப் பக்கம்

தலைப்பில் ஏதும் எழுத்துப் பிழை இருப்பதாக நீங்கள் நினைத்தால் உங்கள் எண்ணம் பிழை என்ற மெய்யான (மெய்யாகவே இது மெய்தான்!!!) உண்மையைச் சொல்லி விடயத்தை ஆரம்பம் செய்கிறேன். காலங்கள் என்பது மிகவும் வேகமாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. வரலாறுகள் நாளாந்தம் திரும்பிப் பார்க்கப் படுகிறது. அதுமட்டுமா, வரலாறுகள் நாளாந்தம் உருவாக்கப்பட்டுக் கொண்டுமிருக்கின்றன. வரலாறுகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் தமிழ்

பட்டம் பறக்கும் இரகசியம்    
November 28, 2007, 10:08 am | தலைப்புப் பக்கம்

இன்னொரு பிரபஞ்சம் என்றொரு தொடரை தொடர் முன்னோட்டம், துணைத் தலைப்பு என விடயங்களை அட்டகாசமாக வழங்கி ஆரம்பித்து வைத்தேன். உங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

அத்தி பூத்தாற் போல்…    
November 16, 2007, 7:21 am | தலைப்புப் பக்கம்

நிலவு, நிலா, தண்மதி எனவெல்லாம் பெயர் கொண்டு அழைக்கப்படும், சந்திரனுக்கு நிறைய மதிப்புண்டு என்றே எண்ணத் தோன்றுகிறது. நிலவைப் பாடாத கவிஞரே இருக்க முடியாது. சங்க கால...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

இப்போது மாற்றிவிட்டார்களா?    
November 14, 2007, 7:34 am | தலைப்புப் பக்கம்

“மொழி” திரைப்படத்தில் இடம்பெறும் அனைத்து பாடல்களும் அருமையிலும் அருமையானவை தான். “ஆழக் கண்ணால் தமிழ் சொன்னாலே.. ஜாடை கொண்டு பாசை சொன்னாலே..” என்று தொடங்கி முடியும் ஒரு சிறிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

எனது நாய்க்கு நீந்தத் தெரியாதாம்!!    
November 1, 2007, 4:03 am | தலைப்புப் பக்கம்

அண்மையில் தொலைதூரப் பயணமொன்றை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. வழமை போலவே, பேருந்துப் பயணம் தான். முன்கூட்டியே ஆசனத்தை பதிவு செய்து கொண்டேன். இதேவேளை பேருந்தில் என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

காலை உயர்த்தியதை அவதானித்துள்ளீர்களா?    
September 27, 2007, 4:04 am | தலைப்புப் பக்கம்

கடந்த இரு வாரங்களாக இடம் பெற்ற இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் மிகத்துரிதமாக நடைபெற்று முடிந்து, வெற்றியணியும் தேர்வு செய்தாகிவிட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

வாசிப்பு என்கின்ற பழக்கம்    
September 10, 2007, 10:36 am | தலைப்புப் பக்கம்

வாசிப்புப் பழக்கம் பற்றிய கதைக்க வேண்டியதன் அவசியம் என்ன? என்ற கேள்வி உங்களுக்குள் சில வேளை எழுந்திருக்கக் கூடும். ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தில் வாசிப்பு பற்றி அதிகம் கதைக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

பல் போனால் இதயமே போகுமாம்!!!    
September 7, 2007, 6:49 am | தலைப்புப் பக்கம்

“பல் போனால் சொல் போகும்” என்று கேட்டிருக்கிறோம். அதென்ன இதயம் போகும் என்ற கதை… என்று நீங்கள் கேட்டபது புரிகிறது. என்னங்க செய்வது, விஞ்ஞானிகள் புதுசு புதுசா பல விசயங்களைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

பொல்லாதவன் மற்றும் கெட்டவன்    
September 3, 2007, 7:04 am | தலைப்புப் பக்கம்

தனுசின் பொல்லாதவன் மற்றும் சிம்புவின் கெட்டவன் ஆகிய வரவிருக்கும் திரைப்படங்கள் பற்றிக் நான் கதைக்கப் போகின்றேன் என நீங்கள் நினைத்தால் அது தவறு. ஒரு தனிநபரை பொல்லாதவனாகவோ,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வாழ்க்கை

நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம்    
August 15, 2007, 9:44 am | தலைப்புப் பக்கம்

கடந்த மாதம் எனது ஊரில் ஒரு அதிசய நிகழ்வு இடம்பெற்றதாகக் கேள்விப்பட்டேன். அதனைச் சரியாக ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முடியவில்லை. கடந்த வாரம் ஊரிலிருந்து வந்த எனது நண்பர் ஒருவரைச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Success என்றால் என்ன?    
July 26, 2007, 9:37 am | தலைப்புப் பக்கம்

Success என்றாலே எமக்குள் ஒருவகை உவகை குடிகொண்டு விடும். வெற்றிதான் Success ஆகும் என்றால், இந்த Success பற்றி நாம் நிறையவே அறிந்து கொள்ள வேண்டியது அவசியமானதே! வெற்றி - இது ஒருபோதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

மூளையைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?    
July 19, 2007, 10:31 am | தலைப்புப் பக்கம்

“என்ன உதய தாரகை? இப்புடி கேட்டுப்புட்டீங்க..? எங்களுக்கு மூளையப் பத்தி என்ன தெரியுமாவா?” என்று எனக்கு திட்டித் தீர்க்க ரெடியாவது போல் தோனுது. வேணாம். நான் சொல்றன். இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஆறுக்குப் பின்னால் ஏழு    
July 5, 2007, 5:10 am | தலைப்புப் பக்கம்

எண்கள், அதிர்ஷ்டம் என்பன ஒன்றுக்கொன்று மிக நெருங்கிய தொடர்புள்ளதாக ஆண்டாண்டு காலமாக, உலகிலுள்ள மக்களால் நம்பப்பட்டு வருகிறது. எண்கள் பற்றிக் கதைக்கும் காரணம், நான் அண்மையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஒரு ரூபாயும் கொல்லும்    
July 4, 2007, 10:00 am | தலைப்புப் பக்கம்

இன்று நான் உங்களுடன் ஒரு ரூபாய் பற்றி கொஞ்சம் பேசலாம் என்றிருக்கேன். ஒரு ரூபாய் என்பதை விட ஏதாவது நாணயக்குற்றி என்றும் சொல்லலாம். நாணயக்குற்றிகள் பொதுவாக உலோகத்தால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

என்ன கொடுமை சரவணன் இது!!    
July 3, 2007, 9:21 am | தலைப்புப் பக்கம்

என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும், கணினியின் கெடுபிடி, இணையத்தின் ஆக்கிரமிப்பு என எல்லாமே மனிதனை ஒரு இயந்திரமாகவே மாற்றிப் போடும் வலிமையைப் பெற்றுள்ளது. உட்கார்ந்த இடத்திலேயே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

சொல்ல மறந்த கதை (இது திரைப்படம் பற்றியதல்ல)    
June 29, 2007, 7:32 am | தலைப்புப் பக்கம்

நான் தலைப்பில் குறிப்பிட்ட “இது திரைப்படம் அல்ல” என்ற வரிகளே இந்தப் பதிவை வாசிக்கத் தொடங்கும் முன் தங்கர் பச்சானின் திரையோவியமான “சொல்ல மறந்த கதை” பற்றி உங்கள் ஞாபகங்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

100 பேரை மட்டும் கொண்ட ஒரு கிராமம்…    
June 22, 2007, 9:38 am | தலைப்புப் பக்கம்

உலகம் - இது தத்துவம் பேச நினைப்பவன் யோசிக்கும் வார்த்தை. சில வேளை பேசும் வார்த்தையாக இருக்கவும் கூடும். நான் சிலவேளை நண்பர்களுடன் கதைக்கும் போது, “உலகம் உருண்டை” என்று கூறி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொழுதுபோக்கு சூழல்

குருதி என்றால் சிவப்புத்தானே!!    
June 14, 2007, 5:01 am | தலைப்புப் பக்கம்

நான் இன்று காபன் மொனொக்சைட்டு வாயுவானது, மனிதனின் சுவாசத் தொகுதியில் ஏற்படுத்தும் பாதிப்பைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ள கூகிள் செய்த போது, ஒரு அதிசயமான செய்தியொன்றைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு அறிவியல்

சூரியனும் சந்திரனும் சட்டென…    
June 12, 2007, 9:41 am | தலைப்புப் பக்கம்

பல்லே லக்கா பல்லே லக்கா… என ஆரம்பமாகும் பாடலை நீங்கள் கேட்டிருக்கக்கூடும். சிவாஜி படத்தில் இந்தப் பாடல் இடம் பெறுகின்றது என்பதை நான் சொன்னால், அது “சிறு பிள்ளைத் தனமாகி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

நீயொரு மக்கு!!    
June 6, 2007, 8:51 am | தலைப்புப் பக்கம்

“நீயொரு மக்கு!!” என்ற சொற்றொடரை சில வேளை நீங்கள் இன்னொருவரை நோக்கி உபயோகித்திருக்கக்கூடும். கூடவே உங்களைப் பார்த்தும் சிலர் “நீயொரு மக்கு!!” என்று சொல்லிய அனுபவங்களும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் நபர்கள்

மண்மலை எனும் அதிசயம்    
May 3, 2007, 7:33 am | தலைப்புப் பக்கம்

இனிய இயற்கை காட்சிகள் நிறையவே நிறைந்த எங்கள் ஊரின் அழகுக்கு அழகு சேர்ப்பதாய் இயற்கையாய் அமைந்ததே “மண்மலை” என்றால் மிகையில்லை. இதனை ஊரின் கிழக்கே அமைந்துள்ள கடற்கரையை அண்டிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்