மாற்று! » பதிவர்கள்

இரா. வசந்த குமார்.

I see you....Avatar!    
January 1, 2010, 9:03 pm | தலைப்புப் பக்கம்

மாலை மங்கி மெல்லிய வசந்தத்தின் வாடைக்காற்று வீசிக் கொண்டிருந்த போது, அவதார் பார்த்தேன்.அவதார் ஓர் அற்புதப் கனவுநிலம். பண்டோராவின் மின்னும் மரங்களும், ரேடியம் ஜொலிக்கும் பாதைகளும், ஹோலி கொண்டாடிய பறவைகளும், பஞ்சுப் பூக்களாய் மிதக்கும் ஒளிப் பூச்சிகளும் நீல 'நவி'களும் இந்த இரவின் கனவுகளில் என்னை ஆக்ரமிக்கின்றன.மிதக்கும் மலைகளில் இருந்து சாரல் அருவிகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஒலிதச் சமிக்ஞைப் பகுப்பாய்தல்.    
October 5, 2009, 4:33 pm | தலைப்புப் பக்கம்

சிங்கைத் தமிழ்ப் பதிவர்கள் 'மணற்கேணி 2009' என்ற தலைப்பில் நடத்திய போட்டியில் மூன்று பிரிவுகளில் கட்டுரைகள் அனுப்பக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். முதல் பிரிவான 'அரசியல்/சமூகத்தில்' குறிப்பிட்ட தலைப்புகளில் எழுதுவதற்கு கைவசம் என்னிடம் கருத்துக்கள் இல்லை. மூன்றாம் பிரிவான 'தமிழ் மொழி/இலக்கியத்தை' இப்போது தான் படித்துக் கொண்டிருப்பதாலும், அதிலும் ஆய்வுக் கட்டுரை அளவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

IFFK - 2K8 :: மிச்சம் மீதி படங்கள்.3.    
June 21, 2009, 5:34 am | தலைப்புப் பக்கம்

Burn After ReadingUSA-UK-France/96'/2008ஆச்சரியமாக இருந்தது. பிராட் பிட் நடித்த சூப்பர் ஸ்டார் மூவிக்கள் சினிமா விழாக்களில் காட்சியளிப்பது. படத்தின் கதையை தமிழில் சொல்வதை விட, ஆங்கிலத்தில் நன்றாக இருக்கின்றது.There's plenty of fire in Burn After Reading, the Coen brothers' playful and pungent tale set amid the bungling bureaucrats of the CIA and an assortment of other ditzy denizens of Washington, D.C.Focus FeaturesJohn Malkovich portrays a CIA analyst with a drinking problem in the...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

IFFK - 2K8 :: மிச்சம் மீதி படங்கள்.2.    
June 21, 2009, 3:35 am | தலைப்புப் பக்கம்

At five in the Afternoon (panj e asr)Iran-France/105'Samira MAKHMALBAF - Director Samira MAKHMALBAF - Screenplay Mohsen MAKHMALBAF - Screenplay Ebrahim GHAFORI - Cinematography Mohammed Reza DAR VISHI - Music Mohsen MAKHMALBAF - Film Editor ActorsAgheleh REZAÏE - Noqreh Abdolgani YOUSEFRAZI - The Father Razi MOHEBI - The poet Marzieh AMIRI - The Sister-in-law 'வண்டிக்காரன் மகள்' என்ற தலைப்பு இந்தப்படத்திற்கு பொருத்தம். தாலிபான் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, நேடோ படைகள் புகுந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

புதிய எழுத்தாளர்களுக்கு 11 யோசனைகள்.    
June 14, 2009, 11:32 am | தலைப்புப் பக்கம்

1. தப்பான பத்திரிக்கைக்கு அனுப்பாதீர்கள். 'துருவனும் குகனும்' என்று ஞான பூமிக்கு அனுப்ப வேண்டியதை, 'போலீஸ் செய்தி'க்கு அனுப்பாதீர்கள்.2. தெரியாத இடம், தெரியாத பொருளைப் பற்றி எழுதாதீர்கள். 'பம்பாய் ரங்காச்சாரி வீதி, இரவு ஏழு மணி இருள்' என்றால், பம்பாயில் ரங்காச்சாரி வீதி கிடையாது, இரவு ஏழு மணிக்கு இருட்டாது என்று ஒரு கோஷ்டி ஆசிரியருக்குக் கடிதம் எழுதக் காத்திருக்கும்.3....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சிறுகதைப் போட்டியாளர்களுக்கு ஓர் உதவி!    
May 22, 2009, 3:54 pm | தலைப்புப் பக்கம்

சிவராமன் என்ற புனைபெயர் வைத்திருக்கும் பைத்தியக்காரன், அதிகாரத்தின் உரையாடலைத் தகர்க்கும் உத்தேசத்துடன் தொடங்கியிருக்கும் 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' என்ற மையமற்ற தொகுப்பு, கைக்காசைப் போட்டு ஒரு சிறுகதைப் போட்டி நடத்துகின்றது. 20 கதைகளுக்கு 30K தருகிறார்.கோதாவில் குதித்து எழுதத் துவங்கும் முன்பாக, சிறுகதை பற்றியும், அதை எழுதுவது பற்றி அனுபவசாலிகள் என்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

என்ன செய்யலாம்...?    
May 21, 2009, 4:41 pm | தலைப்புப் பக்கம்

நண்பர் ஒருவருடன் நடத்திய இணைய உரையாடலை ஆங்காங்கே வெட்டி நட்சத்திரங்கள் இட்டு, பதிவாய்ப் போட்டதற்கே ஒருவர் வந்து திட்டி விட்டுப் போனார். அதற்கு பதில் சொல்வதில் அர்த்தமில்லை. அவரது மனக் குமுறல்களைத் தாங்கிக் கொள்கிறேன். நான்/நாங்கள் அப்படிப்பட்ட நிலையில் தான் இங்கு இருக்கிறோம்.எனக்கு உங்கள் துயரங்கள், கலவரங்கள், கவலைகள், வலிகள் தெரியாது. உங்களது மண் பிரிந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

சின்னச் சின்ன ஆசை... ஆஸ்கார் வாங்கிய ஆசை...!    
February 25, 2009, 4:58 pm | தலைப்புப் பக்கம்

மல்லிகைப் பூவாய் மாறி விட ஆசை... தென்றலைக் கண்டு மாலையிட ஆசை... மேகங்களை எல்லாம் தொட்டு விட ஆசை... சோகங்களை எல்லாம் விட்டு விட ஆசை.... கார்குழலில் உலகைக் கட்டி விட ஆசை.....என்..... கனவில்.... எவனோ..... ஒருவன்.... என்.... இரவில்.... ஒளியாய்... தெரிவான்... வான் மழை போல்.... உயிரில்..... விழுவான்.... தினம் நான்..... விரும்பும்.... வகையில்.... பொழிவான்..... என் இதழைத்.... தினம் தந்து மாயாது... இனி பாற்.... கடலில்...... அலை என்றும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஒரு பன்னீர் மரமும், சில வெள்ளித்துளிகளும்..!    
February 16, 2009, 3:47 pm | தலைப்புப் பக்கம்

சலசலவென குளிர் இறங்கிக் கொண்டிருக்கின்றது. மலையின் சரிவுகளில் என்னோடு சேர்ந்து நடந்து வந்த காற்றை நிறுத்திக் கேட்டேன். ' எங்கே நீ வருகிறாய்..?'காட்டாறு வேகவேகமாய் உருண்டுத் திரண்டு, நுரையோடு தரையோடு கிடைத்த பாதைகளில் எல்லாம் புகுந்துப் புறப்பட்டு பாய்ந்து வருகின்றது. நெடுமரங்களின் வரைய முடியாக் கோணங்களில் கிளைத்திருந்த கிலைகளில் இருந்து விழுந்த சருகுகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ச-மையல்..!    
December 4, 2008, 5:01 pm | தலைப்புப் பக்கம்

எழுத்துக்களில் வசீகரமான வகை ஒன்று இருக்கிறது.எப்படியும் முழுதாகப் படிக்க வைத்து விடும். பிடிக்கின்றதோ, இல்லையோ..! அப்படி சில வலைப்பதிவுகளைப் பார்ப்போம்.அ. ஜெகத் எழுதும் கைமண் அளவு. தெளிவான நடை. பிசிறடிக்காத ஒரு சாக்ஸ்போனின் குரல் போல இவரது பதிவுகள் இருக்கின்றன. சொல்ல வந்த கருத்தை துல்லியமான தகவல்களோடு தருகிறார். ஏற்பதும், மறுப்பதும் வேறு..! தெளிவான, வழுக்கல் இல்லாத நடை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இலக்கியமும், TD இரண்டாம் விதியும்..!    
December 1, 2008, 3:38 pm | தலைப்புப் பக்கம்

இலக்கியம் என்றால் என்ன என்பதை, குருடன் யானையைத் தடவியது போல் சொல்வதற்கு முன் Thermo Dynamics இரண்டாம் விதியைக் கொஞ்சம் பார்க்கலாம்.விக்கியில் சென்று தெளிவான விளக்கம் பார்த்தால் கொஞ்சம் சூடு ஏறி விடும் என்பதால், சுருக்கமாக ஒழுங்கான நிலையில் இருந்து ஒழுங்கற்ற நிலைக்கு காலத்தின் திசையில் ஒரு அமைப்பு நகர்ந்து கொண்டே இருக்கும். மேஜையின் மேலிருந்து கீழே விழும் கண்ணாடி டம்ளர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வா..! ரணம் ஆயிரம்.    
November 16, 2008, 5:01 am | தலைப்புப் பக்கம்

"He is a Fantastic Man...!"படம் துவங்கி இரண்டாம் காட்சியில் தொண்டைப் புற்றுநோயின் உச்சத்தில் படுக்கையில் இறக்கப் போகும் அப்பா சூர்யாவைப் பார்க்கும் டாக்டர் சொல்கிறார். நிஜமாய் அதை ஒரிஜினல் சூர்யாவைப் பார்த்துச் சொல்ல வேண்டும்.கதை சாதாரணம். சூர்யா பின்னி இருக்கிறார். படம் முழுகும் விதம் விதமாய் வருகிறார். அப்பா - இதிலேயே பல கெட்டப்புகள்.ஸ்கூல் பையன். காலேஜ் இளைஞன். தசாவதார மேக்கப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தொலை தூர இரவுப் பயணம்.    
September 15, 2008, 1:26 pm | தலைப்புப் பக்கம்

குளிர் மினுக்கும் இரவில் நெடுந்தொலைவு பேருந்துப் பயணம் தரும் அனுபவங்கள் அலாதியானவை.சிலுசிலுவென ஈரக்காற்று கிடைக்கும் சின்னச் சின்ன இடைவெளிகளில் புகுந்து சிலிர்ப்பூட்டும். நெடுஞ்சாலையில் கடக்கின்ற குற்றூர்களின் சில மஞ்சள் சோடியம் விளக்குகளின் அடியில் டீக்கடைகள் மட்டும் விழித்திருக்கும். கிராமத்தின் டூரிங் டாக்கீஸைக் கடக்கையில், புரட்சித் தலைவரின் 'நாடோடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

D.S.P. - சொந்த துறையை எழுத ஆசை!    
August 31, 2008, 5:36 am | தலைப்புப் பக்கம்

தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் Digital Signal Processing என்ற தொழில்நுட்பத்தைப் பேசலாம் என்று இந்த தொடர். The History of Time நூலில் ஸ்டீபன் ஹாக்கிங் சொல்லியுள்ளது போல், எவ்வளவுக்கு எவ்வளவு கணிதச் சமன்பாடுகளைக் குறைத்து, வாக்கியங்களாய்த் தர முடிகின்றதோ, அப்படி முயல்கிறேன்.படிப்பவர்களுக்கு சில அடிப்படைத் தகுதிகள் மட்டும் இருந்தால் போதும் என்ற எண்ணத்தில் இதைப் பற்றிப் பேச இயல்கிறேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

மணி விழா +2.    
August 14, 2008, 3:59 pm | தலைப்புப் பக்கம்

பாரத தேசத்திற்கு இனிய சுதந்திர நன்னாள் வாழ்த்துக்கள்.இந்நன்னாளில் என்ன செய்யலாம்?சில உறுதிமொழிகள் எடுத்துக் கொள்ளலாம்.அ. முதலில் ப்ளாஸ்டிக் விவகாரம். குப்பைகளில் மிக அதிகமாக இடம் பிடிக்கின்ற வஸ்து ப்ளாஸ்டிக். இதன் உபயோகிப்பை எப்படி குறைக்கலாம்? ஒவ்வொரு முறை கடைகளில் பொருட்கள் வாங்கும் போதும் வாங்குகின்ற ப்ளாஸ்டிக் பைகள் வாங்குகிறோம். அதற்குப் பதிலாக ஒரு முறை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை சமூகம்

இது உங்கள் கதை.    
July 28, 2008, 3:23 pm | தலைப்புப் பக்கம்

நீங்கள் நல்லவர் தானே? குறைந்தபட்ச நீதியோடும், நியாயங்களோடும் வாழ வேண்டும் என்று நினைப்பவர் தானே? பள்ளியில் கற்பிக்கப்பட்ட 'பொய் சொல்லக் கூடாது', 'நேர்மையாக வாழ வேண்டும்' போன்ற கொள்கைகள் எல்லாம் அவற்றைத் தாண்டி ஒரு எட்டு குதிக்கும் போது, கொஞ்சமாவது ஒரு சங்கடப் புள்ளியை உங்கள் மனதில் ஏற்படுத்துகின்றன தானே?எனில் இது உங்கள் கதை தான். ஆனால் முழுதும் உங்களைப் பற்றிய கதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

குமுதம் - Coooooool....    
April 19, 2008, 12:25 pm | தலைப்புப் பக்கம்

வெ.நா. சிவகுமார், சென்னை.கே: இன்டர்நெட்டுக்கு அடிமையானால் மனநோய் ஏற்படுமாமே?ப: கண்டிப்பாக. ஏனென்றால் அதில் எழுதுபவர்கள் பல பேர் மனநோயாளிகள்.நன்றி : குமுதம் . 23.04.2008. பக்கம் :: 28.இணையம் என்றாலே அதில் எழுதுபவர்கள் மட்டுமே உள்ளனர் என்பது இல்லை. யூட்யூப் போன்ற ஒளி ஊடகப் பரிமாற்ற தளங்களும், கூகுள் மேப்ஸ் போன்ற வரைபடச் சேவை வழங்கும் தளங்களும் இன்னும் பல நாம் அறியாத வகையில் சேவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அங்கிள்... அங்கிள்... அங்கிள்...!    
April 16, 2008, 12:40 pm | தலைப்புப் பக்கம்

"SIM Lockedனு வந்திருக்கு. ஏதோ நம்பர் கேட்டிருக்கு. இவன், என் தம்பி தான், ஏதோ நம்பர் ப்ரெஸ் பண்ணி இருக்கான். இப்படி லாக் ஆகிடுச்சு. இதை ஏதாவது பண்ணி சரி பண்ணித் தர முடியுமா, அங்கிள்...?"அங்கிள்... அங்கிள்... அங்கிள்...! சென்னையில் இருந்து நகர்ந்து எர்ணாகுளம் நெருங்கிக் கொண்டிருந்தது சென்னை மெயில். ரிசர்வ்டு கம்பார்ட்மெண்டில் முக்கால் பாகம் சபரிமலைக்குப் போகும் சாமிகளால் நிரம்பி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

மோக்ளி - Dramatic Life.    
April 13, 2008, 7:25 pm | தலைப்புப் பக்கம்

ஆரம்ப காலத்தில் ஒரு டேப் ரிக்கார்டர் வீட்டில் இருந்து வந்தது. அதில் தான் 'உயிரே உனக்காக' மற்றும் 'நானும் ஒரு தொழிலாளி' என்ற காம்பினேஷன் கேஸட் (TDK) கேட்ட நினைவு இருக்கிறது. ஒரு முரை அதில் ஏதோ ரிப்பேர் ஆகி விட , அதைச் சரி செய்யக் கொடுத்த கடையில் ஸ்வாஹா செய்து விட்டு கொஞ்சம் பைசா கொடுத்தார்கள்.அத்தோடு பாடல்கள் கேட்கும் பழக்கம் வானொலி (His Master's Voice) மூலம் மட்டுமே நிறைவேற்றப்பட்டது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

மொகல் - இ - ஆஸம்.    
April 9, 2008, 3:59 pm | தலைப்புப் பக்கம்

அழகிய அனார்கலியாக மதுபாலா.... அக்பர் பேரரசராக ப்ரித்விராஜ் கபூர், சலீமாக திலீப் குமார், இசை நெளஷாத்....!பொலிவான இந்த மெளன அழகிற்கு இணையேது...? இமைக்காமல் கண்ணோடு கண் நோக்கின் வாய்ச்சொல் எந்த பயனும் இல அல்லவா..?இழந்த காதலின் வலியாக அனாரின் கண்ணீர் நடனமாக பிரவாகிக்கிறது.'காதல் இருக்கும் போது அச்சம் எதற்கு....'Get Your Own Hindi Songs Player at Music Pluginஇப்பட சிறு ஒளிப்படங்கள் பார்க்கையில் எனக்கென்னவோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்

பனி விழும் மலர்வனம்...    
April 7, 2008, 2:46 pm | தலைப்புப் பக்கம்

சிவந்த ரோஜாக்கள் பூத்திருக்கும் சாலை அது.முந்தின இரவின் மழையில் நனைந்திருந்தது. இருளின் குறுக்கே சால் ஓட்டி வெளிச்ச அரிவாள்களால் ஒளியை அறுவடை செய்து லாரிகள் நடத்திய தொடர் விவசாயத்தால், அழுக்குச் சாயம் கலைந்து புத்தம் புதிதாய்ப் பூத்திருந்தன பகலில்!யாரோ ஒருவர் தான் நட்டிருக்க வேண்டும். ஏழா, ஐந்தா என்ற எண்ணிக்கைகளில் குழப்பம் அடையாமல், சைவக் குழந்தையாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

இரு நிலைப்பாடுகள்.    
April 6, 2008, 1:40 pm | தலைப்புப் பக்கம்

இரு எதிரெதிர் நிலைகளில் உள்ளவர்கள் மற்றவருக்கு ஆதரவாக எடுத்திருக்கும் நிலைகள் பற்றி.தமிழக முதல்வர் 'கர்நாடகத்தில் தேர்தல் வருவதால் இப்போதைக்கு ஒகேனக்கல் திட்டம் ஒத்தி வைக்கப் படுகின்றது. அங்கு தேர்தல் முடிந்து நிலையான அரசாங்கம் அமைந்த பின் பேச்சுவார்த்தை நடத்தி, திட்டத்தை மேற்கொள்வோம்' என்று கூறி உள்ளார். கிருஷ்ணாவும் 'தமிழக முதல்வர் எடுத்துள்ள நிலை மகிழ்ச்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சின்னக் கண்ணன் அழைக்கிறான்.    
April 6, 2008, 12:14 pm | தலைப்புப் பக்கம்

சலசலத்து ஓடிக் கொண்டிருக்கின்றது யமுனை நதி.வெளிச்சம் மெல்ல மங்கிக் கொண்டு வருகின்றது. தன் அன்றைய தினத்தின் பயணத்தை முடித்துக் கொன்டு மேற்றிசையில் மறைகிறான், கதிரவன். வல்லினங்களும், மெல்லினங்களும், இடையினங்களும் தத்தம் பணிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். எங்கிருந்தோ குளிர்க்காற்று வீசத் தொடங்கி இருப்பதை கானகத்தின் மெல்லிய இலைகள் அசைந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

ஸ்ரீரங்கம்.    
April 5, 2008, 6:13 am | தலைப்புப் பக்கம்

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் மங்களம் செய்யடி!ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்நதம் சொல்லடி!ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் மங்களம் செய்யடி!ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்நதம் சொல்லடி!இன்பம் பொங்கும் தென்கங்கை நீராடிமஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடிஇன்பம் பொங்கும் தென்கங்கை நீராடிதென்றல் போல் ஆடடி!மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடிதெய்வப் பாசுரம் பாடடி! (ஸ்ரீரங்க)கொள்ளிடம் நீர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் பயணம்

இப்ப என்ன செய்ய?    
April 4, 2008, 12:37 pm | தலைப்புப் பக்கம்

கன்னட வெறியர்களின் அத்து மீறிய ஆட்டம் நம்மை மீண்டும் சிந்திக்கச் செய்கின்றது.*வீரப்பன் என்று ஒருவன் இருந்த வரை, ஒகேனக்கல் பக்கமும், எல்லைப் புறமும் தலையே காட்டாத இவர்கள் இப்போது எல்லை மீறி வந்து ஆட்டம் போடுவதற்கு அனுமதிக்கலாமா? தாவூத் பம்பாயில் இருந்த வரை, அதற்காக மாற்று எதிர்ப்பாக சோட்டா ராஜனை இந்துத்துவ தாதாவாக வளர்த்து விட்ட அரசாங்கம், இன்று வீரப்பனைப் போல் பயம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

பல்லாக்கைத் தூக்காதே... பல்லாக்கில் நீ ஏறு!    
April 3, 2008, 4:19 pm | தலைப்புப் பக்கம்

சம்போ.. சிவ சம்போ.. சிவ சம்போ..சிவ சம்போ..!ஜகமே தந்திரம்... சுகமே மந்திரம்... மனிதன் எந்திரம்... சிவ சம்போ..!நெஞ்சம் ஆலயம்... நினைவே தேவதை.. தினமும் நாடகம்... சிவ சம்போ..!மனிதா உன் ஜென்மத்தில் எந்நாளும் நன்னாளாம்!மறுநாளை எண்ணாதே.. இன்னாளே பொன்னாளாம்.!பல்லாக்கைத் தூக்காதே... பல்லாக்கில் நீ ஏறு!உன் ஆயுள் தொண்ணூறு... எந்நாளும் பதினாறு! (ஜகமே தந்திரம்)அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை நிகழ்படம்

தனிமை - போட்டிக்காக.    
April 3, 2008, 7:11 am | தலைப்புப் பக்கம்

இம்மாத தனிமைப் போட்டிக்காக நெய்யார் அணைக்குச் சென்றிருந்த போது எடுத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

India - True T20 Champs , in the Extremes.    
April 3, 2008, 6:14 am | தலைப்புப் பக்கம்

பாரத தேசம் பலதரப்பட்ட வகைகளில் வேறுபட்ட அம்சங்களைக் கொண்டது. உணவு, கலை, கலாச்சாரம், மொழி, உடை, பேசு, பழகுதல் என்று ஆயிரமாயிரம் வகைகளில் வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.விளையாட்டிலும் அப்படியே நடந்துள்ளது.சென்ற வாரம் சென்னையில் வீறு(ரு) நடை போட்டு நடந்த கிரிக்கெட் அணியா, இப்போது அகமதாபாத்தில் செமத்தியான அடி வாங்கி உள்ளது என்று வியப்பாய் உள்ளது.இவன் எப்போது ஆடுவான், எப்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

எங்கெழுந்தருளுவது இனியே?    
April 2, 2008, 2:55 pm | தலைப்புப் பக்கம்

இனிதான குளிர்க்காற்று வீசிக் கொண்டிருக்கின்றது.வெண் மேகங்களின் வரிசைகள் வரிசையாக வேகமாகப் பாய்ந்து கொண்டிருக்கின்றன. ஆழமான வெள்ளைப் புதையல்கள் பறப்பது போல் நாரைக் கூட்டங்களும், கொக்குக் கூட்டங்களும் அந்த மேகக் கூட்டத்தை உரசிப் பறக்கின்றன. அந்த உரசலின் சாரம் பாய்ந்ததால் பொழிகின்றது மாமழை.அமுதப் பால் போல் பெருகி வருகின்றது பனி சாரல்கள். இரவின் மெல்லிய மேலாடை விலக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

நான் கடவுள்.    
April 1, 2008, 2:33 pm | தலைப்புப் பக்கம்

சிகப்பு சிகப்பாய் தீப்பொறிகள் பறந்தன. பச்சை நிறத் துளிகளில் நனைத்தார். பொறிகள் மீன்குஞ்சுகள் போல் துள்ளின. மெல்ல மெல்ல வெண்ணிறமாக மாறின. கவனமாக சிறிது மெர்க்குரியை எடுத்து இரு சொட்டுக்கள் விட்டார். பொறிகள் இன்னும் வெண்மையாகின. துளிகள் சுழலத் தொடங்கின. மையத்தில் இருந்து வட்ட வட்டமாகத் தொடங்கிய மஞ்சள் அலைகள் விலகி, வெளிப்புறத்தை நோக்கி நகர்ந்தன. விளிம்புகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

குருவாயூரப்பா... குருவாயூரப்பா...    
March 30, 2008, 5:06 am | தலைப்புப் பக்கம்

(நன்றி :: விக்கிபீடியா.)"Your kind attention please. Train number six two one seven from Chennai Egmore to Guruvayur via Alappey is expected to arrive on platform number two at zero hours thirty minutes...."இருளான தூண்களின் உச்சியில் இருந்த ஸ்பீக்கர்களில் இருந்து காற்றின் அலைகளில் சிதறிய இயந்திரக் குரல், காத்திருக்கலுக்கான களைப்பை விசிறி விட்டுப் போனது. இந்த இரயில் 23 அல்லது 23:30 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு வர வேண்டியது. வழக்கம் போல் கால தாமதம். வாங்கிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் பயணம்

ஒரு யோகியின் சுயசரிதம்.    
March 27, 2008, 1:52 pm | தலைப்புப் பக்கம்

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் மயிலை சிட்டி சென்டருக்குச் சுற்றுலா சென்றிருந்த போது வாங்கிய ஒரு புத்தகம் தான் 'ஒரு யோகியின் சுயசரிதம்'. பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கை வரலாறு இந்நூல்.சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்ததில் இருந்து இது போன்ற இளந்துறவிகளின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதில் ஆர்வம் இருந்து வந்தது. இந்நூல் யோகானந்தராலேயே இயற்றப்பட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

யமுனே நின்னுட நெஞ்சில்...    
March 25, 2008, 1:46 pm | தலைப்புப் பக்கம்

ஒரு பொற்பொழுதாய் விரிகின்றது அக்காலம்.வானின் மந்தகாசப் புன்னகை, வரப்போகும் இராச லீலையைக் காண வெட்கப்பட்டு பூத்த பொன் வர்ணம் எனறானது. பிரம்மாண்டமான பிரபஞ்சம் முழுதும் சிவந்த மாதுளை விதைகள் போல் விண்மீன்கள் மின்னத் தொடங்கின. காதலனின் முகத்தை ஒற்றி ஒற்றி தன் நிறம் போல் பூசிக் கொள்ளும் காதலியின் திருமுகம் போல் யமுனா நதி விண்ணின் சிவந்த நிறத்தை தன் மேனியெங்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

சிறகுகளின் கதைகள்.    
March 25, 2008, 12:39 pm | தலைப்புப் பக்கம்

படபடவென அடித்துக் கொள்ளும் இறக்கைகளில் இருந்து சிறகொன்று மெல்ல கழன்று விழுகின்றது. அலகால் கோதிக் கொண்டிருக்கையில் மற்றுமொன்றும் விலகி மிதக்கின்றது. உயரே பறக்கையிலும் சில சிறகுகள் வானின் பிரம்மாண்டத்தில் பயந்து கீழே பாய்கின்றன.நீர் கொண்ட கண்களின் மீது ஈரப் பிம்பமாய்ப் படிகின்றன அவற்றின் கதைகள்.தத்தித் தத்தி நடக்கப் பழகுகையில் ஒரு சிறகு மெல்ல எட்டிப் பார்த்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

பவளத் துளசி.    
March 24, 2008, 12:48 pm | தலைப்புப் பக்கம்

சிலுசிலுவென நகர்ந்து கொண்டிருக்கின்றது வாய்க்கால் தண்ணீர்.நுரை நுரையாய்ப் பொங்கு அருவியென ஓடி வரும் ஆற்றின் ஓரமாக வெட்டி, பாத்தி கட்டி, பிரித்து, வாய்க்காலில் நீர் ஓடி, வெகு தூரம் வயலிலும் வரப்புகளிலும் ஈரம் பூக்கச் செய்து செம்மண் கரைசலாக மீண்டும் நதியினோடு கலந்து விடுகின்றது.ஆரஞ்சுப் பெருந் துளியாய் மெல்ல மெல்ல மலையின் பின்புறம் விழுந்து கொண்டிருக்கின்றது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

Enigma- Eyes of Truth    
March 22, 2008, 11:31 am | தலைப்புப் பக்கம்

இந்த Enigma வீடியோவிற்கு கதை சொல்லவே தேவை இல்லை. எல்லாம் நாம் அறிந்த கர்ணன் கதை தான். இளைய தலைமுறையினர் யாருக்காவது 'who is this Karnan ya...?' என்ற ஐயம் வந்தால், தலைவரின் தளபதி போல் என்று கொள்ளுங்கள். அட, அதுவும் தெரியாதவரா... அப்போது நீங்கள் இந்த வீடியோவை மட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்

நெல்லை - ஒரு நாள் பயணம்.    
March 22, 2008, 7:57 am | தலைப்புப் பக்கம்

மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தேன்.இரவின் மெளனமான குளிர் மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது. ஒரு சல்லாத் துணியைப் போல் மேகப் புகைகளைக் கொண்டு, நிலாப் பெண் தன் வெண் முகத்தை மறைத்தும், காட்டியும் ஒரு இரகசிய நாடகம் நடத்திக் கொண்டிருந்தாள். ஒரு வாரமாக விட்டு விட்டு பெய்து கொண்டிருந்த மழைத்தூறல் முன்பே பரப்பிய குளிர்மையை விட்டு வைத்திருந்தது. மஞ்சள் மின் விளக்குகளின் ஒளி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பிஸிக்ஸ் - பிட்ஸ் ஸிக்ஸ் .    
March 20, 2008, 4:07 pm | தலைப்புப் பக்கம்

ஐன்ஸ்டீன் அண்ணாத்தைக்கு முதலில் சலாம்.ஒன்றும் இல்லாததை என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாது தான்.ஆனால் அதை அழுத்தி இருக்கிறார்கள். Squeeze செய்திருக்கிறார்கள். பாருங்களேன்.http://sciencenow.sciencemag.org/cgi/content/full/2008/229/1வாழ்வின் மாயா தத்துவத்தையும், இயற்பியலையும், புத்தமதத் தத்துவத்தையும் இணைத்து ஒரு பெரிய ஆர்டிகிள் எழுதி இருக்கிறார்கள். மேலே குறிப்பிட்ட துறைகளில் ஏதாவது ஒன்றிலாவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

இல்லான் இல்லாள்...!    
March 20, 2008, 3:23 pm | தலைப்புப் பக்கம்

'இன்னும் கொஞ்சம் சந்தோஷமா இருந்திருக்கலாமோ? சக்கர கம்மியா குடுத்த காபிக்கு கத்தாம, சாக்ஸ் தொவைக்காம இருந்தா எரிச்சல்படாம, ஆஃபீஸ்ல இருந்து லேட்டா வந்தா ஆத்துல இல்லைனா டென்ஷன் ஆகாம இன்னும் கொஞ்சமே கொஞ்சம் சந்தோஷமா வாழ்ந்திருக்கலாம். வைதேகி. இப்படி ஆகிடுச்சேம்மா. இனிமே உன்ன எங்க பாக்கப் போறேன். மேலோகத்திலயா? சொர்க்கத்திலயா? ம்ஹூம் நான் உன்ன பண்ணின கஷ்டத்துக்கெல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

பீச்சாங்கர...!    
March 20, 2008, 2:47 pm | தலைப்புப் பக்கம்

கடல் நீருக்கு வெள்ளை ஆடைகளை அணிய வைத்து, அலைகளாய்க் கொப்பளித்துக் கொண்டிருந்தது. கருணையே இல்லாத கதிரவன் காற்றைப் பொசுக்கிக் கொண்டிருந்தான். காற்றின் கண்ணீர் கானல் நீராய் கசிந்தது."இப்ப இன்னாத்துக்கு இங்க இட்டாந்த? அதும் இப்டி ஒரு மொட்ட வெயில்ல..?""இன்னாம்மே! கொஞ்ச நேரம் குஜாலா இருக்காலாம்னு சவாரி கூட போகாம இங்க வந்தா...""அய்ய! அதுக்காண்டி தான் இஸ்துகினு வந்தியா?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

மோக்ளி Labs - Intriguing Innovations.    
March 20, 2008, 11:33 am | தலைப்புப் பக்கம்

மேனிலை வகுப்புகள் முடிக்கும் வரை ஆய்வகங்கள் பக்கம் செல்லும் வேலையே இல்லை. எப்போதாவது ஆசிரியர் வரவில்லையானால், சென்று அங்கு அவர் இருக்கிறாரா என்று பார்த்து வர வேண்டும். அவ்வளவு தான். பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வுக்காக பள்ளியிலேயே இரவு தங்கிப் படிக்கும் வசதியை ஏற்படுத்தி தந்த போது தான் நின்று அவ்வப்போது ஆய்வகங்களை கவனித்தோம். ஆணியில் கழுத்தை மாடித் தொங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஹார்மோன்கள் சூழ்ந்த ஹார்ட்டின்!    
March 19, 2008, 3:20 pm | தலைப்புப் பக்கம்

மென் அழகின் பொன் நிழலே! மாலை கவிழும் பகலின் தடங்கள் மறைகின்ற வரை நந்தவனத்தின் இருக்கைகளில் அமர்ந்திட்டுச் செல்! முக்கனிகள் பூத்துக் காய்த்துக் கனிந்து, பின் வாசனையோடு வசந்தம் பரப்பும் காலம் அல்லவா இது? தேரோடும் வீதிகள் பாயும் ஊரோடும் ஒதுங்கி இருக்கும் தோட்டத்தில் மேகங்கள் பொழிவது பொல் குளிர்ச்சியென பொழிந்து போ, தமிழை!சீதளமென படர்ந்திருக்கும் குளக்கரையில் அன்னம்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

இது அவசரமாய் எழுதிய ஒரு கவிதை!    
March 18, 2008, 4:24 pm | தலைப்புப் பக்கம்

நிறுத்து உன் புன்னகை எல்லாம்! கிறுக்கல்கள் அதிகரிக்கின்றன.வேறெங்காவது செலுத்து உன் பர்வைகளை! பற்றி எரிந்து தீய்ந்து போய் விட்டது இதயம் முழுதும்!சொற்களை சேர்த்து என் மேல் எறிவதை கொஞ்ச காலமாவது அணை கட்டி வை! வார்த்தைகளின் கும்பலுக்குள் தொலைந்தூ போய் இப்போது தான் மேலேறி வருகிறேன்!தொலைவில் எங்காவது போய் நின்று கொள்! நிழல் கூட என்னைக் கேலி செய்கின்றது!பறவையாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

H2SO4.    
March 18, 2008, 2:38 pm | தலைப்புப் பக்கம்

குளிரூட்டப்பட்ட அறையின் காற்றில் 'கம்'மென்ற சத்தம் கலந்திருந்தது.விகாஸ் க்ரூப் வைஸ் சேர்மன் விகாஸ் தன் பொன்னிறக் கண்ணாடியை உயர்த்திக் கொண்டார். எதிரே வெண்மையாய் இருந்த பிளாஸ்டிக் திரையைக் கவனித்தார். இடது ஓரத்தில் ப்ரொஃபஸர் ரஞ்சன் குப்தா நின்றிருந்தார். நேரம் இரவு எட்டு மணியை எட்டிக் கொண்டிருந்தது. இடம் டெல்லியின் புறநகர்ப் பகுதி. விகாஸ் இண்டஸ்ட்ரீஸின் ஆர் அண்ட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

நெய்யார் அணைச் சுற்றுலா!    
March 17, 2008, 4:00 pm | தலைப்புப் பக்கம்

சென்ற சனிக்கிழமை. வைகறைப் (காலை) பொழுது. (இங்கே வைகறை என்றால் மாலை நேரம்...!) எட்டு மணி இருக்கும். கழக்குட்டம் சந்திப்பில் திருவனந்தபுரம் செல்லும் திசையில் காதுகளில் ஒலி கேட்பானைச் செருகிக் கொண்டு, செல் வானொலியில் பாடல் கேட்டுக் கொண்டு எந்தப் பக்கம் இருந்து பேருந்து வரும் என்று எல்லாப் பக்கமும் பார்த்துக் கொண்டிருந்த அவனைப் பெயர் கேட்டிருந்தால், என் பெயர் சொல்லி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம் அனுபவம்

உப்புக் காற்றில் உன் அருகில்...!    
March 17, 2008, 3:25 pm | தலைப்புப் பக்கம்

தூரத்தில் போகின்ற புள்ளிக் கப்பல்களின் விலகல்களின் எதிரொலிகள் அதிர்கின்ற கடலடி.பூநுரைகளின் புதையல்கள் மிதக்கின்ற கரையோரம் பதித்துள்ள பாத ஓவியங்களின் மேலெங்கும் நிறைகின்றது கடல் ஈரம். நீல வானோடு முத்தமிடும் நீண்ட எல்லைக் கோடுகளைக் கடக்கின்றன கரும்புகை கக்கிக் கொண்டு இரும்பு பேருடல்கள். தொலைக் கிழக்கின் மஞ்சள் மேனி கரைத்து, எதிர்ப்புறம் உருள்கின்றது பூமி. நிழல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

மோக்ளி in uniform.    
March 16, 2008, 6:02 am | தலைப்புப் பக்கம்

சீருடைகளில் மோக்ளியின் அனுபவங்கள் எத்தகையன?4-ஆம் வகுப்பு படிக்கையில் சிண்ட்ரெல்லா நாடகம் பள்ளியின் ஆண்டு விழாவில் நடத்தப்பட்டது. அவள் நடன மேடையில் விட்டு விட்டு வீட்டிற்குத் திரும்புகிறாள். இளவரசன் அந்த ஒற்றைச் செருப்பை வைத்து சிண்ட்ரெல்லாவைக் கண்டு பிடிக்க முயல்கிறான். கண்டு பிடித்து விடுகிறான். அவனும், அவனது பாதுகாப்பு வீரர்களும் அவளது சித்தி வீட்டில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

A Good Song.    
March 16, 2008, 5:13 am | தலைப்புப் பக்கம்

உங்களுக்காக லால், பார்வதியின் இணையில் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை நிகழ்படம்

குறையொன்றுமில்லை.    
March 10, 2008, 4:00 pm | தலைப்புப் பக்கம்

செந்தாமரை மலரின் இதழ்களைப் போல் விரிந்தும், குறுகியும் ஓரங்களில் பனித்துளிகளின் பாரத்தைச் சுமந்து கொண்டு மாலை பூக்கத் தொடங்கியது. இரவியின் பிரயாணத்தை நிறைவுற்று வைத்து, இரவின் இரகசியப் பயணம் மெல்லத் துவங்குகிறது. கீச்சு கீச்சென்ற இனிய குரல்களில் அதை வரவேற்கின்றன புள்ளினங்கள். நதிக்கரைகளில் சாய்ந்திருக்கும் நாணல் புற்கள் தம் மென்னுடலை வீசும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

மலையாளப் பாட்டு பார்ப்போமா?    
March 10, 2008, 3:43 pm | தலைப்புப் பக்கம்

இதில் நடித்திருப்பது யாருனு பார்த்தா நம்ம ஷர்மிலி. அப்புறம் பாடி இருக்கறது மஞ்சரியும், விஜய் யேசுதாஸும் தாங்க. இசை, வேற யாரு நம்ம...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

பயணங்களால் கட்டமைந்த எட்டு நாட்கள். - 2.    
March 8, 2008, 12:08 pm | தலைப்புப் பக்கம்

இப் பதிவின் தொடர்ச்சி இது.சென்ற முறை பயணம் செய்தது போல் இன்றி, இம்முறை உண்மையாகவே பேருந்து விட்டுப் பேருந்து தாவித் தான் பயணிக்க வேண்டியதாகி இருந்தது.கழக்குட்டத்தில் இருந்து கிளம்பி, பவானியில் இருக்கும் உறவினர் வீட்டை அடைய மொத்தம் எட்டு பேருந்துகள் தேவைப்பட்டன.கழக்குட்டம் - கொல்லம், கொல்லம் - எர்ணாகுளம், எர்ணாகுளம் - திருச்சூர், திருச்சூர் - பாலக்காடு, பாலக்காடு -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் அனுபவம்

பயணங்களால் கட்டமைந்த எட்டு நாட்கள்.    
March 7, 2008, 12:54 pm | தலைப்புப் பக்கம்

இப்பதிவு இரு கூறுகளைக் கொண்டதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.முதலாவது, கடந்த சனி, ஞாயிறுகளில் மலை நாட்டின் தென்மலா (தேன்மலை) மற்றும் பாலருவி பகுதிகளுக்குச் சுற்றுலா சென்றிருந்த கதையைப் பேசும். மற்றுமொரு பகுதி, திங்கள் முதல் இன்று மதியம் வரை பயணித்த சொந்த ஊர்ப் பயணத்தைக் கூறும்.சனிக்கிழமை காலை ஆறு மணிக்குத் தொடங்கிய பயணம், மெல்ல மெல்ல மலையின் மடிகளில் ஏறி, பின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் பயணம்

போய்ப் பொய்!    
March 6, 2008, 7:59 am | தலைப்புப் பக்கம்

மனதின் இருண்ட மூலைகளில் சிறைத்திருக்கும் எண்ணங்களின் நிறங்களை யாரறிவர்? ஒரு மூலையில் கிளைத்திருக்கும் சின்னச் செடியின் முளைத்தலின் பின் இருக்கும் நம்பிக்கையின் வலு என்ன?கற்களை உருட்டி விளையாடும் நதியலையின் கரங்களைப் பிடித்து அழைத்துச் செல்வது யார்?பகலின் வெம்மையைப் பதிந்து கொண்ட பாறையைப் பிளக்கின்ற ஆயுதத்தின் கூர் உணருமா அதன் வெம்மையை?நாள் பொழுதில் மெதுவாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

என்ன செய்யப் போகின்றான்?    
March 5, 2008, 2:51 pm | தலைப்புப் பக்கம்

சாதம் வைக்காத மொட்டை மாடிகளால் நிறைந்த பின் நகரத்தின் காகங்கள் எங்கு சென்று கரைந்தன?கம்பிகள் அற்ற தெருக்களில் எந்தப் பாதையில் அமர்கின்றன சிட்டுக்குருவிகள்?குப்பைகளால் கட்டமைந்த பின், எந்தப் பச்சைப்புல்லைத் தின்னும் பசுக்கள்?எல்லோரையும் துரத்தி விட்டு என்ன செய்யப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சுஜாதா - அஞ்சலி 2.    
February 29, 2008, 2:52 pm | தலைப்புப் பக்கம்

சுஜாதாவின் குரல் கேட்க.ஓர் எழுத்தாளரின் மறைவுக்கு இவ்வளவு வருத்தம் ஏற்படுமா என்பது எனக்கே வியப்பாக இருக்கின்றது. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். சக பதிவர்களின் பதிவுகளைப் படிக்கையில் கண்களில் நீர் துளிர்க்கின்றது. அனைவரும் எந்தளவிற்கு துக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது விளங்குகின்றது.ஒரு படைப்பை அனுபவிக்கும் போது நமது...தொடர்ந்து படிக்கவும் »

சுஜாதா - பெயர் தந்த படைப்பாளி.    
February 28, 2008, 7:50 am | தலைப்புப் பக்கம்

ஒரு பிரபலமான எழுத்தாளர் என்பதையும் தாண்டி தனிப்பட நெருக்கம் கொள்ள எத்தனை காரணங்கள் உள்ளன எனக்கு!!பையன் பிறந்த பின் என்ன பெயர் வைக்க என்று குழம்பாமல், சுஜாதாவின் 'வசந்த்' போல் வர வேண்டும் என்று பெயர் வைத்தார்கள். அப்படி எனக்கு பெயர் தந்த படைப்பாளி அல்லவா அவர்?நேற்று இந்த பதிவை எழுதி விட்டு, இன்று காலையில் ஹிந்துவைப் புரட்டினால், அதிர்ச்சி. ஒன்றுமே ஓடவில்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

மகாகவி - ஒரு சித்தன்.    
February 27, 2008, 2:43 pm | தலைப்புப் பக்கம்

மகாகவியை ஒரு தேசபக்திக் கவிஞனாக, புரட்சிக் காரனாக, போராளியாக, சமூக சீர்திருத்தவாதியாக, துணிச்சல்காரனாக (காந்திக்காககூட காத்திருக்க மாட்டேன் என்றானாமே), பெண் விடுதலை வீரனாகக் காட்டிய பாடல்கள் ஆயிரம். பேச்சுப் போட்டிகளுக்கும், கட்டுரைப் போட்டிகளுக்கும் பாடல்கள் தந்து உதவிய பாட்டுக்காரனாக நினைவில் இருத்திக் கொண்டிருக்கையில், 'நானும் ஒரு சித்தனாக வந்தேனப்பா' என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

வாய்க்கா வரப்போரம்...    
February 25, 2008, 1:49 pm | தலைப்புப் பக்கம்

கெழக்க மொளச்ச கதிரும் மேக்க மறஞ்சாச்சு! வெளக்க ஏத்தி வெக்க, வேதனயும் சேந்தாச்சு!பாத வழியப் பாத்து பூத்த கண்ணும்வேத்து வேத்து தண்ணி பொழிஞ்சாச்சு!ஈர வெறகு மேல சேந்த ஈசலு போலகூரக் கீத்து மேல தூத்துன தூறலு போலபாற மேல பூத்த பச்சல போல்ஊறிப்புட்டீரு உள் மனசுல..! வெள்ளாம வெளஞ்சு நிக்க வெள்ளாடு மேயாம காத்து நிக்ககை கொள்ளாம கொண்டு போகவெள்ளன வருவிகளோ, வராம போவீகளோ?ஆத்தோரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மோக்ளியின் ஷா - இன் -ஷா.    
February 23, 2008, 12:26 pm | தலைப்புப் பக்கம்

ஆறடிக்குக் கொஞ்சம் குறைவான உயரம். கறுப்பு நிறம். காற்றில் பரபரக்கின்ற முடி. சின்னச் சின்னதாய் இரு கண்கள். பார்ப்பவர்களை அப்படியே வசீகரித்துக் கொள்கின்ற முகராசி.இந்த மனிதரிடம் அப்படி என்ன ஈர்ப்பு சக்தி இருக்கிறது என்று மோக்ளி மயங்கினான்?முதலில் இது போன்ற எந்த திரை நடிகர்க்கும் இரசிகனாய் இல்லாமல் தான் இருந்தான். அவன் திரைப்படங்கள் பார்ப்பதே மிகவும் அரிது என்பதால்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் திரைப்படம்

நதியலையின் பேரெழிலே!    
February 21, 2008, 4:03 pm | தலைப்புப் பக்கம்

பொங்கி வரும் நதியலையின் பேரெழிலே! தங்கு தடையின்றி தாவி வரும் பெருந்தமிழே! எங்கும் நிறைந்து யாவு நீயான பூங்காற்றே! அங்குமிங்கும் ஏன் அலைகிறாய், அமர்க என் உளத்துள்!அந்திமேகம் பொழியும் மஞ்சள் மழையே! வந்திருந்து வாழ நெஞ்சத்துள் நுழையே! சுந்தர மொழியால் நனைக்கின்ற இதழே! எந்த கணத்தில் சிறைத்தாய் எனையே?என்னோடு எட்டு வைத்து நடக்கின்ற போதுகளில் வெயிலின் கிரணங்கள் தீண்டத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

அந்த மோக்ளி என்ன ஆனான்...?    
February 20, 2008, 3:15 pm | தலைப்புப் பக்கம்

கடந்த கால் நூற்றாண்டு மனித வரலாற்றிலோ, மானுட சகாப்தத்திலோ வியக்கத்தக்க மாறுதல்களை கொண்டு வந்ததோ என்னவோ, எனக்கு ஒரு முக்கியமான காலகட்டம் தான். அட, நான் பிறந்து வளர்ந்த குழந்தைப் பருவமும், சிறுவன் காலமும் எனக்கு மிக முக்கியம் இல்லையா? அதைத் தான் கூறினேன்.எத்தனை எத்தனை சம்பவங்கள்...! எத்தனை எத்தனை நிகழ்வுகள்..! எல்லாவற்றையும் காலக் கரையான் அரித்துக் கரைக்கும் முன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

இருவர் - இரு பாடல்கள்.    
February 19, 2008, 2:37 pm | தலைப்புப் பக்கம்

இருவர் படத்தில் இருந்து, இரு பாடல்கள்.Get Your Own Hindi Songs Player at Music Pluginஒன்று தூய தமிழ் வரிகளுக்காகவும், பழைய பாணியில் ஒளிப்படுத்தியதற்காகவும் பிரபலமானது. இது போல் எழுத வேண்டும் என்பது என்னதான் பிட்ஸாவில் மூழ்கிய மனதினனானாலும், தமிழ் எழுதுபவர்களுக்குத் தோன்றாமல் இருக்காது. தேனில் பிழிந்த சுவைப் பலாச் சுளையை வெண் பாலில் நனைத்து ஊற வைத்து இனிக்க இனிக்க ரசிக்கச் சுவைத்தால், எப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஒதுங்கிக் கொள்வது நன்று!    
February 19, 2008, 1:22 pm | தலைப்புப் பக்கம்

விகடனில் வந்த ஜெயமோகன் அவர்களின் பதிவைப் பற்றிய கட்டுரையைப் பற்றி எழுதாவிட்டால், அது தமிழ் வலைஞரின் இலக்கணம் ஆகாது என்பதால் இப்பதிவு.அக்கட்டுரையை வாசித்ததோடு சரி. பிறகு ஜெயமோகன் அவர்களின் வலைக்குச் சென்று மீதத்தையும், மீதக் கட்டுரைகளையும் வாசிக்கவில்லை. அது எனக்குத் தேவையில்லாதது. எனவே இது விகடனில் படித்ததன் பேரில் எழும் விளைவு மட்டுமே.அவர்களது ஊரில் இவர்களைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

பொன்முடி...!    
February 18, 2008, 2:03 pm | தலைப்புப் பக்கம்

பொன்முடிச் சிகரங்கள் பற்றி கேள்விப்பட்டதில் இருந்து அங்கு ஒரு பயணம் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.ஆனால் செல்வதற்கான காலம் நேற்று தான் கனிந்தது. அப்பயணம் பற்றிய ஒரு பதிவு இது. செல்வதற்கு முன் இங்கே் சென்று ஒரு பார்வை பார்த்து விட்டு வந்து விடுங்களேன்.http://en.wikipedia.org/wiki/Ponmudiஞாயிறு காலை 7 மணிக்கு கழக்குட்டத்தில் இருந்து கிளம்பி, தம்பானூர் சென்றடைந்தேன். இது தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் பயணம்

என்ன காரணம்    
February 14, 2008, 12:23 pm | தலைப்புப் பக்கம்

இரண்டு நாட்களுக்கு முன் கைக் கடிகாரம் தொலைந்து போனது. ஒன்றும் கவலை தோன்றவேயில்லை. 'சரி, கிடைத்தால் கிடைக்கட்டும். போனால் போகட்டும். யாரிடமும் சொல்லக் கூடாது. பார்ப்போம். கிடைக்குமா, இல்லையா என்று' என்று முடிவெடுத்து, எப்போதும் போல் Cool-ஆக இருந்தேன்.இன்று கிடைத்து விட்டது. ஒன்றும் சந்தோஷம் தோன்றவில்லை. அப்படியா, கிடைத்து விட்டதா, நன்று என்று கட்டிக் கொண்டேன்.கொஞ்ச...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

எழுதிப் பார்க்க என் காதல்...!    
February 12, 2008, 2:33 pm | தலைப்புப் பக்கம்

இதை என்ன செய்வது என்றே தெரியவில்லை.புதிய பேனா வாங்கி முதலில் எழுதிப் பார்க்க உன் பெயரை நினைக்க, முந்திக் கொண்டு தன் பெயரை எழுதிப் பார்த்துக் கொண்டது இது!எங்காவது கையெழுத்துப் போட எழுதத் துவங்கினால், என் பெயரை எழுதாமல், தன் பெயரை எழுதி என்னை மாட்டி வைக்கின்றது இது!நம் பேரை யாராவது கேட்டால், இனிஷியல் போல் தன்னைச் சொல்லச் சொல்லிப் பின், நம் பெயரைச் சொல்லாமல் மெளனமாக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

வாழும் இது...!    
February 12, 2008, 2:03 pm | தலைப்புப் பக்கம்

கனவுகளின் கருவறையில் இருந்து எழுந்து வந்தது, முந்திய இரவின் ஒரு கனவு. ஏவாளைத் தூண்டிய சைத்தான் பாம்பின் காதல் கடியில் நீலம் பாரித்திருந்த வானம். சுவைத்த சுவையில், சிந்திய கிறக்க விஷம் பரவத் தொடங்கி இருந்தது கடலுக்குள்ளும்! கடலும் நீலம் கொள்ளத் தொடங்கியது.பச்சை பூத்திருந்த சிறு தீவை மட்டும் நனைக்க முடியாமல், சுற்றிச் சுற்றி வந்தது காதல் சைத்தான். ஒரு மாலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

காதலின் கால் தடம்...    
February 12, 2008, 12:36 pm | தலைப்புப் பக்கம்

ஈரக்கரையின் மேனியெங்கும் கீறல் போட்டுக் கொண்டே சென்ற காற்று ஓர் இடத்தில் திகைத்து நின்றது. அங்கே தென்பட்டது நமது காதலின் கால் தடம். ஏதேதோ கண்டெடுத்து தன் கைப்பையில் வைத்துக் கொண்ட காற்று, இந்த தடத்தை என்ன செய்வது என்று தெரியாமல், இந்த இடத்திலேயே சுழலத் தொடங்கியது, உன்னைக் கண்டதும் என் நெஞ்சில் காதல் சுழலத் தொடங்கியது போல்....!அமைதிக்காகப் பூத்திருந்த தோட்டம் அது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

வெட்கம் சிந்தியது...!    
February 11, 2008, 4:02 pm | தலைப்புப் பக்கம்

சடசடவென மழை பெய்யத் தொடங்கி இருந்தது. நம் குடைகளுக்குள் இருக்கும் இடைவெளியில் நம் நிழல்களே நிற்க முடியாமல், எங்கோ சென்றிருந்தன. பொசுக்கென போய் விட்ட தெரு விளக்குகளின் உயிரைத் தேடி இருக்குமோ?மெல்ல நடை போடுகிறோம். குடைகள் பிடித்திருந்த நமது கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது சத்தியமாய்க் குளிரால் இல்லை என்பதை நாம் நன்கறிவோம்.அவ்வப்போது கடக்கின்ற வாகனங்களின் முன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பாவம் தான்.    
February 11, 2008, 12:01 pm | தலைப்புப் பக்கம்

பயணம் போல் களிப்பும், களைப்பும் ஒரே சமயத்தில் தரக்கூடிய வேறு ஒரேயொரு விஷயம் தான் இருக்கின்றது. அதைப் பற்றி இங்கே எழுதப் போவதில்லை. அதற்கு தனி பிரிவு வைத்துள்ளேன். இப்பதிவில் சென்ற இரண்டு நாட்களாக பயணித்ததைப் பற்றி சொல்கிறேன். அவ்வப்போது மனசாட்சி குறுக்கே லைனில் வரும். அதை அப்படியே டீல்-ல விட்ருங்க. நேற்று சேலத்தில் ஒரு சென்னை நண்பரது திருமணம். அதற்காக ப்ளான் செய்து,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

Shall I....?    
February 8, 2008, 3:02 pm | தலைப்புப் பக்கம்

'இது காதல் தானா..?'எனக்குத் தெரியவில்லை. அவ்வப்போது ஒரு சின்ன ஹாய். முகத்தில் பூசிய புன்னகையின் சுவடு என் முகத்திலும் பதிந்து விடும். கஃபேயிலோ, ரெஸ்டாரெண்டிலோ எதிர்பாராமல் எதிரே பார்க்கையில், ஒரு புன்முறுவல். வார்த்தைகளே பரிமாறப்பட்டதில்லை. ஆனாலும் ஒரு மென் முனை, இதயத்திற்குள்.வீட்டில் சொல்லி விட வேண்டும். ஆனால் யாரிடம் என்று தான் தெரியவில்லை. அதற்குள் அவளிடம்..! ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

James Brunt - My Life is Brilliant.    
February 8, 2008, 2:42 pm | தலைப்புப் பக்கம்

James Blunt - ன் மற்றுமோர் அற்புதப் பாடல். 'மற்றுமோர்' என்றால்.. இதை விட மற்றொரு அற்புதப் பாடல் இருக்கிறதா என்று கேட்கிறீர்களா..? அதைத் தான் நானும் தேடிக் கொண்டிருக்கிறேன்.அப்படியொரு பாடல் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில். ஆனால் இன்னும் கிடைத்த பாடில்லை.!My life is brilliant.My love is pure.I saw an angel.Of that I'm sure.She smiled at me on the subway.She was with another man.But I won't lose no sleep on that,'Cause I've got a plan.You're beautiful. You're beautiful.You're beautiful,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை


மதுரச் சிற்பம்.    
February 4, 2008, 2:29 pm | தலைப்புப் பக்கம்

இருளைப் பூசி இருந்தது காற்று. குளுமையின் குரலில் ஒரு மெளன கானத்தை இசைத்தவாறே, வீசிக் கொண்டிருந்தது. 'ஸ்... ஸ்' என்று உச்சரித்தவாறு, காற்றை எச்சரித்தவாறு தன் குட்டிகளைச் சிறகுகளால் மெல்லப் போர்த்திக் கொண்டு, கண்கள் வழி உறக்கத்தைக் கசிய விட்டுக் கொண்டிருந்தன தாய்ப் பறவைகள்.விழிகள் போல் அகண்டும், விரிந்திருந்தும் இருந்த பச்சை இலைகள் மேல், இரவின் கருமை இழைந்திருந்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

தேசத் துரோகி?    
February 2, 2008, 6:13 am | தலைப்புப் பக்கம்

இப்பதிவில் மகாத்மா காந்தி பற்றி 'தேசத் துரோகி' என்று கூறியுள்ளார்கள்.http://seithivimarshanam.blogspot.com/2008/01/blog-post_31.htmlஎப்போது இங்கு தேசம் என்று ஒன்று இருந்தது? எல்லோரும் குட்டி குட்டியாய் சமஸ்தானங்களை வைத்துக் கொண்டு ராஜாங்கம் பண்ணிக் கொண்டிருந்தவர்கள் தானே? ஒரு நாடாக என்று இருந்து வந்தது? ஆன்மீகமும், இந்து மதமும் மட்டுமே இமயம் முதல் இலங்கை வரை இணைத்து வைத்திருந்ததே ஒழிய, அரசாங்கமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

பனிக்காற்றில் ஒரு காதலன்.    
February 2, 2008, 5:41 am | தலைப்புப் பக்கம்

படபடக்கும் காற்றின் அலைகள் ஓய்ந்து , ஒரு வேட்டை நாயைப் போல் கவ்விக் கொள்ளும் வேகத்தோடு பாய்ந்து வந்து கொண்டிருக்கின்றது இரவின் மாயப் பிடி.ஈரத்துளிகளால் நிரம்பியிருந்த ஜில்லிட்டுப் போயிருந்த பாதைகளில் நடந்து வருகிறேன். பனிக்காலம் துவங்கி விட்டதை உணர்த்தும் வாடைக்காற்று வீசத் தொடங்கி இருந்தது. இரவின் மெல்லிய அணைப்புக்குள் அடங்கிக் கொள்ளும் பூக்கள் நடுங்கிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

போகச் சொல் உன் இதயத்தை..!    
January 27, 2008, 2:07 pm | தலைப்புப் பக்கம்

பொழுதே போக மாட்டேன் என்கிறது என்றேன்.காட்டினான் உன்னை. 'போகச் சொல் உன் இதயத்தை' என்றான். சொல்லும் முன்னே நகர்ந்து சென்று விட்டது. ஒரு நாளின் இரவில் விழத் துவங்கினேன், காதலின் பொன் வலையில்!என்ன செய்வது என்று கேட்டேன். உன் அருகில் சென்று பேசு என்றான்.ஏதோ பெயர் சொல்லி உன் அருகில் வந்தேன். சொன்ன பெயரை மறந்து போனேன். ஏதேதோ பேசச் சொன்னான். வார்த்தைகளின் வரி வடிவம், வாய்க்குள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

இப்போது புரிகின்ற கணக்கு.    
January 27, 2008, 1:02 pm | தலைப்புப் பக்கம்

சிறு வயதில் கோயிலுக்குச் செல்லும் போது, படித்த ஞாபகம்.'மந்திரங்களைச் சொல்லும் போது பிறர் காதில் விழுமாறு சொன்னால் குறைவான பலன். நம் காதில் மட்டும் விழுமாறு சொன்னால் கொஞ்சம் அதிகம். அதுவும் நமது வாயைக் கூட அசைக்காமல், நாக்கை கூட அசைக்காமல் மனதில் மட்டும் சொன்னால் மிக அதிகப் பலன்.'அட.. இது ரொம்ப சுலபமாக இருக்கிறதே என்று தோன்றியது.இப்போது தான் இதன் அர்த்தம் புரிகின்றது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

இது ஒரு காதல் கதை...? - 4    
January 23, 2008, 1:14 pm | தலைப்புப் பக்கம்

"என்ன மாம்ஸ், பீச் போய்ட்டியா..? சாரிடா. என்னால வர முடியல..." அருண்."சரி விடு. நானும் அடையார் வழியா போக முடியல. ஏதோ ஊர்வலமாம். அதனால் மயிலாப்பூர் வழியா போய் சாந்தோம் போற ப்ளான்ல இருந்தேன். இப்போ சிட்டி சென்டர் போய் கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ண வேண்டியது ஞாபகம் வந்திடுச்சு. அதனால் ராதாகிருஷ்ணன் ரோடுல போய்க்கிட்டு இருக்கேன். சரி, நான் அப்புறம் கால் பண்றேன். வெண் புறா போலிஸ் போன்ல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

இது ஒரு காதல் கதை...? - 3    
January 22, 2008, 9:20 pm | தலைப்புப் பக்கம்

ஞாயிறு காலை 9 மணி."சந்தியா.. உன்னோட ஏண்டா deal வெச்சுக்கிட்டோம்னு இருக்கு..""என்ன, பயமா இருக்கா..?""இல்ல., இப்பவே 9 மணி ஆகிடுச்சு. இன்னும் அவர் வரலையே..""இங்க பாருடா.. என்னமோ அவர் டைம் சொல்லிட்டு போன மாதிரி பேசற. இன்னும் 15 மணி நேரம் இருக்குல்ல, வெய்ட் பண்ணு..""நீ என்ன பண்ணப் போற...?""எனக்கு வாஷ் பண்ற வேலை இருக்கும்மா. உனக்கென்ன, உன்னோட கஸின் வீடு திருவான்மியூர்ல இருக்கு. அங்க போய் வாஷிங்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

இது ஒரு காதல் கதை...? - 2    
January 22, 2008, 6:02 pm | தலைப்புப் பக்கம்

"சந்தியா.. இருந்தாலும் நீ இப்படி சண்டை போடக் கூடாது. பாவம் அவன்.." என்றாள் மலர்."போதும் மலர். ஸ்பென்சர்ல கிளம்பினதுல இருந்து இதையே சொல்லிட்டு வர்ற. நானும் பார்த்துட்டு தான் இருக்கேன். உனக்கு என்ன அவன் மேல திடீர்னு ஒரு Soft Corner. அவன் என்னவெல்லாம் சொன்னான் தெரியுமா? என் பெப்பை பார்த்து, 'பிஸ்கட்' வண்டியாம். எருமை மாடு மாதிரி ஒரு வண்டியை வெச்சுக்கிட்டு அவன் நம்ம வண்டியைச் சொல்றான்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

இது ஒரு காதல் கதை...? - 1    
January 22, 2008, 2:24 pm | தலைப்புப் பக்கம்

They lived happily thereafter.But....'ஒரு மாலை இளவெயில் நேரம்..'அருண் கவிழ்ந்து இருந்த செல்போனை எடுத்து பார்த்தான். அம்மா. மினுக் மினுகென்று மின்னிக் கொண்டிருந்த டிஜிட்டல் வாட்சில் நேரம் பார்த்தான். 5:30."சொல்லும்மா..""என்னடா தூங்கிட்டு இருந்தியா? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா..?""இல்லம்மா. குளிச்சிட்டு, பூஜா ரூம்ல காயத்ரி மந்திரம் சொல்லிட்டிருந்தேன். நம்பறயா..?""கோவிச்சுக்காத கண்ணு. வேற எப்ப ஃபோன் பண்றது,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ஆ.. காட்டு.. ஆ..!    
January 19, 2008, 2:37 pm | தலைப்புப் பக்கம்

பளிங்கு வனத்தின் மேல் பாய்ந்த ஒளி வெள்ளம் போல் ஜொலித்துக் கொண்டிருந்தது ஆயர்பாடி.இன்னும் உக்கிரம் கொள்ளாத சூரியனின் பார்வைகள் தீண்டும் பகுதிகளில் எல்லாம் வெம்மையில் பூத்துக் கொண்டிருந்தது வெயில். கொத்தாய்ச் சிரித்துக் கொண்டிருந்த பச்சை இலைகளைப் பிரித்துக் கொண்டு பாய்ந்து கொண்டிருந்தது பகல் ஒளி. வெள்ளிக் காசுகள் தூவிய போர்வையாய் அசைந்து, அசைந்து ஓடிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

விளக்கு - ஒரு விளக்கம்.    
January 19, 2008, 2:16 pm | தலைப்புப் பக்கம்

இந்து விளக்குகளில் ஓர் அர்த்தம் இருப்பதாகவே நான் பார்க்கிறேன்.விளக்குகள் எப்படி பணியாற்றுகின்றன?ஒரு சிறு குழிவான பாத்திரம். அது தான் விளக்கு. அதனுள் எண்ணெய் அல்லது நெய் ஊற்றப்படுகின்றது. பஞ்சு அல்லது நூலினால் திரிக்கப்பட்ட திரியானது அதனுள் இடப்படுகின்றது. ஒரு முனை வெளியே மேல் நோக்கி நீட்டப்படுகின்றது. திரியில் நெருப்பு ஏற்றப்படுகின்றது. விளக்கில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

எதிர்காலம் - அறிய முடியுமா?    
January 18, 2008, 3:06 pm | தலைப்புப் பக்கம்

ஒரு சிறு கேள்வி!நீங்கள் அடுத்த நொடியில் உங்கள் இடது கண்ணை என்னவெல்லாம் செய்யக் கூடும்? எனக்குத் தெரிந்து கீழ்க் காணும் ஏதேனும்.இடது புறம் கண்களின் பாப்பாவை நகர்த்திப் பார்க்கலாம்.வலப்புறம். மேலே. கீழே.இமையால் மூடலாம். இமையைத் திறக்கலாம். பிடுங்கி எறியலாம். கைகளால் தேய்க்கலாம். கைகளால் தேய்ப்பதை நிறுத்தலாம்.போதும்.இந்த உலகில் உங்கள் இடது கண் மட்டும் மற்றும் நீங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

மெளனமே பதில்.    
January 18, 2008, 2:31 pm | தலைப்புப் பக்கம்

ரீசார்ஜபிள் பேட்டரி எப்படி சார்ஜ் ஆகின்றது தெரியுமா..?ப்ளக்கில் கனெக்ஷன் கொடுத்தவுடன் மெயின் கரண்ட் பாய்ந்து பாட்டரியச் சார்ஜ் செய்கின்றது என்று தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். பிற்கு யாஹூவைக் கேட்டதில் யாஹூவார் இப்படி பதில் கூறினார்.http://ask.yahoo.com/20031030.htmlஅதாவது நெகட்டிவ் முனையில் இருந்து பாஸிட்டிவ் முனைக்கு சர்க்க்யூட் வழியாகச் சென்ற எலெக்ட்ரான்களை மீண்டும் எதிர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ரஜினியும் நாசரின் முகமும்...!    
January 18, 2008, 1:38 pm | தலைப்புப் பக்கம்

இது ஒரு லேட்டான பதிவு. கொஞ்சம் லேட்டான.! 6 வருடங்கள்.'உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக திரைக்கு வந்து சில மாதங்களேயான ...' என்று முழங்க சன் டி.வி.யில் போடப்படும் ஓடாத படங்களைப் பார்த்திருப்பீர்கள். எப்போதாவது இந்த மாதிரி படங்களில் எது மிகவும் குறைந்த காலத்திலேயே சன் டி.வி.யில் ரிலீசான படமாக இருக்கும் என்று யோசித்ததுண்டா? அப்படியொரு ஐயம் வந்தால், நீங்கள் கவலையே பட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சிறுவர் மலரும் Corporate Debugging-ம்.    
January 16, 2008, 2:25 pm | தலைப்புப் பக்கம்

முன்னமொரு நிலாக் காலத்தில் படித்த சிறுவர்மலர் கதை நினைவுக்கு வந்தது. நம்ம கதைப் பைத்தியம் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. (எல்லாம் ஒரு விளம்பரம் தான்...!)மூன்று பேர் ஓர் ஊரிலிருந்து மற்றுமொரு ஊருக்குச் சென்று கொண்டிருப்பார்கள். அப்போது வழியில் கனமழை பிடித்துக் கொள்ளும். காட்டோரம் சென்று கொண்டிருக்கும் அவர்கள் ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஒதுங்குவார்கள்.பெய்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

இராஜாங்கம்.    
January 12, 2008, 11:44 am | தலைப்புப் பக்கம்

இசைஞானியின் இளவல் யுவன்சங்கர் ராஜாவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு (பருத்தி வீரனுக்குப் பிறகு என்று நினைக்கிறேன்.) 'எப்போது 'தென்றல் வந்து தீண்டும் போது' போல் நான் பாட்டு போடுகிறேனோ அப்போது தான் நானும் இசையில் ஏதேனும் கொஞ்சம் செய்திருக்கிறேன் என்று நம்புவேன்' என்று கூறியிருந்தார்.என்ன ஓர் அற்புதமான பாடல்.இப்பாடல் என் வாழ்வில் ஒரு துயரமான (அத்துயரம் அப்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை நிகழ்படம்

சுவாமிஜி.    
January 12, 2008, 10:52 am | தலைப்புப் பக்கம்

இன்று சுவாமிஜி விவேகானந்தரின் பிறந்த தினம்.நான்காம் வகுப்பு முடித்து ஐந்தாம் வகுப்பு சேர்வதற்காக எங்கள் ஊரில் பள்ளியைத் தேடியதில், இடமில்லை என்று சொல்லப்பட்ட பள்ளிகளில் ஒன்று 'சுவாமி விவேகானந்தா துவக்கப் பள்ளி'. பின் வேறொரு பள்ளியில் சேர்ந்தேன். இப்படித் தான் முதன்முதலில் (அசந்தர்ப்பமாக)சுவாமிஜியின் பெயர் அறிமுகமானது.என் சகோதரருக்கு அப்பள்ளியில் இடம் கிடைத்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் ஆன்மீகம்

சேர நாட்டுப் பொழுதுகள் - 2.    
January 10, 2008, 6:05 pm | தலைப்புப் பக்கம்

சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸில் ஏற, காலை 8:20க்கு கிளம்பிய இரயில் ஊரெல்லாம் சுற்றிக் கொண்டு வந்து (இதுவரை நான் பார்த்தேயிராத நெல்லை, நாகர்கோயில் வழியாக) கேரள் எல்லையை அடைந்து ஒரு நிறுத்தத்தில் (நெய்யாற்றின்கரா) நிற்கையில், தொடங்கியது சிலுசிலுப்பான ஒரு பயணம்.பின் ஒரு விடுதியைத் தேடிப் பிடித்து (இரவு 11:30) இரவு தங்கி, பிறகு வீடு பிடித்து ஒரு வழியாகச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

சேர நாட்டுப் பொழுதுகள்.    
January 9, 2008, 10:28 am | தலைப்புப் பக்கம்

சென்ற திங்கள் கிழமையோடு மலை நாட்டிற்கு வந்து ஒரு திங்கள் நிறைவு பெறுகின்றது. இப்போது டெக்னோபார்க் அமைந்துள்ள கழக்குட்டம் என்ற இடத்தில் வாசம்.டெக்னோபார்க், நகரத்தில் (திருவனந்தபுரம் நகரமா என்று நீங்கள் கேட்பீர்களானால் என்னிடம் பதில் இல்லை. அதுவும் சென்னையில் எட்டு ஆண்டுகளுக்கும் மேல் வசித்து விட்டு, இங்கு வந்தால்... இது பற்றி தனிப் பதிவு!) இருந்து 40 நிமிடங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் பயணம்

மஞ்சள் நதிக்கரை.    
January 6, 2008, 1:00 pm | தலைப்புப் பக்கம்

ஈரமான பொன் துகள்கள் மிதந்து கொண்டிருக்கின்றன.தங்க வாட்கள் எடுத்து வீசி, வீசி விளையாடிக் கொண்டிருக்கின்றது சூரியன். மேகங்களின் கர் மேனிகளுக்குள் நுழைந்து, தகதகச் செய்கின்ற கிரணங்கள், தமது சூட்டைத் தணித்துக் கொள்ள நதியின் அலைகளின் மேல் பாய்கின்றன.என்ன விந்தை..! செம்புலப் பெயல் நீராகச் சிவந்திருக்கின்ற நீர்த்துளிகள், இன்னும் பொன்னிறம் பெற்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

நகைச்சுவை.    
January 6, 2008, 12:18 pm | தலைப்புப் பக்கம்

கேரள நடிகர் ஜெகதியின் நல்லதொரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்

மழைத்துளி போல் ஒரு காதல்..!    
December 30, 2007, 1:30 pm | தலைப்புப் பக்கம்

சில சமயங்களில் நம் மேல் நாம் கொள்கின்ற காதல்கள் மழையில் நனைகின்ற வானவில்லின் வர்ணங்களோடு வகைப்படுத்தக் கூடியதாய் இருக்கின்றன.மெல்லிய புன்னகையில் பிரிந்து சென்ற இதழ்களின் கோடியில் தெறித்த உன் காதலின் இருப்பிடம் வந்து என் காதலைக் கலக்கையில், இன்னும் உயிர்ப்போடு உருகிச் சென்ற அந்த இளஞ்சிவப்பு நிறம் எனக்கு நினைவூட்டும்.உறக்கமில்லாத இரவுகள் விட்டு விட்டுப் போகின்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

காதல் போல் ஒரு மழைத்துளி..!    
December 30, 2007, 12:05 pm | தலைப்புப் பக்கம்

மிதச் சூடாக மழை பெய்து கொண்டிருந்தது.மாலை வெயிலில் பொன் முகடுகளைக் குளிர்வித்து பெய்கின்ற மழை நமது நிலத்தை அடைகையில் மட்டும் சூடு அடைந்து விட்டிருந்தது. நெருக்கமாக நின்றவாறு குசலம் விசாரித்துக் கொண்டிருக்கிந்தன மா-மரங்கள். கிளைகளைக் கிளைத்துக் கொண்டிருந்த சின்னச் சின்ன இலைகள் மழையின் குளிர்மையில் மெளனமாக நனைந்து கொண்டிருந்தன.சற்று தூரம் நடந்து வரக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

திருப்பாவை :: பாடல் இ.    
December 19, 2007, 8:36 pm | தலைப்புப் பக்கம்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடிநாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்துஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றிவாங்க* குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.இரவின் மெல்லிய கரங்கள் தாலாட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் தமிழ்

திருப்பாவை :: பாடல் ஆ.    
December 18, 2007, 5:08 pm | தலைப்புப் பக்கம்

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்பையத் துயின்ற பரமனடி பாடிநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடிமையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டிஉய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.ஆயர்பாடி அமைதியாக இருக்கின்றது.மேற்றிசையில் திரண்டிருந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

திருப்பாவை :: பாடல் அ.    
December 17, 2007, 1:30 pm | தலைப்புப் பக்கம்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்நாராயணனே நமக்கே பறை தருவான்பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!மெல்லப் பனி பெய்து கொண்டிருக்கின்றது.பச்சை இலைகளால்...தொடர்ந்து படிக்கவும் »

கோயம்புத்தூர் குசும்பு.    
December 2, 2007, 4:00 am | தலைப்புப் பக்கம்

ம்ம ஊர்க்கார பயலுகளுக்கு இருக்கற லொள்ளு இருக்கே... அதாங்க லொள்ளு..லொள்ளு... அதுக்கு அளவே இல்லீங்க... நீங்களே பாருங்க...இது உள்ளூரு சில்லி புரோட்டா....இது வெளியூரு...தொடர்ந்து படிக்கவும் »

திருச்செங்கோடு - ஒரு பயணம்.    
September 2, 2007, 6:10 am | தலைப்புப் பக்கம்

"திருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசிதிருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள்கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும்கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

பொங்கி வரும் காவேரி.    
August 20, 2007, 5:10 pm | தலைப்புப் பக்கம்

சென்ற வார இறுதியில் ஊருக்குச் சென்றிருந்தேன். ஆடி அமாவசையை முன்னிட்டு,கூடுதுறை கோயிலில் அதிகக் கூட்டம். 'மக்கள் கூட்டத்திற்கு நானும் இளைத்தவள் இல்லை' என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் சித்திரம்