மாற்று! » பதிவர்கள்

ஆ.கோகுலன்

தென்கிழக்காசிய வேங்கை - தென்கொரியா - 02    
July 22, 2008, 9:26 am | தலைப்புப் பக்கம்

தென்கொரியா பெளத்தமதம் சார்ந்த நாடாக இருந்தபோதும் 46 வீதத்திற்கும் கூடுதலானவர்கள் எந்தமதத்தையும் சாராதவர்களாகவே இருக்கிறார்கள். விண்ணப்பப்படிவங்களில் கூட 'எந்த மதத்தையும் சாராதவர்..' என்ற தெரிவும் தரப்பட்டிருக்கும்.30 வீதமானவர்கள் பெளத்தர்களாகவும் 15 வீதமானவர்கள் கிறிஸ்தவர்களாகவும் இருக்கிறார்கள். 50000 பேர்வரை முஸ்லிம்களாகவும் இருக்கிறார்கள்.(படம் - கொரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

உலகவலம் வரும் Charice Pempengco    
May 30, 2008, 10:48 am | தலைப்புப் பக்கம்

Charice Pempengco - பிலிப்பீன்ஸ் நாட்டை சேர்ந்த இச்சிறுமி இன்றைய சர்வதேச இசை உலகில் கலக்கிக்கொண்டிருக்கிறார். பலரையும் வியப்பில் ஆழ்த்தியது இந்தச்சின்ன வயதில் இவரிடம் இருந்து வரும் மிக முதிர்ச்சியடைந்த குரல்(Matured voice) அத்துடன் மேடைகளில் உணர்ச்சிகரமாகப்பாடும் தன்மையும் (Passion) மேடைகளில் தோன்றும்போதுள்ள கம்பீரமும் ஸ்டைலும் இவருக்கு ரசிகர்கள் பலரை உருவாக்கித்தந்துள்ளது. 10.05.1993...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தேவாரமும் நானும்    
May 17, 2008, 1:07 pm | தலைப்புப் பக்கம்

சிறுவயதில் தேவாரம் பாடமாக்குதல் என்பது மிகப்பெரிய சவால்। கோவில்களில் தேவாரம் பாடினால் தான் கடவுள் வரம் தருவார் என்றும் சொல்லப்பட்டது। 'சொற்றுணை வேதியன்॥' பாடும்போது கல்லைக்கட்டி கடலில் போட்டபோது அவர் பாடியதை சும்மா நின்று கும்பிட்டுக்கொண்டிருக்கும் நான் ஏன் பாடவேண்டும் என நினைத்த காலங்களும் உண்டு। (கல்லைக்கட்டி கடலில் போட்டாலும் எமக்கு இன்னும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் இலக்கியம்

சுவர்ண சுந்தரி    
May 10, 2008, 2:23 pm | தலைப்புப் பக்கம்

1958 இல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படம் சுவர்ணசுந்தரி. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற 'குஹீ குஹீ போலே கொயலியா..' எனத்தொடங்கும் பாடல் அனைத்து இசைப்பிரியர்களையும் கொள்ளை கொண்டது மட்டுமல்லாமல் இன்றைய தலைமுறையினரிடம் கூட பிரபல்யம் பெற்று விளங்குகிறது. இப்பாடலை பெரும்பாலான திரைஇசைப்போட்டிகளில் போட்டியாளர்கள் சவாலாக ஏற்று நம்பிக்கையுடன் பாடுவதை அவதானிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கொலம்ப சன்னிய    
April 23, 2008, 1:07 pm | தலைப்புப் பக்கம்

கொலம்ப சன்னிய - மிகவும் நகைச்சுவையான ஒரு சிங்களத்திரைப்படம். எழுபதுகளில் வெளிவந்திருக்கலாம் என நினைக்கிறேன். மனிக் சந்திரசேகர என்பவர் இயக்கிய கறுப்பு வெள்ளைப் படம்.இலங்கையிலுள்ள குக்கிராமம் ஒன்றில் இயற்கை கடன் கழிக்கவென செல்லும் அந்தரே என்பவரிற்கு மிகவும் பெறுமதியான இரத்தினக்கல் ஒன்று கிடைக்கின்றது. அதை விற்று திடீர் பணக்காரராகும் அந்தரேயும் அவரது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

திருகோணமலை நினைவுகள்..    
March 23, 2008, 7:18 am | தலைப்புப் பக்கம்

கடலுக்குள் நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு வித்தியாசமான நிலப்பரப்பே திருகோணமலை நகரம். இந்த இயற்கையான புவியியல் அமைப்பே உலகின் தலைசிறந்த இயற்கை துறைமுகத்தையும் அளித்தது. அத்துடன் வீதியில் எங்கிருந்தும் இரு அந்தத்திலும் கடலைப்பார்க்க கூடியதான நேரிய கடல்முக வீதியையும் (Sea view road) அமைக்க உதவியது.கோணேசர் ஆலயம் - அதுவரை பாடப்புத்தகத்தில் மட்டுமே பார்த்த ஆலயத்தை நேரில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத்திட்டம்    
February 15, 2008, 10:44 am | தலைப்புப் பக்கம்

பழந்தமிழ் இலக்கியங்களையும் தமிழ் சமயநூல்களையும் இணையத்தில் தொகுத்து வழங்கும் ஒரு முயற்சியே மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத்திட்டம். இதில் திருக்குறளில் இருந்து வைரமுத்துவின் 'தண்ணீர்தேசம்' வரையிலான நூல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நளவெண்பா, நாலடியார், ஆத்திசூடி, சீறாப்புராணம் மற்றும் பிரபந்தங்கள் தேவாரங்கள் பைபிளின் மொழிபெயர்ப்பு போன்ற நாம்மறந்து போன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் இணையம்

வியக்க வைத்தது!    
February 14, 2008, 12:48 pm | தலைப்புப் பக்கம்

COMPANY - இது ஒரு ஹிந்தித்திரைப்படம். 2002 ல் வெளிவந்தது. இப்போது தான் பார்க்கக்கிடைத்தது. படம் இப்படித்தொடங்குகிறது. 'பருந்து... தன் இரையை குறிவைக்கிறது: கண்காணிக்கிறது: சிலமணித்தியாலங்கள்: சில நாட்கள்: சிலவாரங்கள்: ஏன் சில மாதங்கள் - உரிய வேளைக்காக உயரத்தில் வட்டமிடுகிறது. அந்த வேளை: மிகச்சரியான அந்த வேளை வந்ததும் - "லபக்.." 'ஆம்! பாதாளஉலகினர் இவ்வாறுதான் இயங்குகிறார்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

புலம்பெயர் ஈழ இரண்டாம் தலைமுறை    
February 11, 2008, 12:52 pm | தலைப்புப் பக்கம்

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தங்கள் பிள்ளைகளின் தமிழறிவு தொடர்பில் தற்போது ஒரு விழிப்புநிலை கொண்டுள்ளவராகக் காணப்படுகின்றனர்। தமது பிள்ளைகள் தமிழ் கற்கவேண்டும் என்பதிலும் தமிழ்க்கலைகளை கற்கவேண்டும் என்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்। நேற்றைய தினம் ஜேர்மனி நாட்டில் வியர்சன் நகரில் நடைபெற்ற தமிழ்திறன் இறுதிப்போட்டி இதற்கு நல்ல சான்றாகும்।ஜேர்மனியின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கல்வி