மாற்று! » பதிவர்கள்

அபுல் கலாம் ஆசாத்

ஹரீஷ்சந்த்ராசி ஃபாக்டரி - மராத்திப் படம் - எனது பார்வையில்    
April 3, 2010, 12:18 pm | தலைப்புப் பக்கம்

நண்பர் ப்ரகாஷ் முகப்புத்தகத்தில் இந்தப் படம் கிடைக்குமாவெனக் கேட்டிருந்தார். உடன் இருக்கும் சிங்க மராட்டியர்களிடம் படத்தின் பெயரைச் சொல்லிக் கேட்டேன். உடனடியாக இதெல்லாம் வராது, வந்தால் சொல்கிறேன் என்றார்கள். சென்றவாரத்தில் வெளியாகியிருப்பதாகச் சொன்னார்கள், பார்த்தேன். படம் பார்த்து முடித்தபின் வழமைபோலவே நான் படிக்கும் சில திரைவிமர்சகர்களைப் படித்தேன். படம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஆயிரத்தில் ஒருவன் - சில கோவையற்ற எண்ணங்கள்    
February 8, 2010, 4:09 am | தலைப்புப் பக்கம்

புதிய ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதைக்களன் சர்ச்சைக்குரியதென்றால், கலைஞர் எழுதிய ரோமாபுரிப் பாண்டியனும் சர்ச்சைக்குரியது. காணாமற்போன பாண்டியன் ரோமாபுரியில் காலங்கழித்ததாக கலைஞர் எழுதியிருப்பார். அகிலனின் கயல்விழியில் சில வர்ணனைகளும் சர்ச்சைக்குரியன. யானையின் மீது துள்ளிக்குதித்து வீரனைப்போல ஏற முடியாதவனாக அல்லவா சோழ இளவரசனை அகிலன் வர்ணித்திருப்பார். மகன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வேட்டைக்காரன் - புதிய சண்டைக்காட்சிகளில் எனது எதிர்பார்ப்பு    
December 20, 2009, 9:41 am | தலைப்புப் பக்கம்

தற்போதைய ஸ்டண்ட் மாஸ்டர்கள் கனல் கண்ணன், பீட்டர் ஹெய்ன் இருவரும் சராசரியான உடல் அமைப்பு கொண்டவர்கள், இருவரின் சண்டைக்காட்சிகளையும் ரசித்திருக்கிறேன். அன்றைய ஸ்டண்ட் மாஸ்டர்களுள் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்டர் ஷ்யாம் சுந்தரையும் இதில் சேர்க்கலாம். ஸ்டண்ட் மாஸ்டராக இருக்கவேண்டுமென்றால் ஆஜானுபாகுவாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை நிரூபித்தவர்கள் இவர்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அமீரக வலைப்பதிவர் சந்திப்பும் சில எண்ணங்களும்    
June 19, 2009, 7:31 pm | தலைப்புப் பக்கம்

அண்மையில் சந்தித்த இளைஞர்களின் கடமையுணர்ச்சியும் அணுகுமுறையும் பாராட்டும்படி இருந்தது. இருக்கின்றார்கள்.* துபாயில் இருக்கும் கல்லூரி ஒன்றில் நிர்வாகம் பயிலும் மாணவி தனது புறத்திட்டு ஒன்றிற்காக நேர்காணல் எடுக்க வந்திருந்தார். 'எப்படி என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள்' என்று கேட்டேன். 'எனக்குக் கிடைத்த பட்டியலில் அகரவரிசைப்படி முதலில் உங்கள் பெயர் இருந்தது, நேரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பில்லூ ரானியும் கஜுராரேயும் - சில கோவையற்ற எண்ணங்கள்    
June 15, 2009, 7:59 pm | தலைப்புப் பக்கம்

இந்த வடக்கத்திய தபேலா அடிக்கு எப்பொழுது ரசிகனானேன் என்பது நினைவில் இல்லை. சிறிய வயதில் இஸ்லாமியப் பாடகர்களுடன் சுற்றிக்கொண்டிருந்த காலத்தில் 'காதர்வலி தர்பாரல்லா அல்லா! கஞ்ச்-ஏ-ஸஃபாய் தர்பாலல்லா அல்லா! ஆஹா பிரமாதமல்லா அல்லா!' என்னும் வரிகளுக்கு உடன் குமுக்குகுமுக்கென குமுக்கிய தபேலா ஈர்த்ததா? அதற்கும் முன்னால் ஜவார் உசேன்கான், முகமது உசேன்கான் தெருக்களில் கவ்வால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எனது பள்ளிக்கூடம் - சொந்தக் கதை    
February 27, 2009, 10:29 am | தலைப்புப் பக்கம்

விடுமுறையில் நண்பரைச் சந்தித்தபோது சாப்பிடுவதற்கு எங்கு போகலாம் என்னும் பேச்சு வந்தது, க்ரீம்ஸ் சாலை அலி டவர்ஸ் எதிரிலுள்ள பிரியாணிக் கடை, பீட்டர்ஸ் சாலை சரவணா, ஜெமினி பாலிமார், ஜாம்பஜார் சாகர், ரத்னா கபே, இப்படியாக ஒவ்வொன்றாக யோசித்து தட்டிக் கழித்து வண்டியை வளைத்து வளைத்து கடைசியில் திருவல்லிக்கேணி பி.வி.நாயக்கன் தெருவிற்கு வந்தாகிவிட்டது. வந்தது வந்தோம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

மேடைப்பேச்சும் சில பகிர்தல்களும்    
January 25, 2009, 8:15 pm | தலைப்புப் பக்கம்

முதலில் ஆசிப் அழைத்தபோது மறுத்தேன். 'பட்டிமன்றத்தில் பேசுகிறீர்களா?' என்றபோது இப்போதைக்கு அதிலெல்லாம் ஆர்வமற்றவனாக இருக்கிறேன் என்று சொல்லி 'வேண்டாமே' என்றேன், பிறகு இரண்டொரு நாள் கழித்து பேசினால் என்னவென்று தோன்றியது, 'சரி நான் பேசுகிறேன், நீங்களும் பேசுங்கள்' என்றேன். அவர் பேச இயலாதென்றும் என்னை மட்டும் பேசுமாறும் பணித்தார். 'திரைப்படங்கள் படமா? பாடமா?' என்னும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அரை(றை)ப்பங்கு    
January 22, 2009, 9:19 pm | தலைப்புப் பக்கம்

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை அனுபவம்

கஜினி (இந்தி)    
January 8, 2009, 5:47 pm | தலைப்புப் பக்கம்

ரியாஸ்கான் தனது பெயரை ரியாஸ் என்று மாற்றிக்கொண்டாரா? இந்தி கஜினியில் அவரது பெயரை கான் இல்லாமல் வெறுமனே ரியாஸ் என்றுதான் காட்டுகிறார்கள். ஆனால், ஐ.எம்.டி.பி.யில் ரியாஸ் கான் என்றுதான் எழுதியிருக்கிறார்கள். ஆமீர் கான் - ரியாஸ் கான் என்று வந்தால் நன்றாக இருக்காதென மாற்றினார்களா என்பது தெரியவில்லை. ரியாஸும் ஆமீரும் போட்டுக்கொள்ளும் சண்டைக்காட்சி முழுதையும் கொஞ்சமேயான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மூன்று இந்திப் படங்கள் - சில கோவையற்ற எண்ணங்கள்    
September 9, 2008, 7:38 pm | தலைப்புப் பக்கம்

இது திரைப்படமல்ல; திரைப்படத்தைப் பற்றிய வரைபடம்' - இப்படித்தான் பாரதிராஜாவின் மேற்பார்வையில் வெளிவந்த கல்லுக்குள் ஈரம் திரைப்படத்திற்கு விளம்பர வாசகம் எழுதியிருந்தார்கள். இயக்குநரின் வாழ்வில் நிகழும் சில பின்னனிகளாக அந்தப் படம் தொடர்ந்தது. சிவாஜி அவர்கள் இயக்குநராக நடித்த படம், சர்வர் சுந்தரம், ரகுமான் பின்னனிப் பாடகராக நடித்த படம், கமலஹாசன் திரைப்பட சண்டைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஃபூங்க் - திரைப்படம் - எனது பார்வையில்    
September 5, 2008, 7:24 pm | தலைப்புப் பக்கம்

இப்படித்தான் மிகவும் ஆர்வமாக ஆர்.ஜி.வி. என்றழைக்கப்படும் ராம் கோபால் வர்மாவின் வாஸ்து சாஸ்த்ராவை ஓடிச் சென்று அரங்கில் பார்த்தேன், திருப்தியில்லை. ஷோலேயின் மொழிமாற்றமாயிற்றேவென ஆக் திரைப்படத்தை ஓடிச் சென்று பார்த்தேன், திருப்தியில்லை. இன்றைக்கும் அப்படியே, 'ஃபூங்'கில் சிலிர்க்க வைத்திருப்பார் என நினைத்தேன், அவரது பூத் அளவிற்குக்கூட இல்லையென்றாகி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

எனது உடற்பயிற்சிக்கூடங்கள் - சொந்தக் கதை    
July 29, 2008, 3:53 am | தலைப்புப் பக்கம்

சென்னை - திருவல்லிக்கேணி வளர்ப்பிற்குச் சிறிதும் மாற்றமில்லாமல் எல்லா மாணவர்களையும் போலவே எனக்கும் உடற்பயிற்சியில் ஆர்வம் இருந்தது. தாமைரை இலை அளவிற்கு விரிந்த சட்டைப்பட்டைக்குள் (காலர்) பஞ்சு வைத்துத் தைத்த சட்டைகள் போட்டு சாண்டோவாகிவிடத் துடித்த சில நாள்களும் கணக்கில் உண்டு. எல்லாம் துவங்கியது சென்னை - ஐஸ்ஹவுஸ் மாஸ்டர் உடற்பயிற்சிக்கூடத்தில்தான்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

தசாவதாரம் - எனது பார்வையில்    
June 15, 2008, 9:59 am | தலைப்புப் பக்கம்

இந்தப் படத்தில் நிறைய எதிர்பார்த்துவிட்டேன். உலகநாயகன் பட்டமும், பாடலும், மிரட்டிய முன்னோட்டமும், அங்கங்கே புகைப்படங்களாக வந்த கமலின் மாறுபட்ட முகங்களும் அதிகமான எதிர்பார்ப்பை உண்டாக்கியதால், படத்தை ஒரு சராசரி வணிகப் படமாக அணுகிப்பார்க்கும் எண்ணமே எழாமற்போனது. எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல் சென்றிருந்தால் ஒருவேளை ரசித்திருப்பேனோ என்னவோ?சண்டைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சிக்கன் ஆஃப்கானியும் சில எண்ணங்களும்    
May 13, 2008, 7:15 pm | தலைப்புப் பக்கம்

வழமையான சிக்கன்65, பட்டர் சிக்கன், சில்லி சிக்கன் ஆசாமிகளுக்கு சிக்கன் ஆஃப்கானி பிடிக்காது. புளிப்பு, காரம், துவர்ப்பு இவற்றைக் கலந்துகட்டி அரைத்தால் என்ன சுவை வருமோ அப்படியான மாறுபட்ட சுவையாக இருக்கும். மசாலாவுடன் சேர்த்து கொஞ்சம் பாக்கையும் அவர்கள் அரைக்கின்றார்களோ என்னும் சந்தேகம் வரக்கூடும். கொஞ்சம் கொஞ்சமாக நாக்கு சுவையறிந்து மூளைக்கு தகவல் அனுப்பிய பின்னரே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சென்னை கானா - புத்தகம் எனது பார்வையில்-1    
April 4, 2008, 4:38 am | தலைப்புப் பக்கம்

உதிரிப்பாட்டாளிகளின் கலாசார விளிம்புநிலைக் கலகக் குரல் - இப்படித்தான் கானாவை அடையாளப்படுத்துகிறார் புத்தகத்திற்கு அணிந்துரை வழங்கியிருக்கும் வே.மு.பொதியவெற்பன். அடித்தள மக்களின் இறப்புச் சடங்குகளில் மட்டுமே பாடப்பட்டு, இறந்தவர் குறித்த செய்திகளை ஒப்பாரி வழியாகத் தருவதற்கும் சற்று மேலே சென்று ஆர்ப்பாட்டமில்லாத, சோகமான, தன்னிச்சையான மெட்டுகளில் வாழ்வின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்